ஆண்ட பரம்பரை இம்சைகள்

இந்த ஆண்ட பரம்பரை இம்சைகள் ஏராளம்..

நாங்களெல்லாம் ஆண்ட பரம்பரை என வீரவசனம், நாங்கள் இல்லாமல் கட்டபொம்மன் இல்லை, புலிதேவன் இல்லை அவன் இல்லை இவன் இல்லை என ஏக அழிச்சாட்டியம்

சரி நீங்கள்தான் ஆண்ட பரம்பரையாயிற்றே ஏன் நாயக்கனுக்கு அடியாட்களாய் இருந்தீர்கள் என்றால் இல்லை இல்லை நாங்கள் அதற்கு முன்பே ஆண்டோம் என்கின்றார்கள்

சரி ஆண்ட பரம்பரையா நாயக்கனுக்கு அடியாட்களாய் இருந்தீர்கள் அது மானமா? சாக வேண்டாமா? அடுத்தவனுக்கு அடிமையாய் இருப்பதா ஆண்ட வீரம்? என கேட்டால் அதனால்தான் வெள்ளையனிடம் போரில் செத்தோம் என மீசையினை முறுக்குகின்றார்கள்

நாம் சொல்வது அவனுக்கு புரியாது, அவன் சொல்வது நமக்கு புரியாது

ஆண்ட பரம்பரை என ஒன்றுமே இல்லை எல்லாம் இங்கு மராட்டியனுக்கும் நாயக்கனுக்கும் அடியாட்களாய் இருந்திருக்கின்றது

பின் எல்லா பரம்பரையும் வெள்ளையனுக்கு மகா அடிமையாய் இருந்திருக்கின்றது அவ்வளவுதான் விஷயம்