எதையோ செய்யபோய் வசமாக மாட்டிகொண்டு நிற்கின்றது ஈரான்

எதையோ செய்யபோய் வசமாக மாட்டிகொண்டு நிற்கின்றது ஈரான்

சுலைமானி கொல்லபட்டதும் அமெரிக்காவின் ஈராக்கிய நிலைகள் மேல் அவர்களுக்கு வலிக்காமல் ஈரான் தாக்க்க்குதல் நடத்தியதும் அதன் பின் இருவரும் அமைதியானதும் உலகறிந்தது

அப்பொழுது நடந்த விஷயம் உக்ரைனின் விமானம் ஈரானில் விழுந்து நொறுங்கியது

முதலில் விபத்து என மூடிமறைக்கபட்டது, ஆனால் விமான நுட்பத்தில் தேர்ந்த நாடான அமெரிக்கா ஒரு விமானம் விபத்தாகி விழுவதற்கும் ஏவுகனையால் அடித்து வீழ்த்தபட்ட காட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லி இது ஈரானால் நொறுக்கபட்டது என்றது

ஈரான் மறுத்தது

அமெரிக்கா விமானத்தின் கறுப்புபெட்டியினை கேட்க ஈரான் கொடுக்கமறுத்தபொழுது உலகில் சந்தேக ரேகைகள் தோன்றின‌

கனடாவும் இன்னும் சில நாடுகளும் களத்தில் இறங்கின,சர்வதேச குழு ஈரானுக்கு வரவேண்டும் என பல குரல்கள் எழும்பின‌

ஈரானுக்கு சிக்கல் உண்டாயிற்று, இன்னும் மறைப்பது தங்களுக்கு பலத்த சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் ஜனகராஜ் ஸ்டைலில் சிரித்தவாறு கைகளை தூக்கியபடி “நாங்கதான் சுட்டோம் ஹிஹிஹிஹ்” என சொல்லிகொண்டிருக்கின்றனர்

உண்மையில் என்ன நடந்திருக்கின்றது என்றால ஈரானிய ஏவுகனைகள் அமெரிக்க நிலைகளை தாக்கியவுடன் அமெரிக்க விமானங்கள் தாக்கவரு என எதிர்பார்த்து ஏவுகனை சகிதம் நின்றிருகின்றது ஈரான்

அப்பொழுது உக்ரைனிய விமானம் டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து மேலெழும்பியிருக்கின்றது,ஈரானிய ராணுவ ரேடாரில் அது புள்ளியாய் தெரிந்திருக்கின்றது

ரேடாரில் புள்ளிதான் தெரியும் விமான விவரம் தெரியாது

போர் அச்சத்தின் உச்சியில் இருந்த எவனோ ஒரு ராணுவத்தான் பட்டனை தட்டிவிட்ட்டான், அது ராணுவவிமானமென அவன் நினைத்துவிட்டான்

ஏவுகனை விமானத்தை வீழ்த்திவிட்டது, இதுதான் விஷயம்

வீரனுக்கு பொறுப்பு வேண்டும், அவன் விமான நிலையத்தை கோரியிருக்கலாம் ஆனால் கடமையே கண்ணாணவன் சுட்டுவிட்டான்

முன்பு மலேசிய பயணிகள் விமானம் உக்ரைனில் இதே போல் தவறுதலாக சுடபட்டது, இப்பொழுது உக்ரைனிய விமானமே சுடபட்டிருக்கின்றது

சில இடங்களில் ராணுவத்தாருக்கு பொறுப்பு வேண்டும்

எழுபதுகளில் கிழக்கு சோவியத் யூனியனில் ஒரு அதிகாரி இப்படித்தான் ரேடார் முன் காவலுக்கு வைக்கபட்டார், எதிரி விமானம் வந்தால் சுட்டு வீழ்த்த அவருக்கு அதிகாரமிருந்தது

அந்த பெட்ரோப் அப்பொழுது ரஷ்ய ராடார் முன் அமர்ந்திருந்தார், அது 1983ம் வருடம், செப்டம்பர் 26

திடீரென அவரின் ரேடார் அமெரிக்க ஏவுகனைகள் மொத்தமாக ரஷ்யாவினை நோக்கி வருவதாக காட்டிற்று, அவர் இருந்தது மிக பொறுப்பான பதவி

அதாவது அவர் சொல்வது எல்லாமே உறுதிபடுத்தபட்ட தகவலாக இருக்கும் என்பதால் அவர் சொல்லிவிட்டால் ரஷ்யா தன் பதில் நடவடிக்கையினை தொடங்கும்.

வருவது என்ன ரக ஏவுகனை, அணு ஏவுகனையா? சோதனையா? என அவருக்கு தெரியவில்லை, ஆனால் அவர் சொல்லவேண்டும், சொல்வது சிக்கல் இல்லை , சொன்ன மறுநொடி ரஷ்யா அமெரிக்காவினை சின்னாபின்ன படுத்தும்

இவருக்கோ என்ன செய்வதென தெரியவில்லை, காரணம் அது மிரட்டல்கள் இல்லா இயல்பான காலம். போர் எல்லாம் வர வாய்ப்போ பிரச்சினையோ இல்லை, இப்பொழுது எப்படி?

ஆனால் சொல்லாமல் இருந்து, வருவது ஏவுகனைகளாக இருந்தால் ரஷ்யா அழியும், பின் இவர் அந்த பொறுப்பில் இருந்து என்ன பயன்?

இப்படியாக இரு விஷயங்களை மாறி மாறி யோசித்தாலும் அவர் உள்மனம் சொன்னபடி நடப்பது நடக்கட்டும் என இருந்துவிட்டார்,

20 நிமிடங்களில் முடிவு தெரியும்

எப்படி இருந்திருக்கும் அவருக்கு? ஆனால் உணர்ச்சிகளை வெளிகாட்டாமல் அமர்ந்திருந்தார். திக் திக்கான நிமிடங்கள்.

20ம் நிமிடத்தில் ரேடாரில் புள்ளிகள் மறைந்தன, எந்த ஏவுகனையும் ரஷ்யாவினை தாக்கவில்லை.

sஅவருக்கு ஒன்றுமே புரியவில்லை , ஆனால் நல்லவேளையாக உயரதிகாரிகளிடம் சொல்லவில்லை எனும் நிம்மதி அவருக்கு.

பின்பு ஏதோ ஒரு சோதனையில் மேக கூட்டம் இடையே வரும் சூரிய ஒளியினை ரேடார்கள் தவறுதலாக சில நேரம் ஏவுகனைகள் என அடையாளம் காட்டபடும் என கண்டுபிடிக்கபட்டது.

அதுதான் அன்றும் நிகழ்ந்திருக்கின்றது

அந்த பெட்ரோப் மட்டும் அன்று நிதானமின்றி தன் கடமையினை செய்திருந்தால் உலகின் மூன்றாம் உலகப்போரும், அணு ஆயுதபோரும் அன்றே தொடங்கியிருக்கும்.

உலகில் பாதி அழிந்திருக்கும், பெரும் விபரீதம் எல்லாம் ஏற்பட்டிருக்கும்.

அவரால் பெரும் யுத்தம் தடுக்கபட்டிருக்கின்றது, அவர் இடத்தில் இன்னொருவன் இருந்திருந்தால் இந்த நிதானம் இருந்திருக்குமா என்பது சந்தேகம், அலறியடித்து மேலதிகாரிகளுக்கு பட்டனை தட்டினால் முடிந்தது உலகம்.

இந்த விஷயத்தை அவர் 2013ம் ஆண்டுதான் சொன்னார், அதனை கேட்ட உலகம் அரண்டது மனிதர் எவ்வளவு பெரும் காரியத்தை செய்திருக்கின்றார் என அவரை பாராட்டியது.

இந்த நிதானம் மூலம் உலகை காப்பாற்றிய மனிதர் என அறியபட்ட அந்த பெட்ரோப் சமீபத்தில் மரணமடைந்திருக்கின்றார் என்று இன்றுதான் அறிவித்தார்கள்.

அதுவும் இந்த சம்பவத்தை சினிமா எடுக்க ஒருவர் தேடி சென்றபொழுதுதான் அவர் காலமான விஷயம் தெரிந்திருக்கின்றது.

ஈரானில் அப்படி யாரும் இல்லை, அசம்பாவிதம் நடந்தாயிற்று

எனினும் சுலைமானி கொலைக்கு பின்ன்பு உக்ரேன் விமானம் ஈரானுக்கு சென்றது அஜாக்கிரதையின் உச்சம், அதற்கான விலை உடனே கிடைத்துவிட்டது

ஈரானும் மகா சிக்கலில் தலையினை கவிழ்ந்தபடி நிற்கின்றது