பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஏழையாய் பிறந்துவிட்டால் எந்த பாதுகாப்பும் இந்நாட்டில் இல்லை…

அரிசி திருடினான் என்பதற்காக ஒரு கொடூர கும்பல் ஒரு ஏழையினை கொன்றதும் அக்கும்பலை பிடித்ததாக கேரள அரசு சொல்கின்றது இங்கோ அந்த விதவை தாயின் மகன் கொல்லபட்டு, தாயின் கண்முன்னே அந்த சிறுமி அலங்கோலபடுத்தபட்ட மாபாதகமும் நடந்திருக்கின்றது யாரை கைது செய்தார்கள்? யார் பிடிபட்டார்? அரசு என்ன நடவடிக்கை எடுத்தது வேறு யார் செய்திருந்தாலும் குதிக்கும் விழுப்புரம் ஏரியா பாதுகாவலர் ராமதாஸ் இதில் சத்தமே இல்லை. ஆளும் கட்சி, எதிர்கட்சி, மய்யம், சுழியம், ஆன்மீகம், தமிழ்தேசியம் என […]

அமெரிக்க இனபாகுபாடு கொடுத்த‌ கொடூர சிகிச்சை அது ….

ஸ்ரீதேவி நிறைய சர்ஜரி செய்தார், நிறைய ஆப்பரேஷன் செய்தார் அதுதான் அவர் உடல்நிலை கெட காரணம் என பலர் கிளம்பியாயிற்று அதில் உண்மையும் இருக்கலாம், எக்காலமும் ஒரே அழகுடன் இருக்க அவர் என்ன குஷ்புவா? ஸ்ரீதேவி இப்படித்தான் , மைக்கேல் ஜாக்சனும் இப்படித்தான் என பலர் சொல்கின்றார்கள் ஸ்ரீதேவி தன்னை நடிப்பில் நிரூபித்துவிட்டு, உச்ச இடம் சென்றுவிட்டு தன் அழகினை காக்க போராடி இருக்கலாம் ஆனால் மைக்கேல் ஜாக்சன் நிலைவேறு, கருப்பன் என்பதற்காக அவன்பட்ட அவமானம் கொஞ்சமல்ல, […]

மலேசியாவில் நடக்கும் தாய்மொழி தின மாநாட்டில் முக ஸ்டாலின்

மலேசியாவில் நடக்கும் தாய்மொழி தின மாநாட்டில் முக ஸ்டாலின் கலந்து கொண்டார் : செய்தி முக ஸ்டாலினை தவிர திமுகவில் மொழிப்போர் தியாகிகளே இல்லை, அட திமுகவில் மட்டுமல்ல தமிழகத்திலே இல்லை என நம்பிகொள்ளுங்கள் மொழிப்போரிலும் ஸ்டாலின் பெரியபங்கு ஆற்றியதில்லை, மொழிக்கு புத்தகமோ இல்லை ஆராய்ச்சி கட்டுரையும் எழுதியதில்லை, தமிழுக்கு அவர் என்ன செய்தார் என்பதே தெரியவில்லை ஆனால் அவர்தான் சென்றிருக்கின்றார். இதற்கு கனிமொழி சென்றால் கூட 10% ஏற்றுகொள்ளலாம், அம்மணி புரியாத கவிதை எனினும் சிலவற்றை […]

காஞ்சிபுர மர்ம முதியோர் இல்லத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மத்தியில் ஆளும் கட்சிதான் மாநிலத்திலும் மறைமுகமாக ஆளுகின்றது, சந்தேகமில்லை ஆனால் அந்த காஞ்சிபுர மர்ம முதியோர் இல்லத்தில் இன்னும் பெரும் நடவடிக்கை எடுக்காததும், முறையாக விசாரிக்காததும் பெரும் கேள்விகளை எழுப்புகின்றன‌ நடிகையின் மரணத்திற்காக அஞ்சலியும் , கண்ணீரும் விடும் ஊடகங்கள் அந்த அனாதை முதியவர்களுக்கு என்ன செய்கின்றன என்றால் ஒன்றுமே இல்லை இதில் எடுக்கும் நடவடிக்கை எல்லாம் சிறுபான்மையினர் நலன் என்ற வகையில் வந்து, வோட்டு வங்கியினை எல்லாம் பாதிக்காது என தெரிந்தும் அரசுகள் ஏன் வேடிக்கை பார்க்கின்றன […]

என்று இவரை சத்ரியனாக தமிழகம் பார்த்தது?

என்று இவரை சத்ரியனாக தமிழகம் பார்த்தது? அற்புதமான கவிஞனாக‌ மட்டும் பார்த்தது, அதன் பின் நான் கவிஞன் அல்ல காமெடியன் என அவர் நிரூபித்ததும் தமிழகம் அதை ஒப்புகொண்டது சிம்பு வரவுக்கு பின் சிம்பு டி.ஆரை கெடுத்தாரா? இல்லை டி.ஆர் சிம்புவினை கெடுத்தாரா? என பட்டிமன்றம் வைத்து தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றது இதில் இவர் இனி சாணக்கியர் என நிரூபிப்பாராம், எப்படி ஒரு வேளை நீண்ட கூந்தலை வளர்த்து தலைவிரி கோலமாய் அலைவாரோ? சாணக்கியன் சந்திரகுப்தனை அமைச்சராக்கினான், […]

தமிழிசைக்கு கொலை மிரட்டல்

தமிழிசைக்கு கொலை மிரட்டல் , அரியலூர் உடையாளர் பாளையத்தில் இருந்து கடிதம் வந்தது : செய்தி அந்த உடையார் பாளையத்து மடையர்கள் கொஞ்சமும் ரசனை இல்லாதவர்களா? இல்லை அரசியல் அறியா பதர்களா? தமிழிசை வெண்மனதிற்கு சொந்தக்காரர், மனதை பட்டதை பேசிவிடுகின்றாரே தவிர , வஞ்சகமாகவோ சூதாகவோ அவருக்கு பேச தெரியாது, அந்த சிந்தனையுமில்லை. அரசியலில் ஒரு இடத்திற்கு போராடுகின்றார் அது ஒன்றும் தவறேன்று சொல்லமுடியாது தமிழகத்தில் பாஜகவிற்கும் விழும் வசவுகளை அவர்தான் சுமக்கின்றார், எப்பொழுதாவது வரும் நல்லபெயர் […]

இந்தியாவின் தாரகை ஶ்ரீதேவியின் சாதனை அழியாதது : கமலஹாசன்

இந்தியாவின் தாரகை ஶ்ரீதேவியின் சாதனை அழியாதது : கமலஹாசன் அது எப்படிண்ணே? மையம் மய்யம் ஆகுது, தாரகை தாரகய் அல்லது தாரக அய் அப்படித்தானே வரணும்? மய்யத்திற்கொரு கொள்கை? மயிலுக்கு ஒரு கொள்கையா ஆண்டவரே? இத்தனை லட்சம் பேர் தனக்காக அழுவதை ஶ்ரீதேவி ஆன்மா பார்த்துகொண்டிருக்கும் அரசியலில் இறங்காமல் போயிவிட்டோமோ என அது கலங்குமோ இல்லையோ, மதுரையில் மேடை ஏற்றியிருக்கலாம் என கமலஹாசனின் உள்மனம் சொல்லிகொண்டிருக்கும் ஒருவேளை அடுத்த கூட்டத்தில் கமல் தன்னை அழைத்துவிடுவாரோ என ஶ்ரீதேவி […]

ஜெயா சிலையில் மாறுதல் செய்வார்களாம் …

எதனை செய்தாலும் அதில் முழு கவனத்தோடு செய்பவர் கலைஞர், அண்ணாவிற்கும் பெரியாருக்கும் எத்தனையோ சிலைகள் வைத்தார், யாரும் ஒரு குறை சொல்லமுடியாத அளவு நேர்த்தியொடு அவை அமைந்தன‌ அவர் அமைத்த கட்டபொம்மன் கோட்டை, பூம்புகார் கூடம் என எல்லாமே வலுகவனமாக அமைக்கபட்டவை புதிய சட்டமன்ற கட்டடத்தை இரவு பகலாக பார்வையிட்டு வடிவமைத்தார் கலைஞர். பொதுவாக தேர் என்றால் அவருக்கொரு விருப்பம், ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும் என்ற அரசியலின் அடிநாத கொள்கை அதில் ஒளிந்திருக்கலாம், கலைஞரின் […]

ஜெயலலிதா சிலை….

ராமசந்திரன் “புரட்சிதலைவன்” ஆன தமிழகத்தில் , சசிகலா “தியாக தலைவி” ஆன கட்சியில் நடிகை “காந்திமதி சிலை” “ஜெயலலிதா சிலை” என அறிவிக்கபடுவதில் என்ன ஆச்சரியம்? ஆனால் காந்திமதிக்கு சிலைவைக்கும் அளவிற்கு அதிமுகவில் ரசிகர்கள் இருந்திருக்கின்றார்கள் என்பதுதான் ஆச்சரியம், அதுவும் ஜெயா இறந்தபின்னால் பகிரங்கமாக வைத்திருக்கின்றார்கள் ஆக தமிழகத்தை ஆளும் யோகம் காந்திமதிக்கும் இருந்திருக்கின்றது, அதை அறியாமல் செத்து போயிருக்கின்றார் அந்த காந்திமதி  

கேரளாவில் அரிசிக்காக ஒருவன் அடித்து கொலை

கேரளாவில் அரிசிக்காக ஒருவன் அடித்து கொல்லபட்டிருக்கின்றான், மாபெரும் கொடுமை இது கடவுளின் சொந்த மாநிலமாம் அது, வளமைக்கு குறைவில்லை அங்கே ஒருவன் உணவுக்கு வழியின்றி அரிசி திருடியிருக்கின்றான், அடித்து கொன்றுவிட்டார்கள் கேரளாவில் மழை அதிகம், மலையும் அதிகம் அரிசி அவ்வளவாக விளையாது, அந்த நதிகளை கிழக்கே தமிழகத்திற்கு திருப்பிவிட்டால் இங்கே அரிசி முப்போகம் விளையும் கடவுள் ஒரிடத்தில் செழுமையும் அதனை அடுத்து வறட்சியும் படைத்து வைத்திருப்பது மனிதன் சரியாக நடந்துகொள்கின்றானா, பகிர்ந்து வாழ்கின்றான என சோதித்து பார்பதற்காக, […]