பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாச்சியார் படத்தில் ஒரு வசனம்

நாச்சியார் படத்தில் ஒரு வசனம் வருகின்றதாம், “கோவில் என்றாலும் குப்பை மேடு என்றாலும் எங்களுக்கு ஒன்றுதான்” என ஜோதிகா சொல்வதாக வசனமாம் அதாவது சட்டத்தின் முன் குற்றவாளியினை எங்கும் பிடிப்போம் எனும் அர்த்ததில் வரும் வசனமாம் “இது இந்துக்களுக்கு எதிரானது, இந்துக்கள் உணர்வை புண்படுத்துகின்றது” என்றோரு கோஷ்டி கோர்ட்டுக்கு கிளம்புகின்றதாம் இதெல்லாம் காஞ்சிபுரம் தேவநாதன் குருக்களும், சங்கராச்சாரியின் கூலிபடையும் பேசவேண்டிய டயலாக்குகள், பாலா படத்து ஜோதிகா பேசினால் விடுவார்களா? விடவே மாட்டார்கள்

எம்.ஜி ராமசந்திரனின் நடிப்புலக வாரிசு மிர்ஸி சிவா

1980களில் வந்த சர்ச்சை அது, ராமசந்திரனுக்கு வாரிசு நடிகர் பட்டத்திற்கு பொருந்துவது யார்? எனும் சர்ச்சை அது பட அதிபர்களுக்கும் , மக்களுக்கும் ராமசந்திரனின் சூப்பர் ஸ்டார் ஹீரோ இமேஜ் பொருந்துவது ரஜினிக்கு என தெரிந்தாலும் ராமசந்திரன் ஒப்புகொள்ளவே இல்லை, மாறாக ரஜினியினை ஒரு கண்காணிப்பிலே வைத்திருந்தார் திடீரென பாக்யராஜ் என் கலையுலக வாரிசு என்றார் ராமசந்திரன் . . கதை இயக்கம், சென்டிமென்ட் என செல்லும் பாக்யராஜின் டிராக் வேறு என கொண்டாடும் தமிழகம் வாய்விட்டு […]

நடிகர்கள் என்பதால் இங்கு ஜெயித்துவிடலாம் என்பதெல்லாம் அபத்தம்

நடிகர்கள் என்பதால் இங்கு ஜெயித்துவிடலாம் என்பதெல்லாம் அபத்தம் , ஒருவேளை வென்றாலும் விஜயகாந்தின் வெற்றிபோல புஸ்வானமாக போகுமே ஒழிய நிலைத்து நிற்காது ராமசந்திரன் தனியாக கட்சி தொடங்கவில்லை, திராவிட கழகத்தின் முகமாக அறியபட்டு, பின் அது ஆட்சிக்கு வர பாடுபட்டு அது ஆட்சிக்கு வந்தபின் பிரித்து சென்றவர் அதாவது முழுக்க வளர்ந்த தோப்பினை பாகம் பிரித்தாரே தவிர, அவர் ஆதியிலிருந்து தனியாக நீருற்றி வளர்க்கவில்லை சிவாஜி எனும் பெரும் ஆளுமை தேர்தலில் தோற்க பெரும் காரணம் இதுதான், […]

தமிழ் படிக்காமல் இருந்ததற்கு வருந்துகின்றேன் : மோடி

தமிழ் சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி, தமிழ் படிக்காமல் இருந்ததற்கு வருந்துகின்றேன் : மோடி இது மொழி மாநாட்டிலோ, அரசியல் மேடையிலோ மோடி சொன்னது அல்ல மாறாக மாணவர்களுடனான விவாதத்தின்பொழுது சொன்னது என்பதால் மோடிக்கு வாழ்த்துக்கள் இது நாடகம், நடிப்பு என கலாய்ப்பதில் அர்த்தமில்லை. மோடி தமிழின் பெருமையினை சொன்னால் அதற்குரிய இடத்தை கொடுங்கள் என கேட்கலாம். இந்தி திணிப்பு இன்னபிற விஷயங்களில் தமிழக நியாயத்தினை எடுத்து சொல்லலாம், உறவுக்கு கை கொடுப்பது ஒன்றும் தவறில்லை தமிழ் […]

லலித் மோடி.. நீரவ் மோடி …

“அட எங்களுக்கு லலித் மோடி , நீரவ் மோடி எல்லாம் உங்க குடும்பம் இல்லைன்னு தெரியுது ஆனா தமிழக மக்கள் அப்பாவிகள், எல்லா மோடியும் உங்க அங்காளி பங்காளின்னு எதிர்கட்சி சொல்லிட்டா நம்பிருவாங்க, அதற்கு பின்னால் தேர்தலில் டெப்பாசிட் அல்ல அது போய் அபராதமும் விதிக்கபடும், அதனால மோடிங்கிற உங்க பெயரை சிவாஜி மகராஜ், சந்திர குப்தா இப்படி மாத்திருவோமா?” ஜனவரி மாதமே வெளிநாடு தப்பிய நீரவ், அதாவது சர்ச்சையில் சிக்கி தப்பிய நீரவ் அடுத்த மாதமே […]

காவேரி வழக்கில் உச்ச நீதி மன்ற இறுதி தீர்ப்பு…

காவேரி வழக்கில் தன் இறுதி தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வெளியிட்டுவிட்டு இனி அப்பீல் கிடையாது எனவும் சொல்லிவிட்டது, இதுவே நாட்டாமை தீர்ப்பு என சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுவிட்டது. கிட்டதட்ட 50 ஆண்டுகளாய் நடந்த இழுபறியில் இனி இழுக்க முடியாதவாறு தீர்ப்பினை சொல்லிவிட்டது மன்றம் இந்த தீர்ப்பில் 177.5 டி.எம்.சி கொடுத்தாக வேண்டும் என உறுதிபட சொல்லியிருப்பதில் மகிழ்ச்சி, 10 டிஎம்சி இடைக்காலத்தில் திறக்க சொன்னாலே மூக்கால் அழும் கன்னடத்தின் செவிட்டில் அடித்து 177.5 கொடு என […]

என்னய்யா சொன்னார் வாசுகி பாஸ்கர்?

என்னய்யா சொன்னார் வாசுகி பாஸ்கர்? ஆளாளுக்கு பொங்குகின்றார்களே தவிர என்ன சொன்னார் என சொல்லவே இல்லை ஸ்டாலின் எடப்பாடியிடம் கொடுத்த 27 பரிந்துரைகளை ஸ்டாலினே படித்திருக்க மாட்டார் என வாசுகி பாஸ்கர் சொன்னாராம், இதுதான் பிரச்சினையாம் ஸ்டாலினின் அணுகுமுறைகளில் வித்தியாசமிருக்கலாம் ஆனால் மேயர், துணை முதல்வர் என பல பொறுப்புக்களை அவர் வகித்துவிட்டுத்தான் செயல் தலைவராகி இருக்கின்றார் என்பது கவனிக்கதக்க விஷயம் அதனால் சில பரிந்துரைகளை சொல்ல அவருக்கு தகுதி இருக்கின்றது, சொல்லிவிட்டார் ஸ்டாலினின் பரிந்துரைகளை சீண்டும் வா.பாஸ்கர் […]

பல விஷயங்களில் சறுக்கினாலும் சில விஷயங்களில் மோடி சாதிக்கின்றார்

பல விஷயங்களில் சறுக்கினாலும் சில விஷயங்களில் மோடி சாதிக்கின்றார் இந்தியாவினை சுற்றி சீனா ஆணியடிக்க, சீனாவின் நடமாட்டத்தினை முடக்கும் விஷயங்களிலும் இந்தியா கவனமாக காய் நகர்த்துகின்றது ஜப்பானுடன் நல்லுறவு, வியட்நாமுடன் பிரம்மோஸ் ஒப்பந்தம் , வியட்நாமில் இந்திய துறைமுகம் என அதன் காலடியில் மிரட்டுகின்றது இந்தியா, நிச்சயம் இது அட்டகாசமான திட்டம் அப்படியே பாகிஸ்தானில் சீனா கட்டும் துறைமுகத்திற்கு எதிராக ஈரானிலும் கட்டுகின்றது இந்தியா இப்போது ஓமானின் டக்ம் எனும் துறைமுகத்தை இந்தியா பயன்படுத்திகொள்ள ஒப்பந்தம் தயாராகிவிட்டது, […]

பஞ்சாபில் பாஜக…

கொஞ்ச நாளாக சோர்ந்திருந்த பாஜகவிற்கு பஞ்சாப் அமைச்சர் ஒருவர் அட்டகாசமான உற்சாகம் கொடுத்துவிட்டார் அதாகபட்டது பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடக்கின்றது, பாலிடெக்னிக் ஆசிரியர்களை நியமிக்க அமைச்சர் சரண்ஜித் சிங் முடிவு செய்யவேண்டிய நேரம், இருவர் சம தகுதியுடன் ஒரே இடத்திற்கு தேர்வாக வந்திருக்கின்றார்கள் அமைச்சர் யோசித்திருக்கின்றார், தேர்வுகளிலும் தகுதியிலும் இருவரும் சரிக்கு சமம் என்ன செய்யலாம் என்றவருக்கு கிரிக்கெட் அம்பையர் நினைவு வந்திருக்கின்றது சட்டென டாஸ் போட்டு பூவா? தலையா? விளையாடி அதில் வென்றவருக்கு வேலை என […]