பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மவுன விரதத்தை முடித்து விட்டு பேச தொடங்கினார் சசிகலா

மவுன விரதத்தை முடித்து விட்டு பேச தொடங்கினார் சசிகலா, இனி ஆறுமுக சாமி கமிஷன் முன் பேசுவார் என்ன பேசுவார்? “2016 செப்டம்பர் 22ம் தேதி காலையில கோழி கொக்கரக்கோன்னு கூவிச்சா, அக்கா காபி கேட்டாங்க…” என்ற ரீதியில் நிச்சயம் கமிஷனை தெறிக்க விடுவார். யாரையும் இந்த கமிஷன் உருப்படியாக விசாரித்ததாக தெரியவில்லை நிச்சயம் சசிகலா விசாரிக்கபட வேண்டியவர், ஆனால் லண்டன் டாக்டர், சிங்கப்பூர் பிசியோ தெரப்பிஸ்ட் முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ், அடிக்கடி சந்தித்த வெங்கய்யா […]

எம்ஜியார் நினைவு இல்லம்….

இந்த ராமசந்திரனின் வீடு ஒன்று பாலக்காட்டில் இருக்கின்றதாம், அன்னார் வசித்த வீடாம் அதனால் அதனை அவரின் நினைவு இல்லமாக மாற்றி அவரின் வாழ்க்கை வரலாறை பரப்புவார்களாம் ராமசந்திரன் பாலக்காட்டில் வசித்தது மிக சொற்பமான நாட்களே என்பது வேறு விஷயம், இப்பொழுது ராமசந்திரனின் வாழ்க்கை வரலாறை விளக்க போகின்றார்களாம் என்ன வரலாறு? பெரியார் கொள்கையில் வளர்வதாக சொல்லி பின் பெரியார் சொன்னதையும் மீறி கட்சி உடைத்ததையா? எல்லோரும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இருக்க இவர் கோவா சூட்டிங்கில் இருந்ததையா […]

வல்லவன் விற்றதே எண்ணெய்

செக்கில் எடுக்கபடும் எண்ணெய் மீது உணவு பாதுகாப்பு துறை ஆய்வு, அது பாதுகாப்பில்லா எண்ணெய் என சில விஷயங்களை உறுதிபடுத்தியது அத்துறை : செய்தி நிச்சயம் இந்த மாரடைப்பு, புற்ற்நோய், கிட்னி பிரச்சினை இன்னபிற நோய்கள் வர இறைச்சி வகைகள் கூட காரணமல்ல பாதுகாப்பாற்ற எண்ணெய் வகைகளே காரணம் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டு இப்பொழுதெல்லாம் மக்கள் செக்கில் ஆட்டபட்ட எண்ணெய்களை வாங்க ஆரம்பித்தாயிற்று சிலரோ கவனமாக மூலபொருளை கொடுத்து எண்ணெய் வாங்கி செல்லும் அளவு விழிப்புடன் இருக்கின்றனர், அப்படியே நலமுடனும் […]

ஆந்தராக்ஸ் பவுடர் இப்பொழுது விஷயமாகின்றது…

உலகம் புதுவித மிரட்டலுக்கு ஆளாகியிருக்கின்றது, இப்பொழுதெல்லாம் விஷ பவுடர் பார்சலில் அனுப்பி மிரட்டுகின்றார்கள், விஷயத்தில் சிக்கல் என்னவென்றால் யார் அனுப்புகின்றார்கள் என்பதே தெரியாது அதாவது உலகின் மிக மலிவான ஆயுதம் விஷஆயுதங்கள். செலவு குறைவு பாதிப்பு மிக அதிகம் உதாரணம் நகரின் மையத்தில் விஷவாயு குண்டை வெடிக்க செய்தால் நகரின் உயிர்கள் மட்டும் காலி மற்றபடி கட்டங்கள் எல்லாம் அப்படியே இருக்கும், குண்டூசி கூட பாதிக்கபடாது அந்த விஷ ஆயுதங்களில் பலவகை உண்டு, இப்பொழுது பரவுவது விஷ […]

தென்கொரியாவிலும் ஒரு ஜெயா- சசி போன்ற இரட்டையர்கள் …

ஜெயா சசிகலா போலவே தென்கொரியாவிலும் ஒரு இரட்டையர்கள் இருந்தார்கள், இப்பொழுது சிறையில் நூடுல்ஸ் உறிஞ்சுகின்றார்கள் அதாவது தென்கொரியாவில் அதிபராக இருந்தவர் பார்க் கியூன் இவரின் நெருங்கிய தோழி சோய் சூன் சில். இருவரும் அங்கு செய்யாத அட்டகாசமில்லை, சுருட்டாத செல்வமில்லை அது என்ன தமிழ்நாடா? சில நாட்களிலே இருவரையும் சிறையில் அடைத்தாயிற்று, இப்பொழுது தென்கொரிய சசிகலாவிற்கு 20 ஆண்டு சிறையும் பலகோடி அபராதமும் விதிக்கபட்டிருக்கின்றது தென்கொரிய ஜெயலலிதாவிற்கு இன்னும் விசாரணை முடியவில்லை ஆக உலகெலாம் தோழிகள் சிறைசெல்லும் […]

ஆட்சியை கவிழ்க்க ஒரு நிமிடம் போதும் : ஸ்டாலின்

தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைத்தால் திமுகவுக்கு ஒரு நிமிடம் போதும் : ஸ்டாலின் பின்னர் ஏன் கலைக்கவில்லை, அன்னார் கடிகாரத்தில் 1 நிமிடம் என்பது சர்வதேச கடிகாரத்தில் 4 வருடமா? இவர் கொல்லைபுறம் வழியாக ஆட்சிக்கு வரமாட்டாராம், தேர்தலில் வென்றபின் ஆளுநர் வீட்டுக்கு வந்து கையினை பிடித்து இழுத்தபின் நேர் வழியில் வருவாராம் நேர்வழியில் வெல்ல தேர்தல் வேண்டும், தேர்தல் நடக்க ஆட்சி கலையவேண்டும் என சொல்ல கூட இவர் அருகில் யாரும் இல்லையா? […]

கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த நாள்…

தமிழகம் மிக அமைதியான மாநிலம் அதன் மீது திணிக்கபடும் அடக்குமுறைகளை எதிர்கொள்வதை தவிர எப்பொழுதும் அது சட்டம் ஒழுங்கினை மதித்தே வருகின்றது அப்படிபட்ட தமிழகத்தின் மாபெரும் களங்கமாக ராஜிவ் கொலை நடந்தது , தமிழகம் அமைதி பூங்கா என மிக தைரியமாக பலமுறை வந்த ராஜிவ் அன்றும் அப்படியே வந்தார், வந்தவர் திரும்பவில்லை தமிழக சட்டம் ஒழுங்கிற்கான முதல் சவால் அன்று விடபட்டது, சாட்சாத் விடுத்தது புலிகள் அதன்பின் இந்தியா மிக கடுமையாக இறங்கி அவர்களை விரட்டி […]

ஸ்டாலின்-முதல்வர் சந்திப்பு…

போக்குவரத்து ஊழியர் தொடர்பான பிரச்சினையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியினை சந்தித்து சில கோரிக்கைகளை வைத்தார் மு.க ஸ்டாலின் சந்திப்பு எப்படி இருந்திருக்கும்? இப்படித்தான் இருந்திருக்கும்

சிறந்த எழுத்தாளரான முத்துகுமார் ஏன் இப்படி சறுக்கினார்?

ஆர்.முத்துகுமார் மீது எப்பொழுதும் மரியாதை உண்டு. அரசியல் வரலாறுகளை அவரை விட்டால் அட்டகாசமாக எழுத இங்கு யாருமில்லை மிக துல்லியமான வரலாறுகள், எங்கிருந்தோ தொகுக்கபட்ட குறிப்புகள் என மனிதரின் உழைப்பு பாராட்டதக்கது ஒரு புத்தகத்திற்கு அவர் உழைக்கும் உழைப்பு மிக மிக சிரமானது என்பது படிக்கும்பொழுது புரிகின்றது, அதிசயிக்கதக்க உழைப்பு இப்பொழுது அவரின் திராவிட இயக்க வரலாறு இரண்டாம் பாகம் படித்துகொண்டிருக்கின்றேன், மனிதர் ஒரு இடத்தில் சறுக்கிவிட்டார் ஆம், ராமசந்திரனின் தந்தையார் இலங்கை கண்டியில் மாஜிஸ்ரேட்டாக இருந்தார் […]

பிப்ரவரி 12 1973 – பிப்ரவரி 12 2018

ஒரு விஷயத்தை திமுகவினர் சொல்வார்கள் என எதிர்பார்த்தோம், ஒருவரும் சொன்னதாக தெரியவில்லை. மறந்தார்களோ இல்லை அப்படி ஒன்று நடந்ததாக தெரியவில்லையோ என்னமோ? ஆனால் இதெல்லாம் நுணுக்கமான விஷயம், கொதிக்க வேண்டிய விஷயம் அதாவது திமுகவின் தொடக்ககால ஆட்சி நிச்சயம் நல்லாட்சியே, அண்ணாவிற்கு பின்னும் அது தொடர்ந்தது. இந்த ராமசந்திரன் கணக்கு கேட்டபொழுது சிக்கல் தொடங்கிற்று பெரியாரே அவரை அழைத்து ” ஏம்பா ராமசந்திரா கட்சி பொருளாளர் நீர்தானே? உனக்கு தெரியாத கணக்கா? நீதிகட்சி போல திமுகவினை அழித்துவிடாதே..” என […]