பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அபுதாபி, துபாயில் மோடி பெருமிதம்

அபுதாபி, துபாயில் மோடி பெருமிதம், இலட்சகணக்கான இந்தியர்கள் நல்வாழ்வு வாழ்வதாக மகிழ்ச்சி : செய்தி உலகெல்லாம் செல்ல வேண்டியது, அங்கே இருக்கும் இந்தியரை நினைத்து மகிழ வேண்டியது. அதாவது இந்தியா செய்ய வேண்டிய கடமையினை இன்னொரு நாடு செய்கின்றது இதில் மகிழ்ச்சியாம் இந்தியன் இந்தியாவில் வாழமுடியாமல் இன்னொரு நாட்டுக்கு ஓடுகின்றான், இது தேசிய அவமானமன்றி வேறல்ல, ஆனால் இதிலெல்லாம் பிரதமர் மகிழ்கின்றாராம்.

தேர்தலில் விஸ்வரூபம் எடுக்கின்றார் ராஜபக்சே

இனி அவ்வளவுதான் ராஜபக்சே குடும்பம் என்றார்கள், சசிகலா குடும்பம் போலவே ஏகபட்ட வழக்குகள் பாய்ச்சபட்டன‌ ராஜபக்சே குடும்பமே காலி என செய்திகள் வந்தாலும், தேர்தலில் அவர் விஸ்வரூபம் எடுக்கின்றார், கடந்தமுறை மிக சிறிய இடவெளியில்தான் அவர் மைத்திரியிடம் தோற்றார் இப்பொழுது விரைவில் ராஜபக்சே குடும்பம் மீது தீர்ப்பு வரும் நிலையில் அவர் உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கின்றார். தமிழர் வாழும் பகுதியிலும் ராஜபக்சே பெருவெற்றி பெற்றிருக்கின்றார் என்பதுதான் ஆச்சரியம், இனி இந்த இனபடுகொலை, தமிழர் வெறுப்பு […]

ரபேலை வாங்க அவசியம் என்ன?

ராணுவத்தில் ரகசியங்கள் என சில விஷயங்கள் உண்டு அது நிச்சயம் காக்கபட வேண்டும், ராணுவ பட்ஜெட் என்றொரு விஷயம் உண்டு ராணுவத்திற்கான செலவு கணக்கு இதில் ரகசியம் ஏதும் இருக்க முடியாது, இவ்வளவு ராணுவம் கோருகின்றது, இவ்வளவு விஷயங்கள் தேவைபடுகின்றது என்ற பட்ஜெட் அது   இதில் விமானம் உட்பட எல்லாவற்றின் விலை இருக்குமே தவிர அதன் ஆற்றல் , எங்கு நிறுத்தபட்டிருக்கின்றது அதில் எவ்வளவு ஆயுதம் ஏற்றபட்டிருக்கின்றது என்ற விஷயமெல்லாம் இருக்காது ரபேல் விமானம் இந்த […]

அமித்ஷா கோஷ்டி இதனை படித்து கொள்வது நல்லது

நீ ஏன் மோடியினை விமர்சிக்கின்றாய் என பொங்க தொடங்கிவிட்டார்கள் பக்தர்கள் வரவர இந்த பக்தர்களுக்கும் தும்பிகளுக்கும் வித்தியாசமே இல்லா நிலை சென்றுகொண்டிருக்கின்றது. கவனியுங்கள், முதல் 3 ஆண்டுகள் முடிவுயும் வரை மோடியினை யாரும் விமர்சிக்கவில்லை மனிதர் ஏதோ செய்ய முயல்கின்றார், கவனிப்போம் என்றுதான் மொத்த இந்தியாவே இருந்தது ஆனால் காலம் செல்ல செல்ல குஜராத் மாடல் என்னவென்றால் என்னவென புரிய தொடங்கியது, அதாவது யாரும் கேள்வி கேட்க கூடாது, கேட்டால் செய்ய வேண்டியதை செய்வோம் எனும் ஒருவித […]

இந்தியா பாலஸ்தீனம் இடையேயான உறவு காலம்கடந்து நிலைத்து நிற்கிறது – பிரதமர் மோடி

இந்தியா பாலஸ்தீனம் இடையேயான உறவு காலம்கடந்து நிலைத்து நிற்கிறது – பிரதமர் மோடி பாலஸ்தீனம் சென்ற மோடி எப்படி பொய்மூட்டையினை அவிழ்த்துவிடுகின்றார் பார்த்தீர்களா? 1990 வரை இஸ்ரேல் தூதரகம் இந்தியாவில் கிடையாது, பாட புத்தகம் கூட பாலஸ்தீனில் இயேசு பிறந்தார் என்றுதான் வரலாற்றை சொன்னது. அராபத்தின் அலுவலகமே டெல்லியில் இருந்தது 1995க்கு பின் இஸ்ரேலின் தந்திர பிடிக்குள் வந்தது இந்தியா, பாலஸ்தின் எனும் பெயர் மாறி அந்த இடத்தினை இஸ்ரேல் என பிடித்தாகிவிட்டது அராபத்தின் கடைசிகால குரலுக்கும், […]

மூன்று இந்திய ரணுவ நடவடிக்கைகள்….

அன்று ராணுவ தளபதியாக சுந்தர்ஜி எனும் தமிழர் இருந்த நேரம், பொற்கோவில் ஆப்பரேஷன் எல்லாம் செய்தவர் சுந்தஜி ஒரு தமிழர் என்பது கூடுதல் விஷயம், அவர் தளபதியாக பொறுப்பேற்றதும் ராணுவத்தின் தரத்தினை உயர்த்தி அதனை பெரும் சக்தியாக்க விரும்பினார் இராணுவ பலத்தை உயர்த்துவது மட்டுமல்ல, அந்தப் பலத்தை போரில் பரிசீலித்துப் பார்ப்பதற்கும் சுந்தர்ஜிக்கு ஆர்வம் அதிகம். மூன்று இராணுவ நடவடிக்கைகளுக்கு சுந்தர்ஜி திட்டங்களை வகுத்தங்களை வகுத்திருந்தார். மூன்று இராணுவ நடவடிக்கைகளும் மூன்று நாடுகளுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டன. முதலாவது […]

இந்த நாள் ….

நவீனகாலத்தில் உலகமும் தமிழகமும் காலடி எடுத்து வைத்த அந்த 1900ம் வருடங்களில் தமிழகமும் விழிக்க தொடங்கியது ஆங்கில அரசில் பிராமணர் எல்லா இடங்களிலும் இருந்தனர், மற்றவர்களுக்கு ஒன்றுமே இல்லை. மற்றவர்கள் என்றால் அவர்களும் இன்று உயர்சாதி என சொல்லிகொள்பவர்களே, அவர்கள் படித்திருந்தாலும் பிராமண சக்திகளை உடைக்க முடியவில்லை பிட்டி தியாகராசர், டி எம் நாயர் போன்றோர்தான் முதல் குரல் கொடுத்தனர், கொஞ்சம் கொஞ்சமாக குரல் ஒலித்தது பிராமணர் அல்லாதோர் சங்கம் தொடங்கியது, அப்பொழுதும் பிராமணரை அசைக்க முடியவில்லை […]

லோயாவின் மரணம் சொல்லும் விஷயம் ஒன்றுதான்…

நீதிபதி லோயா என்றொருவர் இருந்தார் அவர் ஒரு போலி என்கவுண்டர் வழக்கினை விசாரித்துவந்தார். அந்த வழக்கில் அமித்ஷாவிற்கும் சம்மன் அனுப்பபட்டது வழக்கு நடந்தபொழுது மகாராஷ்டிரம் நாகபுரிக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற லேயா அங்கே மாரடைப்பில் உயிரிழந்தார் அதன் பின் நடந்ததுதான் சிக்கல், அவரின் உடல் மகா அவசரமாக சொந்த ஊருக்கு கொண்டு செல்லபட்டு தகணம் செய்யபட்டது. அதைவிட முக்கியமான விஷயம் அவருக்கு அதற்கு முன் இதயம் தொடர்பான நோய்கள் இருந்ததில்லை மனிதர் அமித்ஷாவிற்கு சம்மன் அனுப்பியவர் […]

உண்ணாவிரதத்தை கைவிட்டார் ஜீயர்

உடல்நிலையினை கருதியும் எஸ்.வீ சேகர் போன்றோர் வற்புறுத்தியதை ஏற்றும் உண்ணாவிரதத்தை கைவிட்டார் ஜீயர் காந்தியினை வெள்ளையன் ஏன் மதித்தான் என்பது இனியாவது இவர்களுக்கு புரியட்டும், காந்தியின் உறுதி அப்படி இருந்தது கவனியுங்கள் உடல்நிலையினை கருத்தில் கொண்டு முடித்திருக்கின்றார், அதுவும் வைரமுத்து மன்னிப்பு கேட்காமலே ஜீயர் உண்ணாவிரதம் முடித்திருக்கின்றார். ஆக அவர் உடலை வலுவாக வைத்திருக்க எண்ணியே இனி உண்ண போகின்றார், நன்றாக உண்டு பலம்பெற போகின்றார் அதனால் விரைவில் சோடா பாட்டில் வீசும் போராட்டம் நடைபெற வாய்ப்பு […]

விஜய் மல்லையா மோசடி செய்ததற்கான எந்த ஆவணமும் இல்லை….

விஜய் மல்லையா மோசடி செய்ததற்கான எந்த ஆவணமும் இல்லை என அருண் ஜெட்லி சொல்லியிருக்கின்றார், இது எந்த அளவு விவகாரம் ஆகும் என தெரியவில்லை (ஆவணம் இல்லை என்றால் ஏன் வழக்கு தொடரவேண்டும்? அவரை விரட்ட வேண்டும்? அரசிடம் ஆவணங்கள் இல்லை என்றால் வங்கிகளிடமுமா இல்லாமலிருக்கும்?) முன்பு விஜய்மல்லையா தங்களுக்கு தெரியாமல் தப்பினார் என்றார்கள், இப்பொழுது ஆவணமே இல்லை என்கின்றார்கள் போகிற போக்கை பார்த்தால் விஜய் மல்லையா பல நூறு கோடி நஷ்ட ஈடு கேட்பார் போலிருக்க்கின்றது. […]