பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மாற்றத்தைக் கொண்டுவாருங்கள் – கர்நாடக மக்களிடம் மோடி கோரிக்கை

மாற்றத்தைக் கொண்டுவாருங்கள் – கர்நாடக மக்களிடம் மோடி கோரிக்கை சும்மாவே அவர்கள் ஒருமாதிரி, இதில் இவர்கள் கொள்கையும் சேர்ந்துகொண்டால் கன்னடர் ஒருமாதிரி ஆகிவிடமாட்டார்களா? என்ன மாற்றத்தை மோடி விரும்புகின்றார்? நிச்சயம் தமிழருக்கு காவேரி கொடுங்கள் எனும் மாற்றமாக இருக்காது வேறு என்ன மாற்றமோ தெரியாது, ஆனால் இந்தியா முழுக்க மாற்றத்திற்கு தயாராக இருப்பது மோடிக்கு தெரிந்திருக்கின்றது

பாரதியார் பலகலைகழக ஊழல் பெரும் விவகாரமாகின்றது…

இந்த பாரதியார் பலகலைகழக ஊழல் பெரும் விவகாரமாகின்றது, பல்கலைகழக துணை வேந்தர் என்பவர் ஊழலுக்கு துணை போன வேந்தராகிவிட்டார் இது ஏதோ பாரதியார் பலகலைகழகத்தில் மட்டும் நடக்கும் விவகாரம் அல்ல, எல்லா பல்கலைகழகங்களும் இப்படித்தான் ஊழலில் திளைக்கின்றன, பாரதியார் பல்கலைகழகம் சிக்கிவிட்டது அவ்வளவுதான் ஆசிரியர் நியமணத்திற்கு குறைந்தபட்சம் 50 லட்சம் என்பது மார்கெட் நிலவரம், இந்த துணைவேந்தரை முறையாக விசாரிக்கும் பட்சத்தில் அவர் எத்தனை கோடி கொடுத்து பதவிஅடைந்தார் என்பது புரியும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் […]

காங்கிரசும், திமுகவும் சேர்ந்து சென்று பேசி காவிரியினை மீட்டால் என்ன? : தமிழிசை சீற்றம்

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் காங்கிரசும், திமுகவும் சேர்ந்து சென்று பேசி காவிரியினை மீட்டால் என்ன? : தமிழிசை சீற்றம் வெறுமனே காங்கிரஸ் என அம்மணி சீறியிருந்தால் குமரி அனந்தனுக்கு மாரடைப்பும், வசந்தகுமாருக்கு பக்கவாதமும் வந்துவிடும் என்பதால் இவர் திமுகவினையும் சேர்த்துகொண்டார் ஏதோ எடியூரப்பா முதல்வராக இருந்தபொழுது இவர் காரைக்காலமையார் போல தலையால் நடந்துசென்று காவிரி மீட்டது போல பேசிகொண்டிருக்க்கின்றார். மத்தியில் நடப்பது பாஜக ஆட்சி, மாநிலத்தில் அவர்களின் செருப்பு ஆள்கின்றது. ஆள்வது இவர்களாம் ஆனால் நீதிபெற […]

கடலூரில் காபரே… இன்னும் பிற ….

அது 1982ம் ஆண்டு, மதுகடை திறப்பால் தாய்குலங்களிடம் இமேஜ் சரிந்திருந்த ராமசந்திரன் ஜெயலலிதாவினை வலுகட்டாயமாக அழைத்து வந்து கட்சியில் சேர்த்து கடலூர் மாநாட்டிலும் பேசவைத்தார் அதன்பின் அலங்கார வாகனத்தில் ஜெயலலிதா கடலூர் தெருக்ககளில் அழைத்துவரபட்டார். அதிமுகவிலே சர்ச்சை வெடித்தது, ஆர்.எம் வீரப்பன் கோஷ்டி குதித்தது இன்னும் ஏராளமான சர்ச்சை பேச்சுக்கள் வந்தன‌ முரசொலி தனக்கே உரித்தான ஸ்டைலில் செய்தி வெளியிட்டது, எப்படி? “கடலூரில் காபரே” அந்த அட்டகாச முரசொலி இப்பொழுது முழுக்க தன் இடிமுழக்கத்தை இழந்து நிற்கின்றது. […]

தில்லி தமிழ் நாடு இல்லங்கள் பெயர் மாற்றம்…

இந்த பாஜக செய்யும் பெயர் மாற்றி விளையாடும் விளையாட்டிற்கு டெல்லி தமிழ்நாடு இல்லமும் தப்பவில்லை அதாகபட்டது பொருளாதார சிக்கலா? பண நோட்டின் கலரை மாற்று, பாஸ்போர்ட் சிக்கலா? அதன் கலரை மாற்று இப்படி பெயின்ட் அடித்துவிளையாடும் ஆட்சி பாஜகவுடையது, நியுமராலாஜி போல கரலாலாஜி எனும் நம்பிக்கையில் ஆண்டு கொண்டிருப்பவர்கள் அப்படிபட்டவர்கள் கண்ணில் டெல்லி தமிழ்நாடு இல்லம் பட்டிருக்கின்றது. எல்லா மாநில முதல்வரும் தங்க டெல்லியில் வீடு உண்டு அப்படி தமிழக முதல்வர் தங்கும் இல்லம் தமிழ்நாடு இல்லம் என […]

இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக – கடம்பூர் ராஜூ

இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக – கடம்பூர் ராஜூ காஞ்சிமட சங்கராச்சாரியாரை ஓடவிட்டு அடித்த கட்சி எது? அதென்ன இந்துக்களுக்கு ஆதரவான கட்சியா? கபாலீஸ்வரர் குளம் தூர்வாரியது முதல் திருவாருர் தேரினை ஓடவைத்தது வரை திமுகவின் இந்து ஆலய பணி பெரிது. திருவண்ணாமலை ஆசிரமத்தை நெருக்கும் விதமாக ஜெயா எழுப்பிய அரசு கட்டிடத்தை வேறு இடத்திற்கு மாற்றி அந்த ஆசிரமத்தை காப்பாற்றியவர் கலைஞர், மறுக்க முடியுமா? அவ்வளவு ஏன்? அண்ணா ஆட்சியிலே கும்பகோண மகாமக குளத்தினை சீர் […]

மலேசியாவில் அண்ணா நினவு தினம் ….

நேற்று அண்ணா நினைவுநாள், தமிழகம் தவிர உலகெல்லாம் நினைவு கூர்ந்தார்கள். 1965ல் அண்ணா மலேசியா வந்து உரையாற்றியதை எல்லாம் மலேசிய வானொலி ஒளிபரப்பியது “எல்லா நாடுகளிலும் தமிழர் இருக்கின்றார்கள், மலேசியாவிலே வாழுகின்றார்கள்..” என்ற தன் கரகரத்த குரலில் அண்ணாவின் குரலை கேட்டபொழுது உள்ளம் சிலிர்த்தது உண்மையில் அம்மனிதனின் பேச்சு பெரும் அறிஞனின் பேச்சை போலவே இருக்கின்றது, எதுகை மோனை வார்த்தைகள் எல்லாம் தாவி வந்து அவர் பேச்சில் அமைகின்றன. அவரை பேரறிஞர் என சொன்னதில் ஆச்சரியமில்லை. சென்னைக்கு […]

தலைவி 30 நிமிடம் கூடுதலாக பேசியதற்கு வழக்காம்…

நெல்லை முக்கூடலில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் 3 மாவட்ட காங்கிரஸ் செயலாளர்கள் வரவில்லையாம் அப்படி சில நபர்கள் உண்டா என்பது வேறுவிஷயம். ஆனால் கூட்டம் அள்ளியிருக்கின்றது. தங்க தலைவியின் பேச்சை கேட்க பெரும் கூட்டம் ஆரவாரமாக கூடியிருக்கின்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன‌ 1980களில் ஜெயலலிதாவிற்கு இருந்த அதே வரவேற்பு தலைவிக்கு இருக்கின்றது என்பதை இப்பொழுது எல்லோரும் ஒப்புகொள்ள தொடங்கியாயிற்று, அன்று ஜெயாவிற்கு இருந்த அதே தைரியம் இப்பொழுது குஷ்பு ஒருவருக்கே இருக்கின்றது என தமிழகமும் நோக்க தொடங்கிவிட்டது […]

தேசிய ஜிஎஸ்டி ஆணையாளர், பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது

தேசிய ஜிஎஸ்டி ஆணையாளர் லஞ்ச வழக்கில் சிபிஐயினால் கைது செய்யபட்டார், பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது இவை எல்லாம் மிக உயர் பதவியில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்கி சிக்கிய செய்திகள், சாதாரண பதவி பற்றி சொல்ல வேண்டியதில்லை ஜிஎஸ்டி ஆணையாளர் லஞ்சம் வாங்கி சிக்கியது சாதாரணம் அல்ல, இது நிதித்துறைக்கு கீழ் வரும் இலகா ஆனால் நிதியமைச்சர் ஜெட்லி பட்ஜெட் தொடரில் என்ன சொன்னாரென்றால் நாட்டை ஊழலில் இருந்து விடுவித்ததாக பெருமையாக வாசித்துகொண்டிருந்தார் […]

சீமான் சரத்குமார் இணைந்து செயல்பட முடிவு

சீமான் சரத்குமார் இணைந்து செயல்பட முடிவு : செய்தி ஆக அங்கிள் சைமன் கூட்டணிக்கு தயாராகின்றார் என்பது புரிகின்றது. இவ்வளவு நாளும் கூட்டணி கிடையாது, புலி வேட்டைக்கு போகும் பொழுது தனியாகவே செல்லும், நாய்தான் கூட்டமாக செல்லும் என்றெல்லாம் பேசிகொண்டிருந்தவர் சைமன் ஆக புலி நாயாகி கொண்டிருக்கின்றதா? அல்லது புலிவேடமிட்ட நாய் வேடத்தை கலைக்கின்றதா என்பதை தமிழகமே முடிவு செய்யட்டும் எந்த கொள்கை அடிப்படையில் இருவரும் கூட்டணி ஆனார்கள், தேடுவாரற்று போன தார்மீக அடிப்படையாக இருக்கலாம் என்றாலும் […]