பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மத்திய அரசுடன் விரிசல் என அர்த்தமில்லை : பன்னீர் செல்வம்

திராவிட இயக்கம் இருக்கும்வரை தமிழகத்தில் தேசியக் கட்சிகள் காலுன்ற முடியாது என தான் கூறியக் கருத்து, மத்திய அரசுடன் விரிசல் என அர்த்தமில்லை : பன்னீர் செல்வம் அதாவது இவர் சொல்வதற்கு எல்லாம் வேறு அர்த்தம் என செய்தியாக்கிவிடுகின்றார்களாம், அன்னார் மிகுந்த வேதனையில் இருக்கின்றார் அதனால் இவர் துணை முதல்வராக இருப்பதற்கு என்ன அர்த்தம் என யாரும் கேட்டுவிட கூடாது என மறைமுகமாக கோரிக்கை வைக்கின்றார்.  

ஸ்டாலின் என்ன செய்யபோகின்றாரோ?

கர்நாடக முதல்வரைச் சந்திக்க முதல்வர் பழனிச்சாமி எங்களையும் அழைத்துச் செல்ல வேண்டும்: மு.க.ஸ்டாலின் எதற்கு? அப்படியே சசிகலா முன்னால் இருவரும் செல்பி எடுத்துவிட்டு வரவா? கூட உதயநிதியினையும் அழைத்து செல்லலாமா? ஸ்டாலின் தான் கேட்டிருக்கின்றார் என்றால், இந்த குதிரைபேர அரசுடன் நீங்கள் ஏன் வரவேண்டும் என கேட்க அங்கும் ஆளில்லை. ஆளும்கட்சியுடன் இணைய ஸ்டாலின் விரும்புவதை விட, இங்குள்ள எதிர்கட்சிகளையும் விவசாய சங்கங்களையும் சேர்த்து பெரும் எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு நெருக்கடி கொடுப்பதே இப்போதைக்கு திமுக தேவை அதனால் […]

ஜீயர் சோடாபாட்டில் விவகாரம் என்னாயிற்று

அந்த ஜீயர் சோடாபாட்டில் விவகாரம் என்னாயிற்று என தெரியவில்லை, அவர் வருத்தம் தெரிவித்தார் என்றார்கள் ஆனால் யாரிடம் தெரிவித்தார் என சொல்லவில்லை சோடா பாட்டிலிடம் தெரிவித்திருக்கலாம் ஆனால் திமுகவினர் அட்டகாசமாக ஸ்கோர் செய்யும் இடம் இது, பரிதாபமாக‌ விட்டுவிட்டார்கள். கலைஞர் நலமாக இருந்தால் எப்படி சொல்லியிருப்பார். “வன்முறை அவர்களுக்கு புதிதா? ஒரு காலத்தில் உடன்கட்டை என இளம்பெண்களை துடிக்க கொன்றவர்கள்தானே அவர்கள்? அதனைபோல் எத்தனை பெரும் கொடுமைகளை எல்லாம் செய்தார்கள்? , அவ்வளவு ஏன்? பெரியார் மீது […]

அன்புசெழியன் என்ன அஹிம்சைக்கான காந்தி விருது பெற்றவரா?

அன்புச்செழியன் தேடப்படும் குற்றவாளி கிடையாது, என் குடும்ப விழாவில் பங்கேற்றதில் தவறு இல்லை: செல்லூர் ராஜூ பின் அன்புசெழியன் என்ன அஹிம்சைக்கான காந்தி விருது பெற்றவரா? அவர் மேல் தவறில்லை என்றால் ஏன் ஓடி ஒளிகின்றார் அவர் தேடபடும் குற்றவாளி இல்லை என்றால் இவர் அவரை பேனர் வைத்து வரவேற்றால் என்ன? அசோக்குமாரின் தற்கொலை தமிழகத்தை உலுக்கிய விவகாரம், அதில் தேடபடும் அன்புசெழியன் இன்னும் சரணடையவில்லை வாக்குமூலம் வழங்கவுமில்லை, நீதிமன்றம் அவரை விடுவிக்கவும் இல்லை இந்நிலையில் அவரை […]

ஓரளவு அர்த்தமுள்ள எதிர்ப்பு அது…

திராவிடர் திருநாளை முன்னிட்டு ஜனவரி 15, 16ல் பறையாட்டம் ஒயிலாட்டம் நடக்கும் : திராவிட கழகம் அறிவிப்பு தமிழரின் தனிபட்ட இசைகருவி யாழ், பண்டைய தமிழ் இலக்கியம் அதனைத்தான் சொல்கின்றது, அதனை போன்ற பல உண்டு, வீணை கூட தமிழர் மரபில் ஒன்றுதான் அவற்றை எல்லாம் இசைக்க மாட்டார்கள், ஏனென்றால் யாழும் தெரியாது, அதனை இசைக்கவும் தெரியாது, வரலாறும் தெரியாது சும்மா எதனையாவது போட்டு அடித்து இதுதான் தமிழர் இசை, நடனம் என சொல்லி ஏதாவது செய்ய […]

லுத்தரை தலைவனாக கொண்டு போராட பழகுங்கள்

இந்திய தலித் போராளி, மொழி போராளி, இன்னும் ஏகபட்ட போராளிகள் எல்லாம் நினைவில் கொள்ளவேண்டியது இந்த மார்ட்டின் லுத்தர் என்பவரைத்தான் இங்கு சாதிக்கொரு நாடு, உட்சாதிக்கொரு நாடு, மதத்திற்கொரு நாடு, மொத்த தமிழக பிராமணரையும் கடலில் போட்டுவிட்டு திராவிட நாடு, மொத்த தெலுங்கரையும் விரட்டிவிட்டு சுத்த தமிழ்நாடு எல்லாம் சாத்தியமில்லை உரிமைகளை கோரலாம், போராடலாம் பொறுமை மகா முக்கியம் அப்படி இருந்தால் லுத்தரின் போராட்டத்திற்கு பின்னொரு நாளில் ஒபாமா வந்தது போல், தலித் பிரதமராகலாம், தமிழன் பிரதமராகலாம் […]

ஓவியா சிம்பு திருமணம் ?

எனக்கும், ஓவியாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணமாகிவிட்டது: சிம்பு ஒரு வருடத்தில் எத்தனை திருமணம் செய்வார் இவர்?, இந்த எலிசபெத் டெய்லரின் சாதனையினை முறியடிக்க இவரை விட்டால் யாருமில்லை தமிழண்டா என அடிக்கடி சீறிகொள்வார், ஆனால் இவர் அடிக்கடி காதலிப்பதோ, திடீர் திருமணம் செய்வதெல்லாம் மலையாள, வடநாட்டு பெண்கள். ஏன் மிஸ்டர் சிம்பு இதில் உங்கள் தமிழுணர்வு வெளிப்படவில்லை?

மறுபடியும் களத்தில் இறங்கிவிட்டார் மா.நடராசன்

மறுபடியும் களத்தில் இறங்கிவிட்டார் மா.நடராசன், சீறியபடி வந்து நிற்கின்றார். உடல்நலம் குன்றி மாற்று கல்லீரல் பொருத்திய நடராசன் தன் பேட்டியினை வழங்கியிருக்கின்றா, கல்லீரல் கொடுத்தவனுக்கு நன்றி எல்லாம் அதில் இல்லை,மாறாக பலரின் ஈரலை பிடுங்கும் வகையில் பேட்டி இருக்கின்றது இப்படியாக‌ “நான் இன்னும் இந்தியா முழுக்க செல்வாக்கோடு இருக்கின்றேன், ஒரு போன் போட்டாலே நான் நினைத்ததை சாதிப்பேன் இந்த ஜெயலலிதா சாவுக்கு எதற்கு விசாரணை ஆணையம். தீர்ப்பு வந்தும் என்ன கிழித்துவிட போகின்றார்கள்? எல்லாம் வீண் குழப்பம் […]

இறந்தவரை பழிப்பது அறிவுடமை ஆகாது

ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவனை பற்றி பேச கூடாது என்பது தமிழர் மரபு, அதுவும் அவன் இறந்த அன்று அவன் இறுதிசடங்கு நடக்கும்பொழுது பழிப்பது எல்லாம் மானிடர் செய்யும் விஷயம் அல்ல‌ கலைஞரை அவர் சில இடங்களில் கண்டித்திருக்கலாம், கலைஞர் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆயினும் அதனை சொல்ல இது நேரம் இல்லை கலைஞர் நடமாடிகொண்டிருந்தால் ஞாநி உடலுக்கு விழுந்த‌ முதல் மாலை கலைஞரிடம் இருந்துதான் வந்திருக்கும் என்பதை மறக்காதீர்கள் தமிழக சமூக அவலத்தை, அரசியலை […]

தமிழிசை மைண்ட் வாய்ஸ்….

“மாட்டுப் பொங்கல், உனக்கு தாமரை இலை தரத்தான் ஆசை ஆனால் நீ தமிழக மக்கள் மாதிரியே வேண்டாம்னு சொல்லுவ, அதுனால இந்தா புல்லு உனக்கும் தமிழ்நாட்டில மரியாதை இல்ல, எங்க கட்சிக்கும் மரியாதை இல்ல‌ என்ன செய்ய, உனக்கு மட்டும் வோட்டு இருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்? அங்க ஒரு கோஷ்டிக்கு இரண்டு இலை எல்லாம் கொடுத்துபார்த்தோம் கொஞ்சமும் பிரயோசனம் இல்ல, உனக்கு கொடுக்குற புல்லாவது பிரயோசனமா இருக்காண்ணு பார்ப்போம்.” (தாமரை மலரும்ணு ஒரு நாளைக்கு ஆயிரம் […]