பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்த காட்சிதான் இப்பொழுது தமிழகத்தில் நடக்கின்றது …

ரஜினிக்கு எதிராக சில்லறை கட்சிகள் பொங்குகின்றன, பெரிய கட்சிகள் ஏன் பொங்கவில்லை என்ற காரணம் எளிதானது இந்த சில்லறைகள் எல்லாம் பெரும் கட்சி அனுமதியின்றி வாய்திறக்காது அதனால் சங்கி மங்கி ஸ்டைலில் ஆள் வைத்து அழுதுகொண்டிருக்கின்றார்கள் வடிவேலு சொல்வது போல “எரிமலை என்னைக்கிடா அழுதிச்சி? எனக்கு பதிலா இவன் அழுவான் டேய் வாடா வாடா.. நீ போடா போடா சங்கி மங்கி குவாங்கோ….” இந்த காட்சிதான் இப்பொழுது தமிழகத்தில் நடக்கின்றது  

உலகம் புரியாதவனாக இருக்கின்றான் தமிழன்…

சுதந்திரம் வாங்கி கொடுத்து முதலில் ஆண்ட காங்கிரஸ், திராவிட தமிழனை வாழ வைக்க வந்த திமுக, ஊழலில்லா ஆட்சி என வந்த அதிமுக‌ இது போக கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் சாதிவாரியாக தமிழனுக்கு உழைக்க ஏகபட்ட கட்சிகள், அது போக கடல்கடந்த தமிழனுக்காகவும் தொண்டை புடைக்க கத்தும் கட்சிகள் மதவாரியாக, ஏரியா வாரியாக உழைக்க இன்னும் பல கட்சிகள் அமைப்புகள் தேசிய கட்சியான பாஜக, இதுபோக நடிகர்கள் ஓடி வந்து நடத்தும் கட்சிகள் என இந்த தமிழனுக்கு […]

மலேசியாவில் தமிழனுக்கு அரசு பதவி, அமைச்சர் பதவி இருக்குண்ணே….

தமிழன் உலகமெல்லாம் கொடிகட்டி பறக்குறாண்ணே நினைச்சா சந்தோஷமா இருக்கு அப்படியா எங்கடா? மலேசியாவில் தமிழனுக்கு அரசு பதவி, அமைச்சர் பதவி இருக்குண்ணே, சிங்கப்பூரில் பிரதமர் பதவி கொடுத்தாங்கணே. அப்படியா வேற யாரெல்லாம்டா? அண்ணே அமெரிக்காவில அமிர்தராஜ் பிரதர்ஸ்ல இருந்து இப்போ கூகிள் அதிகாரி சுந்தர்பிச்சை வரை தமிழர்ணே , மொரிஷியஸ், பிஜி, கயானா, ரியூனியன் ஐலண்ட், தென்னாப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்னு உலகம் முழுக்க நம்ம தமிழன் பெரிய பதவில இருக்காண்ணே. இலங்கை எதிர்கட்சி தலைவர் கூட தமிழர்தான் […]

ரஜினியினை விமர்சிக்கும் திமுகவினர் ஒரு விஷயம் மறக்கின்றனர்

ரஜினியினை விமர்சிக்கும் திமுகவினர் ஒரு விஷயம் மறக்கின்றனர் திமுக என்பது அடிக்கடி பல்டி எல்லாம் அடிக்கும் கட்சி, “ஏய் குலுகபட்டரே..” என ராஜாஜியினை எதிர்ப்பார்கள் பின் அவரோடு கூட்டணி என்பார்கள் இந்திராவினை எதிர்ப்பார்கள், கடுமையான வசவுகளை வீசுவார்கள், “விதவை பென்சன் வேண்டுமா?” என்பார்கள் பின் அவரோடு கூட்டணி வைப்பார்கள் இது திமுக நிலைப்பாடு என்றல்ல அரசியல் அப்படித்தான் எம்ஜிஆருக்கு பின் தமிழக வோட்டு நமக்கு என்ற திமுகவின் 1987 கணக்கு பொய்த்தது, அது 2017லும் நடந்திருக்கின்றது. ஆம் […]

ஒரே நாளில் 50 லட்சம் உறுப்பினர்கள்: ரஜினிக்கு குவியும் ஆதரவு

கலைஞரை சந்தித்தார் அழகிரி, இன்று மாலை சந்திக்கின்றார் ரஜினி சுறுசுறுப்பில் கலைஞர் தேனீ. தன் நாட்களில் ஒரு நிமிடம் கூட அவர் சும்மா இருந்ததே இல்லை. கட்சி, அரசியல், கூட்டம், எழுத்து, குடும்பம், வாய்ப்பு கிடைத்தால் பிராமண கலாய்ப்பு என படுபிசியாக இருந்தவர் இப்பொழுது அவரால் முடியவில்லை, நாற்காலியில் அமர்ந்துவிட்டார் , பேசவோ எழுதவோ கூட முடிவதில்லை ஆனாலும் உயிரோடு இருக்கும் வரை முடிந்தமட்டும் மக்களுக்கு ஏதாவது செய்தியாக சொல்லிகொண்டே இருப்பேன் முடியாவிட்டால் செய்தியாக வந்துகொண்டே இருப்பேன் […]

காலத்திற்கு ஏற்ப மாறாத எதுவும் நிலைக்காது

என்னமும் சொல்லுங்கள், நான் ஆர்.எஸ்.எஸ் ஏஜண்ட் என்று கூட திட்டுங்கள் உண்மை இதுதான் எல்லா ஆலயங்களும் நிரம்பி வழிகின்றன. அது இந்துமத ஆலயம் என்றல்ல கிறிஸ்தவ ஆலயமோ அல்லது ஜெப கூட்டங்களோ மசூதிகளோ எல்லாம் எப்பொழுதும் தமிழகத்தில் ஹவுஸ் புல் இந்துக்களின் அடையாளமான திருப்பதி முதல் கன்னியாகுமரி வரை கூட்டம் இல்லா ஆலயம் என எதை காட்ட முடியும்? எல்லா இந்துக்களின் வீடுகளும் காலையில் திருபள்ளி எழுச்சி பாடலோடே விடிகின்றது, சடங்கு சம்ப்ரதாயம் விரதம் கொண்டாட்டம் என்றே […]

இந்த அரசு சரியில்லை என யார்தான் சொல்லவில்லை ?

பிரத்யேக சேனல், செய்தித்தாள் தொடங்க பழனிச்சாமி அதிமுக முடிவு இன்னும் கட்சி நீடிக்கும் என நம்பும் இவர்களின் அபார தன்னம்பிக்கையினை எவ்வளவு பாராட்டினாலும் தகும் இந்த அரசு சரியில்லை என யார் சொல்லவில்லை? எல்லோரும்தான் சொல்கின்றார்கள், டிராபிக் ராமசாமி முதல் குப்பத்து கோயிந்தசாமி வரை எல்லோரும் சொல்லித்தான் பார்க்கின்றார்கள் நல்லகண்ணு முதல் எல்லோரும் சொன்ன விஷயம்தான் அது. முக ஸ்டாலினோ குதிரை பேர அரசு என கிளிப்பிள்ளை போல சொல்லிகொண்டே இருக்கின்றார் அட அதிமுகவின் தினகரனே அதனைத்தான் […]

விட்டால் தமிழகம் தோன்றியதே திராவிட ஆட்சியில்தான் என்று சொல்வார்கள் …

திராவிடம் தமிழகத்தை வளர்த்தது சென்னையின் வளர்ச்சிக்கெல்லாம் அதுதான் உழைத்தது, பெண் கல்வியினை அதுதான் தொடங்கிவைத்தது என சிலர் பேச தொடங்கியிருக்கின்றான். அன்றிலிருந்தே தமிழகம் உலகிற்கு விருப்பமான இடம், சாலமோன் அரசனின் கப்பல்கள் இங்கு வந்திருக்கின்றன. ரோமர்கள் முத்து தேடி வந்திருக்கின்றனர்,சீன பட்டுக்கு நிகராக காஞ்சி பட்டும் இருந்திருக்கின்றது மாலிக்காபூர் முதல் எத்தனையோ பேர் தமிழக செல்வங்களை தேடி வந்திருக்கின்றனர், நாயக்கர்கள் தமிழகத்தில் சம்மணம் போட்டு அமர்ந்தே விட்டனர். நவீன தமிழகம் வெள்ளையன் காலத்திலே தொடங்கிற்று 1600களில் இந்தியா […]

எல்லா பயலுகளும் ரஜினி பக்கம் கலாய்க்க போயிட்டானுக‌ : பழனி பன்னீர்

“எங்கள கவனிச்சி கலாய்ச்சிட்டே இருந்த எல்லா பயலுகளும் ரஜினி பக்கம் கலாய்க்க போயிட்டானுக‌ ஆட்சியில் இருக்குற நம்மள விட்டுட்டு , இனி ஆட்சிக்கு வருவோர்ரோ இல்லையோ ஆனால் அவரை போட்டு விவாதிக்கின்றான் பாருங்க, அங்க நிற்கிறான் தமிழன். புரட்சிதலைவரை உருவாக்கிய தமிழன் இப்போதான் பாரம் குறஞ்ச மாதிரி இருக்கு, . இனி அடுத்த தேர்தல் வரைக்கும் அவரைபத்தியே பேசுவானுக போல. நமக்கு கவலையே இல்ல… ரஜினி எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும், ரொம்ப தேங்க்ஸ்பா ரஜினி, கடவுள் […]

கலைஞரிடம் இருந்து திமுகவினர் படிக்க வேண்டியது ஏராளம்

தன்னால் சினிமாவிலும் தொடர்ந்து அரசியலும் வளர்க்கபட்ட ராமசந்திரன் தன் இதயமான திமுகவினை பிளந்து தனிகட்சி கண்ட நேரம் கலைஞரிடம் கேட்டார்கள் “அதிமுக கட்சி பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? புதிதாக ஒரு கட்சி தொடங்கியிருக்கின்றது அவ்வளவுதான் அதன் அரசியல் நிலைப்பாடு? தமிழில் நியாய‌த்தின் எதிர்பதம் அநியாயம், நீதியின் எதிர்பதம் அநீதி அப்படி இனி திமுகவின் எதிர்கட்சி அதிமுக‌ இதனால் உங்களுக்கு என்ன பாதிப்பு? எனக்கு நண்பர் சென்றுவிட்டாரே என்பதுதான் பாதிப்பே தவிர, கட்சிக்கு பின்னடைவு அல்ல. ஒரு நடிகர்க்கு […]