பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சட்டம் நிச்சயமாக ஒரு இருட்டறை

ஜெயாவிற்காக வழக்கு 18 ஆண்டுகாலம் இந்நாட்டில் இழுத்தடிக்கபட்டது , ஆனால் சசிகலாவிற்கு சில மாதங்களிலே முடிவு தெரிந்துவிடுகின்றது முத்தலாக்கினை நிறுத்தும் நீதிமன்றங்கள், ஆகமவிதிப்படிதான் அர்ச்சகர் அமையவேண்டும் என்பதில் மட்டும் மகா உறுதியாய் உள்ளன. பாபர் மசூதி இடித்தற்கு தண்டனை இல்லையா என்றால் அதனை விட்டுவிட்டு முஸ்லீம்களும் அனுசரனையாக செல்ல ஆலோசனையும் சொல்கின்றது உச்சநீதிமன்றம். காவேரி சிக்கலில் பல்லாண்டு காலம் சர்ச்சை தொடரும் நிலையிலும் கன்னடம் அணைகட்ட தடை இல்லை என்கின்றது நீதிமன்றம் ஏன் என்றால் அப்படித்தான். காரணம் […]

பாண்டியராஜன் சபதம்…

உலக அளவில் தமிழ்மொழியினை முதல் 10 இடத்தில் 3 ஆண்டுக்குள் கொண்டுவருவேன் : அமைச்சர் பாண்டியராஜன் அதாவது அன்னார் தமிழுக்கு அமைச்சராகிவிட்டாராம், தமிழுக்காக உழைக்கபோகின்றாராம். தமிழகத்தில் தமிழ் வழி கல்வி, ஆங்கில பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடம். கடைகளுக்கு தமிழ்பெயர், தமிழ் தெரியாதவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் போன்ற முழக்கங்கள் எல்லாம் அன்னாரிடம் இல்லை மாறாக எப்படி முதல் 10 இடத்திற்கு கொண்டுவரபோகின்றாராம்? அன்னாரின் கருத்துபடி சீனாவின் மாண்டரினை 111 கோடி பேர் […]

எம்ஜிஆர் மீதும் மது வியாபார ஊழல் புகார் …

எம்ஜிஆர் மீதும் மதுவியாபார ஊழல் புகார் தொடர்பாக ரே கமிஷன் என்ப அமைக்கபட்டது. மது வியாபார டெண்டர், பார் அனுமதியில் பயங்கர ஊழல் என்ற பெரும் குற்றசாட்டு அது. பூதாகரமாகத்தான் கிளம்பியது. அந்த நேரம் வசமாக பிரபாகரன் சிக்க, அவனை வைத்தே அரசியல் செய்து ஒருமாதிரி பரபரப்பினை ஏற்படுத்தி ரே கமிஷன் செய்திகள் வெளிவராமல் பார்த்துகொண்டார் ராமசந்திரன். “நான் சொன்னால் மட்டும் தான் பிரபாகரன் கேட்பான்.” என சொல்லியே டெல்லிக்கு செக் வைத்து ஒரு தேசதுரோக அரசியல் […]

வல்லவன் சுற்றும் பம்பரம் மணலிலும் சுற்றும்

மருத்துவம் என்றல்ல அது போன்ற மகா முக்கியமான துறைகளில் தரம் மிக அவசியம். உதாரணம் ராணுவத்திற்கு தகுதியானவரை எடுக்கின்றோம் என சொல்லி, இட ஒதுக்கீடு என 150 கிலோவில் தொப்பையும் வயிறுமாக இருப்பவரையோ, அல்லது சதா இருமிகொண்டிருப்பவரையோ எடுப்பதில்லை. அது சாத்தியமுமில்லை. அந்த அந்த துறைக்கு என சில கட்டுப்பாடுகளும் தரமும் வேண்டும், அந்த துறைக்குரிய தகுதி இருப்பவர்களை மட்டுமே எடுக்கவேண்டும். அப்படி நல்ல திறமையானவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கபட வேண்டும், துறையின் தரம் அப்பொழுதுதான் உயரும். திறமை […]

சின்னம்மா, நீங்கள் இனி விரைவில் வெளிவர வாய்பில்லை….

அப்பொழுதே எழுந்த சந்தேகம் தான், அக்காலத்திலே வந்த முணகல்தான். அரசியலில் தன் எதிரிகளையும் அவர்களின் பிண்ணணி தூண்களையும் நொறுக்கிபோடுவதில் கைதேர்ந்தவர் கலைஞர், காமராஜருக்கு உதவிய சிலர் பின்னாளில் பட்டபாடு கொஞ்சமல்ல‌ அப்படிபட்ட துடிப்புமிக்க கலைஞர் நடராஜன் கும்பலை மட்டும் விட்டு வைத்திருப்பதேன்? அவர் நினைத்திருந்தால் என்றோ இவர்களை முடக்கியிருக்கலாமே என்ற கேள்விகள் எழுந்தன‌ கலைஞர் அரசியலில் ராஜதந்திரி, ஆனானபட்ட இந்திரா தஞ்சாவூருக்கு போட்டியிட வந்ததை, அதுவும் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபொழுது வந்ததையே எப்படியோ தடுத்துவிட்ட சாகசகாரர். அதாவது […]

122 இலாக்களுக்கு எங்கு செல்வார் மனிதர்?

122 அமைச்சர்கள் கொண்ட பெரும் மந்திரி சபையினை அமைக்காமல் இனி பழனிச்சாமி அரசு நீடிக்க வாய்ப்பில்லை 122 இலாக்களுக்கு எங்கு செல்வார் மனிதர்? இனி ஏராளமான இலாக்காக்கள் உருவாக்கபடும், செய்தி துறை டிவிட்டர் இலாகா, பேஸ்புக் இலாக்க இலாகா என பிரியலாம் நிதி துறை 50 ரூபாய் நோட்டு பரிவர்த்தனைக்கு ஒரு இலாக்கா, 100 ரூபாய் நோட்டுக்கு இன்னொரு இலாகா, சில்லறைக்கு ஒரு இலாக்கா என பிரியலாம் பொதுபணிதுறை என்பது சிமெண்ட் இலாகா, செங்கல் இலாகா, கம்பி […]

ஊதாரி மைந்தனின் கதை நினைவுக்கு வருகின்றது

இயேசுநாதர் சொன்ன , சொல்பேச்சு கேளாத ஊதாரி மைந்தனின் கதை நினைவுக்கு வருகின்றது.   பா.ஜ.க. என்னும் பெரிய மீன், அ.தி.மு.க என்ற சின்ன மீனை விழுங்கும்: சீமான் பின் இலை எப்படி மலரும்? இலை மலராமல் ஈழம் எப்படி மலரும்? உங்கள் புரட்சிபடையுடன் சென்று, எளிய தமிழ் பிள்ளைகளின் யுத்தம் நடத்தி அந்த சின்ன மீனை மீட்க கூடாதா? இந்த சின்ன மீனை பெரிய மீன் விழுங்கிவிட்டால், திமுக எனும் சுறா, அதாவது உங்கள் பாணியில் […]

காலம் எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு வைத்திருக்கின்றது

கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு முன், அந்த ராமசந்திரன் காலமான பின், இதே போன்ற பெரும் குழப்பம் அதிமுகவில் இருந்தது, ஜாணகி ஜெயா அணிகள் மோதிகொண்டிருந்தன‌ இதில் ஜெயா பக்கம் நடராஜனும், ஜாணகி பக்கம் ஆர்.எம் வீரப்பனுமாக நின்று மோதிகொண்டிருந்தார்கள். மத்தியில் பலமான ராஜிவின் ஆதரவு ஜெயாவிற்கே இருந்தது. இந்த அதிமுக சண்டை காரணமாக இரட்டை இலை முடக்கபட்டது, அது இல்லா தேர்தலில் கலைஞர் ஆட்சிக்கும் வந்தார். அதன் பின் அதிமுக அணிகள் இணைந்தன, இரட்டை இலை மீட்கபட்டதும், […]

தமிழன் தலையில் கோமாளி குல்லா : கமல்ஹாசன்

1990களில் பர்னாலா என்றொரு ஆளுநர் இருந்தார், ராமசந்திரன் இறந்து அதிமுக பிளவுபட்டு கலைஞர் முதல்வரான நேரத்தில் அவர்தான் தமிழக ஆளுநர். சந்திரசேகர் ஆட்சி ராஜிவ் தயவில் நடந்துகொண்டிருக்க, தமிழகத்தில் கலைஞர் ஆட்சியினை கலைக்கும்படி ஜெயா ராஜிவினை நெருக்க, ராஜிவ் சந்திரசேகரை நெருக்கினார். ஒரு ஆட்சி சட்டபடி கலைக்கபட ஆளுநரின் அனுமதி அவசியம். தமிழகத்தில் ஒரு அசாதரண நிலையுமில்லை, இங்கு ஆட்சி கலைக்க அவசியமில்லை, அப்படி ஒரு அறிக்கை தரமாட்டேன் என உறுதியாய் நின்றார் பர்னாலா. அது எப்படி? […]