பஞ்ச நாக தலங்கள்

பஞ்ச நாக தலங்கள் 01 : திருநாகேஸ்வரம்

“தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந்

தலையவனை மலையவனை உலக மெல்லாம்

ஆயவனைச் சேயவனை அணியான் றன்னை

அழலவனை நிழலவனை அறிய வொண்ணா

மாயவனை மறையவனை மறையோர் தங்கள்

மந்திரனைத் தந்திரனை வளரா நின்ற

தீயவனைத் திருநாகேச் சரத்து ளானைச்

சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே”

நாக வழிபாட்டு தலங்களை எல்லோரும், அறிந்திருப்போம் ஆனால் நாகங்கள் கூட்டாக வந்து வழிபட்ட தலங்கள் வெகு சில அவற்றில் ஒன்று இந்த திருநாகேஸ்வரம்

கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லம் வழியில் திருநாகேஸ்வரம் எனும் ஊரில் அமைந்துள்ளது இந்த ஆலயம், இது சிவாலயம் இந்த ஆலயத்தின் நாதர் நாகேஸ்வரர், தாயார் பிறைநுதலாள் அல்லது கிரிகுஜாம்பிகை

இந்த தலம் முன்பு சென்பகமரங்கள் நிறைந்த இடமாதலால் இது சென்பகதலம் என்றும் அழைக்கபட்டது, அதனால் அந்த சிவனுக்கு சென்பகராணேஸ்வரர் எனவும் பெயர் உண்டு

இந்த ஆலயம் யாரால் ஸ்தாபிக்கபட்டது என்றால் அங்கேதான் தொடங்குகின்றது நாக வழிபாட்டின் வரலாறு

ஆம், இது ஒன்பது நாகங்களில் முக்கிய நாகமான தட்சகன் வந்து வழிபட்ட இடம்

ஆம் நாகலோகத்தில் நவ நாகங்கள் உண்டு, வாசுகி, ஆதிசேஷன், கார்க்கோடகன், அனந்தன், குளிகன்

தட்சகன். சங்கபாலன், பதுமன் என ஒன்பது பேர் உண்டு

இங்கே வாசுகி சிவன் கழுத்தில் தொங்கும், ஆதிஷேஷனும் அனந்தனும் சாயலால் ஒன்றுபட்டவர்கள் பெருமாளின் படுக்கையானவர்கள், கார்கோடகனும் குளிகனும் கடும் விஷம் கொண்டவர்கள், தட்சககன் அறிவின் அதிபதி

சங்கபாலமும் பதுமனும் சங்கநிதி, பதுமநிதி எனும் புதையலை தருபவர்கள்

இந்த நாகலோகத்தில் முக்கியமான தட்சகனிடம் இருந்துதான் இந்த ஆலய வரலாறு தொடங்குகின்றது

தட்சகன் இநதுஸ்தான மரபில் இந்துமரபில் மகா முக்கியமானவர், அந்த நாகம் அறிவுக்கு அதிபதி, விடா முயற்சிக்கும் போராட்ட குணத்துக்கும் பெயர்பெற்ற வடிவம், அவர் பெயரில்தான் தட்சசீலம் எனும் ஊரும் பலகலைகழகமும் முன்பு இருந்தது

அறிவு கொடுக்கும் நாகம் என் அதற்கு பொருள் உண்டு, சேர்வாரிடம் சேர்ந்து அது பல பலன்களை கொடுக்கும்

மகாபாரதத்தில் அர்ஜூனன் வனத்தை எரித்தபோது தப்பி பின் கர்னனிடம் நாகஸ்திரமாக சேர்ந்து அர்ஜூனனை கொல்ல முயன்று பழிவாங்க முயன்றது இந்த தட்சகனே

அப்படியே அர்ஜூனன் பேரன் பரீட்சித்து மகாராஜாவினை கடித்து கொன்று பின் அவன் மகன் ஜனமேஜயனிடம் தோற்று போனதும் இந்த தட்சகனே

அதாவது விடாமுயற்சிக்கும் அறிவுக்கும் அது உதாரணம், அந்த அருளை தரும் நாகம் அது, இந்த திருநாகேஸ்வரத்துக்குஅது வந்து வழிபட்டதற்கு புராண சம்பவம் உண்டு

சுசீல என்றொரு முனிவர் இருந்தார் அவருக்கு சுகர்மன் என்றொரு மகன் இருந்தான், அவனை தன் எதிரி என நினைந்து அல்லது பூர்வஜென்ம பகை என கருதி அந்த தட்சகன் எனும் நாகம் கடித்துவிட்டது

இதை அறிந்த சுசீல முனிவர் தட்சகனை பூமியில் மனிதனாக மாற சாபமிட்டார், அதை கண்டு அஞ்சிய தட்சகன் காசிப முனிவரிடம் சரணடைந்தான்

காசிப முனிவர் கண்களை மூடி தியானித்தார் அதன்படி ஒருவனை நாகம் கடிக்கவோ வரம் அருளவோ முன் ஜென்ம தொடர்பு அவசியம், அப்படி இல்லா பட்சத்தில் அது பாவமாகிவிடும்

என்ன பாவம் செய்தாலும் சிவனிடம் சென்றால் மன்னிப்பு உண்டு, முனிவர் சாபபடி நீ பூமியில் பிறந்து சிரமபட வேண்டும், அதற்கு முன்பே பூலோகம் சென்று சிவலிங்கம் ஒன்றை செய்து சிவனை வழிபட்டால் உன் சாபம் தீரும் என ஆலோசனை சொன்னார்

அதன்படி தட்சகன் தன் பரிவார நாகங்களோடு வந்து வழிபட்ட இடம் இந்த திருநாகேஸ்வரம்.

அந்த மகா முக்கிய நாகம் வழிபட்ட சிவலிங்கம் அது, அவனின் பக்தியில் இறங்கிய சிவபெருமான் இறங்கி வந்து அவன் சாபத்தை மாற்றி விமோசனம் கொடுத்தார், அப்படியே அத்தலம் வந்து வழிபடுவோர்க்கு நாகத்தால் ஏற்படும் சாபம் மறையும் என வாக்கும் கொடுத்தார்

அன்றிலிருந்து அவர் நாகநாத சுவாமி என்றானார்.

இந்த தலத்தின் பெருமை ஒன்றிரண்டு அல்ல, சொல்ல சொல்ல வந்துகொண்டே இருப்பது

நாகராஜாக்கள் வழிபட்ட தலமாதலின் ‘திருநாகேஸ்வரம்’ எனப் பெயர் பெற்றது. நாகராஜன் ஒரு சிவராத்திரியில் நான்கு யாமங்களில் முதல் யாமத்தில் வில்வவனமான குடந்தைக் கீழ்க்கோட்டத்திலும் இரண்டாம் யாமத்தில் சண்பக வனமான இத்திருநாகேச்சரத்திலும், மூன்றாவதில் வன்னி வனமான திருப்பாம்பரத்திலும், நான்காம் யாமத்தில் புன்னைவனமான நாகைக்காரோணத்திலும் வழிபட்டுப் பேறு பெற்றான். இந்த நான்கு தலங்களும் நாகராஜா பெயராலே அழைக்கபடுகின்றது

இங்குதான் சிபெருமானை மட்டுமே வணங்கி வந்த பிருங்கி முனிவரைக் கண்டு வெகுண்ட பார்வதி தேவி, இறைவனைக் குறித்து அர்த்தநாரீசுர வடிவம் வேண்டி இத்தலத்தில் சண்பக மரத்தடியில் கடுந்தவம் புரிந்து பேறுபெற்றார்.

ஆதிசேஷன், தட்சக‌ன், கார்க்கோடகன் என நாகங்களும் கௌதமர், நந்தி, நளன், பராசரர், பகீரதன் முதலியோர் வழிபட்டு பேறு பெற்ற தல்ம் இது

சூரியனே தன் சாபம் தீர இங்கே வழிபட்டுப் பேறுபெற்றார். இங்கு வழிபட்டே விநாயகர் வழிபட்டுக் கணங்களுக்குப் பதியானார்.

கௌதமர் இங்கு வழிபாடு செய்து அகலிகையை அடைந்தார். நளன் இங்கே வணங்கி, இழந்த தன் மனைவியைப் பெற்றான்.

பராசர முனிவர் வழிபட்டு பாவம் நீங்கினார்,

இங்குதான் பாண்டவர்கள் வழிபட்டு இழந்த தம் செல்வத்தை மீண்டும் பெற்றதோடு இப்பெருமானுக்குக் கார்த்திகை மாத விழாவினையும் நடத்தினர்.

வஷிஷ்ட முனிவர் வழிபட்டு நலம் பெற்றார். இந்திரன் இங்கு சாபம் பெற்றார்.

இன்னும் பிரமனும், பகீரதனும் வழிபட்டுப் புனிதமடைந்தனர்.

சித்திர சேனன் எனும் மன்னன் வைகாசியில் விழா நடத்தி, வழிபட்டு நற்புத்திரனை அடைந்தான்.

ந‌ற்குணன் என்னும் முனிவன் கார்த்திகைச் சோமவாரங்களில் விளக்கேற்றி நோன்பிருந்து, பாம்பு கடித்து இறந்த தன்மகனைப் பிழைக்கச் செய்தான்.

அக்காலத்தில் பைசாசம், ராட்ச்சன் தொந்தரவில் இருந்து பலருக்கு விடுதலை கொடுத்த தலம் இது

இந்த தலம் லவுகீகமாக நாகங்களில் இருந்து காவல் தரும், இங்குவழிபட்டோரை நாகங்கள் ஒன்றும் செய்யாது ஒதுங்கி செல்லும் என்பது நம்பிக்கை, அது இன்றளவும் உண்டு

லவுகீக ரீதியாக நாகங்களின் அருள்தான் பிள்ளைவரமும் அருளும் என்பதை அறிந்து, நாகலோக அருளில்தான் உடலில் மகப்பேற்றின் வரம் கிடைக்கும் என்பதையும் இந்த ஆலயம் மெய்பித்து கொண்டிருக்கின்றது

ஆம், இது மகப்பேற்றை நாகலோக அருளில் வழங்கும் ஆலயம்

இந்துக்கள் பாம்பின் வடிவத்துக்கும் உடலின் முக்கிய நுணுக்கத்துக்கான தொடர்பை கண்டார்கள், அந்த பெரும் சக்தி பாம்பு வடிவில் உடலில் ஆடுவதை தங்கள் ஞானத்தால் உணர்ந்தார்கள்.

ஒரு உயிர் உருவாகக் காரணமான விந்துவின் உயிரணு பாம்பு வடிவில் இருப்பதை இன்றைய விஞ்ஞானம் சொல்கின்றது. அதனை இந்துக்கள் என்றோ உணர்ந்திருந்தார்கள்.

பாம்பு சுருண்டிருப்பதை போல கருவில் உயிர் சுருண்டே இருக்கின்றது என்பதை சொன்னார்கள், பாம்பு தவழ்வதை போலவே மானிடனும் தவழ்ந்து வளர்கின்றான் என்பதை அனுமானத்தால் சொன்னார்கள்.

இன்று டி.என்.ஏ எனும் மரபணு பாம்பின் வடிவத்தில் நாகவடிவத்தில் இருப்பதை விஞ்ஞானம் சொல்கின்றது, இரு பாம்புகள் வடிவில் இருப்பதை விஞ்ஞானம் சொல்கின்றது.

அந்த மரபணுவின் சக்தி இன்னொரு பெரும் சக்தியால் இயக்கப்படுகின்றது. அதுதான் நாகசக்தி என்பதை உணர்ந்து இரு நாகங்களை வணங்க சொன்னார்கள் இந்துக்கள்.

நாகம் என்பது உயிரை எடுக்கமட்டுமல்ல, உயிரைக் கொடுக்கவும் செய்யும். உயிரைக் கொடுக்கும் சக்தி அதற்கு உண்டு என்பதால் வணங்கப்பட்டது.

குறிப்பாக சந்ததிகள் பெருக, நோய் நீங்க அது வணங்கப்பட்டது.

மனித உடல் சூட்சுமமானது. அதன் நோய்களும் பிணியும் மருந்தினால் மட்டும் குணமாவதில்லை. அதாவது வாய்வழி உள்ளே செல்லும் மருந்துகள் மட்டும் நோயினை குணமாக்குவதில்லை.

உடலின் விஷமானது உள்ளே செல்லும் உணவினால் மட்டும் ஏற்படுவதில்லை. அது காற்று, கதிர்வீச்சு, சுற்றுப்புறம், பார்க்கும் விஷயத்தின் அதிர்வு என எல்லாவற்றிலும் உருவாகும்.

அதாவது ஒருவனை அவன் சுற்றுபுறமும், அதிர்வுகளும், காற்றும், பார்வையும் கூட நோயுற்றவனாக்கும்.

அப்படியே சில அதிர்வுகளாலும், பார்க்கும் விஷயங்களாலும் நோயினை குணப்படுத்தவும் முடியும்.

பாம்பின் வடிவங்கள் நோயினை தீர்க்கும் என்பது நம்பிக்கை, பாம்பின் வடிவம் மரபணு மற்றும் உடலை இயக்கும் செல்களின் வடிவினை ஒத்திருக்கும்.

நாக வழிபாட்டின் சக்தி அசாத்தியமானது, அதனால்தான் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவழியில் நாக தரிசனம் பெற வேண்டும் என்ற ஏற்பாட்டை செய்தது இந்துமதம்.

அவ்வகையில் இந்த ஆலயம் நாக வழிபாட்டுதலம் குழந்தைவரம் கொடுக்கும் தலமாகவும் மிளிர்கின்றத்

லவுகீக ரீதியாக நாகங்களிடம் இருந்து காவல் கொடுக்கும் இத்தலமே ஜாதகத்தில் ராகுவுக்கான பரிகார தலமாகவும் அமைகின்றது

ராகு தான் முன்னோர்களை குறிக்கும் கிரகம், அப்படியே சந்ததியினை குழந்தை பிறப்பை நிர்ணயம் செய்யும் சக்திக்கும் அவரேதான் பொறுப்பு, எனவேதான் நாகதோஷம் தீர நாக வழிபாடு அதுவும் ராகு வழிபாடு மிகவும் அவசியம்

ஜாதகம் என்பது முன் ஜென்ம வினைபடி கர்மபடி அமைவது என்பதால் ராகுவின் இடம் முக்கியமானது, இந்த ராகு நாகலோக தட்சகன் சாயலை கொண்டிருப்பது

இத்தலம் அதற்கு பலன் கொடுக்கின்றது, கர்மவினையினை தீர்க்கின்றதுஅதனால் இந்த ராகு இருக்குமிடமும் ஜாதகத்தில் முக்கியம் அதற்கான பரிகார தலம் இது

ராகுவுக்கான பரிகார தலம் என்பதை விட நாகசம்பந்தமான எல்லா தோஷங்களுக்கும் பரிகார தலம்

ராகு என்பவர் நாகலோக தொடர்புகளை கொண்டவர் தட்சகனின் சாயல் கொண்டவர் என்பதால் அவரும் இந்த பரிகார் தலத்தில் ஒருவராகின்றாரே அன்றி இது ராகுவுக்கு மட்டும் பரிகாரம் கொடுக்கும் இடம் அல்ல‌

ஐந்து நிலைகளை கொண்ட நான்கு கோபுரங்களை கொண்ட இத்திருக்கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.

தேவாரப் பாடல் பெற்ற சிவதலம் இது .இத்தலம் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடப்பெற்ற சிவத்தலம் இதுதான்

சேக்கிழார் இங்கு திருப்பணி செய்திருக்கின்றார், தட்சகன் மட்டுமல்ல ராகு, கார்கோடகன், ஆதிசேஷன் , வாசுகி ஆகியோரும் வந்து வழிபட்டிருக்கின்றார்கள்

இங்கு நிருத்த கணபதி, நந்தி, சூரியதீர்த்தம் உள்ளன. நூற்றுக்கால் மண்டபம் சூரிய தீர்த்தத்தின் கரையில் மழுப்பொறுத்த விநாயகர் சன்னதி, இரண்டாம் பிரகாரத்தில் நாகராஜா உருவமுள்ளது. சேக்கிழார், அவரது தாயார், தம்பி உருவங்களும் இத்தலத்தில் அமைந்துள்ளன.

இந்த தலத்தின் சிறப்பு நாக தோஷங்கள் லவுகீகமாக, ஆன்மீகமாக, ஜாதகம் எனும் முன் ஜென்ம தொடர்புடையதுவாக எதுவாக இருந்தாலும் நீங்கும்

லவுகீகமாக இங்கு வழிபட்டால் நாகம் தீண்டாது என்பதுமட்டுமல்ல, உடல் உள்ளம் என எங்கும் விஷம் பாதிக்காது, விஷம் பாதிக்கா மனது நிம்மதி அடையும், விஷம் இல்லா உடல் நோயினை அடையாது.

ஆன்மீகமாக இங்கு வழிபட்டால் குண்டலினி சக்தி விருத்தியாகி ஞானம் பெருகும்

சேக்கிழார் இங்கு திருப்பணி செய்தார் என்பது பெரும் உதாரணம், மூவர் பாடினார்கள் என்பது அடுத்த உதாரணம், ஆம் ஞானம் வழங்கும் ஆலயம் இது

முன் ஜென்ம வினை என்பது ஜாதகத்தில் தெரியும், ராகுபகவான் அதற்கு ஏற்பத்தான் அமைந்திருப்பார்

இங்கு ராகுவுக்கும் தனி சன்னதி உண்டு, அது நாக வடிவில் அல்ல மனித வடிவில்தான் உண்டு

காரணம் ராகு பாதிப்பில்லா மனிதன் விஷதன்மை நீங்கி மனித மனதோடு நிற்கின்றான் என்பதை சொல்லும் தத்துவம் அது.

இங்கு வழிபட செல்வோர் சிவபெருமானையே வழிபடவேண்டும், இது சிவாலயம் சிவனை தேடி நாகங்கள் எல்லாம் வந்துவழிபட்ட ஆலயம்

தட்சகன் தொடங்கி வாசுகி, கார்கோடகன் என எல்லா நாகங்களும் நாக இன ராஜாவும் நாக ராணியும் வந்து வழிபட்ட தலம்

அப்பட்த்தான் பின்னாளில் நாக தொடர்பு கொண்டதால் ராகுவே வந்து வழிபட்டு சாபம் நீங்கினார்

இது ராகு சாபம் நீங்கிய இடமே தவிர ராகுவுக்கு தனிபெரும் சக்தி என சொல்லும் ஆலயம் என்பது சரியல்ல‌

அதெல்லாம் பின்னாளில் திருநள்ளாற்று தர்பரேஸ்ண்யஸ்வரர் மறைக்கபட்டு சனிபகவான் முன்னிலைபடுத்தபட்டது போல இங்கு ராகுபகவான் முன்ன்றுத்தபட்டு அந்த நாகநாத சுவாமி மறைக்கபட்ட விபரீதம்

அடிப்படையில் இது நாகநாத சுவாமி எனும் சிவாலயம் எல்லா நாகங்களும் கூட்டாக வந்து வழிபட்டு சாபம் தீர்ந்த ஆலயம்

நாகங்கள் மானுட இனத்தின் வாழ்வோடு கர்மாவோடு தொடர்புடையது என்பதால் அந்த மானுடர் பெற்ற சாபங்களில் கர்மங்களில் நாகத்தின் மறைமுக தொஷங்கலும் உண்டு

அதனால் நாகங்களே வந்து வழிபட்டு தோஷம் சாபம் நீங்கிய சிவனிடம், நாக தொடர்புடைய ராகுவும் வந்து வழிபட்ட இடத்தில் சிவனிடம் சரணடைதலே சரி

நாகங்களின் துன்பம் நீக்க்கிய நாகநாத் சுவாமி தன்னை அண்டிவரும் பக்தர்களின் துன்பத்தை நீக்கமாட்டாரா?

அது ராகுபரிகார தலம் என்பது பின்னாளில் வந்தது ஆதியில் அது நாகங்கள் வந்து வழிபபட்டு சாபம் தீர்ந்த தலமே

இங்கு எல்லாவற்றுக்கும் எல்லா லோகத்துக்கும் எல்லா சக்திக்கும் சிவனே மூலம், அவர் விருப்பபடியே எல்லாம் இயங்குகின்றது

ஒருவன் முன் ஜென்ம வினைப்படி இங்கு வாழ்வும் கர்மாவும் அமையும் போது நவகிரகங்களும் நாக தோஷங்கள்ம் அதற்கு ஏற்றால் போல் அமையும்

அந்த கர்மவினை தீர சிவனைத்தான் வழிபடவேண்டும்

தட்சகன் அதைத்தான் செய்தான், கிரகங்களில் அறிவில் சிறந்த அதற்கும் நாகங்கலில் அறிவில் சிறந்த தட்சகனுக்கும் தொடர்பு உண்டு, அந்த தொடர்பு மானிட வாழ்விலும் தெரியும்

ராகுவும் தட்சகனும் கிட்டதட்ட ஒரே சாயல், இருவருமே நல்லது செய்ய நல்லவர் பகக்ம் சாய்ந்தால் அறிவும் தெளிவும் அள்ளி அள்ளி கொடுப்பார்கள்

இருவருமே எதிரிபக்கம் சாய்ந்தால் கடைசிவரை தீமையினை செய்து கொண்டே இருப்பார்கள்

அம்மாதிரியான குணம் கொண்ட இருவரும் சரணடைந்த தலம் இந்த திருநாகேஸ்வர தலம், அங்கிருக்கும் பெருமானின் சொல்லுக்கு இவர்கள் ஆடுவார்கள்

அதனால் முன் ஜென்ம வினைபடி ராகுதோஷமோ நாகதோஷமோ இருந்தால் இங்குவந்து வழிபட எல்லாம் மாறும், எல்லாம் சரியாகும், அறிவும் தெளிவும் வரும்

இந்த ஆலயத்திற்கு சென்று சிவனிடம்முதலில் சரணடையுங்கள், சிவனின் அருள்படியே பின் நாக தோஷமெல்லாம் விலகும்.

அந்த தலத்தின் ராகு சிலைக்கு மானுட‌ வடிவ சிலைக்கு பால் ஊற்றும் போது அது முகத்தில் படும்போது நீல நிறமாக மாறும் பின் அது வெண்ணிறமாக மாறும்

இங்குள்ள சிவனுக்கு சிவராத்திரி அன்று நாலுகால பூஜையினை தட்சகனும் நாகராஜாவும் நாகங்களும் செய்ததார்கள், பின்னாளில்தான் முதல் இருகால பூஜையினை ராகுபகவானே செய்தார்

ஆக அது நாகங்கள் வந்து வழிபட்டு சாபம் தீர்ந்ததலம், ராகுவும் நாகங்களில் ஒருவர் என்பதால் அவரும் வழிபட்டு சாபம் தீர்ந்த இடமே அன்றி ராகுவுக்கு உரிய தலம் மட்டும் என்பதல்ல‌

இந்த ஆலயத்தின் சிவனிடமே தட்சசகன் சரணடைந்தான், ராகு சரணடைந்தார் , வாசுகி, கார்கோடகன் என எல்லா நாகங்களும் வந்து பணிந்தார்கள்

மூவர் வந்து தேவாரமே பாடினார்கள், இன்னும் சேக்கிழாரே தன் கர்மம் உணர்ந்து பணிந்தார்

அந்த திருநாகேஸ்வர நாகசாமியிடம் வந்து பணியுங்கள், அவரிடம் வந்து பணிந்து எல்லாம் ஒபடைத்து சரண்டையுங்கள், அதன் பின் உங்கள் வாழ்வே மாறும்

அங்கு சிவனை வழிபடும் பக்தர்களுக்கு தட்சகன் எனும் பெரும் நாகம் அறிவும் தெளிவும் கொடுத்து வாழவைப்பார், நாகங்கள் வழிபட்டு சாபம் தீர்த்த‌ அந்த பாக்கியத்தை தவறாமல் பெற்றுகொள்வது உங்கள் கைகளிலேதான் உள்ளது

அந்த சிவாலயம் திறந்தே இருக்கின்றது, நாகங்களின் சாபம் தீர்த்த அந்த சிவன், மானுட வாழ்வோடு சம்பந்தபட்ட நாகங்களின் தொடரபுடையதான நாகங்களின் சாபம் தீர்த்த சிவன் மானிடரின் சாபத்தை தீர்த்து வைக்க காத்தே இருக்கின்றார். அந்த சாபம் தீர்ந்து உங்களையும் வாழ்வைப்பார் இது சத்தியம்

“சீர்த்தானை உலகேழுஞ் சிறந்து போற்றச்

சிறந்தானை நிறைந்தோங்கு செல்வன் றன்னைப்

பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழப்

பனிமதியஞ் சடையானைப் புனிதன் றன்னை

ஆர்த்தோடி மலையெடுத்த அரக்க னஞ்ச

அருவிரலா லடர்த்தானை அடைந்தோர் பாவந்

தீர்த்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்

சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே”

நாக தலங்கள் 02 : திருபாம்புரம்

“சீரணி திகழ்திரு மார்பில்வெண்ணூலர்

திரிபுர மெரிசெய்த செல்வர்

வாரணி வனமுலை மங்கையோர் பங்கர்

மான்மறி யேந்திய மைந்தர்

காரணி மணிதிகழ் மிடறுடை யண்ணல்

கண்ணுதல் விண்ணவ ரேத்தும்

பாரணி திகழ்தரு நான்மறை யாளர்

பாம்புர நன்னக ராரே”

என சம்பந்தபெருமானால் தேவாரம் பாடப்பட்ட தலம் இது. அவ்வளவு முக்கியமான் சிவத்தலம். சுந்தரும், அப்பர் சுவாமிகளும் வந்து பாடிய தலம்.

நாகங்கள் வழிபட்ட சிவலிங்களில் முக்கியமானது திருபாம்புரம், இது திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே அமைந்துள்ளது.

இந்த சிவனுக்கு பாம்புரேஸ்வரர், சேஷபுரீஸ்வரர், பாம்பீசர், பாம்புநாதர் எனப் பெயர்கள் உண்டு, அன்னையின் பெயர் ப்ரம்பராம்பிகை வண்டார்குழலி

இந்தத் தலம் உருவான வரலாறு ஆச்சரியமானது, நாகங்களுக்கு பாடம் சொல்லவும் நாகங்களே வந்து வழிபட்டு மக்களுக்கு வழிகாட்டிச் செல்லவும் சிவனின் சித்தப்படி உருவான தலம் இது.

சிவன் அமர்ந்திருக்கும் காளையின் கொம்பு போல இரு முக்கிய காரணங்கள் இத்தலத்தை உருவாக்கின. முதலாவது, ஆதிஷேஷன் வரலாறு.

அதை தெரிந்துகொள்ளுமுன் ஒரு விஷயத்தை காணவேண்டும். நாகலோகத்தில் ஒன்பது நாகங்கள் என சொல்லப்பட்டாலும் உண்மையில் அவை அஷ்ட நாகங்களே.

வாசுகி, ஆதிசேஷன், கார்க்கோடகன், அனந்தன், குளிகன், தட்சகன், சங்கபாலன், பதுமன், மகாபதுமன் என ஒன்பது சொல்லப்பட்டாலும் ஆதிஷேஷனும், அனந்தனும் ஒன்று. பகவான் திருமால் பள்ளி கொள்ளும் நாகம் இது என்பதிலே அது புரியும்.

அவ்வகையில் அஷ்ட நாகங்கள் இவை, கிரகங்களில் ராகுவும் கேதுவும் ஒரே நாகத்தின் இரு பாகங்கள் அவ்வகையில் நாகங்களும் கிரகங்களும் சமமானமானவை.

இந்த அஷ்டநாகங்களில் முக்கியமான ஆதிஷேஷன் உலகை தாங்கி நிற்பவர். இவர்தான் பகவான் நாராயணனின் படுக்கையும் அவர்தான். இதனால் அவருக்கு கர்வம் அதிகம், நாகலோகத்தின் தலைவர் போல அவருக்கு சக்தி அதிகம்.

அந்த ஆதிஷேஷனுக்கும் வாயுபகவானுக்கும் ஒருமுறை யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. வாயுபகவான் தன் சக்தியால் பெரும் மலைகளை புரட்டி எறிந்தார், பெரும் புயலாக வீசினார். ஆனால், தன் வலிமையால் அசையாமல் நின்றார் ஆதிசேஷன்.

அவரை அசைக்கமுடியாத வாயுபகவான் தந்திரமாக தான் உயிர்களுக்கு வழங்கும் பிராணனை உயிர்மூச்சை குறைத்தார்.

எல்லா உயிர்களும் இதனால் வாடின, வாயுபகவானோ தான் வெற்றிபெற்றதாக மார்தட்டிக் கொண்டிருந்தார், அகங்காரம் எப்போதுமே சிவனுக்கு பிடிக்காத குணம் என்பதால் சிவன் உயிர்களை காக்கும் பொருட்டும், இந்த இரு பெரும் சக்திகளும் தங்களுக்குள் மோதிக் கொண்டதை அறிந்ததும் இருவரையும் சபிக்க ஆத்திரம் கொண்டார்.

சிவன் கோபம் கண்ட ஆதிசேஷனும், வாயுபகவானும் அவர் பாதம் பணிந்தார்கள். பாதம் தொட்டவர்கள் மேல் இரங்கும் எம்பெருமான் அவர்களுக்கு பரிகாரம் அருளினார்.

அதன்படி வாயுபகவானை மதுரைக்கு கிழக்கே வைகை நதி ஓரம் தவம் செய்ய சொன்னவர் ஆதிசேஷனை திருபாம்புரத்தில் 12 ஆண்டுகள் வழிபட உத்தரவிட்டார்.

அப்படி இந்த கோவில் சிவனை ஆதிசேஷன் வழிபட்டு தன் சாபம் தீர்த்தார், அதனாலே இந்த இடம் சேஷபுரி என்றும் ஆதிசேஷன் வழிபட்டதால் சிவன் சேஷபுரீஸ்வர என்றானார்.

தலபுராணத்தின் இன்னொரு காட்சி அந்த வாசுகி.

அஷ்ட நாகங்களில் முக்கியமான இந்த வாசுகி சிவன் கழுத்தில் இருக்கும் வலிமை பெற்றது, பாற்கடலைக் கடையும் போது மத்தாக இருந்ததும் அந்த நாகமே.

திரிபுரத்தை சிவன் எரிக்க வில்லேந்தியபோது நாணாக அமர்ந்ததும் இந்த வாசுகிதான்.

இந்த வாசுகிக்கு கர்வம் வந்தது, சிவன் கழுத்தில் இருக்கும் வழமையான கர்வம் சிவனை எல்லோரும் வணங்கும் போது இன்னும் கூடிற்று.

தேவர்களும்,மூர்த்திகளும் சிவனை வணங்கும்போது தன்னை எல்லோரும் வணங்குவதாக அது கருதிற்று, ஒருமுறை சிவனை விநாயர் வணங்கும் போது அதன் கர்வம் கூடிவிட சிவன் கழுத்தை விட்டு இறக்கித் தள்ளிவைத்தார்.

தன் தவறை உணர்ந்த வாசுகி வருந்தி அழ, சிவன் அதனை இந்த திருப்பாம்புரம் சென்று வழிபடச் சொன்னார், அங்கு வந்துசாபம் தீர்த்தது வாசுகி.

இந்த இரு பெரும் நாகங்களும் வழிபட்ட காலத்தில் இருந்து அதன் வரலாறு தொடங்கி பின் காலம் காலமாக நாகங்களும், நாகலோகத்தவரும் வந்து வழிபட்ட தலமாகி இன்றுவரை நாகங்கள் வழிபாடு, ராகு கேது வழிபாடு என எல்லாவற்றுக்கும் பெயர் பெற்ற தலமாய் நிலைத்துக்கொண்டிருக்கின்றது.

இந்த ஆலயத்தின் தாத்பர்யம் புரிந்துகொள்ள எளிதானது, நாகங்களின் அகங்காரம் இங்கே களையப்பட்டது, நானே பெரியவன் எனும் அந்த அகங்கார ஆணவம் சிவனால் இங்கு அகற்றப்பட்டது.

ஆணவம், கண்மம், மாயை என்பது மும்மலங்கள், சிவன் முழுக்க வெறுக்கும் பாவங்களில் இந்த ஆணவமும் ஒன்று.

அதனை எவ்வகையிலும் அவர் அனுமதிப்பதில்லை, முக்குணங்களில் இது ரஜோ குணத்தை சார்ந்தது.

ஆணவம் இருக்கும் வரை பிறவியினை கடக்கமுடியாது, ஆணவம் தீருமிடத்திலே சாபம் தீரும் அல்லது பிறவி தோறும் அந்த ஆணவம் தொடர்ந்து வந்து இனம்புரியா பாதிப்பினை குழப்பத்தை கொடுக்கும்.

அந்த சாபமே ஜாதகமாக மாறும், அந்த ஜாதகத்தை நிர்மாணிக்கும் முக்கிய காரணமாக ராகு, கேது இருப்பார்கள்.

எங்கே நாகங்களின் ஆணவத்தை சிவன் அழித்தாரோ அங்கே மானுடர் சென்று வழிபடும் போது அந்த மானுடரின் சாபம் அழிகின்றது.

அங்கே சென்று வழிபடும்போது, சிவனை ஒருவர் முழுக்க பற்றும் போதுஅங்கே கர்மவினைகள் அழிகின்றது, கர்மவினை அழியுமிடத்தில் ஜாதகம் மாறும் அல்லது தோஷம் வேலை செய்யாது.

ராகு கேது பரிகாரம் என்பது இதுதான்.

அதனால், ஜாதகத்தில் ராகு கேது பரிகாரம் தேவைப்படுவோர் இங்கு சென்று சிவனை வழிபட்டாலே போதும் எல்லா துன்பமும் கர்மவினை தீர்வதால் தீரும்.

இது நாகங்கள் வழிபட்ட தலம் அதனால் ராகு கேதுவுக்கு பரிகாரபூஜை என்பதும் சரி. ஆனால், இங்கே நாகங்கள் சிவனை வழிபட்டுத்தான் சாபம் நீங்கப்பெற்றது, ஆதிசேஷனும் வாசுகியும் சிவனை வணங்கித்தான் சாபம் நீங்கினார்களே தவிர ராகு கேதுவை வணங்கி அல்ல‌.

இதனால் இங்கு சிவனே பிரதானம், அவரை வழிபடுதலே சாலச் சிறந்தது.

இந்தத் தலம் ராகு கேது தோஷம் மட்டுமல்ல, புத்திர பாக்கிய தடையும் நீக்கித் தரக்கூடியது. புத்திர பாக்கிய தடைக்கு ஜாதகத்தின் நாகதோஷமும் முன் ஜென்ம நாகபாவமும் முக்கியமானது.

அதனை இந்த ஆலயம் தீர்க்கும் போது எல்லா குறைகளும் களையப்படுகின்றன‌.

இங்கு நாக தோஷம், ராகு கேது தோஷம் நீங்குகின்றது என்றால் அது வெறுமனே ஜாதகம் மட்டுமல்ல, உடலில் இருக்கும் விஷத்தன்மை மாறும், அதனால் நோய்கள் ஏற்படாமல் ஆரோக்கியம் மேம்படும்.

உளளத்தில் இருக்கும் தீய சிந்தனைகள் எனும் விஷமும் வெளியேறும்.

ஆதிசேஷன் என்பவன் உலகை தாங்கி நிற்கும் பலம் பெற்ற நாகம், அந்த நாகமே பலமிழந்து இங்கே வந்துவழிபட்டு இழந்ததை மீட்டது என்றால் போதனை என்ன?

இங்கு வழிபடும் ஒவ்வொருவருக்கும் அவர் இழந்த பலம் கிடைக்கும், முழு சக்தி கிடைக்கும்.

வாசுகி சிவனின் கழுத்தில் இருந்து வீழ்ந்து பின் இங்கு சிவனை வழிபட்டு சாபம் நீங்கி மீண்டும் சிவன் கழுத்தை அடைந்தது.

ஆம். இங்குவழிபட்டால் எதை இழந்தீர்களோ அந்த இடம் உங்களுக்கு கிடைக்கும். குடும்பம், வேலை, தொழில், செல்வாக்கு என எதெல்லாம் இழந்தீர்களோ எல்லாமும் மீளக் கிடைக்கும், இழந்த இடம் மீளும்.

இந்த வரங்களை தரும் ஆலயம் இது.

இங்கு ஆச்சரியங்கள் ஏராளம், இந்த ஊரிலும் சரி இந்த தலத்திலும் சரி நாகங்கள் நிறைய என்றும் இருந்தும் யாரையும் பாம்பு கடித்ததில்லை, பாம்பு கடித்து யாரும் இறந்ததாக வரலாறே இல்லை.

நாகலோக அஷ்ட நாகங்களே வந்து வழிபட்ட தலமாதலால் எப்போதும் மூலஸ்தானத்தில் பாம்புகள் நடமாட்டம் உண்டு அதுவும் குறிப்பிட்ட நாட்களில் அவை நடமாடும். தரிசனமாகும்‌. ஆனால், யாருக்கும் எந்த ஆபத்தும் எக்காலமும் அவை செய்ததில்லை.

அப்படி சத்தியம் குடிகொண்டிருக்கும் ஆலயம் அது.

இக்கோவில் எல்லா மன்னர்களுக்கும் பெரும் நம்பிக்கையாக இருந்தது, இராஜராஜசோழன், இராஜேந்திர சோழனெல்லாம் திருப்பணிசெய்து வீழ்ந்து வணங்கிய ஆலயம் இது.

ஜடாவர்ம சுந்தரபாண்டியன் திருப்பணி செய்திருகின்றான், பின்னாளில் நாயக்கர்களும் சரபோஜி மன்னரும் பெரும் திருப்பணி ஆற்றியிருக்கின்றார்கள்.

நாக தலங்கள் புராணப்படி அந்த அஷ்ட நாகங்களும் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் பாம்புநாதரையும், நான்காம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர் என்பது எல்லோரும் அறிந்தது.

அந்த மூன்றாம் சாம பூஜை இங்கு பெரும் விசேஷம், சிவராத்திரி அவ்வளவு பெரிய விசேஷமாக கொண்டாடப்படும் தலம் இது.

மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இந்த கோவிலின் ராஜகோபுரம், இந்த ராஜகோபுரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் காணப்படுகிறது. மூலவர் சேஷபுரீஸ்வரர், கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்புரிகிறார்.

பூங்குழலி அம்மையின் சன்னிதியும் கிழக்கு நோக்கியே அமைந்திருக்கிறது.

இத்தலத்தில் நாகராஜனுக்கு மூல, உற்சவ விக்ரஹங்கள் உண்டு, ஆதிசேஷன் ஏற்படுத்திய சிற்றம்பல குட்டை எனும் குளம் இப்போதும் உண்டு.

இன்னும் மிகச் சிறப்புக்களை கொண்ட ஆலயம் இது.

அதாவது கும்பகோணம், திருநாகேஸ்வரம், காளகத்தி, கீழப்பெரும்பள்ளம், நாகூர் ஆகிய நாக தோஷ பரிகார தலங்கள் அனைத்தையும் வழிபட்ட பலன், திருப்பாம்புரம் தலம் ஒன்றை தரிசித்தாலே கிடைக்கும்.

ராகுவும் கேதும் ஒரே உடலாக இருந்து சிவனை தங்கள் நெஞ்சில் வைத்து வழிபட்டு சாபம் தீர்ந்த இடம் என்பதால் இங்கு வழிபட பலன் அதிகம்.

உடலில் நோயகள் ஏற்பட காரணம் உடல் அறியா விஷம், கவலைகளும் சிக்கலும் பெருக காரணம் மனம் அறியா விஷம், சிந்தைகளில் புகுந்த விஷம்.

இந்த விஷமெல்லாம் இங்கு தீரும், உடலும் உள்ளமும் சரியாகும்.

ஜாதகத்தில் உள்ள ராகுதோஷ சிக்கல் இங்கே தீரும், இன்னும் என்னென்ன சிக்கல்கள் நாகத்தால் உண்டோ அத்னையும் அழிந்துபோகும்.

புத்திரபாக்கியம், ஆரோக்கிய வாழ்வு, சாமார்த்தியம், விழிப்பு நிலை என எல்லாமும் இங்கு கைகூடும், நாகங்களினால் எழும் கனவு சிக்கல் முதல் வீட்டு சிக்கல் வரை எல்லாமே தீரும்.

இந்த ஆலயத்துக்கு சென்று அந்த சேஷபுரீஸ்வரரை பணியுங்கள், ஆதிசேஷன், வாசுகியின் ஆணவம் தீர்த்து அவர்கள் சாபம் தீர்த்து அவர்கள் இழந்ததையெல்லாம் கொடுத்த சிவன் உங்களுக்கும் இழந்ததெலாம் மீட்டுக் கொடுப்பார்.

ராகு கேதுவின் சிக்கலை தீர்த்த சிவன், உங்களுக்கும் கர்மவினை தீர்த்து ஜாதக கெடுபலன்களை நன்மையாக மாற்றுவார்.

அந்தத் சிவனை சரணடையுங்கள். நாக தோஷமோ, விஷமோ எதுவோ உங்களை அணுகாது, நாகங்களின் எந்த பாதிப்பும் எவ்விதத்திலும் உங்களை நெருங்காது.

சாபம் தீர்ந்து நல்ல நிம்மதியான வாழ்வை ஐஸ்வர்யமான வாழ்வை நீங்கள் வாழ்வீர்கள். இது சத்தியம்.

“பார்மலிந்தோங்கிப் பருமதில் சூழ்ந்த

பாம்புர நன்னக ராரைக்

கார்மலிந்தழகார் கழனிசூழ் மாடக்

கழுமல முதுபதிக் கவுணி

நார்மலிந் தோங்கும் நான்மறை ஞான

சம்பந்தன் செந்தமிழ் வல்லார்

சீர்மலிந் தழகார் செல்வம தோங்கிச்

சிவனடி நண்ணுவர் தாமே”

பஞ்ச நாக தலங்கள் 03 : தெற்காலத்தூர் எனும் ராதாமங்கலம்

நாகங்கள் வழிபட்ட தலங்களில் முக்கியமானது இந்த தெற்காலத்தூர் ஆலயம், இன்று சிறிய ஆல்யமாக காணபட்டாலும் அதன் வரலாறும் சக்தியும் மாபெரும் வரம் அருளும் தன்மையும் மிக மிக உன்னதமானது.

எல்லா வகை நாக தோஷங்களுக்கும் அது பரிகார தலம் என்றாலும் ராகு கேது தோஷத்துக்கு அது உன்னதமான பரிகார தலம்

அதனாலே அது ராகுகேதுமங்கலம் என்றாகி பின் ராதாமங்கலம் என மருவிற்று, ஆலம் என்றால் விஷம், விஷம் கொண்ட நாகங்கல் வணங்கியதால் அது ஆலத்தூர் என்றுமாயிற்று

இந்த ஆலயம் எப்படி மகா முக்கியமென்பது அதன் புராண செய்தியிலே இருக்கின்றது

நம்புதத்தன் என்றொரு அந்தணன் இருந்தான், அவன் வேதமெல்லாம் அறிந்தவன் , சாஸ்திரங்களில் தேர்த தபசி. அவன் மகனை பாம்பு ஒன்று கடித்து அவன் இறந்துவிடுகின்றான்

ஒருவனை நாகம் தீண்ட பூர்வ ஜென்ம காரணமோ இல்லை ஜாதக ரீதியான காரணங்களோ இருத்தல் வேண்டும், உரிய காரனம் இல்லாமல் நாகம் ஒருவனை எவ்வகையிலும் தீண்ட கூடாது

ஆனால் எந்த காரணமுமின்றி நாம்புதத்தன் மகனை நாகம் தீண்டிவிட அவன் தன் வேத அறிவினை கொண்டு நாகங்களை சபித்தான்

அஞ்சிய நாகங்கள் நாகராஜா தலமையில் சிவனிடம் சரணடைந்தன

எல்லாம் அறிந்த எம்பெருமான் அந்த பாலகனுக்கும் நாகங்களுக்கும் பகை ஏதுமில்லை இது நாகங்களின் தவறு என சொல்லி அந்த அந்த நாகங்கள் செய்த பாவம் தீர நாகலோக தலங்களுக்கு வழிபட அனுப்பினார்

அப்படி நாகங்கள் அதாவது அந்த அஷ்ட நாகங்கள் வழிபட்ட ஆலயங்களே இந்த பஞ்ச நாக ஷேத்திரங்கள்

கும்பகோணம் நாகேஸ்வரர், திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர், நாகூர் தலம், திருபாம்புபுரம், இந்த ராதாமங்கலமெனும் ஐந்தும் முக்கியமானவை

இந்த தலங்களில்தான் சிவராத்திரி அன்று நாகங்கள் நாகராஜா தலமையில் வந்து சிவனை வழிபட்டு வணங்கி சாப விமோச்னாம் பெற்றார்கள்

அப்படி இந்த தலத்தில் நாகராஜாவும் நாகராணியும் சிவனை வழிபட்டபோது நாககன்னிகள் சிவலிங்கத்தை செய்து பூஜித்தனர்

அவர்களோடு ராகுகேது கிரகங்களும் வந்து வழிபட்டு சாபவிமோசனம் பெற்றார்கள், அதனால் இது ராகுகேது மங்கலம் என்றாயிற்று

சிவராத்திரி அன்று நாகூர் சிவாலயத்தில் நாகராஜா வழிபடும் போது அதன் வால் இங்குவரை நீள்வதாக ஐதீகம்

இது சிந்திக்கதக்கது, காரணம் ராகுவும் கேதுவும் ஒரே உடலில் இருந்து பிரிந்தவை அதன் தலைபகுதி ராகு என்றும் வால் பகுதி கேது என்றும் அறியபடுகின்றது

தலையும் வாலும் ஒருசேர வரும் இத்தலம் ராகுவும் கேதுவும் இணைந்த இடமாகின்றது, இதனாலே இங்கு ராகு கேது பரிகாரம் எளிதாகின்றது

ஜாதக தத்துவபடி ராகு ஒரு பிரச்சினை அல்லது விஷயத்தின் தொடக்கம், கேது அதன் முடிவு. ராகு ஒரு விஷயத்தில் பூட்டு, கேது அதன் சாவி

பிரச்சினைகளை அல்லது தேடலை தொடங்கி வைத்த்து இழுத்து செல்பவர் ராகு, அதே பிரச்சினையினை முடித்து நிறைவை ஞானத்தை தருபவர் கேது

அதாவது வரவும் செலவும் சரி, கணக்கு சரியாயிற்று என்பது இங்குள்ள தத்துவம்

ஆம், இந்த தலம் பிறவி கர்மாவினை சமன் செய்யும், இருந்த கர்மகடனை சமன் செய்து புதிய கடன் வராமல் காத்து சமன் செய்யும்

பழைய கர்ம கடன்களெல்லாம் இங்கு அழிந்துவிடும் போது அங்கே எல்லா சாபமும் பாவமும் தீர்ந்துவிடுகின்றது

இதுதான் அந்த ஆலயத்தின் தாத்பரியம், அங்கிருக்கும் நாகநாதரை வழிபடும் போது நவகிரக தோஷம் ராகு கேது தோஷமெல்லாம் தீர்ந்துவிடுகின்றன‌

சிவன் எப்போதும் திருவிளையாடலை நடத்துபவர், அவ்வகையில் ம்க்கல் நாகதோஷம் நவகிரக தோஷம் நீங்கி வாழ நாகங்கள் மூலம் தன்னை அடையாளபடுத்திய தலம் இது

நாகராணியும் நாகராஜாவும் இங்கு சிவராத்திரி அடுத்த அமாவாசையில் நாகராஜாவும் நாகராணியும் இங்குள்ல சிவனை வழிபட்டு நாக தீர்த்தத்தில் நீராடி சாபம் தீர்ந்ததால் இங்கு சிவராத்திரிக்கு அடுத்த அமாவாசைக்கு வழிபாடுகள் அதிகம்

இங்கு சிவன் நாகங்கள் வழிபட்ட நாகநாத சுவாமி , அன்னை தன்னை நம்பிவரும் பக்தர்களை சாந்தபடுத்தி காக்கும் அன்னை என்பதால் அவள் சாந்த நாயகி

கீழ்வேளூரிலிருந்து தேவூர் செல்லும் சாலையில் கடுவையாறு செல்கிறது அதன் வடகரையில் சுமார் 2 கி.மீ. சென்றால் ராதாமங்கலம் எனும் இத்தலம் வரும்

அது ஒரு சிறிய ராமம் தான், இங்கு பெரிய குளத்தின் கரையில் கிழக்கு நோக்கிய கோயிலாக உள்ளது இந்த நாகநாதர் கோயில்.

இறைவன் கிழக்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர். நீண்ட முகப்பு மண்டபம் உள்ளது, அதில் நந்தி இறைவனை நோக்கியவாறு உள்ளார். கருவறை ஒட்டி தென்புறம் நாகராஜா நாகராணி இருவருக்கும் சிலை வடித்து வைத்து வழிபடுகின்றனர்

கருவறை கோட்டங்களில் விநாயகர் தென்முகன் லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கை உள்ளனர். பிரகார சிற்றாலயங்களில் விநாயகர் அடுத்து தான்யலட்சுமி உள்ளார்

நாகங்கள் இல்லாவிட்டால் விவசாயமில்லை, விவசாயமில்லாவிட்டால் தானியங்கள் இல்லை. நாகங்கள்தான் பயிர்களை அழிக்கும் எலி முதல் பல விலங்குகளை பிடித்து வயலை காக்கும்

நாகங்கள் குடியிருக்கும் புற்றுமண் விவசாயத்துக்கு நல்லது, நாகங்கள்தான் நிலத்தடி நீரோட்டத்தை காட்டிதரும் சக்திகள்

நாகங்கள் நடமாடினால் அந்த வயல் செழிக்கும் என்பது எக்காலமும் உள்ள நம்பிக்கை

அதனால் இங்கு வழிபட்டு செல்வோருக்கு தானியம்பெருகும் என்பது நம்பிக்கை, இது விவசாயிகளுக்கு மட்டுமல்ல இங்குவரும் எல்லாருக்கும் பொருந்தும்

அதாவது வயலில் தானியம் விளைய எப்படி நாகங்கள் உதவுமோ அப்படி வீட்டில் செல்வம் பெருகவும் நாகங்கள் அருள் உதவும், நாகங்கள் அருள் கொண்ட வீட்டில் தானியத்துக்கு குறைவே வராது

அதைத்தான் தானியலட்சுமி அந்த ஆலயத்தில் இருந்து சொல்லி அருள்பாலிக்கின்றார்

இது ஏனென்று அறியக்கூடவில்லை. அடுத்து முருகன் சன்னதி உள்ளது. வடபுறம் தெற்கு நோக்கிய பைரவர் சிற்றாலயம் அமைந்துள்ளது

இங்கே வழிபட்டால் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், ஜாதகத்தில் கேது கிரக தோஷம் உள்ளவர்கள் மற்றும் குழந்தை பாக்கியம் அற்றவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து நாகநாதஸ்வாமி மற்றும் தேவி சாந்தநாயகியை பூஜித்தப் பின் நாகராணியையும் பூஜித்து வணங்கினால் சர்ப்பதோஷங்கள் விலகும், வேண்டியவைக் கைகூடும்

இந்த ஆலயத்தில் நாகங்களோடு தொடர்புடைய ஆயில்ய நடத்திர நாள், பவுர்ணமி,அமாவாசை, நாகசதுர்த்தி என மகா முக்கிய தினங்கள் விஷேஷம்

நாகங்களே வந்து வழிபட்ட இன்னும் வழிபடும் மகா சிவராத்திரி இன்னும் விசேஷம்

இந்த் தலத்தை தரிசிப்போர்க்கு நாகங்களால் சிக்கலில்லை, நாகங்களினால் ஏதும் பூர்வ ஜென்ம சிக்கல் பிரச்சினை இருந்தால் அது தீரும்

இந்த ஆலயத்தின் தலபுராணமான சம்புதத்தன் கதை அதைத்தான் சொல்கின்றது, இது நாகங்களுக்கும் மனிதர்களுக்குமான கர்மத்தை தீர்க்குமிடம்

அதனாலே ராகு கேது பரிகார தலமாகவும் இது விளங்குகின்றது

இங்கிருக்கும் சிவனான அந்த நாகநாத சுவாமி நாகங்களினால் உங்களுக்கு இருக்கும் தோஷங்களை தீர்ப்பார், அதனால் திருமண தடை, குழந்தையின்மை போன்ற குறைகள் அகலும்

முன் ஜென்ம சாபம் அகலும்

விஷதன்மை ஓங்கி உடல்நலம் பாதிக்கபட்டால், சில கெட்ட விஷ அதிர்வுகளால் மனநலம் சிந்தை பாதிக்கபட்டிருந்தால் அது நொடியில் அகலும்

இங்கு சென்று வழிபட்டால் நாகங்களின் எல்லா தோஷமும் தீர்ந்து ராகு கேது சிக்கல் சிவனருளால் தீர்ந்து, நாகநாத சுவாமியின் தனி அருளால் தானியத்துக்கும் செல்வத்துக்கும் குறைவின்றி,நோய் நீங்கிய அச்சம் நீங்கிய பெருவாழ்வு உங்களுக்கு வாய்க்கும் இது சத்தியம்

( இந்த ஆலயம் காலத்தால் மூத்தது, காலத்தால் கைவிடபட்டு மிக மிக அழிவு நிலைக்கு சென்ற இந்த ஆலயம் மீண்டும் பக்தர்களால் மீட்டெடுக்கபட்டு இன்று சிறிய ஆலயமாக மீண்டிருக்கின்றது

இன்னும் அதன் தேவைகள் அதிகம், காலம் அதை நடத்திவைக்கும், நாகங்கள் வழிபட்ட நாகநாத சுவாமி அதனை மீள உயர்த்தட்டும் )

பஞ்ச நாக தலங்கள் : 04 & 05

நாகதலங்களில் அடுத்த இரு தலங்கள் நாகூர் மற்றும் கும்பகோணம் திருநாகேஸ்வரம்

நாகவழிபாடு என்பது இந்துஸ்தானின் தொன்மையான வழிபாடு அவ்வகையில்தான் நாகலாந்து, நாக்பூர், நாகபட்டினம், நாகர்கோவில் என எண்ணற்ற நாக வழிபாடும் அதை தொடர்ந்த நகரமுமாக தேசமெங்கும் காட்சியளிக்கின்றன‌

அப்படியான ஒரு நாகவழிபாட்டு அடையாளம் கொண்ட ஊர்தான் நாகூர், நாக ஊர் என்பது நாகூர் என்றாயிற்று. நாகபுரி எனும் ஊர் நாக்பூர் என மருவியது போல் இது நாகூர் என்றாயிற்று

நாகூர் எனும் ஊர் உருவாக காரணம் நாக வழிபாடு அதுவும் நாகலோக அரசனான நாகராஜாவும் நாகராணியும் இன்னும் அஷ்டநாக லோகங்களும் சேர்ந்து வழிபட்டு விமோசனம் பெற்ற நாகவழிபாடு

ஆம் , நாக ஆலயங்களின் தொடக்கத்தில் பார்த்த சம்பவத்தின்படியேதான் இந்த ஆலயமும் உண்டு

சம்புபத்தன் எனும் அந்தணனின் ஐந்து வயது மகன் நாகலோக அரசன் நாகராஜானல் கொல்லபட அப்போது

தவசியான சம்புதத்தன் இதனை தன் ஞான திருஷ்டியால் உணர்ந்து நாகராஜனுக்கு சாபம் கொடுத்தார்.

நீ உன் நாகர் உலகை விட்டு பிரிந்து, அறிவும், வலிமையும் நீங்கி தனிமையில் பூலோகத்தில் கடவாய் என சபித்தார். உடனே தன் தவற்றை உணர்ந்த நாகராஜன் தன் சாபத்தை நீங்க வழி கேட்டார்.

உன் சாபம் தீர, மாசி மாத மகாசிவராத்திரியில் முதற்காலம் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபடு என சொல்லி சென்றார்

அப்படியே நாகராஜனும் நாகராணியும் அவர்களோடு எல்லா அஷ்ட நாகங்களும் வந்து வழிபட்டு தங்கள் சாபம் தீர்த்தார்கள், நாகங்கலால் அல்லது நாகத்தின் தன்மையினால் உடலிலும் மனதிலும் ஜாதகத்திலும் (ராகு கேது) என எல்லா தோஷங்களையும் இத்தலம் நீக்குகின்றது

நாகங்களே வழிபட்ட சிவனாதாலால் இங்குள்ள சிவன் சுவாமி நாகநாதர் என்றும், அம்பாள் திரு நாகவல்லி தாயார் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இங்கு நாகராஜன் மட்டும் வழிபடவில்லை பெருமாளுக்கே சிவபெருமான் காட்சி கொடுத்த தலமிது, ஒரு

வைகாசி மாதம் பௌர்ணமி அன்று புன்னை மரத்தடியில் சுயம்பு லிங்கமாகத் தோன்றி பெருமாளுக்கு காட்சி கொடுத்தார்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புற்ற இத்தலம் பிரம்மன், இந்திரன், சந்திர பகவான், சப்த ரிஷிகள், துருவாசர். உருத்திரசன்மன் போன்றோரால் ஆகியோரால் வழிபடப்பட்ட சிறப்பு வாய்ந்த கோயில்.

இந்திரன் தன் சாபம் தீர்த்த தலமும் இதுதான், ஆனி மாத பெளர்ணமியில் சந்திரன் 10 நாட்களும், மாசி மாதம் பெளர்ணமியில் இந்திரன் 10 நாட்களும் கொடியேற்றி, தீர்த்தவாரி நடத்தி பிரமோற்சவம் செய்து வழிபட்டு இழந்ததை மீட்டான்

இந்திரன் மட்டுமல்ல சந்திரனும் தன் சாபம் தீர வழிபட்ட தலமும் இதுவேதான்

இவ்வாலயம் அசுவினி நட்சத்திரத்தினர் வணங்க வேண்டிய பிறவி மருந்தீஸ்வரர் கோயில் என்பதும் இன்னொரு குறிப்பு, மிக முக்கியமாக நாக தோஷ பரிகார தலமாக உள்ளது.

இந்த ஆலயத்தின் சந்திர தீர்த்தம் பிரசித்தியானது, சிவன் தலையிலுள்ள புனிதமான சந்திரனை குறிப்பிட்டு அமைக்கபட்ட தீர்த்தம் இது, இங்கு நீராடி தான தர்மம் செய்தால் கயாவில் செய்த பலன்கள் கிடைக்கும்.

பிதுர்தோஷங்களுக்கு மிக முக்கியமான பரிகார ஆலயம் இது.

இங்கு, இறைவன் ஸ்ரீ நாகநாதர் என்ற திருப்பெயரில் காட்சியளிக்கிறார். அம்பாள் ஸ்ரீ நாகவல்லி என்ற திருப்பெயருடன் தெற்கு நோக்கி, தனி சன்னதி கொண்டு காட்சியளிக்கிறார்.

ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமையப் பெற்றுள்ளது இக்கோயில். சுவாமியின் வலப்புறத்தில் ஸ்ரீ சந்திரசேகரர், கல்யாணசுந்தரர் (உற்சவர்), தியாகராஜர், இடப்புறத்தில் காட்சிக் கொடுத்த நாயனார், ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ ஐயப்பன் ஆகியோர் தனி சன்னதிகளில் காட்சியளிக்கின்றனர

முதல் சுற்று பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி, நாகர்கள், வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், அண்ணாமலையார், சண்டிகேசுவரர் மற்றும் ஸ்ரீ காசி விசுவநாதர் தனி சன்னதிகளில் காட்சியளிக்கின்றனர்.

மேற்குப் புறத்தில் ஜூரதேவர், ஈசான லிங்கம், தத்புருஷ லிங்கம், அகோர லிங்கம், வாமதேவ லிங்கம், ஸ்ரீ ஐவேலி நாதர், மகாலட்சுமி மற்றும் நால்வரும் கோயிலின் கன்னி பாகத்தில் ஸ்ரீ நாககன்னி மற்றும் ஸ்ரீ நாகவல்லி சமேதராக ஸ்ரீ ராகு பகவானும் காட்சியளிக்கின்றனர்

கோவில் நுழைவாயிலிலே நாகராஜர் சிவபெருமானை பூஜிக்கும் சிலை இருப்பது கோவிலின் வரலாற்றை சொல்கின்றது

புன்னைவனமாக இருந்த இந்த இடத்தின் அடியில்தான் நாகலோகத்தின் நுழைவாயில் இருப்பதாகவும் ஒரு நம்பிக்கை உண்டு

புன்னாகவனம், சந்திர தீர்த்தம், ருத்திரநதி,சுபபுண்ணிய மலை, விசுவகன்மிய விமானம் எனும் ஆறும் கலந்த அற்புத தலம் இது

நாகூர் தலத்தில் நான்காம் சாமம் நாகங்கள் வழிபட்டன என்பது அடுத்து அவை விடியலை பெற்றன, அத்தோடு துன்பமெல்லாம் தீர்ந்தது என்பதை குறிப்பால் சொல்வது

நான்கு சாமங்கள் என்பது துன்பத்தின் நான்கு நிலைகளை கடந்து வருவது, பெரும் துன்பத்தை நேருக்கு நேர் சந்திப்பது, அந்த இக்கட்டான நிலையினை வைராக்கியத்துடன் கடப்பது, போராடி நீட்டிப்பது கடைசியில் கடந்து வருவது

ஒரு கடினமான காலத்தை கடந்து சாபம் தீர்க்கும் வழி இது

நாகங்கள் வழிப்ட்டன என்பது விஷத்தினை விஷத்தால் குணமாக்கும் தத்துவமும் கூட எல்லா போராட்டமும் நான்கு கட்டங்களை கொண்டிருக்கும், அந்த தத்துவத்தை சொல்லி விடுதலை தரும் ஆலயங்கள் இவை

ஆன்மீக மொழியில் இருள் எனும் மாயையினை வெல்லும் நான்கு கட்ட விழிப்பு நிலை தரும் ஆலயங்கள் இவை

நாகம் என்பது எப்போதும் விழிப்பானது, விவேகமானது. இரவோ பகலோ அது எப்போதும் விழிப்பாக இருக்கும், அந்த விழிப்பு நிலையினை தரும் ஆலயங்கள் இவை

நான்கு கட்ட வாழ்வினை நல்லபடியாக கடந்து ஐந்தாம் கட்டத்தில் நிம்மதியாக பூலோக வாழ்வை முடிக்க வழிசெய்யும் ஆலயங்கள் இவை

இதைத்தான் நாகூர் தலமும் சொல்கின்றது, அந்த நாகூரின் நாகநாத சுவாமி ஆலயத்தில் வணங்கினால் எதை இழந்தோமோ அதை எல்லாம் பெறலாம்

இந்திரன் வாழ்வு முதல் நாகராஜா வாழ்வு வரை அதைத்தான் சொல்கின்றது

இழந்ததை மீட்டுதரும் ஆலயம் இது, இங்கு வணங்கி எதை இழந்தீர்களோ அல்லது எதனை அடைய வேண்டுமோ அதனை அடைதல் அவரவர் பிராப்தம்

சோழநாட்டின் ஆலயங்களை தரிசிக்கும் போது இந்த ஆலயத்தை மறவாதீர்கள்

இது ராகு கேது பரிகார தலம், எல்லா வகை நாக தோஷங்களும் நிவர்த்தியாகும் தலம், இழந்ததை மீட்டு தரும தலம்

இங்குள்ள சந்திரதீர்த்தத்தில் நீராடி பித்ருகாரியக்களை செய்தால் காசிக்கும் கயாவுக்குமான பலன்கள் கிடைக்கும்

இங்கு இன்றும் நாகங்கள் வருகை உண்டு , நாகநாத சுவாமி சன்னதி முன் இடபடும் கோலத்தில் நாகங்களின் தடங்கள் அடிக்கடி பதிவது உண்டு, நாகங்களின் சட்டைகள் அடிக்கடி சுவாமி திருமேனியில் காணபடுவதும் உண்டு

ஆனால் யாரும் நாகத்தால் தீண்டபட்டதாக வரலாறே இல்லை

மகா சிறப்பும் பாரம்பரியமும் கொண்ட நாகூர் தலத்தினை வணங்கி பெறவேண்டிய அருளை இம்மைக்கும் மறுமைக்கும் பெறவேண்டியது அவரவர் கடமை

அடுத்த ஆலயம் கும்பகோணம் நாகேஸ்வரம் தேவாரம்

“பொன்நேர் தருமே னியனே புரியும்

மின்நேர் சடையாய் விரைகா விரியின்

நன்னீர் வயல்நா கேச்சுர நகரின்

மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே”

“தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந்

தலையவனை மலையவனை உலக மெல்லாம்

ஆயவனைச் சேயவனை அணியான் றன்னை

அழலவனை நிழலவனை அறிய வொண்ணா

மாயவனை மறையவனை மறையோர் தங்கள்

மந்திரனைத் தந்திரனை வளரா நின்ற

தீயவனைத் திருநாகேச் சரத்து ளானைச்

சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே”

என்றெல்லாம் தேவாரத்தில் பாடபட்ட தலம் இது, அப்பர் சம்பந்தர், சுந்தரர் என மூவரும் வந்து பாடிய புண்ணிய தலம் இது

ஸ்ரீநாகநாதப்பெருமானும் , குன்று மாமுலையம்மையையும் அருள்தரும் ஆலயம் இது

இந்த ஆலயம் அமைந்த வரலாறு இதுதான்

ஊழிகால வெள்ளத்தில் மிதந்துவந்த அமுத கும்பத்தின் உச்சியிலிருந்த வில்வம் தவறி விழுந்தது. அந்த இடம் வில்வவனம் என போற்றப்பட்டது.

அங்கெ சுயம்புவாக எழும்பிய சுவாமிக்கு வில்வனேசர் , பாதாள பீஜநாதர் ஆகிய பெயர்களும் வழங்கப்படுகின்றன. மடந்தை பாகர், செல்வபிரான் என்றும் சுவாமிக்கு பெயர்களும் உண்டு

“நந்தி சேரும் திருநாகேச்சரம்” என்று இந்த ஆலயத்தை தேவாரம் பேசுகின்றது.

நாகராஜன் வழிபடும் முன்பே இங்கு வழிபட்டவன் ஆதிஷேஷன் எனும் நாகம்

ஆதிஷேஷன் இந்த பூமியினை தாங்கும் நாகம், இந்த பூமியின் மக்களோ பொருளோ அவன் சிக்கல் அல்ல , ஆனால் மானிடரின் பாவங்கள் பெருகும் போது அவன் சுமை அதிகரிக்கும்

அப்படி அவன் மானுட பாவங்களின் சுமை தாங்காமல் தவித்து சிவனை வேண்டியபோது அவனுக்கு இந்த ஆலயத்தில் வழிபட்டு சக்திபெற சொன்னார் சிவன், அவன் உரிய காலம் வரும் வரை தான் உலகை சுமக்கும் ச்கதியினை இங்குதான் பெற்றான்

அவனைபோலவே நாகங்களின் அரசனான நாகராஜனும் இங்கேதான் தன் சாப விமோசனத்தின் தொடக்க பூஜையினை செய்து தொடந்து துன்பம் தாங்கும் சக்தி பெற்று பின் மீண்டான்

நாகராஜன் பூஜித்ததாலே இந்த இறைவனுக்கு நாகேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. அது நாகேஸ்வரம் என்றும் ஆயிற்று

நாகராஜனும் ஆதிஷேசனும் மட்டுமல்ல எண்ணற்றபேர் தங்கள் சாப தீர வேண்டி பலன் பெற்ற தலம் இது

சிவ‌பெருமானை மட்டுமே வணங்கி வந்த பிருங்கி முனிவரைக் கண்டு வெகுண்ட பார்வதி தேவி, இறைவனைக் குறித்து அர்த்தநாரீசுர வடிவம் வேண்டி இத்தலத்தில் சண்பக மரத்தடியில் கடுந்தவம் புரிந்தார்.

அதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் (மூவரும் நாகராஜாக்கள்), கௌதமர், நந்தி, நளன், பராசரர், பகீரதன்முதலியோர் வழிபட்டு பேறு பெற்றனர்.

சூரியன் இங்கே வழிபட்டுப் பேறுபெற்றார். விநாயகர் இங்கே வழிபட்டுக் கணங்களுக்குப் பதியானார்.

கௌதமர் இங்கு வழிபாடு செய்துதான் மீண்டும் அகலிகையை அடைந்தார். நளன் இங்கே வணங்கி, இழந்த தன் மனைவியைப் பெற்றான்.

பராசர முனிவர் வழிபட்டு பாவம் நீங்கினார். பாண்டவர்கள் வழிபட்டு இழந்த தம் செல்வத்தை மீண்டும் பெற்றதோடு இப்பெருமானுக்குக் கார்த்திகை மாத விழாவினையும் நடத்தினர்.

வசிஷ்ட முனியும் இந்திரனும் வழிபட்டு நலம் அடைந்த தலம் இது

பிம்ரமனும், பகீரதனும் வழிபட்டார்கள், இன்னும் சித்திரசேனன் எனும் மன்னன் இங்குதான் வைகாசி விழா நடத்தி புத்திரபலனை அடைந்தான்

சிவயோகி ஒருவர் இங்குதான் புற்பூண்டுகளை அகற்றி திருபணி செய்தே யோகியானார்

அருணகிரிநாதரின் தொடக்க வாழ்வினை போல பெரும் காமத்தில் விழுந்த சௌனக முனிவர் காம இங்குதான் தன் சாபம் தீர்ந்து ஞானம் பெற்றார்

நற்குணன் என்னும் முனிவன் கார்த்திகைச் சோமவாரங்களில் விளக்கேற்றி நோன்பிருந்து, பாம்பு கடித்து இறந்த தன்மகனைப் பிழைக்கச் செய்தான்.

நாகத்துக்கும் நாகலோக அஷ்ட நாகங்களுக்கும் மட்டுமல்ல , ராட்சசம், பைசாசம், வேதாளம் என எல்லா பெரும் சக்திகளின் தோஷத்தில் இருந்தும் இங்கு விடுபடலாம்

இந்த ஆலயத்தின் மிக முக்கிய சாட்சி சம்புமாலி எனும் சேரநாட்டு மன்னன்

அவன் தன் பொன் தானம் செய்து செய்து வந்தான். அவனிடம் காலாங்கிரி முனிவர் அவனிடம் சென்றபோது, அதற்கு முதல்நாளே அவன் அறத்தை முடித்துவிட்டானாதலால் அப்போது அவனிடம் தங்கம் இல்லாததால் அவருக்கு கொடுக்கமுடியவில்லை

அவனால் அம்முனிவருக்குப் பயன் கிட்டவில்லை

வெகுண்ட முனிவர், அவனை ‘அலகையுரு பெற்று அலைக” எனச் சாபமிட்டார். அலகை எனும் கோர உரு பெற்ற மன்னன் முனிவரிடமே பணிந்து விமோசனம் கேட்டான்

முனிவரும் அவனுக்க மனமிரங்கி ஆயிரத்தெட்டு சிவலிங்கங்களை தரிசித்து கடைசியில் திருநாகேஸ்வரம் எனும் சென்பகவனம் சென்று வணங்கினால் உன் சாபம் தீரும் என சொன்னார்

அவனும் அந்த உருவுடன் ஆயிரத்தெட்டு, சிவத்தலங்களையும் கண்டு வணங்கி இறுதியில் சண்பகவனம், என்னும் திருநாகேஸ்வரத்திற்கு வந்து சூரிய புஷ்கரணியில் நீராடி, ஸ்ரீநாகநாதப்பெருமானையும், குன்று மாமுலையம்மையையும் வணங்கிச் சாப நீங்க பெற்றான்

இதன் சாட்சியாக அந்த சம்புமாலியின் உருவம் இக்கோயிலின் அலங்கார‌ மண்டபத்தில் ஒரு தூணில் இன்றும் உண்டு

இக்கோவில் சோழர்களின் மகா முக்கிய கோவில்

1100 ஆண்டுகளுக்கு முன்பு ஆதித்த சோழன் இதனை பெரிதாக கட்டினான், இது சூரியன் வழிபட்ட ஆலயம் என்பதால் அதை பிரதிநிலைபடுத்தி கட்டினான்

நாகூர் சந்திரனுக்கு என்பது போல இந்த ஆலயம் சூரியனுக்கு பிரதான தலம்

சித்திரை மாதம் 11,12, 13 ஆகிய தேதிகளில் மட்டும் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது சூரியஒளி படும் வகையில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது இன்றும் அது உண்டு

அந்த நாட்களில் சூரிய பகவான் வந்து இந்த கோயிலில் வழிபடுவதாக நம்பப்படுகிறது. இதனால் இங்கு ஆண்டுதோறும் சூரிய விழா நடைபெறுவது வழக்கம்.

நாகேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் 5 நிலைகளை கொண்டது. இந்தக் கோயில் கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் இரண்டு கோபுரங்களைக் கொண்டுள்ளது. இடப்பக்கம் நந்தவனமும், சிங்கமுக கிணரும். வலப்பக்கம் பிருகன்நாயகி சன்னதியும் நடராஜர் சபையும் உள்ளது.

இந்த நடராஜ மண்டபம் தேர் வடிவத்தில் நேர்த்தியாக கட்டப்பட்டிருக்கும். அதில் இருக்கும் 12 கரங்கள் 12 ராசிகளை குறிக்கும். 2 குதிரைகள், 4 யானைகள் இழுக்கும் நிலையில் உள்ள இந்த மண்டபத்திற்கு ஆனந்த தாண்டவ மண்டபம் என்ற பெயரும் உள்ளது.

நடராஜனின் நடனத்திற்கு ஏற்ப தாளம் போடும் பாவனையில் சிவகாமி அம்மையும், நடராஜர் அருகில் மகாவிஷ்ணு குழல் ஊதும் காட்சியும் அங்கு செல்லும் பக்தர்களை மெய் சிலிர்க்க வைக்கிறது.

இந்த கோயிலில் மாரியம்மன், அய்யனார், விநாயகர், சப்த லிங்கங்கள், வைத்தீஸ்வரர், அர்த்த நாரீஸ்வரர் பிரம்மா என பலர் உண்டு

சோழர்கள் வரலாற்றில் முக்கியமானவரான சின்ன பழுவேட்டரையர் சிலை சிலை மூலவருக்கு பின்புறம் உள்ளது.

உலகில் அற்புதமான சிலைகள் இங்குதான் உண்டு

காலத்தால் இக்கோவில் பின்னடைவினை சந்தித்தபோது , இதன் வழிபாடும் பராமரிப்பும் சிக்கலான போது இந்த ஆலயமே ஒரு சித்தர் மூலம் தன்னை மீட்டு கொண்டது

அவர்தான் பாடகச்சேரி சுவாமிகள் , 18ம் நூற்றாண்டில் இந்துமதம் கண்ட பெரும் சித்தர்

1876 முதல் 1949 வ்ரை வாழ்ந்த அந்த சித்தர், கும்பகோணத்தை அன்மித்த பாடகச்சேரியில் தோன்றினார் வள்ளலார் மரபில் தன்னை நிறுத்தி ஞானம் அடைந்தார்

நவகண்ட யோகம் எனும் மிக ஆபத்தான யோகத்தை அவர் செய்தார் , அது உடலை ஒன்பது பாகமாக பிரித்து கருதி செய்யும் யோகம், அதை முயற்சித்தல் ஆபத்து என்பார்கள் சித்தர்கள்

அதை எளிதாக செய்து சித்தி பெற்றவர் சுவாமிகள்

இவர் வள்ளலார் வழியில் பசிபிணி தீர்க்கும் அனைத்து காருண்ய பணிகளை செய்தார், பரோபகார மனதோடு எல்லா மக்களும் வாழ வழி சொன்னார்

கூடுதலாக இவர் பைரவர் உபாசகர்,இதனால் நா(ய்)களை நிரம்ப நேசித்தார், அவரோடு அவை இராது ஆனால் அவர் நினைந்தால் ஓடிவரும்

அவர் வாழ்வில் செய்த சித்துக்களும் காட்டிய அற்புதங்களும் ஏராளம் என்றாலும் கார்த்திகை தேய்பிறை அஷ்ட்மை அன்று காலைபைர்வார்க்கு செய்யும் பூஜை அதிசயமானது

அன்ரு அவர் 108 இலைகளை வைத்து 108 வகையான உணவுகளை வைத்து பின் கண்ணை மூடி தியானிப்பார், எங்கிருந்தோ சரியாக 108 பைரவ அம்சமான நா(ய்)கள் வந்து இலை முன் அமரும் ஆனால் உண்ணாது

பின் அவர் வழிபாட்டை முடித்து தீபாரதனை செய்தபின் உத்தரவு கொடுக்கும் வரை காத்திருக்கும் அந்த ஜீவன்கள் பின் அதை உண்டு அவரிடம் வந்து ஆசிபெற்று செல்லும்

இப்படி மாபெரும் சித்துக்களை செய்த பைரவர் உபாசகர் அவர்

அந்த மகான் 18ம் நூற்றாண்டில் பெரும் தூணாய் நின்று இந்துமதம் காத்தார், அவர் செய்த மாபெரும் சிலிர்ப்பான சித்துக்களும் அற்புதமும் ஏராளம்

பரதேசி வாழ்க்கைதான் அவர் வாழ்ந்தார், நிலையான இடமோ குடிலோ இல்லை , ஒரு பித்தளை செம்பை கழுத்தில் கொண்டே அலைவார்

அவரின் கண்களை காண்பவர்கள் ஒரு தெளிவை பெறுவர், லவுகிகவாசிகள் வாழ்க்கை துன்பம் நீங்குவர், ஆன்மீகம் தேடுவோர் பெரும் நிறைவு கொள்வர்

அவரின் செம்பினில் மக்கள் இடும் காணிக்கையினை கொண்டுதான் அவர் முன்னால் கொட்டும் நிதியினை கொண்டுதான் பசிபிணி அகற்றினார் ஏகபட்ட திருபணிகளை செய்தார், பல கோவில்களை சீர்படுத்தினார்

இந்து அரசர் வீழ்ந்து நவாப்களும் ஆங்கிலேயரும் ஆண்ட காலத்திலே இந்து ஆலயங்கள் வீழ்ந்தன, இந்த திருநாகேஸ்வரமும் அப்படி வீழ்ந்தது

அது சிதிலமடைந்து கிடந்தபோது பாடகசேரி ஸ்வாமிகளே அதை மீண்டும் சீரமைத்து 1923ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துவைத்தார். திருநாகேஸ்வரம் கோயிலில் ராமலிங்க சுவாமிக்கு தனிச் சந்நிதியில் உள்ள சிலை போல் ராஜகோபுரத்திலும் சிலை உண்டு

அந்த பெரும் திருப்பணி செய்து ஆலயத்தை மீட்டெடுத்து மீண்டும் தந்தார் அந்த சித்தர், அவரின் சமாதி இன்று சென்னை திருவொற்றியூரில் உண்டு

ஆம் நாகூரும் கும்பகோணம் திருநாகேஸ்வரமும் நாகஸ்தலங்களில் முக்கியமானவை, நாகேஸ்வரத்தில் தொடங்கும் வழிபாடு நாகூரில் முடியும்

அதாவது ஆதிஷேஷன் தான் மேலும் உலகை சுமக்கு சக்திபெற்றான் என்பது நாகராஜன் முதல் வழிபாட்டை செய்தான் என்பதும் இங்கு எல்லா சுமையினையும் கர்மாவினையும் சுமக்கும் வரத்தை இந்த ஆலயம் தரும் என்பதை சொல்கின்றது

சூரியன் என்பது சக்தி, அதிகாரம், தொடர்ந்து இயங்கும் பலத்தின் அடையாளம் , ஒளியுடன் கூடிய அம்சம், அவ்வகையில் இந்த ஆலயம் கர்மாவினை சுமக்கும் சக்தி தரும்

அடுத்தடுத்த ஆலயங்களில் அது வலுபெறும், நாகூர் ஆலயம் என்பது சந்திர தத்துவம் அது நிறைவும் சாந்தமும் குளிர்ச்சியும் தரும்

சந்திரன் மனதுக்கு உகந்த கிரகம் என்பதால் நிறைவான மனம் பூரணமாக வாய்க்கும்

ஆம், உங்களுக்கு நாகதோஷமோ, ராகு கேது பரிகாரமோ கர்ம வினைகளோ இருந்தால் இந்த ஆலயங்களுக்கு செல்லுங்கள்

கும்பகோணம் நாகேஸ்வரம் தொடங்கி திருநாகேஸ்வரம், திருபாம்புபுரம் நாகூரில் முடித்து தெற்கு ஆலத்தூர் தரிசனத்தோடு முடியுங்கள் எல்லாமும் நலமாகும்

சூரிய சந்திர அம்சம்ங்கள் ஜாதகத்திலும் வலுக்கும் மனமும் சிந்தையும் தெளிவாகும், தெளிவான சிந்தை கர்மத்தை கடமையினை சரியாக செய்யவைக்கும் அது தொட்டதெல்லாம் வாய்க்க செய்யும்

இந்த ஐந்து ஆலயங்களும் நாகங்கள் வழிகாட்டி நின்ற பெரும் தலங்கள், அவைகளோடு தேவர்களும் ரிஷிகளும் முனிகளும் வழிபட்டு பலன் பெற்ற தங்கள், அங்கே நீங்களும் சென்று வழிபடும் போது நாகநாத சுவாமி உங்களுக்கு எது அவசியமோ எது தேவையோ அதை தருவார், எதை சரிசெய்தால் உங்கள் வாழ்வு மாறுமோ அதை மாற்றி நல்விதியினாய் உங்களை வாழவைப்பார் இது சத்தியம்