பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சத்ரபதி சாம்பாஜி : 20

சத்ரபதி சாம்பாஜி : 20 தன்முன் நின்ற அந்த வீரனை நோக்கினான் ஔரங்கசீப். நல்ல உயரம், கூர்மையான கண்கள், உடும்பு போன்ற உடற்கட்டு, நீளமான கைகள் என அவன் தோற்றத்திலே ஔரங்கசீப்பைக் கவர்ந்தான். நல்ல வீரன் இன்னொரு போர் வீரனைக் கவர்வான் என்பதால் அவனை எடைபோட்ட ஔரங்கசீப் மேற்கொண்டு சோதனைக்காக மறுநாள் களத்துக்கு அவனைச் சோதிக்கும் பொருட்டு வரச்சொன்னான். அவனுக்கு எல்லாப் பரீட்சைகளும் தொடங்கின, அவன் அருகில் ஆயுதங்கள் வைக்கப்பட்டன. அவை மெழுகு நுனியில் வைக்கப்பட்ட போலி […]

சத்ரபதி சாம்பாஜி: 19

சத்ரபதி சாம்பாஜி: 19 சாம்பாஜியினை அடக்க இனிப் பெரிய போர்களால் முடியாது, மெல்ல மெல்ல அவனின் வருமானமெல்லாம் முடக்கி அவனின் இதர எல்லைப் பகுதிகளை முடக்கி வரவேண்டும், இப்போர் சிறிது காலம் நீடிக்கும் என்பதை உணர்ந்த ஔரங்கசீப் தேர்ந்த திட்டம் ஒன்றை வகுத்தான். அதன்படி அவன் இலக்கு சாம்பாஜி அன்று. மாறாக, இந்துராஜ்ஜியத்துக்குக் கப்பம் கட்டி வந்த பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா சுல்தானியங்களைத் தன்னோடு சேர்த்துக் கொள்வது. இந்துஸ்தானின் தென்பகுதி அவ்வப்போது மொகலாயருக்கு கப்பம் கட்டுவதும் பின் […]

சத்ரபதி சாம்பாஜி : 18

சத்ரபதி சாம்பாஜி : 18 சாம்பாஜியினைப் பலமுனையில் பலபேரைக் கொண்டு தாக்கியும் வெற்றிப் பெறமுடியாத ஔரங்கசீப் மிகுந்த யோசனைக்குள்ளானான், அவன் தன் 10 வயதில் இருந்தே போர்களைத் தொடங்கியவன், அப்படியானவன் தன் 50 வருட வரலாற்றில் தோற்ற ஒரே அரசன் வீரசிவாஜி. அதே நேரம் ஔரங்கசீப்பும் சிவாஜியும் நேருக்கு நேர் நின்று போரிடும் சூழல் வரவில்லை. சிவாஜிக்கும் அது நல்ல காலம். ஒருவகையில் ஔரங்கசீப்புக்கும் நல்ல காலம், இல்லையேல் ஔரங்கசீப்பினை எப்படியாவது வீழ்த்தியிருப்பான் சிவாஜி. அந்தக் காலக்கட்டத்தில் […]

சத்ரபதி சாம்பாஜி : 17

சத்ரபதி சாம்பாஜி : 17 சாம்பாஜி போர்ச்சுகீசியருடன் மோதிக் கொண்டிருந்த நேரம், ஔரங்கசீப்பின் அடுத்த நடவடிக்கை என்ன என எல்லாரும் அச்சத்துடன் எதிர்பார்த்த நேரம் இன்னொருபுறம் துர்க்காதாஸ் தலைமையில் ராஜபுத்திரர்கள் டெல்லிமேல் பாயலாம் எனும் இன்னொரு எதிர்பார்ப்பும் இருந்தது. ஜெய்சிங்கின் மகன் ராம்சிங் டெல்லிக்குக் காவலாக இருந்தான், அவனோடு களத்தில் இருந்தவன் திலியர்கான், அந்தத் திலியர்கான் திடீரென செத்துக் கிடந்தான், விஷம் கலந்த உணவினை அவன் உண்டு செத்தது பின் தெரியவந்தது. திலியர்கான் தாவுத்சாய் மறைந்தான் எனும் […]

சத்ரபதி சாம்பாஜி : 16

சத்ரபதி சாம்பாஜி : 16 அப்போது ஔரங்காபாத்துக்கு வந்திருந்து சாம்பாஜிக்கு எதிராக படை நகர்த்தினான் ஔரங்கசீப், அவனோடு அவன் மகன் ஆசம் ஷா உள்ளிட்ட எல்லோரும் வந்திருந்தார்கள். இங்கே அவன் தன் முழுப்பலத்தோடும் படையோடும் அமர்ந்திருக்க டெல்லி அதிக காவல் இல்லாமல் காலியாக இருந்தது. ராஜபுத்திரரின் ராஜபுத்திர பகுதியில் இருந்து டெல்லிக்கு பாய்வது இப்போது எளிதான விஷயம், பாதுஷா அவுரங்கசீப்புமில்லை அவன் சேனையுமில்லை என்பதில் அங்கு பாதுகாப்பே பெரிதாக இல்லாமல் இருந்தது ஔரங்கசீப்பும் அவன் மகன்களும் ஔரங்காபாத்தில் […]

சத்ரபதி சாம்பாஜி : 15

சத்ரபதி சாம்பாஜி : 15 சாம்பாஜி வடக்கே நகர்ந்து கொண்டிருந்தான், பெரும் போர்சூழல் வடக்கே கடும் சவாலை கொடுத்துக் கொண்டிருந்தது. பிரம்மாண்ட சேனையும் பெரும் நிதிவசதியும் கொண்டிருந்த ஔரங்கசீப் பலமுனைகளில் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருந்தான். ராஜபுத்திரர் பகுதியில் துர்க்காதாஸும் இந்துராஜ்ஜிய பகுதியில் ஹம்பிராவ் மோடியும் பெரும் பதிலடியினைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சாம்பாஜி சிக்கதேவராயனை ஒடுக்கி கப்பம் கட்ட வைத்தபடி வடக்கே சென்றிருந்தான். சிக்கதேவராயனோ அடிபட்ட நாகம்போல் மனதால் சீறிக்கொண்டிருந்தான், அவனால் ஏதும் செய்யமுடியவில்லை என்பதால் தவித்துக் கொண்டிருந்தான். […]

சத்ரபதி சாம்பாஜி : 14

சத்ரபதி சாம்பாஜி : 14 சிதம்பரம் நடராஜர் கோவிலில் வழிபட்டு மீண்டும் தங்கக்கூரை வேய்ந்து கொடுக்க உத்தரவிட்ட சாம்பாஜி, தஞ்சாவூர் பிரகதீஸ்வரரை வணங்கிவிட்டு தஞ்சாவூரிலே ஓய்வெடுத்தான். சோழர்களின் கடற்படை முதல் சிவபக்தி வரை, ஆட்சி முதல் அரசியல் வரை எல்லாமே தங்களின் போராட்டம் போல் இருந்ததை நினைந்து சிலிர்த்துக் கொண்டான். சோழர்களுக்குப் பௌத்தம், தங்களுக்கு ஆப்கானிய இஸ்லாம் என நினைத்துக் கொண்டான். சோழர்கள் வலுவாகத் தொடர்ந்திருந்தால் இல்லை பாண்டிய வம்சம் அதே பேரரசாக நிலைத்திருந்தால் இந்நேரம் மாபெரும் […]

சத்ரபதி சாம்பாஜி : 12

சத்ரபதி சாம்பாஜி : 12 சாம்பாஜி ஜான்சிரா சித்திகளை அடக்க பெரும் போரையும் தொடங்கி அதைவிட பிரமாண்டமாக பாலம் ஒன்றையும் கட்டி அத்தீவினை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இரு ராணுவ செய்திகளும், அதைவிட முக்கியமாக இன்னொரு செய்தியும் சாம்பாஜியினை அடைந்தது. ஒன்று ஔரசீங்கசீப் அனுப்பிய தளபதி ஹாசன் அலி கான் கல்யாண் நோக்கி பெரும் படையோடு வருகின்றான் என்பது. இரண்டாவது, மைசூர் மன்னன் சிக்க தேவராயா சாம்பாஜிக்கு எதிராக‌ செய்யும் கிளர்ச்சி. மூன்றாவது, சமர்த்த ராமதாஸர் தன் […]

சத்ரபதி சாம்பாஜி : 13

சத்ரபதி சாம்பாஜி : 13 ஹாசன் அலிகானை ஔரங்கசீப் பெரிய நம்பிக்கையோடு அனுப்பினான், அவனுக்குந் தனிபட்ட வகையில் ஒரு பெரிய யானையும் சில உயர்தர குதிரைகளும், கிலாட் எனும் பட்டும் தங்கமும் கலந்த மெல்லிய அங்கியும் இன்னும் பல பரிசும் கொடுத்து அனுப்பினான். அலிகான் தன் இருபதாயிரம் பேர் கொண்ட படையோடு கல்யாண் பக்கம் புகுந்தான், அவனின் முதல் இலக்கு பெரிய காடும் மலையும் இல்லாத சமவெளி பக்கம் இருந்த ராம்சேஜ் கோட்டையாக இருந்தது. அதை முதலில் […]

சத்ரபதி சாம்பாஜி : 11

சத்ரபதி சாம்பாஜி : 11 சாம்பாஜியின் வேகம் முகமது அக்பர் வந்தபின் வேகமானது. இனி நிச்சயம் ஔரங்கசீப் சும்மா இருக்கமாட்டான் என்பதையும் அவனின தாக்குதல் கடுமையாக இருக்கும் என்பதையும் அனுமானித்தான். ஆனால், எங்கே எப்படி அவன் தாக்குவான் என்பதை அவன் அறியமுடியவில்லை, சாம்பாஜியின் உளவுப்படைகள் களத்தில் இருந்தாலும் ஔரங்கசீப் ஊகிக்கமுடியாத ஆபத்தானவனாக இருந்தான். சாம்பாஜி எல்லாப் பக்கமும் தன் சேனையினைப் பலப்படுத்தினான். அதே நேரம் ஔரங்கசீப் மிகத் தீவிரமான ஆலோசனையில் இருந்தான். அவனிடம் பெரிய சேனை, பெரியநிதி, […]