பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முருகப்பெருமான் ஆலயங்கள் : பாளையஞ்சாலை சாலைகுமாரசாமி திருக்கோவில் : திருநெல்வேலி.

முருகப்பெருமான் ஆலயங்கள் : பாளையஞ்சாலை சாலைகுமாரசாமி திருக்கோவில் : திருநெல்வேலி. இந்த ஆலயத்தின் வரலாறு திருச்செந்தூர் கோவிலை 16ஆம் நூற்றாண்டில் ஆக்கிரமித்துக் கொள்ளையிட்ட காலத்தில் இருந்து தொடங்குகின்றது. அப்போது இலங்கையிலும் இன்னும் வங்கம் பக்கத்திலும் கால் பதித்திருந்த டச்சுப்படைகள் ராமநாதபுரம் கடற்கடையும், சங்கு குளிக்கும் தொழிலையும் செய்தது, அதற்கான உரிமைகளைப் பெற்றிருந்தது. அதே நேரம் போர்ச்சுகீசியர் போன்றோருடன் மோதலும் இருந்தது. நாயக்கர் மன்னர்கள் போர்ச்சுகீசியருடன் ஆயுத வியாபாரம் செய்தவகையில் டச்சுகாரரும் அதைச் செய்யமுயன்று சில குழப்பங்கள் உருவாகிக் […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : குகை முருகன் கோவில் மற்றும் பூக்காரதெரு கோவில், தஞ்சாவூர்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : குகை முருகன் கோவில் மற்றும் பூக்காரதெரு கோவில், தஞ்சாவூர். தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் தச்சங்குறிச்சியில் அமைந்திருகின்றது இந்தக் குகை முருகன் ஆலயம், இது மலையில் இருக்கும் குகை அன்று. மாறாக, நிலத்தடியில் சுரங்கப்பாதையில் இருக்கும் குகை ஆலயம். இந்தச் சுரங்கம் முற்கால சோழர்கள் அன்று அமைத்த சுரங்கப்பாதையின் ஒர் இடம், அரச பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட இச்சுரங்கம் மிக நீண்டது என்றாலும் சோழர்களின் முக்கிய இடங்களை இணைப்பது என்றாலும் ஒரே ஒரு […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : விருதுநகர் அருகில் தென் திருவண்ணாமலை நரிப்பாறை முருகன் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : விருதுநகர் அருகில் தென் திருவண்ணாமலை நரிப்பாறை முருகன் ஆலயம். இந்தியா சூட்சுமச் சக்தி நிறைந்த சனாதன பூமி. காலங்காலமாகப் பிரபஞ்ச சக்தி தேர்ந்தெடுத்து நடத்திக் கொண்டிருக்கும் பூமி, இங்கு எக்காலமும் சித்தர்களும் அவர்களுக்கு வழிகாட்டும் முருகப்பெருமானும் நின்று, அற்புதம் பல செய்து மகா ஞானமான வழியில் மக்களுக்கு ஞானவழி காட்டி லௌகீக வாழ்வில் கர்மம் கழித்து நல்லபடியாக முக்தி பெற வழிகாட்டி நிற்கும் பூமி. அந்த ஞான மார்க்கம் ஏகப்பட்ட இடங்களைத் தனக்கென […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : சேலம் கந்தாஷ்ரமம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : சேலம் கந்தாஷ்ரமம். காலம்தோறும் தன் அடியார்கள் மூலம் தனக்கான ஆலயத்தை அமைத்து இந்த மக்களை தன்பால் ஈர்த்து நல்வரம் வழங்கி வருபவர் முருகப்பெருமான், தலைமுறை தலைமுறையாக இந்த அதிசயம் நடந்துகொண்டே இருக்கும், இந்தியா எனும் ஞானப்பூமியில் இந்த அதிசயம் எல்லாக் காலமும் உண்டு. அப்படித் தன் அடியார் மூலம் முருகப்பெருமான் உருவாக்கிக் கொண்ட ஆலயமே சேலம் கந்தாஷ்ரமம், இதனை உருவாக்கியவர் சித்தரும் முருகப்பெருமான் அடியாருமான ஸ்ரீமத் சாந்தானந்த சரஸ்வதி எனும் அற்புதமான முனிவர். […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : ராஜபாளையம் சஞ்சீவி மலை முருகன் ஆலயம் மற்றும் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : ராஜபாளையம் சஞ்சீவி மலை முருகன் ஆலயம் மற்றும் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் ஆலயம். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அமைந்திருக்கின்றது சிறிய மலைக்குன்று, அனுமன் சுமந்த சஞ்சிவீ மலையின் ஒரு சிதறலான அம்மலையில் அற்புதமான மூலிகைகள் பல உண்டு, அபூர்வமான அம்மூலிகைகள் நோய்தீர்க்கும் வரம்பெற்றவை. அந்த மூலிகளைகளை மக்களுக்கு கொடுத்து நோயற்ற வாழ்வை தரவும் அப்படியே நல்ல வழியில் நல்ல காவலில் மக்களை வைக்கவும் முருகப்பெருமானே ஒரு சித்தராக இங்கு வந்தார், அவரைப் பற்றி […]

முருகப்பெருமான் ஆலயங்கள் :நாதகிரி முருகப்பெருமான் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் :நாதகிரி முருகப்பெருமான் ஆலயம். தென்காசி மாவட்டம் சிவகிரியினை அண்மித்து அதுவனக்காடு, தொன்மையான இந்த ஆலயத்தின் வரலாறு முருகப்பெருமான் காலத்தில் இருந்து தொடங்குகின்றது. இயல்பிலே நல்ல அதிர்வும் தவயோகம் கூடும் பூமியான இம்மலையில் பிரபஞ்ச சக்தி எப்போதும் குவிந்திருக்கும். அந்த ஞான பூமியின் பெருமையினை உலகுக்கு முதலில் சொன்னவன் இந்திரனின் மகனான ஜெயந்தன். ஆம், இந்திரனின் மகன் ஜெயந்தன் அசுரர்களின் அட்டகாசம் அதிகரித்தபோது சிவபெருமானைச் சரணடைந்தான், சிவனோ அவன் அல்லல் தீரும்படி இங்குத் தவம் செய்ய […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : சென்னை பெசன்ட் நகர் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : சென்னை பெசன்ட் நகர் ஆலயம். முருகப்பெருமான் எப்போதும் தமிழகத்தோடு கலந்தவர். முக்தி தலங்கள் அதிகமிருக்கும் தமிழகத்தில் அவர் முக்திக்கான வழியினைக் காட்டும் தெய்வமாக எக்காலமும் நிலைத்து நிற்பவர். காலம் தோறும் அவருக்கான ஆலயங்கள் யாரோ ஒருவர் வடிவில் இங்குப் பிரமாண்டமாக எழும்பிக் கொண்டே இருக்கும், இங்கு அரசுகள் மாறும் மத ஆதிக்கம் மாறும் ஆட்சி மாறும் சூழல் மாறும் இன்னும் என்னவெல்லாமோ மாறி மாறி வரும் . ஆனால், மாறாமல் வளர்ந்து கொண்டே […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : வயலாநல்லூர் கந்தசாமி கோவில் மற்றும் மயிலம் முருகப்பெருமான் ஆலயங்கள்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : வயலாநல்லூர் கந்தசாமி கோவில் மற்றும் மயிலம் முருகப்பெருமான் ஆலயங்கள். முருகப்பெருமானின் வடிவங்கள் மொத்தம் பதினாறு, எல்லா முருகன் ஆலயங்களும் இந்த 16 வகையான அருள் வழங்கும் கோலத்தில்தான் அமைக்கப்பட்டிருக்கும். ஞானசக்திதரர் கோலம் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். கந்தசாமி : இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். ஆறுமுக தேவசேனாபதி : இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சுப்பிரமணியர் : இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : காளிபட்டி முருகன் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : காளிபட்டி முருகன் ஆலயம். கொங்குநாட்டின் முருகப்பெருமான் ஆலயங்களில் முக்கியமானது காளிபட்டி முருகன் ஆலயம், சேலம் நாமக்கல் எல்லையில் திருச்செங்கோடு மல்லன் சத்திரம் அருகே அமைந்திருக்கின்றது, அந்த அற்புத ஆலயம். இதன் வரலாறு பழனி பாலதண்டாயுதபாணியிடம் இருந்தும், அந்தப் பழனிமலையின் பக்தர் ஒருவர் இடமிருந்தும் சில நூறு ஆண்டுக்கு முன் இருந்து தொடங்குகின்றது. அந்தப் பக்தரின் இயற்பெயர் அறிவாறில்லை, ஆனால் பழனிமுருகன் மேல் அவர் கொண்ட பக்திகாரணமாக பழனி கவுண்டர் என அழைக்கப்பட்டார் , […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : குரோம்பேட்டை சுவாமிநாதசுவாமி திருக்கோவில்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : குரோம்பேட்டை சுவாமிநாதசுவாமி திருக்கோவில். சென்னை நகரில் குரோம்பேட்டையில் வடக்கு நோக்கி ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது இவ்வாலயம், மகா சக்தியான இவ்வாலயம் திரிசியோலம் மற்றும் திருநீர்மலை மலை கோயில்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இக்கோவிலை உலகுக்கு அடையாளம் காட்டித் தந்தவர் காஞ்சி மகா பெரியவர், 1956 ஆம் ஆண்டு இப்பக்கம் நடந்து வந்து கொண்டிருந்தவர் திடீரென அம்மலையினைக் கண்டு அப்படியே நின்றார், ஏதோ ஒரு ஈர்ப்புக்குக் கட்டுப்பட்டவர் போல் அபப்டியே நின்றார். அம்மலை அப்போது […]