அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 15 /21
அலஹாபாதி வழக்கின் விவாத ப்ரதிவாத விவரங்கள்…
(இதன் முந்தைய பாகம் அதாவது 14ம் பாகம் முந்தைய பதிவில் கொடுக்கபட்டுள்ளது, அதை படித்தால் இந்த பாகம் எளிதாக புரியும்)
உச்சநீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு விவாதிக்கபடுமுன் அலாகாபாத் உயர்நீதிமன்றம் 2010, 30 செப்டம்பரில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பை சொன்னது அல்லவா? அதாவது அந்த இடத்தில் இஸ்லாமியருக்கும் இந்துக்களுக்கும் என மூன்றாக பிரித்து தீர்ப்பை சொன்னதல்லவா?
அப்போது நடந்த சில விசித்திரமான வாதங்களை அறிந்துகொள்ளுதல் நன்று, அப்போதுதான் எப்படியெல்லாம் எதிர்தரப்பு மிக மிக தரம்தாழ்ந்து ராமர்கோவிலை தடுக்க பார்த்தார்கள், நிதானமிழந்து எப்படியெல்லாம் பொய் சொல்லி சிக்கினார்கள் என்பது தெரியும்
அகழாய்வில் மீட்கபட்ட கல்வெட்டை அந்த விஷ்ணு ஹரி கல்வெட்டை எதிர்தரப்பு ஏற்றுகொள்ள மறுத்தது, அது அங்கிருந்து எடுக்கபட்ட கல்வெட்டு அல்ல அது எங்கிருந்தோ திருடபட்டது என வரலாற்று ஆசிரியர் இர்பான் ஹபீப் என்பவர் குழப்பினார்
இதற்கு என்ன ஆதாரம் என நீதிபதி கேட்டபோது திருபட்டடிருக்கலாம் என்றார் ஆனால் திருடபட்ட புகாரை கொடுகமுடியவில்லை
பின் இது பைசாபாத அருங்காட்சியகத்தில் இருந்து திருபடப்படது, வேறுஎங்கோ எடுக்கபட்ட கல்வெட்டை இங்கு காட்டி குழப்புகின்றார்கள் என்றார்
உடனே நீதிமன்றம் பைசாபாத் அருங்காட்சியகத்தில் இருந்து தகவலை அதாவது ஏதும் கல்வெட்டு திருடபட்டதா? இந்த கல்வெட்டு உங்களுடையாதா என கேட்டார்கள்
அருங்காட்சியகம் இல்லை என சொல்லிவிட எதிர்தரப்பு குனிந்துகொண்டது
பின் ஆவேசமாகி யாரோ புதிய கல்வெட்டை கொண்டு வைத்துவிட்டார்கள் என்றார்கள், நீதிபதி ஆத்திரமடைந்தார்
அறிவியல் பரிசோதனைகள் அக்கல் பழங்காலத்தது என்கின்றது , மேலும் கடும்காவல் இருக்கும் வளாகத்தில் யார் கொண்டுவந்து புதைக்கமுடியும்?
என சொன்ன நீதிபதி சிரித்துகொண்டே ” அது 5 அடிக்கு 2 அடி, 1 1/2 அங்குலம் தடிமனான கனமான கருங்கல். அது என்ன சட்டைப்பைக்குள் ஒளித்து வைத்து கொண்டு வரக்கூடிய பொருளா? மேலும் அன்று அவ்வளவு காவல்துறையின் காணொளி , கேமரா வசதி இருக்கும்போது அதெல்லாம் சாத்தியமில்லை என மற்த்தார்.
அதன் பின் கல்வெட்டை விட்டுவிட்ட கோஷ்டிகள் செங்கல் அடிபாகத்துக்கு வந்தன, அது கோவிலின் அஸ்திபாரமில்லை மாறாக மாடுகள் கட்டும் தூண்களிளும் கட்டைகளும், அது மாட்டுதொழுவமாக இருக்கலாம் என குழப்பினர்
ஆனால் தொல்பொருள் வல்லுனர்கள் அதன் அமைப்பை காட்டி தூண் என நிரூபிக்க நீதிமன்றம் ஏற்றுகொண்டது.
இப்படி பெரும் தோல்வி பெற்றாலும் இந்து துவேஷ தரப்பு விடுவதாக இல்லை, அயோத்தி என்பது ஆங்கிலேயர் காலத்துக்கு முன்பு இல்லாத பெயர் என திடீரென குழப்பினர்
இவர்கள் இப்படியெல்லாம் வருவார்கள் என தயாராக இருந்த இந்து அமைப்பினர் அங்கு வந்த பல்வேறு வெளிநாட்டவர் எழுதிய குறிப்புகளை கொடுத்தனர்
லத்தீன், ஃப்ரெஞ்ச், டச்ச் மொழி என அவை ஆதாரமாக கொடுக்கபட்டு ஏற்றுகொள்ளபட்டது
அங்கும் தோற்றபின் தமிழக ஈரோட்டு ராமசாமி அய்யா கற்பனையினை கையில் எடுத்தார்கள்
ராமாயணம் கற்பனை, ராமன் என்பவனை 17ம் நூற்றாண்டுக்கு முன்பு யாருக்கும் தெரியாது, வால்மீகி என்பவனும் கற்பனை என குழப்பி அடித்து உருண்டார்கள்
இந்து தரப்பு 11ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட அயோத்யா மாஹாத்ம்யம் நூலையும் இன்னும் பல ஆதாரங்களையும் கொடுத்தபின் எதிர்தரப்பு மவுனமானது
டெல்லி நேரு பல்கலைகழக பிஹெச்டி மாணவி ஒருவரே தன் thesis, ராமர் 1 – 2ம் நூற்றாண்டுகளில் தான் கடவுளாக முன்னிருத்தப்பட்டார் என கிளம்பினார், அதற்கு உலகெங்கும் உள்ள ராமர் வழிபாட்டை இந்துக்கள் முன்வைக்க அந்த வாதமும் தகர்ந்தது
இதையெல்லாம் தாண்டித்தான் 0 Sep 2010 ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் 3 நீதிபதிகள் திரு. சிப்கத் உல்லா கான், திரு. சுதிர் அகர்வால், திரு. தரம் வீர் ஷர்மா ஆகியோர் 4000 பக்க தீர்ப்பினை அளித்தது
அந்த தீர்ப்பின் சில வரிகள் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டியவை
“1940 வரை அந்த இடம் ஜனம்ஸ்தான் என்றே அழைக்கப்பட்டது. மொகலாய, ஆங்கிலேய அரசு ஆவணங்கள் அனைத்தும் அப்படித்தான் குறிப்பிடுகின்றன.
இருமுறை நடந்த அகழ்வாராய்ச்சியில் அங்கு கோவில் இருந்தது தெளிவாகிறது.
3000 ஆண்டுகளுக்கு மேல் அங்கு தொடர்ச்சியாக கோவில் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது, அதனை நீதிமன்றம் ஏற்கின்றது
மேலும் இவ்வளவு ஆதாரங்களுக்கு மேல் ஹிந்துக்களின் நம்பிக்கை அங்கு தான் ராமர் பிறந்தார் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்
முஸ்லிம் தரப்பில் பாபர் தனக்கு சொந்தமான இடத்தில் கட்டியதற்கான ஆதாரம் தரமுடியவில்லை.
முஸ்லிம்களும் இந்துக்களும் அபூர்வமாக ஒரே இடத்தில் தங்கள் வழிபாடு நடத்தியது ஆச்சரியாமானது, தனித்துவமானது. நவாப் காலத்தில் இருவருமே அங்கு ஒன்றாக வழிபட்டிருக்கின்றார்கள் அதனால் இரு தரப்பிற்கும் இடத்தில் பங்கு உள்ளதாக நீதிமன்றம் கருதுகின்றது
ஆங்கிலேயர் காலத்தில் தடுப்பு சுவர் கட்டிய பின் முஸ்லிம்கள் ஹிந்துக்கள் இடத்திற்கு வரவோ பயன்படுத்தவோ இல்லை, ஆனால் ஹிந்துக்கள் தங்கள் இடத்திலும் வழிபட்டு, முஸ்லிம்களின் இடத்திலும் உபயோகித்து (கடைகள்), வழிபட்டு வந்துள்ளனர்.
பிற மத வழிபாட்டுத்தலத்தின் மேல் கட்டியது இஸ்லாத்தில் ஒப்புக்கொள்ளப்படாததால் அது பள்ளிவாசல் என கூற முடியாது. வெறும் கட்டடமே.
அதே நேரம் இந்த காலகட்டம் மிக மிக பிந்தைய காலம் என்பதால்.எந்த தரப்பாலும் இது தங்கள் சொந்தமான இடம் என்பதை ஆவணமாக நிரூபிக்க முடியவில்லை
அதனால் இந்த நீதிமன்றம் பொதுவான தீர்ப்பையே வழங்கமுடியும், ( 1500களில் தொடங்கிய சிக்கலுக்கு 1950க்கு பின்னரான இந்திய சட்டபடிதான் தீர்ப்பு)
அந்த தீப்பை வழங்குகின்றோம்
சர்சைகுரிய 2.77 ஏக்கரில் குழந்தை ராமருக்கு நடு பகுதி உள்ளிட்ட 1/3 பங்கும், வெளிப்பகுதியில் 1/3 நிர்மோஹி அக்கடா தரப்பிற்கும், முஸ்லிம்களின் சுன்னி வக்ஃப் க்கு 1/3 பங்கும் உரிமை என தீர்ப்பாகின்றது
இதுதான் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 2010, 30 செப்டம்பரில் சொல்லபட்ட தீர்ப்பின் விவரங்கள், இந்த தீர்ப்பில் இந்துக்களுக்கு சாதகமான பல அம்சங்கள் இருந்தன
அதாவது கோவில் இருந்ததையும் அதன் மேல் பள்ளிவாசல் கட்டபட்டதையும் இந்த நீதிமன்றம் மிக மிக உறுதியாக சொல்லி அங்கே இந்து வழிபாட்டு கோவிலே ராமர்கோவிலே முதலில் இருந்தது ஆனால் இஸ்லாமியர்களும் நவாப் காலத்தில் இருந்து வந்து சென்றதால் அவர்களுக்கும் ஒரு வழிபாட்டு உரிமை அனுபவபாத்தியமாக உண்டு என சொன்னது
எங்கள் உரிமையான இடத்தில், எங்கள் மதத்தின் முக்கிய சொத்து ஒன்றில் அவர்களுக்கு ஏன் அனுபவ பாத்தியம் என இந்துக்கள் உச்சநீதிமன்றம் சென்றார்கள்
(தொடரும்..)