அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 11 /21
சுதந்திர இந்தியாவில் போராட்டம் (1989 – 1992 காலம்)
அதுவரை நீதிமன்ற விவகாரம் என அரசியல் கட்சிகள் தொடாமல் இருந்த ராம் ஜென்ம பூமியினை முதலில் அரசியலாக்கியர் ராஜிவ் காந்தி, எங்கள் ஆட்சியில் கோவில் கட்டபடும் என அவர் அறிவித்ததே எல்லா கட்சிகளும் அங்கே புகுந்துகொள்ள வாய்ப்பானது
அதுவரை அரசியலில் இல்லாத விஸ்வ ஹிந்து பரிஷத் போன்றவைத்தான் ராம் ஜென்ம பூமியினை பேசிகொண்டிருந்தன போராடிகொண்டிருந்தன ராஜிவ் கொடுத்த வாய்ப்பில் கட்சிகள் உள்ளே வந்தன
முதலில் இந்துக்கள் கோரியது 1975களில் நடந்த அகழாய்வு அறிக்கையினை வெளியிட கோரியது
காரணம் 1970க்கு பின் சில அரசியல் மாற்றங்களில் பல குழப்பங்கள் உருவாயின, இந்திரா தான் பலவீனமான போது எதிர்கட்சிகளுடன் கம்யூனிஸ்டுகளுடன் மறைமுக ஒப்பந்தம் செய்தார் அப்போது கல்வி திட்டம் வரலாறு என எல்லாமும் கம்யூனிச சாயலில் குழப்பி அடிக்கபட்டது
அப்போதுதான் ரொமீலா தாப்பர் போன்ற குழப்பவாதிகள் வந்தனர் இன்னும் பலர் வந்து கற்பனைகளை உண்மையாக்க பார்த்தார்கள்
அப்போது உருவான வாதம்தான் ராமர்கோவிலை இடித்து பள்ளிவாசல் கட்டபடவில்லை, காலி இடத்தில் கட்டபட்டது இந்துக்கள் வேண்டுமென்றே பிரச்சினை செய்கின்றார்கள் என்பது
உண்மையில் இஸ்லாமிய மக்கள் இப்படி குழப்பபட்டார்கள், குழம்பியவர்களை களத்த்துக்கு இழுத்துவிட்டார்கள் சிலர்
அதனால் அந்த அகழ்வாய்வு முடிவு வேண்டும் என இந்துக்கள் கேட்க தொடங்க்கினார்கள்
1975லே நீதிமன்றம் அப்படி ஒரு குழுவினை அமைத்திருந்தது, கவனமாக இஸ்லாமியரையும் சேர்த்திருந்தது பிபி லால் தலைவராக இருந்த அந்த குழுவில் கேரளாவை சேர்ந்த கே கே முகம்மது போன்ற பலர் இருந்தார்கள், அயோத்தி மட்டுமல்ல நந்திக்ராம் சித்ரகூடம் என ராமாயணம் சம்பந்தபட்ட இடமெல்லாம் அந்த ஆய்வு நடந்தது
ஒரு கட்டத்தில் ஆய்வு திடீரென நிறுத்தபட்டது, ஆய்வு செய்தவரை இருந்த அறிக்கையும் வெளியிடபடவில்லை
(இந்த கே கே முகமது அவர்கள் பேசும் வீடியோக்கள் இப்போது சுற்றுகின்றன, இந்து ஆலய தூண்கள் கல்வெட்டுக்களை அவர் அடையாளபடுத்தி அது இந்துக்கள் ஆலயம் இருந்த இடம் என சொல்வது பரவி வருகின்றது
இந்த அகழராய்வு முடிவினைத்தான் அன்றே கேட்டார்கள் இந்துக்கள் ஆனால் அது ரகசியமாக வைக்கபட்டிருந்தது)
இந்த கொந்தளிப்பான காலங்களில்தான் 1989ல் ராஜிவ் கோவிலுக்கு ஆதரவாக பேசிவிட பாஜகவும் களமிறங்கிற்று
1989ல் ஹிமாசல பிரதேசத்தின் பாலாம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில்தான் ராம்ஜென்ம கோவில் கட்டுவோம் என பாஜக அறிவித்தது
ராஜிவ் உள்பட பலர் இறங்கி வந்ததும் கோவிலின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடந்தது, அன்றைய உள்துறை அமைச்சர் பூட்டாசிங் கலந்து கொண்டார்
அடிக்கல்லை இட்டது பீஹாரைச் சேர்ந்த ஸ்ரீ காமேஷ்வர் சௌப்பால் அவர் ஒரு தாழ்த்தபட்டவர்
ஆம், அடிக்கல்லை பிராமண ஆச்சாரியர்கள் யாரும் இடவில்லை, தாழ்த்தபட்ட வகுப்பை சேர்ந்த ஸ்ரீ காமேஷ்வர் சௌப்பால் என்பவர்தான் அடிகல்லை இட்டார்
இதன் பின்பே இந்த ஆலயம் இந்துக்களுக்கானது எல்லா இந்துக்களின் பங்களிப்பும் இருக்கவேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்தது, ராம் என எழுத்து பொறிக்கபட்ட செங்கல்கள் உலகெங்கும் இருந்து வந்தன
சில வாரங்களிலே 6 கோடி செங்கல் குவிந்தது
அந்த தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெறவில்லை, ராஜிவின் முயற்சியெல்லாம் பலிக்கவில்லை. இந்துக்கள் வாக்கு சிதற இஸ்லாமியர் வாக்கும் இல்லாமல் போக அவர் கட்சி தள்ளாடியது
அப்போது யாருக்கும் பெரும்பான்மை இல்லை, தமிழகத்தில் எம்ஜிஆர் எனும் பெரும் சக்தி மரணித்து அவர் கட்சி உடைந்ததில் கருணாநிதி முதல்வராக இருந்தார்
அவரை போன்றவர்கள் ஆதரித்ததில் வி.பி சிங் பிரதமரானார், திமுக முதல் முறையாக டெல்லியில் பங்கேற்றது
வி.பி சிங் பாஜகவுடன் சேர்ந்து ஒரு முடிவினை கொடுப்பார் என எதிர்பார்த்தது தேசம், காரணம் பாஜக குறிப்பிடதக்க வெற்றியினை பெற்றிருந்தது
ஆனால் வி.பி சிங் அங்கே ஆர்வம் காட்டவில்லை, அவர் காலத்தில் இலங்கையில் குழப்பம் காஷ்மீரில் குழப்பம் என எங்கும் குழப்பமாய் இருந்தது , கூடவே மண்டல் கமிஷன் என இன்னொரு குழப்பத்தையும் சேர்த்துகொண்டார்
நீதிமன்ற தீர்ப்பும் வரவில்லை அரசும் முடிவு சொல்லவில்லை எனும் நிலையில்தான் தன் பிரத்தியான ரத யாத்திரையினை அத்வாணி தொடங்கினார்
இங்கேதான் காங்கிரசுக்கும் பாஜகவுக்குமான அடிப்படை வித்தியாசம் ஒன்றை கவனிக்க வேண்டும்
காங்கிரஸ் எதை தொட்டாலும் அங்கே குழப்பமும் வன்முறையுமே வரும் அவர்களின் அணுகுமுறை அப்படியானது
காஷ்மீர் போர், தேசபிரிவினை, சீனப்போர், பாகிஸ்தான் போர், இலங்கை குழப்பம், சீக்கியர் சண்டை தமிழக இந்தி எதிர்ப்பு கலவரம், கன்னியாகுமரி போராட்டம், தெலுங்கானா பிரிப்பு, என அவர்கள் செல்லுமிடெமெல்லாம் பெரும் கலவரம் சண்டையிலேதான் முடியும்
அதுதான் கடைசியில் இந்திரா, ராஜிவின் முடிவாகவும் பரிதாபமாக அமைந்தது. காங்கிரஸின் அணுகுமுறை அப்படியானது
பாஜக அப்படி அல்ல அவர்கள் எல்லா பிரச்சினையினையும் அமைதியாக முடிக்கபார்ப்பார்கள், அன்றே அவர்கள் கன்னியாகுமரி விவேகானந்த மண்டபம் உள்பட பலவற்றை துளி சர்ச்சையின்றி முடித்தார்கள்
அதுதான் காசி புணரமைப்பு, உஜ்ஜைனி புணாரமைப்பு, காஷ்மீர் இணைப்பு என இன்றுவரை காணலாம், அயோத்தியில் திறக்க இருக்கும் ஆலயமும் அப்படியானதே
இந்த பாஜக அப்படித்தான் அயோத்தியினையும் அணுகினார்கள், அத்வாணி நாடெங்கும் இருந்து ஒருமித்த குரல் வேண்டும், இனியும் தாமதிப்பதில் அர்த்தமில்லை என ரத ஏறினார்
அவரின் நோக்கம் தேசமெங்கும் இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் நடந்த வரலாற்றை புரியவைப்பது, ஒற்றுமையாக ஒரு முடிவுக்கு மக்களை வரவைப்பது என்ற நோக்கில்தான் இருந்தது
இஸ்லாமிய மக்கள் எப்படி அன்றே முடிவினை ஏற்றுகொண்டார்கள் எப்படி அயோத்தியில் இஸ்லாமியருக்கும் இந்துக்களுக்கும் ஒரு புரிதல் வந்திருகின்றது, வரலாற்று உண்மை என்ன என்பதை விளக்கி நல்ல அமைதியான முடிவினை தரத்தான் அவர் எண்ணினார்
நீதிமன்றமும் அரசும் பெரும் மவுனம் காக்கும் வேளை, அவசியமற்ற கால அளவுகளை நீட்டிக்கும் வேளை அரசுகளை நிர்மானிக்கும் மக்கள் உண்மையினை உணர்தல் வேண்டும் என பிரச்சினையினை அகில இந்திய மக்கள் முன்னால் வைக்கும் பெரும் பணியினை செய்தார்
செப்டம்பர் 25, 1990ல் குஜராத் சோமநாதர் ஆலயத்தில் தொடங்கிய ரத யாத்திரை, வட மாநிலங்கள் பல சுற்றி குஜராத், மஹாராஷ்ட்ரா, வடக்கு ஆந்திரா, ம.பி, ராஜஸ்தான், டெல்லி, பிஹார், என கடந்து பின் அயோத்தியில் அக்டோபர் 30ல் முடிவடைவதாக இருந்தது.
ஏறக்குறைய 10,000கிமீ. அன்று கோவில் கட்டும் கரசேவை தொடங்குவதாக முடிவும் செய்யபட்டது
இந்த ரதயாத்திரையால் மக்களிடம் ஒரு எழுச்சி வந்ததும் தேசம் இனி இந்த சிக்கலுக்கு ஒரு முடிவு வேண்டும் என விரும்புகின்றார்கள் என காட்டியதும் நிஜம்
யாத்திரை துளி வன்முறை இல்லாமல் மிக அமைதியாக நடந்தது
இக்கால கட்டத்திலும் பள்ளிவாசல் பிரதிநிதிகளாக உள்ளே வந்த சஹாபுதின், ஜிலானி தரப்பு விட்டுகொடுப்பு இல்லை என தீவிரம் காட்டியது
அத்வாணியின் ரத யாத்திரையால் எழுந்த எழுச்சி வி.பி சிங்கினை கலக்கமடைய வைத்தது, காஷ்மீரில் அப்போது நடந்த பெரும் தீவிரவாத வன்முறைகள், வடகிழக்கு சிக்கல், இலங்கையில் இந்தியா அடைந்த படுதோல்வி, தமிழகத்தில் நடந்த பெரும் தீவிரவாத சம்பவங்களில் விபி சிங் திணறிகொண்டிருந்தார்
அதனால் அத்வானியின் ரத யாத்திரையினை இன்னொரு பெரும் சிக்கலாக எதிர்கொள்ள அவர் விரும்பவில்லை அதனால் பேச்சுவார்த்தைக்கு வந்தார்
இந்த பேச்சுவார்த்தையில்தான் தமிழக துக்ளக் பத்திரிகை குருமூர்த்தி, அருண் ஜெட்லி உள்பட பலர் கலந்துகொண்டார்கள்,
ஆனால் விபி.சிங் வரவே இல்லை
ஒரு முடிவினை அவசரமாக எட்டி அத்வானியின் ரதத்தை முடக்கும் அரசியலும் இருந்தது என்றாலும் இந்துக்களை பொறுத்தவரை அத்வாணியோ ரதமோ முக்கியமல்ல ராமனின் ஆலயமே முக்கியம் என்பது இலக்காய் இருந்தது, பாஜகவின் நிலைபாடும் அதுதான்
அந்த கூட்டத்தில்ச ர்சைக்குரிய ஜன்மபூமி இடத்தை மட்டும் ( அளவில் 5.5 க்ரவுண்டு / கால் ஏக்கர்) நீதிமன்ற தீர்ப்பு , அந்த இடத்தில் கோவில் இருந்ததா இல்லையா எனும் தீர்ப்பும் வரும்வரை ஒரு சட்டம் மூலம் கையக்கப்படுத்தி மத்திய அரசே வைத்துக்கொள்ளவும், மாநில அரசிடம் இருந்த மீதி இடத்தில் ramajanmabhoomi Trust கோவில் கட்ட அனுமதியளிக்கவும் முடிவு செய்து, அவசரச் சட்டம் இயற்றி, ஜனாதிபதி அனுமதி அளித்து சட்டம் நடைமுறைக்கு வந்தது
அதாவது கருவறை என இந்துக்கள் சொல்லு இடமும், எங்கள் இடம் என இஸ்லாமியர் சொல்லும் இடத்தை அரசின் கட்டுபாட்டில் வைத்து கொண்டு வளாகத்தில் இந்துக்கள் வழிபடும் இடத்தில் கோவில் கட்டலாம் என கூட்டம் முடிவெடுத்து அவசர சட்டமும் இயற்றபட்டது
அப்போது ஒரு பெரும் சிக்கல் வந்து எல்லாவற்றையும் குழப்பியது அதன் பெயர் முலாயம்சிங் யாதவின் அரசு
அந்த காலகட்டத்தில் கூட்டணி எனும் பெயரில் குழப்பமான அரசே இருந்தது, வி.பி சிங் அரசை திமுக, இந்த முலாயம் என பலர் தாங்கினார்கள்
முலாயம்சிங் அப்போது உத்திரபிரதேச முதல்வராய் இருந்தார், இது தன் அரசியலுக்கு கை கொடுக்காது இஸ்காமிய வாக்குகள் விழாது இதனால் தன் செல்வாக்கு சரியும் பாஜக செல்வாக்கு ஏறிவிடும் என கணக்கிட்டு வி.பி சிங் அரசை மிரட்டினார்
இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் ஆட்சியினை கவிழ்ப்பேன் என அவர் மிரட்டியதால் சட்டம் மீள பெறபட்டது
மீண்டும் பெரும் குழப்பம் எற்பட்டது, அத்வாணி தான் நிறுத்திவைத்திருந்த ரத யாத்திரையினை மீண்டும் தொடர்ந்தார்
அக்டோபர் 23, 1990 அன்று பீஹாருக்குள் அவர் ரதம் நுழைந்தது சமஷ்டிபூரில் ரத யாத்திரை வந்த போது அத்வானி, பீஹார் CM லல்லு ப்ரசாத் யாதவ் அரசால் கைது செய்யப்பட்டார். உடனே பெரும் கூட்டம் கூடியதால் அவர் விடுவிக்கபட்டார்,ஆனால் ரதம் தொடர்ந்து செல்ல லல்லு பிரசாத் அனுமதிக்கவில்லை
இந்த பீஹார் கூட்டத்தில் ஒருவர் பாஜக தொண்டராக பெரும் வரைபடமெல்லாம் தயாரித்து பெரும் வேகத்தோடு போராடிகொண்டிருந்தார், அத்வாணி கைதுசெய்யபட்டபோது பெரும் வேகம் காட்டி அவரை விடுவித்தார்
ஆனால் லல்லு அரசு யாத்திரையினை அனுமதிக்காததால் அவர் மனம் சோர்ந்தார் முடிந்தவரை போராடி மாற்றுவழிகளில் ஊர்வலத்தை நடத்தினார், அத்வாணியுடன் ரத ஊர்வலத்தில் முக்கிய நபராக நின்ற அவர்தான் பின்னாளில் நரேந்திர மோடியாக வந்து ராமர்கோவிலை கட்டுவார் என்பதை யாரும் அன்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை, காலம் மட்டும் அறிந்திருந்தது
ரதம் அதன் போக்கில் சென்றது, 1990, அக்டோபர் 30ல் அன்றய வி.ஹெச்.பி. தலைவர் திரு. அஷோக் சிங்கல் தலைமையில் அயோத்தியில் கூட ஆரம்பித்தனர்.
ஆனால் முலாயம் சிங் யாதவ் பெரும் பாய்ச்சல் காட்டினார், உண்மையில் அவரது நடவடிக்கைகள் அவர் மனம் பெரும் அச்சம் கொண்டிருந்ததை காட்டின, அது பாஜகவுக்கான எழுச்சிக்கு வழிவகுக்கும் என்பதை அறியாதவர் போல் பெரும் கோபத்தை காட்டினார், பாஜக வளர அவரே வழி செய்து கொடுத்தார்
கண்ணில்பட்டவர்களையெல்லாம் கைது செய்ய உத்தரவிட்டார், வரலாற்றிலே இல்லாதபடி 1.5 லட்சம் பே கைதானார்கள் ஆனால் அதையும் மீறி 50 ஆயிர்ம பேர் பல வழிகள் வழி வந்து ராமஜென்மபூமியினை டைந்தனர்
பெரும் கொந்தளிப்பான காலகட்டங்கள் வந்தன
விபி சிங் காலத்தில் சர்ச்சைகுரிய இடத்தினை மத்திய அரசின் அல்லது நீதிமன்ற கட்டுபாட்டில் வைத்துகொண்டு இந்துக்கள் ஏற்கனவே வழிபட்ட வளாகத்தில் கோவில்கட்டிகொள்ள வழி செய்யபட்டது
காசிபோல மதுரா போல மசூதியும் கோவிலும் அடுத்தடுத்து இருக்கட்டும் எனும் இணக்கபாடு வந்தது, நீதிமன்ற தீர்ப்புவரும் வரை அதை ஏற்றுகொள்ள எல்லா தரப்பும் சம்மதித்தது
ஆனால் குழப்பியடித்தவர் நிச்சயம் முலாஅயம் சிங் யாதவ் ஒருவர்தான்
ராஜிவ்காந்தி எப்படி குழப்பத்தை தொடங்கி பாஜகவுக்கு வாய்ப்பை தொடங்கி கொடுத்தாரோ அப்படி முலாயம் அடுத்த வாய்ப்பினை கொடுத்தார்
கோவிலே கூடாது பள்ளிவாசல் மட்டும் இருக்கட்டும் என அவர் களமிறங்க இப்பக்கம் கரசேவகர்கள் தீவிரமாக நிலமை மோசமானது, காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது, 28 பேர் கொல்லபட்டார்கள், அனுமன் ஹத்தி ஆலயம் முன் அந்த பெரும் கொடுமை நடந்தது
மொகலாயர்,பிரிட்டிஷார் கால போர்களுக்கு பின் இந்துக்கள் ஆலயத்துக்காக கொல்லபட்டது , அதுவும் சுதந்திர இந்தியாவில் கொல்லபட்டது அப்போதுதான்
மசூதிமேல் காவி கொடி ஏற்றியதால் சுட்டோம் என பின்னால் விளக்கங்கள் வந்தாலும் இந்துக்கள் மனம் பெரும் எரிமலையாக வெடித்தது
அந்த 28 பேரின் உடல் தகனம் செய்யபட்ட நெருப்பு வேகமானது, கல்கத்தாவினை சேர்ந்த சகோதரர்கள் ஒன்றாக செத்து ஒன்றாக எரியூட்டபட்டபோது இந்துக்கள் மனம் எரிய ஆரம்பித்தது
இந்த நிகழ்வுக்கு பின் பாஜக விபி சிங் அரசுக்கான ஆதரவினை திரும்பபெற்றது, அதனை செய்யாவிட்டால் பாஜகவின் நம்பகதன்மை அடிபட்டிருக்கும்
இதற்கு மேலும் ஆதரிப்பதில் அர்த்தமில்லை என பாஜக விலகிவிட விபி சிங் அரசு கவிழ்ந்தது, சந்திரசேகர் இடைக்கால பிரதமரானார்
சந்திரசேகர் காலங்களில் எல்லோருக்கும் உண்மை புரிந்தது, இனியும் காலநீட்டிப்பு செய்யமுடியாது முலாயம்சிங் செய்த குழப்பத்தால் நாடு கொந்தளிப்பான நிலையினை நோக்கி செல்வதை அறிந்தவர்கள் இறங்கி வந்தார்கள்
அதனால் வரலாற்று தரவுகள், பழைய ஆங்கிலகால தரவு, மொகலாய கால நிகழ்வுகளெல்லாம் வரலாற்றாசிரியர்கள், ஆய்வாளர் மூலம் வெளியிடபட்டது
அப்போதுதான் அந்த மாமனிதன் தன் மனம் திறந்து உண்மையினை சொன்னான்
ராமர் ஆலய வரலாற்றில் கே.கே நாயர போல கையெடுத்து வணங்க வேண்டிய மனிதன் அவர், அந்த மனிதனின் சத்தியம்தான் அவன் காத்த தர்மம்தான் மீண்டும் ராமர்கோவில் எழ முக்கிய காரணம்
அந்த சத்தியவான் கே கே முகமது எனும் கேரள இஸ்லாமியர், அகழாய்வு செய்தவர்களில் முக்கியமானவர்
அவர் இஸ்லாமியர் என்றாலும் ஒரு வார்த்தை தர்மத்தை மீறி பேசவில்லை, அவருக்கு மிரட்டல்கள் வந்தன அக்காலம் நாடெங்கும் சமூக விரோதிகள் யாரையும் கொன்றுகொண்டிருந்த கொடும்காலம், கொலை என்பது எளிதான ஒன்றாக இருந்தது
அந்நிலையிலும் கே கே முகமது சொன்னார் ” உண்மை பேசி உயிரே போனாலும் உயர்வே”
அங்கு எடுக்கபட்ட அகழாய்வு முடிவுகளின் தூண்கள், சிற்பங்கள், அங்கு பொறிக்கபட்டிருந்த கல்வெட்டுக்களையெல்லாம் காட்டி அஸ்திபாரத்தை காட்டி இது விஷ்னுவின் அவதார கோவில் பத்து தலை கொண்ட அசுரனை கொன்ற கருப்பு தெய்வத்துக்கான கோவில் என எல்லா புதைக்கபட்ட ஆதாரங்களையும் காட்டினார்
காலம் இந்த சிக்கலின் தொடக்கத்தை இந்துக்கள் காத்த தர்மத்தை திரும்ப அவர்மூலம் காட்டியது
எங்கள் ஆலயத்தை இடித்து அந்த இடிபாடுகளை புதைத்து அதன் மேல் பள்ளிவாசல் கட்டினார்கள் என இந்துக்கள் ஐநூறு ஆண்டுகளாக சொன்னதை ஆதாரபூர்வமாக சொன்னவர் கே.கே முகமது
அவர்தான் இடையில் வந்த கம்யூனிச பொய் குழப்பங்களையல்லாம் தகர்த்தார்
இப்படி எல்லாமும் கூடிவந்தது, இனி என்ன தடை? இது சுதந்திர நாடு, ஐநூறு ஆண்டாக நடந்த சிக்கலுக்கு அகழாய்வு வரை முடிவாகிவிட்டது என்ற நிலையில் மறுபடி சுயரூபம் காட்டியது காங்கிரஸ்
இம்முறை குழப்பியவர் ராஜிவ் காந்தி
சந்திரசேகர் அரசு உரிய ஆதாரமெல்லாம் காட்டி இனி கோவில் கட்டலாம் என முடிவெடுத்த நேரம் ஆட்சியினை கலைத்துபோட்டது காங்கிரஸ்
அத்தோடு தேர்தல் அறிவிக்கபட்டது, இந்த தேர்தலில் ராஜிவ் அந்நிய சதியில் தமிழகம் சென்னை பக்கம் பலியானாலும் நாடு முழுக்க பெரும் அனுதாபமும் வோட்டும் காங்கிரசுக்கு கிடைக்கவில்லை
ராஜிவ் உயிர்தப்பியிருந்தாலும் காங்கிரசுக்கு சல்லிவோட்டு கிடைத்திருக்காது அந்த அளவு அவர் குழப்பம் செய்திருந்தார்
ஆனால் அவரின் மரணம் பெரும்பான்மை இல்லாத நூலிழையில் ஆடும் ஒரு அரசை நரசிம்ம ராவுக்கு கொடுத்தது
உத்திரபிரதேசத்தில் பாஜக அரசு கல்யாண் சிங் தலமையில் ஆட்சிக்கு வந்தது, முலாயம் சிங், விபி சிங் காங்கிரஸ் செய்த உதவிகள் அப்படி பாஜகவுக்கு கை கொடுத்தன
1991 ஜூலை 28ம் தேதி சாதுக்கள் போராட்டம் தீவிரமானது, பாஜக மாகாண ஆளும்கட்சி என்றாலும் அமைதியான தீர்வைத்தான் விரும்பியது, சந்திரசேகர் கால திட்டம் அதன் தேர்வாய் இருந்தாலும் நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்தது
அகழாய்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பு இனி எப்படி இருக்கும் என்பதை எல்லோருமே ஊகித்து கோவில் கட்ட தயரானார்கள், நரசிம்மராவ் போராட்டகாரர்களை சிலமாதம் பொறுக்கும்படி கேட்டுகொண்டார்
சாதுக்களும் மூன்றுமாதம் அவகாசம் வழங்கினார்கள்
ஆனால் நரசிம்ம ராவ் உருப்படியாக எதையும் செய்யாமல் பழைய காங்கிரஸ் பாணியில் இழுத்தடிக்க தொடங்கினார், இந்துக்கள் பக்கம் சலிப்பே வந்தது
அகழாய்வு முடிவு வந்தாகிவிட்டது, எவ்வளவொ முறை பேசி முடிவின் நுனிவரை வந்தாகிவிட்டது, அங்கிருந்தது கோவில்தான் அதன் மேல்தான் பள்ளிவாசல் கட்டபட்டது என்பதும் உறுதியாகிவிட்டது
சரி, அப்படியே நீதிமன்றம் இழுத்தடித்தாலும் சர்ச்சைகுரிய இடம் அப்படி நீடிகக்ட்டும், ஆனால் வளாகத்தில் கூட கோவில் கட்ட அனுமதி இல்லையென்றால் எப்படி இதை தடுக்கும் சக்தி எது என்பதுதான் எல்லோருக்கும் குழப்பமாயிற்று
யார் இன்னமும் தடுக்கின்றார்கள் என்பதில்தான் குழம்பினார்கள் இந்துக்கள்
கோவில் இடிபாடுகள் மேல் பள்ளிவாசல் சரி இருக்கட்டும், அருகில் ஒரு கோவில் வரகூடாது என்றால் எபப்டி? ஏன் இந்த தடை யார் சொல்லி செய்கின்றார்கள் என ஏகபட்ட கொந்தளிப்பு உருவானது
அந்த டிசம்பர் ஆறாம் தேதி பேச்சுவார்த்தை என அரசு சொன்னது, பலமுறை பேசி களைத்துவிட்ட இந்துக்கள் மனம் சலித்தனர்
அதனால் இனி நேரடி கரசேவை என அறிவித்தனர், நாடு முழுக்க பதற்றம் தொற்றிகொண்டது
சுமார் 1.5 லட்சம்பேர் கூடினார்கள், கூட்டுபிரார்த்தனைகள் நடந்தன, தலைவர்கள் உரையாற்றினார்கள், கூட்டம் பெருவாரியாக கூடிகொண்டே இருந்தது
இதற்குரிய முடிவை சொல்லவேண்டிய அலுவலகம் டெல்லி என்னால் மகக்ளின் உணர்வுகளை மீறி செயல்பட முடியாது என்னால் முடியாது என கல்யாண்சிங் அவர்போக்கில் இருந்துகொண்டார்
நரசிம்மராவ் அரசும் பெரும் காவல்படையினை அனுப்ப முன்வரவில்லை, அப்படி அனுப்பினால் அடுத்து 10 லட்சம் பேர் வருவார்கள் என அவர்களுக்கு தெரியும்
மிக மிக குழப்பமான கேள்வி அன்றைய நீதிமன்றம் ஏன் தீர்ப்பை மேலும் மேலும் தள்ளிவைத்தது என்பது, டிசம்பர் 6ம் தெதியினை தவிர்க்கும் முழு பொறுப்பும் அவர்களிடமே இருந்தது ஆனால் நீதிமன்ற தாமதம் அதுவும் 1949ல் பதியாப்ட்ட வழக்குக்கு 40 வருட காலம் என்றால் எங்கோ குழப்பம் இருந்திருக்கின்றது
அந்த குழப்பம் பெரிதாகி அது மகக்ளின் உணார்வாகி அந்த உணர்வினை சரியான முறையில் தீர்க்க தெரியாத அரசுகளின் குழப்பம் அந்த கட்டடத்தின் வீழ்ச்சிக்கு காரணமானது
நிச்சயம் அது பாபர் கால கட்டடம் அல்ல, அதை அவுரங்சீப் பெரிதாக கட்டினான் பின்னாளில் பிரிட்டிஷார் காலத்திலே அது இடிக்கபட்டு பின் பிரிட்டிஷார் கட்டிய கட்டடம்
அனுதினமும் தொழுகை நடந்த இடமும் அல்ல, அது மூடபட்டேதான் கிடந்தது
500 வருட புயல் வேகமாக தாக்கியது, உள்ளே 1949ல் வைக்கபட்ட பாலராமர் சிலைகளை மட்டும் பூஸாரி பத்திர்மாக மீட்டு கொண்டுவந்தார் வேறேதும் மிஞ்சவில்லை
சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட பெரும் திருப்பமாக காந்தி மரணம், இந்திரா மரணம், ராஜிவ் மரணம் போன்ற அதிர்ச்சிக்கு பின் பெரும் அதிர்ச்சியாக அது அமைந்தது
மக்களின் உணர்வுகளோடு விளையாடுதல் எனப்து கூடாது, தேசபிரிவினையில் காந்தி அந்த சவாலை எடுத்தார்
சீக்கியர்களிடம் இந்திரா எடுத்தார், ராஜிவின் அனுபவமின்மை அவரை குழப்பியது
அயோத்தியில் இந்துக்களுக்காக இஸ்லாமியரை பின் இஸ்லாமியருக்காக இந்துக்களையும் பகைத்த ராஜிவ் இலங்கையிலும் சிங்களர் தமிழர் என இரு தரப்பின் பழிக்கும் ஆளாயினார், அரசியல் அவருக்கு வரவில்லை
இந்த வரிசையில் அந்த சம்பவமும் நடந்தது, இடிபாடுகள் மிஞ்சின
அது அப்படி நடந்திருக்க கூடாதுதான், ஆனால் அப்படி ஒரு நிலையினை உருவாக்கிவிட்டார்கள காங்கிரசார், அவர்களை தொடர்ந்து வந்தவர்களும் அதே தவறை செய்தார்கள் 1949லே முடிந்திருக்கவெண்டிய சிக்கலுக்கு பின்னாளில் பெரும் விலை கொடுக்கவேண்டியதாய் போயிற்று
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம் போல அமைதியாக முடிந்திருக்கவேண்டிய சிக்கல் அது, அத்வாணியின் ரதயாத்திரையும் அதை இலக்காக கொண்டுதான் தொடங்கபட்டது
வரலாற்றில் சோம்நாத் ஆலயத்தை 1949ல் மீளகட்டபடும்போதும் இதேசாயல் சிக்கல் வந்திருப்பதை கானமுடியும் ஆனால் பட்டேலின் சாதுர்யமான நடவடிக்கையும் மிக சரியான அணுகுமுறைகளும் அங்கே குழப்பம் வராமல் கட்ட வழிசெய்தன
இங்கே அபபடி அல்ல எளிதாக முடிந்திருக்கவேண்டிய விவகாரத்தை நேரு இழுத்து அவர் வழியில் காங்கிரசார் இழுத்து பின் மாகாண கட்சி முலாயமின் அரசியல் கணக்கு வந்து எல்லாமே குழப்பமாகி குழப்பத்திலே முடிந்தது
இன்னும் கம்யூனிஸ்டுகள், காங்கிரசார் இன்னும் லல்லு முலாயம் என ஆளாளுக்கு குழப்பியதில் பின்னாளில் நரசிம்மராவ் காட்டிய அமைதியிலும் நீதிமன்ற இழுத்தடிப்பிலும் எல்லாமே மாறிபோனது
குவிந்து கிடந்த இடிபாடுகளின் ஓரம் வழக்கம்போல் குடிலில் ராமரை வைத்து வழிபட தொடங்கினார்கள் இந்துக்கள்
(தொடரும்.)