அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 12 /21

சுதந்திர இந்திய காலப்போராட்டம். 1992 – 2002

நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில் டிசம்பர் 6, 1992ம் ஆண்டு அந்த அயோத்தி பள்ளிவாசல் கரசேவர்களால் அகற்றபட்டபின் எல்லோரும் நினைப்பது போல உடனே கோவில் வந்துவிடவில்லை

ஒருவகையில் அதன் பின்புதான் முக்கிய போராட்டமே வந்தது, நீதிமன்றத்தில் வாதமும் அதன் தீர்ப்புமே இனி கோவிலை தீர்மானிக்கும் எனும் அதிமுக்கிய நிலை வந்தது

இந்துக்களின் 500 வருட போராட்டம் ஒருவகையில் பரிதாப நிலையினை எட்டியது, வழக்கு தோற்றுவிட்டால் மறுபடி பிரிட்டிசார் பாணியில் பள்ளிவாசல் மீண்டும் எழுப்படும் என்பதுதான் நிலமை

அப்படி ஆகியிருந்தது நிலமை, இந்துக்களுக்கு ஆதரவாக உலகில் ஒரு நாடும் இந்து நாடாக கிடையாது, அரசியல் பலம் கிடையாது, வல்லரசுகளின் கருணை யூதர்களுக்கு கிடைப்பதுபோல் இந்துக்களுக்கு கிடையாது

இன்னும் கொஞ்சம் பரிதாபமாக சொல்லபோனால் மொகலாயர் காலத்திலாவது இந்து அரசுகள் என இருந்த இந்து பலம் சுதந்திர இந்தியாவில் இல்லை

இருந்த இந்து அரசர்களையும் இந்திராகாந்தி அகற்றி முடித்திருந்தார், சுதந்திர மக்களாட்சி எனும் நாட்டில் இந்துக்களுக்கு எதுவுமில்லை காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் இவர்கள் ஆதரவில் சிறுபான்மைகளுமே அதிக செல்வாக்கை கொண்டிருந்தார்கள்

நிலமை அவுரங்கசீப் காலம் போலத்தான் இருந்தது

1990களில் ஒரு அரசியல் மாறுதல் என்னவென்றால் எப்போதுமே இந்தியா எனும் பெரும் மக்களாட்சி நாட்டில், மக்கள் வாக்களித்துத்தான் ஆட்சியினை தேர்ந்தெடுக்கும் நாட்டில் வல்லரசுகள் செய்யும் குழப்பம் உண்டு

அது 1986 வரை இருந்தது , ஆழமாக கவனித்தால் சோவியத் ரஷ்யா சிதறும் வரை இங்கே காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் அசைக்கமுடியா சக்தியாக இருந்தார்கள்

இன்னும் சிலவல்லரசுகள் பல குழப்பங்களை இன்னொரு வகையில் செய்தன, இதையெல்லாம் எப்படி வல்லரசுகள் இயக்கம், சித்தாந்தம், கல்விமுறை, அரசியல் , இன மொழி சமத்துவம் என செய்வார்கள் என்பது தெரியாது ஆனால் செய்தார்கள்

சோவியத் சிதறியதும் இங்கே அரசியல் நிலைதன்மை மாறியது , அப்படி பெரிய பெரும்பான்மை இல்லா நிலையில்தான் நரசிம்மராவும் இருந்தார்

எல்லா வல்லரசுகளுக்குமே மதங்கள் மேல் கண் உண்டு, மதம் என்பது எளிதில் அரசியலாகும் மதங்களின் நிலைப்பாடும் ஆதரவும் தேச அரசியலை மாற்றும்

சீனா இன்னும் பவுத்த தலாய்லாமாவினை விரட்டி கொண்டிருப்பதும் முன்பு சோவியத் போப்பை விரட்டியதும் அப்படித்தான்

அராபியாவில் அமெரிக்கா இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் பஞ்சாயத்து செய்வதும், இலங்கை பர்மா என பலநாடுகளின் தலைவிதி நிர்ணயம் செய்யபடுவதும் மதத்தில்தான்

இதனாலே இந்தியா எனும் பெரும் மக்களாட்சி நாட்டில் இந்துமதம் எழும்ப கூடாது அது எழும்பினால் இந்திய அரசியலே மாறும் என பல நாடுகள் கவனமாய் இருந்தன‌

அதனாலேதான் இந்தியா இந்துநாடாகவுமில்லை, இந்துக்கள் ஒரு ஆலயத்தை மீட்க கூட போராடவேண்டி இருந்தது, அங்கே அந்நிய சதிகளும் இருந்தன‌

சோவியத் இருந்தவரை இந்தியா அவர்களின் மறைமுக தேசமாக ஒரே வலுவான தலமை, நேரு இந்திரா என இருந்தது அது சிதறியதும் குழப்பம் வந்தது

இனி இந்தியாவினை ஆள யாருமில்லை அதனால் குழப்பி போட்டு உடைக்கலாம் என சில சக்திகள் முயன்றன, சில தங்கள் கட்டுபாட்டில் எடுக்க காலம்பார்த்தன‌

இக்காலகட்டத்தில்தான் பள்ளிவாசல் அகற்றபட்டது, இந்துக்களுக்கு தங்கள் எதிரி யார் என தெரியா அளவு குழப்பம் உண்டாயிற்று

காந்தி கொலையினை வைத்து எப்படி இந்து எழுச்சி ஒடுக்கபட்டதோ அப்படி அயோத்தி பள்ளிவாசலை முன்னிட்டு பெரும் திட்டம் உருவாகி இந்து எழுச்சியினை அடக்கி இனி ராமர்கோவில் பற்றியே யாரும் சிந்திக்க கூடாது என சில சதிகள் உருவாயின‌

(மும்பை கலவரம், இன்னும் பல இடங்களில் இந்த சம்பவத்தை முன்னிட்டு கல்வரங்கள் நடந்தன, பெரும் மோதல் வந்தது, பின் தாவுத் கும்பல் பாகிஸ்தான் ஆதரவுடன் குண்டுவெடிப்பெல்லாம் நிகழ்த்தி பெரும் களபேரம் செய்த கொடுமை எல்லாம் நடந்தது)

டிசம்பர் 6 சம்பவத்துக்கு பின் காட்சிகள் அதை நோக்கி நகர்ந்தன , சம்பவம் நடந்தபின் சட்டத்துக்கு உட்பட்டு உத்திரபிரதேச முதல்வர் ராஜினாமா செய்தார், அந்த அயோத்தி வளாகம் மத்திய கட்டுபாட்டு படையினரால் சூழபட்டது

அடுத்த பத்தாம் நாள், ஒரு விசாரணை கமிஷன் மத்திய அரசால் அமைக்கபட்டு நீதிபதி லிபர்ஹான் தலமையில் அமைக்கபட்டு, மூன்றுமாதத்தில் முடிவு தெரிக்கவேண்டும் என உத்தரவும் இடபட்டது

நீதிபதி லிபர்ஹான் விச்சாரணையினை தொடங்கினார்

இந்நிலையில் 1993 ஜனவரியில் நரசிம்மராவ் அரசு ஒரு முடிவுக்கு வந்தது, நீதிபதி லிபர்ஹான் விசாரணை ஒருபக்கம் நடக்கட்டும் அது யார் இடித்தார்கள் எனும் விசாரணை அது நடக்கட்டும்

அதே நேரம் 1990ல் விபி சிங் அரசினால் ஏற்றுகொள்ளபட்டதும் அதாவது துக்ளக் குருமூர்த்தி போன்றோர் கலந்துகொண்டு ஏற்றுகொண்டத்மான‌ சட்டத்தை பின் முலாயம் சிங் யாதவினால் எதிர்க்கபட்டு திரும்பபெற பட்டதுமான‌ அந்த சட்டத்தை இனி நடைமுறைபடுத்தலாம் என நரசிம்மராவ் இறங்கி வந்தார்

அப்போது ஓரளவு பெரும்பான்மையினை காங்கிரஸ் கொண்டிருந்ததால் கூட்டணிகள் இல்லை அதனால் சிக்கல் இல்லை

(இக்கால கட்டத்தில் காங்கிரசில் நேரு குடும்பம் செல்வாக்காக இல்லை, இருந்திருந்தால் இதுவும் நடந்திருக்காது

ஆனால் இங்கிருந்துதான் நரசிம்மராவ் சோனியா மோதல்கள் தொடங்கின, அது நரசிம்மராவின் இறுதிசடங்கு வரை தெரிந்தது)

1993 ஜனவரியில் மொத்த இடத்தையும் சுமார் 68 ஏக்கர் நிலத்தையும் மத்திய அரசு தன் கட்டுபாட்டில் கொண்டு வந்தது அது (Ayodhya Act 1993) என அழைக்கபட்டது

இச்சட்டபடி சர்ச்சைகுரிய இடம் அதாவது ராமன் பிறந்த இட ஆலயத்தின் மேல் பள்ளிவாசல் இருந்தது என பெரும் மோதல் இருந்த அந்த ஓரிரு ஏக்கர் நிலம் தவிர மீதி இந்துக்களுக்கு உண்டு அங்கே ஆலயம் கட்டலாம்

ஆனால் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அமைதிதான் எல்லா தரப்பும் காக்கவேண்டும் அதுதான் இந்திய நடைமுறை

ஒருவேளை கரசேவை ஆரம்பிக்கும் முன்பே இந்த சட்டத்தை நரசிம்மராவ் அமல்படுத்தியிருந்தால் அந்த மோதலும் கட்டட அகற்றலும் நடந்திருக்காது, ஏன் நரசிம்மராவ் எல்லாம் முடிந்தபின் வந்தார் என்பதற்கு சரியான பதில் எங்குமில்லை

பள்ளிவாசல் கட்டடம் அகற்றபட காரணம் யார் என நீதிபதி விசாரிக்க்கும் போதே, நரசிம்மராவ் கொண்டு வந்த (Ayodhya Act 1993) சட்டம் செல்லாது என இஸ்மாயில் பாரூக் உச்சநீதிமன்றம் சென்றார்

இந்த வளாக வழக்கு உச்சநீதிமன்றத்தை தொட்டது அதுதான் முதல்முறை, ஆனால் இது அரசு முடிவு செல்லுமா இல்லையா எனும் வழக்கு மற்றபடி கோவில் பள்ளிவாசல் சிக்கல் அல்ல‌

நீதிமன்றம் மிக முக்கிய தீர்ப்பை சொன்னது, அது 1994ல் சொன்னது, பின்னாளில் ராமர் ஆலயம் அமைய அந்த நீதிபதி சொன்ன வாசகமும் முக்கியம்

“பள்ளிவாசலில்தான் தான் தொழுகை செய்ய வேண்டும் என இஸ்லாத்தில் கட்டாயம் இல்லை. மேலும் தொழுகை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். இதனால் தொழுகைக்கு தடை என்பது சரியல்ல அரசின் முடிவு சரியானது”

நீதிமன்றம் லிபர்கான் கமிட்டி விசாரணை முடிவுக்கு காத்திருந்தது, அது நீண்டு கொண்டே சென்றது, இடையில் ராஜிவ் கொலை விசாரணை, பள்ளிவாசல் அகற்றபட்டபின் ஏற்பட்ட கலவரம், குண்டுவெடிப்பு என பல சிக்கல்களை தேசம் கடந்துசென்றபோது கொஞ்சம் சுணக்கம் வந்தது

பின் அரசியல் நிலையற்ற தன்மை இருந்த 1997ல் ஒருவழியாக 49 தலைவர்கள் மேல் குற்றம்சாட்டபட்டது

கல்யாண்சிங், அத்வாணி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி என 49 பேர் குற்றவாளி என குற்றம்சாட்டபட்டு விசாரணை நடந்தது

அதற்காக இவர்கள்தான் கடப்பாரை தூக்கி இடித்தார்கள் என்பதல்ல, அந்த கூட்டத்தில் உரையாற்றி மக்களை தூண்டிவிட்டார்கள் , ஆள் திரட்டினார்கள் , சதி செய்தார்கள் என பல பிரிவுகளில் வழக்கு பதியபட்டது

நிலையற்ற அரசுகள் வந்து சென்றன, தேர்தல்கள் அடிக்கடி நடந்தன, ஜெயலலிதா கூட வாஜ்பாய் அரசினை கவிழ்த்தார், பல தேர்தலுக்கு பின் வாஜ்பாய்க்கு வாய்ப்பு கூடிற்று

ஆனால் ஜெயலலிதாவினை அவர்கள் நம்பவில்லை மாறாக வாய்ப்பினை கருணாநிதி பயன்படுத்தி புகுந்துகொண்டார், அங்கு அவர் இட்ட நிபந்தனை ராமர் கோவிலை தொட்டால் ஆதரவினை வாபஸ் பெறுவோம் என்பது

பாஜக அமைத்த முதல் அரசு அது, இன்னும் அரசியல் பார்வையில் சொல்லபோனால் அந்த டிசம்பர் 6 சம்பவத்துக்கு பின்புதான் மக்கள் அவர்களை நம்ப தொடங்கினார்கள் எனினும் பெரும்பான்மை இல்லை ஆனால் பெரிதாக வளர்ந்திருந்தார்கள், கூட்டணி ஆட்சி நடந்தது

கார்கில் போர், பாராளுமன்ற தாக்குதல், இன்னும் மதமாற்றிகளை எரித்த விவகாரம் இன்னும் பல சிக்கல்கள் வாஜ்பாய்க்கு வந்தன‌

அது மதவாத அரசு பலனற்ற அரசு பலவீனமான அரசு என காட்ட பெரும் முயற்சிகள் சதிகள் நடந்தன, ஆனால் வாஜ்பாய் அதையெல்லாம் தாண்டி வந்தார்

2002ல் மீண்டும் பேச்சுவார்த்தையில் பாஜக அரசு இறங்க நினைத்தது

வாஜ்பாய் மத குருமார்களிடம் ஒரு கோரிக்கை வைத்தார். யாராவது முன் வந்து இங்கு பிரிந்து கிடக்கும் எல்லோரிடமும் பேசி ஓன்று சேர்க்க.முயலுங்கள் என அயோத்தி ஆலயம் எழ அழைப்பு விடுத்தார்

அப்பொழுது ராமருக்காக அந்த பொறுப்பை ஏற்க முன் வந்தார் காஞ்சி காமகோடி பீட 69வது மடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்த்ர சரஸுவதி ஸ்வாமிகள்.

டில்லியில் வந்து பல முறை ஹிந்து, முஸ்லிம் தரப்பிடம் (அதிலாபாத், பைசாபாத், வாரணாசி ஜமாத் தலைவர்களும் அடக்கம்) பேசி புரிய வைத்து பெரும் பங்காற்றினார். இதில் பாபரி மஸ்ஜித் குழுவின் தலைவர் சஹாபுதினும் அடக்கம்.

முஸ்லிம் தரப்பு ஒரு கட்டத்தில் அலரை முழுக்க நம்பினர். அரசியல்வாதிகளை நம்ப மாட்டோம். ஆனால் நீங்கள் என்ன சொன்னாலும் கட்டுப்படுகிறோம் என்றனர்.

எல்லாம் சுமூகமாக மூடிய வேண்டிய தருணத்தில் மறுபடி சில விஷமிகளால் விஷயம் கலைக்கப்பட்டது.

மறுபடி பதற்றம் தொற்றிகொண்டது

இக்காலகட்டங்களில் சர்ச்சைகுரிய கொஞ்ச இடம்தான் அரசின் கட்டுபாட்டில் இருந்ததே தவிர இந்துக்கள் பாலராமனை வைத்து வழிபடும் இடத்துக்கு தடை ஏதுமில்லை, இடிபாடிகள் நடுவே அவர் குடிசை போட்டு வைக்கபட்டு வழிபாடுகள் தொடர்ந்தன‌

நாடெங்கும் இருந்து இந்துக்கள் செல்வதும் வழிபடுவதும் அனுமன் கத்தி கோவில் முன் மேடைகட்டி ராமன் புகழைபாடுவதும் நடந்துகொண்டேதான் இருந்தது

எப்படியும் கோவில் வரும் இனி வந்தாக வேண்டும் எனும் பெரும் எழுச்சி வந்துகொண்டிருந்தது, நரசிம்மராவ் கால ஒப்பந்தப்படியாவது கோவில் கட்டவேண்டும் என சில குரல்களும், அந்த கருவறை இருந்த இடம் மத்திய அரசிடம் இருக்கின்றது அதை மீட்டுத்தான் கோவில் கட்டவ்வேண்டும் எனும் குரலும் மாறி மாறி ஒலித்தன‌

இஸ்லாமிய தரப்பும் விடுவதாக இல்லை

இந்துக்கள் நாடெங்கும் இருந்து சென்று அயோத்தி கோவிலுக்கு ஆதரவு கொடுத்துவந்தனர், அப்படி சென்றுவந்த ரயில்களில் ஒன்றுதான் குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் எரிந்தது

கரசேவகர் இருந்த பெட்டி வெளியில் தாளிடபட்டு தீயிடபட்டது, சுமார் 60 பேர் உள்ளே சிக்கினார்கள், அது பெரும்தீயாகி ஏராளமானோர் பலியானார்கள், பெண்கள் குழந்தைகள் அதிகம்

இந்த கொடூரம் குஜராத்தில் கலவரமாய் வெடித்தது, சில நாட்கள் பெரிய களபேரமானது, மாகாண முதல்வர் நரேந்திரமோடி களத்தில் தானே இறங்கி உயிருக்கு அஞ்சாது அதை அடக்கினார்

அப்போது இந்துக்களும் பலியானார்கள் என்பதை மறைத்து மோடிமேல் பெரும் வழக்கும் சதிகளும் வீசபட்டன, பல ஐரோப்பிய நாடுகள் கூட அமெரிக்கா கூட அவருக்கு விசா மறுத்தது

பாபர் காலத்தில் தொடங்கிய இந்துக்கள் சாவு, முலாயம் சிங் காலம் தொடங்கி 2002ல் குஜராத்வரை நீண்டது

அந்த கலவரம் நாடெல்லாம் பரவும் ஆபத்து இருந்தது, 1947 போல் மீண்டும் தேசம் எரியும் சதி இருந்தது ஆனால் பாஜக அதனை திறமையாக கையாண்டு ஆபத்தை களைந்தது

இந்த சம்பவத்துக்கு பின் அந்த சர்ச்சைகுரியநிலம் அதவாது கருவறை இருந்த இடம் பின் பள்ளிவாசலான இடம் யாருக்கு என்பதில் நீதிமன்ற கதவை தட்டினார்கள், அலஹாபாத் நீதிமன்றம் விசாரணையினை தொடங்கிற்று

இங்கே உண்மையில் விசாரணை அவசியமே இல்லாதது, பாபர் எங்கிருந்தோ 15ம் நூற்றாண்டில் வந்தவன், அவனுக்கு முன்பே பெரும் இந்து ஆலயம் அயோத்தியில் ராமனுக்கு இருந்தது

எங்கிருந்தோ வந்த பாபர் கட்டடம் கட்டிய இடம் யாருக்கு என்பது அர்த்தமற்ற வாதம்

ஆனால் இங்கே காங்கிரசார் கம்யூனிஸ்டுகளெல்லாம் சக்தியான ஊடகம் வைத்திருந்தார்கள், பல பிடிகளை வைத்திருந்தார்கள், அந்நிய நாட்டு சக்திகளும் பல வடிவில் நின்றன‌

அவை சொன்ன வாதம் என்னவென்றால் பழையது எப்படியும் போகட்டும் 1947க்க்கு பின் வந்த சட்டபடிதான் இந்த பிரச்ச்சினையினை அணுகவேண்டும்

ஆயிரம் வருடம் அடிமைதனம் இருந்த நாட்டில், 500 வருட போராட்டம் இருந்த பூமியில் 50 வருடத்துக்கு முன்வந்த சட்டபடிதான் தீர்ப்பு சொல்லவேண்டும் என்பது சரியல்லதான்

ஆனால் இந்துக்கள் நிலை அவ்வளவு பலவீனமாக இருந்தது, ஏற்றுத்தான் ஆகவேண்டும் வேறு யாரும் உலகில் ஆதரவாக வரவே மாட்டார்கள், குஜராத் கலவரத்துக்கே மோடிக்கு விசா மறுத்த உலகமாக அது இருந்தது

பாபர் காலத்தில் தொடங்கிய வாள்முனை போராட்டம் முடிந்து, பிரிட்டிசார் காலத்தில் தொடங்கிய அஹிம்சா போராட்டம் முடிந்து இப்போது சொந்த சுதந்திர நாட்டில் வாய்மட்டும் பேசும் அவல நிலையில் கைகள் கட்டபட்ட நிலையில் இந்துக்கள் வாதாட வந்தார்கள்

அவர்களின் கடைசி நம்பிக்கை இதுதான், கவனிக்கவேண்டிய விஷயம் வழக்கு தோற்றால் மறுபடி பள்ளிவாசல்தான் எழும்பும்

(தொடரும்..)