அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 13 /21
சுதந்திர இந்திய காலப்போராட்டம், நீதிமன்ற விசாரணை 2003 – 2010
ராமர்கோவில் அயோத்தியில் மீண்டதில் இந்த நீதிமன்ற காட்சி மகா முக்கியமானது, எவ்வளவு போலியான சதிகளை எதிரிகள் செய்தார்கள் என்பதையும் அது இந்துக்களின் தர்மத்தால் எப்படி உடைந்தது என்பதையும் இந்த காட்சிதான் காட்டிற்று
அலகாபாத் நீதிமன்றம் 2002ம் ஆண்டு அக்டோபர் வாக்கிவ் விசாரணையினை தொடங்கிற்று, பள்ளிவாசல் தரப்பில் ஆறு முக்கிய நபர்கள் சாட்சியாக சேர்க்கபட்டார்கள்
சூராஜ் பான் எனும் அகழாய்வு அதிகாரி, ஆர்.எஸ் ஷர்மா எனும் டெல்லி பல்கலைகழ பேராசியர் மற்றும் ஆய்வாளர், , டி.என் ஜா எனும் டெல்லி பல்கலைகழக ஆய்வாளர், ரோமிலா தாப்பர் எனும் நேரு பல்கலைகழக பேராசிரியர், இர்பான் ஹபிப் எனும் அலிகார் இஸ்லாமிய பல்கலைகழக ஆசிரியர், அதார் அலி எனும் அலிகார் பல்கலைகழக பேராசியர்
இவர்கள் 6 பேர் முக்கிய சாட்சிகள், மீதி சாட்சி சொன்னவர்களெல்லாம் இவர்களின் மாணவர்கள்
தமிழ்நாட்டு திராவிட கருப்பு சட்டை கோஷ்டிகள், ராமாயணத்தை ஆய்வு செய்து நூல் எழுதியவர்கள் ராவண கோஷ்டிகளெல்லாம் இப்பக்கமே வரவில்லை, வந்தால் என்னாகும் என்பது தெரியும்
அதாவது வந்தால் அவர்கள் சொன்னது எல்லாம் பொய் என தெரியும் என்பதால் அப்படியே அமைதியானார்கள், இந்துக்களை அவமதித்தே வளர்ந்த கருணாநிதி கூட அவரின் கூட்டாளி வீரமணி கூட ராமாயணம் பொய் என கிளம்பவே இல்லை
அல்லது இவர்களை யாரும் தேடகூட இல்லை, சிரித்தபடி விட்டுவிட்டார்கள்
உண்மையில் பள்ளிவாசல் தரப்பின் நிலை பலவீனமாந்துதான் , உருப்படியான ஆதாரமோ தரவோ இல்லை, ஆனால் தங்களின் மனித உரிமை, மதசார்பின்மை, மதவாத பாஜக எனும் முழக்கம், நாட்டிலும் உலகிலும் இருக்கும் வலுவான ஊடகபலம் வெற்றிபெற்றுதரும் என நம்பினார்கள்
விசாரணை தொடங்கபட்டபின்புதான் இவர்களின் பொய்கள் எவ்வளவுக்கு வேர்கள் இல்லாதவை, இடையில் சொருகபட்ட கால்டுவெல் பொய்களை போன்றவை என்பது எல்லோருக்கும் புரிந்தது
நீதிபதிகளே இவர்களை நோக்கி கடுப்பானர்கள்
அவ்வளவுக்கு எதிர்தரப்பு குழப்பியது, முதல் முக்கிய சாட்சி தன் வாக்குமூலத்தில் ” “மொகலாயர்கள் கோவில்களை இடித்து மசூதி கட்டியது பற்றி படித்ததில்லை. அது சம்பந்தமான எந்த ஆவணமும் (பாபர் நாமா) தான் படித்த தில்லை.செய்திகளில் படித்த தை வைத்து எனது எண்ணத்தை கூறுகிறேன்” என்றெல்லாம் சாட்சிகள் வந்தபோது நீதிபதிகள் முறைத்தார்கள்
எதுவுமே ஆதாரமற்ற தரவுகள், எல்லாமே அரைகுறைகள் யாரிடமும் உண்மையில்லை குறுக்கு விசாரணையில் மாட்டினார்கள்
ஒரு கட்டத்தில் நீதிமன்றமே இவ்வளவு sensitive case ல இப்படி அலட்சியமா, சமூக அக்கறை கொஞ்சம் கூட இல்லாம எப்படி சாட்சி சொல்ல வந்தீர்களா?. சமூகத்துல் இணக்கம் ஏற்படுத்தாமல் கலகம் செய்வதுதான் உங்கள் திட்டமா? என கடிந்துகொண்ட சம்பவமும் நடந்தது
இரண்டாம் சாட்சி அடுத்து குழப்பியது, அவர் வரலாற்று & சம்ஸ்கிருத படித்த பல்கலைக்கழக ஆசிரியர். அவர் சொன்னார்
“பாபர் மசூதி மீர் பாக்கி கட்டியதை படித்திருக்கிறேன், ஆனால் அங்கு கோவில் எதுவும் இடிக்கப்பட்டதாக படித்த தில்லை. அங்கு கோவில் இருந்ததற்கான தடயம் ஏதும் இல்லை”
ஆனால் குறுக்கு விசாரனையில் சிக்கினார் “ராஜா ப்ரித்வி ராஜ் சௌஹான் ஒரு அப்கானியர். கோரி அதற்கு அருகில் ஆண்ட ராஜா. ஜிஸியா என்றால் என்ன தெரியாது. ஹிந்துக்கள் மேல் மட்டும் அந்த வரி போடப்படவில்லை. பாபர் மசூதி பற்றி எந்த புத்தகம், ஆவணம் படித்தேன் என்பது இப்போது நினைவில் இல்லை. “
நீதிமன்றம் இந்த சாட்சியை நம்பகத்தன்மையற்றது, எனவே செல்லாது என விலக்கியது.
இப்படி செல்லாத சாட்சிகள் வந்து குழப்பி நீதிமன்றம் கண்டித்தாலும் வழக்கு தாமதமானது, எதிரிகளின் திட்டமே அதுதான்
அடுத்து மூன்றாவது சாட்சி. வரலாற்று பிஹெச்டி மாணவியாக வந்து சொன்னது, “கோவில் எதுவும் இடிக்கப்பட்டதாக படித்த தில்லை. மசூதி கட்டப்பட்டதை படித்திருக்கிறேன். அங்கு மூன்று பாகங்களாக உள்ள ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது” என்றார்
ஆனால் ஆதாரமாக எதையும் காட்டவில்லை இதைக் கேட்டவுடன் நீதிபதி இவருக்கு ஒன்றுமே தெரியவில்லை, சாட்சி செல்லாது எச்சரித்து அனுப்பினார்
அடுத்து ஒரு ஒரு வரலாற்று மாணவன்.11 வருடங்களில் பிஹெச்டி முடித்தவன் சாட்சி சொன்னான்.
“எனது ஆராய்ச்சியில் கோவில் எதுவும் இடிக்கப்பட்டதாக அதன் மீது மசூதி கட்டப்பட்டதற்கு ஒரு சான்றும் இல்லை”
ஆனால் அவன் குறுக்கு விசாரணையில் திணறி முகமூடி கழற்றி பல்லிளித்தான் “எனக்கு பெர்ஷியன், அரபி, சம்ஸ்கிருதம் எந்த மொழியும் தெரியாது. ஆராய்ச்சியின் போது எனது மாமனார் தான் இதெல்லாம் படித்து அர்த்தம் சொல்லி உதவினார். மசூதியில் கண்டிபிடிக்கப்பட்ட கல்வெட்டு எந்த மொழி எனத் தெரியாது. எனக்கு கல்வெட்டு ஆராய்ச்சி தெரியாது”
இப்படி சொன்னவர்கள் யாரென கவனியுங்கள், டெல்லி பல்கலைகழக, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மாணவர்களும் பேராசியர்களும் என்றால் அங்கிருக்கும் நிலமையினை கணிப்பது கடினமல்ல
இதுதான் இப்படிபட்ட கும்பலால்தான் அந்த பல்கலைகழகம் நாசமானது, எல்லாமே சோவியத் பிடியில் இந்தியா இருந்தபோது இடதுசாரிகள் நிரம்பிய காலங்களில் வந்தது
இந்திராவும் நேருவும் நாட்டுக்கு என்ன செய்தார்கள் என சொல்பவர்கள், இப்படி இடதுசாரிகளிடம் கல்வி பத்திரிகை, சித்தாந்த குளறுபடி என குழப்பி வைத்ததை சொல்லவே மாட்டார்கள்
எதிர்சக்திகள் இந்திய சித்தாந்தத்தை உடைக்க எண்ணின, இந்துமதம் என ஒன்றை இல்லாமல் செய்துவிட்டால் இந்தியா எதிர்காலத்தில் உடையும் என்பதை கணக்கிட்டன
இந்துமதம், இந்தி, என எதெல்லாம் தேசத்தை இணக்குமோ அதையெல்லாம் சாதி,மொழி உணர்வு அது இது என உடைத்துபோடும் சதி விதைக்கபட்டது
காங்கிரஸ் இதை பலலண்டுகாலம் அனுமதித்தது, அந்த குழப்பவாத கோஷ்டிகளின் அறியாமைதான் நீதிமன்றத்தில் தோற்று கொண்டிருந்தன
இந்துக்கள் தரப்பு நீதிமன்றத்தில் மிக சிறப்பாக தங்கள் உண்மைகளை ஆதாரத்தோடு காட்டியது
காரணம் இடதுசாரிகள் 1990ல்தான் தயரானார்கள், இந்துக்கள் 1857லே அதாவது பிரிட்டிசார் காலத்திலே ஆதாரம் திரட்டி வைக்க தொடங்கினார்கள், காலம் மாறுகின்றது என்றேனும் ஒருநாள் நீதிமன்றத்தில் ராம்ர்கோவிலுக்கு வாதாடும் காலம் வரும் என கவனமாக ஒவ்வொரு உண்மையும் ஆவணமாக வைத்திருந்தார்கள்
அது கைகொடுத்தது, ஒவ்வொரு இந்துவின் போராட்டமும் அவர்கள் இல்லை என்றாலும் அவர்கள் திரட்டி தந்த ஆதாரமாக வலுசேர்த்தது
ராம்ர் கோவிலுக்காக விஹெச்பி மற்றும் நிர்மோஹி அக்கரா (ராமர் கோவில் அமைப்பு) சார்பாக சாட்சியாக நின்றவர்கள் எஸ். பி குப்தா எனும் அகழாய்வு அதிகாரி. தேவேந்த்ர ஸ்வரூப் எனும் வரலாற்று எழுத்தாளர், பி ஆர் க்ரோவர் எனும் வரலாற்று பேராசிரியர் அவர் மொகலாயர் மற்றும் பிரிட்டிஷார் கால ஆவணங்களோடு வந்தார், இன்னும் ஹர்ஷ் நாராயண் எனும் வரலாற்று பேராசிரியர், பெர்ஷிய மொழி புத்தகங்களை மொழிபெயர்த்து உதவியவர் இவர்தான்
இந்த சாட்சிகள் சரியாக ஆதாரங்களை கொடுத்தன, மிக சரியாக பிரிட்டிஷாரின் ஆங்கில நூலை புரட்டு நூலை கொடுக்காமல் அக்காலத்தில் பெர்ஷிய மொழியில் அதாவது மொகலாயர் காலத்து நூல்களை அவர்கள் மொழியிலே ஆதாரமாக கொடுத்தார்கள்
அதில் பாபர் எழுதிய சுயசரிதை “பாபர் நாமா” முக்கியமனாது, அதை கொடுத்து அந்நூலில் கோவில் இடிக்க உத்தரவு இட்டதை சுட்டி காட்டினார். ஔரங்கசீப் பேத்தி எழுதிய புத்தகத்தில் கோவிலை இடித்து மசூதி கட்டியதாக இருந்த குறிப்பையும் அவன் அரசவை நூலையும் காட்டினாரகள்
இன்னும் எஸ். பி குப்தா அகழ்வாராய்ச்சி ஆதாரங்களை தந்தார். 1975-76 களில் செய்த அகழ்வாராய்ச்சியில் கோவில் தூண்கள் இருந்த ஆதாரத்தை கொடுத்தார். அந்த தூண்கள் இந்து சிற்பங்களும் ராம கதை விளக்கமும் கொண்டதாய் இருந்தது
அப்போது வேதனையுடன் இன்னொரு விஷயத்தை சொன்னார் பி.பி லால், தாங்கள் அகழாய்வு செய்தது பள்ளிவாசலின் வெளிப்பகுதி மட்டுமே உள்ளே அகழாய்வு செய்ய்முன் உத்தரவு வந்து தடுக்கபட்டோம் இதனல் முக்கிய பகுதியின் அடியில் என்ன உண்டு என்பது எங்களுக்கே தெரியாது, அகழ உத்தரவிட்டால் ஆய்வு செய்து சொல்கின்றோம்”
இங்கேதான் வரலாறு இந்துக்கள் பக்கம் சரிந்தது, பதற்றத்தின் உச்சியில் பொய்யான இடதுசாரி காங்கிரஸ் பிரிட்டிசார் சொன்னதை நம்பி மோதிகொண்டிருந்த இஸ்லாமியர்கள் மிகுந்த நம்பிக்கையில் உறுதி அளித்து சொன்னார்கள்
நீதிபதிகள் முன் இடதுசாரிகள், பிரிட்டிசார் பொய்யினை நம்பி வாக்களித்தனர்
“நாங்கள் உறுதியாக சொல்கின்றோம் கோவிலை இடித்து மசூதி கட்டப்படவில்லை. வெறும் நிலத்தில் தான் வந்தது. எனவே மசூதிக்கு கீழே கோவில் இருந்த து கண்டுபிடிக்கப்பட்டால் நாங்கள் கோவிலுக்கே நிலத்தை விட்டுக்கொடுக்கிறோம்”
இங்கேதான் அவர்களை அறியாமலே விழுந்தார்கள் அல்லது ஒரு சக்தி விழவைத்தது, நீதிமன்ற ஆவணம் என்பது மாற்றமுடியாதது அப்படி இவர்கள் சொன்னதும் ஆவணமானது
அதன்படி 2003ம் ஆண்டு பேரில் அலஹாபாத் நீதிமன்றம் மீண்டும் மொத்த இடத்தையும் அகழ்வாராய அனுமதி அளித்தது.
1975க்கு பின் 2003ம் ஆண்டு அகழ்வாராய்ச்சி இரண்டாம் முறை தொடங்கியது.
இக்கால கட்டத்திலும் விசாரணை தொடர்ந்து நடந்தது, பி ஆர் க்ரோவர் மொகலாய , ஆங்கிலேய கால ஆவணங்களை தந்தார்.
முன்பு ராஜா இரண்டாம் ஜெய்சிங் நவாபிடமிருந்து வாங்கிய நில ஆவணங்கள் காட்டபட்டன, அது ஆங்கிலேய ஆட்சியில் உறுதி செய்யபட்டிருந்தன, அந்த ஆவணத்தில்தான் “ஜென்மஸ்தான பள்ளிவாசல்” எனும் வரி இடம்பெற்றிருந்தது, நிச்சயம் ஜென்ஸ்மஸ்தானம் என்பது பாபரின் ஜென்மஸ்தானமாக இருக்கமுடியாது , இஸ்லாமிய முன்னொடிகளின் ஜென்மஸ்தானமாக இருக்கவே முடியாது
அது ராமனின் ஜென்மஸ்தானம் என்பதை அந்த ஆவணங்களில் இருந்து நீதிமன்றம் ஏற்றுகொண்டது
அப்படியே இந்து தரப்பு கொடுத்த இன்னொரு விஷயம், ஏன் அன்றே வக்ப் வாரியம் அங்கே வவ்ரமுடியாமல் போனது என்பது அதையும் நீதிமன்றம் ஏற்றுகொண்டது, காரணம் அது ஒரு முக்கிய பள்ளிவாசலாக அங்கீகரிக்கபடவில்லை எனும் முக்கிய ஆதாரம் அது
இன்னும் பைசாபாத் நீதிமன்றத்தில் இருந்த ஆவணங்கள் அந்த இடத்தை சொந்தம் கொண்டாடி தொடுத்த பல நீதிமன்ற வழக்குகள், 1882 ரகுபீர் தாஸர் சபூத்ராவில் கோவில் கட்ட அனுமதி கேட்ட வழக்கு என அனைத்தும் ஆவணங்களாக தரப்பட்டது.
அதிமுக்கிய ஆவணம் டிசம்பர் 6, 1992ல் அந்த பள்ளிவாசல் தாக்கபட்டபோது சுவர்கள் இடிக்கபட்டன அப்போதுதான் இந்து கோவில் சுவற்றின் மேல் அது கட்டபட்டது அறியபட்டது அதன்படி உள் சுவரில் பதிக்கப்பட்டிருந்த ஒரு கல்வெட்டு கிடைத்தது. 5 அடிக்கு 2 அடி கொண்ட அந்த கல்வெட்டு சம்ஸ்கிருதத்தில் கோவில் கட்டியதின் முழு விவரமும் 20 வரிகளில் வடிக்கப்பட்டிருந்தது.
அது விஷ்ணு கோவில் என இருந்தது. கே வி ரமேஷ் என்ற கல்வெட்டு நிபுணர் அதை படித்து கொடுத்தார். இது இந்துக்கள் 500 வருடங்களாக தங்கள் இடம் என உரிமை கோரியது முழுக்க உண்மை என்றானது.
இன்னும் புதிய அகழ்வாராய்ச்சி முடிவுகளும் வர தொடங்கின அது நீதிபதிகளே கண்கலங்கி இந்துக்களை நோக்கி பரிதாபத்துகுரிய மக்களே எனும் அளவு உண்மையாக இருந்தன
இவ்வளவு ஆதாரமும் வைத்துகொண்டா ஐநூறு ஆண்டு அபலையாய் இருந்தீர்கள்? என்பதுபோல் அந்த ஆதாரங்கள் கிடைத்தன
அதாவது, பல அடுக்குகளில் கீழே செல்ல செல்ல பல கால கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 12ம் நூற்றாண்டு , 10ம் நூற்றாண்டு, என்று கி.மு 2000 ஆண்டு வரை கோவில்கள் மட்டுமே அந்த இடத்தில் இருந்ததற்கான அடையாளங்களை கண்டனர்.
இந்துக்கள் காரணமின்றி எதுவும் செய்ததில்லை, ஏன் கற்களை வெட்டி பெரும் ஆலயம் செய்தனர், அழியா சிற்பங்களை செய்தனர், பெரும் கல்வெட்டுக்களை வைத்தனர் என்றால் இதற்காகத்தான்
இந்துமதம் ஒரு ஆன்மிகம், அந்த ஆன்மீக நம்பிக்கை வழிவழி வந்தாலும் ஒருகட்டத்தில் ஆதாரமில்லாவிட்டால் அழிக்கபடும் என்பதை பவுத்த சமண காலங்களிலே கண்டிருந்தார்கள்
இதனால் இந்துமதம் இப்படியானது என்பதை சொல்ல கற்களில் அழியா ஆலயம் அமைத்தார்கள், பல இடங்களில் நூல்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள் என பதிந்துவைத்தார்கள்
காலம் மாறி ஆபத்துவந்தாலும் ஆதாரம் வேண்டும் என தீர்க்கமாய் யோசித்த்து வைத்துவிட்டுத்தான் சென்றார்கள்
பாபரும் அவுரஙக்சீப்பும் செய்த தவறு அல்லது இப்படிசெய்தால்தான் இந்துக்களுக்கு வலிக்கும் என செய்த தவறு சுவர்களை இடிக்காமலே மெலே கூடை அமைத்து ஆலயத்தை மசூதியாகியது
இந்த தவறு பிரிட்டிஷ்காரனுக்கும் தெரியும் அதனாலே ஹரப்பா, மொகஞ்சதாரோ, ஆதிச்சநல்லூர் என தோண்டியவன் அயோத்தி, காசி, மதுரா என தோண்டவே இல்லை, தோண்டினால் இந்து எழுச்சிவரும் என்பதால் அமைதிகாத்தான்
அதே அமைதியினை காங்கிரஸ் காட்டமுனைந்தது ஆனால் முன்னோர் விட்டுசென்ற ஆதாரம் வலுத்து நின்று ராமனின் தர்மமாய் ஒளிர்ந்தது
இனியும் என்ன ஆதாரம் வேண்டியிருக்கின்றது என நீதிமன்றம் தீர்ப்பு எழுதமுனைந்தபோது எதிர்தரப்பு இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்பினை ஏற்கமாட்டோம் அவைகளெல்லாம் பொய் என வம்பு செய்ய ஆரம்பித்தது
வழக்கு நீண்டது , வழக்கு இந்துக்களுக்கு சாதகமாக செல்லும் போதும் வெளியே தங்கள் ஊடக பலம், அமைப்பு பலம், கட்சி பலம், இயக்க பலம் ஆகியவற்றால் உண்மைகளை திரித்து சொல்லிகொண்டிருந்தன
கடைசியில் 2010, 30 செப்டம்பரில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பை சொன்னது
“நடந்த அகழ்வாராய்ச்சி முடிவைக்கொண்டு, மசூதி கட்டடம் இருந்த இடம் ராம் லல்லா கர்ப்பக்ரஹம் என்பதால் அது அடங்கிய பகுதி குழந்தை ராமருக்கும்,, மசூதி தரப்பினருக்கு ஒரு பங்கும், இத் தனை நாள் (500 வருடங்களாக) பூஜை செய்த நிர்மோஹி அக்கடா வுக்கு ஒரு பங்கு என 2.77 ஏக்கரை 3 சம பங்காக பிரித்து தீர்ப்பு அளித்தனர்”
பூரண உரிமை இந்துக்களுக்கு இருந்தும் மதசார்பற்ற நாட்டின் சட்ட ஓட்டைகள் அப்படித்தான் இருந்தன, நீதிபதிகளும் அதன்படிதான் தீர்ப்பு சொன்னார்கள்
இது இந்துக்களுக்கு அதிருப்தியனது, இஸ்லாமிய தரப்பும் ஒப்புகொள்ளவில்லை
இதனால் வழக்கு உச்ச்நீதிமன்றம் சென்றது, எல்லா ஆதாரமும் இந்துக்களுக்கு சாதகமாக உண்மையாக இருந்தும் மூன்றில் ஒரு பங்கு நிலம் இஸ்லாமியருக்கு வழங்கபட்டது
உச்சநீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுக்கும் போது ஒரு ஆச்சரியமான சிலிர்ப்பான நம்பமுடியாத நிபந்தனையினை சொன்னது
இது ராமர்கோவில் நிர்வாகம், பள்ளிவாசல் தரப்பு என இருதரப்புக்குமான மோதலாக பார்க்காமல் அந்த ராமரையும் இன்னொரு தரப்பாக சேர்த்தது
அதாவது யாரோ இருவர் வந்து ஒரு இடத்துக்கு சண்டையிடும்போது அந்த நிலத்துக்காரன் என்ன சொல்கின்றான் என ஒருவார்த்தை கேட்க முடிவு செய்தது
அதன்படி இருவர் மட்டுமல்ல ராமனின் சார்பாக ஒருவர் வாதாடலாம், நிச்சயம் இது இஸ்லாமிய குருமார்களோ முன்னோடிகளோ தொடங்கிய சிக்கல் அல்ல
தொடங்கியவன் ஒரு இஸ்லாமிய அரசன் அவன் பறித்து கொண்டது இந்துக்கள் நிலத்தை, அந்த நிலத்தின் ஆலயமும் ஒரு வாதமாக வரட்டும், அந்த வாதத்தை பொறுத்து இந்துக்களும் வாதாடட்டும் என சொன்னது
இருவர் மோதலை அது இன்னொரு திசையில் இருந்து இழுத்து முக்கோண மோதலாக மாற்றியது
இப்போது ராமன் இங்கு ஒரு legal entity. அவர் சார்பில் guardian வாதிடலாம்.
இனி ராமனின் குரலாக ஒரு குரல் ஒலிக்க வாதம் தொடரும், இதன் பின்புதான் ராமனே பேச தொடங்கினான் அயோத்தியில் விடிவெள்ளி உயர தொடங்கிற்று
(தொடரும்..)