அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 14 /21
அகழ்வாராய்ச்சி விவரங்கள், விஷ்ணு ஹரி கல்வெட்டு விவரம்…
உச்சநீதிமன்ற்த்தில் இரு தரப்போடு ராமன் தரப்பில் சிலர் வாதம் செய்த காட்சிகளை காணமுன் அங்கே அகழாய்வில் என்னென்ன பெரும் ஆதாரங்கள் கிடைத்தன என்பதை காணலாம், அதுதான் மிக முக்கியமானது
1975ம் ஆண்டின் அகழாய்விலே ஆலயம் இருந்த அனைத்தும் கிடைத்தது, ஆனால் இஸ்லாமிய தரப்புக்கு காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கோஷ்டியின் உளநாட்டு வெளிநாட்டு அறிவுஜீவிகள் கொடுத்த தவறான நம்பிக்கைதான், அவர்களை ஏமாற்றி செய்யவைத்த வாதம்தான் அடுத்தகட்ட அகழாய்வுக்கு காரணமாயின
அதாவது 1975ல் அந்த பள்ளிவாசலுக்குள் அகழாய்வு செய்யபடவில்லை மாறாக அதன் வெளிபக்க வளாகம்தான் தோண்டபட்டு ஆய்வு செய்யபட்டு தடயங்களும் கல்வெட்டுகளும் ஆலய அடையாளமும் கிடைத்தன
இதனை வேறுமாதிரி சொல்லி இஸ்லாமியரை ஏமாற்றினர் இந்து துவேஷ மேதைகள்
“இதோ பாருங்கள் இஸ்லாமிய மக்களே, உங்கள் அரசர்களெல்லாம் மகா நல்லவர்கள், கோவிலை இடித்து பள்ளிவாசக்ல் கட்டவே மாட்டார்கள், ஆனால் கோவிலை ஒட்டி கடடுவார்கள், அதனால் அவர்கள் ஆலயம் அருகே வெற்று நிலத்தில்தான் பள்ளிவாசல் கட்டினார்கள்
அவர்கள் ஆலயலம் இடிந்து அழிந்துவிட்டது அதனால் தோண்டினால் கிடைக்கின்றது, இங்கே உங்கள் தங்கமான அரசர்கள் வெற்று இடத்தில்தான் கட்டினார்கள், தோண்டினால் ஒன்றும் வராது
காசி,மதுராவில் எப்படி அடுத்தடுத்து மசூதி கோவில் உண்டோ அப்படித்தான் அங்கும் அமைந்திருக்க வேண்டும் அதனால் அஞ்சாதீர்கள்” என தவறான நம்பிக்கை கொடுத்தார்கள்
காசியிலும் , மதுராவிலும் இதே கொடுமைதான் நடந்ததாக வரலாறு உண்டு, அங்கெல்லாம் பறிகொடுத்த கோவில் பக்கம் பின்னாளில் கோவில் கட்டினார்கள், ஆனால் அயோத்தியில் கடைசிவரை சமரசம் செய்ய இந்துக்கள் தயாராக இல்லை போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்து உண்மைவெளிவந்து கொண்டிருந்தது
ஆனால் இந்து துவேஷ மதவாத சக்திகள் கொடுத்த தவறான நம்பிக்கையில்தான் இஸ்லாமிய தரப்பு தொடர்ந்து வாதிட்டது, உண்மையில் அவர்களும் ஏமாற்றபட்டார்கள்
அந்த முழு நம்பிக்கையில் சொன்னார்கள் ,”எங்கள் மத த்தில் பிறர் வழிபாட்டுத் தலங்கள் மேல் மசூதி கட்ட அனுமதி இல்லை. ஆகவே பாபர் காலத்தில் அவ்வாறு செய்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படி கோவில் இருப்பது உண்மையாக இருந்தால் நாங்களே அந்த இடத்தை விட்டு விலகி விடுவோம்”
இதனால் நீதிமன்றம் சர்ச்சைகுரிய இடத்தை தோண்ட உத்தரவிட்டது, அப்போது பள்ளிவாசல் இல்லை அது இடிக்கபட்டிருந்ததால் அகழாய்வு செய்ய யாதொரு தடையுமில்லை
இதே கருத்தைத்தான் அதாவது சம்பந்த இடத்தில்தான் அகழாய்வு செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மாவும் சொல்லிகொண்டிருந்தது கவனிக்கதக்கது
பின் நீதிமன்ற உத்தரவுபடி அகழாய்வு குழு களத்தில் இறங்கிற்று, அதன் தலைவராக டாக்டர் பி.ஆர் மணி நியமிக்கபட்டார், 130 வல்லுனர்கள் அந்த பணிக்கு வந்தார்கள்
இங்கே இந்துக்கள் மட்டுமில்லை 50க்கு மேற்பட்ட இஸ்லாமியர்களும் இதர மதத்தவர்களும் இருந்தார்கள்
மார்ச் 2003 ல் தொடங்கியது இரண்டாம் அகழாய்வு, அது முக்கிய இடத்தில் நடக்க தொடங்கிற்று, மிக பலத்த காவல் இடபட்டது
ஒரு துரும்பு கூட வெளியே செல்லாத அளவு, அப்படியே உள்ளே வராத அளவு காவல்பலபடுத்தபட்டது, நீதிபதிகள் உள்பட வழக்கின் தரப்பினரும் அதிகாரிகளோடு அங்கேதான் இருந்தார்கள்
அனுதினமும் நடக்கும் ஆய்வும் கிடைக்கும் தடயங்களும் ஆதாரங்களும் எல்லோராலும் உறுதிசெய்யபட்டு, கையொப்பமெல்லாம் வாங்கபட்டு முத்திரை வைக்கபட்டது
சுமார் நான்கு மாத ஆய்வுக்கு பின் அறிக்கை 574 பக்கமாக ஆகஸ்டு 22, 2003ல் நீதிமன்றத்திடம் சமர்பிக்கபட்டது
( சுவாரஸ்ய காட்சிகளும் ஆங்காங்கே நடந்தன 1990களில் பெரும் வதந்தியினை யாரோ தூண்டிவிட்டார்கள், அதன்படி 75ம் ஆண்டு ஆய்விலே அங்கு கோவில் இல்லை என உறுதியாயிறு அதனால் இடம் இஸ்லாமியருக்கு சொந்தம் என ஒரு வதந்தி ப்ரவிகொண்டிருந்தது
ஆனால் அந்த அகழாய்வினை செய்த பி.பி லால் அது பொய் என்றும் தாங்கள் கொடுத்த அறிக்கையில் கோவில் இருந்ததைத்தான் சொன்னோம் என்றும் பேட்டி அளித்து நிலமையினை சரிசெய்தார்
ஒரு பெரும் பொய்யினை வேகமாக பரப்பி மக்களை குழப்பும் அளவு இந்து துவேஷிகளின் பலம் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் என பெரும் சக்தியாக இருந்தது, தமிழகத்தில் அது திராவிட சக்திகளாக இருந்தன இன்றும் அவை உண்டு
இப்படி பொய்கள் பரவிய காலத்தில்தான் சென்னை அகழாய்வு நிலையத்தில் பணிசெய்தவரும், லால் அவர்களுடன் அயோத்தியில் 1975ல் அகழாய்வு செய்தவருமான கே.கே முகமது தன் முக்கிய தகவலை கோரிக்கையாக சொன்னார்
“பாரத முஸ்லிம் தலைவர்களுக்கு ஒரு விண்ணப்பம். இஸ்லாமியர்களுக்கு மெக்கா மதினா எவ்வளவு புனிதமோ அது போல் ஹிந்துக்களுக்கு காசி, மதுரா மற்றும் அயோத்தியா. எனவே முஸ்லிம்களே முன்வந்து இந்த மூன்று இடங்களையும் இந்துக்களுக்கு கோவில் கட்ட கொடுக்க வேண்டும்.”
அவ்வளவுதான் ஆளாளுக்கு பொங்கினார்கள், ஒரு அரசு பணியாளர் ஒருபக்கம் சரியலாம் அவரை அனுமதிக்க கூடாது , இவர் ஒருபக்கம் சரியும் ஆசாமி, இனதுரோகி, விலைபோனவர் என வரிந்துகட்டி அவரை பதவிநீக்கம் செய்யவேண்டும் என்றெலலம் கொதிக்க தொடங்கினார்கள்
அரச ரகசியங்களை கசியவிட்டார் என்றெல்லாம் பெரும் கொந்தளிப்பு வந்தது
ஆனால் கே.கே முகமது கொஞ்சமும் கலங்கவில்லை, அகழாய்வுக்கு அவசியம் என்பதால் அவர் சமஸ்கிருதமும் கற்றிருந்தார், அவர் கீதையின் ஸ்லோகம் ஒன்றை சொல்லி புன்னகைத்தார்
“உண்மை பேசி உயிர் போனாலும் உயர்வே” என அவர் சொல்ல நிலமை பதற்றமானது, அவருக்கும் அவரின் மேல் அதிகாரிக்கும் முட்டி கொண்டது
பின் அரசியல் அழுத்தம் அதிகரித்து அவர் பணியிடை நீக்கம் வரை அலைகழிக்கபட்டார், ஆனால் கடமை ரீதியாக அவர் தவறு செய்யவில்லை என்பதால் கோவாவுக்கு மாற்றபட்டார் )
75ம் ஆண்டு முக்கிய ஆதாராமக கிடைத்தவை, அதாவது பள்ளிவாசல் கட்டடம் அருகே கிடைத்தவை மிக முக்கிய 12 தூண்கள் இந்த தூண்கள் மேல்தான் பள்ளிவாசலின் முக்கிய சுவர் இருந்தது, இவைதான் ஆதாரமாக தாங்கின
அந்த சுவர்களின் நடுவில் தூண்கள் தெரிந்தன, அவற்றின் கீழ்பகுதியில் பூரண கும்ப கலசம் பொறிக்கபட்டிருந்தது, அது இந்துக்களின் அடையாளம், இஸ்லாமிய கட்டங்களில் அது வராது
இந்த கருங்கல் தூண்களுக்கு கீழே செங்கலால் ஆன அடிபாக தளம் இருந்தது, அங்கே சுட்ட களிமண்ணின் சிலைகள் விலங்குகள் மனிதர்கள் வடிவில் இருந்தன. அம்மாதிரியான சிலைகள் இந்து ஆலயங்களில் மட்டும் காணபடும் அதே வடிவில் இருந்தன, இன்னும் அவை 500 வருடத்துக்கு அதாவது பாபர் காலத்துக்கு மிக மிக முந்தையதாக இருந்தது
2003 அகழாய்வு இன்னும் பெரும் தகவல்கலை கொடுத்தது, அந்த கட்டடம் இருந்த இடத்தின் கீழ் சுமார் 50 பெரிய தூண்கள் இருந்தன, பெரிய கருங்கல் தூண்கள் அவை
அப்படியே இந்துக்கள் கருவறை என சுட்டிகாட்டிய இடத்தின் அருகே 17 வரிசைகளில் , 5 தூண்களாக மொத்தம் 85 தூண்கள் இருந்த அடிபாகம் கிடைத்தது, மிகபெரிய மண்டபம் இருந்திருக்க வேண்டும் அந்த மண்டப கூரையினை தாங்கும்படி 85 பெரும் தூண்கள் இருந்திருக்கவேண்டும் என்பது கண்டறியபட்டது
இந்துக்கள் கருவறையின் சாமி சிலை அபிஷேகத்தின் போது நீர் வெளியேறும் கோமுகி அமைப்பினை முதலை உரு பதித்த மகரப்ரணாளியாக கண்ட்னர்
அப்படியே கோபுர கலசத்தை தாங்கும் பகுதியான அமலகம் கிடைத்தது, இப்படி 250 பொருட்கள் மிக முக்கியமான ஆதாரமாக கிடைத்தன,
அடுத்த அடுக்கில் சிவலிங்கம் வந்தது, சிவபார்வதி விக்ரஹங்களும் கிடைத்தன
மிக முக்கிய ஆதாரமாக ஒரு கல்வெட்டு கிடைத்தது அதன் பெயர் “விஷ்ணு ஹரி கல்வெட்டு”
அது 5 அடிக்கு 2 அடியில் 12-13ம் நூற்றாண்டு சம்ஸ்க்ருதத்தில் 20 வரிகள் கொண்டது., அவற்றின் பொருள் இப்படி என அறிஞர்கள் அறிந்து சொன்னார்கள்
” “நம சிவாய” என சிவனை வணங்கி, த்ரிவிக்ரமனான வாமன பகவானை வணங்கி, அடுத்து பரசுராம அவதாரத்தை வணங்கி பின் கோவில் கட்டிய அந்த ராஜ வம்சத்தை பற்றிய விவரங்களை கூறி, அப்போதைய ராஜா கோவிந்தசந்த்ரா என்ற அரசன் இந்த கோவிலை கட்டினான் என்றும் அது தொடங்குகின்றது
பலமான வாலியை, பத்து தலை ராவணனைக் கொன்ற அந்த விஷ்ணு ஹரிக்காக கட்டினான் எனக்கூறி
பின் அந்த மிகப்பெரிய கோவிலின் பெருமை விளக்கம் தங்க கோபுரம் பற்றி விளக்கி சொல்லிபடி
இன்னும் அயோத்தியை கோவில் நகரம் என குறிப்பிட்டு, பின் மேற்கிலிருந்து வரும் படையெடுப்புகளின் அச்சுறுத்தலையும் குறிப்பிட்டு அதற்கு இந்த அரசன் எதிர்க்க தயாராக இருப்பதாகவும் கூறி
புகழ் வாக்கியத்துடன் முடிகின்றது”
இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டியிருக்கின்றது?
கோவில் 12ம் நூற்றாண்டில் கட்டபடுகின்றது, அப்போதே மேற்கில் டெல்லிவரை ஆப்கானிய ஆட்சி வந்திருக்கின்றது, அந்த காலகட்டத்தில் பல ஆலய இடிப்பும் கொள்ளைகளும் நடக்கின்றன, சோம்நாத் காசி என பல ஆலயங்கள் தாக்கி இடிக்கபட்டு கொள்ளையடிக்கபடுகின்றன
அந்த நேரம் இந்த ஆலயம் தாக்கபட்டிருக்கலாம் அல்லது கும்பாபிஷேகம் போன்ற பெரும் நிகழ்வு நடந்து இந்த கல்வெட்டு பதிக்கபட்டிருக்கலாம்
எது எப்படியாயினும் இப்போது அந்த இடம் இந்து ஆலயம் அதுவும் வாலி, ராவணனை கொன்ற விஷ்ணுவின் ஆலயம் இருந்த இடம் என்பது மிக மிக உறுதியாய் தெளிவாயிற்று
இப்போது இஸ்லாமிய தரப்பு, அதாவது அறிவுஜீவி கும்பலால் ஏமாற்றபட்ட தரப்பு முன்பு நீதிமன்றத்தில் சொன்ன உறுதி நினைவுக்கு வரவேண்டும்
“எங்கள் மத த்தில் பிறர் வழிபாட்டுத் தலங்கள் மேல் மசூதி கட்ட அனுமதி இல்லை. ஆகவே பாபர் காலத்தில் அவ்வாறு செய்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படி கோவில் இருப்பது உண்மையாக இருந்தால் நாங்களே அந்த இடத்தை விட்டு விலகி விடுவோம்”
ஆனால் அதை செய்யவிடாதபடி இந்த சக்திகள் குழப்பியடித்தன, கடுமையாக குழப்பின
ஏன் என்றால் அயோத்தி மீட்கபட்டால் இந்து சக்திகள் வளரும் அது அவர்களின் குழப்பவாத பிரிவினைவாத அந்நிய சக்திக்கு ஆதரவான அரசியலுக்கு ஆபத்த்து முக்கியமாக அவர்கள் நீண்டகால திட்டபடி எதிர்கால்த்தில் குழப்பம் பல விளைவித்து நாட்டை துண்டு துண்டாக ஆக்கமுடியாது
அதனால் கடுமையாக் முழு சக்தியோடு ஏதிர்க்க தொடங்கினார்கள்
(இந்து துவேஷ தரப்பின் பெரிய பொய்களை துணிச்சலாக எதிர்த்த பி.பி லாலும், கே கே முகமதுவும் காங்கிரஸ் ஆட்சிகாலந்தில் பெரிய பாதிப்புள்ளாகினர்
பின்னர் மோடி ஆட்சியில்தான் பி பி லாலுக்கு பத்மவிபூஷனும் , கே கே முகமதுவுக்கு பத்ம ஸ்ரி பட்டமும் வழங்கி நாட்டுக்கான அவர்களின் சேவைக்கு அங்கிகீராம் தரபட்டது)