அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 16 /21
உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை, தீர்ப்பு விவரம்…
கடைசி கட்ட போராட்டமாக இந்துக்கள் உச்சநீதிமன்றம் சென்றனர், இப்போது அவர்களுக்கு பெரிய பலமாக மிக ஆறுதலாக கீழ்நீதிமன்றமான அலகாபாத் நீதிமன்றம் அகழாய்வு ஆதாரங்கலை கொண்டு இந்து ஆலயம் ராமன் ஆலயமாக அங்கே இருந்தது அதன் மீதுதான் பள்ளிவாசல் அமைக்கபட்டிருந்தது
ஆனால் இஸ்லாமியரும் சுமார் 500 வருடமாக அங்கு சென்றுவந்துள்ளதால் அவர்களுக்கும் ஒரு பங்கு உண்டு என மூன்றில் ஒரு பங்கு, அதாவது அந்த முக்கிய இடத்தில் ஒரு பங்கினை அவர்களுக்கும் கொடுத்திருந்தது
இந்துக்கள் இப்போது அந்த இடம் முழுமையும் தங்களுக்கானது, கீழமை நீதிமன்றம் இந்து ஆலயம் இருந்தது என சொல்லிவிட்டு பின் இஸ்லாமியருக்கு ஒரு பங்கை கொடுக்க சொல்வது மீண்டும் பழைய மோதலுக்கே வழிவகுக்கும் என்பதை சுட்டிகாட்டி வாதிட்டனர்
ராமர்கோவில் சார்பாக கோபால் சிங்க் விஷாரதி என்ற தனி நபர், நிர்மோஹி அகாரா, சுன்னி வக்ஃப் வாரியம், குழந்தை ஸ்ரீ ராமர் என மூன்று தரப்பினர் அங்கே தங்களின் நியாயம் வேண்டி வந்திருந்தார்கள்
குழந்தை ராமர் சார்பாக வாதிட பல வழக்கறிஞர்கள் வந்தார்கள், இந்துக்கள் அனுமனாக வணங்கும் பிரதான வழக்கறிஞர் பரசாரன் வந்திருந்தார்
(அவர் வாதிட்ட விதம் கம்பராமாயணத்தை விட உருக்கமானது, தர்மமானது. அதை இன்னொரு இடத்தில் பார்க்கலாம்
முதல் அமர்விலே அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பினை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது, இது இரு தரப்புக்குமே மகிழ்ச்சியும் அதிர்ச்சியும் ஒருசேர கொடுத்தது
ஆனால் அடுத்து என்ன நடக்கும் என தெரியாததால் இருவருமே பரபரப்பானார்கள்
இந்துக்களை பொறுத்தவரை அந்த இடம்தான் அவர்களுக்கு ஐநூறுவருடமாக இலக்கு , அதற்குத்தான் பெரும் போராட்டமே நடத்தினார்கள், அது கிடைத்தால்தான் ராமஜென்மபூமியினை மீட்ட வெற்றி
இல்லையேல் மொகலாய காலத்தில் தொடங்கிய 500 வருட போராட்டம் சுதந்திர இந்தியாவில் வீணாக முடிந்துவிடும்
இருவருக்கும் நிலம் சொந்தம் என்பதல்ல விஷயம், நிலத்தை மீட்பதுதான் விஷயம், இல்லையேல் போராட்டம் அவசியமே இல்லை
இஸ்லாமியர்களை பொறுத்தவரை எப்படியாவது ஒரு பங்கினை வாங்கிவிட வேண்டும் எனும் ஒரு வேகம் அவர்களுக்கு பின்னால் அதை வைத்தே குழப்பம் செய்ய துடிக்கும் இந்து துவேஷ அரசியல் கட்சிகள்
இப்படியான நிலையில்தான் அந்த சர்சைக்குரிய நில அளவு -13500 சதுரஅடி பற்றி வாதம் தொடங்கிற்று
(அதுபற்றி பின்னர் பார்க்கலாம்)
மே, 2011ல் அலகாபாத் நீதிமன்ற திர்ப்பு நிறுத்திவைப்பு என சொன்ன நீதிமன்றம் வாதங்களை 2014 வரை இழுத்தது
பின் இன்னும் இழுத்தது, இஸ்லாமிய தரப்பில் இஸ்லாமிய பாருக் 2017ல் புதிய வழக்கினை இழுத்தார், இப்படி பல தாமதங்கள் வேண்டுமென்றே செய்யபட்டன
2019ல் ஜனவரி 8ம் தேதி ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கபட்டது
நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், ஷராட் போத் எனும் ஐந்து நீதிபதிகள் வழக்கினை விசாரிக்க தொடங்கினார்கள் வழக்கு வேகமெடுத்தது
ஆம், நீதிபதிகளில் இஸ்லாமிய நீதிபதிகளும் இருக்குமாறு கவனமாக குழு அமைக்கபட்டது
இந்த அமர்வு குழு விஷயத்தை பேச்சுவார்த்தை குழு மூலம் தீர்க்க முயன்றது அப்படி ஃபிப்ரவரி 26 , 2019ம் ஆண்டு நீதிமன்றம் ஒரு பேச்சுவார்த்தை குழு அமைத்தது
இப்ராஹிம் கலீஃபுல்லா, ஸ்ரீ ரவிஷங்கர், ஸ்ரீராம் பஞ்சு மூவர் குழு அந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்றது அக்குழு தன் விவாதத்தை On 8 மார்ச் 2019 அன்று தொடங்கிறு
பல சுற்றுக்கள் நடந்தாலும் பேச்சுவார்த்தை தோல்விதான், ஆனாலும் அந்த குழு இறுதி அற்க்கையை 16 அக்டோபர் 2019 அன்று சமர்ப்பித்தது.
அதற்கு முன்பே ஐந்து நீதிபதிகள் அடங்கிய நீதிபதி குழு விசாரணையினை தினமும் நடத்திற்று 6 ஆகஸ்ட் 2019 முதல் தினமும் வழக்கு விசாரணை நடந்தது
தொடர்ந்து 41 நாட்கள் நடந்த விசாரணை 16 அக்டோபர் 2019 அன்று நிறைவுற்றது.
இந்துக்கள் தரப்பில் குழந்தை ராமருக்காக திரு பராசரன், திரு C S வைத்தியநாதன் ஆகியோர் வந்தார்கள் , இஸ்லாமிய தரப்புக்கு ராஜிவ் தவான், சபரய்ப ஜிலானி ஆகியோர் வந்தார்கள்
நவம்பர் 9, 2019ல் இறுதி தீர்ப்பினை சொன்னது நீதிமன்றம், ஐநூறு வருட போராட்டத்தின் வெற்றியாக, தர்மம் மீண்டு கிடைத்த சாட்சியாக, இந்துக்கள் 500 வருடமாக சிந்திய ரத்தத்துக்கும் கண்ணீருக்கும் ஆறுதலாக தர்மத்தின் வடிவில் அந்த தீர்ப்பு இருந்தது
மிக மிக சரியான மொழிகளில் தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் , உலக ஜனநாயக நாட்டு நீதிமன்றங்களுக்கே உதாரணமாக அமைந்தது அந்த தீர்ப்பு
உதாரண புருஷனான ராமனின் வழக்கும் எல்லா உலக நீதிமன்றங்களுக்கும் உதாரணமாகி போனதுதான் ஆச்சரியம், வழக்கிலும் வழிகாட்டினார் ராமபிரான்
நீதிமன்ற தீர்ப்பின் சாரம் இதுதான்
” இந்த நீதிமன்றம் இரு தரப்பின் நம்பிக்கையின் அடிபடையில் தீர்மானிக்க முடியாது. சாட்சிகளின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பளிக்க முடியும், நீதிமன்றத்ஹ்டுக்கு ஆதாரங்கள்தான் முக்கியம்
இந்துக்கள் நீண்ட காலமாகவே தொடர்ந்து அந்த இடத்தில் வழிபாடு நடத்தியுள்ளனர் என்பதற்கு சான்று உள்ளது. குறிப்பாக வெளி முற்றத்தில் அவர்கள் மட்டுமே இருந்துள்ளனர். அங்கு 1857 ல் தடுப்பு சுவர் கட்டிய பின்பும் அவர்கள் நிறுத்தவில்லை
மாறாக, முஸ்லிம் தரப்பு, உள் முற்றத்தில் அவர்கள் மட்டுமே 1628 முதல் முழுதும் இருந்தனர் என்பது நிரூபிக்கப்படவில்லை.
ஹிந்துக்கள் உள்ளே சென்றும் 1857 க்கு முன் வழிபாடு செய்துள்ளனர் என்பதற்கு சான்றுகள் உள்ளன.
ஏற்கனவே இந்த இடத்தை மூன்றாக பிரித்தது ப்ரயோஜனமில்லை, தீர்வாகாது என முடிவு செய்துவிட்டோம்.
சுற்றுலா வந்தவர்களின் குறிப்பு படி, ஹிந்துக்கள் இந்த இடத்தை பகவான் ராமர் பிறந்த இடம் என நம்பிய வரலாற்று சான்று உள்ளது. ((chiefly Tieffenthaler and the account of Montgomery Martin in the eighteenth century)
அங்கு பள்ளிவாசல் இருந்தாலும், இந்துக்கள் வழிபாடு செய்ய தடையேதும் இருந்த தில்லை. இந்துக்களும் அவர்கள் புனிதமாக நம்பிய இடத்தில் பள்ளிவாசல் இருந்தாலும், தங்கள் வழிபாட்டை நிறுத்தவில்லை. அந்த பள்ளிவாசலுக்குள்ளே சென்று இதுதான் எங்கள் ஆலய இடம் என வழிபட்டுள்ளனர். அந்த பெரிய பள்ளிவாசலும் அவர்கள் ந்ம்பிக்கையை தடுக்க முடியவில்லை.
ஆங்கிலேயர்கள் தடுப்பு சுவர் கட்டியபின்பும், இந்துக்கள் உள் முற்றத்தில் வழிபாடு செய்ய முயன்று கொண்டே இருந்துள்ளனர். இது சீக்கிய நிஹாங்க் உள்ளே புகுந்ததாக முஸ்லிம் தரப்பு புகார் குடுத்ததில் உறுதியாகிறது.
வெளி முற்றத்தில் ஸ்ரீ ராமருக்கு மேடை அமைத்து வழிபட்டாலும், பள்ளிவாசல் உள் முற்றத்தையே கர்ப்ப க்ரஹமாக நம்பியதை அவர்கள் விடவேஇல்லை. எனவே தடுப்பு சுவருக்கு வெளியில் நின்று உள் முற்றத்தை சேவித்துள்ளனர் என சான்றுகள் நிரூபிக்கின்றன.
அதே சமயம் மாறாக முஸ்லிம்கள் (exclusive possession) அவர்கள் மட்டுமே அந்த இ ட த்தை உரிமை கொண்டாடிய சான்றுகள் இல்லை.
ஆனால், வெளி முற்றத்தில் ஹிந்துக்கள் ஸ்ரீ ராமர் தொட்டில் இருந்த மேடை, சீதா ரஸோய் (சமையல் அறை), பண்டார் (அன்னதானக்கூடம்) என தாங்கள் மட்டுமே உபயோகித்து வந்ததும் நிரூபணமாகிறது. இது அவர்கள் மற்ற வழிபாட்டு இடங்களில் செய்வது போலவே உள்ளது.
ஸ்ரீ ராமர் தொட்டில் இருந்த மேடை மிக அருகே ஆங்கிலேயர்கள் தடுப்பு சுவர் கட்டியபின்பும், இந்துக்கள் வழிபாட்டை உள் கட்டடத்திலும் தொடர்ந்து உள்ளனர்.
ஒரு கட்டத்தில் கூட்ட நெரிசலைத் தடுக்க ஆங்கிலேயர்கள் ஒரு கூடுதல் வழிப்பாதை உருவாக்கும் நிலை வந்துள்ளது, இந்துக்களின் தொடர், அதிக வருகையை குறிக்கிறது.
முஸ்லிம் மற்றும் இந்து சாட்சியங்கள் மூலம் ஹிந்துக்களின் கூட்டம் ஸ்ராவண மாதம் ஊஞ்சல், ராம நவமி, கார்த்திகை பௌர்ணமி, ராம கல்யாணம், ராம் ப்ரதக்ஷணம் காலங்களில் அதிகம் இருந்ததை அறிய முடிகிறது.
அப்படி வருபவர்கள் வெளிமுற்றத்தில் வழிபாடு நடத்திவிட்டு, அந்த தடுப்பு சுவர் வாசலில் நின்று தூரத்தில் இருந்து உள் முற்றத்தை கருவறையாக எண்ணி வழிபட்டு சென்றனர் என்பதும் சாட்சியங்களின் மூலம் நிரூபணமாகிறது.
அங்கே இந்துக்கள் பள்ளிவாசல் கட்டப்பட்ட தூண்களில் இருந்த ஜய விஜயர்கள், வராஹர், கருடன் சிற்பங்களைத் தொட்டு வணங்கிய வழக்கம் இருந்ததும் சான்றுகள் மூலம் நிரூபணமாகிறது. அதவாது அந்த இடத்தை இந்துக்கள் தங்கள் கோவிலாகவே கருதி வணங்கியிருக்கின்றார்கள், இது வெறும் நம்பிக்கை மட்டுமில்லாமல் வழிபாடு இருந்த தற்கும் சான்று.
அங்கு இஸ்லாமியர் மரபுபடி வாசகங்கள் கொண்டபடி வெகு காலமாக பள்ளிவாசல் இருந்ததையும் மறுக்க முடியாது
1949ல் கீழ் அதிகாரிகளின் பல எச்சரிக்கைகளுக்கு பிறகும், கே கே நாயர் ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதும் உறுதியாகிறது. இதனாலேயே அந்த 22 டிசம்பர், 1949 சம்பவம் நடந்துத.
ஆனாலும் 1992 மசூதி இடிப்பு ஏற்றுக்கொள்ள முடியாத சட்ட த்திற்கு புறம்பான செயல், அதை நீதிமன்றம் கடுமையானதாக கருதுகின்றது
மேலே கண்டதன் ப்ரகாரம் சுன்னி வக்ஃப் வாரியம் தங்கள் (adverse possessioந்) ஐ அதாவது தங்கள் ஆதாரங்களை நிரூபிக்க தவறிவிட்ட தால் அவர்களின் அந்த கோரிக்கை ஏற்க முடியாது.
ஹிந்துக்கள் தங்கள் இருப்பை தொடர்ந்து காட்டியுள்ளனர். வெளி முற்றத்தை அவர்கள் மட்டுமே அனுபவித்த தோடு உள் முற்றத்திலும் உரிமை கோரி தகராறு செய்து கொண்டே வந்துள்ளனர். பள்ளிவாசல் 1992 வரை இருந்த ஒரு காரணத்தினாலேயே முஸ்லிம் தரப்பு உரிமை கோர முடியாது.
முஸ்லிம் கட்டடம் இருந்தது அங்கே இந்துக்கள் உரிமை கோருகின்றனர் என்பதற்காக 2010ல் அலகாபாத் தீர்ப்பில் இரண்டு நீதிபதிகள் சம பங்கு அளித்து தீர்ப்பு அளித்துள்ளனர், மூன்றாவது நீதிபதி திரு. தரம் வீர் ஷர்மா குழந்தை ஸ்ரீ ராமருக்கு முழு நிலமும் என தீர்ப்பு அளித்துள்ளார்.
அந்த இரண்டு நீதிபதிகள் கூறிய தீர்ப்பு சரியில்லை. இது ப்ரச்சனைக்கு தீர்வு அளிக்காது.
அகழ்வாராய்ச்சி கி.மு இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே தொடர் நாகரிகம் இருந்த தை நிரூபித்துள்ளது. அங்கு ஹிந்து கோவில் இருந்தையும்த கூறுயுள்ளது. பள்ளிவாசலே கோவில் அஸ்திவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. எனவே முழு இடமும் குழந்தை ஸ்ரீ ராமனுக்கே சேரும்”
இதுதான் தீர்ப்பு, இந்த தீர்ப்புத்தான் அந்த நிலம் குழந்தை ராமருக்கானது என தீர்ப்பாயிற்று, 500 வருடத்துக்கு பின் ராமன் பிறந்த அந்த ராம்ஜெனம பூமி நிலம் இந்துக்களுக்கே கிடைத்தது
நீண்ட போராட்டம், பாபர் காலத்தில் தொடங்கிய போராட்டம் ஆயுத போராட்டம், பிரிடிசார் காலத்தில் தொடங்கிய அஹிம்சை போராட்டம், சுதந்திர இந்தியாவில் தொடங்கிய சட்டபோராட்டம் இப்படி வெற்றியாக முடிந்தது
ஆயுதவழி, அஹிம்சை வழி, சட்டவழி என இந்துக்கள் 500 வருட போராட்டத்தில் ஆப்கானியர், பிரிட்டிசார் பின்னாளில் காங்கிரஸ் கோஷ்டிகளை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்தி ராம்ஜென பூமியினை மீட்டெடுத்தார்கள்
(நீதிமன்றம் இஸ்லாமியர் வழிபட ஒரு இடம் நிச்சயம் வேண்டும் என சொல்லி அவர்கள் தொழுகை செய தன்னிபூர் எனும் இடத்தில் உபி அரசை நிலம் ஒதுக்க சொன்னது
சுன்னி வக்ஃப் வாரியத்திற்கு நீதிமன்ற ஆணைப்படி தன்னிபூரில் என்ற முஸ்லிம்கள் அதிகம் வசிக்க்கூடிய பகுதியில் மசூதி கட்ட உ.பி அரசு 5 ஏக்கர் நிலம் ஒதிக்கி கட்டுமானம் 2021 ல் தொடங்கியது)
ராம்ஜென்மபூமி நிலம் மீட்கபட்டபோது எல்லா உலக நாடுகளுக்கும் ஒரு அச்சம் இருந்தது, இனி பெரும் கலவரம் வெடிக்கும் இஸ்லாமிய நாடுகள் போர்கோலம் பூண்டுவிடும், உள்நாட்டில் கொந்தளிப்பு வரும் என்றெல்லாம் பதைபதைப்பு இருந்தது
நிச்சயம் காங்கிரஸ் அரசு இருந்திருந்தால் அதெல்லாம் நடந்திருக்கலாம் ஆனால் மோடி அரசு இருந்ததால் தேசம் ஒரு சலனமின்றி அமைதியாக இருந்தது
ராம்ர்கோவில் மீட்கப்ட்டவுடன் ஆளாளுளு முன் வந்தார்கள். லார்சன் அன்ட் டூப்ரோ , டாடா, அம்பானி, அதானி, இன்னும் ஏகபட்ட தொழிலதிபர்கள் ஒரே நபராக கட்ட முன்வந்தார்கள்
ஆனால் ராமர்கோவிலுக்கான அமைப்பு சொன்னது
“இது இந்தியாவின் பெரும் அடையாளம், அதனால் இந்துக்கள் மட்டுமன்றி எல்லா இந்திய மகக்ளின் பங்களிப்போடுதான் இதனை கட்டவேண்டும்”
அப்படி சொல்லித்தான் பிப்ரவரி 5ம் தேதி, 2020ல் கோவில் கட்ட அறகட்டளை உருவானது, அது அடுத்த ஆகஸ்டு ஐந்தாம் தேதி ராமர்கோவிலுக்கான பூமி பூஜையினை இட்டது
ராமர்கோவில் எழுந்து அடுத்த நான்கு ஆண்டுகளில் கும்பாபிஷேகம் காண தயாராகிவிட்டது
இந்த வழக்கில் ஏகபட்ட விஷயங்கள் உண்டு, கோவில் கட்டி வணங்கவேண்டிய மாமனிதர் பரசாரன் முதல் கண் தெரியாத நிலையில் ராமனின் சார்பாக சாட்சி சொன்ன அந்த முதியவர் முதல் மாபெரும் பங்களிப்பை செய்த காஞ்சி மடம் வரை பல விஷயங்கள் உண்டு
அவற்றை அடுத்து பார்க்கலாம், ஒவ்வொரு இந்துவும் மறக்க கூடாத பங்களிப்புகள் அவை
(தொடரும்…)
![](https://scontent.fdel1-7.fna.fbcdn.net/v/t39.30808-6/420605132_393950979971530_4002317731735928704_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=3635dc&_nc_ohc=MohYLUO1Tn0AX_s0mhC&_nc_ht=scontent.fdel1-7.fna&oh=00_AfBx0mvQtWxDAEfiseq59q6_ryJokhqqnPit0tOx28j1Yg&oe=65AF0AE5)
![](https://scontent.fdel1-7.fna.fbcdn.net/v/t39.30808-6/420574571_393951313304830_7963703627087860367_n.jpg?stp=dst-jpg_p180x540&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=3635dc&_nc_ohc=l5OFiLu0AB4AX-jcumo&_nc_ht=scontent.fdel1-7.fna&oh=00_AfCV09Eb2UjKQFtwUJLCRi5Srrn2eumGswia8RCwpHCUzQ&oe=65AF7B07)
![](https://scontent.fdel1-5.fna.fbcdn.net/v/t39.30808-6/420588281_393951516638143_3211437840011063133_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=3635dc&_nc_ohc=V8rq09JR_0QAX9wmSFt&_nc_ht=scontent.fdel1-5.fna&oh=00_AfBq8cXlW6saWM7fW8PVimoy6ycxsVzqdG_RRBnhyZiJfg&oe=65AFF0FE)
![](https://scontent.fdel1-2.fna.fbcdn.net/v/t39.30808-6/420575214_393951829971445_7665165936075664119_n.jpg?stp=dst-jpg_p600x600&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=3635dc&_nc_ohc=Pt59D2vHlckAX-vfCLs&_nc_ht=scontent.fdel1-2.fna&oh=00_AfCzCKrScDRt9iaUMMYq07h5S4TRX9YPkjqIEsc90bDHug&oe=65B05AC3)
![](https://scontent.fdel1-5.fna.fbcdn.net/v/t39.30808-6/420547416_393952063304755_7445933702980731863_n.jpg?stp=dst-jpg_p480x480&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=3635dc&_nc_ohc=wDY5F5_c50gAX8JP7lS&_nc_ht=scontent.fdel1-5.fna&oh=00_AfCuRq9Weda75LsZch6KAI0UWReTQBeAYbCfF1P7fOXM_g&oe=65B0155E)
![](http://stanleyrajan.com/wp-content/uploads/2024/01/image-50.png)
![](http://stanleyrajan.com/wp-content/uploads/2024/01/image-51-1024x551.png)
![](http://stanleyrajan.com/wp-content/uploads/2024/01/image-52-1024x468.png)
![](http://stanleyrajan.com/wp-content/uploads/2024/01/image-53.png)
![](http://stanleyrajan.com/wp-content/uploads/2024/01/image-54.png)