அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 04 /21

1707 – 1814 நவாப் காலப் போராட்டம்

அவுரங்கசீப் 1707ம் ஆண்டு மரணமடைந்தான், சுமார் 57 ஆண்டுகள் இந்துஸ்தானத்தை ஆட்சி எனும் பெயரில் படாதபாடு படுத்தியவன் அவன்.

திரும்பும் இடமெல்லாம் சண்டையும் வம்பும் செய்த அவனால் ஏகபட்ட எதிரிகள் மொகலாயத்துக்கு உருவானார்கள், சீக்கியர்கள் ராஜபுத்திரர்கள் மராட்டியர்கள் அசாமிகள் என எங்கு நோக்கினும் எதிரிகளால் சூழபட்டிருந்தாலும் அவன் காலம் முடியும் வரை அவன் பலமிக்கவனாகவே இருந்தான்.

அவனுக்கு ஆயுதங்கள் ஐரோப்பியரால் கிடைத்தன, ஆட்கள் அராபியாவில் இருந்து வந்துகொண்டே இருந்தார்கள். அவன் எல்லோருக்கும் சவால் விட்டுக்கொண்டே இருந்தான்.

காலம் அவனுக்கு அந்த வாய்ப்பை அளித்தது. மார்ச் 3 , 1707ம் ஆண்டு அவன் காலமாகிவிட அதன் பின் மொகலாயம் வேகமாகச் சரிந்தது.

அவனுக்கு பின் நிலையான ஆட்சியினை யாராலும் கொடுக்கமுடியவில்லை, அவனுக்கு வாய்த்தது போல் காலம் அவன் சந்ததிகளுக்கு வாய்க்கவில்லை

அவன் விதைத்து சென்றதெல்லாம் அவன் சந்ததிக்கு எதிராக பெரும் சக்தியாக வளர்ந்து மிரட்டியது, இதனால் பழையபலம் இல்லை

அதே நேரம் பெரிய ராஜ்யம் உடையும் போது ஆங்காங்கே இருந்த குட்டி சுல்தான்கள் அல்லது அவுரங்கசீப்பால் நியமிக்கபட்ட சுல்தான்களெல்லாம் தனி ராஜ்ஜியம் கண்டார்கள்

ஆற்காடு நவாப், ஐதரபாத் நிஜாம், வங்கத்து நிஜாம் என பலர் இப்படி உருவானார்கள், தங்களை கட்டுபடுத்திய சக்தி இல்லாதபோது தனி ஆவர்த்தனம் செய்தார்கள்

இந்நிலையில் அயோத்தி விவகாரத்தில் ஒரு முடிவினை எட்ட ஆம்பர் மஹாராஜா இரண்டாம் ஜெய்சிங் விரும்பினார்

இந்த ஆம்பர் மகாராஜா வம்சம் என்பது சாதாரணம் அல்ல, மொகலாயரோடு மிக நெருங்கிய உறவை கொண்டிருந்தவர்கள், அவுரங்கசீப் காலத்தில் முறிந்துபோன உறவினை பின்னர் மன்னர் இரண்டாம் ஜெய்சிங் அயோத்திக்காக மீண்டும் புதுபிக்க முயன்றார்

ராஜபுத்திர அரசுகளில் ஆம்பர் சமஸ்தானம் முக்கியமானது, இந்த சமஸ்தானத்து இளவரசிதான் ஜோதாபாய் அவளைத்தான் அக்பர் திருமணம் செய்து இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தான், பின்னாளைய மொகலாய அரசர்களெல்லாம் இவள் வம்சாவழிதான்

அவ்வகையில் ஆம்பர் சமஸ்தானமும் மொகலாயமும் நெருக்கமானது, வீரசிவாஜியினை அடக்க 1670களில் வந்த மன்னர் ஜெய்சிங்கின் பேரன் இந்த இரண்டாம் ஜெய்சிங்

ஜெய்ப்பூரை இவர்தான் நிர்மானித்தார், ராஜபுத்திர மன்னர்களை போலவே தனித்துவமான இவர் அவுரங்கசீப்புக்கு பின்னரான் காலங்களில் அப்போதைய அரசன் ஜஹந்தர் ஷா எனும் அவுரங்கசீப்பின் கொள்ளுபேரன்களில் ஒருவனிடம் அந்த கோரிக்கையினை வைத்தார்

அது ஜஹந்தருக்கு பெரும் பணம் தேவைபட்ட காலம், இந்துக்களை தொட்டதாலே மொகலாயம் வீழ்ந்தது என்பதை அறிந்த ஜஹந்தர் ஷா அயோத்தியில் ஒரு முடிவுக்கு வரவிரும்பினான்

அதுபற்றி பேசும்போதே இரண்டாம் ஜெய்சிங்கிற்கு அந்த இடத்தை போரிட்டு வாங்காமல் காசுகொடுத்து வாங்கினால் என்ன எனும் யோசனை வந்தது

(1920களில் பாலஸ்தீனில் செய்தார்கள், நிலங்களை வாங்கியே யூதநாடு அடையலாம் என முயன்றார்கள்

அதை முதலில் செய்தது இந்துக்கள், மன்னர் இரண்டாம் ஜெய்சிங் அதை செய்தார்)

மன்னர் நடத்திய பேச்சுவார்த்தைபடி 60 ஏக்கரில் அந்த கட்டடம் இருந்த அதாவது பள்ளிவாசல் இருக்கும் 3 ஏக்கரை தவிர மீதி நிலமெல்லாம் பால ராமன் பெயரில் வாங்கபட்டது

அந்த 57 ஏக்கரும் இனி மன்னருடையதும் அல்ல, சுல்தான் உடையதுமல்ல அது பகவான் ராமனுடையது என உறுதி செய்யபட்டது, அதன்படி வரைபடமும் நில உரிமை பற்றிய விவரமும் ஆவணமாக்கபட்டது

(அது இன்றும் ஜெய்ப்பூர் அரண்மனையில் காட்சியாக சாட்சியாக உண்டு)

ஜெய்சிங் காலம் வரை இந்துக்கள் சராய நதியில் குளிக்க அனுமதி இல்லை, இவரே அந்த அனுமதி பெற்றுதந்து படிதுறைகளெல்லாம் அமைத்து கொடுத்தார்

இனி ராமன் ஆலயத்துக்கு சிக்கல் இல்லை, இனி விரைவில் பெரும் ஆலயம் கட்டலாம் என ஜெய்சிங் நினைத்தபோதுதான் ஒரு குழப்பம் வந்தது

தமிழக ஆற்காடு நவாப், ஐதரபாத் நிஜாம் போல அயோத்தியில் ஒரு நவாப் தன்னை சுல்தானாக அறிவித்து கொண்டு ஆட்சியினை தொடங்கினான், அவன் அயோத்தியில் நிலம் வாங்கியது செல்லாது என சர்ச்சையினை வளர்த்தான்

முதலாம் ஷாதாத் அலிகான் எனும் பெயருடைய அந்த நவாப் அடுத்த சர்ச்சையினை தொடங்கினான் இந்துக்கள் மறுபடி போராட்டத்தை தொடங்கினார்கள், இரண்டாம் ஜெய்சிங் வாங்கிய நிலத்தின்படி நிலம் ராமருக்கு சொந்தம் அதனால் கோவில் பெரிதாக கட்டுவோம், இனி அந்த பள்ளிவாசலையும் அனுமதிக்க முடியாது, மொகலாயருக்கு அடங்காத நாங்கள் நவாபுக்கும் அடங்கமாட்டோம் என மறுபடி எழுந்தார்கள்

இதுவரை இந்துக்கள் தற்காப்பை செய்தார்கள் அதாவது இந்த வளாகம் ராமனுக்கானது எங்களுக்கு உரிமை உண்டு என போராடி குடிசைபோட்டு ராமனை வைத்து தற்காத்தார்கள், தங்களுக்கான உரிமையினை விட்டுகொடுக்கவோ, ராமனுக்கான இடத்தின் உரிமையினை இழக்கவோ அவர்கள் தயாரில்லை

ஆலயம் இல்லை, பள்ளிவாசல் அருகே ஓலை குடிசையில் சிலநேரம் துணிமட்டுமே கூரையாக கொண்ட ராமபிரான் உருவம் என வைத்து அந்த போராட்ட உணர்வு மங்காமல் பார்த்து கொண்டார்கள்

மொகலாயம் அவுரங்கசீப்புக்கு பின் சரிந்து நவாபுகள் எனும் குட்டி சுல்தான்கள் எழ ஆரம்பித்த காலத்தில் திருப்பி அடிக்க ஆரம்பித்தார்கள், இனி பேச்சுவார்த்தைக்கோ சமரசத்துக்கோ ஒன்றுமில்லை எங்கள் இடம் எங்களுக்கு முழுக்க எங்களுக்கு என எழுந்தார்கள்

அதாவது பள்ளிவாசலே எங்கள் இடம் என திருப்பி அடிக்க ஆரம்பித்தார்கள்

இங்கே சில இந்து சிற்றரசர்களும் கலந்து கொண்டார்கள், 1722ல் அமேதி பகுதி ராஜா, இன்னும் ராஜா குருதத்சிங், பீபர்பூர் அரசர், குன்வர் அரசர் ராஜ்குமார் சிங் என பல இணைந்தார்கள்

மறுபடியும் போர் வெடித்தது இம்முறை இந்துக்களின் கோரிக்கை முழு வளாகமும் எங்களுக்கு எனும் அளவில் இருந்தது, மொகலாயம் உடைந்து சிதறியபின் சிறிய நவாப்களை கண்டு அஞ்சாமல் இந்துக்கள் பெரிதாக போராடினார்கள்

இக்கால கட்டங்களில் சீக்கியர்கள் மராட்டியர்களின் கவனம் காசியினை மீட்பதிலே இருந்தது அவர்கள் ஒருபக்கம் போர் புரிய இன்னொரு பக்கம் இந்த மன்னர்கள் அயோத்தி நவாப்

இவன் குட்டி சுல்தான் என்றாலும் இவனின் பூர்வீகம் பெர்ஷியா எனும் பாரசீகமாக இருந்தது, அங்கே பலமான இஸ்லாமிய ராஜ்ஜியம் இருந்தது அவர்களின் ஆதரவு இருந்ததால் இந்த சுல்தான் கொஞ்சம் ஆடிபார்த்தான்

அல்லது இப்படி ஆடினால் அவர்கள் தங்களுக்கு உதவிக்கு வந்து இஸ்லாமிய போராளி என அங்கீகாரம்தருவார்கள் என்ற கணக்கெல்லாம் இருந்தது

இதனால் அவன் போரை இழுத்தான் 17 வருடம் இப்போர் நடந்தது

இந்த போர் நடக்கும் போதுதான் இந்துஸ்தானின் சரித்திரத்தில் மிக பெரிய திருப்புமுனையான பெர்ஷியாவின் நாதிர்ஷா படையெடுப்பு நடந்தது

அந்த பாரசீக மன்னன் மொகலாயம் பலவீனமாதை கருதி மேற்கொண்டு இந்துக்கள் போராட்டம் எழுச்சி பெறுவதை அவதானித்து பாரசீக ஆட்சியினை டெல்லியில் நிறுவ படையெடுத்தான்

ஆனால் இங்கு இந்து எழுச்சி மத்தியில் ஆள்வது கடினம் என அறிந்தவன் கொள்ளையோடு திரும்பினான்

ஷாஜகானின் மயிலாசனம், கோஹினூர் வைரம் இன்னும் பெரும் செல்வங்களுடன் அவன் மொகலாயரை கிட்டதட்ட முடித்து வைத்துவிட்டு கிளம்பினான்

அந்த வைரத்துக்கு கோஹினூர் என பெயர் வைத்தவன் அவனேதான், முகமது ஷா எனும் மொகலாய மன்னனிடம் இருந்து அதை பறித்து சென்றான்

அவன் டெல்லியில் இருப்பான் அவன் நம்மை தாங்குவான் என எதிர்பார்த்த அயோத்தி சுல்தானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது, பாரசீக சுல்தா தன்னை பற்றி அதிகம் கண்டுகொள்ளவில்லை என்பதால் அவன் போரை நிறுத்திவிட்டு இந்துக்களுடன் உடன்பாட்டுக்கு வந்தான்

அதன்படி பள்ளிவாசல் ராமர் பிறந்த இடத்தில் கட்டபட்டது, அந்த உள்மண்டபம் இருக்கும் இடமே கர்ப்பகிரஹமாக இருந்தது என இந்துக்கள் சொன்னதை கேட்டு அவர்களை உள்ளே சென்று வழிபட அனுமதி அளித்தான்

இந்துக்கள் 200 வருடம் கழித்து அந்த இடத்தில் வழிபட்டனர், இப்போது இந்துக்களும் இஸ்லாமியரும் ஒரே இடத்தில் வழிபட்டார்கள்

இந்துக்களின் போராட்டம் வெற்றிகோட்டை நெருங்கிற்று, இருவரும் மாறி மாறி வழிபட்டார்கள்

இக்காலகட்டங்களில் சுல்தான்கள் கடுமையாக ஒடுக்கபட்டார்கள் அடுத்த 80 ஆண்டுகளில் மொகலாயம் வெறும் சிற்றரசாக சுருக்கபட்டது

எல்லாமே ஒரு காலத்தில் அடைய விருப்பமான கனவு பின்னாளில் அது ஒரு நினைவு என்பது போல மொகலாயம் கரைந்திருந்தது, வெறும் அடையாளம் மட்டும் எஞ்சியிருந்தது, பெயருக்கு ஒரு சுல்தான் இருந்தார்

அவர்களின் மயிலாசனம் கோஹினூர் வைரமெல்லாம் போனது, மொகலாயம் தரைமட்டமாகி கிடந்தது

ஆனால் மராத்தியர்களின் இந்து பேரரசு வேகமாக வளர்ந்திருந்தது சிவாஜி கொடுத்த எழுச்சியில் இந்துக்கள் பெரும்வெற்றி பெற்றனர், சீக்கியர்களுக்கும் ஒரு பலமான ராஜ்ஜியம் அமைந்து அங்கும் மன்னர்களெல்லாம் வந்தார்கள்

பலமான அரசுகள் இல்லாததால் ஆங்காங்கே சிதறிய சுல்தான்களை பிரிட்டிசார் வேறு முறியடித்து பல ராஜ்ஜியங்களை கைபற்றினார்கள்

தமிழக ஆட்சி ஆற்காடு நவாபிடமிருந்து கிழகிந்திய கம்பெனி ராபர்ட் கிளைவிடம் சென்றது, அப்படியே கல்கத்தாவினையும் கிளைவ் கைபற்றினான்

இப்படி மொகலாயம் வீழ்ந்து குட்டி குட்டி சுல்தான்களும் பெரும் போர்களும் நடந்து கொண்டிருந்தது, இந்துக்கள் இழந்ததை வேகமாக பெற்றுகொண்டிருந்தார்கள், காசியினை மீட்டு மீண்டும் காசி விஸ்வநாதன் ஆலயம் கட்டினாள் அகல்யாபாய்

ஆனால் அங்கே அவுரங்கசீப் கட்டிய கட்டடத்தை அவள் தொடவில்லை

அப்படி அயோத்தியிலும் பெரும் ஆலயம் கட்டவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது, இக்காலகட்டங்களில் இஸ்லாமிய சுல்தானியங்கள் வேகமாக சரிந்ததால் அயோத்தியிலும் இஸ்லாமியர் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது ஆனால் அவ்வப்போது வந்து செல்வார்கள்

அவுரங்கசீப்புக்கு பின் 80 ஆண்டுகளில் நிலமை இப்படி மாறி இருந்தது

சீக்கியர்கள் அரணாக எழும்பியதால் ஆப்கானில் இருந்து வரும் படையெடுப்புக்கள் கலகக்கார கோஷ்டிகளின் வரவு தடுக்கபட்டது

அந்த வரவு தடுக்கபட்டதால் இந்துஸ்தானில் சுல்தானியங்கள் தடுமாறின அவர்களின் பலமே அராபிய ஆப்கானிய வரவின் பலத்தில்தான் இருந்தது

அதை சீக்கியர்கள் தடுத்தபின் இங்கே சுல்தான்கள் நிலை மோசமானது, அவர்களைத்தான் இந்துக்களும் சீக்கியர்களும் ஒருபக்கம் அடிக்க, கடற்கரையோரம் பிரிட்டிசாரும் முறியடித்து வேகமாக சுல்தானியங்களை அகற்றிகொண்டிருந்தார்கள்

சீக்கியர்கள் எழுந்தபின்புதான் இந்துக்களுக்கு பெரும் அச்சம் நீங்கிற்று,நாதிர்ஷா போல இன்னொருவன் வரலாம் என அஞ்சிய இந்துக்களுக்கு சீக்கியர்களின் எழுச்சி காவலாய் இருந்தது

காசிவரை வந்துவிட்ட இந்துக்கள் அடுத்து அயோத்தியில் பெரும் போருக்கு தயாரானார்கள், ஆனால் ஒரு பக்கம் வந்த பிரிட்டிஷ் எழுச்சி பல அச்சங்களை கொடுத்தது

காரணம் இங்கே இருவர் அடித்துகொண்டிருந்தால்தான் தாங்கள் காலூன்றமுடியும் என்பதை அறிந்து சுல்தான்களுக்கு ஒரு பக்கம் ஆயுதம் இன்னொரு பக்கம் இந்துக்களுக்கு ஆதரவு என சூழ்ச்சியில் பிரிட்டிசார் முன்னேறிகொண்டிருந்தனர்

வாழ்வா சாவா என இருந்த சுல்தான்கள் நிலை, இனி ஒரு அந்நியனும் ஆளகூடாது இது இந்துதேசமாக மீளவேண்டும் என்ற இந்துக்களின் பெரும் எழுச்சி என இரண்டையும் தங்கள் ஆயுத வியாபாரமாக மாற்றி அப்படியே தங்கள் ஆட்சியினை இருவருக்கும் இடையி ஊன்றும் தந்திரத்தை பிரிட்டிசார் தொடங்கினார்கள்

இதெல்லாம் நடக்க மறுபடியும் அயோத்தியினை முற்றாக மீட்க ராஜபுத்திரர்கள் தயாரானார்கள், இன்னொரு பக்கம் ராமபக்தர்களின் வருகை மிகவும் அதிகரிக்க தொடங்கிற்று

(தொடரும்..)

ராஜா ஜெய்சிங்கும் அவன் வாங்கிய நிலத்தின் வரைபடமும் அங்கே சுட்டிகாட்டபடும் ஆலயமும் முதல் மூன்று படங்கள், அவாத் சுல்தான் அல்லது அயோத்தி சுல்தான் என மொகலாயருக்கு பின் ஆட்சியாளளாகிய அந்த ஷதாத் அலிகான், இவன் காலத்தில்தான் இந்துக்கள் அந்த வளாகத்தின் உள்ளே சென்று வழிபட உரிமை பெற்றனர்.