அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 06 /21
ஆங்கிலேயர் ஆட்சி காலப்போராட்டம்
இனி அதாவது 1855க்கு பின் இந்துக்களின் அயோத்தி பற்றிய நிலைப்பாடும், அந்த போராட்டம் எதை நோக்கி என்றது என்பதையும் சுருக்கமாக புரிந்துகொள்ளுதல் அவசியம்
அதுவன்றி வரலாற்றை புரிந்துகொள்ளுதல் சிரமமானது
அயோத்தியில் ராமபிரானின் ஆலயம் தசரதன் அரண்மனைமேல் கட்டபட்டது, அதை எப்படி கட்டினார்கள் என்றால் அவர் பிறந்த இடம் தனியே வேலியிட்டு காக்கபட்டது
பொதுவாக இம்மாதிரி அவதார இடங்களின் ஆலயங்களில் பிறந்த இடத்தின் மேல் விக்ரஹம் வைக்கமாட்டார்கள், அதை அப்படியே விட்டுவிட்டு அதன் அருகில்தான் கருவறை அமைப்பார்கள்
இப்படித்தான் ராமர் ஆலயத்திலும் அவர் பிறந்த இடத்தில் தொட்டில் மட்டும்தான் இருந்தது, ராமபிரானின் சன்னிதானம் அருகேதான் இருந்தது
அங்கே சீதை சமைத்த அறை கூட ஒரு பகுதியாக இருந்தது, அப்படித்தான் கால காலமாக இருந்தது, இதுதான் ஜென்மஸ்தான ஆலயமாக இருந்தது
அந்த மீர்பாக்கி என்பவன் பள்ளிவாசல் கட்டியபோது சரியாக ராமன் பிறந்த இடத்தில் கட்டிவிட்டான் என்பதுதான் இந்துக்களின் பெரும் வாதம், அதை நோக்கித்தான் அன்றில் இருந்தே போராடினார்கள்
ஆனால் எதிரி பலமாக இருக்கும்போது கிடைத்ததை வாங்கி உரிமை நிலைநாட்டுவது அவசியம், ஒரு உரிமையினை பெற்றுகொண்டு தொடர்ந்து போராடுவது அவசியம்,வெல்லமுடியா எதிரியினை காலம் வரும் வரை சமாளிக்கவும் உணர்வினை விட்டுவிடாமல் இருக்கவும் அந்த சமரசம் அவசியம்
(பாலஸ்தீன போராளி யாசர் அராபத் கூட அதைத்தான் செய்தார், எதிரி பலமானபோது தனிநாடு சாத்தியமில்லை எனும்போது சுயாட்சிக்கு சம்மதித்தார்)
எதிரி பலமான நேரம் விட்டுகொடுத்தல் தவறல்ல, அது தந்திரம். பின் எதிரி சாயும் நேரம் முழுவதையும் கோரவேண்டும்
இந்துக்கள் இந்த ராஜதந்திரத்தில்தான் விடாமல் போராடினார்கள் அந்த வளாகத்தில் எங்களுக்கு பங்கு உண்டு விடமாட்டோம் என நின்று சாதித்தார்கள், லட்சகணக்கான உயிர்களை இழந்து ஒரு சிறிய சிலையாவது வைத்து தங்கள் உரிமையினை காத்து காலம் வரும் வரை உணர்வினை விடாமல் பிடித்து கொண்டார்கள்
அவர்களுக்கு தெரியும், ஒரு மதம் நிலைக்க ஒரு நம்பிக்கை நிலைக்க சில வரலாறும் கோவிலும் அவசியம், அயோத்தியினை விட்டுகொடுத்துவிட்டால் நாளாவட்டத்தில் எல்லாம் மறையும் ராமனுக்கே ஆபத்துவரும் என்பதால் அதை விட்டுவிட்டால் ஏது பாரதம் என்பதால் வலுத்து நின்றார்கள்
அடித்தார்கள், அடிவாங்கினார்கள், அலறினார்கள், அழுதார்கள், ரத்தமும் கண்ணீரும் கொட்டி நின்றார்கள், ஆட்சி முதல் வீட்டின் சொத்துக்கள் வரை விட்டுகொடுத்து இந்த இடத்தைமட்டும் எங்கள் ராமனின் அவதார இடத்தை மட்டும் தந்துவிட கெஞ்சினார்கள்
எல்லா வகையிலும் போராடினார்கள், சுமார் 250 ஆண்டுகாலம் கழிந்து மொகலாயம் தடுமாறி அயோத்தி நவாப் வந்தபோதும் ராமன் பிறந்த இடத்தில்தான் அந்த பள்ளிவாசல் உண்டு அங்கேதான் நாங்கள் வழிபடுவோம் என அயோத்தி முதல் சுல்தான் ஷதாத் அலிகானிடம் உரிமை கோரினார்கள்
அவனும் சமாதனத்துக்காய் சம்மதித்தான், 1740களில் இருந்தே பள்ளிவாசலுக்குள் சென்று அந்த ராமன் பிறந்த இடத்தில் வழிபடும் உரிமை இந்துக்களுக்கு கிடைத்தது
அதை இன்னும் வலுவாக்கி அங்கே கோவிலை கட்டவேண்டும் என போராடிகொண்டேதான் இருந்தார்கள், அந்த இடத்துக்கு வெளியே ராமனுக்கு ஆலயம் சிறிதாக இருந்தாலும் இந்த “ராமன் லல்லா” எனும் அவன் பிறந்த இடமே அவர்கள் லட்சியமாக இருந்தது
மொகலாயத்துடன் முதல்கட்ட போரை முடித்து தங்கல் உரிமையினை நிலைநாட்டிய இந்துக்கள் அயோத்திக்கு நவாப்கள் வந்ததும் இரண்டாம் கட்ட போரை தொடங்கி உள்ளே நுழையும் உரிமை பெற்றார்கள்
இனி மொகலாயம் இல்லை, நவாபுகளும் வலுவிழக்கின்றார்கள், பிரிட்ட்சாரால் நவாபுகளும் அகற்றபடுகின்றார்கள் இனி நம் ஆலயம் நமக்கானது என இந்துக்கள் முழுக்க உரிமை கோரினார்கள்
இதுதான் 1850களின் நிலையாக இருந்தது, இங்கிருந்துதான் இனி வரலாற்றை காணவேண்டும்
அப்போது இந்துக்கள் பிரிட்டிசாரை பெரும் அச்சமாக தொடக்கத்தில் கருதவில்லை, சுமார் 30 ஆயிரம் பேர் கூட இல்லாத கூட்டம் அது, துப்பாக்கி பீரங்கி எல்லாம் உண்டுதான் ஆனால் இந்துஸ்தான மக்கள் நெருக்கத்திலும் பலத்திலும் அவர்கள் என்ன செய்துவிடமுடியும் என்று மிக சாதாரணமாக நினைத்திருந்தார்கள்
ஆனால் நரிதந்திரத்தால் பிரிட்டிசாரிடம் ஆட்சி சிக்கிற்று, இது அதிர்ச்சி என்றாலும் அடுத்தடுத்த போராட்டத்துக்கு தயாரானார்கள்
புலிக்கு தப்பி நரி வாயில் விழுந்தது போல மொகலாயரிடம் இருந்து தப்பி பிரிட்டிசாரிடம தேசம் விழுந்த 1855களில் இந்துக்கள் வழக்கம்போல் அயோத்திக்கு பெரும் போர் நடத்தி கொண்டிருந்தார்கள்
1750களில் பிரிட்டிசாரிடம் விழ தொடங்கிய இந்தியாவினை 1850களில் மொத்தமாக கிழக்கிந்திய கம்பெனி பிடித்திருந்தது சில இடங்களில் ஒப்பந்தம் சில இடங்களில் நேரடி ஆட்சி என அவர்கள் ஆள ஆரம்பித்தார்கள்
அப்போது அயோத்தியினை ஓரகண்ணால் பார்த்தே வந்தார்கள், 1850களில் மொகலாய கடைசி அரசர் இரண்டாம் பகதூர் ஷா சிற்றரசராக இருந்தார், அவரும் முடக்கபட்டிருந்தார்
இந்த காலகட்டங்களில் அயோத்தியில் இந்துக்கள் ராமன் லல்லா எனும் ராமன் பிறந்த இடம் வேண்டும், மொகலாயம் முடிந்து சுல்தானும் சரிந்தபின் எங்கள் இடம் எங்களுக்கு வேண்டும்
எங்களிடமிருந்து ஆக்கிரமிக்கபட்டது ஒரு காலமும் அவர்களுடையாதாகது அது எங்கள் சொத்து என திரண்டு நின்றார்கள்
அப்போது 1855 ல் ஒரு பெரும் கவலரம் வெடித்தது, அதை தொடங்கி வைத்தவன் ஒரு இஸ்லாமியன் ஆனால் யார் சொல்லி தொடங்கினான் என்பது மர்மமாகவே போய்விட்டது
அதுவரை இல்லா குழப்பமாக அவன் ஒரு விபரீத சிந்தனையினை சொன்னான், ராமர் ஆலயம் மேல் பள்ளிவாசல் எனும் பெரும் சர்ச்சையும் போரும் இருந்தபோது அவனோ ஹனுமன் கட்டி ஆலயமே ஒரு பள்ளிவாசல் மேல் கட்டபட்டது என விஷயத்தை தலைகீழாக்கினான்
அது ராமர்வரலாற்றில் இருந்து வரும் ஆலயம், காசிக்கு காலபைரவர் போல அயோத்தியின் காவல் தெய்வம் அந்த அனுமன் கத்தி ஆலய அனுமான், அந்த ஆலயத்தை குழப்பினான் அவன், அவனையும் ஒரு கும்பல் நம்பி இது பள்ளிவாசல் என கிளம்ப நிலமை மோசமானது
அவன் அந்த அனுமன் ஆலயத்தை அகற்றுவோம் பள்ளிவாசல் கட்டுவோம் என கிளம்பினான் அவனோடு சில நூறுபேரும் வந்தார்கள், அனுமன் ஆலயத்துக்கு அச்சுறுத்தலாயிற்று
அங்கே அரசர்படை இல்லை பெரும் காவல் இல்லை எனும் நிலையில் போர்காலம் அல்ல என்பதால் அந்த கும்பல் அனுமன் ஆலயத்தை இடிப்பது எளிதான் ஒன்று, அதற்கு வாய்ப்பு இருந்தது
ஆனால் அயோத்தியில் ஆங்காங்கே இருந்த பைராகி எனும் அகோரிகள் போராட வந்தார்கள், பெரும் அடிதடி அகோரிகளுக்கும் அவர்களுக்கும் நடந்தது, சுமார் 75 இஸ்லாமியர் கொல்லபட பெரும் கலவரமாயிற்று
அது பிரிட்டிஷ் ஆட்சிகாலம் என்பதால் பிரிட்டிசார் கலவரங்களை அடக்க கடமைபட்டவர்கள், அவர்கள் நவாபிடம் தக்வலை சொல்லி நிலமையினை கட்டுபடுத்த சொன்னார்கள்
நவாப் வாஜித் அலிகான் படையினை அனுப்பினான், அந்த படைக்கும் அந்த இஸ்லாமியன் கட்டுபடாமல் மோதும்போது கொல்லபட்டான், அவன் கொல்லபட்டதும் மீதி கலவரக்காரர்கள் பாபர் கட்டிய பள்ளிவாசலுக்குள் சென்று பதுங்கினார்கல்
அகோரிகள் விடாமல் சென்று அவர்களை பள்ளிவாசலில் இருந்து இழுத்து போட்டு தாக்கினார்கள், கலவரம் சிலநாட்கள் நடந்து பின் கட்டுபடுத்தபட்டது
பிரிட்டிசார் இதனை பெரும் கவனமாக எடுத்து 1820ல் இந்துக்களுக்கு நவாப் ஷதாத் அலிகான் கொடுத்திருந்த சலுகையினை அதாவது பள்ளிவாசலினுள் சென்று ராமர் பிறந்த இடத்தில் வழிபடும் உரிமையினை ரத்து செய்தார்கள்
இந்துக்கள் அதிர்ந்தார்கள் சுமார் 200 காலம் போராடி பெற்ற உரிமையினை எங்கிருந்தோ வந்த பிரிட்டிசார் எப்படி தடைசெய்யமுடியும்? யார் இவர்கள் நம்மை கட்டுபடுத்த என கிளர்ந்தெழுந்தார்கள்
இக்கால கட்டங்களில்தான் 1857ல் சிப்பாய் கலகம் உள்ளிட்ட பல விஷயம் நடந்தது, பிரிட்டிசாரை வெளியேற்ற ஆங்காங்கே இந்துக்களும் இஸ்லாமியரும் கூடி இரண்டாம் பகதூர் ஷாவினை அரசனாக வைத்து சண்டையிட்ட காலமும் நடந்தது
துருக்கியோ பாரசீகமோ வந்து பிரிட்டிசாரை விரட்டுவார்கள் என சுல்தான்கள் கணக்கும் இருந்தது, ஆனால் யாரும் வராததால் முயற்சி தோற்றது, மொகலாய கடைசி வாரிசான பகதூர் ஷாவும் பர்மாவுக்கு கடத்தபட்டார்
(அவுரங்கசீப் தன் சகோதரனை விரட்டி அடித்த அதே பர்மாவுக்கு அவுரங்கசீப்பின் வாரிசு அனாதையாக சென்று மரித்துபோனது, இன்றும் அவர் கல்லறை அங்கேதான் உண்டு )
பிடிட்டிசார் இதனால் கற்றுகொண்ட உண்மை, இந்துக்களும் இஸ்லாமியரும் இணைந்து நம்மை குறிவைக்கின்றார்கள் இவர்களை இணையவிட கூடாது என்பது
அந்த கலவரங்களால் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் அரசு நேரடியாக இந்தியாவினை ஆளும் உரிமையினை பெற்றபோது இந்த உண்மையினை உணர்ந்தனர்
இங்கு நிலமையும் அப்படித்தான் இருந்தது, சில ஆயிரம்பேர் கூட இல்லா பிரிட்டிசார் நம்மை எப்படி கட்டுபடுத்துவது என கூடி அவனை சீக்கியர், இந்துக்கள், இஸ்லாமியர் என எல்லோருக்கும் பொது எதிரியாக்கினார்கள்
பிரிட்டிசார் கணக்குபடி சீக்கிய இந்து ஒற்றுமையினை குலைப்பது கடினம் ஆனால் இந்து இஸ்லாம் பிரச்சினையினை , இந்துஸ்தானி ஆப்கானி எனபதில் இருந்து இந்து இஸ்லாம் என பிரிப்பது சுலபம்
அந்த முடிவில் இருந்தார்கள், அது அல்லாது தங்கள் ஆட்சி நிலைக்காது என்பது அவர்களுக்கு தெரியும்
இந்நிலையில் பிரிட்டிசாரின் உத்தரவை மீறி, முன்புபோல பள்ளிவாசலுக்குள் அதாவது ராமபிரான் அவதரித்த இடத்தினை வணங்க இந்துக்கள் முடிவெடுத்தார்கள்
அது மூன்றாம் கட்ட போராக வெடித்தது
மொகலாயர்களுடன் முதல் கட்டம், நவாபுகளுடன் இரண்டாம் கட்டம் என மோதிய இந்துக்கள் இப்போது பிரிட்டிஷாருடன் மூன்றாம்கட்ட போரை அயோத்திக்காக தொடங்கினார்கள்
ஆம் முதல் இரு ஆப்கானிய பெர்ஷிய துருக்கிய அந்நிய இஸ்லாமியருடனான போர் இப்போது ஐரோப்பிய கிறிஸ்தவ ஆட்சியாளருக்கு எதிராய் வெடித்தது
1857ல் அனுமன் கட்டியின் தலமை பூசாரி மஹந்த ராம்சரண்தாஸ் தலமையில் இந்துக்கள் திரண்டனர், உண்மையில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அதாவது இந்திய ஆட்சி பிரிட்டிஷ் அரசின் கீழ் சென்றபின் வெடித்த முதல் போராட்டம் அது
அதுதான் பிரிட்டிசு அரசுடனான இந்துக்களின் முதல் சுதந்திர போரும் கூட, அதற்கு முன் கிழக்கிந்திய கம்பெனி மோதல்தான் இருந்தது இனி பிரிட்டிஷ் அரசோடு நேரடியாக மோத வேண்டும்
ராமன் பிறந்த இடத்தை மீட்போம், மொகலாயரைய் எதிர்த்த நாம் இந்த சிறிய பிரிட்டிஷ் கூட்டத்தை விரட்டுவோம் என ஆர்பரித்த இந்துக்கள் திரண்டார்கள்
அயோத்தி அனுமன் கத்தி ஆலயத்தின் முன்னால் இருந்து யுத்தம் தொடங்கிற்று
இது பிரிட்டிசாருக்கு எதிரான யுத்தம் என்பதால் இஸ்லாமியர்களும் இந்துக்களுடன் கூடினார்கள். அமீர் அலி எனும் பள்ளிவாசல் மௌல்வியும் சேர்ந்தார் அவர் தலமையில் இஸ்லாமியர்களும் சேர்ந்து கொண்டார்கள்
இந்து இஸ்லாமிய கூட்டுபடை பெரும் சக்தியாக எழும்பிற்று, ஆனால் இந்துக்களில் சிலர் இதை விரும்பவில்லை
நாளை பிரிட்டிசாரை விரட்டினால் இவர்கள் ராமர்பிறந்த இடத்தை தரமாட்டார்கள் மீண்டும் நம்முடன் மோதுவார்கள் எனும் ஆபத்தை சுட்டிகாட்டினார்கள்
அது ஒருவகையில் பின் நிபந்தனையாகி போனது, ராமர் பிறந்த இடத்தை விட்டுதந்தால்தான் இஸ்லாமியர்கள் தங்கள் ஆலயத்தின் நிலத்தை அவர்களாக தந்தால்தான் அதனை ஒப்படைத்தால்தான் இணைந்து போரிடுவோம் என நிபந்தனை விதித்தார்கள்
அதாவது பிரிட்டிசாரை அகற்றிவிட்டாலும் நவாப் பதவியினை நீங்களே வைத்து கொள்ளுங்கள், ராமர் மட்டும் எங்களுக்கு போதும் முழு ஆலயமும் எங்களுக்கு போதும் என மிக மிக உருக்கமாக நின்றார்கள்
இஸ்லாமியருக்கும் வேறு வழி இல்லை என்பதால் விட்டுகொடுக்க முன்வந்தார்கள், இந்துக்கள் தரப்பில் ராம்சரண்தாஸர் , இஸ்லாமியர் தரப்பில் அமீர் அலி ஆகியோர் இந்து முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் ராமஜன்ம பூமியில் கட்டப்பட்ட மசூதியை ஹிந்துக்கள் ராமர் கோவில் கட்ட அனுமதிக்க ஒப்பந்தம் செய்தனர்
எந்த எதிர்ப்பு வந்தாலும் சமாளிக்க தயாரானார்கள்
(பிரசித்தியான விடுதலைபோராட்ட வீரன் மங்கள் பாண்டே இக்காலகட்டத்தில்தான் துடிப்பாய் இருந்தான், அயோத்தியின் சமீபமாகத்தான் அவன் நடமாட்டம் இருந்தது
அவனின் பங்களிப்பும் இந்த போரில் உண்டு , பிரிட்டிசார் அவனை அவ்வளவு முனைப்போடு கொல்ல அயோத்தியும் ஒரு காரணம்)
மௌலவி அஹ்மதுல்லா ஷா என்பவர் அந்த பிராந்தியத்தின் அறியபட்ட இஸ்லாமிய வீரர் , பிரிட்டிஷ் படைகளுக்கு பெரும் சவாலாக இருந்தவர், அவரும் இந்த விட்டுகொடுத்தலுக்கு சமமதித்திருக்கின்றார் என்பது வரலாறு
இதை அறிந்த ஆங்கிலேயர்கள் அரண்டே போனார்கள், இப்படி இந்து இஸ்லாம் ஒற்றுமை வந்தால் தங்களுக்கு ஆபத்து என்பதால் முளையிலே கிள்ளி எறிய துடித்தார்கள்
பிரிட்டிசார் எப்போதுமே இங்கு விழிப்பாக இருந்தார்கள், படைகளை சரியாக ஆங்காங்கே பிரித்து வைத்திருந்தார்கள், ஒரு ஆபத்து என்றால் சங்கிலி தொடராக படைகள் வருமளவு ஒரு இணைப்பு இருந்தது
உலகெல்லாம் இருந்து திரட்டிய படைகள் இந்தியாவில் திரட்டிய படைகள் என எப்போதும் படைகள் ஆங்காங்கே நவீன துப்பாக்கி வெடிகுண்டு சகிதம் இருந்தது
அந்த படைகளை அனுப்பி இந்த முயற்சியினை முறியடித்தார்கள், போர் வெடித்தது ஆனால் ஆங்கிலேயர் வழமையான வேகதாக்குதல் , போரை விரைந்த்து முடித்து உதவிக்கு யாரும் வராமல் தடுத்தல் ஆகிய வழமையான தந்திரங்களால் முறியடித்து முக்கியஸ்தர்களை கைது செய்தார்கள்
அப்படி பலரை கொன்று அந்த பூஸாரி ராம்சரண்தாஸர் மற்றும் அமீர் அலி என இருவரையும் அவர்கள் பின்னால் நின்று ஒப்பந்தம் செய்தவர்களையும் அங்கிருந்த புளியமரத்தில் இரு பக்கமும் தூக்கிலிட்டார்கள்
துப்பாக்கி முனையில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் கதற, ஆங்கிலேயரின் எதிர்ப்பை மீறமுடியாமல் கையறு நிலையில் கதற அந்த கொடுமை நடந்தது
சுமார் 100 பேருக்கு மேல் தூக்கிலிடபட்டதாக செய்திகள் உண்டு
அது நீண்ட போராக தொடர்ந்திருந்தால் அக்கம் பக்கம் இந்துக்களும் இஸ்லாமியரும் வந்திருக்கலாம் இந்த கொடுமை நடந்திருக்காது, ஆனால் பிரிட்டிசார் முந்திகொண்டார்கள்
ராம் ஜென்ம பூமிக்காக அதுவரை இந்துக்கள் செத்துகொண்டிருந்த இடத்தில், அதை கொடுக்கமாட்டோம் என இஸ்லாமியர் செத்து கொண்டிருந்த இடத்தில் இப்போது இருவரையும் ஒருசேர கொன்றுகொண்டிருந்தான் பிரிட்டிஷ்காரன்
உண்மையில் அயோத்தி 1857ம் ஆண்டே மீட்கபட்டது, இஸ்லாமியர்களே அந்த வளாகத்தை இந்துக்களிடம் ஒப்டைத்துவிட்டார்கள்
மொகலாயம் வீழ்ந்து நவாபுகளும் பலமிழந்தபின் அயோத்தி ராம்ஜென்மபூமி முழுக்க இந்துக்களுக்கே கிடைத்தது, எல்லாம் சரியாக முடிந்தது
பிரிட்டிசார் மட்டும் சரியான ஆட்சியாளர்களாக இருந்திருந்தால் அன்றே ராமர்கோவில் எழும்பியிருக்கும் ஒரு சிக்கலும் இருந்திருக்காது
ஆனால் பிரிட்டிஷ்காரனிடம் அதை எதிர்பார்க்க முடியாது, அவன் வியாபாரம் செய்யவந்தவன் அப்படியே இங்கு ஆட்சி அதிக லாபம் என பலவீனமான இடம் பார்த்துபிடித்துவிட்டான் அவனுக்கு எல்லாமே பணம், இங்கிருந்து கடத்தவேண்டிய தங்கம் வைரம் என செல்வங்கள் கணக்கு
இதனால் அவன் இந்து முஸ்லீம் நல்லுறவை விரும்பவில்லை மாறாக அந்த சிக்கலை பெரிதாக்க விரும்பினான் அதை அயோத்தியில் இருந்தே தொடங்கினான்
இது எங்கள் ஆட்சி, இங்கு இந்துக்களும் இஸ்லாமியரும் எங்களை கேட்காமல் செய்த ஒப்பந்தம் செல்லாது, அது பள்ளிவாசல்தான் இது இந்துக்களின் சிறிய ஆலயம்தான் என மறுபடி பிரித்துபோட்டு இரு மதங்களின் மோதலாக அதை மாற்ற வழிசெய்து , மதம் வழி இங்கு கலவரங்களுக்கு விதைபோட்டான்
அதுவரை ஆட்சி ரீதியாகத்தான் இந்துக்கள் ஆப்கானியர் மோதினார்கள், மத ரீதியான குழப்பம் இல்லை, மோதலும் இல்லை
அப்படி ஒரு மோதலை 1857ல் பிரிட்டிஷார்தான் தொடங்கினார்கள், தீரா குழப்பங்களை தொடங்கி வைத்தார்கள்
ஆனால் இந்துக்களும் இஸ்லாமியரும் அந்த 1857ல் இணைந்தேதான் நின்றார்கள், “குபேர டீலா” எனும் மேடான பக்கம்தான் அந்த புளியமரம் இருந்தது, அங்குதான் இம்மக்கள், நம்மக்கள் தூக்கிலிடபட்டார்கள்
அதன்பின் இந்துக்களும் இஸ்லாமியரும் அந்த மரத்தையே வணங்க ஆரம்பித்தார்கள், அது ஒற்றுமையின் மரமாயிற்று
பிரிட்டிஷ் கண்கள் அந்த மரத்தை குறிவைத்தன, இந்துக்களும் இஸ்லாமியரும் மீண்டும் போராட வந்தனர்,
(இந்து இஸ்லாம் ஒற்றுமையின் அடையாளமாக, இந்துக்களும் இஸ்லாமியரும் பிரிட்டிசாரால் கொல்லபட்ட கொடுமையின் அடையாளமாக அந்த குபேர் டீலா இன்றும் உண்டு
இந்துக்கள் ஒரு ஆலயம் அமைத்து அங்கே இற்ந்தோருக்கு வழிபடுவார்கள், இஸ்லாமியரும் அங்கு முன்பு வருவது உண்டு, அப்படி ஒற்றுமை இருந்தது
இப்போது அந்த தியாகத்தின் நினைவாக அந்த குபேர் டீலா ஆலயமும் புதுபிக்கபடுகின்றது )
இக்காலகட்டங்களில் இஸ்லாமியர் அந்த பள்ளிவாசலையும் முழு வளாகத்தையும் இந்துக்களுக்கு கொடுத்தே விட்டனர், ஆனால் அது கூடாது செல்லாது என அடம்பிடித்து மோதலை வளர்த்தது பிரிட்டிசார்தான்
ராமர் ஆலயத்துக்கான மூன்றாம் மோதலை தொடக்கத்தில் இந்துக்களும் இஸ்லாமியரும் சேர்ந்துதான் பிரிட்டிஷாருக்கு எதிராக செய்தார்கள்
அது அப்போது ராம்ஜென்ம பூமி போராக மட்டும் அல்ல, அதுதான் இஸ்லாமியரும் இணைந்த சுதந்திரபோராக இருந்தது
ஆனால் இந்துக்கள் சுமகக்வேண்டிய பாரமும் , சிந்தவேண்டிய ரத்தமும் அழ வேண்டிய அழுகையும் நிரம்ப மீதி இருந்தது அது அடுத்த 150 ஆண்டுக்கு இருந்தது என்பதை அனுமன் கத்தி அனுமார் மட்டும் அறிந்திருந்தார்…
(தொடரும்..)