அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 09 /21
ஆங்கிலேயர் ஆட்சி இறுதி காலப்போராட்டம்…
(அயோத்தி ஆலய போராட்ட வரலாற்றின் முதல் 400 வருடங்களின் பெரும் போராட்டத்தின் மிக சுருக்கிய வடிவத்தைத்தான் இதுவரை கண்டோம்
அந்த போராட்டம் நீண்டது, 76 பெரும் போர்களை கொண்டது, அதை முழுக்க எழுதினால் 10 ஆண்டுகள் வரும் வரை வரும் அவ்வளவு நீளமான போராட்டம் அது
அதனால் மிக மிக சுருக்கி முக்கிய காலகட்டங்களை மட்டும் கோடிட்டு காட்டினோம், இனி சுதந்திரம் நெருங்கும் காலகட்டத்தினை காணலாம்)
1940க்கு பின் உலக நிலமைகள் பிரிட்டிஷ் இந்தியாவில் பெரும் பாதிப்புக்களை கொடுத்தது, ஏற்கனவே விடுதலை கேட்டு போராடிகொண்டிருந்த இந்தியா நேதாஜியின் ஆயுதமுனை, காந்தியின் அஹிம்சை முறை என களபேரமானது
பிரிட்டிசார் உலக அரங்கில் பலமிழந்தார்கள், அமெரிக்காவும் சோவியத் யூனியனும் அடுத்த பெரும் சக்திளாக காட்டிகொண்டிருந்தன, உலக நாடுகளின் வரைபடங்களெல்லாம் அழித்து அழித்து எழுதபட்டன
இந்துக்கள் இக்காலகட்டத்தில் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக இருந்தார்கள், அயோத்தி நிலவரத்தை பொறுத்தவரையில் ஒரு முடிவுக்கு அப்போதே தேசம் வந்திருந்தது
அந்த பள்ளிவாசலை தொடர இஸ்லாமியர்கள் ஆர்வம் காட்டவில்லை, தீரா போராட்டம் நடத்திய இந்துக்களிடம் ஒப்படைக்கும் முடிவுக்கு வந்திருந்தார்கள், பிரிட்டிசாரின் குழப்பம் ஒன்றாலே அது தள்ளிபோய்கொண்டிருந்தது
இதனால் பிரிட்டிஷார் வெளியேறினால் ராமர்கோவில் தானாக வரும், பிரிட்டிஷார் வெளியேறும் காலமும் நெருங்குகின்றது என காத்திருந்தார்கள்
500 கால இடைவெளியில் அதாவது ராமபிரான் பிறந்த இடத்தில் ஆலயம் இல்லாத நிலையில் இனி அது எப்போது வரும் என தெரியாத நிலையில் இந்துக்கள் மிகபெரிய காரியத்தை செய்தார்க்ள் அலல்து ராமபிரானின் சூட்சும அருள் அவர்களுடன் இருந்தது
ராமபிரான் யுகங்களை தாண்டி நிலைத்தவர்
காலமெல்லாம் அவர் இந்துக்களோடு தொடர்ந்து வருபவர் , அன்றைய காலம் தொடங்கி இன்றைய கணிப்பொறி காலம் வரை அவர் தொடர்ந்து இந்துக்களோடு வருவது நம்பமுடியாத ஆனால் நம்பியே தீரவேண்டிய அதிசயம்
இன்றும் உலக மதங்களில் காலத்தால் மூத்தது இந்துமதமே, அதில் ராமனின் காலம் மிக மூத்தது
எத்தனையோ மதங்கள் இடையில் வந்து இடையிலே மறைந்தன சில மதங்கள் சில ஆயிரம் வருடம் கூட தாங்கமுடியாமல் ஒழிந்தன ஆனால் ராமன் அன்றிலிருந்து இன்றுவரை நிலைத்து நிற்கின்றார்
இஸ்லாமோ கிறிஸ்தவமோ மட்டும்தான் இந்துக்கள் மேல் ஏவபட்ட முதல் ஆபத்து அல்ல, அதற்கு முன்பே பவுத்தம், சமணம் என பல ஆபத்துக்களை க்டந்துதான் இந்துமதம் வந்தது
அந்த மதம் காலம்தோறும் தன்னை ஒவ்வொரு கட்டத்திலும் புதுபித்து கொள்ளும் அதன் சக்தி அது, அதனால்தான் என்றோ வால்மீகி எழுதிய ராமாயணம் என ஒன்றைமட்டும் அது கொண்டிருக்கவில்லை அப்படி இருந்திருதால் என்றோஎல்லாம் முடிந்திருக்கும்
இங்கு கட்டடம், ஆலயம், வாழ்வு, கலை, சமூகம்,இசை, இலக்கியம் என எல்லா வகையிலும் ராமன் வாழ்வு கலந்திருந்தது, காலம் மாற மாற ராமாயணமும் ராம பக்தியும் ஒவ்வொரு வடிவில் மாறிவந்துகொண்டே இருந்தது
அப்படித்தான் பவுத்த காலத்தில் கம்பன் ராமாயணம் எழுதினான் இன்னும் பலர் எழுதினார்கள், கோவில் எழுப்பினார்கள் புது புது சிலை செய்தார்கள், பண்டிகை வழிபாடுகள் இலக்கியம் என ராமபக்தி நின்று நிலைத்தது
ஒரே ஒரு வால்மிகி ஒரே ஒரு ராமர்கோவில் என இருந்திருந்தால் என்றோ எல்லாம் முடிக்கபட்டிருக்கும் ஆனால் இங்கு அப்படி அல்ல சோதனை வரும்போதெல்லாம் ராமர் பல வடிவங்களில் பலரால் எழுப்பட்டு விஸ்வரூபமெடுப்பார்
அப்படி அயோத்தியில் ராமன் ஆலயம் இடிக்கபட்டு பள்ளிவாசல் கட்டபட்ட காலங்களில் யார் யாரோ வந்தார்கள்
துக்காராம், துளசிதாசர் என பலர் வந்தார்கள், ஸ்மர்த்த ராமதாசர் வந்தார் இன்னும் பலர் வந்து ராமனை தாங்கி பிடித்து வளர்த்தார்கள்
வீரசிவாஜி போன்ற இந்து அரசர்கள் எழும்பினார்கள்
அரசு , ஞானிகள், மேதையர் என தொட்ட ராமபக்தி இன்னும் அடிதட்டு மக்களின் வழிபாடு, கூத்து, பாவை கூத்து, நாடகம் என எல்லா இடங்களையும் தொட்டது
தமிழகத்தில் திருவையாற்று மகான் தியாகராஜ பாகவதர் கர்நாடக சங்கீதத்தில் ராமன் புகழ் பாடினார் என்றால் சங்கரதாஸ் ஸ்வாமிகள் நாடகங்களில் பாடினார்
தெருகூத்துவரை ராமன் பெயரிலே அமைந்தது, இந்துக்களின் ஞானியர்களும் மேதைகளும் மட்டும் ஆலயங்களும் பூசாரிகளும் மட்டும் ராமனை வைத்திருந்தால் அப்படி காலம் காலத்துக்கு வந்திருக்கமுடியாது
இலக்கியம், மேதைகள், அடிதட்டு மக்கள், சமூகம், கொண்டாட்டம் என எங்கும் திரும்பும் பக்கமெலலம் ராமனே நிறைந்திருந்தார்
1920க்கு பின் உலகில் சோவியத் வந்தபின் நாத்திகம் பெருகிற்று, அந்த நாத்திகம் இங்கே இந்துமதத்தை ஒழிக்கவும் நயமாய் கம்யூனிசம், நாத்திகம், திராவிடம் என முளைவிட்டது ஆனால் இந்துபக்தியினை ராமனை அதனால் தொடமுடியவில்லை
இக்காலகட்டங்களில் சோவியத் யூனியனே அதிர்ந்த விஷயம் என்னவென்றால் இந்தியா அப்போது ஏழை நாடு வறுமை அதிகம், பொதுவாக வறுமை இருக்குமிடம் பொதுவுடமை நாத்திகம் எளிதாக வளரும்
ஆனால் அந்த கொடிய வறுமையிலும் இந்துக்கள் உணவை தேடவில்லை ராமனைத்தான் தேடினாரர்கள் என்னதான் கொள்கை, சித்தாந்தம் வாதம் வந்தாலும் இந்து உணர்வை யாராலும் தொட்டு பார்க்கமுடியவில்லை
1945ம் ஆண்டு இரண்டாம் பெருயுத்தம் முடிந்து பிரிட்டிஷார் கிளம்பும் நேரம் வந்தது
பிரிட்டிசார் இந்தியாவினை அபப்டியே விட்டு செல்ல விரும்பவில்லை பலத்த முன்னேற்பாடுகளை செய்தார்கள், தாங்கள் வெளியேறினாலும் தங்கள் தொழில் நடக்கவேண்டும் இந்தியா தன்னை நம்பியிருக்கவவேண்டும் என தந்திரமாக செய்தார்கள்
அவர்களின் அச்சம் தாங்கள் வெளியேறிவிட்டால் சோவியத் இந்தியாவினை கைபற்றலாம் என்று இருந்தது இதனால் தங்களுக்கு தோதான ஒரு இடம் தேடினார்கள் அது மேற்கு எல்லையாக இருந்தால் நல்லது என கணக்கிட்டு பாகிஸ்தானை உருவாக்கினார்கள்
ஜின்னா அவர்களின் கைகூலியாக நின்றான்
இந்துக்கள் நிரம்பிய இந்தியா தங்களை ஏற்காது என்பதையும், துருக்கியினை உடைத்துபோட்டதால் மனமுடைந்த இஸ்லாமியருக்கு சகாயம் காட்டுவதுபோல் தாங்கள் சீனாவை ரஷ்யாவினை கண்காணிக்க ஒரு இடத்தை அடையவேண்டும் என பாகிஸ்தானை உருவாக்கினார்கள்
உலகில் 70 நாட்களில் உருவான ஒரே நாடு பாகிஸ்தான்
1945 முதல் 1947 வரையான காலங்கள் இந்திய வரலாற்றில் ரத்தமயமானவை, இரு பாகிஸ்தான்கள் என பிரிக்கபட்ட நேரம் அது ரத்த முனையில்தான் வெட்டபட்டது
மேற்கே இந்துக்களும் சீக்கியர்களும் கிழக்கே வங்காள இந்துக்களும் கடுமையாக பாதிக்கபட்டார்கள், பலகோடி இந்துக்கள் பலியாகி சொத்துக்களும் கால்நடைகளும் பறிக்கபட்டு பெண்களுக்கு மானமும் உடலும் பறிக்கபட்டு அப்போது நிகழ்ந்தவை எல்லாம் மானுடம் தலைகுனியும் தருணம்
காந்திமேல் மக்கள் நம்பிக்கை இழந்ததும் இனி அவரை நம்ப தயார் இல்லை என வாய்விட்டு சொன்னதும் அப்போதுதான்
விடியும் என நம்பிய இந்துக்களுக்கு இடிமேல் இடியாக விழுந்தன அடிகள்
முதலில் தேசபிரிவினையினை அவர்கள் எதிர்பார்க்கவில்லை, கடைசியில் நிலமை இவ்வளவு மோசமானபின் இனி இஸ்லாமியர் தனித்து செல்வது நல்லது என விட்டுவிட்டார்கள்
ஆனால் அப்பக்கம் இஸ்லாமிய பாகிஸ்தான் என்றால் இப்பக்கம் இந்து இந்தியா அல்லவா? அதை தவிர என்ன அமைந்துவிட முடியும்?
இனி இந்து இந்தியா, ஆயிரம் ஆண்டுகளாக எந்த பசுவதை, இந்து ஆலய இடிப்பு, இந்து ஒழிப்பு என இந்துக்களுக்க்கு விரோதமான அனைத்தும் இந்துக்களுக்கு ஒரு அரசு இல்லாததால்தானே நடந்தது?, இனி அது நடக்காது என நம்பினார்கள்
ஆயிரம் ஆண்டுகளாக இங்கு நிலவிய குழப்பங்களுக்கு இரு நாடுகளை கொடுத்ததால் இனி இது பூரண இந்துநாடு இனி இங்கு இந்துக்களுக்கான நலன் காக்கபடும், இனி இந்து ஆலயங்கள் மீளகட்டபடும், இந்துமதம் இனி வாழும் என நிம்மதி கொண்டார்கள்
ஆயிரம் ஆண்டுக்கு பின் பரிபூரண இந்துநாட்டை அடைந்துவிட்டதை எண்ணி ஆசுவாசபட்டார்கள்
ஆனால் காங்கிரஸின் முடிவு அவர்கள் நம்பிக்கையினை குலைத்துபோட்டது, முதலில் இந்துக்கள் குழம்பினார்கள்
அப்பக்கம் இஸ்லாமியர் நாடு என்றால் இது இந்துநாடு அல்லாமல் எப்படி மதசார்பற்ற தேசமாக இருக்கமுடியும் என பொருமினார்கள்
ஒரு பக்கம் சீக்கியர் மனமொடிந்து கிடந்தார்கள் , அவர்களின் இதயமான் லாகூர் பாகிஸ்தானுக்கு கொடுக்கபட்டதில் காலமெல்லாம் தாங்கள் நடத்தியபோர் வீணானது போல் துடித்தார்கள்
காங்கிரசுக்கும் அவர்களுக்கும் முரண்பாடுகள் வந்தன, இந்துக்களும் சீக்கியர்களும் அனாதை ஆனதுபோல் உணர்ந்தார்கள்
காந்திக்கே சில முரண்பாடுகள் வந்தன, காங்கிரஸின் போக்கு அவருக்கே குழப்பமானது, சுதந்திரத்துக்கு பின் காங்கிரஸ் கலைக்கபடவேண்டும் மக்கள் விரும்பும் கட்சி வரவேண்டும் என்பதில் அவர் தீவிரமாய் இருந்தார்
இக்காலகட்டத்தில்தான் அவர் மரணம் நிகழ்ந்தது, கோட்சே ஒன்றும் அவரை முதலில் சுடவில்லை ஏகபட்ட கொலைமுயற்சி நடந்தது
அப்போதும் ஏன் உரிய காவல் அவருக்கு கொடுக்கபடவில்லை என்பது முதல் மர்மம், இன்னும் எத்தனையோ மர்மம் இருந்தாலும் முக்கிய நிகழ்வு காந்தி கொலையினை காட்டி இந்துக்களை ஒடுக்கியது
அயோத்தி ஆலய நம்பிக்கை அங்கே இதைகாட்டி மூழ்கடிக்கபட்டது, இன்னும் துரோகங்கள் தொடர்ந்தன
வரலாற்றில் நிகழ்ந்த முதல் குழப்பம் சுத்தம் செய்யபடாமலே புதிய அரசை அமைத்தது, அங்குதான் எல்லா தவறுகளும் தொடங்கின
அதாவது எதிரி நம் வீட்டை பிடித்து வைத்திருந்தால் அவன் வெளியேறியபின் வீட்டை முழுக்க அலசி சுத்தம் செய்து எல்லா சீரமைப்பும் செய்து பாதுகாப்பை உறுதி செய்துவிட்டுத்தான் குடியேற வேண்டும்
ஆனால் இந்தியாவில் ஆட்சி இந்தியர் கைக்கு வந்ததே தவிர அதிகாரிகளெல்லாம் பிரிட்டிஷ் காலத்து ஆட்களாக அரச எந்திரத்தை இயக்கினார்கள்
பிரிட்டிஷார் காலம் சுதந்திரபோர் காலம், அப்போது தனக்கு வேண்டியவர் தேசபற்றே இல்லாதவர்கள் ஒருவகையில் கைகூலிகள் என அவனின் தேர்வுகளே இருந்தன
இந்த அதிகார வர்க்கம் பிரிட்டிஷ் ஆட்சியின் சாயலை காங்கிரஸ் ஆட்சியில் புகுத்தியது, அதுதான் முதல் குழப்பம்
இந்திய சட்டங்களும் பிரிட்டிஷாரின் சாயலில் எழுதபட்டன, இந்துக்கள் அனாதை ஆக்கபட்டார்கள் சிறுபான்மையினர் தெய்வகுழந்தை ஆக்கபட்டார்கள்
சாதி என ஒன்றைகாட்டி பயமுறுத்தி இந்துமதம் அழியும் அளவு சட்டங்களை இயற்றி கொண்டிருந்தார்கள் , இன்னும் என்னென்ன குழப்பமெல்லாமோ வந்தது
இனி இந்துஸ்தானம் அமையும் அயோத்தியில் ஒரு சிக்கலுமில்லை என நம்பிய மக்களுக்கு சுதந்திர இந்தியாவில் நேரு அரசாங்கம் சொன்ன வார்த்தைகள் இடியாய் விழுந்தன
“இது சமயசார்பற்ற நாடு அதனால் அயோத்தியில் அதே நிலை தொடரும், இந்துக்கள் ஏதும் செய்தால் சட்டம் பாயும்”
அதிர்ந்துபோய் உட்கார்ந்தனர் இந்துக்கள்
மொகலாயர் செய்ததை, பிரிட்டிசார் செய்ததை அப்படியே காங்கிரஸும் செய்ய ஏன் சுதந்திரம் வாங்க வேண்டும்?
அவர்கள் வாள்முனையில் பச்சை கொடியுடன், பின் துப்பாக்கி முனையில் சிலுவை கொடியுடன் செய்ததை இப்போது மதசார்பற்ற சட்டம் என மூவர்ண கொடியுடன் இவர்கள் செய்தால் நடப்பது என்ன?
பலவாறு குழம்பினார்கள்
அதுவரை அவர்களுக்கு தங்கள் எதிரி யார் என தெரிந்தது, மொகலாயரோ நவாபுகளோ நேரடியாக மோதினார்கள் சிக்கல் இல்லை
பிரிட்டிசார் சட்டம் நீதிமன்றம் என வைத்தாலும் அந்நிய மதத்தவர்கள் பிழைக்க வந்தவர்கள் அதனால் குழப்புவார்கள் அதுவும் புரிந்தது
ஆனால் காங்கிரஸ் அவர்களுக்கு குழப்பத்தையே கொடுத்தது, உண்மையில் தங்கள் எதிரி யார் என குழம்பினார்கள்
அந்த 1949ல் ஏகபட்ட நாடுகளுக்கு சுதந்திரம் கிடைத்தது
சீனர்கள் இனி கம்யூனிச அரசாங்கம் என மாறினார்கள், யூதர்கள் யூத இஸ்ரேலிய நாடு அடைந்தார்கள் , இன்னும் பல நாடுகள் இதுதான் எங்கள் மதம், இதுதான் எங்கள் அடையாளம் என அறிவித்துகொண்டு நாடு அடைந்தன
ஆனால் பெரும்பான்மை இந்துக்களை கொண்ட தேசத்தவர்கள், அதுவும் ஒருபக்கம் பாகிஸ்தானை இஸ்லாமியருக்கு கொடுத்துவிட்டு ஏமாந்தவர்கள் குழம்பினார்கள்
இது மக்களாட்சிதேசம், மக்களே தங்களை ஆளும் தேசம் இங்கே என்ன தடை? பெரும்பான்மை இந்துக்களை கொண்ட இந்நாட்டில் இந்துதெய்வம் ராமனுக்கு கோவில்கட்ட யார் தடை என குழம்பினார்கள்
அதுவரை தங்கள் எதிரிகளை அடையாளம் கண்ட இந்துக்கள் இம்முறை எதிரி யார் என தெரியாமல் குழம்பினார்கள், பின் மெல்ல அது காங்கிரஸ்பின்னால் இருக்கும் யாரோ என கண்டுகொண்டார்கள்
ஆட்சி பிரிட்டிஷிடம் இருந்து காங்கிரஸ் எனும் அவர்கள் முகமூடி கைக்கு மாற்றபட்டதே தவிர சுதந்திரம் இன்னும் வரவில்லை என்பதை உணர்ந்து தெளிந்தார்கள்
மொகலாயர், நவாபுகள், பிரிட்டிஷார் என மூன்று பெரும் சக்திகளோடு மோதிய இந்துக்கள் அடுத்து காங்கிரசோடு தர்ம யுத்தம் , நீதிமன்ற யுத்தம் தொடங்கினார்கள்
இப்போது அவர்கள் எதிரி சர்வசக்தி பொருந்திய நேரு, பிரிட்டிஷாரின் தயவில் நாடெங்கும் பெரும் அறிஞன் படித்தவன் அழகன் செல்வந்தன் என உருவாக்கபட்ட நேரு
காந்தி கொலையினை காட்டி மொத்த இந்துக்களையும் குழப்பி அடக்கிவைத்து ஒரு சர்வாதிகாரியாய் அமர்ந்திருந்த நேரு
இந்துக்கள் புன்னகைத்தபடி எழுந்தார்கள் , காரணம் அவர்கள் அவுரங்கசீப்பையும் பிரிட்டிஷ் அரசனையுமே கண்டு பின்வாங்காமல் போராடியவர்கள் , நேரு அவர்களை என்ன செய்துவிடமுடியும்?
நீதிமன்ற கதவுகளை தட்ட தயாரானார்கள், அதற்கான எல்லா உரிமையும் தர்மமும் நியாயமும் அவர்களிடமே இருந்தது
நீதிமன்ற கதவுகள் தானாக திறக்காது அல்லவா? அதற்கான காரணம் வேண்டும்
ஒருபக்கம் இந்துமதம் மேல் எனக்கு நம்பிக்கையில்லை நான் மதசார்பற்ற நாகரீக இந்தியாவினை உருவாக்கபோகின்றேன் என கிளம்பி இஸ்லாமிய பாகிஸ்தானிடம் பாதி காஷ்மீரை இழந்தாலும் வீரியமான பேச்சுக்களை பேசிகொண்டிருந்தார் நேரு
ஆனால் இந்துமதம் இல்லா இந்தியா சாத்தியமே இல்லை, இந்துக்களை இந்துமதத்தை புறக்கணித்துவிட்டு இந்தியாவினை வளர்க்க முடியாது, இந்துமதம் வளர்ந்தால் இந்தியா வளரும் அதை அழிக்க நினைத்தால் இந்தியாசரியும் என்பதை நேரு அறியாதவராகவே இருந்தார்
மொகலாயரும் பிரிட்டிஷாரும் எப்படி இந்துமதத்தை தொட்டு அழிந்தார்களோ அப்படியான வீழ்ச்சிக்கு காங்கிரஸை அவரும் தயார்படுத்தினார்
சுதந்திரம் அடைநது இருவருடானது, இனியும் நேருவிடம் கெஞ்சி பலனில்லை என இந்துக்கள் முடிவெடுத்தனர், காலமெல்லாம் அந்நியருடன் மோதிய இந்துக்கள் நேருவினையும் அந்நியர் வரிசையில் சேர்த்துவிட்டு போராட்டத்தை தொடர்ந்தார்கள்
நேரு தன்னை இந்துவாக எங்கும் சொன்னதில்லை, இந்து ஆலயங்களுக்கு அவர் சென்றதுமில்லை , திருநீறோ குங்குமமோ அணிந்தவருமில்லை
அவரை பொறுத்தவரை ராமன் மீதே அவருக்கு நம்பிக்க்கை இல்லை அவர் இந்நாட்டின் வரலாற்றை மக்களிடம் ஆலயங்களிடம் இந்திய அரசர்களிடமிருந்து கற்கவில்லை
அவர் ஆங்கிலம் படித்து ஆங்கிலேயர் சொன்ன வரலாற்றையே படித்தார் இதனால் அவருக்கு ராமன் ஆரிய திராவிட யுத்தம் நடத்தியவனாக பிரிட்டிஷாரின் ராமாயணபடி தோன்றினான், அதையே தன் “டிஸ்கவரி ஆப் இன்டியா” புத்தகத்திலும் எழுதினார்
அப்படிபட்டவர் பிரதமாராக இருந்த காலத்தில் தமிழக திராவிட இயக்கத்துக்கும் அவருக்கும் பொருந்துமே தவிர இந்துக்களுக்கு எப்படி பொருந்தும்
அதுவும் பெரும்பான்மை இந்துக்கள் கொண்ட தேசம் எப்படி ஏற்கும்? 500 வருடம் ராமன் ஆலயத்துக்காக் பல லட்சம் உயிர்களை இழந்து தீரா போராட்டம் செய்தவர்கள் எப்படி ஏற்பார்கள்?
எது நடக்குமோ அது சரியாக நடந்தது, அவுரங்கசீப்புக்கே அடங்க மறுத்த கூட்டம் நேருவுக்கும் தலையினை மறுத்து ஆட்டியது
22 டிசம்பர் 1949 இரவு அயோத்தியில் ஒரு மோதலுக்கான களம் தயாராகிக் கொண்டிருந்தது , நேருவின் இந்துமதமற்ற இந்தியா ஒரு காலமும் சாத்தியமில்லை, இந்தியா என்பது இந்துமதத்தின் பூமி அதுதான் அதன் அடையாளம் இனி எதிர்காலமும் கூட என அந்த சம்பவம் முதலில் சொன்னது
மக்களாட்சியிலும் அயோத்தி ராமனுக்கான போராட்டம் வழமைப்போல் தொடர்ந்தது, தேசபிரிவினை காந்தியின் மரணம், நேருவின் குழப்பம் காஷ்மீர் போர்கள் என கடந்து 1949ல் அயோத்தி மறுபடியும் கொதித்தது
இம்முறை கொதிப்பு கூடுதலாக இருந்தது
வல்லபாய் பட்டேல் போன்றோர் அயோத்தி, சோம்நாத் போன்ற ஆலயங்களை மீளக்கட்டுவதில் உறுதியாக இருந்தார்கள். ஆனால் அப்போது சுல்தான்களையும் சமஸ்தானங்களையும் இந்தியாவோடு சேர்க்கும் பெரும் பணியில் பட்டேல் இருந்தார், அவர் பல சுல்தான்கள் மன்னர்கள் என இந்தியாவோடு சேர்த்துக் கொண்டிருந்தார்.
ஐதராபாத் சுல்தானியம், திருவாங்கூர் சமஸ்தானமெல்லாம் அப்படி வந்தன
நேரு காஷ்மீரில் தலையிட்டு குழப்பம் மேல் குழப்பம் செய்து நிறைய இழந்து கொண்டிருந்தார்
அந்த காலகட்டத்தில்தான் அயோத்தி போராட்டம் நீர்க்கவில்லை அது நாட்டின் சுதந்திரத்தால் கொஞ்சம் தாமதமானது என சொல்லும் செய்தி வந்து அதிரவைத்தது
(தொடரும்…)