இசைஞானியின் ஆன்மீகத்தேடல்
வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்குமான முதல் முறுகல் முதல்மரியாதை படம் வெளிவந்து அதற்கு தேசிய விருது கிடைத்ததில் தொடங்கிற்று
விஷயம் ஒரு பத்திரிகையில் இளையராஜா எழுதிய தொடருக்கு வந்தது
இளையராஜாவின் வார்த்தைகளுக்கு தேன் தடவி கொடுப்பது நான் என வைரமுத்தர் எங்கோ சொல்ல, இளையராஜா சீற வெடித்தது யுத்தம்
“மெத்தை வாங்குனேன் தூக்கத்த வாங்கல” இதெல்லாம் வரியா? இசை இல்லாமல் எடுபடுமா என இளையராஜா சொல்லியதாக வைரமுத்து காதுக்கு போக வைரமுத்தர் உறும தொடங்கினார்
இந்த காலகட்டங்களில் நடந்த ஒரு விபரீதம் அல்லது யாரும் புரிந்துகொள்ள முடியாத விஷயம் இளையராஜா அப்போதே ஒரு நிறைவை எட்டி இசையின் அடுத்த பரினாமத்துக்கு சென்றிருந்தார்
அதாவது 1977ல் வந்த இளையராஜா சட்டென வேகமாக ராக்கெட் போல் பறந்தார், என்ன வேகம் என்றால் பாரதிராஜா ஓரிரு படங்களை முடிக்கும் முன்பே இவர் 100 படங்களை கடந்திருந்தார்
இந்த அளவு இன்னொரு இசை அமைப்பாளரால் முடியாது, அவர் நிரம்ப உழைத்தார், நிரம்ப கொட்டினார், தூக்கமில்லா இரவுகள் நீண்டன
எல்லா கலைஞனுக்கும் உச்சம் தொடும்போது ஒரு ஆயாசம் களைப்பு வரும், ஒரு காலத்தில் சுகமாய் இருந்ததெல்லாம் தொந்தரவாய் தோன்றும்
எதற்கு ஆசைபட்டானோ அதை அடைந்தபின் வருவதெல்லாம் அழுத்தமாக தோன்றும்
செய்வதை முதலில் ஆர்வமாக செய்யலாம், பின் செய்ய செய்ய பணமும் புகழும் வந்து சிகரங்களை எட்டியபின் எல்லாமே சலிப்பாக தோன்றும்
எதை மிக விரும்புவானோ அதையே வெறுக்கவும் செய்வான்
எது சுகமானதோ அதுவே சுமையாக மாறும், கைக்கு ஒரு சங்கிலி காலுக்கொரு சங்கிலி என கட்டிபோடும், தலையில் ஏறி அமர்ந்து அழுத்தும்
கிரீட்ம் பாறமாகும், அரியாசனம் நரகமாகும், போதுமடா ஆசைப்படதெல்லாம் என அலறி ஓட தோன்றும்
இந்த சிக்கல் கலை உலகில் எல்லோருக்கும் வரும், தொடக்க படங்களில் அசத்தும் இயக்குநர்கள் பின் சரிந்துவிடுவதும், தொடக்கத்தில் ரசிக்கவைக்கும் கலைஞர்கள் பின் திசைமாறுவதும் இப்படித்தான்
காசு, பணம், புகழ், தொழிலில் சலிப்பு என எல்லாமும் சேர்ந்து அவனை திசைமாற்றும்
இதனை தாண்டி நிலைப்பவர் வெகுசிலரே, ஜாம்பவான்கள் பலர் இந்த அழுத்தம் தாங்காமல் மது, மாது, போதை என திசைமாறுவது இங்குதான்
இளையராஜாவுக்கு அப்படி ஒரு நிலை 1980களிலே வந்தது, இன்னொருவனால் அதனை தாங்கியிருக்க முடியாது
ஆனால் இளையராஜா தன் மனதை ஆன்மீகத்தில் திருப்பினார், இந்த புகழ் பணம் மயக்கமெல்லாம் வெறும் மாயை என கண்டார்
அவரின் தேடல் ரமணர், யோகிராம் சுரத்குமார், மாயம்மா என திரும்பிற்று
இந்த காலகட்டத்தில் அவர் இன்னொரு படிநிலைக்கு சென்றார், அவரின் மனம் கொஞ்சம் உயர்ந்த நிலைக்கு சென்றது , இசையின் அடுத்தகட்டத்தை தேடினார்
ஆனால் அவர் மனம் அடுத்தகட்டத்துக்கு சென்றதை அவரோடு இருந்த பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை
அந்த கார் 400 கிமீ வேகத்துக்கு உயர்ந்தது, இந்த பயணிகளோ 50 முதல் 60 மைல் போதும் என்றார்கள்
ஆம், பாலசந்தரோ, பாரதிராஜாவோ, வைரமுத்தோ அவரை பழைய இளையராஜாவாக தேடினார்கள், ஆனால் அவரோ அடுத்த பரிணமாம் எடுத்திருந்தார்
அதனை இவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை, கடும் அழுத்த்ம் அவரை ஆன்மீக பக்கம் இழுத்து மாற்றிவிட்டதை புரிந்துகொள்ளாமல் அதை கர்வம் என்றார்கள்
அவரை புரிந்துகொள்ளமுடியாமல் பழி சுமத்தினார்கள்
அவர் இன்னொரு பரிணாமம் பெற்று சிகரம் நோக்கி சென்றார், இவர்களோ அடியில் நின்றுகொண்டு அவனுக்கு கர்வம் என புரியாமல் பேசிகொண்டிருந்தார்கள்
சினிமா என்பது சித்தர் கூடம் அல்ல, அது கோடிகள் புழங்கும் சந்தை
அந்த சந்தையில் அவசரமாக ரகுமான் என ஒருவரை உருவாக்கி அவர்பின்னால் சென்றார்கள், இளையராஜா தன் போக்கில் இருந்தார்
இவர்களுக்காக தன்னை மாற்றவில்லை
அதன் பின் “மெட்டுபோடு தம்பி மெட்டுபோடு” என ரகுமான் மேல் ஏறி பல தேசிய விருதுகளை வைரமுத்தர் வென்றார், அதன் பின்னால் திமுக காங்கிரஸின் அரசியலும் இருந்தது
இளையராஜாவின் இசை அப்போதும் குறைவில்லாமல் வந்தாலும் அரசியல் பலம் இல்லை
கருணாநிதிக்கு இளையராஜா மேல் ஒரு கரிசனம் எப்போதும் உண்டு, சாதியால் தாழ்ந்த அவர் தன்னை போல் போராடி வந்தவர் என்பதால் அவரின் முதல் தெர்வு இளையராஜாதான்
ஆனால் இளையராஜா துதிபாட மாட்டார், நாத்திகரோடு சேரமாட்டார் இதனால் தனக்கு ஜால்ரா போடும் வைரமுத்துவினை அருவில் வைத்து கொண்டார்
இளையராஜா தன் போக்கில் ஒதுங்கி நடந்தார், பணம் தேடும் உலகம் ரகுமானை முன்னிறுத்தியது , இளையராஜா கோவில் யானை ஒதுங்கி செல்வது போல் தன் போக்கில் இருந்தார்
அரசியல் ஒருபக்கம் மட்டும் வீசியபோது, திராவிட அரசியல் பக்கம் மட்டும் வீசியபோது இளையராஜா மேல் சர்ச்சை வரவில்லை
இப்போது அரசியல் மாறிவிட்டது, கருணாநிதி போன்றோர் இல்லை, வைரமுத்துவுக்கு வெளிச்சமில்லை
ரகுமானும் ஒருவித பரிமாணமத்துக்கு சென்று வைரமுத்துவினை ஒதுக்கிவிட்டார், அனிருத் காலத்தில் வைரமுத்துவால் பரிணமிக்க முடியவில்லை
ஸ்டாலினுக்கு கருணாநிதி அளவு அரசியல் தெரியாது, ஆனால் வைரமுத்து வைத்து கவிபாடினால் தனக்கே ஆபத்து என்பதை அறிந்தவர், ஸ்டாலினின் அரசியல் வேறுமாதிரியானது
இப்படி அரசியல், சினிமா, தலைமுறை இடைவெளி என எல்லாம் கலந்து வைரமுத்துவினை திண்ணையில் கிடத்திவிட இன்னொரு பக்கம் மோடி பாஜக இந்துத்வா என இளையராஜாவுக்கு ஒரு பார்வை கிடைக்கின்றது
அதை பொறுக்காமல் திண்ணையில் இருந்து கத்துகின்றார் வைரமுத்து
அதை தாண்டி சொல்ல ஒன்றுமில்லை, இளையரஜாவினை புரிந்துகொள்ள அவர் கடந்துவந்த இசைவாழ்வு, தாங்கிய அழுத்தம் எல்லாம் யோசித்து பார்க்கவேண்டும்
இசை அமைப்பது என்பது பெரும் அழுத்தமானது, அதுவும் அருவிபோல் ஆயிரம் படங்களுக்கு கொட்டுவது, வந்த இசை, காப்பியடிக்கும் இசை வராமல் தனித்து அமைப்பது என்பது அழுத்தமான விஷயம்
40 வயதிற்குள் இளையராஜா அதை தாங்கினார், இன்னொருவன் என்றால் மாற்று பழக்கங்களில் வீழ்ந்து நாசமாயிருப்பான்
கலை என்பது அப்படியானது அது அருவிபோல் கொட்டும்போது அழுத்தம் அதிகரிக்கும், அதை தாங்குவது என்பது கடினம், சில வடிகால்களில் பலர் வீழ்ந்துவிடுவது அப்படித்தான்
கண்ணதாசன் எனும் மகா கவிஞன் குடியிலும் மங்கையரிலும் பெத்தடினிலும் அப்படி கரைந்தான், எத்தனையோ பேரை அப்படி சொல்லமுடியும் முத்துகுமார் உள்பட
இளையராஜா அந்த பெரும் வெறுமையினை சலிப்பை ஆன்மீகத்தால் தாண்டினார், அதனாலே தப்பி வந்தார்
அவர் ஆன்மீகத்தில் கரைந்து தன்னை மீட்டெடுத்து இன்றுவரை நிற்கின்றார், அவரை பொறுத்தவரை அவரின் இசை வேகம் முதல் 10 ஆண்டுகளில் முடிந்துவிட்டது, அவருக்கு அது போதும், அப்போதே சிகரம் தொட்டுவிட்டார்
பின்னர் கிடைப்பதெல்லாம் அவருக்கு ஒன்றுமில்லை
வைரமுத்து எப்படியானவர் என்றால் அவரின் வரிகள் எப்படி என்றால் ஒருவரியில் விளக்கலாம்
“காதல் கோவில் நடுவினிலே
கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே
அடைக்கலமானேன் முடிவினிலே
என் இறைவன் அவனே அவனே என் தாயின் மொழிகேட்டேன்
என் தலைவன் அவனே அவனே என பாடும் மொழி கேட்டேன்”
காதல் கொண்ட மனதை இப்படி சொனந்து கண்ணதாசன்
“கைகள் நான்கும் தீண்டும் முன்னே
கண்கள் நான்கும் தீண்டிடுமே
மோகம் கொஞ்சம் முளை விடுமே
கண் பார்வை முதல் நிலையே
ஆருயிரே என்னுயிரே உள்ளம் கொண்டது ஓர் மயக்கம்
என்னுயிரே காதலில் இரண்டாம் நிலைதான் பால் மயக்கம்
மெய் தீண்டும் நேசம் தொடங்கியதோ
இது காதலின் மூன்றாம் படி நிலையோ
என் உடல் வழி அமிர்தம் வழிக்கின்றதோ
என் உயிர் மட்டும் புது வித வழி கொண்டதோ
என்னுயிரே என்னுயிரே உன்னை கொஞ்சம் தீண்டுவேன்”
இது வைரமுத்தரின் காதல் பாட்டு
ஆக காதலையே இபப்டி தலைகீழாக புரிந்து பாட்டு எழுதியவர், இளையராஜாவினையும் இசையினையும் எப்படி புரிந்து கொண்டிருப்பார்?
நிச்சயம் அவரால் இசையினை, இளையராஜாவினை புரிந்து கொள்ள முடியாது, அவர் அப்படித்தான்
இதனாலே இவரை சரியாக புரிந்து எப்படி பயன்படுத்தவேண்டுமோ அப்படி ஒரு பேனா உபியாக பயன்படுத்தினார் அய்யா கலைஞர், அவர்தான் கலைஞர்