இன்று அந்த பரசுராமர் ஜெயந்தி
இந்த உலகம் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இனத்தால் அதாவது வர்ணத்தால் ஆளபடும், இன்று சர்வ நிச்சயமாக வியாபாரிகள் எனும் வைசிய வர்ணத்தால் ஆளபடுகின்றது
இதை உடைத்து தொழிலாளர் எனும் சூத்திர வர்ணத்தால் ஆளபட வேண்டும் என்ற சித்தாந்தம் இடையில் எழுந்தாலும் உடைபட்டு போயிற்று, இன்றைய உலகம் வியாபார சமூகம் ஆளும் உலகம்
மன்னர்கள் எனும் ஷத்திரியர்கள் ஆண்ட காலமும் இருந்தது
எந்த வர்ணம் ஆண்டாலும் அங்கு வேதம் வாழவேண்டும் என்பது பரம்பொருளின் விருப்பம், அதற்கு சோதனை வரும்பொழுதெல்லாம் ஒவ்வொரு அவதாரத்தை அந்த பரம்பொருள் அனுப்பும்
இந்து மதம் அனாசயமானது, அது அன்றைய சவால் தனக்கு எந்த வடிவில் வருமோ அந்த வடிவில் ஒரு சக்தியினை உருவாக்கும்
அது சமண , பவுத்த வாத காலமாக இருந்தால் வாதத்தில் சிறந்த சங்கரரையும், சம்பந்தரையும் அனுப்பும்
அது மன்னர்கள் சவாலாக இருந்தால் அது சிவாஜி போல, நாயக்க மன்னர்களை போல அரசர்களை உருவாக்கும்
அது ராவணன் போல பக்திமிக்க அசுரன் என்றால் அது ராமனை உருவாக்கும்
எதிரி அரிஸ்டாட்டில் போல பெரும் அறிவாளி என்றால் அது சாணக்கியன் எனும் மகா மேதையினை உருவாக்கி தன்னை காத்துகொள்ளும்
அப்படிபட்ட சூட்சுமமானது இந்துமதம் , தன் எதிரி எவ்வடிவோ அவ்வடிவில் தனக்கொரு சக்தியினை அது உருவாக்கி தன்னை காத்துகொள்ளும்
அப்படி உருவான ஒரு அவதாரமே பரசு ராமன். வேதங்களை காக்க வந்த பரசுராமன்
ராமன் எத்தனை ராமனடி..” என்பார்கள் இந்துக்கள், ராம அவதாரம் தவிர சில ராமன்கள் உண்டு. பலராமன் , பரசுராமன் என இன்னும் பலர் உண்டு.
ராமன் என்பது இங்கு பொதுபெயராய் இருந்தது, இதில் இந்த பரசுராமன் என்பவர் விஷ்ணுவின் 6ம் அவதாரம்.
அன்று ஷத்திரியரின் அட்டகாசம் அதிகரித்திருக்கின்றது, மிகபெரும் அழிச்சாட்டியம் செய்து பெரும் அழிவினை கொடுத்திருக்கின்றார்கள். வேதங்களையும் பலவிஷயங்களையும் மதிக்கா நிலையில் அவர்களின் ஆட்டம் அதிகமாயிருந்தபொழுது பரசுராமர் அவதரித்தார்
அநியாயங்களை தேவர்கள், அசுரர், ஷத்திரியர் என யார் செய்தாலும் அவர்களை ஒடுக்க பரமன் வருவார், அப்படி வந்தவரே பரசு ராமர்
ஜமத்கனி முனி ரேணுகா தேவி மகனாக பிறந்த ராமர், கடும் தவமிருந்து சிவனிடம் இருந்து பரசு எனும் கோடாரியினை வாங்கி அதையே தன் ஆயுதமாக வைத்து பரசுராமர் என்றானார், அதில் சிவபெருமானிடமே மோதி அவரையே மண்டையில் கொத்திய மாவீரர் என்றெல்லாம் அவர் வரலாறு உண்டு
அர்ஜூனனுடன் மோதிய சிவன் பரசுராமனுருடனும் மோதினார்
அக்கிரமம் செய்து கொண்டிருந்த ஏகபட்ட ஷத்திரிய வம்சத்தை அவர் வேரறுத்தார், ஆணவமிக்க அந்த மாவீர ஷத்திரியர்களை வேரறுத்து பூலோகத்தில் அமைதியினை ஏற்படுத்தினார், அதில் காமதேனுவினை கவர்ந்து சென்ற ஆயிரம் கைகளை உடைய காத்தவீரியனும் ஒருவன்
பரசு ராமனின் தாய் ரேணுகா இந்த வாசுகி வகை, ஆற்றங்கரைக்கு சென்று மண்ணால் பானை செய்து ஆணையிடுவார் அது உருவாகும் அதில் நீர்கொண்டு வருவார். ஒரு நாள் ஆற்று நீரில் வானில் தெரிந்த தேவன் ஒருவன் நிழலை கண்டாள், ஒரு நொடி உற்றுபார்த்தாள் அவ்வளவுதான் அவள் தவம் கலைந்தது, மண்பானை உருவாகவில்லை, இதை அறிந்தான் ஜமத்கனி
மனதால் அவள் கெட்டுவிட்டாள் என அவள் தலையினை வெட்ட மகன்களுக்கு சொன்னான் ஜமத்கனி மற்றவர் மறுக்க தந்தை சொல்லுக்காக தாயின் கழுத்தை வெட்டினான் பரசுராமன், கூடவே தந்தைக்கு கீழ்படியாத மற்ற சகோதரர் கழுத்தும் காலி
மகனின் கீழ்படிதலை கண்ட ஜமத்கனி என்ன வரம் வேண்டும் என கேட்க தாயினையும் சகோதரையும் உயிர்பிக்க வேண்டினான், அவரும் வரமருளினார்
அதாவது தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என வாழ்ந்தவன் பரசுராமன், தந்தைக்கு கீழ்படிந்ததால் சப்தரிஷிகளில் ஒருவரான ஜமக்கனி அவருக்கு சிரஞ்சீவி வரத்தை அருளினான்
அனுமனை போலவே சில சிறப்புகளை கொண்டவன் பரசுராமன், ராமாயணம் மற்றும் மகாபாரததில் அனுமனை போலவே வருபவர்
தசரதன் ஷத்திரியன் என அவனை ஓட ஓட விரட்டியவனும் பரசுராமனே, ஆனால் தசரதன் காலமெல்லாம் மணகோலத்தில் இருந்து தப்பித்தான்
ஷத்திரியன் என்பதால் ராமன் மேலும் அவனுக்கு கண் இருந்தது, ராமன் ஜனகனின் வில்லை உடைத்தவுடன், நான் கொடுக்கும் வில்லில் நாண் ஏற்று பார்க்கலாம் என சவால்விடுத்து ஒரு வில்லை கொடுத்தான் பரசுராமன், அதில் ராமன் நாண் ஏற்றியதும் பரசுராமனின் கர்வமெல்லாம் அடங்கிற்று
அசால்ட்டாக நாணேற்றி அம்பை பொருந்த்தி எங்கே இலக்கு? எதை வீழ்த்தவேண்டும் என ராமன் கேட்டதும், என் ஆணவத்தையும் நான் கொண்ட கர்வமே இலக்கு என சொல்லி ஒடுங்கினான் பரசுராமன்
ஆம் ஷத்திரியர் அட்டகாசம் உச்சத்தில் இருந்தபொழுது பரசுராமனின் அவசியம் இருந்தது, பலநூறு தலைமுறையாக ஷத்திரியர்களை அழித்து உலகில் ஷத்திரியருக்கு ஆபத்து வந்தபொழுது பரசுராமனின் கோடலி கீழே விழவைக்க வேண்டிய நேரமும் வந்தது
ஆம் ராமனே அவனை அடக்கி அவன் கோடரியினை கீழே இறக்கினான், அதன் பின் பரசுராமன் ஷத்திரிய வதம் செய்யவில்லை
மகாபாரதத்தில் பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் பரசுராமன் குருநாதனாகின்றான், கர்னனுக்கு பிரம்மாஸ்திரம் கொடுத்தவன் அவனே , அதே நேரம் கர்னன் செய்த தவறால் அதாவது தான் ஒரு ஷத்திரியன் அல்ல பிராமணன் என சொல்லி அவரை ஏமாற்றியது தெரிய வந்ததால் “உற்ற நேரம் உன் பிரம்மாஸ்திரம் பலிக்காது” என சாபமிட்டவனும் அவனே
ஆம் ராமாயணமும் மகாபாரதமும் பரசுராமனால் ஒரு திருப்பம் கண்டன
இன்னும் ஏராளமான விஷயங்கள் பரசுராமனை பற்றி உண்டு, அதில்தன் ஆந்திர மக்களின் குலதெய்வமான எல்லம்மாளின் கதை வரும்
ஆம் பரசுராமனின் தாயான ரேணுகாதேவி கதையே எல்லம்மாளின் கதை
தன் அவதார நோக்கம் நிறைவேறியதும் தென்னகம் வந்து தன் கோடரியினை கடலில் வீசினான் கடல் ஒதுங்கியது, இந்த இடமே தனக்கான இடம் என தவமிருந்தான் அந்த இடமே கேரளம் என்பார்கள், நித்திய சஞ்சீவியான பரசு ராமன் இன்றும் மகேந்திரகிரி மலையில் தவமிருப்பதாக நம்பபடுகின்றது
சீன வழிபாட்டில் கூட கோடரியுடன் நிற்கும் தெய்வங்கள் உண்டு, அது பரசுராமரின் சாயல் என்றே அறியபடுகின்றது.
அனுமன், விபீஷணர், மகாபலி சக்கரவர்த்தி, மார்க்கண்டேயர், வியாசர், பரசுராமர், அசுவத்தாமர் என ஏழு நித்திய சஞ்சீவிகள் இந்த உலகில் உண்டு, அவர்கள் இன்றும் சாகாமல் வாழ்வதாக நம்பபடுகின்றது
அவர்களில் பரசுராமரும் ஒருவர்
இன்று அந்த பரசுராமர் ஜெயந்தி
ஒருவகையில் கிருஷ்ண அவதாரம் பரசுராமர் நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சி, ஆழ கவனித்தால் ஷத்திரியர்களின் எல்லை மீறிய ஆட்டத்தைத்தான் கண்ணன் அழித்தான்
அதுவும் சத்திரியர்களுக்குள்ளே மோதலை ஏற்படுத்தி மொத்தமாக அழித்து போட்டான், பாண்டவர் கவுரவர் என்ற இரு சத்திரியர்களிடையே புகுந்து ஒரு ஷத்திரிய கும்பலால் இன்னொரு ஷத்திரியர்களை அழித்து கடைசியில் எஞ்சியோரையும் இமயத்துக்கு அனுப்பினான் கண்ணன்
கிருஷ்ண அவதார நோக்கம் ஷத்திரியர்களை அழிப்பது, அது பரசுமாராமரின் தொடர்ச்சியாக அமைந்த அவதாரம்
அவர் வேதங்களை அழித்து அவற்றை உலகில் இருந்தே ஒழிக்க சத்திரியர்கள் முயன்ற காலம் அதாவது வீரத்தில் உயர்ந்த சத்திரியர்களே எல்லா உலகையும் ஆளவேண்டும் என ஆணவத்தோடு ஆடிய காலத்தில் அவதரித்தவர்
பிராமணராக அவதரித்து எல்லா ஷத்திரியர்களையும் அடக்கி அழித்து வேதம் காத்தவர், கடைசி வரை ஷத்திரியர் மேல் அவருக்கு அபிமானமில்லை
ஆனால் ராமபிரானிடம் அடங்கி அவரை போல் நல்ல ஷத்திரியன் வந்தபின் உலகில் வேதங்களுக்கு ஆபத்தில்லை என ஒதுங்கியவர்
ஜமத்கனி முனிவர் அவருக்கு நித்திய சஞ்சீவி வரமளித்ததே இங்கு வேதங்களை எக்காலமும் காக்க வேண்டும் என்பதற்காகவே, அவ்வகையில் எக்காலமும் இந்த பாரத பூமியில் ஆணவக்காரரை ஒழித்து வேதங்களை காத்துகொண்டிருக்கின்றார் பரசுராமர்
அதனால் அவருக்கு எக்காலமும் அழிவில்லை
அவர் காவல் இருப்பதால் என்னவோ இந்த பூமியில் வேதங்கள் அழிய அழிய எழுகின்றன, அவை ஒழிக்கபட ஒழிக்கபட தடுக்கின்றன
இந்து வேததுக்கு முதல் சவால் விடுத்தது பவுத்தம், அந்த பவுத்தத்தை ஒழித்து கட்டிய சங்கரர் கேரளாவில் இருந்து வந்தார், ஆம் பரசுராமன் உருவாக்கிய, இது என் தேசம் என சொன்ன அந்த கேரளம்
இஸ்லாமும் கிறிஸ்தவமும் கேரளம் வழியாக இங்கு வந்தாலும் அவற்றாலும் கேரளா உட்பட்ட பகுதிகளை கபளீகரம் செய்யமுடியவில்லை,
பரசு ராமர் காவலிருக்கின்றார்
இஸ்லாம் வட இந்தியாவினை ஆண்டபொழுதும் இந்த பூமியினை விழுங்கமுடியவில்லை, பிரிட்டானியர் ஆண்டபொழுதும் இப்பூமீ ஆன்மீக ரீதியாய் அசைந்து கொடுக்கவில்லை
பரசு ராமர் காவலிருக்கின்றார்
இங்கு காங்கிரஸோ, கறுப்பு சட்டையோ, கம்யூனிஸ்டுகளோ வேதத்தை கறுவருக்க நினைத்து அவர்கள்தான் அழிகின்றார்களே தவிர வேதம் அழியவில்லை, அது தன்னை புதுபித்து எழுகின்றது
வேதத்துக்கு எதிரான சக்திகள் எழும்பும்பொழுதெல்லாம் பரசுராமர் எழுகின்றார், அவைகள் ஒடுங்குகின்றன
இன்று மறுபடியும் அந்த தர்மம் தளைத்தோங்கி எழுகின்றது, அதில் விஸ்வரூபாய் தெரிகின்றார் பரசுராமர்
இன்று அவருக்கு பிறந்த நாள், ஜெயந்தி , அவதார நாள். வேதங்களை காக்க வந்த நிரந்தர காவலாளியின் அவதார நாள்
எக்காலமும் அவர் வேதங்களை காத்து கொண்டிருக்கின்றார், அதற்கு எப்பொழுதெல்லாம் ஆபத்து வருமோ அப்பொழுதெல்லாம் அவரின் கோடரி ஒவ்வொரு உருவில் எழுந்து கொண்டேதான் இருக்கும் இப்பொழுது மோடி வடிவில் உருவாகி வந்திருப்பது போல அது காவலை தொடர்ந்து கொண்டே இருக்கும்
தெய்வமே… எப்படி தான் இப்படி எல்லா விஷயத்தையும் திறட்டி எழுத முடியுதோ. பரசு ராமர் போல் இந்து மதத்தை காக்க வந்த நீரும் ஓரு அவதாரமே.அவர் பிறப்பால் ஒரு பிராமணராக இருந்தாலும் கூட, அவரிடம், ஷத்ரியர்களுக்கே உரித்தான துணிச்சல் மற்றும் போர்க்குணங்கள் நிறைந்திருந்தது. அதனால் அவர் ‘பிரம்மா-ஷத்திரியர்’ என்றே அழைக்கப்பட்டார். அவருடைய போர்த்திறமையால் இந்த பூமியில் இருந்த அனைத்து மோசமான ஷத்ரியர்களையும் 21 தலைமுறை வரை கொன்றழித்தார்…. நீரும் தீய சக்திகளை உங்கள் எழுத்துகள் மூலம் வெகு விரைவில் அழியும் அவதாரம் தான்.