பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இலங்கை தன் 75 ஆண்டுகால வரலாற்றில்

இலங்கை தன் 75 ஆண்டுகால வரலாற்றில் மிகபெரும் தலைகுனிவினை நேற்று சந்தித்தது,எந்த அதிபரும் பெற்றிராத பெரும் அவமானத்தோடு வெளியேறியிருக்கின்றார் கோத்தபாய ராஜபக்சே

இலங்கையின் இன்றைய சிக்கலுக்கு உலக அரசியலும் கொரோனாவும் ஒரு காரணம் என்றாலும் அந்த இந்துகடலின் ரத்தினம், தெற்காசிய முத்து என கொண்டாடபட்ட அழகிய தேசத்தின் அரசியல் ஸ்திரதன்மை ஆட்டம் காணவும் இனி இதிலிருந்து தமிழருக்கு விடியல்காலம் பிறக்கவும் அந்த பிரபாகரனே காரணம்

உலகம் அவனை மிகபிரமாண்டமாக நோக்க போகும் காட்சியின் தொடக்கம் ராஜபக்சேவின் வீழ்ச்சி
பிரபாகரன் ஒரு அபூர்வ பிறப்பு சந்தேகமில்லை, 16ம் நூற்றாண்டில் வீரசிவாஜி சாதாரண குடும்பத்தில் உருவாகி வந்து பிஜப்பூர் மொகலாயம் என இரு பெரும் வல்லரசுகளை வென்று மாவீரனாக நிலைத்தற்கும் ஒற்றுமை பல உண்டு

அங்கே பிஜப்பூர் என்றால் இங்கே சிங்களம், அங்கே மொகலாயம் என்றால் இங்கே இந்தியா, அங்கே அவுரங்கசீப் என்றால் இங்கே ராஜிவ்காந்தி என அதிசயமான தொடர்புகள் ஏராளம்

ஆக்ராவில் அவுரங்கசீப் சிவாஜியினை சிறைபிடித்தற்கு சற்றும் குறையாதது டெல்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரனை ராஜிவ் வைத்தது

சிவாஜி சாதுர்யமாகா ஜெய்சிங்கிடம் சமாதானம் பேசி பின் போரை தொடங்கியது போன்றது பிரபாகரனின் அமைதிபடையுடனான யுத்தம்

ஆனால் சிவாஜிக்கும் பிரபாகரனுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் சிவாஜி ஒரு சுத்தமான இந்துவீரன், பிரபாகரன் பின்னாளில் முழுக்க மிஷனரிகள் கையிலும் அவர்கள் முகமூடியான திராவிட கோஷ்டிகள் கையிலும் வீழ்ந்து இறந்தான்

அதுதான் பிரபாகரன் வாழ்வின் பரிதாபம், சிவாஜி அப்படி எங்கும் சிக்கவில்லை அதனால் நிலைத்தான்
ஆனால் மொகலாயத்தை சிவாஜி ஆட்டிவைத்து அதில்தான் மொகலாயம் சரிந்ததது போல கொழும்பு சிங்கள அரசை பிரபாகரன் அசைத்து நொறுக்கி போட்டது நிஜம்

இலங்கை எல்லா வகையிலும் வளமான நாடு, மீன் ஏற்றுமதி ஒன்றிலே மிகுந்த அளவு சம்பாதிக்க வழி இருக்கும் நாடு, அழகிய காடும் மலையும் அருமையான துறைமுகங்களுமாய் சிங்கப்பூர் போல் வளர பலமுள்ள நாடு, 1930ல் இன்றைய ஐரோப்பிய பெல்ஜியம் போல் அது வளமாய் இருந்தது

தமிழருக்கு உரிய உரிமை கொடுக்காத பிரச்சினையிலும் இலங்கை தமிழர்பின் இந்தியா உள்ளது அது நமக்கு எக்காலமும் பகை எனும் அச்சத்திலும் சிங்கள தலைவர்கள் சர்ச்சையினை தொடக்க அது மாபெரும் குழப்பமாகி பின் ஆயுத சண்டையாகி பின் 1983 ஜூலை கலவரங்களுக்கு பின் போர்களமானது

அன்றே தமிழருடன் ஒரு சமரசத்துக்கு சிங்களம் வந்திருந்தாலோ இல்லை ராஜிவ்காந்தி உருப்படியாக ஒப்பந்தம் செய்திருந்தாலோ பிரச்சினை முடிந்திருக்கும்

ராஜிவின் குழப்பம் சிக்கலை கூட்டி, பிரபாகரன் ராஜிவ் கொலையில் சிக்கி எல்லாம் குழம்பிற்று
பிரபாகரன் ஏதோ ஒரு இடத்தில் இந்தியா தலையிடும் என எதிர்பார்த்தான், இன்றைய மோடி அரசு அன்று இருந்தால் அது சாத்தியம் ஆனால் இந்தியாமட்டுமல்ல அதன் அண்டைநாடுகள் கூட உருப்படகூடாது என கொள்கை கொண்ட காங்கிரஸ் அதைசெய்யவில்லை

2001ல் இனி உலகில் வலுவான தீவிரவாத நாடு இருக்க கூடாது என வரிந்துகட்டியது அமெரிக்கா, புலிகளுக்கு வாழ்வா சாவா போராட்ட காலம் அது

இந்தியாவுக்கும் அது முக்கியமான காலம், புலிகள் இல்லாவிட்டால் சிங்கள தலைவர்களை அடக்க முடியாது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று, சிங்கள தரப்பு எப்பொழுதும் இந்திய எதிர்ப்பு மனநிலை கொண்டது, புத்தமதம் காக்க உருவான இனம் அது என சொல்லும் அந்த கூட்டம் இந்து இந்தியாவினை பழங்காலத்தில் இருந்தே எதிர்த்துத்தான் வந்தது

இந்த இடத்தில் அதாவது நார்வே தூதுகுழு 2005களில் வந்த இடத்தில் புலிகள் தரப்பு இந்திய தலமையில் பேச்சுவார்த்தை என்றுதான் விரும்பிற்று ஆனால் இந்தியா இறங்கவில்லை
அதன் பின்புதான் காட்சிகள் மாறின‌

என்னதான் சர்ச்சை இருந்தாலும், இந்திய பிரதமரையும் இந்திய ராணுவத்தார் 1500 பேரை கொன்றிருந்தாலும் 2006களில் பிரபாகரன் எடுத்த நிலை சரியானது, ராஜிவ் கொலைக்கான பிராயசித்தமும் கூட‌

அந்த பிரபாகரன் விரும்பியிருந்தால் அமெரிக்க, சீன ஆதரவோடு இன்னும் பிழைத்திருக்கலாம் ஏன் தனிநாடே அடைந்திருக்கலாம் ஆனால் அது இந்தியாவுக்கு விரோதம், இந்தியாவினை இனி பகைக்கமாட்டேன் நீண்டகால தலைவலி ஏற்படுத்தமாட்டேன் என அவன் அமைதி காத்தான்

அந்த இடத்தில்தான் சீனாவின் கணக்கு சரியாயிற்று

இலங்கை இந்தியாவுக்கு அருகான்மையான நாடு, கடல்வழியில் முக்கியமான நாடு, திரிகோணமலை துறைமுகம் எனும் முக்கிய கேந்திரமுள்ள நாடு, வடக்கே லடாக்கில் மட்டுமல்ல தெற்கில் தமிழக எல்லையிலும் இந்தியாவுக்கு தொல்லை கொடுக்கலாம் என கருதிய சீனா உள்ளே வந்தது

ராஜபக்சே வழமையான இந்திய எதிர்ப்பில் சீனாவிடம் சரண் அடைந்தார், இலங்கை அரசியல் முழுக்க சீன ஆதரவாயிற்று கோத்தபாய ராஜபக்சே அதுவரை அமெரிக்க குடியுரிமை கொண்டு அமெரிக்காவில் வசித்து வந்தார் அவரும் அவசரமாக இலங்கை திரும்பினார்

சீனாவின் கணக்கு இலங்கையில் இருந்து இந்தியாவினை முழுக்க வெளியேற்றுவது, அதற்கு முதல் வழி புலிகளை முடித்து போடுவது, புலிகளோ தமிழர் பிரச்சினையோ இல்லா இடத்தில் இந்தியா கால் வைக்கமுடியாது, வழி இல்லை

அந்த இடத்தில்தான் ஆடினார்கள் சீனபணமும் ஆயுதமும் செயற்கைகோள் தரவுகளும் வர வர சிங்களம் புலிகளையும் ஈழமக்களையும் கொடூரமாக வேட்டையாடியது, இந்த இடத்தில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் தங்களுக்கு பிடிகொடுக்கா பிரபாகரன் செத்து ஒழியட்டும் என கண்ணை மூடிகொண்டன‌

ஆம் நார்வே தூதுகுழு என ஐரோப்பிய முடிவுகளை ஏற்காமல் இந்தியாவினைத்தான் ஏற்பேன் என பிரபாகரன் சொன்னதற்கான தண்டனை அது

சீனாவின் ஆயுத பலத்தில் முழுக்க புலிகளை ஒழித்து ஈழபிரச்சினை இனி இல்லை , இந்தியா இனி தலையிடமுடியாது என மகிழ்ந்தது ராஜபக்சே சீன கூட்டணி

1975ல் இருந்து ஈழபோராளிகள் பின்னால் இருந்து இந்தியா தூண்டிவிட்ட போராட்டமே தங்கள் அழிவுக்கு காரணம் என சிங்கள தரப்பு நம்பியது, ஈழதமிழரும் நம் குடிமக்கள் உரிமை கொடுக்காமல்தான் சண்டை தொடங்கிற்று என்ற எண்ணம் அறவே இல்லை

பிரபாகரனை கொன்றதால் இனி நமக்கு எதிரியே இல்லை என ஆடி மொத்த குடும்பத்தையும் அரசியலுக்குள் இழுத்தார் ராஜபக்சே

எல்லாம் அவர் நினைத்தது போல் சென்றது, சுமார் 10 ஆண்டுகள் இந்தியாவில் மன்மோகன் , சோனியா என பொம்மைகள் ஆண்டதால் இலங்கையினை வசமாக வளைத்தது சீனா

பிரமாண்ட கடன்களை கொடுத்தது, பிரமாண்டமான துறைமுகங்களுக்கு அஸ்திபாரமிட்டது

எல்லாம் கடன் எனினும் சுற்றுலாவும் கடல்தொழிலும் இந்த பணத்தை சம்பாதித்து கொடுக்கும் என இருவரும் நம்பினார்கள், தமிழர் தரப்புக்கு இனி எதுவுமில்லை என்ற நிலை வந்தது

இந்நிலையில்தான் உலகமே எதிர்பார ஒரு இரும்பு தலைவன் இந்தியாவுக்கு தலமை ஏற்றார் அவர் பெயர் நரேந்திர மோடி

இந்திரா காலத்து பார்த்தசாரதியினை இலங்கைக்கான பிரநிதியாக்கி இன்னும் பல அனுபவஸ்தர்களை அவர் களத்தில் இறக்கியபொழுதே சிங்களம் மெல்ல அரண்டது

மோடி மலையக தமிழருக்கு மருத்துவமனை, பள்ளி என மெல்ல கால்பதிக்கவும்,வடக்கே பலாலி விமான நிலையம் இந்தியகட்டுப்பாடு என அதிரடி காட்டவும் சிங்களம் கலங்கிற்று

ஆனால் சீனாவின் பிடி விடுவதாக இல்லை, இந்தியா மவுனமாக ஆடதொடங்கியது. இந்தியாவின் பிடி புலிகள் இல்லாவிட்டாலும் உண்டு என காட்ட தொடங்கினார் மோடி

சீனாவும் திரிகோணமலை எண்ணெய்குடோனை இந்தியாவிடம் இருந்து திருப்பி கேட்கும்படி இலங்கையினை தூண்டிவிட இந்தியா இனி விடுவதில்லை என கங்கணம் கட்டியது

மோடி இரண்டாம் முறை வந்ததும் அடித்து ஆடினார் இலங்கை கொழும்புதுறைமுகத்தை இந்தியாவின் கட்டுபாட்டுக்கு கொண்டுவந்தார், இலங்கை தமிழ் பிரதிநிதிகள் அடிக்கடி மோடியினை சந்திக்க சிங்கள தரப்புக்கு வியர்த்து கொட்டிற்று

அந்நேரம் டிரம்பர் சீனாவுக்கு ஆணி அடிக்க தொடங்கினார், விளைவு சீன பிடியில் இருந்த இலங்கைக்கு உலக உதவி கிடைக்கவில்லை, சீனா ஒன்றே அடைக்கலமானது

ராஜபக்சேக்களின் சீன விசுவாசம் தொடர்ந்தது, சீனாவின் கடன் கொடுப்பும் உலக அரசியலும் வித்தியாசமானது

சீனா ஒரு வித்தியாசமான நாடு, நட்பு நாடு என யாரை வைத்திருந்தாலும் அவர்களிடம் இருந்து சுரண்டுமே தவிர சல்லிகாசு கொடுக்காது

அப்படித்தான் இலங்கைக்கும் வட்டிமேல் வட்டி என சுரண்டியது

இந்நிலையில்தான் லடாக்கில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மோதல்வர மோடி அணிசேரா கொள்கையில் இருந்து இந்தியாவினை மாற்றினார்

இதை 1960லே நேரு செய்திருந்தால், இந்திரா செய்திருந்தால் இலங்கை எனும் சொர்க்கபுரி அப்படி எரிந்திருக்காது, அணிசேரா கொள்கை பல குழப்பங்களுக்கு காரணம் இலங்கையில் இந்தியா திணறியதும் அப்படியே

குவாட் அமைப்பில் இந்தியா இணைந்ததும் சீனா மலாக்கா நீரினைக்கு அப்பால் நிறுத்தபட வியூகம் வகுக்கபட்டது, இந்திய பெருங்கடலில் அவர்கள் வலதுகால் இருக்குமிடம் இலங்கை என்பதால் அதை குறிவைத்தார்கள்

அந்நேரம் கொரோனாவும் வந்தது ஏற்கனவே சீனாவிடம் வட்டிகட்ட முடியாமல் தவித்த இலங்கை வசமாக சிக்கியது

சீன ஆதரவு ராஜபக்சேக்கள் இருக்கும் வரை இலங்கைக்கு ஏதுமில்லை என மேற்குநாடுகள் கைகாட்டின, காரணம் ராஜபக்சேக்கள் சீனாவுக்கு ஆதரவாக குவாட் அமைப்பின் பல நகர்வுகளை ஆதரிக்கவில்லை
அதன்பின்பு இலங்கையில் வரலாறு காணா நெருகக்கடிகள் ஏற்பட்டன‌

ராஜபக்சேக்கள் தங்கள் அடியாட்கள் என நம்பியிருந்த சீனா கலங்க தொடங்கியது, பெரும் போராட்டத்தை எதிர்பாரா ராஜபக்சேக்கள் ஆடிபோயினர்

ஆனாலும் தந்திரமான ராஜபக்சேக்கள் அதிபர் கோத்தபாயா எனும் அதிகாரமிக்கவனை வைத்துவிட்டு பிரதமர் மகிந்தவிற்கு பதில் ரணிலை வைத்து சமாளிக்க முயன்றனர்

ஆனால் அதிபர் எனும் அதிக சக்திகொண்ட கோத்தபாயாவினை மக்கள் விரட்ட தொடங்கினர், கோத்தபாயா அடம்பிடித்தார்

அந்த முறுகல்தான் நேற்று பெரும்குழப்பமாக வரலாற்றில் முதன் முறையாக அலரி மாளிகை எனும் இலங்கை ஜனாதிபதி மாளிகை மக்களால் தாக்கபட்டு அதிபர் தப்பி ஓடியிருக்கின்றார்

இனி அவர் ராஜினாமா செய்வார், தேர்தல் அல்லது கூட்டு அரசு அமைக்கபடும்

எது எப்படி ஆயினும் இரு விஷயங்களை ஒப்புகொள்ள வேண்டும்

அதாவது எந்த மக்கள்புரட்சியும் இன்னொரு நாடு அல்லது நாடுகளின் ஆதரவின்றி சாத்தியமில்லை, கொழும்புவில் மக்கள் ஆத்திரத்துடன் பொங்கினார்கள் என்றால் இவர்களை திரட்டியது யார்? உணவும் பணமும் இதர உதவிகளும் செய்தது யார்? என கேள்விகள் எழும்

ஏதோ பலநாட்டு உளவுதுறைகள் உள்ளே இல்லாமல் இது நடக்காது , அவ்வகையில் ராஜபக்சேக்கள் எனும் சீன கைகூலிகள் விரட்டபடுகின்றனர்

ராஜபக்சே சீனாவிடம் சரிய காரணம் பிரபாகரன், அவனை அழித்து சிங்களவரிடம் தன் ஆட்சியினை நிறுவிய ராஜபக்சே அந்த சொந்தமக்களாலே ஓட அடிக்கபடுகின்றார்

இது பிரபாகரனின் வெற்றி

இன்னொருவகையில் இனி யார் வந்து ஆண்டாலும் இலங்கை உடனே மாறாது சில தசாப்தங்கள் ஆகலாம், அதில் ஈழதமிழருக்கான சமரசமும அவசியம், அவ்வகையில் பிரபாகரன் சிரிக்கின்றான்

சிவாஜி தொடங்கிய போர் மொகலாயத்தை ஆட்டிவைத்து நெடுநாள் கழித்து வீழ்த்தியதற்கு குறையாதது பிரபாகரன் செய்துவிட்டு சென்ற யுத்தம், அது நடந்திராவிடால் இலங்கை இவ்வளவு பெரும் சிக்கலில் சிக்கியிராது

இப்பொழுது சீனா தன் திட்டமெல்லாம் பொய்த்து அந்நாடு இலங்கையினை விட்டு நீங்கும் நிலையில் இந்தியா மெல்ல சிரிக்கின்றது, தன்னால் முடிந்த உதவிகளை உலகநாடுகளோடு சேர்ந்து செய்வதாக அது உதவிகொண்டிருக்கின்றது

நிச்சயம் மோடி எனும் இரும்பு மனிதன் இந்தியாவிற்கு தலமை ஏற்று இந்த அளவு விட்டுகொடுக்காமல் நிற்பான் என இலங்கை எதிர்பார்க்கவில்லை

சோனியா, மன்மோகன் என குழப்பமான இந்திய பிரதமர்களை கண்டு அடிக்கடி சிரித்த இலங்கை, மோடி என்றொரு பலமான தலைவன் வந்து அணிசேரா நாட்டில் இருந்து இந்தியாவினை திருப்பி குவாட் அமைப்பில் சேர்த்து தங்களுக்கு இப்படி ஒரு அடிகொடுப்பான் என்றோ கனவிலும் நினைக்கவில்லை

எல்லாம் சேர்ந்து இந்தியாவுக்கும் ஈழதமிழனுக்குமான நல்ல விஷயமாக முடிகின்றது

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நினைத்துபார்க்கத்தான் வேண்டும், அது சரியானது

1990களில் புலிகள் மேல் இருந்த கோபத்தில் கடும் பொருளாதார தடையினை புலிகள் கட்டுபாட்டு பக்கம் ஏவினார் சந்திரிகா, அது எவ்வளவு கொடியது என்றால் அரிசி மண்ணெண்ணெய் என எதுவுமே அப்பகுதி மக்களுக்கு கிடைக்காது

மிகபெரிய கொடுமையினை அம்மக்கள் அனுபவித்தபொழுது வாஜ்பாய் அமைச்சரவையிலும் தமிழக அவையிலும் ஆட்சி செலுத்தியது திமுக, ஆனால் திரும்பி கூட பார்க்கவில்லை

அந்நேரம் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நடவடிக்கைகள் ஆச்சரியமானவை

விவசாயம் பெருக்கி, காய்கறிகள் பெருக்கி, தாய்லாந்தில் இருந்து இறைச்சிவகை இறக்குமதி செய்து, உலக நாடுகளில் இருந்து கப்பல் கப்பலாக பொருட்கள் இறக்கி தம் மக்களை காத்தார், யாரும் அவரை வீட்டுக்குள் புகுந்து அடிக்கவில்லை, ஓட ஓட விரட்டவில்லை

ஆம், மக்களை நெருக்கடியான காலத்தில் காக்கும் பொறுப்பு அவனிடம் இருந்திருக்கின்றது, இன்றைய சிங்கள தலைவர்கள் தலைதெறிக்க ஓடும்பொழுது அது நினைவுக்கு வருகின்றது

தர்மம் எப்பொழுதும் அழியாது, கால சக்கரத்தில் தர்மம் மேல் எழும் என்பது எக்காலமும் சரி

இதே கொழும்பு 1983ல் இதே ஜூலைமாதம் தமிழரை கொன்றுகுவித்து அவர்கள் உடமைகளை எல்லாம் எரித்தது, சிங்கள தலைவர்கள் ஆசியுடன் சிங்கள ரவுடிகளும் கைதிகளும் அரசியல் எடுபிடிகளும் செய்த கலவரம் அது

அப்படிபட்ட கொழும்பில் அதே ஜூலையில் கொழும்பு சிங்கள அரசியல்வாதிகளை சிங்கள மக்களே விரட்டி அடிப்பதெல்லாம் தர்மம் சிரிக்கும் இடம், அது தன் தலைமுடியினை முடிந்துகொள்ளுமிடம்

பிரபாகரன் செய்தது உண்மையிலே தர்ம யுத்தம், அந்த யுத்தம் சிவாஜியின் வெற்றி வரலாற்றில் நிலைத்தது போல இலங்கையிலும் அழியா இடத்தை பெற்றுகொண்டிருக்கின்றது

அதே நேரம் மோடி எனும் பெருமகன் இரும்பாக எழும்பியதில் என்னென்ன ஆச்சரியமெல்லாம் நடக்கின்றது என்பது ஒவ்வொரு இந்தியன் மனதிலும் நம்பிக்கையும் பெருமையும் கொள்ள வைக்கின்றது

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications