ஒரு சிறு குறிப்பு
ஒவ்வொரு நெல்லையனுக்கும் தாமிரபரணி, அகத்தியர், நெல்லையப்பர், திருசெந்தூர் நாதன், கொற்கை, ஆதிச்சநல்லூர், நின்றசீர் நெடுமாறன், குமரகுருபரர், நம்மாழ்வார், ஜடாவர்ம சுந்தரபாண்டியன், கட்டபொம்மன், புலித்தேவன், வாஞ்சிநாதன் , வ.உ.சி என பெரும் கர்வமான அடையாளங்கள் உண்டு
அந்த ஞானகர்வ பாரம்பரியத்தில் வந்த எங்கள் பாரதிக்கும் மகத்தான இடம் உண்டு
அவன் எங்கள் பெருமை, அவனின் நினைவுகளே எப்போதும் எம்மை வழிநடத்தும், அவன் எங்கள் ஞானகாற்று, தேச கங்கை நதி அவனை எப்படி நாம் மட்டம் தட்டுவோம்?
பாரதி எம் முன்னோடி, அவனை நாம் தொழும் அளவு இன்னொருவர் தொழுவார்களா என்பது தெரியவில்லை, இன்றும் அவன் பெயரை சொன்னாலே கண்ணீர் வரும்,,கயத்தாறு பக்கம் சென்றாலே உடல் சிலிர்க்கும்
நெல்லையப்பர் கோவில், நெல்லை டவுன், கடையம் பக்கம் சென்றால் இது பாரதி நந்த பாதை என கால்கள் செருப்பை கூட உதறும்
அப்படி எங்கள் உயிரில் கலந்தவ பாரதி, அவனை பற்றி எம்மிடம் யாரும் போதிக்க வேண்டாம்
நடந்த குழப்பம் எங்கே தொடங்கிற்று என்றால் இளையராஜாவுக்க்கு இருந்த அழுத்தம் பாரதிக்கு இருந்த அழுத்ததுக்கு குறைவில்லாதது, அவன் அந்த அழுத்தத்தில் வீழ்ந்தான் இளையராஜா தாக்குபிடித்தார் என சொல்ல போய் சிலரால் மோசமாக திருப்ப்விடபட்டது
பொதுவாக நாம் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதில்லை, பொது இடத்தில் ஒன்றை சொல்லும்போது ஏகபட்ட விமர்சனம் நல்லதாகவும் வரும் கெட்டதாகவும் வரும்
இரண்டையும் ஒன்றுபோல் கருதி கடந்து செல்லவேண்டும், இல்லையேல் சிக்கல் இரண்டை பற்றிகொண்டாலும் அது நல்லதல்ல
நாம் இப்போதும் விவகாரத்தை கடந்து செல்லத்தான் விரும்புகின்றோம், ஆனால் ஏகபட்ட அழைப்புக்கள் அறிவுரைகள், அன்னை Saraswathi Thyagarajan போன்றோரின் அன்பான கண்ணீரை பார்க்கும்போது சில விஷயங்களை சொல்லிவிடத்தான் வேண்டும்
எம்மேல் விமர்சனம் வைக்கும் அன்பர்கள் மேல் எமக்கு எப்போதும் கோபம் இருப்பதில்லை, அவர்கள் நம்மை புரிந்துகொள்ளவில்லை என்பது மட்டுமே வருத்தமாக வருத்தும்
ஆனால் சிலர் படும் அச்சம் நியாயமானது, ஒரு மாற்றுமதத்தவன் அதுவும் முன்பு காங்கிரஸ் திமுக என என்றோ சொல்லிகொண்டிருந்தன் ஏன் இந்துமதம் தேசியமெல்லாம் பேசவேண்டும் எனும் சந்தேகம் எழுதல் இயல்பே
அவர்கள் அப்படியான மோசடிகளை சந்தித்திருக்கலாம், பலர் நம்ப வைத்து ஏமாற்றியிருக்கலாம், சேலத்தின் எல்லா மரங்களிலும் மாங்கனி தரமானதாக இருக்கும் என ஏமார்ந்தும் போயிருக்கலாம்
அந்த வகையில் அவர்கள் கொதிக்கலாம், இவனுக்கு ஏன் இந்த வேலை? யார் இவன் என சந்தேகங்களை எழுப்பலாம்
இதனால் சில விஷயங்களை சொல்லிவிடலாம்
முதலாவது நாம் திமுக, காங்கிரஸ் அனுதாபி அல்ல்ல, நாம் எழுத வந்த 2010களில் நாம் இலங்கைவாழ் தமிழருக்கும் போராளி இயக்கங்களுக்கும் இந்த தேசம் என்ன செய்தது என எழுத தொடங்கினோம்
அதாவது தேசத்தை பற்றித்தான் எழுத தொடங்கினோம், இந்நாடு இலங்கைவாழ் தமிழருக்கு செய்த அனைத்து உதவிகளையும் எழுதினோம்
அப்போது புலிதலமையினை விமர்சிக்கும் அவசியமும் வந்தது
2010களில் அது ஆபத்து, அதுவும் வெளிநாட்டில் இருந்து எழுதுவது உயிர் ஆபத்து, அவர்கள் உலகளாவிய பலம் கோன்டவர்கள் வெளிநாட்டில் அவர்கள் வலையும் பலமும் அதிகம்
எவ்வளவு மிரட்டல்கள்? எவ்வளவு எச்சரிக்கைகள்?
உன் வீடு புகுந்து எரிப்போம் என்பது தொடங்கி, உன்னை நாலே நாட்களில் நடுரோட்டில் சுடுவோம் என்பது வரை அவ்வளவு மிரட்டல்கள்
ஆனால் அப்போதும் நாட்டை விட்டுகொடுக்க முடியவில்லை துணிந்துதான் எழுதினோம், அப்போதுதான் காங்கிரஸ் திமுக கோஷ்டிகள் நம்மை தேடி வந்தன, நாம் அவர்களை தேடி செல்லவில்லை
அது அச்சமான காலகட்டங்கள், எப்படியெல்லாம் ஆபத்து வந்தது என்பதை சொல்லி ஆகபோவதில்லை
ஆனால் அப்போது திமுகவினரும் காங்கிரசாரும்தான் நமக்கு காவலாக இருந்தார்கள், அவர்களுக்கு நாம் தேவைபட்டோம்
2014ல் மோடி வந்தபோது நாம் தேசாபிமானியாக தொடர்ந்தோம் , இந்த கோஷ்டிகள் முகம் வெளுக்க ஆரம்பித்தது, பின் விலகிவிட்டோம்
இது முதல் கட்டம்
இரண்டாம் கட்டம் என் வாழ்வில் 2018க்கு பின் என்னென்னவோ நடந்தன, வாழ்வா சாவா எனும் அளவு போராட்டங்கள் வந்தன
சிறுவயதில் இருந்தே இந்துமதம் பிடித்ததுதான், நாகர்கோவிலில் 4 வயதில் ஒரு கல்லூரி பேராசியை வீட்டின் நவராத்திரி பொம்மையினை அவர் மடியில் இருந்து பார்த்த நினைவில் இருந்து அது தொடங்கிற்று
ஓயா சண்டைகளும் அடிதடியும் உள்ள வீட்டில் இக்குழந்தை பாதிக்கபட கூடாது என அந்த பெருமாட்டி என்னை மடியில் வைத்து இதோ கண்ணன், இதோ அம்பாள் என காட்டிதந்த நினைவு எப்போதும் உண்டு
இந்துமதம் எனக்கு அங்குதான் அறிமுகமனது
ஆனால் 7 வயதில் வாழ்க்கை கிறிஸ்தவ கிராமத்தில் முடக்கிற்று, அங்கு எல்லாமே கிறிஸ்தவம் அந்த பயிற்சிகள் வேறுமாதிரியானவை
ஆனாலும் சரித்திரத்தை தேடினால் இந்துமதமும் இந்திய சரித்திரமும் இணைந்தே வரும், கட்டபொம்மனை தேடினால் ஜக்கம்மா வருவாள், புலிதேவனை தேடினால் சங்கரன்கோவில் ஆலயம் வரும்
இப்படி ஜடாவர்ம சுந்தரபாண்டியனை தேடினால் வள்ளியூர் முருகபெருமான் ஆலயமும் வரும் ஒளவையினை தேடினால் முப்பந்தல் கோவில் வரும்
ஆக சரித்திரத்தை தேடி செல்லும்போது இங்கெல்லாம் சென்று மனதால் அவதானிக்க முடிந்தது ஆனால் வாய்விட்டு சொல்லமுடியாது
2018க்கு பின் வாழ்க்கை மாறிற்று, எவ்வ்ளவோ விஷயங்கள் நடந்தன, அவற்றை சொல்ல அவசியமில்லை,சொன்னால் யாரும் நம்ப போவதுமில்லை
பாரதியின் வாழ்வை நிவேதிதா திருப்பினாள், அப்படி இலக்கில்லாமல் அரைகுறையாக ஏதோ எழுதிகொண்டிருந்த போது சம்பத்லஷ்மிதான் உருப்படியாக இந்துமதமும் நாயன்மார்களும் எழுத சொன்னார்
அதிலிருந்துதான் இந்துமதம் எழுதினோம், தேசம் எப்போதும் ரத்தத்தில் இருப்பது
சம்பத் லஷ்மியின் திடீர் மறைவு மறுபடியும் எம்மை குழப்பியது, நாயன்மாரோடு நிறுத்திவிடலாம் என்றுதான் திட்டம்
ஆனால் விதி அது அல்ல, ஒரு சத்தியமான குரு வந்தார், அவர் எம்மை தொட்டு மீட்டெடுத்தார், சிவாஜி எழுத சொன்னார் , தொடர்ந்து எழுத பணித்தார்
இவையெல்லாம் எம் வாழ்வில் நாமே அறியாமல் நடந்துவிட்டவை, ஏன் எழுதுகின்றோம், எதனால் எழுதுகின்றோம் என்பது எமக்கு தெரியாது
சிலநேரம் நாம் எழுதியதிதை படித்தாலும் நிச்சயம் நாம் எழுதவில்லை யாரோ எழுதிவைத்திருக்கின்றார்கள் என்றுதான் எண்ண தோன்றுகின்றது
ஆக குரு இட்ட கட்டளையினை மட்டும் செய்கின்றோம்
ஒவ்வொருவரிடமும் சென்று இதுதான் நான் என நிரூபிக்க எமக்கு அவசியமில்லை, நாம் ஏன் எழுதினோம் எப்படியானவர் என்பதை எதிர்காலம் சொல்லட்டும்
சிலருக்கு நாம் கட்சி பதவிக்கு ஆசைபடுவதாக சந்தேகம் இருக்கலாம், சிலருக்கு இவன் உள்நோக்கம் கொண்டவன் எனும் சந்தேகம் இருக்கலாம்
எதுவும் யாருக்கும் இருக்கட்டும், ஒரு சிங்கம் சில ஆடுகள் முன் சென்று நானே சிங்கம், இதோ பல் இதோ நகம், இதோ பிடரி என காட்டினால் அது நன்றாய் இராது
அதனால் நாம் யார் என்பதை காலமே காட்டும்
எம்வாழ்வின் தனிபட்ட விஷயங்களை, ஆன்மீக அனுபவங்களை, நாமே அசந்துபோன விஷயங்களை சொல்ல அவசியமில்லை, ஏதோ என்னை இழுத்து இப்படி போட்டுவிட்டது
ஒரு காசு பலனின்றி எவனாவது எழுதுவானா? அப்படியானால் இவன் ஏன் எழுதவேண்டும் எனும் கேள்வி நியாயமானதே
ஆனால் பாரதி என்ன மனநிலையில் எழுதினான் என்பதை புரிந்தால் எம்மையும் புரியும் இல்லாவிட்டால் ஒன்றும் செய்ய இயலாது
எனக்கே கட்சி, எனக்கே முதலிடம், நான் சொல்வதே வேதவாக்கு, நான் சொல்வதே சத்தியம் என பிறரை நம்பவைத்து ஏதோ திட்டத்தோடு இருந்தால் அவர்களை போலவோ நாமும் எனும் சந்தேகம் சிலருக்கு இருக்கலாம் அது அவர்கள் அறியாமை
ஆக நாம் இப்படித்தான் வந்தோம், இப்படித்தான் எழுதுகின்றோம், இதை தவிர சொல்ல ஒன்றுமில்லை
இது கூட சொல்ல அவசியமில்லைதான், ஆனால் ஒரு எழுத்தாளன் தன்னை பற்றிய உண்மையினை திறந்த புத்தகமாக சொல்லவேண்டும், தன்னை நம்பி படிப்போரை ஏமாற்ற கூடாது என்பது பாலகுமாரனும், ஜெய்காந்தனும், கண்ணதாசனும் சொன்ன அடிப்படை பாடம்
அதனால் நாம் இதை சொல்ல அவசியமாயிற்று
உண்மையில் நாம் எதுவும் இங்கு பெறவில்லை ஆனால் நிறைய இழந்துவிட்டோம், நல்ல பதவி உயர்வு இல்லை, வேலை மாற்றம் இல்லை, சம்பளம் பெரிய வாழ்வு எனும் ஆசைக்குள் செல்லமுடியவில்லை
போட்டி நிறைந்த உலகில் நிலைக்க நாள்தோறும் தொழ்ல்நுட்பம் கற்று வளரமுடியவில்லை
இன்னும் சொந்தமும் நட்புகளும் விலகிவிட்டன, எவ்வளவோ அன்பானவர்களெல்லாம் அவர்கள் மதம் முக்கியம், பரலோகம் முக்கியம் என நம்மை தூஷித்து விலகிவிட்டார்கள்
மகா மகாமோசமாக இந்து தெய்வங்களை எழுதி அழிந்தே போனாய், உருப்படாமல் போனாய் என நேரடியாக சொன்னவர்களே உண்டு
நாம் பெறும் வலிகளும் ரணங்களும் கொஞ்சமல்ல, அதையெல்லாம் எழுதினால் ஏடு தாங்காது. சந்திக்கும் சிக்கல்கள் கொஞ்சமல்ல
ஆனாலும் பின்வாங்கும் எண்ணமில்லை, இந்த மதமும் நாடும் பின்னி பிணைந்தவை , இரண்டும் வாழ ஏதாவது சொல்லவேண்டும் மறைந்தவை சொல்லபடவேண்டும் எனும் வைராக்கியத்தில் இருந்து மாறபோவதில்லை
நாளையே எதுவும் நடக்கலாம் , இந்த சவுகரியம் குறையலாம் ஆனாலும் ஏதோ ஒரு உருவில் எங்கோ இருந்து சில வரிகளாவது எழுதாமல் போகமாட்டோம்
எமது நிலையினை பாரதி தன் கடைசி காலங்களில் மனதுக்கு நெருக்கமானவர்களோடு சொல்லி புலம்பிய வரியில்தான் சொலல முடியும்
“சொந்த ஊருக்கு போனா நீ எங்க சாதியே இல்ல, நீ ஆச்சாரமில்ல ஒழுக்கமில்லன்னு அடிச்சி விரட்டுறா, இரண்டு பிள்ளைகளை வச்சிருக்க பொறுப்பு இருக்கா உங்களால எவ்வளவு அவமான்ம்னு மாமியார் வீட்ல விரட்டுறா
அங்க அரசாங்கும் விரட்டுது, எங்க போனாலும் நீ எங்க சாதி இல்ல எங்க கூட இல்லண்ணு விரட்டுறா
நான் எங்க போவேன், அங்க போனா நீ சுதேசின்னு பிரிட்டிஷ்காரன் அடிக்கிறான், இங்க வந்தா நீ எங்க இனமே இல்ல, குடும்பமே இல்லன்னுவிரட்டுறா
நான் எங்கதான் போவேன், ஒரு மனுஷன் அவனா ஒருக்கிறது தப்பா.. அவனா அவன் மன்சுபடி வாழ்றது உண்மைய சொல்றது தப்பா?
ஆளாளுக்கு அவரவர் விருப்பத்துக்கு பணிஞ்சி வாழனும்னா ஒரு மாடு போதுமே, நான் எதுக்கு?”
ஆனால் ஒரு விஷயம் உறுத்துகின்றது
இதுவே ஒரு பாஜக காரன் திமுக பக்கம் சென்றால் விழுந்து வரவேற்று கொண்டாடி பெரும் பதவிகொடுப்பார்கள், கொண்டாடுவார்கள்
ஒரு இந்து கிறிஸ்தவ மதம் சென்றால் அவனை கொண்டாடி தீர்ப்பார்கள், புனிதனாகிவிட்டான் என வரவேற்று ஆர்பரித்து பெருவாழ்வு கொடுப்பார்கள்
ஆனால் மாற்றுமதத்தான் ஒருவன் இந்துமதமோ தேசியமோ எழுதினால் இந்துக்களே வன்மத்தோடு விரட்டுகின்றார்கள் எவ்வளவு அவமானத்தோடு கொதிக்கின்றார்கள்
எம்மை நா(ய்) என்கின்றார்கள், சொல்லட்டும்
வீரசிவாஜியினை நீ ஒரு குரங்கு என ஷாயிஸ்ட்கான் சொன்னபோது, ஆம் நான் குரங்கு நாட்டை காக்கும் அனுமன் குரங்கு என சொன்னான் வீரசிவாஜி
அப்படி நாமும் நா(ய்)தான், இந்த நாட்டுக்கும் மதத்துக்குமான காவல் நாய்
அனுமன் நெஞ்சை நாமனுக்குத்தான் பிளந்து காட்டினான், கைகேயிக்கும் கூனிக்கும் அவன் அப்படி செய்ய அவசியமில்லை
நாமும் நம்மை பற்றி எல்லோரிடமும் சொல்ல அவசியமில்லை , ஆனாலும் எம்மை மகனாக பாவித்த் Uma Venkat, Geetha Ganeshதாய்மார்களுக்காக , போன்றோருக்காக சில விஷயங்களை சொல்ல வேண்டியதாயிற்று
Vijaya Lakshmi, Vjamunarani Kuppuraj போன்றோரும் கொண்ட கவலை கொஞ்சமல்ல
உன்னை நா(ய்) என்கின்றார்கள், வேசி மகன் என்கின்றார்கள் என்னால் தாங்கமுடியவில்லை என அந்த அன்பான உள்ளம் சொல்லும் போது மனம் கொஞ்சம் கலங்குகின்றது
எமக்கு பாரத மாதவே தாய், அவ்வகையில் சிலர் பழித்தால் அது அவளுக்கானதே
இப்போதும் நாம் சொல்கின்றோம், எமக்கு யாரிடமும் கோபம் இல்லை, எம்மை எல்லோராலும் புரிந்துகொள்ளவும் முடியாது
புரியாதவர்களுக்கு நாம் அப்படித்தான் தெரிவோம்
எம்மை புரிந்த சிலர் உண்டு , வழிகாட்ட என் குரு உண்டு, ஆதரிக்க அன்பர்கள் உண்டு அதுபோதும்
“பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!
புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோ மே-நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோ மே.
பகை நடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே!
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ?-நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ?-நன்னெஞ்சே!
உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ,-நன்னெஞ்சே!
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனோமோ?நன்னெஞ்சே
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
சாத்திரங் கேளாயோ?-நன்னெஞ்சே!
போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலவந் தானுமவன்-நன்னெஞ்சே!
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ணனன்றோ?-நன்னெஞ்சே!
தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே”
ஆம், பாரதியினை தொழுபவன் யாரையும் வெறுக்கமாட்டான், இந்துஸ்தானி யாரையும் இந்து யாரையும் பகை என கருதமாட்டான்
நாமும் அவ்வழியே, எம்மை சிலர் புரிந்துகொள்ளவில்லை எனும் ஆதங்கமே த்விர யாரும் நமக்கு பகை அல்ல, அப்ப்டி ஆகவும் முடியாது
நம்மை அச்சத்தோடும் அது கொடுக்கும் வெறுப்போடும் பார்ப்பவர்களுக்கு பரம்பொருளும் காலமும் ஒருநாள் உண்மையினை சொல்லும்
எம்மேல் இவ்வளவு அன்பு கொண்டு மிக அக்கறையாய் ஆதரிக்கும் அனைவருக்கும், எமக்காக இவ்வளவு அன்பு கொண்டு நிற்கும் அனைவருக்கும் நன்றிகள், பாரதியின் ஆத்மா உங்களை ஆசீர்வதிக்கட்டும்
எம்மை நேரில் கூட பார்த்திராத அவர்களின் அன்பும் அரவணைப்பும்தான், இந்த இனம்புரியா பாசமேதான் எம்மை எழுத வைக்கின்றது, கண்ளீருடன் அதை சொல்வதில் பெருமிதம் பெருகுகின்றது, இது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.