கோத்ரா ரயில் நிலையம் – சாபர்மதி ரயில் எரிப்பு
2002ம் ஆண்டு மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தார், அவருக்கென ஒரு நற்பெயர் பிம்பம் உருவாகி கொண்டிருந்த்து
பாஜகவின் முதல் சிறப்பான மாகாண முதல்வராக அவர் உருவாகி கொண்டிருந்தார், மாகாணம் தாண்டியும் அவர் புகழ் பரவ ஆரம்பித்தது
மத்தியில் வாஜ்பாய் மோடிக்கு முழு ஆதரவளிக்க வேகமாக வளர்ந்தார் மோடி, அவரை மாபெரும் சிக்கலில் தள்ளவும் அவரை அரசியலில் இருந்து வெளியேற்றவும் பெரும் திட்டம் தீட்டப்பட்டது.
அது அரங்கேற்றபட்ட இடம் அந்த கோத்ரா ரயில் நிலையம், மிக தீவிரமான அதே நேரம் மிக மிக பலமான முன்னேற்பாடுடன் நடந்த கொடுமை அது
அயோத்தி சென்று திரும்பிய கரசேகவர்கள் இருந்தபெட்டி குறிவைத்து அடிக்கபட்டு பின் தயாராக இருந்த பெட்ரோல் மூலம் கொளுத்தபட்டது, 59 பேர் பலியானார்கள் இன்னும் இந்து பெண்களும் குழந்தைகளும் உண்டு
மானிடம் அஞ்சும் இந்த மாபெரும் பாதகம் ஒவ்வொரு மக்களையும் கொதித்தெழ செய்தது, விளைவு பெரும் கலவரம் உண்டானது
கஜினி முகமது காலம் முதல் அவுரங்கசீப் காலம் வரை பெரும் வலிகளையும் சோகங்களையும் கண்ட மக்கள் அதன் பின் பொறுக்காதாவாறு அச்சம்பவம் தூண்டிவிடபட்டது
மோடிக்கு வைக்கபட்ட மிக பெரிய அக்னி பரிட்சை அது
மோடி கோவை கலவரத்துக்கு அஞ்சி வீட்டில் முடங்கிய ஐயா கருணாநிதி போலவோ இல்லை இதர தமிழக கலவர இடங்களுக்கு செல்லாமல் முடங்கிய தமிழக முதல்வர்களை போலவோ அல்ல, அவர் நேரடியாக களமிறங்கினார்
அவருக்கு தேவை அமைதி, மாகாண அமைதி, வளர்ச்சிக்கான குஜராத்தின் அமைதி
அவர் நேரடியாக களமிறங்கினார், அவர் நடவடிக்கை கடுமையானதாக இருந்தது சந்தேகமில்லை ஆனால் இந்துக்களும் அவரின் நடவடிக்கையில் கடுமையாக பாதிக்கபட்டனர்
அவர் நினைத்திருந்தால் சாவகாசமாக இருந்து கொண்டு மத்திய ராணுவம் பாதுகாப்பு படை வர கோரியிருக்கலாம் இல்லை “மத சகிப்ப்தன்மை” “காந்தி கண்ட அமைதி” “மனித நேயம் காப்போம்” என பேசிகொண்டிருந்திருக்கலாம்
பெரும் உண்ணாவிரதம் துவக்கி இருக்கலாம்
ஆனால் அது பெரும் அழிவில் முடியும் என்பதால் அவரே களமிறங்கினார், குஜராத்வாசியாக அவருக்கு அங்கு எதெல்லாம் சிக்கல்? எதெல்லாம் பிரச்சினை என்பது சரியாக தெரியும்
ஒரு தளபதிபோல் நின்று கலவரத்தை அடக்கினார், மோடி அதிகம் பேசுபவர் அல்ல அவருக்கு தெரிந்ததெல்லாம் செயல் செயல் செயல் மட்டுமே
உண்மையில் அப்படி ஒரு தலைவன் 1947ல் இருந்திருந்தால் தேசம் பஞ்சாப் எல்லையில் வங்க எல்லையில் அப்படி ஒரு அழிவினை சந்தித்திருக்காது
கலவரத்தை அடக்கினார் மோடி ஆனால் மனுகுல எதிரியாக சித்தரிக்கபட்டார், அமெரிக்கா அவருக்கு விசா மறுக்கும் அளவு உலகின் கொடுமையான மனிதராக அடையாளம் காட்டபட்டார்
ஆனால் காலம் அவரை உலகிற்கு காட்டி இன்று மோடி என்பவர் உலக உன்னத தலைவர் என அமெரிக்காவே ஒப்புகொண்டிருக்கின்றது
உண்மையில் அந்த ரயில் எரிப்பும் கலவரமும் மோடி மேல் போடபட்ட கற்கள், அவருக்கு வெட்டி வைத்த குழி
ஆனால் யானை தன் மேல் விழ்ந்த கல்லையும் மண்ணையும் மிதித்தே மேலேறும் என்பதை போல தன் மேலான பழிகளையும் வஞ்சக திட்டங்களையுமே சாதகமாக்கி வளர்ந்தவர் மோடி
இன்று அந்த கோத்ரா ரயில் எரிப்பு நாள், ராமர் கோவிலுக்காக அயோத்தி சென்றுவந்தவர்கள் கொல்லபட்ட கொடும் நாள்
அவர்கள் செய்த ஒரே தவறு அயோத்திக்கு சென்றுவந்தது எனும் வகையில் 400 ஆண்டுகளாக லட்சகணக்கானோர் அந்த ராமர் கோவிலுக்காக தன்னை பலிதந்த பலிதானத்தில் அவர்களும் சேர்ந்து கொண்டார்கள்
ராமன் ஆலயத்தின் விளக்காக தங்களை எரியவிட்ட அந்த தியாகிகளுக்கு இந்து மக்கள் உலகெங்கும் இருந்து ஆழ்ந்த அஞ்சலிகளை பதிகின்றார்கள்.