கோபால்சாமி துரைச்சாமி நாயுடு (ஜி.டி நாயுடு)
இந்த பிரபஞ்சம் எனும் பெரும் சக்தி உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒருவனுக்கு விஷேஷித்த சக்திகளை அவ்வப்போது தருகின்றது, வெகு அபூர்வமாக அப்படி சிலருக்கு அந்த ஆர்வம் பிறப்பிலே வருகின்றது
சாதாரண மனித சிந்தனையில் இருந்து விலகி வித்தியாசமான சிந்தனையினால் அவர்கள் பலவித கருவிகளை, எந்திரங்களை உலகுக்கு தருகின்றார்கள், அவர்களை விஞ்ஞானிகள் என்கின்றது உலகம்
ஆழ கவனித்தால் மானிட குலம் சில கடின உழைப்பையும் சிரமத்தையும் தவிர்க்க, வேலையினையும் வாழ்வினையும் எளிதாக்க ஆண்டவன் கொடுக்கும் வாய்ப்பு அது
ஆனால் அதன் பின்னால் ஓடி ஓடி இருக்கும் வாழ்வினையும் நேரமில்லை என மானிடன் மாற்றிகொண்டது தலைகீழ் திருப்பம்
மின்சாரமும் எந்திரமும் இல்லா அக்காலத்திலும் 24 மணிநேரம்தான் இருந்தது, ஆனால் அவர்கள் மகிழ்வுடன் வாழ்ந்தார்கள். எல்லாம் இருந்தும் அதே 24 மணிநேரம் இருந்தும் இன்றையமனிதன் நேரமில்லை என ஓடி கொண்டே இருப்பது பரம்பொருளே சிரிக்கும் தருணம்
அந்த விஞ்ஞானத்தின் காலமிது, உலகில் மானிடன் தன் பணிகளை எளிதாக்க வந்த கடவுளின் தூதர்கள் அவர்கள், அந்த விஞ்ஞானிகள் பலவகை ஒவ்வொருவரும் ஒருவகை
ஒரு கூட்டம் சிந்தித்து தியர் எழுதிகொண்டே இருக்கும், நியூட்டன், ஐன்ஸ்டீன் அவ்வகை
இன்னொரு கூட்டம் சிந்தித்து செயலபடுத்தி ஒரு பொருளை உருவாக்கி மக்களுக்கு பயனுற கொடுத்து சம்பாத்தித்துகொண்டிருக்கும்
எடிசன், டெஸ்லா போன்றோர் அவ்வகை
தமிழகத்தில் முதல்வரிசையில் இடம்பெறுவது சீனிவாச ராமானுஜம் என்றால் இரண்டாம் வரிசை ஜி.டி நாயுடு
கோபால்சாமி துரைச்சாமி நாயுடு, சுருக்கமாக ஜி.டி நாயுடு.படிக்காத மேதைகள் நிறைந்த தமிழகத்தில், பாமர விஞ்ஞானி அவர்.
எடிசனுக்கும்,ஹென்றிபோர்டுக்கும் ஏன் ஜெர்மானிய பென்சுக்கும், ஜப்பானியரான ஜெனிச்சி கவாகாமி போன்றோருக்கும் சவால் விட்ட தமிழன், ஒரே தமிழன்.
தொழில்துறை, விவசாயம், வியாபாரம், விஞ்ஞானம் என மொத்தமும் கலக்கி எடுத்து அனைத்திலும் டாப்1 என நின்று சாதித்த தமிழன்.
இன்றைய மின்சார மோட்டார், மிக்ஸி, கிரைண்டர் என பல பொருட்களுக்கு அவனே முன்னோடி, கோவை பகுதி இன்றளவும் மோட்டார் போன்ற தொழிலில் முன்னணியில் இருக்க அவனும் பெரும் காரணம்
இன்றைய மின்சார மோட்டார், மிக்ஸி, கிரைண்டர் என பல பொருட்களுக்கு அவனே முன்னோடி, கோவை பகுதி இன்றளவும் மோட்டார் போன்ற தொழிலில் முன்னணியில் இருக்க அவனும் பெரும் காரணம்
மோட்டார் , பொறியியில் என்றல்ல விவசாயத்திலும் புதுமைகளை புகுத்தும் பெரும் அறிவு அவனுக்கு இருந்தது, அதிக விளைச்சல் பருத்தி, ஒரே மரத்தில் பல வகை கனிகள் என உலகம் வியக்கும் சாதனைகளை அன்றே செய்தான் அந்த விஞ்ஞானி
அந்த வரிசையில் இனி ஒரு தமிழன் வருவதற்கு நிச்சயம் 500 ஆண்டு ஆகும்.
எப்படி சாதித்தான், அவனால் மட்டும் எப்படி முடிந்தது?. எவ்வளவு அடிச்சுவடுகளிலும் உதவியிலும் எடிசனும், போர்டும் சாதித்த சாதனைகளை, சுயம்பாக வளர்ந்த அந்த தமிழனால் எட்ட முடிந்தது பெரும் ஆச்சரியம்
பொறியியல் தொழில்துறைக்கு இன்றுவரை புரியாத புதிர் அவர், பள்ளிபடிப்பு இரு விரல்களுக்குள் அடங்கிவிடும் அவ்வளவுதான்.
இன்று எத்தனை பொறியியல் கல்லூரி, எவ்வளவு பட்டம், எவ்வளவு உயர்படிப்புகள், ஆனாலும் ஒரு நாயுடுவை, அதிலும் அவரின் ஆற்றலில் ஆயிரத்தில் ஒருபங்குள்ள ஒரு பொறியிலலாளரை இன்று உருவாக்கமுடியுமா?
முடியாது இன்றுள்ள ஆயிரகணக்கான தமிழக பொறியியல் பல்கலைகழகங்களாலும் முடியவில்லை, முடியவும் முடியாது.
அறிவு வேறு, திறமை வேறு, சுயசிந்தனை வேறு.
உப்பினை கூட வரிபோட்டு கொள்ளையடிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை பழிவாங்கிற்று, பெரும் வரி கட்ட சொல்லி அவரை அடித்தது, அதாவது விட்டால் ஐரோப்பிய எந்திரங்களை இவனே செய்துவிடுவான், நாமெல்லாம் வியாபாரம் செய்யமுடியாது என குறித்துவைத்து அடித்தது.
விஞ்ஞானமெல்லாம் தனக்கு, விஞ்ஞான கண்டுபிடிப்பெல்லாம் தன் வியாபாரத்துக்கு என விடாபிடியாக இருந்த பிரிட்டிசாரிடம் அவரால் வெல்ல முடியவில்லை
வெறுப்பில் தன் கண்டுபிடிப்புகளை எல்லாம் தீயிலிட்டு கொளுத்தி மனம் வெறுத்தார் நாயுடு
சுதந்திரம் பெற்றபின்னும் காங்கிரஸ் அரசு வெளிநாட்டவருக்கு அஞ்சி அவரை அடக்கித்தான் வைத்திருந்தது, அவரை ஊக்குவிக்கவே இல்லை
காங்கிரஸ் எவ்வளவு ஐரோப்பிய அடிமையாக இருந்தது என்பதற்கு சுதந்திர இந்தியாவில் ஜி.டி நாயுடு நடத்தபட்ட விதமே பெரும் உதாரணம்
அன்றே மோடியின் “மேக் இன் இந்தியா” திட்டம் இருந்திருக்குமானால் இன்றைய சாம்சுங், சோனி, பேனசானிக் ஏன் கனரக தொழிலில் பின்னும் ஜெர்மன் கம்பெனிகள் போல நாயுடுவின் கம்பெனியும் வளர்ந்திருக்கும்
எல்லாம் நேரு செய்த அடிமை அரசியலில் நாசமாயிற்று.
எப்படி நேதாஜியினை அந்நியருக்காக கைவிட்டார்களோ, அப்படியே கைவிடபட்டவர்தான் நாயுடு
அறிவாளி என்பதற்காக பிரிட்டிசாராலும், சொந்தநாட்டு மக்களாலும் ஒதுக்கிவைக்கபட்ட மாமனிதர், ஒருவகையில் இந்தியா அவருக்கு இழைத்தது பெரும் துரோகம்..
முன்பு ஜெர்மனும், அமெரிக்காவும் அவரிடம் பெற்ற நுட்பங்கள் ஏராளம், அவற்றைத்தான் நாம் பெரும் பணம் கொடுத்து இன்று வாங்குகின்றோம்.
அறிவில் சிறந்த பாரதியும், கணித விஞ்ஞானி ராமானுஜமும் அழுது கரைந்து, வேதனையில் செத்த இந்த நாட்டில்தான் அந்த மாபெரும் விஞ்ஞான அவதாரமான ஜி.டி நாயுடுவும் வேதனையில் செத்தார்.
சக தமிழர்கள் அன்று இவருக்கு ஒத்துழைத்தால், அதாவது பிரிட்டிசாரை எதிர்த்து ஆதரவளித்திருந்தால் இன்று இந்தியா எவ்வளவு பெரிய தொழில்புரட்சியை கண்டிருக்கும்???
இந்நாட்டில் என்றுமே அறிவாளிக்கு மரியாதை இல்லை என்பதற்கு பெரும் எடுத்துகாட்டி ஜிடி நாயுடு.
மோட்டார் முதல் அவரைக்காய் செடிவரை அவரின் சாதனை பெரிது, அரசையும் மீறி அவர் செய்த தொழில்பெரிது.
அதற்கும் மேல் கொட்டிய செல்வத்தை கல்விக்கும், ஆராய்சிக்கும் அள்ளிகொடுத்த அவரின் மனம் பெரிது.
அவர் எவ்வளவு பெரிய அறிவாளி என்பதற்கு ஒரு உதாரணம் மட்டும் எடுத்துகொள்ளலாம்.
அதாவது உலகம் கண்ட ஒப்பற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இறந்தபின் அவரின் மூளையை ஆராய்சி செய்தார்கள், அதில் சில மடிப்புகள் அதிகம் இருந்ததாகவும் அவரின் சிந்தனை திறனுக்கு அதுதான் காரணம் என ஒரு முடிவிற்கு வந்தார்கள்.
அதே போல மேல்நாட்டு விஞ்ஞானிகள் ஆராய விரும்பிய மூளை, தமிழக டாப்1 விஞ்ஞானி ஜி.டி நாயுடுவினது, அவர்களுக்கு அவ்வளவு ஆர்வம்.
இதற்குமேலும் அவரைபற்றி விளக்க என்ன இருக்கின்றது.
தொழில்புரட்சியில் ஒரு விஞ்ஞான மேதையாக ஒப்பற்று விளங்கிய அந்த தமிழனின் நினைவு இன்று
அந்த பெரும் விஞ்ஞான வித்தகனுக்கு இங்கு பெரும் நினைவு மண்டபம் கிடையாது, அவனுக்கு சிறப்பு கிடையாது
ஆனால் கருணாநிதி பேனாவுக்கு பல கோடியில் சிலை அமைக்க பேச்சு நடக்கும்
நிச்சயமாக ஜிடிநாயுடுவின் நினைவுநாள் தமிழக மாணவர்களிடையே அறிவியல் நாளாக கொண்டாடபட வேண்டும்.
மாணவர்களின் புதுபுது கண்டுபிடிப்புகள் அன்று காட்சிக்கு வைக்கபடவேண்டும், அவர் பெயரால் பெரும் விருதுகள் வழங்கபட வேண்டும்.
நமக்கு தேவை சின்ன எம்ஜிஆர், டவுசர் எம்ஜிஆர், ஜெயில் எம்ஜிஆர் அல்ல, மூன்றாம் நான்காம் கலைஞர்களுமல்ல மாறாக ஜிடிநாயுடுக்கள், அப்துல் கலாம் போன்ற மேதைகள்
நமக்கு தேவை ஆர்மி ஜெனரல், உதயநிதி, இன்பநிதி அல்ல , நமக்கு தேவை விஸ்வேசரய்யா போன்ற மேதைகள்
அவர்களை இப்படித்தான் உருவாக்க முடியும்…
இவர்களை போன்றவர்களை யார் நினைக்கின்றார்களோ இல்லையோ, அந்த அபூர்வ தமிழனை நாம் நினைத்துகொள்ளலாம்
ஜிடி நாயுடு நிச்சயமாக தமிழகத்து எடிசன்
அவரின் வரலாற்றை ஆழமாக பார்த்தால் ஒரு உண்மை விளங்கும்
ஆம், தமிழக வரலாற்றில் அதிசய மனிதர் ஜி.டி நாயுடு. அவரின் விஞ்ஞான மூளை உலகின் மகா அபாரமானது, ஹென்றி போர்டு போல பெரும் பிம்மமாக அவர் வந்திருக்கலாம்
ஹோண்டா, யமஹா போல மகா பிரமாண்ட நிறுவணங்களையும் அவரால் அமைத்திருக்க முடியும்
ஆனால் இந்தியன் எதுவுமே செய்ய கூடாது தன்னிடம் வாங்கித்தான் விற்க வேண்டும் என்ற கொள்கையில் இருந்தனர் பிரிட்டிசார், அவர்கள் இருக்கும் வரை மேற்கே இருந்துதான் எல்லாம் இறக்குமதி துணி உட்பட
டாட்டா போன்றவர்கள் கூட தொழில்நுட்பத்தை அவனிடம் இருந்தேதான் வாங்க வேண்டிய நிலை அன்று
அப்பொழுது நாயுடு பல அதிசய கண்டுபிடிப்புகளை செய்கின்றார் அந்நிய பிரிட்டிஷ் அரசாங்கம் ஏகபட்ட கெடுபிடிகளை போட்டு அவரை அந்த துறையில் இருந்தே விரட்டிற்று
நாயுடுவுக்கும் ஈரோட்டு ராம்சாமிக்கும் நட்பு உண்டு
ஆனால் ஒரு திராவிட விஞ்ஞானியினை அரசு ஓடவிட்டு அடித்தபொழுது ராம்சாமி ஒரு வார்த்தையும் கண்டிக்கவில்லை, திராவிடன் பெரும் தொழில் செய்தால் எல்லா சூத்திர திராவிடனுக்கும் வேலை கிடைக்கும் என்ற தொலைநோக்கு கூட இல்லை
ஒரு திராவிட விஞ்ஞானி உலக அடையாளமாக உருவாக கூட ராம்சாமியின் குரல் ஆதரவாக வரவில்லை
ஜிடி நாயுடு பிரிட்டிசாரால் குறிவைத்து அடிக்கபடும் பொழுது அமைதி காத்திருக்கின்றார் ராம்சாமி
ஆம், ஒரு காலமும் ஆளும் தரப்பை ராம்சாமி எதிர்த்ததே இல்லை, அதுவும் பிரிட்டிஷ் என்றால் மூச்ச்ச்..
அவரின் புரட்சி எல்லாம் சாதுவான பிராமணன் மேல் மட்டுமே, காரணம் அது ஒன்றுதான் திருப்பி அடிக்க தெரியாத இனம்
திராவிட நாயுடுவின் நியாயமான விஞ்ஞான அறிவுக்கு கூட உதவி செய்யாத ராம்சாமிதான் இங்கு பார்ப்பன அடிமைதனம் என பகுத்தறிவு பேசி தமிழனுக்கு அறிவு கொடுத்தார் என்றால் அது நகைக்குரியது
ஜிடிநாயுடுவின் வரலாறு பல உண்மைகளை செவிட்டில் அறைந்து சொல்லும், இந்தியருக்கு அன்றைய ஆட்சியாளர் செய்த துரோகத்தை சொல்லும், வியாபாரம் ஒன்றுக்காக இங்கு அவனை அடக்கிய அடக்குமுறைகளை சொல்லும்
அவன் கொடுத்த கல்விக்கும் அன்றைய உலகத்துக்கும் இருந்த மாபெரும் இடைவெளியினை சொல்லும், அந்த இடைவெளியினை தாண்டி ஒருவன் உருவானால் அவன் எப்படி சரிக்கபடுவான் என்பதையும் சொல்லும்
அப்படியே ஈரோட்டு ராம்சாமி எப்படிபட்ட ஆங்கில ஆதரவாளராக இருந்தார் என்பதையும் மிக தெளிவாக சொல்லும்
இதுதான் அய்யா ராம்சாமியின் இனமான உணர்வு, அவர் பரப்பிய பகுத்தறிவு, அதவாது எக்காரணம் கொண்டும் பிரிட்டிஷ்காரனை எதிர்க்க அவர் தயாரில்லை, சொந்த தமிழன் பாதிக்கபட்டாலும் அவர் வாய் திறக்கவே இல்லை
ஏன் என்றால் அதுதான் அய்யா ராம்சாமி, அவரின் பகுத்தறிவும் போராட்டமும் அப்படியானது