சப்த விடங்கர் ஆலயங்கள் : 05 / 08 திருக்குவளை
ஸ்ரீ வண்டமர் பூங்குழலி சமேத அவனிவிடங்கர்
சப்த விடங்கர் ஆலயத்தில் அடுத்த ஆலயம், அதாவது ஐந்தாவது ஆலயம் திருக்குவளை என அழைக்கப்படும் திருக்கோளிலி ஆலயம்.
இது காவேரியின் தென்பக்கம் அமைந்துள்ள ஆலயம், இது தேவாரம் பாடபட்ட தலமாகும். சைவ குரவர்களும் பலரும் வந்து வழிபட்டிருக்கின்றார்கள்
“நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமம்
கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறம்அருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே”
என்பது சம்பந்தர் பாடல்.
“மைக்கொள் கண்ணுமை பங்கினன் மான்மழுத்
தொக்க கையினன் செய்யதோர் சோதியன்
கொக்க மர்பொழில் சூழ்தரு கோளிலி
நக்க னைத்தொழ நம்வினை நாசமே”
என்பது அப்பர் பெருமான் பாடிய தேவாரம், இவையெல்லாம் அந்த கோளினி தலத்தில்தான் பாடப்பட்டது.
இந்த ஆலயம் மகா புராதனமானது, பிரம்மன் தன் சாபம் தீர மண்ணால் ஒரு லிங்கம் செய்து வழிபட்டான் என்பதில் இருந்து இந்த தலம் தொடங்குகின்றது
இங்கே திருமால், பிரம்மன், அகத்திய மாமுனி என எல்லோரும் வந்து வணங்கியிருக்கின்றார்கள்
இங்கே மகாபாரத காலமும் காட்சியும் உண்டு, மகாபாரத பீமன் பரகாசுரனை கொன்றபின் இங்கே பரிகாரம் செய்தான் என்பது தலபுராணத்தில் ஒன்று
இன்னும் முசுகுந்த சக்கரவர்த்தி முதல் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் காலம் வரை எல்லோரும் வந்து வணங்கியிருக்கின்றார்கள்
இந்த தலத்தில்தான் சுந்தரருக்கும் பெரும் அற்புதம் நிகழ்ந்தது, குண்டையூர் கிழார் சுந்தருக்கு மூட்டை மூட்டையாக நெல் கொடுத்தபோது அதை தன் ஊருக்கு கொண்டு செல்லமுடியாமல் அவர் உதவி கேட்டு பாடியது இங்குதான்
அதன்பின்பே பூதகணங்கள் வந்து அந்த நெல்மூட்டைகளை அள்ளி சென்று உதவின, அந்த உதவி இங்கிருதுதான் கிடைத்தது
நவகிரகங்களுக்கு பெரும் பாதிப்பு வந்தபோது அவை இங்கேதான் சாபம் தீர்ந்தன, இங்கே வரும் பக்தகளுக்கு நவகிரகங்களின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்
இதனால் இங்கே நவகிரஹங்கள் ஒரே வரிசையில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும்
நவக்கிரகங்கள் முதலியோர்க்கு உண்டாய குற்றங்களை நீக்கி அருள் புரிந்தமையால் கோளிலி என்று பெயர் பெற்றது
“கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமாள்” என்பது சம்பந்தர் வாக்கு
இந்த தலம் பிரம்மனால் பூஜிக்கபட்ட தலம் என்பதால் “பிரம்மபுரீஸ்வரர்” என அழைக்கபடுகின்றார், அன்னை வண்டமர் பூங்குழலி
வெண்மணலால் செய்யபட்ட லிங்கத்தை பிரம்மன் வணங்கியதால் இந்த சிவன் பிரம்மபுரீஸ்வரர் என்றானார், காப்பிடபட்ட அந்த லிங்கத்துக்கு குவளை மலர்களால் அர்ச்சனை செய்யபட்டதால் அந்த கோவில் திருகுவளை கோவில் என்றாயிற்று
அந்த திருகுவளை மலர்களை சூடிய அன்னை வன்டமர்குழலி என்று அழைக்கபட்டாள்
காவேரியின் கிளையாறுகளில் ஒன்றான சந்திரநதி இந்த தலத்தை சுற்றி ஓடுகின்றது, திருமாலும் பிரம்மனும் இந்திரனும் இன்னும் அகத்தியரும் தேடிவந்து வணங்கிய இடம் என்பதால் சக்தி அதிகம்
இந்த தலத்தில்தான் அவனி விடங்கராக சப்தவிடங்கரும் வீற்றிருந்து பிரபஞ்ச சக்தியினை இழுத்து தருகின்றார், மிகபெரிய சக்திகுவியலாக அந்த இடம் இந்த அவனி விடங்கரால் திகழ்கின்றது
இந்த தலம் விசுத்தி சக்கரம் துலங்கும் தலம், அந்த சக்கரத்தின் சிறப்புக்கள், அவசியமெலலம் அறிந்தபின் இந்த ஆலயம்பற்றிய முக்கியத்துவம் இன்னும் நன்றாய் புரியும்
அனாதகத்துக்கு மேல் கழுத்து பக்கம் அமைந்திருக்கும் ஐந்தாம் சக்கரம் விசுத்தி, இதுபற்றி சித்தர்களும் ஞானியர்களும் நிரம்ப சொல்லியிருக்கின்றார்கள்
“ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம்
அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு
மாச்சப்பா வதற்க்குமேல் பன்னிரெண்டங்குலம்
பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும்
பாலகனே அட்சரந்தான் வகாரமாகும்
வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே.”
என்பது அகத்தியர் பாடல்
“எறியே பன்னிரண்ட.டங்குல மேதாண்டி
யேறமாம் விசுக்க்தி என்ற தலமதாகும்
மாறவே யறுகோண வளையமொன்று
மகத்துவமாம் பதினாறு இதழு மாகும்”
என்பது போகர் சொல்லும் போதனை
அநாகத தளத்தில் இருந்து மேலே 12 விரல்கடை உயரத்தில் இந்த சக்கரம் அமைந்துள்ளது, கழுத்தின் அடிபாகத்தில் அமைந்துள்ளது
கழுத்தில் அமைந்துள்ள இந்த சக்கரம்தான் காற்று தத்துவத்தின் உச்ச சக்கரமாகும், இதன் தாத்பரியம் முக்கியமானது
இதுதான் தலைக்கும் உடலுக்குமான இணைப்பினை கொடுக்கும், அதாவது தலை என்பது கட்டுபாடு கொண்ட இடம், மூளை உள்ளிட்ட கட்டளைகள் உருவாகும் இடம்,முழு கட்டுப்பாடு இருக்கும் இடம் அதுதான்
தலைக்கு ஒன்று என்றால் உடல் இயங்காமல் போவதும் அப்படித்தான், உடல் என்பது செயல்படும் எந்திரம், எல்லா இயக்கமும் இங்கிருந்துதான் நடக்கும்
ஆக இயக்கும் இடத்தையும் இயங்கும் சக்தியும் ஒன்றாக சேரும் இடம் கழுத்து, இதுதான் இயக்கு சக்தியினை இயங்கு சக்தியாக மாற்ற எல்லா வேலைகளையும் செய்து இணைக்கின்றது
இந்த இணைப்பை கொடுப்பதுதான் விசுத்தி
இந்த விசுத்தி இருக்குமிடத்தில்தான் குரல்வளை, மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள் என பல முக்கிய பாகங்கள் வரும்
இந்த சக்கரம் சரியாக துலங்கினால் கழுத்து சார்பான உடலியல் நோய் வராது, குரல் சிக்கல் தைராய்டு பிரச்சினை , மூச்சுகுழாய் சிக்கல், உணவு குழாய் என இன்னும் பல நுணுக்கமான சிக்கலெல்லாம் வராது எல்லா இயக்கமும் சரியாக நடக்கும்
இந்த சக்கரம் மங்கிவிட்டால் மேற்சொன்ன நோய்களெல்லாம் வரும், இன்னும் கழுத்து வலி மற்றும் இறுக்கம்
தொண்டை வலி மற்றும் இறுக்கம், தொண்டை சார்ந்த பிரச்சினைகள், சீரற்ற தைராய்டு செயல்பாடு
இரத்த சோகை, பல் சார்ந்த பிரச்சினைகள், காது சார்ந்த கோளாறுகள்,வாய்ப் புண், உடல் சோர்வு
தலைவலி, முதுகுத்தண்டு கோளாறுகள்
இதனால் இந்த இணைப்பு சக்கரம், எல்லா பாகங்களையும் இணைக்கும் இந்த சக்கரம் அதிமுக்கியம்
இந்த சக்கரம் சரியாக இருந்தால் மனநலம் சரியாக இருக்கும் அப்போது நேர்மையான, வெளிப்படையாகப் பேசும் தன்மை, பிறரின் பேச்சை கவனமுடன் கேட்கும் தன்மை, பிறருடன் இயல்பாகக் கலந்து பழகும் தன்மை நன்றாக பாடுதல், கலைபடைப்புக்களை கொடுத்தல் போன்ற கலைத் திறன்கள்,படைப்பாற்றல்
தன்னம்பிக்கை, அமைதியான மனநிலை ஆகியன வரும்
கலைஞர்கள், பாடகர்கள் இன்னும் ஆன்மீக சொற்பொழிவாளர்கள் , இசை அமைப்பாளர்கள் என பெரும் பெரும் கலைஞர்களுக்கெல்லாம் இச்சக்கரம் சரியாக துலங்கியிருக்கும்
உண்மையில் இந்துக்களின் ஏழு ஸ்வரங்களும் ஏழு சக்கரங்களை துலக்கும் உத்திகள்
அவ்வகையில் ஐந்தாம் ஸ்வரம் தாண்டி யாரும் அதிகம் பாடுவதில்லை, ஐந்தாம் ஸ்வரத்துகான பலன் இச்சக்கரம் துலங்குவது, மேற்கொண்டு பாடிகொண்டே இருந்தால் அவர்களுக்கு ஏழு சக்கரமும் துலங்கும்
நாயன்மார் பாடினார்கள் ஆழ்வார்கள் பாடினார்கள், சங்கீத மும்மூர்த்திகள் பாடினார்கள், எல்லோரும் பாடி இறைவனை அடைந்தார்கள் என்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. ஏழு ஸ்வரங்களை பாட பாட ஏழு சக்கரமும் சரியாகும் அந்நிலையில் இறைநிலை எளிதில் வாய்க்கும்
இசை இறைவனையே வசபடுத்தும் என்பது இந்த சூட்சுமமே
இந்த ச்க்கரம் சரியில்லை என்றால் கூச்சம் , படைப்புத் திறன் முடங்கியிருத்தல், பிறருடன் பேச, பழக அச்சப்படுதல் அல்லது அளவுக்கு அதிகமாகப் பேசுதல், கேலிக்கு ஆளாவோம் என்ற பயத்தில் மனதில் இருப்பதைப் பேசாதிருத்தல், உபயோகமற்ற பேச்சு பேசுதல், பிறர் பேசுவதை சரியாக கவனிக்காதிருத்தல்
பொது மேடைகளில் பேசத் தயங்குதல், சமூக தொடர்புகளைத் தவிர்த்தல்,நினைப்பதை வெளிப்படுத்த இயலாமை,பொய் பேசுதல்,பதட்டம்,பிடிவாதம்,பாதுகாப்பற்று இருப்பதாக உணர்தல்,கவனக் குறைபாடு ஆகிய குறைகள் வரும் இது ஒரு மனிதனை முழுக்க முடக்கும்
ஒரு மனிதன் எவ்வளவு பெரும் திறமையானவனாக அறிவாளியாக பெரும் ஞானம் கொண்டவனாக இருந்தாலும் சரியாக அதை வெளிபடுத்தாவிட்டால் பலனில்லை
அந்த வெளிபடுத்தும் கலை, அது பேச்சு , பாடல், எழுத்து, ஓவியம் என எவ்வகையிலாவது ஒருவன் தன்னை வெளிபடுத்தும் அந்த நல்ல தன்மையினை இந்த சக்கரம் தரும்
விசுத்தி என்றால் சுத்தமான என பொருள், யாரால் தன்னை அச்சமின்றி கொஞ்சமும் தயக்கமுமின்றி வெளிபடுத்தமுடியும் என்றால் தன்னிடம் உண்மையும் சத்தியமும் இருப்பவன் அதனை வெளிபடுத்துவான்
யார் தன்னை வெளிபடுத்தமுடியும் என்றால் மனம் முழுக்க நல்ல விஷயம் கொண்டவன், யாரும் குற்றம் சொல்லமுடியாதவன் தன்னை வெளிபடுத்துவான்
அந்த நல்லமுறையில் ஒருவன் தன்னை உலகுக்கு காட்டி பல நல்ல விஷயங்களை சொல்ல இந்த சக்கரம் துலங்குதல் அவசியம்
இந்த சக்கரம்தான் ஒருவனுக்கும் உலகுக்கும் தொடர்பை கொடுக்கும், உலகுக்கு அவனால் பல நல்ல விஷயங்களை கொடுக்கும்
அது பேச்சு, எழுத்து, போதனை, பாடல் என ஏதோ ஒருவழியில் அவனை இயங்கவைக்கும்
இந்த சக்கரத்தால்தான் நமக்கு வேதங்கள், உபநிதங்கள், புராணம், கீதை, அழியா நூல்கள், பாடல்கள், இசைகோர்வைகள் என எல்லாமும் கிடைத்தன
இந்த சக்கரமே ஒருவனுக்கு அடையாளமும் அங்கீகாரமும் கொடுக்கும், அழியா புகழ்பெற்றவர்கள் பெரும் அடையாளம் பெற்றவர்களெல்லாம் இச்சக்கரம் துலங்கியவர்களே
யாரின் குரலுக்கு ஒரு மதிப்பு உன்டோ, யார் குரலுக்கு உலகம் செவிமடுக்குமோ , எந்த குரல் சமூகத்தை உலுக்குமோ, யார் குரலுக்கு சமூகம் மகுடிக்குட்பட்ட பாம்பாக மயங்கி கிடக்குமோ அவர்களெல்லாம் இச்சக்கரம் தூண்டபெற்றவர்கள்
அச்சக்கரமில்லாமல் தலையும் உடலும் இணையாது என்பது போல பிரபஞ்சத்தினை ஆளும் ஈர்க்கும் ஒரு சக்தி ஒருவனுக்கு கிடைக்கும் அது அவன் திறனை ஆற்றலை பிறர் வசீகரிக்கும் அளவில் வெளிபடுத்தும்
வியாபாரம் மட்டுமல்ல ஒவ்வொருவனின் வார்த்தையிலும் உணர்வுகளை வெளிபடுத்தும் விஷயத்திலும் அழகுணர்ச்சி வசீகர தன்மை உண்மை அழகு என எல்லாமே அவசியம்
ஒரு ஈர்ப்பினை அது கொடுத்தல் வேண்டும்
எல்லோரும் பேசுவார்கள், எழுதுவார்கள், பாடுவார்கள் ஆனால் எல்லோரும் உச்சம் தொடமுடியுமா பெரும் மக்களை ஈர்க்கமுடியுமா என்றால் முடியாது
அதற்கு ஒரு பிரபஞ்ச சக்தி அவனில் இயங்கவேண்டும் அதுதான் அவனை இந்த உலகில் தனித்து காட்டும் சக்திவாய்ந்தவனாக காட்டும், பெரும் பெரும் ஆற்றலை அழியா இடத்தை அவனுக்கு கொடுக்கும்
வியாசர் முதல் தேவாரம் பாடியவர்கள் வரை, சங்கீத மும்மூர்த்திகள் வரை, காஞ்சி மகாபெரியவர் வரை இப்படித்தான் பெரும் இடம் பெற்றார்கள்
அந்த பலத்தை அந்த வரத்தை அச்சக்கரம் தரும், அந்த சக்கரம் துலங்கும் வரத்தை இந்த ஆலயம் தரும்
இங்கு வந்து வணங்குவோர்க்கு அந்த விசுத்தி சக்கரம் துலங்கும், அப்போது இருந்து அவர்கள் சொல்லுக்கு ஒரு தனி செல்வாக்கு கிடைக்கும்
அந்த ஆலயத்தில் வந்து வணங்கியோர் பட்டியலை கவனியுங்கள், பிரம்மன், திருமால் இந்திரன் என பட்டியலை பாருங்கள் தேவலோகத்தில் அவர்களுக்கான செல்வாக்கு தெரியும்
சுந்தரர் எபபடியான நாயன்மார் என்பது எல்லோரும் அறிந்தது, தன் செல்வாக்கு என்ன என்பதை அவர் காட்டினார், அங்கே அவர் அழைத்தபோது பூத கணங்களே கட்டுபட்டன
அந்த தலம் ஒருவனுக்கு அங்கீகாரம் தந்து அவன் யார் என்பதை தெரியவைப்பது, பகாசூரனை கொன்று தான் யார் என்பதை காட்டிய பீமன் அங்கு வந்து வணங்கும்போது அப்பெருமையினை பெற்றான்
அகத்தியர் அங்கே வந்தார்
மன்னர்களில் முசுகுந்த சக்கரவர்த்தி முதல் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் வரை வந்தார்கள்
இந்த தலம் ஒருவனின் விசுத்தி சக்கரத்தை துலங்க வைத்து அவனுக்கு பிரபஞ்ச சக்தியினை ஈர்த்து கொடுத்து பெரும் இடம் அடைய செய்யும்
இந்த ஆலயத்தில் சிவன் அவனி விடங்கர் என அழைக்கபடுவார், அவர் ஆடும் ஆட்டம் பிருங்க நடனம் அல்லது ப்ரமராம்பா நடனம்
இது என்ன நடனம் என்றால் மலரில் வண்டு குடைந்து ஆடும் அந்த நடனம்
இந்த நடன்மிடும் சிவன் கோவில் சில உண்டு, அவ்வகையில் இந்த தலம் அப்படியே ஆந்திரமாநிலம் ஸ்ரீசைலம் மலையில் இருக்கும் மல்லிகார்ஜூன நாதர் கோவிலின் இன்னொரு பிரதி
அங்கே மல்லிகை , இங்கே குவளை மலர்
அங்கே அன்னை ப்ரமராம்பா நாயகி, இங்கே வண்டார்குழலி
இங்கே பீமன் என்றால் அங்கே அர்ஜூனன்
அந்த பிரமரம்ப நடனத்தைத்தான் அங்கும் சிவன் ஆடுகின்றார், இந்த தலத்திலும் சிவன் ஆடுகின்றார், அந்த ஆட்டத்தின் பொருள் இந்த விசுத்தி சக்கரத்தை துலங்க வைப்பது
இந்த பூமி சூட்சுமமானது இங்கு எல்லாமும் எல்லா இடத்திலும் கிடைப்பதில்லை எல்லா இடத்திலும் நீர் இல்லை, எல்லா இடத்திலும் தங்கம் கிடைப்பதில்லை குறிப்பிட்ட இடத்தில்தான் சில விஷயங்கள் கிடைக்கின்றன்
அப்படி பிரபஞ்ச ஆற்றல் வெகுசில இடங்களில்தான் கொட்டி கிடக்கின்றது, அதனை ரிஷிகளும் ஞானியரும் அவதாரங்களும் மிக சரியாக அடையாளம் கண்டு ஆலயம்கட்டி மக்களுக்கு கொடுத்தார்கள், மக்கள் பயன்பெற தெளிவுபெற ஞானம் பெற கொடுத்தார்கள்
அந்த இடங்களுக்கு இயற்கையாகவே பிரபஞ்ச சக்தி அதிகம் , அந்த மகா சக்தி அங்கே கொட்டி கிடக்கின்றது அதைத்தான் இவை சூசகமாக சொல்லும்
அங்கே தியானம் கைகூடும், மனம் ஒருநிலைபடும், காலம் கட்டிவைத்ததுபோல் நிற்கும், சிந்தனை தெளிவடையும். , எல்லா சக்கரங்களும் துலங்கும் எல்லா அச்சமும் பயமும் அகலும், முழுக்க முழுக்க தெளிவும் ஞானமும் வாய்க்கும்
இது விசுத்தி சக்கரத்துக்கான இடம்
யோக தத்துவபடி இந்த சக்கரம் மிக முக்கியமானது அதனால் இது துலங்கினால் உச்சந்தலை சக்கரம் எளிதில் துலங்கும்
இந்த ஸ்தலம் அப்படி இந்த சக்கரத்தை துலங்க வைக்கும் சக்தியினை தன்னுள் கொண்டுள்ளது, இங்கு யோகத்தில் அமரும் போது அச்சக்கரம் தூண்டபடும் அது உச்சந்தலையின் பிரம்ம சக்கரத்தை நோக்கி சக்தியினை இழுத்து செல்லும்
அதாவது மலரை குடைந்து வண்டு செல்வது போல இந்த சக்கரம் தாண்டி உச்சி நோக்கி குண்டலி சக்தியினை இந்த ஆலய சக்தி செல்லவைக்கும்
இந்த சக்கரத்தை இயங்க வைத்தால் சக்தி மேல் எழும் என்பதை வண்டு குடையும் மலர் போல் என்பார்கள் ஞானியர்
அந்த நடனமே ப்ரம்மராம்பா நடனம், , மரத்தை வண்டு துளைப்பது போல யோக சக்தியால் எல்லா சக்கரங்களையும் துளைத்து உச்சநதலை சக்கரத்தை துலங்க வைக்க அழைத்து செல்வதுதான் அந்த நடனம்
இங்கே அந்த நடனத்தை செய்கின்றார் சிவன், அதாவது உச்சி நோக்கி சக்தியினை எழவைக்கும் ஆலயம் இது
இது வேறொன்றும் பெரிய ரகசியம் அல்ல, ஓம் எனும் மந்திரத்தை ஓங்கி நீண்டு உச்சரிக்கும் போது “ம்ம்ம்ம்” எனும் அதிர்வு நீளும்போது வண்டு மலரில் ஆர்பரிப்பதுபோல ஒரு ரீங்காரம் எழும்
அந்த ரீங்காரத்தில் தொண்டையில் மெல்லிய அதிர்வுடன் இந்த சக்கரம் துலங்கும்
அதைத்தான் இந்த மலர் குடையும் வண்டின் ஒலி என்பதாக இந்த அலயம் சொல்கின்றது
இன்னும் பஞ்சரட்சரத்தில் இது “வ” எனும் எழுத்துக்குரியது, அந்த எழுத்தினை நீட்டி உச்சரிக்க உச்சரிக்க இந்த சக்கரம் துலங்கும்
ஆந்திரமாநிலம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூனா ஆலயத்துக்கு ஈடானது இந்த திருகுவளை சிவன் தலம்
இந்த சகக்ரம் சுவாஷ்டிதானத்தோடு தொடர்புடையது, அதாவது அச்சக்கரம் கர்மம் எது என சொல்லும், இந்த விசுத்தி சக்கரம் கர்மத்தை சரியாக செய்யவைக்க வழிசெய்யும்
இன்னும் மகா முக்கியமாக அந்த மண்ணாலான லிங்கம் தன் குறியீட்டை காட்டுகின்றது
மண் என்பது படைப்பின் மூலம், அது வெறும் மண்ணாக இருக்கும்வரை எதுவும் இல்லை ஆனால் நீர் கலக்கும்போது படைப்பு சக்தி வெளிவருகின்றது, ஏகபட்ட தாவரங்கள் உயிர்கள் அதிலிருந்து வருகின்றன
இன்னும் எல்லா உலோகமும் மரமும் மணிகளும் எல்லாமும் மண்ணில் இருந்தே வருகின்றன
விசுத்தி சக்கரம் படைப்புக்கு புதிய புதிய உருவாக்கத்துக்கு வழி செய்யும், அதிலிருந்துதான் எல்லாம் வெளிபடும்
அந்த வெளிபடுதலை மண்ணில் இருந்து எல்லாமும் வெளிபடுவது போல் இந்த விசுத்தியில் இருந்து எல்லாம் வெளிப்படும் என சூசகமாக சொல்லும் ஆலயம் இது
இந்த தலத்துக்கு சென்றுவழிபட்டால் கழுத்து, தைராய்டு, குரல்நாண் சிக்கல், தொண்டை காது மூக்கு சிக்கல் வாய் பிரச்சினை இன்னும் பல ஹார்மோன்கள் என எல்லா சிக்கலும் சரியாகும்
இப்படிபட்ட அருமையான தலத்தை மறைத்து, திருகுவளை என்றாலே கருணாநிதி எனும் அளவு வரலாற்றை திராவிட கும்பல்கள் மாற்றிவைத்திருக்கின்றன
சிறுவயதில் அங்கு வழிபட்டதால் அந்த கருணாநிதிக்கும் விசுத்தி சக்கரம் துலங்கியிருந்தது, அதுதான் அவர் வாழ்நாளெல்லாம் அவரை வாழ்வாங்கு வைத்தது, அந்த நன்றியில்தான் அடிக்கடி ஊருக்கு சென்றார் திருவாரூ தேருக்கு உதவியெல்லாம் செய்தார்
அரசியலுக்கு வராமல் ஒரு ஆத்திகனாக வாழ்ந்ந்திருதாலும் அவர் பெரிய இடம் எட்ட அந்த சக்கர விழிப்பு அவருக்கு உதவியிருக்கும் , அவர் விதி சரியாகத்தான் இருந்தது
ஆனால் தமிழக விதிதான் படுமோசமாக இருந்தது
இங்கு வழிபட்டு அந்த சப்த விடங்கரின் அருளால் விசுத்தி சக்கரம் துலங்கினால் நீங்கள் பேச்சு, பாடல் என எல்லாவற்றிலும் சரியாக மாறிவிடுவீர்கள், அவை நடுக்கம் பதற்றம் அச்சம் இவை எல்லாம் மறையும்
உள்ளே ஞானம் பெருகும் , நிதானம் வரும், பேச்சிலும் செயலலிலும் வசீகரம் கூடும். உங்கள் சொல்லுக்கு பெரும் மரியாதையும் செல்வாக்கும் கிட்டும்
அந்த வரத்தை இந்த அவனி விடங்கர் தருவார்
அவனி என்றால் உலகம் என்றொரு பொருள் உண்டு, அப்படியே அவனி என்றால் அவ+னி(நீ) என பிரியும், அவநம்பிக்கை ஒழியும் , அவநம்பிக்கை அவச்செயல் என எல்லாம் நீங்கும் என்பது அக்கோவிலின் தாத்பரியம்
அவங்களை நீக்கும் ஆலயம் இந்த அவநீ விடங்கர் ஆலயம்
அங்கு சென்று வழிபடுங்கள் அதுவரை இருந்த கழுத்து சம்பந்தமான நோய்கள் அகலும், மனதாலும் செயலாலும் இருக்கும் அவநம்பிக்கை அகன்று உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் தனி சக்தி பிறக்கும் அது சத்தியம்
திருகுவளை என்பது சாதாரண தலம் அல்ல, அது அவனி விடங்கர் தலம் , இன்னும் ஸ்ரீசைலம் ஆலயத்துக்கு இணையான தலம்
அங்கு என்னென்ன நலன்களை பெறமுடியுமோ அதை இங்கு தயக்கனின்றி ஒரு குறையின்றி பெறலாம், அந்த மல்லிகார்ஜூனர் தரும் வரத்தை இந்த குவளைநாதனும் தருவார், மகா சத்தியம்.