சரஸ்வதி அந்தாதி : 03

“உரைப்பா ருரைக்குங் கலைகளெல்லாம் எண்ணில் உன்னையன்றித்
தரைப்பா லொருவர் தரவல்ல ரோதண் டரளமுலை
வரைப்பா லமுதுதந் திங்கெனை வாழ்வித்த மாமயிலே
விரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே”

இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.

“உரைப்பார் உரைக்கும் கலைகளெல்லாம் எண்னில் உன்னை அன்றி
தரைப்பாரல் ஒருவர் தரவல்லோரோ தண் அரள முலை
வரைப்பால் அமுது தந்து இங்கு எனை வாழ்வித்த மாமயிலே
விரைப்பா சடைமலர் வெண் தாமரை பதி மெல்லியலே”

இனிப் பாடலின் பொருளைக் காணலாம்.

முதல் வரி “உரைப்பார் உரைக்கும் கலைகளெல்லாம் என்னில் உனை அன்றி” எனத் தொடங்குகின்றது. உரைப்பார் என்றால் சிறப்பித்து கூறுபவர் எனப் பொருள்.

இவ்வுலகில் சிறப்பித்துக் கூறும் சாஸ்திரம் அறிந்தோர், கற்றோர் விளக்கும் எல்லா கலைகளும் எண்ணிப் பார்த்தால் உன்னை அன்றி என பொருளாகின்றது.

அடுத்த வரி “தரைப்பார்ல் ஒருவர் தரவல்லோரோ தண் அரள முலை” என வருகின்றது. தரை என்றால் இந்த நிலம், அதாவது பூமி. இந்த பூமியில் யாரால் அந்த கலைகளைத் தரமுடியும்? அப்படி சக்திகொண்டோர் யார்? குளிர்ச்சியான (தண்), அரளம் எனும் முத்து மாலைகளை மேல் அணிந்த மலை போன்ற தனங்களை உடையவளே எனப் பொருள்.

அடுத்த வரி “வரைப்பால் அமுது தந்து இங்கு எனை வாழ்வித்த மாமயிலே” என வரும். வரைப்பால் என்பது மேடான பகுதி எனும் பொருளில் வரும். வரப்பு என்பது நீரை தேக்கும் உயர்ந்த மேடு, அப்படி மேடான வரப்பு போல் இருக்கும் தனங்களில் இருந்து ஞானப்பால் தந்து என்னை வாழ வைத்தவளே. மயில் சாயல் கொண்டவளே எனப் பொருள்.

நான்காம் வரி “விரைப்பா சடைமலர் வெண் தாமரை பதி மெல்லியலே” என வரும். “விரைப்பா சடைமலர்” என்பது “விரை பாசு அடை” எனப் பிரிந்து பொருள் தரும்.

பாசு என்றால் பசிய அதாவது பசுமையான இலைகள் கொண்ட, இலைகள் அடைந்த‌ எனப் பொருள், விரை என்றால் நறுமணம் எனப் பொருள். அதாவது இலைகளோடு கூடிய நறுமணம் கொண்ட வெண் தாமரையில் வீற்றிருக்கும் மெல்லிய‌ தன்மை உடையவளே எனப் பொருள்.

ஆக, பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்.

” பசுமையான இலைகளையுடைய வெண் தாமரையில் அமர்ந்திருப்பவளே, ஆராய்ந்து பார்த்தால் சாஸ்திரிகள் வித்தை ஞானிகள் எல்லோரும் உரைக்கும் கலைகளெல்லாம் உன்னை அன்றி யாரால் கொடுக்கமுடியும். குளிர்ந்த முத்து மாலைகளால் மூடப்பட்ட மலைபோன்ற தனங்களைக் கொண்டவளே. மயில் போன்றவளே. வரப்பால் தேங்கி நிற்கும் குளம் போல உன் தனங்களின் ஞானப்பாலை எனக்குத் தந்து என்னை வாழ வைத்த மென்மையான தன்மை கொண்டவளே”.

இனிப் பாடலை கொஞ்சம் அழமாகப் பார்க்கலாம்.

இங்கே கம்பன் அன்னையின் உருவினையும், அவள் தனக்குச் செய்த சகாயத்தையும், அவள் கொடுத்த வாழ்வினையும், அப்படியே அன்னையின் பெருமையினையும் கவித்துவமாகப் பாடுகின்றான்.

இந்த பூமியின் கலைகள் எது, அதன் சிறப்பு எது என யார் விளக்குவார்கள் என்றால் அக்கலையில், அந்த வித்தையில் ஞானியரே விளக்குவர். அதுவும் 64 கலைகளும் கற்றவர்கள் இல்லை.

புராண காலத்தில் கிருஷ்ண பரமாத்மா அதைக் கற்றவராக அறியப்படுகின்றாரே அன்றி எல்லா கலைகளும் கற்றவர் இல்லை. சில கலைகளில் தேர்ந்தோர் மட்டும் உண்டு. அதுவும் பூரணமில்லை.

இதை சிந்திக்கும் கம்பன், மானிடரால் முடியாத விஷயம் ஒன்று சாத்தியப்பட வேண்டுமென்றால், அது தெய்வத்தின் வரம் என முடிவுக்கு வருகின்றான்.

ஒருவனால் எல்லாவற்றையும் பற்றி சிந்திக்க முடியும், பாட முடியும் என்றால் அது மானிடரால் போதிக்க முடிவதுமில்லை. இன்னோர் மானிடனால் கற்கக் கூடியதுமில்லை என்பதால் இதெல்லாம் அன்னையின் அருள் என அவன் உணர்கின்றான்.

அப்படி உணர்ந்து உன் அருள் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமா? உலகில் நீ அருள் கூர்ந்து இரங்கி வரம் தருவதால் அன்றி வேறு எப்படி இது சாத்தியம் எனும் கம்பன், எல்லாம் அவளின் அருள் என மருகி நிற்கின்றான்.

அப்படியே அன்னையின் அருள் தாய்மை உணர்வால் கொட்டுகின்றது. அன்னை தன்னை குழந்தைபோல் அணைத்து அருள் புரிகின்றாள் என்பதை அடுத்தடுத்த வரிகளில் சொல்கின்றான்.

இந்த வரிகளை காணும் முன் ஒரு தெளிவினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும். மானிட சுபாவத்தை கடந்த ஞான நிலையில் இந்தப் பாடலை அணுக வேண்டும்.

பெரும் தத்துவார்த்த ரீதியானது அது. மானிட குணங்களுக்கும், சிந்தனைகளுக்கும், மயக்கத்துக்கும் அப்பாற்பட்ட ஏகாந்த நிலை அது.

ஆம், ஒரு பெண், ஆணுக்குக் கிளர்ச்சி ஊட்டக் கூடியவள். அதிலும் ரகஸ்ய ஸ்தானம், மார்பகம் இரண்டுமே ஆசைகளை ஆணுக்கு தூண்டிவிடக் கூடியவை, எந்த சாதாரண மானிடனும் இதில் வீழ்வான்.

இதனையே ஞானியின் கண்கள் எப்படி நோக்கும் என்றால், இந்த இரு உறுப்புகள்தான் மானிட உயிர்கள் ஜனிக்கும் இடம். அது உருவாகி வரவும், பால் அருந்தி வளரவும் படைக்கபட்ட சிறப்புக்கள் அவை. மானிட உயிர்களின் மூலமே அவைதான், அது அன்றி மானிட இனம் இல்லை எனக் கடந்து செல்வான்.

சாதாரண மனிதனின் பார்வைக்கும், ஞானியின் பார்வைக்கும் உள்ள பெரும் வித்தியாசம் இது.

ஒரு பச்சிளம் குழந்தையின் மனநிலையில் கம்பன் இதை சிந்தித்து, ஞானியின் உணர்வில் பாடுகின்றான்.

இதே காட்சியினைக் குழந்தை நோக்கினால் அதற்கு எந்த விகல்பமும் ஏற்படாது. அது ஞானியாகவும் நோக்காது, காம உணர்வும் கொள்ளாது.

இந்தக் குழந்தை மனத்துடனும், பெரும் தவயோக நிலையிலும் நின்று இந்தப் பாடலைப் பாடுகின்றான் கம்பன். அன்னை முன் ஒரு குழந்தையாக, அதே நேரம் பெரும் யோகியாகப் பாடுகின்றான்.

அன்னைக்கு உருவமில்லை. அவள் மானிடர் தன்னை அறிந்துகொள்ள ஒரு உருவில் வீற்றிருக்கின்றாள். அந்த அன்னையின் உடல் அவயங்களை ஞான குறியீடுகளாகக் காண வேண்டுமே அன்றி, மானிட விழிகளாலும், மனதாலும் காணுதல் பரிதாபகரமானது.

கம்பன் அன்னையின் அருளை, ஒரு தாயின் கருணையில், ஒரு தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டும் அன்பில் பாடுகின்றான்.

அவனுக்கே உரித்தான கவிதை மொழியில் பாடுகின்றான்.

வெண்முத்துக்கள் அலங்கரிக்கும் குளிர்ந்த மார்பில் இருந்து வரும் வெண்ணிற பால் கொண்டு அன்னை தனக்கு ஞானம் புகட்டினாள். அவள் தன் ஞானத்தாய் என்கின்றான்.

கவித்துவமாக மலைபோல் தனங்கள் என்கின்றான். அதாவது மலையில் இருந்து வெண்ணிற அருவி கொட்டுவது போல அன்னை ஞானப்பால் சொரிகின்றாள் என அந்த ஞானத்தின் பிரம்மாண்டத்தை உருவகிக்கின்றான்.

ஞானியர் போதனைபடி அன்னையின் தனங்கள் என்பது பரக்ஞானத்தையும், அபரக்ஞானத்தையும் குறிப்பவை.

பரக்ஞானம் என்றால் கடவுளைப் பற்றிய ஞானம், அபரக்ஞானம் என்றால் லவுகீக வாழ்வின் ஞானம்.

இந்த ஞானம் அன்னையால் தனக்குக் கிடைத்ததைப் பாடுகின்றான் கம்பன்.

இதே வரிகளை அபிராமி அந்தாதியிலும் காணலாம்.

“இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி”, “துணையா எங்கள் சங்கரனைத் துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்”, “பென்னம்பெரிய முலையும்” என பட்டரும் பாடுகின்றார்.

சஹஸ்ரநாமம் “ஸ்தன பார தலன் மத்யபட்டபந்த வளித்ரயா” என, அதாவது ஸ்தனங்களின் சுமையினால் முறிந்து போய்விடுமோ என்று தோன்றக் கூடிய இடுப்புக்குப் பட்டை கட்டியது போன்று அமைந்துள்ள மூன்று மடிப்புகளை உடையவள் அவள் என்கின்றது.

ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரியில் இப்படி வரும்.

ஸ்தன்யபானம் செய்யும்பொழுது, உன் ஸ்தனங்களின் பருமனைக் கண்ட கணபதி, தன் தலையிலுள்ள கும்பங்களை நீ அபகரித்து, உன் ஸ்தனங்களாக வைத்துக் கொண்டாயோ என்று குழந்தைத்தனமாக நினைத்து தன் தலையில் கும்பம் இருக்கிறதா என்று தலையைத் தடவிப் பார்க்கிறார். (யதாலோக்யாஶங்காகுலித ஹ்ருதயோ ஹாஸஜனக : ஸ்வகும்பௌ ஹேரம்ப : பரிம்றுஶதி ஹஸ்தேன ஜடிதி)

மற்றொரு ஸ்லோகத்தில்

தேவீ ! இந்த ஸ்தன சுமையினால் உன் இடுப்பு ஒடிந்து விழுந்துவிடப் போகிறதே என்று, உன் இடுப்பை வள்ளிக் கொடிகளால் மூன்று சுற்றாகச் சுற்றி இருப்பது போல் தோன்றுகிறது இடுப்பிலுள்ள மூன்று சதை மடிப்புகளின் அழகு. (தவ த்ராதும் பங்காதலமிதி வலக்னம் தனுபுவா
த்ரிதா னத்த்ம் தேவீ த்ரிவலி லவலீவல்லிபிரிவ ||)

என்கிறார்.

அன்னையுடையது ஞானப்பால் என்பதாக ஒரு ஸ்லோகத்தில் இவ்வாறு வர்ணிக்கின்றார்.

அந்த ஸ்தனங்களில் இருந்து மோக்ஷ சாதனமான ஞானாமிர்தத்தைப் பருகியதால்தான் கணபதியும், கந்தனும் எப்பொழுதும் பாலகர்களாகவும், ஞானமுள்ளவர்களாகவும், மங்கையர் சம்பந்தம் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர் . (பிபன்தௌ தௌ யஸ்மாத் அவிதிதவதூ ஸங்கரஸிகௌ குமாராவத்யாபி த்விரதவதன-க்ரௌஞ்சதலனௌ) தெற்கே கணபதி ப்ரம்மச்சாரி போல வடக்கே குமரக்கடவுள் ப்ரம்மச்சாரியாக வணங்கப் படுகின்றார். அதையொட்டி இந்த அர்த்தம் ஆகும்.

இந்த ஞான தத்துவத்தை கண் கண்ட சாட்சியாக, சம்பந்த பெருமான் வாழ்வில், திருஞான சம்பந்தருக்கு பால் கொடுத்த அன்னையாக நாம் வரலாற்றில் கண்டிருக்கின்றோம்.

அக்குழந்தையான சம்பந்தர் சீர்காழி கோவிலில் அழுது கொண்டிருந்தபோது அன்னையே தங்கக் கிண்ணத்தில் பால் ஏந்தி கொடுத்த வரலாறு எல்லாரும் அறிந்தது.

அது மானிட உலகம் சொல்லும் தாய்ப்பால் அல்ல, அது ஞானப்பால். அதன் தாத்பரியம் பெருமையானது.

வெண்மை என்றால் தூய்மை எனப் பொருள், வெண்மை என்றால் முழு ஞானம், முழு அறிவு, மகா தூய்மையான பரிசுத்த நிலை, எல்லாம் கடந்த நிலை என அர்த்தமிட்டார்கள் பண்டிதர்கள்.

வெண்ணிறம் என்பது ஞானத்தின், பரிசுத்தத்தின் அடையாளமாக இருப்பது. இந்துக்களின் மரபில் வெண்மை நிறம் என்றால் தூய அறிவு எனப் பொருள்.

அன்னை சம்பந்தருக்கு ஞானம் கொடுத்தாள் என்பதையே அந்தக் காட்சி காட்டுகின்றது. அதைத்தான் இங்கும் பாடுகின்றான் கம்பன்.

அன்னை ஞானத்தின் அடையாளம், பாசத்தின் சொரூபம், உலக உயிர்களுக்கெல்லாம் தாய்.

அந்தத் தாய் தன் ஞானக் குழந்தையாக தன்னைக் கருதி, தன் ஞானப்பாலை தனக்குத் தந்து, தனக்கு கவிகள் உரைத்து தன்னை மிகப்பெரும் இடத்தில் வைத்திருக்கின்றாள் என மருகுகின்றான் கம்பன்.

ஒரு குழந்தை பிறந்தவுடன் அருந்தி வளர்வது தாய் கொடுக்கும் பாலில்தான். அந்நேரம் தன்னால் எதுவும் செய்யமுடியா குழந்தைக்கு வலுவும், பலமும், வளர்ச்சியும் தாய்ப்பாலில் இருந்துதான் கிடைக்கின்றது.
அப்படி பிறவியில் ஏதுமறியாத தன்னை, அன்னை ஞானத்தில் தத்தெடுத்து ஞானப்பால் ஊட்டித் தன்னை அவளின் கவிக்கோர் மகனாக்கினாள் என உரிமையில் பாடுகின்றான் கம்பன்.

அன்னை ஞானத்தின் அடையாளம் என்பதும், அவள் ஞானப்பால் கொடுத்து ஞானம் அருள்வாள் என்பதும் திருஞான சம்பந்தர் கதையில் மட்டும் அல்ல, இன்னும் பல வரலாறுகளில் உண்டு.

வங்கத்தில் இருக்கும் தாராபீடம் எனும் அன்னையின் ஆலயம் அதை சொல்கின்றது. அங்கே சிவனுக்கே ஞானப்பால் ஊட்டும் அன்னையின் சிலையும் காட்சியும் உண்டு.

ஆலகால விஷத்தால் சிவன் மயங்கி விட்டதாகவும், அப்படி மயங்கிய சிவனை அன்னை தன் ஞானப்பால் கொடுத்து எழுப்பினாள் என்பதைச் சொல்லும் சிலை உண்டு.

அதாவது சிவனுக்கே ஞானம் கொடுத்து தெளிய வைத்தவள் அன்னை என்கின்றது தாராபீட ஆலய செய்தி.

தாரா என்பவள் தசமகாவித்யாவின் ஒருவடிவம். அவளே வித்தைக்கெல்லாம் அதிபதி. தாந்திரம், தாந்த்ரீகம் போன்ற பெரும் கலையெல்லாம் அவளிடம் இருந்தே வந்தது.

அப்படி அன்னை சிவனுக்கே ஞானப்பால் கொடுத்துக் காத்தவள். சிவனையே குழந்தையாக்கியவள்.

அன்னை காளியோ இல்லை இதர காளி வடிவங்களோ, இந்துக்களின் பிரதான பெண் தெய்வங்களோ, குழந்தையினை கையில் தாங்கிய உருவில் வருவது கண்கூடு.

ஏன் பச்சிளம் குழந்தையோடு அந்தச் சிலையினை இந்துக்கள் அமைத்தார்கள் என்றால், அன்னை தாயானவள். ஞானம் அருள்பவள். தன்னை அண்டிவரும் பக்த குழந்தைக்கு ஞானப்பால் ஊட்டுபவள் எனப் பொருள்.

அன்னை ஞானப்பால் தருபவள் என்பதையே கைக்குழந்தை வடிவில் வரும் தெய்வ வடிவில் சொன்னார்கள் இந்துக்கள்.

அன்னைக்கு பாலாபிஷேகம் நடைபெறுவதில் எங்களுக்கு ஞானப்பால் தருபவளே எனும் தாத்பரிய அர்த்தமும் உண்டு.

கம்பன் இதைத்தான் பாடுகின்றான், தான் அன்னையின் மகன் என்பதை பாடுகின்றான்.

அதாவது சேரநாட்டு அவையில் அவன் குலம் எது? வம்சம் எது? அவனின் குரு யார்? என பல கேள்விகள் எழுந்தபோது, அதைச் சொல்லாவிட்டால் தண்டனை நிச்சயம் என பெரும் மிரட்டல் வந்தபோது பாடப்பட்டதுதான் இந்த சரஸ்வதி அந்தாதி.

அதில்தான் எனக்கு தாயும் அவள், என் குருவும் அவள், என் கலைகளின் அதிபதியும் அவள் என அவள் ஞானத்தால் பாலூட்டி வளர்த்த மகன் நான் என வாதிடுகின்றான் கம்பன்.

அன்னையே எனக்கு ஞானப்பால் தந்து என்னை கவிஞனாக்கியவளே, நான் உன் பிள்ளை அல்லவா? வந்து என்னை காப்பாற்று, இந்த அவையில் நீ வந்து எனக்காக பதில் சொல்.

என் குலம் எது, கலைகளை யார் உரைத்தார்கள் என இவர்கள் கேட்கின்றார்கள். இந்தப் பாடல்கள் எப்படி எனக்கு சாத்தியம் என்கின்றார்கள், இதெல்லாம் மானிடரால் பாடப்படும் விஷயம் இல்லை அல்லவா? இதெல்லாம் உன்னால் எனக்கு உதித்த காவியம் அல்லவா? அதனால் நீயே வந்து சொல் எனப் பாடுகின்றான் கம்பன்.

அப்படியே இன்னும் உவமையாக இலைகளோடு கூடிய வெண்தாமரை என அன்னையின் ஆசனத்தை உவமையாகச் சொல்கின்றான்.

அதாவது, அவன் மனதில் அன்னை வெண் தாமரையில் அமர்ந்திருக்கின்றாள். பசுமையாக இருந்தாலும் தாமரை இலையில் நீர் ஒட்டாது என்பது போல உலகோடு ஒட்டாத அவன் மனதில் அவள் எழுந்தருளிவிட்டாள்.

உலக பந்தபாசம் நீங்கி, பெருமை புகழ் நீங்கி அன்னையே சரணம் என உலகோடு ஒட்டாத அவன் மனதில் அவள் வெண்ணிற தாமரை அதாவது ஞானth தாமரையாக வந்து அமர்ந்துவிட்டாள் என்கின்றான்.

அவளை மயிலே என கம்பன் சொல்வதிலும் ஆழ்ந்த அர்த்தம் உண்டு.
அன்னைக்கு ‘சதுஷ்ஷஷ்டி கலாமயி” என்றொரு நாமத்தினை சஹஸ்ரநாமம் சொல்லும். அதனையே தன் மீனாட்சியம்மன் பிள்ளைத் தமிழிலில் “கலாமயி(ற்)ல் கூத்தயர்” என்பார் குமரகுருபரர்.
“செங்கைச் சகலகலாமயில்” அதாவது செம்மையான எல்லா கலைகளுக்கும் அவள் மயில் போன்றவள் என்பார் அபிராமி பட்டர்.
அதைத்தான் கம்பனும் பாடுகின்றான்.

மெல்லியவள் என கம்பன் பாடிமுடிக்கும் வார்த்தையும் கவனிக்கதக்கது. அன்னைக்கு கோமளை என்றொரு பெயர் உண்டு. கோமளை என்றால் இளமையான, மெல்லிய எனப் பொருள். அன்னைக்கும் அப்படி ஒரு பெயர் உண்டு. அதைத்தான் இங்கே பாடுகின்றான் கம்பன்.

அன்னைக்கு சகஸ்ர நாமத்தில் இன்னும் பல பெயர்கள் உண்டு.

“கலாவதி” “கலாநாதா,” அதாவது கலைகளின் வடிவம், கலைகளுக்கு அதிபதி
“கலாலாபா” அதாவது கலைகளால் ஆலாபனை செய்யப்படுபவள்.
“கலாத்மிகா” அதாவது கலைஜோதி.
“கலாநிதி” அதாவது கலைகளின் களஞ்சியம்
“காவ்யகலா” அதாவது கலைகளின் வடிவம் என பல பெயர்கள் உண்டு, அதைத்தான் இங்கே பாடுகின்றான் கம்பன்.

இப்பாடல் கம்பனால் பாடப்பட்டாலும், இதற்கு மூலப்பாடல் ஒன்று உண்டு. கம்பன் அதை தழுவித்தான் இந்தப் பாடலை பாடிமனான்.

ஆதிசங்கரர் வாழ்விலும் அன்னை அவருக்கு ஞானப்பால் கொடுத்த கதை உண்டு. இன்றும் கேரளாவின் காலடி பக்கம் அந்த கதை வழி வழிச் செய்தியாக உண்டு.

ஆதிசங்கரரின் தகப்பனார் சிவகுரு ஒரு அம்பாள் ஆலயத்தில் அர்ச்சகராக இருந்தார். அவர் அன்னைக்கு பால் வைத்து நைவேத்தியம் செய்துவிட்டு பின் வீட்டுக்கு கொண்டு செல்லுதல் வழமை.

குழந்தை சங்கரர் அது அன்னை உண்ட பால் என நினைத்து மீதியினை நாள்தோறும் பருகிக்கொண்டிருந்தார். ஒருநாள் தந்தை வேறு இடம் சென்றுவிட்டார். அன்னைக்கு பால் நைவேத்யம் செய்ய வேண்டுமே எனக் குழந்தை சங்கரர் அந்த ஆலயத்துக்கு கலயத்தில் பாலோடு சென்று அன்னையினை பணிந்து “நீ குடியம்மா” என வைக்கின்றார்.

அன்னை குடித்துவிட்டு மீதி தருவாள் என்பது அக்குழந்தையின் நம்பிக்கை. ஆனால் பால் மாயமாய் மறைந்துவிட்டது, மீதம் ஏதுமில்லை.
சங்கரர் எனும் அக்குழந்தை அங்கே அழுதது. அனுதினமும் நீ மீதம் வைத்த பாலை குடித்தேனே. இன்று எனக்கு இல்லையா என அது தன் அப்பாவித்தனத்தில் கேட்டது.

அக்குழந்தைக்காக அன்னை இறங்கி வந்து ஞானப்பால் ஊட்டினாள். அதன் பின்பே அவர் அவ்வளவு ஞானம் பெற்று இன்று வரை ஒளி வீசிக் கொண்டிருக்கின்றார்.

இதை அவரே தன் பாடலில் பாடியும் வைத்தார். அப்பாடல் இதோ

“தவ ஸ்தன்யம் மன்யே தரணிதரகன்யே ஹ்ருதயத:
பய பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத மிவ |
தயாவத்யா தத்தம் த்ரவிடஶிஶு ராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரௌடானா மஜனி கமனீய கவயிதா” ||

“மலையரசன் பெண்ணே ! உன்னுடைய முலைப்பால் இருதயத்திலிருந்து உதித்த அமிருதப்பிரவாகம் போலும், வெண்மையாக இருப்பதால் வாக்தேவதையான ஸரஸ்வதியே அவ்வுருக்கொண்டு வந்தாற்போலும், பெருகுகிறது என்று கருதுகிறேன். ஏனென்றால் கருணை ததும்பும் உன்னால் அளிக்கப்பட்ட உன்னுடைய பாலை அருந்தி த்ராவிடக் குழந்தை தலைசிறந்த கவிகளுக்குள், மனதைக் கவரும் கவிஞனாக ஆகிவிட்டான் அன்றோ” எனப் பொருள்.

இந்தப் பாடல் முக்கியமானது. ஆதிசங்கரரே தன்னை “திராவிட சிசு” என சொல்லிவிட்டார் என திராவிடம் எனும் வார்த்தையினை பிடித்துத் தொங்கி, குழப்பம் செய்யும் கோஷ்டி அவர் அன்னையிடம் ஞானப்பால் அருந்தியதை சொல்ல மாட்டார்கள்.

இங்கே திராவிடம் என்பது சமஸ்கிருத வார்த்தை. அதன் பொருள் நீரால் மூணு பக்கம் சூழ்ந்த பகுதி என்பது, வடபகுதி பெயர் உத்திரதேசம்.
ஆக த்ராவிடம் என்பதே சமஸ்கிருத வார்த்தை. அது தமிழ் அல்ல. தென்னக மொழியுமல்ல, சமஸ்கிருதம் தெரியாத கால்டுவெல் குழப்பிய குழப்பத்தை தமிழக திராவிட கும்பல்கள் பிடித்துக் கொண்டன.
சமஸ்கிருத விரோதிகளான அவர்களுக்கு திராவிடம் என்பதே சமஸ்கிருதம் என்பது கூடத் தெரியவில்லை என்பது பரிதாபம்.

அந்த சங்கரர் தனக்கு அன்னை ஞானப்பால் கொடுத்ததைச் சொல்லி பாடுகின்றார். தன் ஞானமும், போதனையும், தெளிந்த நல்லறிவும், அபார ஆன்மீக சிந்தையும் அன்னை கொடுத்தது என்கின்றார்; அவரின் ஞானப்பால் கொடுத்தது என்கின்றார்.

தன்னைப் பற்றி அவரே பாடிய பாடல் அது. ஆதிசங்கரர் காஷ்மீரின் சாரதாபீடத்தில் பல வாதங்களை எதிர்கொண்டார். அன்று சாரதா பீடத்தில் சான்றிதழ் பெறுவது மாபெரும் சவால், அதைத் தாண்டியவர்களே பெரும் பண்டிதர் என ஒப்புக் கொள்ளப்படுவர்.

காஷ்மீரம் சென்று சாரதா பீடத்தை சங்கரர் அடைந்தபோது, நீ யார்? உன் குலம் என்ன? உன் தாய் யார்? உன் குரு யார்? என கேள்வி மேல் கேள்வி வந்தபோது சங்கரர் பாடிய ஸ்லோகம் இது.

அதைத்தான் கம்பனும் தனக்கு சேரநாட்டு மன்னனிடம் இருந்து கேள்வி வந்த போது, அந்த சங்கரின் ஸ்லோகத்தை தன் கவிபாணியில் அழகுற பாடி, தானும் உன் மகன் அல்லவா? உன் ஞானப்பாலினால் வளர்ந்த குழந்தை அல்லவா? அதை வந்து சொல், சொல்லி என்னைக் காப்பாற்று. உன் மகனை காப்பாற்று என‌ அன்னையிடம் வேண்டி நிற்கின்றான் கம்பன்.