திருமுருகாற்றுப்படை, சரஸ்வதி அந்தாதி நிறைவுக் குறிப்பு
திருமுருகாற்றுப்படை, சரஸ்வதி அந்தாதி என இரண்டையும் இன்று நிறைவு செய்துவிட்டோம்
திருமுருகாற்றுபடை தமிழின் ஆதி முருகபக்தி இலக்கியம், அருணகிரிநாதரின் பாடல்கள் பிந்தியவை. நக்கீரரே காலத்தால் மூத்தவர்
அவ்வகையில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு தலத்தை நினைந்து அல்லது அங்கு செல்லும் போது படிக்கவேண்டிய பாடல் இது, மிக்க பலன் உண்டு நல்ல பலன்களை தரும்
அது கோர்வையான பாடல் என்பதால் 317 அடிகளையும் ஒரே பதிவு அல்லது சில பதிவுகளில் தரமுடியவில்லை நீண்டுவிட்டது, தொடர்ந்து வருபவர் கவனித்திருக்கலாம்
திருமுருகாற்றுபடை பாட பாட ஒருவன் மனம் ஆற்றுபடும் நல்வழிபடும் அவனுக்கு வேண்டியதை முருகபெருமான் தருவார் என்பது அனுபவமொழிகள்
அதை பின்பற்றுங்கள்
சரஸ்வதி அந்தாதி கம்பனுக்கு அன்னை சரஸ்வதியே வந்து அவன் தன் மகன் கம்பன் என சேரநாட்டு அவையில் சாட்சி சொன்ன அதிசயத்தை கொண்டது
அபிராமி அந்தாதிபாடிய பட்டரின் அந்த பவுர்ணமி அதிசயத்துக்கு ஈடானது
இதனை பள்ளி மாணவர்கள் படித்தல் நன்று அவர்கள் மட்டுமல்ல தேர்வுக்கு தயாராகும் ஒவ்வொருவரும் படித்தல் நலம்
மாணவர்கள் அனுதினமும் ஒரு பாடலை சொல்லி வழிபட்டால் நன்று 30 பாடல் என்பது ஒரு மாதத்துக்கானது
இதை சொல்ல சொல்ல சரஸ்வதி அன்னையின் அருள் கூடும், அறிவும் ஞானமும் பெருகும் எல்லாம் எளிதாகும்
இந்த சரஸ்வதி அந்தாதி எழுதும்போது சவுந்தர்ய லஹரி இன்னும் லலிதா சஹஸ்ரநாமம் போன்றவற்றில் இருந்து குறிப்புகள் எடுத்தே எழுதினோம்
காரணம் இந்துமதம் என்பது தேசம் முழுக்க ஒரே மாதிரியானது, சரஸ்வதி தமிழ் கடவுள் அல்ல, சமஸ்கிருத கடவுளும் பிரார்த்தனையும் வேறு தமிழ்க வழிபாடு வேறு என்பது அர்த்தமில்லா புரட்டு, முழு பொய்
இங்கு அடிப்படை தத்துவமும் வழிபாடும் தேசமெங்கும் ஒன்றே
அதை சமஸ்கிருத ஸ்லோகங்களுடன் தமிழ்பாடல்களை ஒப்பிட்டு பார்த்தால் புரிந்துகொள்ள முடியும், அது அவசியம், ஒரே நாடு ஒரே மதம் என்பது அடிக்கடி ஆதாரத்தோடு சொல்லவேண்டிய விஷயம்
ஆனால் எமக்கு சமஸ்கிருதம் தெரியாது, அவ்வகையில் இதற்கு உதவிய அன்பருக்கு நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம்
அடுத்து என்ன எழுதலாம் என்பதை வழக்கம் போல தெய்வமே தீர்மானிக்கட்டும்.