பஞ்ச மயானத் தலங்கள் : காசி மயானம் 04 / 06
மூன்றாம் மயானம் – காசி ஆலயம்
வாரனாசி எனும் காசி மாநகரம்தான் இந்துக்களின் மகா புண்ணிய ஷேத்திரம், ஒவ்வொரு இந்துவின் பெரும் கடமையில் முக்கியமான காசியினை தரிசித்தல் என்பது அங்குதான் நிறைவடைகின்றது
காசி இன்றி இந்துக்களின் மதம் இல்லை, வழிபாடு இல்லை, தாத்பரியமில்லை, அவர்களின் ஆதி அடையாளமும் நம்பிக்கையும் ஆதாரமுமானது அந்த காசி.
இந்துஸ்தானம் அந்த காசி எனும் புள்ளியில்தான் இணைந்தது, இனம் மொழி என பல்வேறு மக்களாய் இருக்குமம் இந்துஸ்தான் இந்துக்களை இந்து எனும் ஒரு புள்ளியில் இணைட்து இந்த் மாபெரும் இந்துஸ்தானத்தை தாங்கி நிற்பதும் அந்த காசி
“காசி வாழ இந்துஸ்தானம் வாழும்” என்பது அதுதான்
“காச்யதே பிரகாசதே இதி காசி ” என்பது ஸ்லோகம், அதாவது எது சுயமாகப் பிரகாசிக்கிறதோ அது காசி.
ரிக் வேதத்திலேயே சிவருத்ரனின் இருப்பிடமாக காசி குறிப்பு உண்டு
இந்த பூமியில் ஒவ்வொரு இடங்களும் ஒவ்வொருமாதியான ஈர்ப்பு கொண்டது எல்லாம் எல்லா இடத்திலும் கிடைக்காது, ஒரு இடத்தில் மழை, ஒரு இடத்தில் வெயில், ஒரு இடத்தில் கடற்கரை,ஒரு இடத்தில் தங்கம் என ஒவ்வொரு இடத்தில்தான் ஒவ்வொரு விஷயம் கிடைக்கும்,
இது மானிட கண்கள் அறிவது
மானிட கண்கள் அறியாததும் ஞான கண்ணால் மட்டுமே அறியகூடியதுமான சில இடங்கள் பூமியில் உண்டு, அதைத்தான் புண்ணிய ஷேத்திரங்கள் என்றார்கள் ஞானியர்கள், இங்கு பிரபஞ்சம் கொட்டும் சக்தி அதிகம், பிரபஞச சூட்சும சக்தி அதிகம்
அப்படிப்பட்ட இடங்களில் முக்கியமானது இந்த காசி, இதன் தோற்றம் மிக மிக பழமையானது சிவனே வந்து அமர்ந்து மானிடருக்கு இந்த இடத்தில் முக்கியத்தை அடையாளம் காட்டிய இடம் அது
அரிசந்திரன் கதை இங்குதான் நடந்தது, அரிசந்திராமயானம் என்பது அதோ அதுதான். எக்காலமும் பிணங்கள் எரியும் வரம்பெற்ற இந்த பூமியில் அவன் பெயரும் நிலைத்திருக்கும்
இந்த பூமி மகாபாரத காலத்தில் உண்டு, பீஷ்மர் காசிராஜனை வென்றுதான் பாரத காவியத்தை தொடங்குவார், அந்த மாபெரும் இதிகாசமே இங்கிருந்துதான் தொடங்கிற்று
தசரதன் எனும் பெரும் மன்னன் செய்த யாகத்தின் விற்பனரெல்லாம் இங்கிருந்து சென்றதாகவே அந்த இதிகாசமும் சொல்கின்றது, இரு இதிகாசங்களின் தொடக்கம் இந்த புண்ணிய பூமி
இது சாதாரண நகரமோ ஊரோ அல்ல , இது அமைக்கபட்ட விதம் மிக மிக சூட்சுமனானது, மிக மிக நுணுக்கமானது
காசி என்பது ஒரு இடமல்ல, மானிடர் கூடி வாழும் . கோவில்களை மட்டும் கொண்ட தலமுமல்ல அது ஒரு உணர்வு, ஒரு ஒளி, பிரபஞ்ச சக்தியின் குவியல்
இந்த பிரபஞ்சம் சிவசக்தி அடிப்படையில் இயங்குகின்றது, சிவனும் சக்தியும் இணைந்ததுதான் இந்த பிரபஞ்ச இயக்கம் , அதைத்தான் அண்டம் என்பார்கள்
அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்திலும் உண்டு என்பது சித்தர்கள் வாக்கு
இந்த உடலும் சிவசக்தி தத்துவம், வானத்தில் கோள்கள் அதனதன் இயக்கத்தில் நடப்பதுபோல இந்த உடலின் உறுப்புக்களும் அதனதன் இயக்கத்தில்நடக்கின்றது, உடலின் உள்ளுறுப்பெல்லாம் அப்படியானது
இந்த ஆகாயவெளிபோல மிக மிக பரந்தது மனிதனின் மனம், அந்த மனதால் அவனால் எவ்வளவு பெரிய அண்டத்தையும் ஆகாயத்தையும் காணமுடியும், மனதால் நினைத்த இடத்துக்கு அவனால் நொடியில் செல்லமுடியும்
அப்படி உடலுக்கும் அண்டத்துக்குமான தொடர்பு ஏராளம்
இந்த அண்டத்தின் பஞ்சபூதம் தனி தனி என்றாலும் எல்லாம் ஒன்றோடு ஒன்று கலந்தது மானிட பிண்டமும் அப்படியே
ஐந்து பூதங்களும் ஒன்றிலிருந்து ஒன்று உண்டானதால், அவற்றிற்கு தாயான வஸ்துவின் குணமும் உண்டு.
அதாவது ஆகாயத்தின் குணம் ஒலி. அதிலிருந்து தோன்றிய வாயுவிற்கு ஒலியும் உண்டு, தொடுவுணர்வும் உண்டு.
வாயுவிலிருந்து தோன்றிய அக்னிக்கு ஒலி, தொடுவுணர்வு, ஒளி (ரூபம் – கண்ணுக்குப் புலப்படும்) ஆகியவை உண்டு.
அக்னியிலிருந்து தோன்றிய நீருக்கு ஒலி, தொடுவுணர்வு, உருவம், சுவை ஆகியவை உண்டு.
நீரிலிருந்து தோன்றிய மண்ணுக்கு ஒலி, உருவம், தொடுவுணர்வு, உருவம், சுவை, மணம் ஆகிய ஐந்து குணங்களும் உண்டு. இவை அண்டத்தில் உள்ளது , அதே இயல்பு பிண்டத்துக்கும் அதன் பாதிப்பு அப்படியே வரும்
பிண்டமாகிய மானிட உடலில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு அதிதேவதை உண்டு, அண்டத்தில் இருப்பது போல் உண்டு என்கின்றார் கபிலர்
வாக்கின் அதிதேவதை அக்னி, மூக்கின் அதிதேவதை வாயு, கண்களின் அதிதேவதை சூரியன், காதுகளின் அதிதேவதை திக் தேவதைகள், தோல், ரோமங்கள், மீசை, கேசம் முதலியவற்றின் அதிதேவதை மூலிகைகள்.
ஜனனேந்த்ரியத்தின் அதிதேவதை நீர், கழிவுகளை அகற்றும் இந்திரியத்தின் தேவதை ம்ருத்யு, கைகளின் தேவதை இந்திரன், கால்களின் தேவதை மஹாவிஷ்ணு.
நாடி நரம்புகளின் அதிதேவதை நதிகள், வயிற்றின் தேவதை ஸமுத்ரம், ஹ்ருதயம், மனம் ஆகியவற்றின் தேவதை சந்திரன்.
புத்தியின் அபிமான தேவதை ப்ரம்ம, அஹங்கார தத்வத்தின் அதிதேவதை ருத்ரன்.
சித்தம் எனும் பகுத்தறிவின் அபிமான தேவதை க்ஷேத்ரக்ஞன்.
இப்படி ஒவ்வொரு உறுப்புக்கும் இரு தேவதை உண்டு அதுதான் அண்டம் முழுக்கவுமான அதிபதிகள் கூட
இப்படி பிரபஞ்சமும் மானிட உடலும் சொல்லும் தத்துவத்தை அப்படியே ஒரு சக்தி மையமாக உருவாக்கி அதனில் இருந்து மானிடர் பல சூட்சும பலன்களை பெறுவதற்கு உருவாக்கபட்ட நகரமே இந்த காசி
இது மிக நுணுக்கமாக உருவாக்கபட்டது, ஏற்கனவே பிரபஞ்ச சக்தி பிரவாகம் கொள்ளும் இந்த இடத்தில் மிக நுணுக்கமாக சிவ சக்தி தத்துவ அடிப்படையில் இந்த காசி உருவாக்கபட்டது
ஆண் தத்துவத்தை குறிக்கும் 53 சிவாலயமும், பெண் தத்துவத்தை குறிக்கும் 53 சிவாலயங்களுமாக மொத்தம் 106 உண்டு
இதோடு மூல ஆலயங்களான காசி அப்பன், அன்னை ஆலயங்களை சேர்த்தால் 108 ஆலயமாகின்றது, இது முழுமை அடைந்த நிலை
நம் உடலில் நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 106 . இதில் இரண்டு நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை).
அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன
இது போக மானிட உடல் ஐந்து கோசங்களை கொண்டது என்பது தத்துவம்
அதனை அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆகியவையே இந்த கோசங்கள் என்பார்கள், மானிட உடல் அன்னம் எனும் சோற்றால் உண்டான உடல் அதை சுற்றி இன்னும் நான்கு சூட்சும வகை வட்டங்களும் உருவங்களும் அடுக்கு போல் உண்டு
இந்த தத்துவத்தில்தான் காசியில் ஐந்து பிரகாரங்களை வைத்தார்கள், அப்படி சுற்றி வரும்பொழுது இந்த சூட்சும உடலும் நிறைவை காண்பதை உணரவைத்தார்கள்
சொராஷி குரோஷி, பஞ்ச கோஷி, நகர் பிரதஷ்ணம், அவிமுக்தா, அண்டகிருகா என ஐந்து வகை சுற்றுபாதைகளை வைத்திருப்பதும் அப்படித்தான்
ஐந்து கோசங்களும் பலம் பெறும் வழி இது
இப்படி மானிட உடலின் முக்கிய சூட்சுமங்களை பிரதிபலித்து அதற்கு பிரபஞ்ச சக்திகளை பெற்று தரும் அபூர்வமான வடிவில் மிக நுணுக்கமான வகையில் இந்த காசி நிர்மானிக்கபட்டது.
6 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12 சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும்.
இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும்.
அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து, உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது. இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது.
இது சிவனின் திரிசூலத்தில் அமைக்கபட்ட நகரம் என்பார்கள், அதன் உண்மை பொருள் ஆன்மம், கண்மம், மாயை எனும் மும்மலங்களையும் எரிக்கும் இடம் இது, பிரபஞ்ச சக்தி அதனை செய்யும்
காசி என்பது பித்ருக்கள் வழிபாட்டையும், சதா எரியும் பிணங்களை கொண்டிருக்கும் நகரம், மரணம் என்பது முடிவு என்பதை இங்கு உணரும் யாரும் பெரும் பாவம் செய்யமாட்டார்கள், மும்மலம் எனும் மூன்று முக்கிய பாவங்களை செய்ய யோசிப்பார்கள், அதனாலேதான் இது சிவனின் சூலத்தில் இருக்கும் நகரம் என்றானது
காசியில் எல்லோர் முகத்திலும் ஒரு தெளிவும் ஞானமும் நிம்மதியும் வருவதை காணலாம் , இங்கு அந்த சக்தியினை இயல்பாகவே பெறமுடியும்
காசியில் இறந்தால் முக்தி என்பது நிறைவான வாழ்வினை குறிப்பது, அவர்கள் புண்ணிய ஆத்மா என்பதை குறிப்பது
அப்படியே காசியில் இறக்க வாய்ப்பில்லாதவர்கள் தனக்கு பிடித்தமான ஒன்றை இங்கு விட சொல்லி ஒருவிதியும் உண்டு, அது ஏனென்றால் விஷயம் இல்லாமல் இல்லை
ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படையில் பிடித்தமான ஆசை ஒன்று இருக்கும் அதுதான் அவனை ஆட்டிவைக்கும், அந்த ஆசையினை காசியில் விட்டுவிட்டால் போதும் அந்த ஆசையினின்று விடுபடும் அவன் மெல்ல மெல்ல ஞானம் அடைவான்
ஈர்ப்பு அறுபடும் நிலையில் அவன் ஆத்மா முக்தி நோக்கி நகர தொடங்கும், அதனாலே காசி எல்லா வகையிலும் முக்தி அளிக்கும் தலமாயிற்று.
இங்கு சப்தரிஷிகளும் வந்து சில ஏற்பாடுகளை செய்தார்கள், அதன் நோக்கமே இந்த காசிஎன்பது சிவலோகத்தின் இன்னொரு வடிவமாக மாறவேண்டும் என்பது
அதனால் இந்துக்களின் எல்லா தெய்வங்களும் இங்கு குடியேறின, ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு அலயம் அமைக்கபட்டு பெரும் எண்ணிக்கையில் ஆலயம் இருந்தன.
கயிலாயம் எனும் பனிமலைக்கு எல்லாரும் எல்லா காலமும் செல்ல முடியாது என்பதால் அதற்கு ஈடான ஒரு புண்ணிய தலமாக எல்லா தெய்வங்களும் குடியிருக்கும் தலமாக இது அமைக்கபட்டது.
இன்று யாரும் நம்பமுடியா விஷ்யமம், அன்று ஒரு காலத்தில் இங்கு இருந்த கோவில்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டும் என்பது
இப்பொழுது இருப்பது 400ஐ கூட தாண்டாது என்பது வேதனை
இந்த காசிதான் இந்துஸ்தானத்தின் மையமாக இருந்தது, இதயமாக இருந்தது, இது வெறும் ஆன்மீக பூமி அல்ல, இது வெறும் பித்ருவழிபாடும் , பிணங்கள் எரியும் சுடுகாடும் அல்ல
பாரதம் எனும் அருமையான கலாச்சாரமும், அதன் பெரும் அறிவும் செல்வமும் இங்குதான் உருவானது
இந்த நகரம் எல்லா இந்துக்களும் பாரதமெங்கும் இருந்துவந்து குவியும் புண்ணிய பூமியாக மலர்ந்தது, இதனால் எங்கோ மூலையில் இருந்த இந்துக்களெல்லாம் சந்திக்கும் வாய்ப்பானது
ஏகபட்ட மொழிகள் இன்ங்கள் அவர்களுக்குள் சின்ன சின்ன முரண்பாடுகள், யுத்தங்கள் என எவ்வளவோ வேறுபாடு இருந்தாலும் இந்த நகர் அவர்களை ஒன்றிணைத்தது
தெய்வத்தை முன்னிட்டு ஒன்றுசேரும் அந்த இடத்தின் மரியாதை பெரிது, அங்கு சென்று அருள்பெற்று வரும் பக்தர்களின் தன்மையும் கனிவும் அறிவும் ஞானமும் பெரிது
காசிக்கு சென்றுவந்தோர் மரியாதையாகவும் ஞானிகளாகவும் பார்க்கபட்டனர், உண்மையில் அங்கு அமர்ந்து தவம் செய்த ஒவ்வொருவருக்கும், பொதுநலம் கருதி வேண்டி நின்ற ஒவ்வொருவருக்கும் ஞானம் கிடைத்தது
அப்படிபட்ட இடத்தின் புகழ் பரவ பரவ ஒவ்வொருவரும் சென்றார்க்ள், ஒவ்வொரு மன்னனும் தன் மடமும் குருவும் அங்கு இருக்குமாறு பார்த்து கொண்டான், ஒவ்வொரு மன்னனுக்கும் காசி கனவாயிற்று
26 ஆயிரம் கோவில்கள் என்றால் எவ்வளவு மந்திரங்கள் ஓதபடும், எவ்வளவு பெரும் யாகங்களெல்லாம் கங்கை கரையில் நடத்தபடும், இந்து பாரம்பரியத்தில் நீர் என்பது சக்திமிக்கது, அது உயிருள்ள பொருள்
அது தான் கலக்கும் இடமெல்லாம் உள்ள நிறத்தை பெறுவது போல மந்திர சக்திகளையும் தன்னுள் ஏற்றுகொள்ளும், காசியில் இடைவிடாது முழங்கும் மந்திரங்கள் அந்த நீரை எப்பொழுதும் சக்தியாய் வைத்திருக்கும் அதனாலே காசி நீரால் பாரதம் முழுக்க ஆலயங்கள் கும்பாபிஷேகம் செய்யபட்டன
முனிவர்களின் கமண்டல நீர் அவர்களின் மந்திரத்தால் சக்திபெறுவது போல காசி நதியின் கங்கை இங்கு நடக்கும் இடையறா பூஜைகளாலும் யாகங்களாலும் பெரும் சக்திபெற்றது
அப்படிபட்ட காசிக்கு பாரத கண்டத்தின் எல்லா மன்னர்களும் எல்லா மக்களும் வந்தார்கள்
இதனால் வியாபாரம் பெருகிற்று, ஒவ்வொரு இனத்தின் கலைகளும் சங்கமித்ததால் காசிக்கு சென்றால் புதிய விஷயங்களை கற்கலாம் புதிய பொருளை வாங்கலாம் என்ற நிலை வந்தது
அப்படியே காசி கலைகளின் தலைநகரும் ஆயிற்று, பாரத கண்டம் முழுக்க ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு கலைகளும் விஷயங்களும் பரவி கிடந்தன, அப்படி எங்கோ கிடந்த கலைகளெல்லாம் இங்கு கூடி ஒன்றில் ஒன்று கலந்து பெரும் வளர்ச்சி கண்டன
பாரத கண்டத்தின் கலை, இலக்கியம்,பண்பாடு, அறிவியல்,மருத்துவம், போர் வியூகம் என எல்லாமும் அங்கேதான் வளர்ந்தன, காசிக்கு ஒருவனை அனுப்பி பண்டிதனாக்கி திரும்ப தன் சமஸ்தானத்தில் அமரவைப்பது பெரும் அறிவுடமையான காரியமாக இருந்தது
இப்படி பாரத மக்களையும் அவர்கள் மனம், ஆன்மீகம், கலை, இலக்கியம் என எல்லாவற்றையும் ஒரு புள்ளியில் கொடுத்து குவித்தது இந்த மண்
இதுமட்டும் அமையவில்லை என்றால் நிச்சயம் இந்துஸ்தானம் அவ்வளவு அறிவாக வளமாக இருந்திருக்காது, மக்களிடம் இருந்த அறிவையும் கலைகளையும் எல்லா மக்களுக்கும் பரப்பி எல்லாரையும் சிந்திக்க செய்து, சிந்தித்ததை மறுபடியும் பரப்பி இந்த சுழற்சியினை அது செய்து கொண்டே இருந்தது
இந்த சூட்சுமத்தில்தான் பாரதம் தனிபெரும் நாடாக மின்னியது
காசி வாழ வாழ தேசம் வாழும் என இந்த பாரதம் அப்படித்தான் உருவானது, காசிக்கே உரிய பிரபஞ்ச சக்திகளும், ரிஷிகளும் முனிகளும் செய்துவைத்த சக்திமிக்க ஏற்பாடுகளும் அதை உறுதிபடுத்தி தொடர்ந்தன
ஒவ்வொரு இந்துஸ்தான மன்னனுக்கும் காசி விஸ்வநாதரே குருநாதரும் குல தெய்வமுமானார், அவரை தொழாமல் எந்த காரியமும் எங்கும் நடந்ததில்லை, காசி வழிபாடும் கங்கை நீருமே இங்கு பல காரியங்களை தொடங்கின அவை வெற்றியுமாயின, நிலைத்தன
காசியின் ஆலயங்களும் அதன் வழிபாடுகளும் இருக்கும் வரை இந்துஸ்தானம் செழிக்கும் அப்படித்தான் சிவபெருமான் முதல் ரிஷிகள் வரை ஏற்பாடுகளை செய்தார்கள்
காசி அன்று பொதுநகரமாக இருந்தது, என்னதான் மன்னர்களுக்குள் சண்டை என்றாலும் மோதல் என்றாலும் காசியினை பொதுவான பகுதியாக வைத்தார்கள்
காசி என்பது எட்டு அஷ்ட பைரவர்கள் காக்கும் நகரம் என்பதால் என்றும் அதன் காவலரும் அரசரும் கால பைரவரே, அவரைத்தான் எக்காலமும் அரசராக கொண்டாடினார்கள்
இப்படி மகா புனிதமாகவும் இந்துக்களின் தலையான பூமியாகவும், கைலாசம் காணமுடியாதோரும் எளிதில் சிவலோகத்தை காணும்படியாகவும் இருந்து செழித்துவழிகாட்டியது இப்பூமி
இது பித்ருக்களின் தேசம் என்பதால் இங்கு காகங்கள் பறக்காது அல்லது அவசியமில்லாதது. சிவனின் பிரதான நகரம் என்பதால் கருடனையும் காணமுடியாது, எப்பொழுதும் பிணம் எரிந்தாலும் அது நாறாது காரணம் இங்குள்ள சிவகணங்கள் அதனை ஈர்த்து கொள்கின்றது
இது சிவபூமிஎன்பதால் யோகமும் தவமும் உடனே கைகூடும், மற்ற இடங்களில் 1 லட்சம் முறை ஸ்தாபிக்க வேண்டிய மந்திரத்தை இங்கு 108 முறை சொன்னாலே அது சித்தியாகும், இந்த இடத்தின் மகிமை அப்படி
காலம் காலமாக செய்த தவமும் பலனும் சித்தர்களின் ஜீவசமாதியும் இன்னும் பலவும் நிரம்பி இருப்பதால் எப்பொழுதும் இங்கு சக்தி அதிகம், தீராத நீங்காத சக்தி அதிகம்
இங்கு தர்மம் ஆளும், அந்த காசி வாழ வாழ பாரதம் வாழும், அப்படித்தான் வாழ்ந்தது
காசிக்கு சவால்விட்டவன் முதலில் புத்தன், இது அர்த்தமற்ற வழிபாட்டு நகரம் என்றான், வேதங்களும் வழிபாடும் இந்த யாகமும் பலனற்றவை என்றான்
தனிவழி சமைக்கின்றேன் அதுவே ஞானம் என கிளம்பினான், எப்போதும் எல்லா காலத்திலும் அறியாமையில் இருக்கும் மக்கள் உண்டு, துரதிருஷ்டவசமாக அவர்கள் அதிகம் இருந்துவிடுவதும் உண்டு
அப்படி அவன் பின்னாலும் ஒரு காலத்தில் சென்றார்கள்
அவனுக்கு பின்னரான காலத்தில் காசி வீழ்ந்தது,காசி வீழவும் பாரதம் வீழ்ந்தது
இந்த சமூகம் இயங்க அவனவன் தன் கடமையினை சரியாக செய்யவேண்டும் என கீதை கொண்டு போதித்தமதம் நம்முடையது
அதாவது இல்லத்துவாசி பணம் சம்பாதிக்க வேண்டும், வீரன் சண்டையிட வேண்டும், அரசன் நாட்டை காக்க வேண்டும், வேதம் ஓதுபவன் ஓதவேண்டும் அவனவன் தன் கடமையில் தீவிரமாக இருந்தால்தான் நாடு நாடாக இருக்கும் என்பதை சொன்னமதம் இந்துமதம்
பந்தம் பற்றை தாண்டி கடமையினை செய் என்றவர்கள் நாம்
ஆனால் புத்தனோ குழப்பினான், ஆசையற்ற வாழ்வு என்றான், போர் வேண்டாம் என்றான், யுத்தம் கூடாது என்றான், அன்பே பிரதானம் என்றான், அரசனும் அவன்வழி சென்றான்
விளைவு அரசன் என்பவன் கடுமையாக இருத்தல் வேண்டும், சேனை என்பது பலமாக இருத்தல் வேண்டும் அது அல்லாது நாடு இல்லை
பாரதம் முழுக்க குழப்பம் அதிகரித்தது, தர்மம் தலைகீழானது, மன்னர்கள் வீழ காசி வீழ்ந்தது, காசி வீழ பாரதம் குலைந்தது
அதை மீட்டெடுக்க ஒருவர் வந்தார் அவர் ஆதிசங்கரர் எனும் மகான்
அவர் இதே காசியில்தான் பெரும் ஞானம் பெற்றார், 12 ஜோதி லிங்கங்களில் ஒன்றை இங்கு பிரதிருஷ்டை செய்தார், அதை எல்லோரும் தொட்டு வணங்கவும் வழி செய்தார்
அந்த மகானின் அருளால் காசி மெல்ல சீரானது, காசி சீராக சீராக நாடு சீரானது
அந்த மகான் நாடு முழுக்க நான்கு மடங்களை அமைத்தார், வேதங்களையும் வழிபாட்டையும் மீள்கொணர்ந்தார், இந்துஸ்தானம் பவுத்தத்தை விரட்டி தன்னை மீட்டது
காசி வாழ வாழ அது வாழ்ந்தது
செல்வம் மறுபடி கொழித்தது, பெரும் செல்வமிக்க தேசமாக இந்துஸ்தானம் ஒளிவிட்டது, காசி வாழ வாழ வாழும் தேசம் மாபெரும் எழுச்சி கண்டது
அப்பொழுது இந்து மன்னர்கள் மெல்ல மறுபடி ஆசைவயபட்டார்கள், பக்தியும் தர்மமும் குறைந்தது யார் பெரியவர் என தங்களுக்குக்குள் முஷ்டி உயர்த்தினார்கள், காசியினை மெல்ல மெல்ல மறந்தார்கள், காசியிலும் பணமே பிரதானம் சுகமே பிரதானம் என அதர்மம் அதிகரித்தது
அப்பொழுதுதான் அசுரன் மறுபடியும் வந்தான் அவன் பெயர் கஜினி முகமது, அவனின் பெரும் கொள்ளை இங்குதான் நடந்தது, பெரும் கொள்ளையோடு ஆலயங்களை இடித்து நாசமாக்கிவிட்டு சென்றான்
அவன் சென்றபின்னும் காசியினை இந்துமன்னர்கள் மறந்தார்கள் அவர்களுக்குள் மோதி கொண்டார்கள், இந்த மோதலில் மறுபடி மறுபடி வந்து மதுரா, சோமநாதபுரி என கொள்ளை அடித்தான் கஜினி
காசி இடிபாடுகளில் சிக்க பாரதத்தை மறுபடியும் இருள் கவ்வியது, கோரி வந்தான் தன் அடிமையின் ஆட்சியினை நிறுவினான், முதன் முதலாக இந்துஸ்தானம் ஆப்கானிய அந்நியர் கைக்கு சென்றது
அவர்கள் கைக்கு இந்துஸ்தானம் சென்றதும் ஆட்சியும் வரியும் நிதியும் அவர்கள் கைக்கு குவிய குவிய காசிக்கான செலவும் நிதியும் நின்றுபோனது, அதை பேணுவார் யாருமில்லை
காசி இருள் அடைய இருள் அடைய தேசத்தை இருள் கவ்விற்று
எனினும் சிவன் இத்தேசத்தைகைவிடுவதில்லை அன்னை காளியும் கைவிடுவதில்லை, நாயக்க மன்னர்கள் தெற்கே முதல் இந்து ராஜ்ஜ்யம் அமைத்தனர், அந்த எழுச்சியில் தேசமெங்கும் ஒரு நம்பிக்கை பிறந்தது
நாயக்கர் காலத்தில் காசிக்கு பலவகை உதவிகளை செய்தார்கள், தென்னக செட்டியார்களும் முற்கால பட்டினத்தார் தொடர்பில் பல காரியங்களை செய்தார்கள்
காசி முழுவதும் துலங்காவிட்டாலும் பூஜைகளும் வழிபாடுகளும் இருந்தன, ஆப்கானிய மன்னர்களுக்கு காசி அச்சுறுத்த்லாகவே இருந்தது, காசிக்கு வருகின்றேன் என பாரதம் முழுக்க இருந்து வரும் மன்னர்கள் படைதிரட்டுவதும் தீரா நெருக்கடி கொடுப்பதும் ஆப்கானியருக்கு சிக்கலயிற்று
காசி என்பதை ஒழித்துவிட்டால் இந்துக்கள் கூடமுடியாது என அவர்கள் திட்டமிட்டாலும் அதை செய்யமுடியவில்லை பெரும்பான்மை இந்துமக்களின் எதிர்ப்பால் ஓடவேண்டிய நிலைவரும் என அஞ்சினார்கள்
இதனால் வேறுவிதமான நெருக்கடிகளை கொடுத்தார்கள், வெட்டமுடியா மரத்தை பட்டினி போட்டு பட்டுபோக செய்தல் அல்லது விஷம் பரப்பி அழித்தல் என ரகசிய வேலைகளை செய்தார்கள்
ஆனால் இங்கு சாதுக்களும் யோகிகளும் எங்களை போன்றவர்களின் யாகங்களும், காசி என்பது ஒவ்வொரு இந்துவின் ரத்தத்தில் கலந்தது என்பதாலும் அதை அதனை முழுமையாகக் முடியவில்லை
செத்தாலும் காசியில் சாவேன், வீழ்ந்தால் காசிக்காக வீழ்வேன் என பெரும்கூட்டம் திரள்வதால் கொஞ்சம் அச்சபட்டார்கள்
யோகிகளின்வலிமையும் சிவன் அருளும் மக்களின் பக்தி உணர்வும் காசியினை காத்து நின்றன, காசி முழுக்க வீழவில்லை, இங்கு ஆட்சி செய்யலாமே தவிர இந்து மதத்தை ஒழிக்கமுடியாது என சுல்தான்களும் உணர்ந்தார்கள், இந்துக்களின் உறுதி அவர்களை சிந்திக்க வைத்தது
அப்படியே இந்து சன்னியாசிகளின் சக்தி மேலும் அவர்களுக்கு ஒரு அச்சம் இருந்தது
வறண பாலையில் இருந்து வந்த கூட்டம் வளமான நாட்டின் ஆட்சியில் திருப்தி அடைந்தது எனினும் அவர்களுக்குள் மோதல்கள் அடிக்கடி வந்தன , அந்த மோதல் வரும்பொழுதெல்லாம் இந்துக்களும் தங்கள் நாட்டை மீட்க முயற்சித்தனர் ஆனால் வெற்றி நிரந்தரமாக இல்லை
சுமார் 400 ஆண்டுகள் இந்த போராட்டம் நடந்தது, ஷஜாகான் காலத்தில் மதுரையில் இருந்து சென்ற குமரகுருபரர் சிங்கத்தின் மேல் அமர்ந்து ஷாஜகான் மகன் தாரா ஷிக்கோவிடம் இருந்து ஆலயத்தை மீட்டு பூஜை செய்தார்
ஆனாலும் அவுரங்கசீவ் விடவில்லை, இங்கே இந்த ஆலயம் இருந்தால்தானே இந்துக்கள் கூடுவார்கள், இதை அழிந்த்தால் காசி மாறும் இந்துக்கள் சிதறுவார்கள் என திட்டமிட்டு அங்கே கோவில் மேல் பள்ளிவாசல் கட்டினான் அவுரங்கசீப்
அவனை எதிர்த்து எழுந்தான் சிவாஜி, அப்படியே காசியில் ஞானம் பெற்ற சீக்கியரும் எழுந்தார்கள், 100 ஆண்டு போராட்டத்துக்கு பின் காசியினை மீட்டார்கள்
பின் மோடி காலத்தில் அது துலங்கி கொண்டிருக்கின்றது
இப்படியான நீன்ட வரலாற்றை கொண்டது அந்த காசிதலம், உலகின் மிக மிக தொன்மையான புண்ணிய நகரம் அது
ஆச்சரியமாக உலகில் எத்தனையோ தொன்ம நகரம் அழிந்த நிலையில், ஏகபட்ட தலங்கள் காசி காலத்தில் உருவான் தலங்களெல்லாம் அழிந்து அடையாளமற்று போன நிலையில் காசிதான் மீள எழுந்து நிற்கின்றது
அந்த ஆச்சரியம்தான் அந்த அதிசயம்தான் அது சிவனின் வசிப்பிடம், காலபைரவரின் கோட்டை, காலத்தால் அழிக்கமுடியா சூட்சும நிலையம் என்பதை காட்டுகின்றது
“காசிக்கு போனால் கர்மம்” அழியும் என்பார்கள்
ஆம், இது சிவனின் அக்னி வடிவ தலம், சிவனின் பஞ்ச தன்மைகளில் ஒன்றான அக்னி தலம்
இங்கே ஒரு கேள்வி எழும், அப்படியானால் திருவன்னாமலை அக்னி தலம் இல்லையா என்பது
திருவண்ணாமலையும் அக்னிதலம் சந்தேகமில்லை, அங்கே கர்மா நாம் வழிபட்டு கரையும், காசியில் கால்வைத்த உடனே கரையும்
அதுதான் காசியின் சக்தி
ஆம், அங்கே சிவன் தன் அழித்தல் தொழிலினை செய்கின்றார், ஆனால் எதனை அழிக்கின்றார் என்றால் கர்மாவினை அழிக்கின்றார் ஞானம் கொடுக்கின்றார்
காசி என்பது கர்மா அழியும் தலம், ஒருவனுக்கு நல்ல கர்மாவோ கெட்ட கர்மாவோ அது பாக்கி இருந்தால் அது அவனை மறுபிறப்பி எடுக்க செய்யும்
மொத்தமாக கர்மாவினை எரித்துபோட்டு அவன் ஞானவாழ்வு வாழ்ந்து செல்ல வழிசெய்யும் தலம் காசி
இதனாலே தங்கள் கர்மா தீரவே அங்கு செல்ல ஒவ்வொரு இந்துவுக்கும் விதி சொல்லபட்டது
அக்காலங்களில் வாழ்வின் முடிவினை நோக்கி செல்வோர் காசியில்தான் முடிய விரும்பினார்கள் அதுதான் அக்ர்மத்தை கரைத்து பிறப்பற்ற நிலை தரும் என சென்றார்கள்
காசி என்பது உலக உயிர்கள் ஒடுங்குமிடம், அங்கேதான் ஒவ்வொரு ஆத்மாவும் ஒடுங்குகின்றது, அப்போது அதற்கு பிறப்பில்லை
எல்லா வகை கர்மாவினையும் எரித்துபோடும் அந்த தலம் பெரும் ஞானத்தை தரும்
அங்குவரும் ஒவ்வொருவனும் வாழ்வின் நிலையாமையினை உணர அங்கே காலமெல்லாம் பிணம் எரிந்துகொண்டே இருக்கும்
கங்கை வற்றுவதுமில்லை அங்கே பிணம் எரிவது நிற்பதுமில்லை
அப்படி சிவனே நேரடியாக ஞானம் போதிக்கும் மயானம் அது, அங்கேதான் அரிசந்திரன் கதையும் நடந்தது
அவன் பொயயே பேசாமல் வாழ்ந்தான் என்பதல்ல விஷ்யம், எல்லோரும் இப்படி எரிந்து சாம்பலாக முடியும் வாழ்வில் பொய் சொல்லி என்னாக போகின்றது, அற்பமாக சாம்பலாக முடியும் வாழ்வில் ஏன் பொய்யும் புரட்டுமாக வாழவேண்டும் எனும் ஞானம் அவனுக்கு இருந்தது
வாழ்வின் முடிவினை சொல்லி, அந்த வாழ்வில் கர்மத்தை பொய்யினால் சேர்க்காதபடி நிலையற்ற வாழ்வு எனும் ஞானத்தை சொல்வதே அவன் கதை
இன்னும் காசிக்கு செல்வோர் எல்லாம் ஏதாவது தனக்கு பிடித்தமான ஒன்றை விட்டுவிட்டு வரவேண்டும் என்பதும் விதி
தனக்கு பிடித்தமான ஒன்றை விடுதல் என்றால் அதன் பின் வெறுமைதான் ஏற்படும், வெறுமையில்தான் ஞானம் வரும்
காசி ஒவ்வொரு இந்துவும் தர்சிக்கவ்ணேடிய தலம், காசி மயானம் என்பது அந்த மணிகர்னிகா மட்டுமல்ல, காசி என்பது ஒவ்வொருர் கர்மாவினையும் எரிக்கும் தலம்
காசி என்பது ஒருவனின் கர்மாவினை எரித்து முழுஞானநிலைக்கு அவனை மாற்றும் தலம், அந்த மயாநிலை என்பது அறியாமை எரித்து ஞானத்தில் பிறக்க வைக்கும் நிலை
காசி மயானம் என்பது கர்மம் அழித்து ஞானபிறப்பெடுக்க வைக்கும் மயானம்
அப்படித்தான் சங்கரர், ராமானுஜர், குருநாணக்,வீரசிவாஜி,ராம்தாசர், விவேகானந்தர், பாரதியார் என எத்தனையோ அழியா அடையாளங்களை உருவாக்கி கொடுத்த ஞானபூமி அது
மனதார வேண்டி காசிக்கு செல்லுங்கள், அங்கே சென்று சிவனை மனதால் முழு பக்தியோடு தரிசியுங்கள், உங்ள் கர்மா சிவனின் அக்னியால் எரிக்கபடும், பின் ஞானமும் நிறைவும் உங்களை எட்டும் வாழ்வே சிறக்கும்
அதன்பின் புதுமனிதர்களாக ஞானம் பெற்ற் , தெளிவுபெற்ற மனிதர்களாக இனி பிறப்பில்லா அளவு கர்மம் எரிந்த நிலையில் முழு தெளிவொரும் அறிவும் பெற்ற மனிதர்களாக வ்ந்து ஞானசுடராக வழிகாட்டி நிற்பீர்கள் இது சத்தியம்
காசி என்பது பாவம் தீர்கும் கங்கைமட்டும் கொண்டல்ல கர்மம் நீக்கி ஞானம் வழங்கும் தலம்
இந்துமர்பில் வந்த எல்லா ஞானியரும் மகான்களும் பெரும் பெரும் வழிகாட்டிகளும் அங்குதான் கரம்ம் நீங்கி ஞானம் பெற்று வழிகாட்டி நின்றார்கள், இன்றும் மோடிபோல் நிற்கின்றார்கள்
அவர்கள் வரிசையில் உங்களுக்கும் இடம் இருக்கலாம் அதனால் தவறாமல் சென்று வழிப்ட்டு கர்ம தொலைத்து நில்லுங்கள்
ஒவ்வொரு இந்துவும் காசியினை பார்க்காமல் சாககூடாது, பார்த்துவிட்டால் அதை தவிர புண்ணியகாரியம் எதுவுமில்லை, அவன் அதன்பின் கவலைபட எந்த காரணகாரியமுமில்லை.