பஞ்ச மயானத் தலங்கள் – முன்னுரை 01 / 06
இந்துமதம் எப்போதுமே ஞானத்தை ஞானத்தின் மூலத்தை தேடிய மதம், அது ஒன்றுதான் மானிட வாழ்க்கைக்கு அப்பால் உள்ள விஷயம், மானுடன் இறந்தபின்னால் உள்ள வாழ்வை பற்றி அதில் உள்ள தத்துவத்தை பற்றி அதிகம் சிந்தித்து அதிகம் போதித்த மதம்
இந்துமதம் சொன்ன அளவு இன்னொரு மதம் வாழ்வின் அந்தத்தை ஞானமாக சொல்லவில்லை, எல்லா மதமும் வாழ்வு முடிந்தது என்றபோது இந்துமதம் அது முடிவல்ல இன்னொரு வடிவ பிறப்பின் தொடக்கம் அது உருமாற்றம் என்றது
அதைத்தான் மயான வழிபாடு எனவும் சொல்லி, சிவன் மாயாண்டியாக சுடலை பூசிய வடிவம் கொண்ட சுடலையாண்டியாக, பைரவ மூர்த்தியாக அங்கே இருப்பார் என்றது.
அதைச் சொல்லி ஞானமும் இன்னும் பெரும் சூட்சும தத்துவங்களும் போதித்தது, மயானம் என்பது அச்சுறுத்தும் இடம் கவலை கொடுக்குமிடம் என்பதை உடைத்து அது முழு ஞானமும் தெளிவும் போதிக்கும் இடம் என்பதை சொன்னது
காசியில் எல்லா தெய்பங்களும் சிவனில் ஒடுங்குகின்றன என சொன்ன இந்துமதம், அதே காசியில் மயானத்தில மானிட மனமும் ஒடுங்கவேண்டும் , மானிட மனம் ஞானத்தில் ஒடுங்கவேண்டும் என மயான வழிபாட்டையும் கட்டாயமாக்கியது
மயான தத்துவத்தை ஏன் இந்துக்கள் அவ்வளவு வலியுறுத்தினார்கள்?
ஒரு மனிதனின் முதல் பற்றுஅவனின் உடல், அந்த மாய உடல். அந்த உடல் அழியகூடியது என அறிந்தும் மனிதனின் முதல் பற்று உடல்மேல்தான் விழுகின்றது
தன் உடல், அந்த உடலுக்கு உணவு, ஓய்வு, சுகம், தன் உடலிலிருந்து வரும் உறவுகள் என அவனின் முழு மயக்கமும் அந்த உடலை சுற்றியே வருக்கின்றது
இதனை பக்குவமாக அறிந்து உடல் வேறு மனம் வேறு என அறிந்தோரே ரிஷிகள்.
ஆனாலும் பல துறவிகளாலும் உடலை துறக்காத விடமுடியா நிலை இருந்தது, புண்டரீக முனிவர் உடலோடு கைலாசம் செல்ல நினைத்தது அப்படித்தான்
உடலே ஒருவனுக்கு எல்லா பற்றுகளின் மூலம், அந்த உடலை காட்டித்தான் ஆத்மாவினை மாயை கட்டிபோட்டு இழுத்து செல்கின்றது
எங்கே உடல் முழுக்க இல்லாமல் போகின்றதோ அங்கேதான் முழு ஞானம் வாய்க்கின்றது
அவன் பெரும் அரசனோ, ஞானியோ, வியாபாரியோ, சாமன்யனோ, நல்லவனோ, கெட்டவனோ அவன் அடையாளம் உடல், அந்த உடலில் உயிர் பிரிந்தபின்பும் அவன் அந்த உடலாகவே காணபடுகின்றான்
அவனுக்கும் உலகுக்குமான பந்தத்தை அறுத்துபோட்டு, எல்லாம் மாயை என்பதை காட்டுமிடம் மயானம், உடல் ஒரு மாயை என்பதையும், அந்த உடலோடு ஒருவனுக்கும் உலகுக்குமான தற்காலிக கர்ம தொடர்பு முடிந்துவிடுகின்றது
அதன் பின் அவன் இன்னொரு உருவமாக மேல் உயர்கின்றான் அல்லது மாறுகின்றான் என சொல்லுமிடம் மயானம்
அந்த தத்துவத்தை போதிக்க, நிலையாயமையின் தத்துவம் சொல்ல இந்துக்கள் பல வழிகளை சொன்னார்கள்
முதலில் “விஷேஷ வீட்டுக்கு செல்லாவிட்டாலும் சாவு விட்டுக்கு கட்டாயம் செல்லவேண்டும்” என்றார்கள்
ஒருவனுக்கு தூக்கிபோட நாலுபேர் வேண்டும் என்றாரகளே ஏன்? மயானத்திலாவது அவனால் நாலுபேருக்கு மனம் மாறாதா என்பதை சொல்வதற்காக
மயனம் இந்துமரபில் அவ்வளவு முக்கியமானது, சிவனே அங்குதான் நிற்கின்றார் என்றார்கள் இந்துக்கள் அது உண்மையும் கூட
எங்கிருந்து வந்தானோ அங்குதான் மான்னிடன் திரும்பமுடியும், அப்படி ஆத்மா எங்கிருந்து வந்ததோ அங்கே அவனிடம் திரும்புகின்றது, அந்த பரம்பொருள் அங்கே நின்று அதனை ஏற்றுகொள்கின்றது என்றார்கள்
வாழும்போது திருந்தாத ஆதமா, வாழும்போது நிலையாமை உணராத் ஆத்மா தன் உடல் எரியும் போது ஞானம் பெற்று அமைதியாகும்
அப்படியும் அடங்கா ஆத்மா அடுத்த பிறப்புக்கு அனுப்பிவைக்கபடும்
ஆத்மாவும் ஞானமடையும் சூட்சும இடம் அது, இதனாலேதான் அகோரிகள் பைரவர்கள் அங்கே நிலையற்ற வாழ்வினை சொல்லி சாம்பலை பூசி அமர்ந்திருப்பார்கள்
மண்டை ஓட்டில் உண்பதும் , பிணங்களின் மேல் அமர்ந்திருப்பதும் வாழ்வின் நிலையாமையினை அவர்கள் உணர்ந்து எல்லோரும் அதை புரிந்துகொள்ளா உதாரணமாய் இருப்பார்கள்
காசியின் முதல் தத்துவம் இதுதான், அங்கே எந்நாளும் பிணம் எரியும் என்பதும் இதுதான்
வாழ்வு நிலையற்றது வாழ்வின் முடிவிலாவது ஒரு ஆன்மா உண்மையினை உணரவேண்டும் என்பதாலே அத்தலம் மயானத்தையும் எரியும் பிணத்தையும் அகோரிகளையும் முன்னிறுத்தி நிற்கின்றது
காசியின் இந்த தத்துவம்தான் தெற்கே தென்முனையில் சுடலை மாட சாமி எனவும் அழைக்கபடுகின்றது
சுடலை மாடன் தெற்கே மிக கடுமையான தெய்வம் சிவ அம்சம். அவரின் கோவில் கொடைவிழாக்களின் நள்ளிரவில் அவர் சுடுகாட்டுக்கு செல்வார்
பின் சாம்பல் பூசிவந்து எலும்பு சுமந்து வந்து நிற்பார் சில நேரம் வாக்குகளும் சொல்வார்
அவர் சுடுகாடு செல்லும் தத்துவம் வாழ்வு நிலையற்றது என்பதையே, எல்லார் வாழ்வும் நிலையற்றது ஒரு நாள் அழிந்துபோகும் உடல் இது, ஒருநாள் இல்லமல் போகும் பந்தமிது அதனில் சிக்கி உழலாதீர்கள், சுடுகாட்டை நினைவில் வைத்து வாழ்வின் நிலையாமை கருதி வாழுங்கள் என அவர் போதிப்பார்
காசியின் தத்துவமே தென்முனையில் சுடலை மாடனாகவும் போதிக்கபடுகின்றது
மயானத்தை அபப்படி ஞானம் தரும் இடமாகக் கொன்டாடினார்கள் இந்துக்கள், அது மானிடர்க்கு மட்டுமல்ல உடலை பிரிந்த ஆத்துமங்களுக்கும் ஞானம் தரும் இடமாகவே சொல்லப்பட்டது
“தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே”
என முதல் பாடலிலே மயானத்தில் இருப்பார் சிவன் என்றார் சம்பந்தர்.
அதாவது உயிர்கள் ஒடுங்குமிடம் மயானம், அந்த சாம்பல் ஒடுங்கி கிடக்கமிடம் மயானம், அந்த சாம்பல் நடுவில் நிற்பவர் எக்காலமும் அழியா எம்பெருமான், உயிர்கள் ஒடுங்கும் எம்பெருமான் என்பது பாடலின் பொருள்.
“முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பராய் வெந்து மண்ணவதுங் கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்யவேண்டும் என்றே அறிவாரில்லையே.”
“உருகி எலும்பு கருகி அடங்கி ஓர் பிடி நீறுமிலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே”
“என் பெற்ற தாயாரும் என்னைப் பிணம் என்று இகழ்ந்துவிட்டார்
பொன் பெற்ற மாதரும் போ என்று சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின் வலம் வந்து குடம் உடைத்தார்
உன் பற்று ஒழிய ஒரு பற்றுமிலை உடையவனே”
“உலகப் பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க
பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்”
“கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகிய அப்பால்
எட்டி அடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே “
“விட்டுவிடப் போகுதுயிர் விட்ட உடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் – பட்டது
பட்டு எந்நேரமும் சிவனை ஏத்துங்கள் போற்றுங்கள்
சொன்னேன் அதுவே சுகம்’
என முழுஞானி பட்டினத்தார் இதைப் பாடினார்.
“இந்தச் சடலம் பெரிதென – எண்ணியான் இருந்து வீண்காலந் தான்கழித்துச்
சொந்தச் சடலம் எதுவெனப் பார்த்திடில் சுத்தமாய்க் காணோம் ஆனந்தப் பெண்ணே”
என்பார் சங்கிலி சித்தர்.
இந்த மயானமே ஒருவனுக்கு முழு ஞானம் கொடுக்கும், அதை காணும் ஆன்மா சிந்திக்கும், அதை உணரும் அதாவது உடலின்றி தவிக்கும் ஆன்மா இன்னும் ஞானம் பெறும்
அந்த ஆன்மாவினை தன்னோடு அந்த பரம்பொருள் ஈர்க்கும் இடம் அணைத்துக் கொள்ளும் இடம் மயானம்.
கருணை கொண்ட அந்த பெரும் வடிவம், எங்கிருந்து ஆன்மாவினை உடலுக்கு கர்மவினையால் அனுபியதோ அந்த ச்கதி, அது மறுபடி பிரியும் போதும் தன்னில் ஈர்க்கின்றது
அந்த இடம் மானுட கண்ணுக்கு தெரியாது, மானுட கண் பலவீனமனது ஆனால் ஞானகண்களுக்கும் ஞானத்தால் கரைந்தோருக்கும் அதை அறிந்துகொள்ளமுடியும்
அதனாலே ஏகப்பட்ட மந்திர வழிபாடுகளைப் பரிகாரங்களை இன்னும் பலவற்றை இந்துக்கள் மயானத்துக்கு செய்தார்கள். அவையெல்லாம் ஒரு ஆன்மாவினை அதாவது உடல்தான் எல்லாம் என நம்பி ஏமாந்த ஆன்மாவுக்கு செய்யப்படும் சாந்தி நிகேதம்.
ரிஷிகள் ஞானியர் உடலை பெரும்பாலும் எரிக்க மாட்டார்கள், மயானம் அனுப்ப மாட்டார்கள் காரணம் அவர்கள் உடலும் ஆத்மாவும் வெவ்வேறு என உணர்ந்து, வாழ்வும் உடலும் நிலையற்றது என்பதை உணர்ந்து ஞானம் பெற்றவர்கள்.
அந்த உடலை அவர்கள் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள், அதனால் அந்த ஆத்மா வாழும்போதே சிவனுடன் கலந்துவிடும். மயானம் செல்லும் அவசியமில்லை.
இதனாலே சித்தர்கள் உடல் புதைக்கப்படும். அங்கே அவர்கள் இறைநிலை அடைந்த ஆத்மா என்பதால் வழிபாடுகளும் செய்யப்படும், இவைதான் சித்தர் சமாதிகள்.
அவர்களை தவிர மன்னரோ, கொம்பனோ, அறிஞனோ எவனாயினும் அவன் உடல் மயானம் வந்தே தீரும், பற்றருக்கா ஆத்மா அங்கேதான் உண்மை உணர்ந்து ஞானம் பெறும்.
ஆம், இந்துமதம் ஞானம் போதித்த மதம், அது மயானக் காட்சியில் முழுஞானம் போதித்தது, அதை வலியுறுத்தியது.
அது சிவனின் இடம் எனச் சொல்லி அதாவது ஆத்மா இறைவனோடு கலக்கும் இடம் என சொல்லி கைகாட்டி தந்தது , இதுதான் வாழ்வின் சூட்சுமம் என சொல்லி தந்தது
மயானத்தை கோவிலாக கொண்டாடி இங்கேதான் கர்மம் முடியும், இங்கேதான் இன்னொரு உருவாக ஆத்மா மாறும் என போதித்தது இந்துமதம்
உட்ல அழியும் ஆனால் ஆத்மா அழியாது அது இன்னொரு வடிவம் பெறும் , அபப்டி உருமாரும் இடமே மயானம் என வழிபட சொன்னது இந்துமதம்
இதை சைவம் மிக அழுத்தமாக சொன்னது
வைணவத்தின் கீதையில் ஆத்மா அழியாதது உடல் அழியும் என மாயான காட்சிகளை சொன்னாலும் அவர்கள் இந்த அளவு ஆழமாக செல்லவில்லை
சைவ மரபு அதை மிக மிக துல்லியமாக சொல்லி ஞானம் போதித்தது, மயானத்தை கோவிலாக்கியது
இங்கே ஒரு கேள்வி எழலாம், அப்படியானால் மயான பிசாசுகள், பேய்கள், மாந்த்ரீகமெல்லாம் இல்லையா? அனுமாஷ்ய மயான சக்தியெல்லாம் பொய்யா என்பது
இந்துமரபில் ஒரு மாபெரும் ஞான தந்த்துவம் உண்டு, அதன் அடிப்படையில்தான் இதன விளக்கமுடியும்
இந்துக்கள் போதனைபடி இங்கு கெட்டவன், தீயவன் என யாருமில்லை எல்லோரும் அவரவர் கர்மா கழிக்க வந்தவர்கள் விதித்ததை செய்பவர்கள்
அதனாலே காணுவ்ம் எல்லாமும் சிவம் என்றார்கள் சைவர்கள் , எல்லா உயிரிலும் இருப்பவன் நானே என்றான் கண்ணன்
மானிடரையே இப்படி பரந்து யாரையும் ஒதுக்காத பழிக்காத இந்துமதம் சூட்சும உலகின் சக்திகளையும் இபப்டி ஒரே கண்ணோட்டத்தில் ஒரே வகையில்தான் வைத்தது
அரசு ஊழியரில் உயிகாக்கும் மருத்துவர், கடும் தண்டனை வழங்கும் காவலர், தூக்கிலிடும் தண்டனையாளர் என எல்லா வகையும் அரச ஊழியர்களாக இருப்பது போல் ஆண்டவன் அவையில் ஒவ்வொரு ஆவியும் அதனதன் வேலையினை செய்கின்றன.
ஆவிகள், சுடுகாட்டு மந்திரம், ஏவல் இன்னபிற உண்டா என்றால் மவுனமாக உண்டு என்றுதான் ஒப்புகொள்ள வேண்டும், ஆவிக்ள் பிடிப்பதும் பலரை குழப்புவதும் உண்டா என்றால் உண்டு
ஆனால் அது இங்குமட்டுமல்ல இது உலகெல்லாம் உண்டு
இந்த ஏவல்கள், பிரேத பூத பிசாசுகள், மந்திர தந்திரமெல்லா ம் யாருக்கு பலிக்கும், எப்படியானவ்ர்களிடம் வேலைகாட்டும் என்பது இந்துக்களின் வேதங்களிலே உண்டு
வேறு எந்த மதமும் அதை அவ்வளவு தெளிவாக கூறவில்லை, அந்த சூட்சுமத்தை கொண்டு பயமுறுத்தியதே தவிர இந்துமதம் அளவு அது ஆழமாக சொல்லவில்லை
என்ன சொல்கின்றது அதர்வண வேதத்தின் முதல் விளக்கம்?
இந்த மந்திரங்களின் படி எவன் தன் கடமையினை சரியாக செய்வானோ, எவன் தர்மத்துக்கு கட்டுபட்டு நிற்பானோ, எவன் தர்மபடி நடப்பானோ, எவன் உண்மையான துறவியோ, எவன் இறைவனில் கலந்திருப்பானோ, எவன் தன்னை உணர்ந்து தன் கர்மத்தை செய்பவனோ, எவன் இறைசித்தபடி நடப்பவனோ , எவன் தன் பிறப்பின் கடமையினை துளி தவறாமல் செய்வானோ அவனை இதனால் கட்டுபடுத்தமுடியாது
யார் அதர்மம் செய்வானோ, எவன் கர்மாவினை விட்டு நகர்வானோ, எவன் மாய மயக்கத்தில் பந்தபாச மயக்கத்தில் பாதை தவறுவானோ, எவன் மனதில் ஆசை உண்டோ , எவனிடம் பெரிய உறுதியும் வைராக்கியமில்லா பலவீனமும் அதனால் அவர் கர்மத்தை செய்யாமல் தடம் மாறுவானோ குழம்பி நிற்பானோ அவனிடம் இது பலிக்கும்”
அதாவது ஒருவன் கர்மத்தை நோக்கி அவனை இறைசக்தி நோக்கி இழுத்து செல்வதுதான் இந்த ஏவல் பில்லி சூன்யத்தின் வெலைகள்
சமூகத்தில் காவலர்கள் எப்படி கடமை செய்கின்றார்களோ அபப்டி சூட்சும உலகில் இவர்கள் கடமையினை செய்வார்கள்
எல்லோரையும் நல்வழிபடுத்தி கர்மத்தை செய்யவைத்து, பிறப்பின் கடமையினை செய்யவைத்த்து, இறைவன் நோக்கி இழுத்துவருவார்கள்
கர்மவினை படி இவர்கள் வேலை செய்வார்கள் அந்த வேலையும் இறை உத்தரவுபடி நடக்கும்
இன்றும் எல்லா மத ஆலயத்தையும் பாருங்கள், இதர ஏவல் பரிகார நிலையங்களை பாருங்கள் அங்கெல்லாம் ஒரு சிந்தனை எழும்
இந்த ஏவல்களும் சோதனைகளும் இல்லையென்றால் இவர்கள் இறைவனை நாடுவார்களா? தேடி வருவார்களா?
இல்லை நிச்சயம் இல்லை, அப்படி அவர்களை தேடி இழுத்துவரும் சக்திதான் இந்த ஏவல்கள்
இது ல்லோரிடமும் பலிக்கா ரகசியம் இதுதான், அது சக்திவாய்ந்தது தனித்துசெயலாற்றுவது என்றால் இன்று உலகை ஆள்வது பிடனும் , புட்டீனும், மோடியும், ஜின்பெங்குமாக இருக்காமட்டார்கள்
பில்கேட்ஸ் முதல் அம்பானி வரை இருக்காமட்டார்கள்
மாறாக அவர்கள் இடத்தில் ஒரு மந்திரவாதி அமர்ந்திருப்பான் ஆனால் உலகில் அப்படி பார்க்கமுடியாது, மாந்த்ரீகம் ஏவல் எல்லாம் இறைசக்திக்கு உட்பட்ட கருவிகள்
அந்த தத்த்வத்தைத்தான் மயானங்கள் சொல்கின்றன, அங்கு நிற்பவை எல்லாம் சிவனின் கைகூலிகள், மானிடருக்கு ஞானம் வர, இறைசிந்தனை வர, கர்ன வினைதீர , கர்மத்தை உணர அவை இறை சித்தபடி வரும்
அது மந்திரவாதியால் வந்தது, தானே வந்தது, சோற்றுக்கும் பூவுக்கும் வந்தது என நம்பினால் அது மடமை, அதன் பின்னால் இறை அனுமதி இல்லாமல் இராது
காவலர் தேடும் போது அரசனை சந்தித்தால் தப்பலாம், அப்படி இவைகள் தொல்லை கொடுக்கும் போது மூல சக்தியினை சந்தித்து வீழ்ந்தால் நலம் பெறலாம்
அந்த மூலச்கதிதான் இவர்கள் மூலம் ஆடுகின்றது, உண்மையில் அவையெல்லாம் தெய்வத்தின் தூதுவர்கள்
இதை மகாபாரதம் தெளிவாக சொல்லும், அதுதான் இந்த ஏவல் கதைகளின் உண்மையினை மிக மிக அற்புதமாக் சொல்லும்
அந்த காந்தார சகுனிக்கு கவுரவரை அழிப்பதே இலக்கு, அவன் குலத்துக்கு பீஷ்மர் செய்த வலி அப்படி. இதனால் தன் தந்தையின் எலும்பை, பீஷ்மரால் கண்ணீர்விட்டு செத்த தந்தையின் எலும்பை பகடையாய் வைத்திருந்தான் சக்னி
அதில் சூட்சும சக்திகளை புகுத்தினான், அவனுக்கு அந்த வித்தை அத்துபடி இதனால் அவன் சொன்னபடி பகடை விழும்
அப்படிபட்ட பலத்தோடுதான் அவன் வந்தான், வந்தவன் கவுரவரை அழிக்க பாண்டவர் சரியானவர் என்பதை உணர்ந்து, இருவரும் தங்களுக்குள்ளே அடித்துசாகட்டும் என்பதை கணித்து துரியோதனனை தூண்டிவிட்டு சூதாட்டம் ஏற்பாடு செய்தான்
துரியன் கைகளில் இருந்த போது அந்த பகடைகள் சரியாக சகுனி சொல்படி விழுந்தது, ஆனால் தர்மன் கைக்கு வந்தபோது சகுனி திகைத்தான்
காரணம் அறம் அறிந்தவனும் தர்மம் நிறைந்தவனுமான தர்மன் கையில் அந்த சூட்சும ஆவிகள் வேலை எடுபடாது
அப்போது அந்த ஆவிகள் தர்மனிடம் கைகூப்பி நின்று ஒன்றை கேட்டன
“தர்மா, எப்போது எங்களை கொண்டு சகுனி ஆட வந்தானோ, அழிவை ஏற்படுத்த எங்களைத் தொட்டானோ அப்போதே அவன் அழிவு ஆரம்பமாயிற்று, அவனோடு இருப்பவரும் அழிவர்
ஆனால் உரிய காலம் வரவேண்டும் அல்லவா? அதனால் நல்லவனும் கொடையாளனும் தர்மானுவான நீ அவர்கள் இன்னும் 14 வருடம் வாழ மட்டும் பிச்சை இடு.
14 வருடம் அவர்களுக்கு ஆயுள் பிச்சை இடு” என மன்றாடின
தர்மன் அதை ஏற்றுக்கொண்டான் அதன் பின்பே அவன் தோற்றான் எனினும் அந்நிலையிலும் அவர்கள் கண்ணனை அண்டி மீண்டார்கள்.
ஆம் சகுனியின் ஏவல் வென்றது. ஆனால் அது இறைச் சித்தபடி தெய்வக்கம் பாண்டவரை தள்ளியது கடைசியில் தெய்வமே வந்து அவர்களை காத்து மீட்டு வெற்றிகொடுத்து கவுர்வார்களை அழித்தது
அங்கே சகுனிவைத்த ஏவல் அவனை அழித்து அவனை சார்ந்தோரையும் அழித்து பாண்டவர்க்கு பெரும் வாழ்வை கொடுத்தது
இதுதான் பாரதம் சொல்லும் முதல் போதனை, எல்லா ஏவலும் இறைவனின் நாட்டமே, அந்நிலையில் தெய்வத்தை நம்பினால் அண்டினால் வாழலாம் ஏவல் பிசாசுகள் வெறும் வேலைககரர்களே அவர்கள் இறைவனை விட சக்திவாய்ந்தவர்கள் அல்ல என்பது
இந்த தத்துவத்தில்தான் இந்துக்களின் சுடுகாட்டு வழிபாடும் தத்துவமும் உண்டு.
மைதுனம் என்றால் உறவு, மையானம் என்றால் உறவு அற்றுபோகும் நிலை, இன்னொரு பரிமாணத்துக்கு செல்லும் நிலை
அந்த ஞானநிலை , இறைவனில் சங்கமாகும் அந்த நிலையினை மயானத்தில் பெறலாம் என்பதை இந்துமதம் வலியுறுத்தியது
அவ்வகையில் அது காசியினை வடக்கே கொடுத்தது, அதே தத்துவத்தில் நான்கு சிவாலயங்களை மயானத்தில் வைத்து தமிழகத்திலும் கொடுத்தது
காசி மட்டுமல்ல அதே சக்தியினை இந்த மீதி மயானங்களிலும் பெறமுடியும்
ஆம் “பஞ்ச மயானத் தலம்” என ஐந்து உண்டு.
காசி மயானம், கச்சி மயானம் (காஞ்சிபுரம்), காழி மயானம் (சீர்காழி), நாலூர் மயானம், கடவூர் மயானம் (திருமெய்ஞானம்) என ஐந்து உண்டு.
இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு தத்துவம் உண்டு, ஒரு போதனை உண்டு, ஒரு தாத்பரியம் உண்டு
மகா சூட்சுமமும் உண்டு.
இதில் காசி மட்டும் கங்கை கரையில் உண்டு மீதி நான்கும் தமிழகத்தில்தான் உண்டு
சிவராத்திரி தொடங்க இருக்கும் நேரம் இந்த ஐந்து மயான ஆலயங்களையும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்
இது மகா சூட்சுமனானது, அதே நேரம் ஞானமானது, சிவராத்திரி காலங்களில் இந்த மயான தத்துவங்களை மயான ஆலய சிறப்புக்களை அறிவது நலம்
இவை ஒவ்வொருவரின் வாழ்வு மயானத்தில் முடிவது போல கர்மம் முடித்து சாபம் முடித்து புது பிறப்பெடுக்கவைக்கும்ச் சக்தியினை தரும் ஆலயம், அதாவது சாபம் தீர்த்து தடையெல்லாம் அகற்றி புதுவாழ்வு கொடுக்கும் ஆலயங்கள்
ஒருவனின் சாபமிக்க வாழ்வினை எரித்து புதுவாவும் புது சக்தியும் கொடுத்து இரண்டாம் பிறப்பினை மனதால், சிந்தையால், செயலால் தரும் ஆலயங்கள்
மயானம் என்பது இங்கு உடல் எரியும் மயானத்தை குறிக்காது மாறாக கர்மம் எரிந்து, சாபம் எரிந்து எதெல்லாம் தடையோ அதெல்லாம் எரிந்து வாழ்வினை உருமாற்றித் தரும் ஆலயங்கள்.
அந்த பஞ்ச மயான ஆலயங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.