பாண்டித்துரை தேவர்
சங்கம் வைத்து தமிழ்வளர்த்த நகரம் மதுரை, அதுவும் ஞானமுனி அகத்தியனும் ஞானகுரு முருகனும் தெய்வீக கவியான அவ்வை மாதரசியும் இணைந்து தமிழ் வளர்த்த இடம் மதுரை கூடவே அன்றைய மதிப்பிலே லட்ச ரூபாய் கொடுத்தார்
அந்த ஆலவாய் நாதனின் ஆலயம்தான் தமிழ் சபையாயிற்று, சிவன் உருவாக்கிய தமிழ்மொழியின் சங்கம் அந்த சிவாலயத்தில்தான் தொடங்கிற்று
பின்னாளில் மதுரைக்கான அம்மனான மீனாட்சி அம்மன் கொண்டாடபட்டு அந்த ஆலயம் மீனாட்சி அம்மன் ஆலயம் என உருவானானும் தமிழ்சங்கம் அங்குதான் நடந்தது
சிவன் நக்கீரரை சோதித்ததும் அங்குதான் இன்னும் திருக்குறள் அரங்கேறியதும் அங்குதான், அந்த சபைதான் தமிழ்வளர்த்தது, இன்று இருக்கும் எல்லா சங்க இலக்கியங்களும் அங்குதான் அரங்கேற்றபட்டன,
இலக்கணமில்லா பிழையான படைப்புகள் தூர வீசபட்டதும் அங்குதான்
அந்த தமிழ்சங்கம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனின் 4ம் வாரிசோடு முடிந்தது மதுரையினை ஆப்கானியரும் பின் நாயக்கரும் ஆளவந்தபின் அதுபற்றி சிந்திப்பார் யாருமில்லை
பின் வந்த நாயக்கர்களும் தமிழ் சங்கம் நடத்தவில்லை ஆனால் தமிழ் அவமரியாதையும் செய்யவில்லை, பாண்டிய மன்னர்கள் இருந்தவரை சங்கத்தில் இருந்த தமிழ் பின் மடங்களில் மட்டும் முடங்கிற்று
ஆனால் கிட்டதட்ட 1650 வருடங்களுக்கு பின் அந்த சிந்தனை வந்தது, அதை மறுபடியும் தொடங்க வேண்டும் என சொன்னவர் பாண்டிதுரை தேவர்
அவர் பாலநத்தம் ஜமீன்குடும்பம், அந்த ஜமீன் சேதுபதி மன்னர்களுக்கு கட்டுபட்டது. சிறுவயதில் இருந்தே தமிழ்மீதும் இந்துமதம் மேலும் அவருக்கு மிகபெரிய பற்று இருந்தது, நாளாக நாளாக அது வளர்ந்தது
நான்காம் தமிழ்சங்க கனவினை அவர்தான் கண்டார், அவருக்கு உதவி செய்ய சேதுபதி மன்னர் பாஸ்கர தொண்டைமானும் முன்வந்தார்
தமிழகத்தில் இந்துமதம், மொழி, சமூகபணிக்கு சேதுபதி மன்னர்களின் பங்களிப்பு கொஞ்சமல்ல விவேகானந்தரின் அமெரிக்க பயணம் முதல் முல்லைபெரியாறுவரை எல்லாம் அந்த இந்து மன்னர்களின் ஆதரவு
அவர் அன்றே ஆயிரம் பொன் கொடுத்து தமிழ்சங்கத்தை தொடங்கி வைத்தார், பாண்டித்துரை தேவர் தன் வீட்டையே கொடுத்தார்
பெரும்புலவர்களாகிய உ.வே. சாமிநாதைய்யர், சடகோப ராமாநுசாச்சாரியார், ராகவ ஐயங்கார், பரிதிமாற் கலைஞர், சண்முகம்பிள்ளை போன்ற பெரும் அடையாளங்களெல்லாம் வந்து தமிழ்சங்கத்தை தொடங்கி நடத்தினர்
1901ம் ஆண்டு தமிழை வளர்க்க பல திட்டங்களை அச்சங்கம் அறிவித்தது தமிழ்க் கல்லூரி உண்டாக்குதல், தமிழ் ஏடுகளை அச்சிட்டு பயன்படுமாறு தொகுப்பது. வெளிவராத அரியநூல்களை அச்சிட்டுப் பரப்புதல். வடமொழி ஆங்கில நூலைகளை தமிழில் மொழி பெயர்த்தல், தமிழ்க் கல்வி பற்றிய செந்தமிழ் இதழ் வெளியிடுதல், தமிழில் தேர்வு நடத்தி பட்டமும் பரிசும் வழங்குதல்,தமிழ் அறிஞர்களைக் கொண்டு பேருரையாற்றச் செய்தல்.
தமிழில் திறமிக்க பெருமக்களை ஒன்று கூட்டி தமிழாராய்தல் வேண்டத்தக்க புது நூல்களும் புத்துரைகளும் படைத்து அவற்றை அரங்கேற்றுதல்
இதோடு இல்லாமல் இவற்றை நடைமுறைபடுத்த அவை சில நிறுவனங்களையும் நிறுவின
சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை, பாண்டியன் புத்தக சாலை, நூலாராய்ச்சி சாலை, கல்விக் கழகம்.
தமிழ்ச் சங்க முத்திராசாலை (அச்சகம்),செந்தமிழ் என்னும் திங்களிதழ் தமிழ்த் தேர்வு மையம் என பலவற்றை நடத்தினார்கள்
வ.உ.சிக்கு சுதேசி கப்பலுக்கு ஏராளமான நிதி கொடுத்தவரும் பாண்டிதுரை தேவரே
1901ல் தொடங்கபட்ட தமிழ்சங்கம் 10 ஆண்டுகள் பாண்டிதுரையாரின் காலங்களில் வேகமாக வளர்ந்தது, இன்று நாம் காணும் சங்க இலக்கியமெல்லாம் அப்ப்பொழுதுதான் பெரிய அளவில் வெளிவந்தன
இந்த தமிழ்சங்கம் இதர தமிழ் கழகங்களான சைவ சிந்தாந்த கழகம் உள்ளிட்ட கழகங்களோடு இணைந்து செய்த தமிழ்சேவை கொஞ்சமல்ல
அதன் பின் மிக கேடுகெட்ட காலம் உதயமாயிற்று, அந்த கும்பல் இன்று தமிழை சீரழித்த கொடுமையினை விட கடும் கொடுமை அரும்பாடுபட்டு பாண்டிதுரை உருவாக்கிய தமிழ்சங்கம் பின்னாளில் மறைக்கபட்டு வரலாற்றில் இருந்து அகற்றபட்டது
இந்த தமிழ்சங்கம் முடக்கபட மிகபெரிய காரணங்கள் இரண்டு
முதலாவது தேசபற்றோடு செயல்பட்டது
இரண்டாவது பரிசுத்தமான இந்து சங்கமாக அது செயலாற்றியது
இந்த இரண்டும் பிரிட்டிஷ் அரசு கண்களை உறுத்த அவர்கள் தங்கள் கைகூலிகள் மூலம் செய்யவேண்டிய கழுத்தறுப்பு வேலையினை செய்தார்கள்
அந்த காலம் கடுமையானது தொழிலும் கல்வியும் போலி நாகரீகமும் தமிழையும் இந்துமதத்தையும் ஒழித்து கொண்டிருந்தன, எங்கும் ஐரோப்பிய மயம் ஓங்கிற்று
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் ஆறுமக நாவலர் சைவ தமிழ் எழுச்சியினை செய்து தமிழையும் சைவத்தையும் காக்க அரும்பாடுபட்டார்
அவரின் வழியில் இங்கே பாண்டித்துரை திருபணி செய்தார், இவர் எடுத்த முயற்சியில்தான் இன்று ஓரளவாவது தமிழ் இலக்கியம் வெளிதெரிகின்றது, இன்றும் தமிழ் வீழ்ந்துவிடாமல் தாக்குபிடிக்கின்றது
அவர் தமிழ்சமூகத்துக்கும் சைவத்துக்கும் ஆற்றிய தொண்டு சாதாரணமல்ல, மதுரை அம்மனின் தேரோடும் வீதியில் அவருக்கு சன்னதி கட்டும் அளவு தூய்மையானது
இன்று அந்த பாண்டிதுரை தேவரின் நினைவுநாள்
அரசியல் செய்யாமல் தமிழை வளர்க்க என்ன செய்யவேண்டுமோ அதை சரியாக செய்த மிகபெரிய தமிழறிஞனின் தமிழ் கொடையாளியின் நினைவு நாள்
இந்நாள் வருங்காலத்தில் “தமிழ்சங்க நாள்” என கொண்டாடபடும், அதற்கு ஒரு காலத்தை விரைவில் ஆலவாய் நாதனும் அன்னை மீனாட்சியும் அருள்வார்கள்
அவர் நான்காம் தமிழ்சங்கம் நடத்தி பெரும் தமிழ்தொண்டு செய்தபொழுது ஈரோட்டு ராம்சாமி 12 வயது சிறுவனாக காவேரி கரையில் ஆடிபாடி கொண்டிருந்தது, அய்யா முத்தமிழ் அறிஞர் கருணாநிதி பிறந்திருக்கவே இல்லை