புரட்டாசி மாதம்

புரட்டாசி மாதம் புனிதமானது, அது விஷ்ணு வழிபாட்டுக்கு மிகச் சிறந்த மாதம், மார்கழி போலவே அப்போது சொல்லவேண்டிய மந்திரங்களும், வழிபாடுகளும் உண்டு.

அதனில் முக்கியமானது விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைச் சொல்லும் “விஷ்ணு சஹஸ்ர நாமம்” பாடும் பெரும் வழிபாடு.

அது இந்துக்களின் வழமையாய் இருந்தது, இன்றும் உண்டு, என்றும் தொடரவும் வேண்டும்.

இந்த வழிபாடு மகாபாரத காலத்திற்கு முன்பே இருந்தது, யார் இதனை தொகுத்தார்கள்? யார் இதனை பாடி பகவான் நாமத்தை பாடலாக, ஸ்லோகமாக தந்தார்கள் என்பதற்கு பதில் இல்லை. அவ்வளவு பழமையானது.

மகாபாரத பீஷ்மரும் அவராக இயற்றிப் பாடவில்லை, வழி வழியாக வந்த பாடல் வழிபாட்டைத்தான் அவர் வாழ் நாளெல்லாம் பாடினார். தன் அந்திம காலத்திலும் பாடினார்.

பீஷ்மருக்கு தான் விரும்பும் நேரத்தில் உயிர்விடும் வரம் இருந்தது, அதன் பொருள் தான் செய்ய நினைத்தது, பேச நினைத்தது, போதிக்க நினைத்ததையெல்லாம் சொல்லிவிட்டு நிம்மதியாக வைகுண்டம் ஏகிச் செல்லும் வரம்.

அவர் குலப்பெருமைக்காக பாரதப் போரில் கவுரவர் பக்கம் கர்மமாக நின்றாலும், அவருக்கு நடப்பதெல்லாம் தெரிந்திருந்தது, தானும் கண்ணனின் கருவி என்பதை அறிந்திருந்தார்.

துரியனை தான் ஆதரிக்கும் பட்சத்தில் எல்லா அழிக்கப்பட வேண்டியவர்களும் அவன் பக்கமே வருவார்கள். தான் அதற்கான கருவி, பீஷ்மர் இருக்குமிடம் வெல்லும் என்றே துரியனை ஆதரிப்போர் பெருகுவார்கள், இதுதான் தன் கர்மா என்றபடி அமைதியாக அப்பக்கமே இருந்தார்.

அர்ஜூனனால் அவர் சாயக்கப்பட்டு அம்புப்படுக்கையில் வீழ்ந்தாலும், அவர் பெற்ற வரம்படி மரணம் வரவில்லை, தன் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டிவிட்டுத்தான் போக முடிவெடுத்து உயிரைப் பிடித்து வைத்திருந்தார்.

அவர் மண்ணாசை கொண்டவர் அல்ல, இந்த மண்ணை ஒரு காலமும் நேசிக்கமாட்டேன் எனும் வைராக்கியத்தில் வாழ்ந்தவர். தன் இறுதிப் படுக்கையிலும் அம்பின் மேல் படுத்திருந்தார், மண்மேல் சாய அவர் விரும்பவில்லை, அவர் கர்ம வீரர்.

யுத்தம் முடிந்து பாண்டவர் அவரைச் சந்தித்து தாங்களும் இந்த பேரழிவுக்கு காரணம், பீஷ்மர் சரிந்துவிட காரணம் என மன்னிப்புக் கோரினார்,

ஐந்துபேரும் அவரை சுற்றி நின்று அழுதனர், தாங்களே எல்லாவற்றுக்கும் காரணம் எனும் குற்ற உணர்ச்சி இருந்தது.

இந்துமதத்தின் பெரும் சிறப்பு அது யாரையும் குற்ற உணர்ச்சி கொள்ள வைக்காது, கர்மத்தை செய்தாய் என அதை ஏற்றுக்கொள்ள வைக்கும், மன நிம்மதி கொடுக்கும்.

அதையே முதிர்ந்த பீஷ்மர் பாண்டவர்க்கும் சொன்னார்.

“என் பிள்ளைகளே, இந்த போரை நடத்தியவன் கண்ணன், அவனே தொடங்கினான் அவனே ஆடினான், அவனே செய்யவேண்டிய அனைத்தும் செய்தான், அவன் நாராயணன் அம்சம்.

தேவகாரியத்துக்காக பூமிக்கு வந்த அவன் நம்மையெல்லாம் பயன்படுத்திக்கொண்டான், நீங்கள் உங்களால் நினைத்து இப்போர் நடந்தது என வருந்தினால் இக்குல முதல்வன் நான் எவ்வளவு வருந்த வேண்டும்? எனக்கும்தான் பங்கிருக்கின்றது.

இது பரமாத்வாவின் நாடகம், நாமெல்லாம் கைப்பாவைகள்.

என் அருமை குழந்தைகளே, நான் வாழும் காலத்தில் உங்களுக்கு பல விஷயங்கள் போதிக்கவில்லை, பின்னாளில் நீங்கள் என்னிடம் வரவுமில்லை.

துரியனுக்கு தர்மங்களை போதிப்பதில் அர்த்தமில்லை அவன் கேட்க போவதுமில்லை

அதனால் என் மனதில் இருக்கும் அனைத்து தர்மங்களையும் போதனைகளையும், நம் ரிஷிகளும் ஞானிகளும் எனக்குத் தந்ததை நான் உங்களுக்கு தந்துவிட்டுச் செல்ல விரும்புகின்றேன்

தர்மனே! நீ இந்த தர்மத்தை அறிவாய், அதை உன் தம்பிமார்க்கும் சொல்வாய், தர்மம் தலைதூக்கிய இந்நேரம் இந்த உண்மைகளெல்லாம் உலகுக்கு தெரிதல் வேண்டும்” என்றவர் அவர்களுக்கு வாழ்வியல் தர்மங்களை போதித்தார், பல ரகசியங்களை மறைபொருளை போதித்தார், கடைசியில் உன்னதமான தத்துவத்தை சொன்னார்.

“பாண்டவர்களே வரப்போகும் காலம் கடுமையானது, அதுவும் கலியுகம் பொல்லாதது, அங்கு இப்போதிருக்கும் வழிபாடுகள் எல்லாம் இராது, மானிடர்கள் பக்தியில் குறைவார்கள், இப்போதுள்ள நீண்ட வழிபாடு அப்போது நடக்காது, மானிட சிந்தனையும் சுபாவமும் மாறிவிடும்.

அப்போது எளிதான வழிபாடு அவசியம் , பகவானை அடையவும் உணரவும் அவன் நாமங்களைச் சொல்லி நமஸ்கரித்தால் போதும், அது பலன்கொடுக்கும்.

நம் ஞானியரும் ரிஷிகளும் சொன்ன ரகசியம் இது.

இதனை பூரணமாக சொல்லும் போது உடலில் நல்ல அதிர்வுகள் வரும், உடலின் சக்கரங்கள் துலங்கும், தெளிவு வரும், உடல் நலமாகும், எல்லாம் சீராகும்.

இதனை சொல்வோரின் கர்மா அழியும், ஞானம் பெருகும், அவனை நோய் நொடி அண்டாது, அவன் தேவர்களைப் போல ஜொலிப்பான், எல்லா நலமும் வளமும் அறிவும் தெளிவும் அவனுக்கு வரும்.

காயத்ரி மந்திரம் ஒரு கண் என்றால், இந்த விஷ்ணு சஹஸ்ர நாமம் இன்னொரு கண்.

இதனை அனுதினமும் சொல்லிவர வர கலியுகத்தில் உள்ள மாந்தர்கள் நீடூடிவாழ்வர், நிம்மதியாக அமைதியாக செழுமையாக வாழ்வர்.

இது பகவானின் ஆயிரம் நாமங்களைச் சொல்லும் வெறும் வழிபாடு அல்ல, இது மந்திரம் இந்த பிரபஞ்சதோடும் நம்மை இணைக்கும் மந்திரம், நம் கர்மாவினை சரியாக செய்ய வைக்கும் மந்த்ரம்.

குழந்தைகளே, விஷ்ணு என்பவரே நம்மையெல்லாம் முக்தி அடையச் செய்யும் வழிகாட்டி, அவர் வழியாகத்தான் நாம் பரம்பொருளை அடையமுடியும்.

அதற்கான ஆயிரம் வாசல்களே இந்த மந்திரங்கள், ஆயிரம் மலர்களால் நாம் அவரை துதிக்கும் போது அந்த ஞானவாசல் திறக்கும்.

அவனை கிரகங்கள் பாதிக்காது, கர்மா பாதிக்காது, எந்த தீவினையும் கர்ம வினையும் அவனை அண்டாது. ஒளிபெற்ற மனிதனாக ஞானம் பெற்ற மாமனிதனாக அவன் ஜொலிப்பான்.

இந்த மந்திரம் சூட்சுமமானது, சகஸ்ரம் என்றால் ஆயிரம், இது ஆயிரம் இதழ் கொண்ட உச்சந்தலை சக்கரத்தை துலக்கும் சக்திகொண்ட மந்திரம், இதனை பிரம்ம முகூர்த்தத்தில் சொல்லி வருபவன் விரைவில் ஞானி நிலையினை அடைவான்.

என் முன்னோர்கள் சொல்லித்தந்த ரகசிய மந்திரத்தை, பகவானின் ஆயிரம் நாமங்களை உங்களுக்குச் சொல்லித் தருகின்றேன்” என்றார்.

அவர் முன் பாண்டவர்கள் குனிந்து நின்றனர், வழி வழியாக முன்னோர்கள் எப்படி வழிபட வேண்டும் எனச் சொன்னார்களோ, விநாயகப் பெருமானை வணங்கி இன்னும் சில நியதிகள் வழி நடந்து பின் தியானத்தில் அந்த ஆயிரம் நாமங்களைச் சொல்ல வேண்டும் எனச் சொன்னரோ அதை போதித்தார்.

அவர் போதிக்க போதிக்க பாண்டவர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள், சகலமும் போதித்தபின் எல்லா தர்மங்களையும் சொல்லிவிட்டோம் இனி சொல்ல ஒன்றுமில்லை எனும் திருப்தியுடன் உயிரை விட்டார் பீஷ்மர்.

ஆனால் அவர் சொன்னதை யாரும் எழுதி வைக்கவில்லை, எல்லோரும் கேட்டதோடு சரி.

எழுதாமல் விட்டு விட்டோமே, இனி யாரிடம் கேட்டு எழுதுவது பீஷ்மரும் இல்லையே என எல்லோரும் கலங்கிய நேரம் கண்ணன் அவர்களுக்கு வழிகாட்டினான்.

பீஷ்மரோடு நடந்த உரையாடலெல்லாம் சகாதேவன் கழுத்தில் அணிந்திருந்த படிக மாலையில் பதிந்திருந்தது. உரிய மந்திர உச்சாடனம் மூலம் அதை திரும்பப் பெற்றார்கள்.

இப்படித்தான் மகாபாரதம் மூலமாக உலகுக்கு வெளிகாட்டப்பட்டது விஷ்ணுவின் சகஸ்ரநாமம் எனும் ஸ்லோக தொகுப்பு.

இதற்கு ஆதிசங்கரர் உரை எழுதியிருக்கின்றார், அடிப்படையில் அவர் அம்பாள் உபாசகர், அவரின் விருப்பமெல்லாம் சவுந்தர்ய லஹரி, லலிதா சஹஸ்ர நாமம் என்றேதான் இருந்தது

ஆனால் அம்பாளே வந்து விஷ்ணு சகஸ்ரநாமம் கலிகாலத்தில் மக்களுக்கு வழிகாட்டும் அதற்கு உரை எழுது என உத்தரவிட்டதால் அவரே அதை செய்தார்.

அந்த அளவு முக்கியமானது இந்த விஷ்ணு சகஸ்ர நாமம்.

இது மிகப்பெரிய பாடல், இதனை அனுதினமும் வாசித்தால் பாடினால் பலன் உண்டு, உரிய உச்சாடனத்துடன் சொல்ல வேண்டும்.

எம்.எஸ் சுப்புலட்சுமி போன்ற மாமேதைகள் ஒலிவடிவில் கொடுத்திருக்கின்றார்கள், அதைக் கேட்கலாம்.

புரட்டாசி முழுக்க இதனைச் சொல்வது பலன் தரும், அதிகாலை வழிபாடு செய்வோர் அனுதின வழிபாடு செய்வோர் இந்த மாதத்தில் இதனை பிரார்த்திக்கலாம்.

குறைந்த பட்சம் சனிக்கிழமைகளிலாவது சொல்லி பலன் பெறலாம், முயற்சிக்கலாம்.

வீடுகளில் சொல்லலாம், புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் கூடி சொல்லலாம், ஆலயங்களில் சொல்லலாம், முக்கியத்துவம் வாய்ந்த சனிக்கிழமைகளில் ஆலயத்தில் கூடிப் பாடலாம்.

பெண்களைவிட ஆண்கள் இதனை பாடுவது மகாசிறப்பு. அவர்களின் உடல் சக்கரமெல்லாம் துலங்கிப் பெரும் ஞானம் கைக்கூடும், சிந்தனை தெளியும் உடலும் மனமும் பலமாகும்.

அந்த விஷ்ணு சகஸ்ரநாமத்தை கீழே இணைத்துள்ளோம், விரும்புவோர் படிக்கலாம்.

இது நீண்டது, பெரிய பாடல் என்பதால் ஒரு அரைமணி நேரமாவது ஆகும், முயற்சித்தால் நல்லது பலன் உண்டு.

வீட்டில் குழந்தைகள், இந்து பரம்பரையினர் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய பாடல் இது, புரட்டாசியில் நிச்சயம் பாடப்படவேண்டும்.

இது பாடப்படும் வீடும், ஆலயமும் செழிக்கும் அவை செழித்தால் நாடு தானே செழிக்கும் அவ்வகையில் இது தேசத்துக்கான சேவையுமாகின்றது.

இங்கே இன்னொரு வாய்ப்பும் உண்டு, அது எல்லோருக்கும் ஏற்ற வழி.

இந்தப் பாடல் நீண்டது அல்லவா? இதனை எல்லோராலும் சொல்லமுடியுமா? மக்கள் கலிகாலத்தில் பரபரப்பாக இருப்பார்கள், சாஸ்திரிகள் கூட நீண்டநேர வழிபாட்டை செய்யமாட்டார்கள், அப்படியான காலத்தில் இவ்வளவு நீள ஸ்லோகத்தை மக்கள் சொல்வார்களா என சக்திதேவி சிவனிடம் கேட்கின்றாள்.

சிவன் பதில் சொல்கின்றார்

“ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே | ஸஹஸ்ரநாம தத்துல்யம்‌ ராமநாம வரானனே”

அதாவது தேவியே, இந்த நீண்ட பாடலை சொல்ல முடியாதார்கள் “ராம ராம” எனச் சொன்னால் போதும், ராமனின் நாமத்தை மனமாரப் பாடி உருகி ஜெபித்தால் போதும், இந்த ஆயிரம் பெயர்களை சொன்னதற்கு ஈடாகும் என்கின்றார்.

ஆம், ராமநாம மகிமை அப்படி.

எனினும் முடிந்தவரை விஷ்ணு சகஸ்ரநாமத்தை புரட்டாசி முழுக்க, முக்கியமாக சனிக்கிழமைகளில் சொல்ல வேண்டியது இந்துக்களின் கடமை.

108 ஸ்லோகங்களில் ஆயிரம் நாமங்கள் அந்த ஸ்லோகம் கொடுக்கப்பட்டுள்ளது, எனினும் முறையாக விநாயகரை வணங்கி, பீஷ்மரை நன்றியோடு நினைந்து இந்த ஸ்லோகத்தை சொன்னால் பெரும் பலன் கிட்டும்.

மிக மிக சக்திவாய்ந்த இந்த விஷ்ணு சகஸ்ரநாமம் எப்போதும் சொல்லவேண்டியது என்றாலும் புரட்டாசியில் சொல்வது சிறப்பு, முடிந்தோர் பின்பற்றி பலன்பெற வாழ்த்துக்கள்.

“விச்வம்‌ விஷ்ணுர்‌-வஷட்காரோ பூத பவ்ய பவத்‌ ப்ரபு: |
பூதக்ருத்‌ பூதப்ருத்‌ பாவோ பூதாத்மா பூதபாவன: ||1

பூதாத்மா பரமாத்மாச முக்தானாம்‌ பரமாகதி: |
அவ்யய: புருஷ:‌ ஸாக்ஷீ க்ஷேத்ரஜ்ஞோ(அ)க்ஷர ஏவ ச ||2

யோகோ யோக விதாம்‌ நேதா ப்ரதானபுருஷேச்’வர: |
நாரஸிம்ஹவபு: ஸ்ரீமான் கேசவ:புருஷோத்தம: ||3

ஸர்வ: ச’ர்வ: சி’வ: ஸ்தாணுர்‌ பூதாதிர்‌ நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்த்தா ப்ரபவ: ப்ரபுரீச்’வர: ||4

ஸ்வயம்பூச்‌ ச’ம்பு-ராதித்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அநாதி நிதனோ தாதா விதாதா தாது ருத்தம:||5

அப்ரமேயோ ஹ்ருஷீகேச’: பத்மநாபோ(அ)மரப்ரபு: |
விச்’வகர்மா மனுஸ்‌ த்வஷ்டா ஸ்தவிஷ்ட: ஸ்த்தவிரோ த்ருவ: ||6

அக்ராஹ்ய: சா’ச்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்த்தன: |
ப்ரபூதஸ்‌ த்ரிககுப்தாம பவித்ரம்‌ மங்களம்‌ பரம்‌ ||7

ஈசா’ன: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்ட்ட: ச்’ரேஷ்ட்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸூதன:||8

ஈச்’வரோ விக்ரமீ தன்வீ மேதாவீவிக்ரம: க்ரம: |
அனுத்தமோ துராதர்ஷ: க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவான்||9

ஸுரேச’:ச’ரணம்‌ சர்ம விச்’வரேதா: ப்ரஜாபவ: |
அஹ:‌ ஸம்வத்ஸரோவ்யால: ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10

அஜஸ்: ஸர்வேச்’வரஸ்: ஸித்த: ஸித்திஸ்:‌ ஸர்வாதிரச்யுத: |
வ்ருஷாகபிரமேயாத்மா ஸர்வயோக வினிஸ்ருத: ||11

வஸுர்‌ வஸுமனாஸ்: ஸத்யஸ்: ஸமாத்மா ஸம்மிதஸ்ஸம: |
அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||12

ருத்ரோ பஹுசிரா பப்ருர்‌ ச்’வயோனி: சு’சிச்ரவா: |
அம்ருத: சா’ச்’வதஸ்தாணுர்‌ வராரோஹோ மஹாதபா: ||13

ஸர்வக: ஸர்வவித்‌ பானுர்‌ விஷ்வக்ஸேனோஜநார்தன: |
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித்‌கவி: ||14

லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |
சதுராத்மா சதுர்வ்யூஹ: சதுர்‌தம்ஷ்ட்ரச்‌ சதுர்ப்புஜ: ||15

ப்ராஜிஷ்ணுர்‌ போஜனம்‌ போக்தா ஸஹிஷ்ணுர்‌ ஜகதாதிஜ: |
அனகோ விஜயோ ஜேதா விச்’வயோனி: புனர்வஸு: ||16

உபேந்த்ரோ வாமன: ப்ராம்சு’: அமோக: சு’சிரூர்ஜித: |
அதீந்த்ர:ஸங்க்ரஹ: ஸர்கோ த்ருதாத்மா நியமோயம: ||17

வேத்யோ வைத்ய: ஸதா யோகீ வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: ||18

மஹா புத்திர்‌ மஹாவீர்யோ மஹாச’க்திர்‌ மஹாத்யுதி: |
அநிர்த்தேச்’யவபு:ஸ்ரீமான்அமேயாத்மா மஹாத்ரித்ருக்||19

மஹேஷ்வாஸோ மஹீபர்த்தா ஶ்ரீநிவாஸ:ஸதாங்கதி: |
அநிருத்த: ஸுராநந்தோ கோவிந்தோகோவிதாம்‌ பதி: ||20

மரீசிர்‌ தமனோஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |
ஹிரண்யநாப: ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: ||21

அம்ருத்யு: ஸர்வத்ருக்‌ ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமானம்‌ ஸ்த்திர: |
அஜோ துர்மர்ஷண: சா’ஸ்தா விச்’ருதாத்மா ஸுராரிஹா ||22

குருர்‌ குருதமோ தாம;  ஸத்ய: ஸத்ய: பராக்ரம: |
நிமிஷோ(அ)நிமிஷ: ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ: ||23

அக்ரணீர்-க்ராமணீ: ஸ்ரீமான்‌ ந்யாயோ நேதா ஸமீரண: |
ஸஹஸ்ரமூர்த்தாவிச்’வாத்மா‌ ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்‌ ||24

ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த்தன: |
அஹ:ஸம்வர்த்தகோ வஹ்னி-ரநிலோ தரணீதர: ||25

ஸுப்ரஸாத: ப்ரஸந்நாத்மா விச்’வத்ருக்‌ விச்’வபுக்‌ விபு: |
ஸத்கர்த்தா ஸத்க்ருதஸ்: ஸாதூர்‌ ஜஹ்னுர்‌ நாராயணோநர: ||26

அஸங்க்யேயோ (அ)ப்ரமேயாத்மா விசிஷ்ட: சி’ஷ்டக்ருச்‌சு’சி: |
ஸித்தார்த்த: ஸித்தஸங்கல்ப: ஸித்தித: ஸித்தி ஸாதன: ||27

வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர்‌ வ்ருஷபர்வா வ்ருஷோதர: |
வர்த்தனோ வர்த்தமானச்’‌ ச விவிக்த: ச்’ருதி ஸாகர: ||28

ஸுபுஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸு: |
நைகரூபோ ப்ருஹத்ரூப: சி’பிவிஷ்ட: ப்ரகாச’ன: ||29

ஓஜஸ்‌தேஜோத்யுதிதர: ப்ரகாசா’த்மா ப்ரதாபன: |
ருத்த: ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ர: சந்த்ராம்சு’ர்‌ பாஸ்கரத்யுதி: ||30

அம்ருதாம்சூ’த்பவோ பானு: ச’ச’பிந்து: ஸூரேச்’வர: |
ஒளஷதம்‌ ஜகத: ஸேது: ஸத்ய தர்ம பராக்ரம: ||31

பூதபவ்ய பவந்நாத: பவன: பாவனோ(அ)நல: |
காமஹா காமக்ருத்‌ காந்த: காம: காமப்ரத: ப்ரபு: ||32

யுகாதிக்ருத்‌ யுகாவர்த்தோ நைகமாயோ மஹாச’ன: |
அத்ருச்’யோவ்யக்தரூபச்’ச ஸஹஸ்ரஜிதனந்தஜித் ||33

இஷ்டோஷ்விசி’ஷ்ட: சி’ஷ்டேஷ்ட: சி’கண்டீ நஹுஷோவ்ருஷ: |
க்ரோதஹா க்ரோதக்ருத்‌ கர்த்தா விச்’வபாஹுர்‌ மஹீதர: ||34

அச்யுத: ப்ரதித: ப்ராண: ப்ராணதோ வாஸவாநனுஜ: |
அபாம்நிதிரதிஷ்ட்டான மப்ரமத்த: ப்ரதிஷ்ட்டித: ||35

ஸ்கந்த: .ஸ்கந்ததரோதுர்யோ வரதோ வாயுவாஹன: |
வாஸுதேவோ ப்ருஹத்பானு ராதிதேவ: புரந்தர: ||36

அசோ’கஸ்‌ தாரணஸ்-தார: சூ’ர‌ செ’ளரிர்‌ ஜனேச்’வர: |
அனுகூல:‌ ச’தாவர்த்த: பத்மீ பத்மநிபேக்ஷண: ||37

பத்மநாபோ(அ)ரவிந்தாக்ஷ: பத்மகர்ப்ப: ச’ரீரப்ருத் |
மஹர்த்திர்ருத்தோ வ்ருத்தாத்மா மஹாக்ஷோ கருடத்வஜ: ||38

அதுல: ச’ரபோ பீம: ஸமயஜ்ஞோ ஹவிர்‌ஹரி: |
ஸர்வலக்ஷண லக்ஷண்யோ லக்ஷ்மீவான்ஸமிதிஞ்ஜய: ||39

விக்ஷரோ ரோஹிதோ மார்க்கோ ஹேதுர்‌ தாமோதர: ஸஹ: |
மஹீதரோ மஹாபாகோ வேகவாநமிதாசன: ||40

உத்பவ: க்ஷோபணோதேவ: ஸ்ரீகர்ப்ப: பரமேச்வர: |
கரணம்‌ காரணம்‌ கர்த்தா விகர்த்தா கஹனோ குஹ: ||41

வ்யவஸாயோவ்யவஸ்த்தான: ஸம்ஸ்த்தான: ஸ்த்தானதோத்ருவ: |
பரர்த்தி: பரமஸ்பஷ்ட :‌ துஷ்ட: புஷ்ட: சு’பேக்ஷண: ||42

ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோ(அ)நய: |
வீர: ச’க்திமதாம்‌ ச்’ரேஷ்ட்டோ தர்மோ தர்மவிதுத்தம: ||43

வைகுண்ட்ட: புருஷ: ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது: |
ஹிரண்யகர்ப்ப: ச’த்ருக்னோ வ்யாப்தோ வாயுரதோக்ஷஜ: ||44

ருது : ஸுதர்சன: கால: பரமேஷ்ட்டீபரிக்ரஹ: |
உக்ர: ஸம்வத்ஸரோ தக்ஷோ விச்’ராமோ விச்’வதக்ஷிண: ||45

விஸ்தார: ஸ்த்தாவரஸ்தாணு: ப்ரமாணம்‌ பீஜ மவ்யயம்‌ |
அர்த்தோ(அ)னர்த்தோ மஹாகோசோ மஹாபோகோ மஹாதன: ||46

அநிர்விண்ண: ஸ்த்தவிஷ்டோ(அ)பூர்‌- தர்மயூபோ மஹாமக: |
நக்ஷத்ரநேமிர்‌-நக்ஷத்ரீ க்ஷம: க்ஷாம: ஸமீஹன: ||47

யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யச்’ச க்ரது: ஸத்ரம்‌ ஸதாங்கதி: |
ஸர்வதர்சீ’ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞானமுத்தமம் ||48

ஸுவ்ரத: ஸுமுக: ஸூக்ஷ்ம: ஸுகோஷ: ஸுகத: ஸுஹ்ருத் |
மநோஹரோ ஜிதக்ரோதோ வீரபாஹுர்‌ விதாரண: ||49

ஸ்வாபன: ஸ்வவசோ’ வ்யாபீ நைகாத்மா நைககர்மக்ருத்‌ |
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்னகர்ப்போ தனேச்’வர: ||50

தர்மகுப்‌ தர்மக்ருத்‌ தர்மீ ஸ-தஸத்க்ஷரமக்ஷரம்‌ |
அவிஜ்ஞாதா ஸஹஸ்ராம்சு’ர்-விதாதா க்ருதலஷண: ||51

கபஸ்திநேமி: ஸத்வஸ்த்த: ஸிம்ஹோ பூதமஹேச்’வர: |
ஆதிதேவோ மஹாதேவோ தேவேசோ’ தேவப்ருத்‌ குரு: ||52

உத்தரோ கோபதிர்‌ கோப்தா க்ஞானகம்ய: புராதன: |
ச’ரீரபூதப்ருத்‌ போக்தா கபீந்த்ரோ பூரிதஷிண: ||53

ஸோமபோ(அ)ம்ருதப: ஸோம: புருஜித்‌ புருஸத்தம: |
விநயோ ஜய: ஸத்யஸந்தோ தாசா’ர்ஹ: ஸாத்வதாம்‌ பதி: ||54

ஜீவோ விநயிதா ஸாக்ஷீ முகுந்தோ(அ)மிதவிக்ரம: |
அம்போநிதிரனந்தாத்மா மஹோததிச’யோ(அ)ந்தக: ||55

அஜோ மஹார்ஹ: ஸ்வாபாவ்யோ ஜிதாமித்ர: ப்ரமோதன: |
ஆனந்தோ நந்தனோ நந்த: ஸத்யதர்மா த்ரிவிக்ரம: ||56

மஹா்ஷி: கபிலாசார்ய: க்ருதஜ்ஞோ மேதினீபதி: |
த்ரிபதஸ்த்ரிதசா’த்யக்ஷோ மஹாச்’ருங்க: க்ருதாந்தக்ருத் ||57

மஹாவராஹோ கோவிந்த: ஸுஷேண: கனகாங்கதீ |
குஹ்யோகபீரோ கஹனோ குப்தச்’‌ சக்ர கதாதர: ||58

வேதா: ஸ்வாங்கோ(அ)ஜித: க்ருஷ்ணோ த்ருட: ஸங்கர்ஷணோ(அ)ச்’யுத: |
வருணோ வாருணோ வ்ருக்ஷ: புஷ்கராக்ஷோ மஹாமனா: ||59

பகவான்‌ பகஹா(அ)நந்தீ வநமாலீ ஹலாயுத: |
ஆதித்யோ ஜ்யோதிராதித்ய: ஸஹிஷ்ணுர்கதிஸத்தம: ||60

ஸுதன்வா கண்டபரசுர்‌ தாருணோ த்ரவிணப்ரத: |
திவஸ்ப்ருக்‌ ஸர்வத்ருக்‌வ்யாஸோ வாசஸ்பதிரயோநிஜ: ||61

த்ரிஸாமா ஸாமக: ஸாம நிர்வாணம்‌ பேஷஜம்‌ பிஷக் |
ஸந்யாஸக்ருச்‌சம: சா’ந்தோ நிஷ்ட்டா சா’ந்தி: பராயணம்‌ ||62

சு’பாங்க: சா’ந்தித: ஸ்ரஷ்டா குமுத: குவலேச’ய:
கோஹிதோகோபதிர்‌ கோப்தா வ்ருஷபாக்ஷோ வ்ருஷப்ரிய:||63

அநிவர்த்தீ நிவ்ருத்தாத்மா ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: | 
ஸ்ரீவத்ஸவஷா: ஸ்ரீவாஸ: ஸ்ரீபதி: ஸ்ரீமதாம்‌ வர: ||64

ஸ்ரீத: ஸ்ரீச’: ஸ்ரீநிவாஸ: ஸ்ரீநிதி: ஸ்ரீவிபாவன: |
ஸ்ரீதர: ஸ்ரீகர: ச்’ரேய: ஸ்ரீமான் லோகத்ரயாச்’ரய: ||65

ஸ்வக்ஷ: ஸ்வங்க: ச’தானந்தோ நந்திர்‌ஜ்யோதிர்கணேச்’வர: | விஜிதாத்மா(அ)விதேயாத்மா ஸத்கீர்த்திச்’‌ சின்னஸம்ச’ய : ||66

உதீர்ண: ஸர்வதச்’சக்ஷு ரனீச’: சா’ச்வதஸ்த்திர: |
பூச’யோ பூஷணோ பூதிர்‌ விசோ’க: சோகநாச’ன: ||67

அர்ச்சிஷ்மானர்ச்சித: கும்போ விசு’த்தாத்மா விசோ’தன: |
அநிருத்தோ(அ)ப்ரதிரத: ப்ரத்யும்னோ(அ)மிதவிக்ரம: ||68

காலநேமிநிஹா வீர: செள’ரி: சூ’ர ஜனேச்’வர: |
த்ரிலோகாத்மா த்ரிலோகேச’: கேச’வ: கேசி’ஹா ஹரி: ||69

காமதேவ: காமபால: காமீ காந்த: க்ருதாகம: |
அநிர்தேச்’யவபுர்‌ விஷ்ணுர்‌ வீரோ(அ)னந்தோ தனஞ்ஜய: ||70

ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத்‌ ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்மவிவர்த்தந: |
ப்ரஹ்மவித்‌ ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ ப்ரஹ்மஜ்ஞோ ப்ராஹ்மணப்ரிய: ||71

மஹாக்ரமோ மஹாகர்மா மஹாதேஜா மஹோரக: |
மஹாக்ரதுர்‌ மஹாயஜ்வா மஹாயஜ்ஞோ மஹாஹவி: ||72

ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம்‌ ஸ்துதி: ஸ்தோதாரணப்ரிய: |
பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்த்திரநாமய: ||73

மனோஜவஸ்‌ தீர்த்தகரோ வஸுரேதா வஸுப்ரத: |
வஸுப்ரதோ வாஸுதேவோ வஸுர்‌ வஸுமனா ஹவி: ||74

ஸத்கதி: ஸத்க்ருதி: ஸத்தா ஸத்பூதி: ஸத்பராயண: |
சூ’ரஸேனோ யதுச்’ரேஷ்ட: ஸந்நிவாஸ: ஸுயாமுன: ||75

பூதாவாஸோ வாஸுதேவ: ஸர்வாஸு நிலயோ(அ)னல: |
தர்ப்பஹா தர்ப்பதோத்ருப்தோ துர்த்தரோ(அ)தா(அ)பராஜித: ||76

விச்’வ மூர்த்திர்‌-மஹா மூர்த்திர்‌-தீப்தமூர்த்தி-ரமூர்த்திமான்‌ |
அநேகமூர்த்தி-ரவ்யக்த: ச’தமூர்த்தி: சதானன: ||77

ஏகோ நைக: ஸவ: க: கிம்‌ யத்தத்‌ பதமனுத்தமம் |
லோகபந்துர்‌ லோகநாதோ மாதவோபக்தவத்ஸல: ||78

ஸுவர்ணவர்ணோ ஹேமாங்கோ வராங்கச்’‌ சந்தனாங்கதீ |
வீரஹா விஷம: சூ’ன்யோ க்ருதாசீ’ரசலச்’‌ சல: ||79

அமானீமானதோ மான்யோ லோகஸ்வாமீ த்ரிலோகத்ருக் |
ஸுமேதா மேதஜோ தன்ய: ஸத்யமேதா தராதர: ||80

தேஜோவ்ருஷோ த்யுதிதர: ஸர்வச’ஸ்த்ரப்ருதாம்‌ வர: |
ப்ரக்ரஹோ நிக்ரஹோவ்யக்ரோ நைகச்’ருங்கோ கதாக்ரஜ: ||81

சதுர்‌மூர்த்திச்‌ சதுர்ப்பாஹுச்‌ சதுர்வ்யூஹஸ்சதுர்கதி: |
சதுராத்மா சதுர்ப்பாவச்‌ சதுர்வேத விதேகபாத்‌ ||82

ஸமாவர்த்தோ(அ)நிவ்ருத்தாத்மா துர்ஜயோ துரதி க்ரம: |
துர்லபோ துர்கமோ துர்க்கோ துராவாஸோ துராரிஹா ||83

சு’பாங்கோ லோகஸாரங்க: ஸுதந்துஸ்தந்துவர்த்தன: |
இந்த்ரகர்மா மஹாகர்மா க்ருதகர்மா க்ருதாகம: ||84

உத்பவ: ஸுந்தர: ஸுந்தோ ரத்நநாப: ஸுலோசன: |
அர்க்கோ வாஜஸனச்’ருங்கீ ஜயந்த்த: ஸர்வவிஜ்ஜயீ ||85

ஸுவர்ணபிந்து ரக்ஷோப்ய: ஸர்வ வாகீச்’வரேச்’ வர: |
மஹாஹ்ரதோ மஹாகர்த்தோ மஹாபூதோ மஹாநிதி: ||86

குமுத: குந்தர: குந்த: பர்ஜன்ய: பாவனோ(அ)நில: |
அம்ருதாம்சோ(அ)ம்ருதவபு: ஸர்வஜ்ஞ: ஸர்வதோமுக: ||87

ஸுலப: ஸுவ்ரத: ஸித்த: ச’த்ருஜிச்‌-ச’த்ருதாபன: | நயக்ரோ
தோதும்பரோ(அ)ச்வத்த ச்சாணூராந்த்ர நிஷூதன: ||88

ஸஹஸ்ரார்ச்சி: ஸப்தஜிஹ்வ: ஸப்தைதா: ஸப்தவாஹன: | அமூர்த்திரனகோ(அ)சிந்த்யோ பயக்‌ருத்‌ பயநாசன: ||89

அணுர்‌ ப்ருஹத்‌ க்ருச’: ஸ்த்தூலோ குணப்ருந்‌நிர்குணோமஹான்‌ |
அத்ருத: ஸ்வத்ருத; ஸ்வாஸ்ய: ப்ராக்வம்சோ வம்சவர்த்தன: ||90

பாரப்ருத்‌ கதிதோ யோகீ யோகீச’: ஸர்வகாமத: |
ஆச்’ரம: ச’ரமண: க்ஷாம: ஸுபர்ணோ வாயுவாஹன:||91

தனுர்த்தரோ தனுர்வேதோ தண்டோ தமயிதாதம: |
அபராஜித: ஸர்வஸஹோ நியந்தா(அ)நியமோ(அ)யம: ||92

ஸத்வவான் ஸாத்விக: ஸத்ய: ஸத்யதர்ம பராயண: |
அபிப்ராய: ப்ரியார்ஹோ(அ)ர்ஹ: ப்ரியக்ருத்‌ ப்ரீதி வர்த்தன: ||93

விஹாயஸகதிர்‌-ஜ்யோதி: ஸூருசிர்‌-ஹுதபுக்‌ விபு: |
ரவிர்விரோச’ன: ஸூர்ய: ஸவிதா ரவிலோசன: ||94

அனந்தோ ஹுதபுக்‌போக்தா ஸுகதோ நைகஜோ(அ)க்ரஜ: |
அதிர்விண்ண: ஸதாமர்ஷீ லோகாதிஷ்ட்டானமத்புத: ||95

ஸநாத்‌ ஸநாதனதம: கபில: கபிரவ்யய: |
ஸ்வஸ்தித: ஸ்வஸ்திக்ருத்‌ ஸ்வஸ்தி ஸ்வஸ்திபுக்‌ ஸ்வஸ்தி தக்ஷிண: ||96

அரெளத்ர: குண்டலீ சக்ரீ விக்ரம்யூர்ஜிதசாஸன: |
ச’ப்தாதிக: ச’ப்தஸஹ: சி’சிர: ச’ர்வரீகர: ||97

அக்ரூர: பேசலோ தக்ஷோ தக்ஷிண: க்ஷமிணாம்வர: |
வித்வத்தமோ வீதபய: புண்யச்’ரவண கீர்த்தன: ||98

உத்தாரணோ துஷ்க்ருதிஹா புண்யோ து: ஸ்வப்னநாசன: |
வீரஹா ரக்ஷண: ஸந்தோ ஜீவன: பர்யவஸ்த்தித: ||99

அனந்தரூபோ(அ)னந்தஸ்ரீர்‌ ஜித மன்யுர்‌ பயாபஹ: |
சதுரச்’ரோ கபீராத்மா விதிசோ’ வ்யாதிசோ’ திச’: ||100

அனாதிர்‌ பூர்ப்புவோ லக்ஷ்மீ: ஸுவீரோ ருசிராங்கத: |
ஜனனோ ஜன்ஜன்மாதிர்‌ பீமோ பீமபராக்ரம: ||101

ஆதாரநிலயோ(அ)தாதா புஷ்பஹாஸ: ப்ரஜாகர: |
ஊர்த்வக: ஸத்பதாசார: ப்ராணத: ப்ரணவ: பண: ||102

ப்ரமாணம்‌ ப்ராணநிலய: ப்ராணப்ருத்‌ ப்ராணஜீவன: |
தத்வம்‌ தத்வவிதேகாத்மா ஜன்மம்ருத்யு ஐராதிக: ||103

பூர்ப்புவ: ஸ்வஸ்தருஸ்‌தார: ஸவிதா ப்ரபிதாமஹ: |
யஜ்ஞோ யஜ்ஞபதிர்‌ யஜ்வா யஜ்ஞாங்கோ யஜ்ஞவாஹன: ||104

யஜ்ஞப்ருத்‌யஜ்ஞக்ருத்‌ யஜ்ஞீ யஜ்ஞபுக்‌-யஜ்ஞஸாதன: |
யஜ்ஞாந்தக்ருத்‌-யஜ்ஞகுஹ்ய-மன்ன-மன்னாத ஏவ ச ||105

ஆத்மயோனி: ஸ்வயம்ஜாதோ வைகாந: ஸாமகாயன: |
தேவகீ நந்தன: ஸ்ரஷ்டா க்ஷிதீச’: பாபநாச’ன: ||106

ச’ங்கப்ருந்நந்தகீ சக்ரீ சா’ர்ங்கதன்வா கதாதர: |
ரதாங்கபாணி ரக்ஷோப்ய: ஸர்வ ப்ரஹரணாயுத: ||107

ஸர்வ ப்ரஹரணாயுத ஒம்‌ நம இதி
வனமாலீ கதீ சா’ர்ங்கீ ச’ங்கீ சக்ரீ ச நந்தகீ |
ஸ்ரீமான்நாராயணோ விஷ்ணுர்‌ வாஸுதேவோ(அ)பிரக்ஷது || 108