பொங்கலும் உழவனும்

பொங்கல் காலத்தில் உழவன் சூத்திரன் அவனை ஆரிய பாசிசம் அடக்கி ஒடுக்கி வைத்தது, அவனுக்கு பூனூல் இல்லை அவனுக்கு வேதமில்லை அவனுக்கு எதுவுமில்லை , அப்படியான ஜாதி கொடுமைகளை இந்துமதமும் வைதீக ஆரிய பாசிசமும் புகுத்தின என சொல்லும் கும்பல் பல உண்டு

அவைகள் வழக்கம்போல் சூத்திரன் உழவன் என பொங்கி கொண்டிருக்கின்றன‌

May be an image of 1 person

உண்மையில் ஏன் உழவனுக்கு பூனூல் இல்லை, சாஸ்திரமில்லை அவனுக்கு வேதங்களும் யாகமும் அவசியமில்லை என்றால் அவனுக்கு இச்சமூகம் கொடுத்த உயர்ந்த இடம் அப்படி

சூத்திரன் என்பதை மிக உயர்வாக “பிரம்ம சூத்திரம்” அதாவது உலக இயக்கம் என வேதவடிவினை சொன்ன மதமே, நிலத்தில் உழைப்பவனை சூத்திரன் என்றது

அதாவது இந்த உலகத்தையே அவன் தான் இயக்குகின்றான், உழவனே இந்த உலகுக்கு உணவிட்டு இயக்குகின்றான் என்பதை தெளிவாக சொல்லி அவனை உயர்த்தும் விதமாகவே சூத்திரன் என அழைத்தது

உழவனுக்கு பூனூல் இல்லை, வேத மந்திரங்கள் இல்லை என பல விலக்குகள் ஏன் கொடுத்தார்கள் என்றால் காரணம் இல்லாமல் அல்ல‌

அவன் வாழ்வு மட்டும்தான் சூரியனோடே நடக்கின்றது, அதிகாலை தொடங்கி சூரியனோடு அதன் வெளிச்சத்தில் நிற்பவன் அவனே, நின்று இந்த உலகுக்கு உணவு கொடுத்து காப்பது அவனே

இதனால் அவனை பிரம்மனை சூத்திரதாரி என்பது போலவே, படைப்பினை செய்யும் உழவனையும் சூத்திரன் என்றது இந்துமதம்

பூனூலும் சந்தியா வந்தனமும் சூரிய நமஸ்காரமும் இன்னும் பல வேத அனுஷ்டாங்களும் பிராமணர்க்கு மட்டுமல்ல, மற்ற மூன்று குலத்துக்கும் உண்டு

ஆனால் உழவனுக்கு அது அவசியமில்லை என விலக்கு கொடுக்கபட்டது

காரணம் அவன் சூரியனோடே காலமெல்லாம் வாழ்கின்றான், ஒவ்வொரு நொடியினையும் சூரியனை பார்த்தே கழிக்கின்றான் இதனால் அவனுக்கு பூனூல், சூரிய நமஸ்காரமெல்லாம் அவசியமே இல்லை என்றார்கள்

அதனால் உழவன் வர்ணாசிரமபடி சூத்திரன் அவனை விலக்கி வைத்தார்கள் என்பதெல்லாம் அபத்தமான குழப்பமான பிரிட்டிஷார் வாதம்

அது இங்கே ஈரொட்டில் தயாரிக்கபட்டு காஞ்சிபுரத்தில் விற்பனைக்கு வந்து பின் கோபாலபுரத்தில் செல்வமாய் குவிந்த வியாபாரமாய் இருக்கலாமே தவிர உண்மை அல்ல‌

வர்ணம் என்றால் என்ன?

நான்வகை வர்ணத்தையும் நானே படைத்தேன் என கீதையில் கண்ணன் சொன்னான்

அது பிறப்புவழி வர்ணம் அல்ல, தொழில்வழி வர்ணம் எனும் பிரிவு

சிந்திப்போர், காவல்வீரர், வியாபாரிகள், உழைப்போர் என நான்குவகை பிரிவுகள் எக்காலமும் உலகில் உண்டு, இதனை யாரும் மாற்றமுடியாது

காலத்துக்கு ஒரு பெயர் இந்த பிரிவுக்கு வருமே தவிர இந்த பிரிவுகள் எக்காலமும் இருக்கும் இது நியதி

அவ்வகையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இப்போது பார்ப்பனர்கள் அதுதான் நிஜம், கீதை சொல்லும் தத்துவமும் அதுதான்

கீதை மானிட தொழில் அடைப்படையில் வர்ணம் சொன்னதே தவிர பிறப்பால் வரும் சாதியினை சொன்னதே இல்லை

இதுதான் மூல மனுநீதியில் உண்டு, இப்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் கூட்டத்தை காணும்போது வரும் சிந்தனையும் அதுதான்

அன்று அவர்கள் பெயர் பார்ப்பனர்கள் இன்று விஞ்ஞானிகள்

காலந்தோறும் எல்லா காலத்துக்கும் பொருந்திவரும் தத்துவம் இந்துமத தத்துவம் மட்டுமே, அதன் இயல்பு அப்படியானது அதனால்தான் யுகங்களை கடந்தும் அது நிலைத்து கொண்டிருக்கின்றது

கீதை மட்டுமல்ல எல்லா சாஸ்திரங்களும், உபநிஷங்களும் வேதங்களும் ஒருவித கவிதைநடையில் சுருக்கமாக எழுதபட்ட தத்துவங்கள்

அவ்வகையில் வர்ணாஸ்சிரமம் எனும் சொற்பதம் வர்ணம்+ஆஸ்ரமம் என பிரியும்

வர்ணம் என்றால் நிறம், ஆஸ்ரமம் என்றால் மூலம் என பொருள்

இங்கே பிரிவு, சாதி என சொல்லாமல் வர்ணம் என ஒன்றை கண்ணன் ஏன் சொன்னான் என்றால் விஷயம் இல்லாமல் இல்லை

இந்த பூமியின் இயக்கம் நான்கு வகை நிறத்தினை ஒட்டி வருகின்றது, அதன் படைப்பும் இயக்கமும் அதைத்தான் சார்ந்து வருகின்றது

வெள்ளை, சிகப்பு, பழுப்பு (பிரவுண்) , கருப்பு எனும் நான்கு வகை மண் வகையினையும், அந்த மண்ணின் தன்மையில்தான் மனிதர்கள் பிரிவும் உண்டு என்பதை பழைய சாஸ்திரங்கள் சொல்கின்றன‌

அந்த தத்துவ குறியீட்டைத்தான் கண்ணன் கீதையின் மானிட பிரிவுகளாக வர்ணம் என குறிப்பிட்டான்

வெள்ளை மண் என்பது தூய்மையினை நல்ல அறிவினை குறிப்பது, வெண்மை என்பது தூய்மையின் அடையாளமாக கருதபட்ட பூமி இது

வெண்மை என்பது அறிவுடமையின் அடையாளமானது, கற்றோர்களும் நல்லோரும் வெண்ணிற ஆடை அணிவதை குறியீடாக கொண்டிருந்தார்கள், வெண்கொற்ற கொடை கூட குறிப்பது அதைத்தான்

கவனியுங்கள் அரசபதவி ஷத்திரியனுக்கானது பிராமனனுக்கானது அல்ல அங்கும் வெண்மை நிறமே காட்டபட்டது, அறிவோடு ஆளவேண்டும் என சொன்னது

அறிவுக்குரிய கிரஹமான சுக்கிரன் கூட வெண்மை நிறமாகவே காட்டபட்டது

இதனால் அறிஞர்கள், சான்றோர்கள,அறிவில் சிறந்தோரை குறிக்க வெள்ளை எனும் வர்ணத்தை சொன்னார்கள் அது பிராமணர் எனும் அறிவில் சிறந்தோரையும் அதாவது நல்ல தூய அறிவினை குறிக்கும் நிறமாயிற்று

செம்மண் என்பது வீரத்தை குறிப்பது, யுத்த பூமியின் நிறம் அது. ரத்த சிகப்பினை சொல்லும் தத்துவம் அது , போர்கடவுளான முருகனை செந்தூரான் என சொல்வதும், செந்தூரில் அவருக்கு ஆலயம் இருப்பதும் அந்த தத்துவமே

ஆம் சேனைகளுக்குரிய நிறம் சிகப்பு அதைத்தான் சத்தியருக்கு அடையாக்கினார்கள்

பழுப்பு அல்லது பிரவுண் நிறம் பாலையினை குறிப்பது, அங்கு ஏதும் விளையாது மாறாக எங்கிருந்தாவது வியாபாரிகள் அங்கு பொருளை கொண்டுவர வேண்டும் அல்லது அதனை கடக்க வேண்டும் என்பதால் அது வைசிக குறியீடாயிற்று

கருப்பு என்பது வண்டல்மண் தத்துவம், களிமண் தத்துவம். அங்கிருந்துதான் நெல் முதல் எல்லா உணவும், செங்கல் முதல் எல்லா வகையும் இன்னும் பலவும் வருகின்றன‌

(இன்று சிலிகான் யுகத்தின் அடிப்படையும் இவ்வகை மண்ணில் இருந்துதான் வருகின்றது, கணிணி போன் சிப்புகளின் உருவாக்கம் மண்ணில் இருந்துதான் வருகின்றது)

இப்படி நான்குவகை நிறத்தால் உலக இயல்புகளை சொல்வது இயல்பு, அந்த இயக்கம் அன்றே இந்துக்களால் நுணுக்கமாக அறியபட்டது

அப்படித்தான் நான்கு முக்கிய பிரிவுகளை அதாவது அறிவாற்றல், சேனை, வியாபாரம், உற்பத்தி என நான்கையும் நான்கு நிறங்களில் சொன்னார்கள்

அதுதான் வர்ணாஸ்ரம தர்மம் அன்றி வேறேதும் அல்ல‌

இந்த நான்கு நிறங்கள் என்பது மண்ணில் மட்டுமல்ல, மானிடர் இயக்கத்தில் மட்டுமல்ல, விலங்குகளில் கூட இந்நிறத்தை காணமுடியும்

பசு, காளை, நாய்கள், ஆடுகள் என எதெல்லாம் மானிடரோடு ஒட்டுமோ அந்த விலங்குகளெல்லாம் இந்த 4 நிறத்தில்தான் வரும்

வெள்ளை, கருப்பு, பழுப்பு, செந்நிறம் என 4 நிறங்களில்தான் வரும், இந்த 4 நிறத்தில்தான் குதிரைகளும் வரும், முன்பு யானை கூட இருந்தது

பின்பு கலப்பினத்தில் மாடுகள் ஆடுகள் நிறம் மாறியிருக்கலாம் என்றாலும், அடிப்படை நிறம் இந்த நான்குமே

அதே நிலைதான் மண்ணுக்கும் இருந்தது, அந்த மண்ணின் தன்மையில் மனிதர்கள் இயக்கமும் இருந்தது, மிக நுணுக்கமாக இதனை உற்றுபார்த்த இந்துமதம் அதனை பல இடங்களில் சுட்டிகாட்டியது

கீதையில் பகவான் கண்ணனும் இதைத்தான் சொன்னான்

எல்லா இயக்கமும் என்னிடம் இருந்தே உருவாகி நடக்கின்றன என்பதை கவித்துவமாக நான்குவகை வர்ணத்தையும் படைத்து இயக்குபவன் நானே என்றான்

அங்கு சாதி ஏற்றதாழ்வில் சொல்லவில்லை, உயர்ந்த தாழ்ந்த சாதிபாகுபாடு இல்லை, அப்படி நோக்கின் கண்ணனே அன்று தாழ்நிலையில் இருந்த குலத்தில் ஒருவனேதான்

ஆம், கீதையில் நால்வகை வர்ணம் என அன்றைய இந்துக்கள் உயிர்கள் இயக்கத்தை மண்ணோடும் அதன் தன்மையோடும் ஒப்பிட்டு இயற்கையின் இயக்கத்தோடு நான்கு வர்ணமாக‌ ஒப்பிட்டு சொன்னதைத்தான் கண்ணன் தன் போதனையில் சொன்னான

இந்துமதம் விவசாயிகள் எனும் பயிர்தொழில் செய்வோரை அவ்வளவு போற்றியது, கொண்டாடியது

ரிக் வேதம் முழுக்க பயிர்தொழிலை செய்வது பற்றி போதிக்கின்றது, அக்கால சமூகத்தில் உழவனை யாரும் ஒதுக்கி வைக்கவில்லை ஒவ்வொருவருகொருவர் சேர்ந்தே துணையாக இருந்தார்கள்

பிராமணன் விதைப்பு நாள் நேரம் பருவகாலத்தை கணித்து கொடுத்தான், இன்னும் மழை வறட்சி நோய் காலம் என எல்லாம் கணித்து கொடுத்தான் உழவனுக்கு அவன் உதவியாய் இருந்தான்

இதனாலே உழவர்களும் அறுவடை முடிந்ததும் அவனை ஆதரிப்பதில் சரியாக இருந்தார்கள், தானம் பெறும் பிராமணருக்கு அள்ளி கொடுத்தார்கள்

ஷத்திரியர்கள் பயிர்கள் கொள்ளை போகாமல் காத்தார்கள், அதற்குரிய கூலியினை பெற்றார்கள்

வியாபாரிகள் விவசாய பொருளை கொண்டு விற்று பணமாக்கி உழவனுக்கு கொடுத்தார்கள்

அரசன் உழவர்களின் வரியிலே வாழ்ந்தான் இதனாலே குளமும் ஏரியும் வயலுமாக அவர்களுக்கு அமைத்து கொடுத்தான்

எல்லா சமூகமும் கொண்டாடும் சமூகமாகத்தான் இந்த உழவர் சமூகம் இருந்தது, அதைத்தான் வள்ளுவன் அழகாக சொன்னான்

உழவு எனும் அதிகாரம் வைத்து சொன்னான்

“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”

என பத்துகுறள்களை உழவனை போற்றி எழுதினான்

வள்ளுவன் ஒரு தொழிலை சிறப்பித்து எழுதினான் என்றால் அது உழவு தொழில் ஒன்றைத்தான் எனில் அந்த தொழிலுக்கு இந்த சமூகம் கொடுத்த இடத்தை புரிந்துகொள்ளலாம்

இதைத்தான் “சீரைதேடின் ஏரை தேடு” என ஒரே வரியாக சொன்னாள் ஒளவையார்

உழவனுக்கு பூனூல் இல்லை, மந்திரம் இல்லை என்பவர்கள் அப்படி பார்ப்பன சாதி கொடுமை இருந்தது என்பவர்கள் உழவு தொழிலுக்கு “வேளான்மை” என்றொரு பெயர் இருப்பதை மறந்துவிடுவார்கள்

அவன் வேள்வி செய்கிகின்றான், உலகை காக்கும் பெரும் வேள்வியினை சூரியனோடு சேர்ந்து செய்கின்றான் அதனால் அவனுக்கு யாகமில்லை, வேள்வி இல்லை, பூனூல் இல்லை, மந்திரம் அனுஷ்டாகம் எதுவுமில்லை அவனும் பிரம்மனும் ஒன்று என வைத்திருந்த சமூகம் இது

அதனாலே அவனை வேளாளார் என கொணட்டிற்று, பின்னாளில் அது சாதிபெயராக திரிக்கபட்டாலும் உண்மையில் உழவு தொழிலை வேள்வியாக செய்ததற்காக உழவனுக்கு இருந்த பெயர்

இந்துமதம் உழவனை அப்படி கொண்டாடிற்று, அவனை தெய்வத்துக்கு நிகராக வைத்து சூத்திரன் படைப்பாளி உலகை தாங்குபவன் என பெரும் இடத்தில் வைத்து விலக்குகளை கொடுத்து தெய்வமென வணங்கிற்று

அந்த பெரும் சிறப்புகளைத்தான் சிலர் அறியாமல் புரியாமல் கொச்சைபடுத்திகொண்டிருக்கின்றார்கள், இந்துமதம் ஞானமதம் அது யாரையும் சாதி என பிரிக்காது யாரையும் பழிக்காது

உழவனை உலகம் இயக்கும் பிரம்மன் என அது போற்றி வேள்வி செய்யும் இறைவன் எனும் வகையில் வணங்கியது , எல்லா சமூகமும் அவனை வணங்கித்தான் நின்றது

உழவன் இங்கு எக்காலமும் கொண்டாடபட்டான், தைமாதம் அவனோடு சேர்ந்து எல்லோரும் கொண்டாடினார்கள்

இது உழவனுக்கான நாள் என்பதும் சரியல்ல‌

ஆம், ஒரு வருடம் முப்போகம் விளையும், ஒரு போகம் என்றால் நான்குமாதங்கள் , ஆக அறுவடை விழா என்றால் மூன்று பொங்கல் வருடத்துக்கு வரவேண்டும் அல்லவா?

அதுதான் சிந்திக்கதக்கது

உழவன் தைமாதம் விளைந்த விளைச்சலை பிராமணர்க்கு கொடுத்து நன்றி தெரிவித்தான், ஷத்திரியனுக்கு காவலாய் இருந்ததால் கொடுத்து நன்றி தெரிவித்தான், இன்னும் பொருளாக்கிகொடுத்ததால் வியாபாரிக்கும் நன்றி தெரிவித்தான்

உழவன் தானும் வாழ்ந்து எல்லோரையும் வாழவைத்தான் அதனாலே எல்லோரும் கொண்டாடினார்கள்

எல்லோரும் சேர்ந்து அவனை வாழவைத்தார்கள், அவன் எல்லோரையும் வாழவைத்தான் அப்படி ஒரு காலம் இருந்ததைதான் பொங்கல் விழா சொல்கின்றது

மற்றபடி சூத்திரன் என அவனை இந்துமதம் ஒதுக்கவில்லை அவனை தெய்வம் என கொண்டாடிற்று, அவன் அனுதினமும் எந்த சூரியனோடு உழைக்கின்றானோ அந்த சூரியனும் அவனும் தெய்வம் என அது கொண்டாடிய தத்துவமே பொங்கல் விழா