“பாரத ரத்னா” மதன்மோகன் மாளவியா
இந்துஸ்தானத்தில் அந்நியர் வந்துதான் கல்வி தந்தனர், மிகபெரும் கல்விசாலைகளை அவர்கள்தான் அமைத்தார்கள் என்றால் அது மடமை அல்லது மிகபெரிய மோசடி அரசியல்
இங்கு கல்வி இந்திய வாழ்வியலிலில் நில அளவியல், நீர் மேலான்மை, கணிதம், வானியல், வரி உள்ளிட்ட நிதியம் என எல்லா வகையிலும் இந்நாட்டின் கலாச்சாரபடி மிக மிக வளர்ந்துதான் இருந்தது
தமிழ்பேசும் பகுதியில் மட்டும் மூவாயிரம் குருகுலங்கள் இருந்தன என்கின்றன செய்திகள்
அந்த கல்விமுறைதான் இந்துஸ்தானை பொன் விளையும் பூமியாக மாற்றியது, இங்கு உலோகவியல் , நீர் மேலான்மை , வரி என எல்லா படிப்பும் எக்காலமும் உண்டு.
ஆப்கானியரின் தீராபோர்களில் ஊடே புகுந்து வஞ்சகமாக இந்நாட்டை பிரிட்டிசார் பிடித்தபின் அவர்கள் கலாச்சார கல்வி அவர்கள் மொழியில் புகுத்தபட்டு அவர்கள் நிர்வாகத்துக்கு ஏற்ப இங்கு எல்லாம் மாற்றப்பட்டது.
அதைத்தான் கல்வி தந்தான் பிரிட்டிஷ்காரன் என சில பதர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
லட்சம் கோடி என நம்மிடம் இருந்தது மில்லியன் பில்லியன் என்றானது. ஒரு கல் தொலைவு ஒரு கிமீ என்றானது, ஒரு குழி அல்லது ஒரு வேலி என்பது சில ஏக்கர்களாயின.
ஒரு படி என்பது ஒரு கிலோவானது, எல்லாமே அவன் ஆட்சிக்கு ஏற்ப மாறிற்றே தவிர, மொழி மாறிற்றே தவிர நம்மிடம் இல்லாதது அவனிடம் இல்லை.
அன்று முதலில் நம் மொழியினை படித்து வியாபாரம் செய்தவன் பின் ஆட்சி சிக்கியதும் நம்மை அவர்கள் மயப்படுத்த ஆரம்பித்தான் அது கலாச்சார ஒழிப்பு, மத ஒழிப்பு என பல வகைக்கு மாறிற்று.
புலிவாயில் தப்பி நரிவாயில் விழுந்தது போல ஆப்கானியருடனான போரின்வெற்றி இவர்கள் வலையில் விழ வைத்தது
ஆனால் தேசம் சோர்ந்துவிடவில்லை, அது போராடிற்று காலம் காலமாக போராடிற்று, ஏகபட்ட தலைவர்கள் வந்து ஒவ்வொரு சுடரை ஏற்றிகொண்டே இருந்தார்கள்
ஆம், இந்திய வரலாற்றில் எத்தனையோ மறக்கமுடியா மாமனிதர்கள் இருந்தனர், அவர்களில் இந்திய தேசியத்தையும் இந்து தேசியத்தையும் வளர்த்தவர்களெல்லாம் மறைக்கபட்டனர்
யாரெல்லாம் தேசம் பிரியவும் மதசார்பற்ற தன்மை என பாகிஸ்தானுக்கு உதவியும் செய்து இந்தியாவின் பெருமான்மை இந்துசமூகத்தின் நியாயமான கோரிக்கைகளை புறக்கணித்தார்களோ அவர்களெல்லாம் தேச அடையாளங்களாகினர்
யாரெல்லாம் இந்துக்களின் நியாயமான உணர்வுகளையும் வலிகளையும் சொன்னார்களோ அவர்களெல்லாம் “மத வெறியர்கள்” என்றானார்கள்
இந்த விசித்திரமான மனபான்மையில் பல உன்னத தலைவர்கள் மறைக்கபட்டார்கள், அதில் சாவர்கரும் உண்டு திலகரும் உண்டு இன்னும் பலரும் உண்டு. அந்த வரிசையில் முக்கியமானவர் மதன்மோகன் மாளவியா.
அவர் 1861ம் ஆண்டு இன்றைய அலாகாபாத்தில் பிறந்தவர், பக்திமிக்க இந்து குடும்ப பிறப்பு அவர், மாளவியா என்பது அவரின் சாதியல்ல, அவரின் முன்னோர்கள் மாவல் எனும் பிரதேசக்காரர்கள் என்பதால் அந்த பகுதியின் பெயரால் மாவலியாக்கள்
என அழைக்கபட்டனர் அது மாளவியா என்றாயிற்று
அவர் சமஸ்கிருதமும் ஆங்கிலமும் கசடற கற்றிருந்தார், கல்வி அவருக்கு எளிதாக வந்தது, இயல்பிலே பக்தியும் அறிவும் மிக்க அவர் எளிதாக ஆசிரிய பணியினை அடைந்தார் அதன் பின் சட்டம் படித்து வழக்கறிஞருமானார்
அன்றைய 19ம் நூற்றாண்டில் தேசவிடுதலையின் தீவிரபோக்குள்ளவர்களை ஆங்கில அரசு ஒடுக்க காந்தி கைக்கு போராட்டம் சென்றுவிட்டதால் காந்தியின் காங்கிரஸை தவிர வேறு அமைப்பு விடுதலைக்கு இல்லை, அதை மீறி இன்னொரு அமைப்பு வந்தால் காந்தி தடுப்பார் அல்லது பிடிட்டிசார் அழிப்பார்கள்
மக்கள் புரட்சியும் இந்தியாவுக்கு அமையாத ஒன்று என்பதால் காங்கிரஸேதான் ஒரே வழி, அக்கட்சியில் இணைந்தார் மாளவியா, பலமுறை ( 1909, 1918, 1930) காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார்
அவரின் வாழ்வும் சிந்தனையும் இந்த நாட்டுக்கானது, உலகின் மேல் பெரும் கவனத்தை கொண்டிருந்த அவர் உலகின் ஒவ்வொரு நல்ல விஷயமும் இந்தியாவினை தொடவேண்டும் என அன்றே விரும்பினார்
அந்நாட்களில் சாரணர் இயக்கம் உலகெல்லாம் பிரபலமானது, 1909ல் பெங்களூரில் அதை பிரிட்டானிய அரசு தொடங்கியபொழுது இந்தியாவுக்கு தனி சாரணர் இயக்கம் வேண்டும் அதுதான் இந்த மண்ணுக்கும் கலாச்சாரத்துக்கும் சரியானது என உணர்ந்து நீதிபதி விவியன் போஸ், மதன்மோகன் மாளவியா, இருதயநாத் குன்சுர், கிரிஜா சங்கர் பாஜ்பாய், அன்னி பெசண்ட் மற்றும் ஜார்ஜ் அருண்டேல் ஆகியோருடன் சேர்ந்து இந்திய சாரண இயக்கத்தை தொடங்கினார்
அது கூட்டுமுயற்சி என்பதாலும் பிரிட்டிஷ் அரசால் அது சில சிக்கல்களை சந்தித்தபொழுது சற்றும் தயங்காமல் “சேவா சமிதி” அமைப்பினை நிறுவினார்
இன்றிருக்கும் பல பாரதீய சேவை, இந்து சேவை அமைப்புகளுக்கெல்லாம் முன்னோடி இந்த “சேவா சமிதி”
தொடர்ந்து அவரின் இந்திய தேசிய முயற்சிகள் நடந்தன
இந்தியாவுக்கு இந்திய அடையாளங்களுடன் ஒரு பல்கலைகழகம் வேண்டும் அது இந்திய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மதத்தையும் காக்கவேண்டும் என துடித்தார், காரணம் தேசமெங்கும் பிரிட்டிஷாரின் பல்கலைகழகங்கள் பெருகின அதன் தாக்கம் இந்தியாவின் அடையாளத்தையே மாற்றும் அளவு இருந்தது
அவர் சுதாரித்தார், இனி இந்துக்களுக்கு ஒரு கல்விசாலை இல்லையென்றால் என்னென்ன விபரீதமெல்லாம் நிகழும் என்பதை கணித்து அவரே ஒரு பல்கலைகழகம் தொடங்கினார்
ஆம், இந்துக்களுக்காக இந்துமக்களுக்காக அந்த கலாச்சாரமும் பண்பாடும் காக்கபட ஒரு பல்கலை கழகத்தை காசியில் நிறுவினார்
அதுதான் இன்றிருக்கும் “பனாரஸ் இந்து பல்கலைகழகம்” அவர் நிறுவியது
அதன் பின்னர்தான் தேசமெங்கும் கல்விநிலைங்களில் இந்து அடையாளம் வேண்டும் எனும் விழிப்புணர்வே வந்தது, நாடெங்கும் “இந்து கல்லூரிகள்” பெருகின, தமிழ்நாட்டில் ஆதீனங்களும் மடங்களும் சில அரசர்களும் அதை செய்தனர்
நிச்சயம் முதல் இந்து கல்லூரி யாழ்பாணத்தில்தான் தொடங்கபட்டது, கல்வியில் அந்த இலங்கை இந்தியாவினை விட 100 ஆண்டு முன்னால்தான் இருந்தது, ஆனால் அந்த இந்து கல்விநிலையங்கள் இங்கும் வேண்டும் என முதலில் சொன்னது அவர்தான்
அக்காலத்தில் பிடிட்டிசார் அதிகாரத்தில் இந்திய பிரதிநிதிகளுக்கான சபை இருந்தது, இம்பீரியல் அசெம்ப்ளி என அதற்கு பெயர். அதில் இந்தியர்களுக்கு வாய்ப்பு என சொல்லி நவாப்களும் நிஜாம்களும் இருந்தனர்
அதில் வெகுசில இந்துக்களுக்கும் இடம் இருந்தது அதில் மாளவியாவும் ஒருவர்
காந்தியின் காங்கிரஸ் தன் போராட்டத்தை தீவிரபடுத்திய தொடக்ககாலங்களில் அவரும் இருந்தார், ஒத்துழையாமை இயக்கம் , சைமன் கமிஷன் எதிர்ப்பு வரை அவரும் பங்கேற்றார்
காந்திக்கும் அவருக்குமான முதல் முறுகல் கிலாபத் இயக்கத்தில் காங்கிரஸ் பங்குபெற்றதில் தொடங்கியது, அதுதான் மாளவியா காந்தியினையும் காங்கிரஸையும் புரிந்து கொள்ள ஏதுவுமாயிற்று
இந்த கிலாபத் இயக்கம் என்றால் என்ன? , அதனை ஒவ்வொரு இந்தியரும் புரிந்துகொள்ளுதல் நன்று
துருக்கி ஆட்டோமான் சுல்தானியமே உலகின் பலமான நாடாகவும் இஸ்லாமியரின் தாய்பூமியாகவும் இருந்தது, 600 ஆண்டுகள் அது இருந்தவரை இஸ்லாமிய மக்களுக்கு பெரும் சக்தியாய் அடையாளமாய் இருந்தது
அதுதான் இந்தியாவில் இந்து எழுச்சி வரும்போதெல்லாம் மிரட்டியது, பிரிட்டிஷ் ஆட்சி வந்தபோது கூட சிலர் துருக்கியரை அழைத்து மறுபடி சுல்தானிய ஆட்சி அமைக்கவேண்டும் என சொன்ன காலமெல்லாம் உண்டு
அப்படி இருந்த துருக்கி சுல்தானியத்தை முதல் உலகப்போரில் பிரிட்டிசார் வீழ்த்தினார்கள், அது வீழ்த்தபடாமல் இந்தியாவுக்கான அச்சுறுத்தல் முடியாது, காரணம் பிரிட்டிசார் வெளியேறியிருந்தால் அவர்கள்தான் மொகலாய தொடர்ச்சியாக இங்கே ஆள ஆட்களை அனுப்பியிருபபார்கள் இஸ்லாமிய சகோதரத்துவம் அப்படி
இப்படியான துருக்கியினை பிரிட்டிசார் உடைத்தபோது அதை செய்யகூடாது என இந்துஸ்தான இஸ்லாமியர்கள் பெரும் போராட்டம் செய்தனர், அதுதான் கிலாபத் இயக்கம்
துருக்கியில் என்ன நடந்தால் நமக்கென்ன? துருக்கியரால் இத்தேசம் 500 ஆண்டாக எவ்ளவு அழிவுகளை கண்டது என இந்துக்கள் சிந்திக்க, இஸ்லாமியரில் பலரோ துருக்கித்தான் இந்தியாவினை அடுத்து ஆளவேண்டிய தேசம் அது முக்கியம் என்பதுபோல் பொங்கினார்கள்
இங்கே காந்தி இந்த கிலாபத் இயக்கத்துக்கு ஆதரவாக இருந்தார், அப்போதுதான் அவருக்கும் பலருக்கும் முறுகிற்று, இந்த கிலாபத் இயக்கம்தான் ஜின்னாவின் கனவுக்கு முன்னோடி, காந்தி அதை எதிர்க்கவில்லை
இதனை கண்டித்துத்தான் பலர் காந்தியினை விட்டு நீங்கினார்கள், இந்து மகா சபா எல்லாம் இதன் பின்பே வந்தன, இக்கால கட்டத்தில்தான் மாளவியாவும் வெளிவந்தார்
அதன் பின் இந்தியருக்கான சமூகபணியில் இறங்கினார் மாளவியா, வட்டமேசை மாநாடு போன்றவற்றில் கலந்து கொண்டார்
இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் தலைவர் பொறுப்பு அவருக்கு வந்தது, அந்த பத்திரிகைக்கு பிடிட்டிசார் சிக்கலை கொடுத்தபொழுது பிர்லாக்கள் உதவியுடன் அதை சீர்படுத்தி நடத்தினார்
அவர் பிறப்பால் பிராமணர் ஆனால் பரிசுத்தமான இந்துமனம் அவருக்கு இருந்ததால் சாதி வேறுபாடுகளை களையபாடுபட்டார், சாதி என்பதை களையாவிட்டால் தேசம் பெரும் ஆபத்துக்களை நேர்கொள்ளும் என எச்சரித்தார்
இதனால் ஆலயநுழைவு போராட்டங்கள் சிலவற்றை முன்னெடுத்தார், சில தாழ்த்தபட்ட சாதிகள் இந்து ஆலயங்களில் நுழைய கூடாது எனும் தடை எல்லா ஆலயத்திலும் அல்ல சில ஆலயங்களில்தான் இருந்தன
அவர் தொடங்கி வைத்த ஆலய நுழைவுதான் மதுரை வரை எட்டி வைத்தியநாத அய்யர் எனும் பிராமணன் தலமையில் தேவர் பெருமான் பாதுகாப்புடன் தாழ்த்தபட்ட மக்கள் மதுரை ஆலயத்தில் நுழையும் வெற்றி எல்லாம் கொடுத்தது
இதே போராட்டம்தான் கேரள வைக்கமிலும் நடந்தது
உண்மையில் எல்லா சாதிக்கும் ஆலய நுழையும் உரிமை உண்டு என முதலில் சொன்னது மாளவியாதான்
தேசபோராட்டம் , சமிதி அமைப்புக்கள், இந்து பல்கலைகழகம், இந்து பத்திரிகை, சமூக நீதி போராட்டம் என மிகபெரிய திருப்பங்களை அவர் நாட்டுக்கு செய்தார்
கடைசிவரை நாடு, இந்திய தேசியம், இந்திய அடையாளம், இந்துத்துவம் என பாடுபட்ட அவர் 1946ல் மறைந்தார்
அவர் ஒன்றும் பெரும் பணக்காரர் அல்ல, அவரும் ஏழை பிராமணரே
தேசத்தின் பல அடையாளங்கள் சாஸ்திரி போல மாளவியா போல ஏழ்மையாகத்தான் பிறந்து படிப்பால் உயர்ந்தன
அந்த மாளவியா இந்து பல்கலைகழகம் அமைக்கபட்டபாடுகள் கொஞ்சமல்ல
பிரிட்டிஷ் அரசு இந்தியரின் வரியினை வாங்கியதே தவிர இதையெல்லாம் காதுகொடுத்தும் கேட்கவில்லை, கல்விச்சாலை அமைப்பது அரசர்களாலும் அரசுகளாலும் மட்டும் நடக்கும் விஷயம்
இதனால் இந்து பலகலைகழகம் என தெருதெருவாக பிச்சை எடுத்தார், ஒவ்வொரு காசாக சேமித்தார், அந்த பிச்சையில் காசி சுல்தானிடமும் கையேந்தினார்
சுல்தானோ அவரை நோக்கி செருப்பை வீசினான்
அந்த செருப்பை, தன் முகத்தில் விழுந்த அந்த செருப்பை மகிழ்வோடு எடுத்து வந்து சந்தையில் இது சுல்தானின் செருப்பு என ஏலமிட்டார்
சுல்தானின் செருப்பு ஏலத்துக்கு வந்ததை அறிந்து முகம் கோணினான் சுல்தான், சுல்தானின் செருப்பு வாங்க ஆளில்லை என்றாலோ சில காசுக்கு சென்றாலோ யாருக்கு அவமானம்?
இதனால் கொஞ்சம் தொகையினை கொடுத்து செருப்பை மீட்டு தன் மானம் காத்துகொண்டான்
அப்படியெல்லாம் அவர் அரும்பாடுபட்டு அமைத்த கல்லூரிதான் இன்று ஆசியாவின் மிகபெரிய கல்லூரி என அடையாளம் பெற்ற “பனாரஸ் இந்து கல்லூரி”
அது அவர் நினைவினை தாங்கி நிற்கின்றது
அவரின் “சேவா சமிதி”யின் தாக்கம் ஆலமராக எழுந்து இந்தியாவினை ஆள்கின்றது
இந்தியா எப்படி இருக்கவேண்டும் என அந்நாளைய நல்ல தலைவர்கள் விரும்பினார்களோ அந்த இந்தியா இப்பொழுதுதான் உருவாகியிருக்கின்றது
ஆம் மாளவியா போன்றோரின் கனவு இந்த இந்தியாதான்
இப்படிபட்ட மாளவியாவுக்கு சுதந்திர இந்தியாவில் என்ன அடையாளம் கொடுத்தது என்றால் அவரை அடியோடு மறைத்தது அப்படி ஒரு மனிதன் இருப்பதாகவே காட்டவில்லை
ஆம், வல்லபாய் பட்டேலுக்கே 1992ல்தான் பாரத ரத்னா கொடுத்தது அவர்கள் எப்படி மாளவியாவுக்கு கொடுப்பார்கள்?
2014ல் முதல் வேலையாக இந்த மாமனிதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கபட்டது, காங்கிரஸ் எப்படியான பிரிட்டிஷார் விசுவாசத்தை காட்டி தேசாபிமானிகளை ஒதுக்கி வைத்தது என்றால் இப்படித்தான்
இன்று (25/12) அந்த மாளவியா பிறந்த நாள். அந்த மாமனிதன் தேசமாமணி மாளவியா பிறந்த நாளே இந்நாட்டின் கல்வி நாளாக அறிவிக்கப்பட வேண்டும்.
இந்து கல்வி நிறுவணத்தை முதலில் அமைத்து பெரும் எழுச்சிக்கு வழிசெய்த அவர் நினைவாக இத்தேசம் இதை செய்யும் என நம்புகின்றோம்
இன்று பாரதம் சிலிர்த்தெழுகின்றது, காசி சீரமைக்கபட்டு அயோத்தி மீண்டெழுகின்றது
இந்தியர்கள் இந்துக்களாக அமெரிக்காவில் ஐரோப்பாவில் பெரும் படிப்பும் பட்டமும் கொண்டு பெரும் பதவியில் இருக்கின்றார்கள்
அமெரிக்காவில் நவீன அக்ரஹாரங்கள் பெருகிகொண்டிருகின்றன
இதெல்லாம் அவரின் கனவு, அந்த எளிய ஏழை இந்துவின் பெருங்கனவு
எதிர்கால இந்தியவுக்கு படிப்பு கட்டாயம் வேண்டும், ஆனால் இந்து பாரம்பரியத்தில் இந்துக்களாக அவர்களை உணரவைத்து இந்துக்களாக வாழவைக்கும் கல்விதான் வேண்டும், இந்து உணர்வில்லாத கல்வியில் சிக்கிவிட கூடாது என கையேந்தி யாசகம் வாங்கி, செருபடியெல்லாம் பட்டு அதனை எல்லாம் அமைதியாய் கடந்து இந்துக்களுக்கு கல்வி எப்படியானதாக இருக்கவேண்டும் என காட்டி சென்ற பெருமகன் அவர்
இந்து கல்லூரிகளும் இந்து கல்வியும் எப்படியானவர்களை உருவாக்கமுடியும் என்பதைத்தான் இன்று சுந்தர் பிச்சை, ரிஷி சுணக், மோடி, விவேக் ராமசாமி வடிவில் உலகம் காண்கின்றது
இந்த இந்துக்களின் வெற்றிக்கு பின்னால் இந்த இந்திய கலாச்சார முகங்களுக்கு பின்னால் மவுனமாக உயர்ந்து புன்னகைக்கின்றார் அந்த மாமனிதன்
இந்துக்களும் தேசாபிமானிகளும் மறக்கமுடியாத மறக்க கூடாத வழிகாட்டி அவர், அவர் விரும்பியபடியே ஒரு நாள் இத்தேசம் பூரண இந்து கலாச்சார கல்வியினை ஒவ்வொரு இந்துவுக்கும் இலவசமாக் கொடுக்கும் அது நடந்தே தீரும்
வந்தே மாதரம், ஜெய் ஹிந்த்.