“மஹாவீர் சக்ரா” ஜஸ்வந்த்சிங் ராவத்
“ஆரியர் இருமின்! ஆண்கள்இங்கு இருமின்!
வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்!
மானமே பெரிதென மதிப்பவர் இருமின்!
ஈனமே பொறாத இயல்பினர் இருமின்!
தாய்நாட் டன்புறு தனையர் இங்கு இருமின்!
மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்!
புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்!
கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்!
ஊரவர் துயரில்நெஞ் சுருகுவீர் இருமின்!
சோர நெஞ்சிலாத் தூயவர் இருமின்!
தேவிதாள் பணியுந் தீரர் இங்கு இருமின்!
பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்!
உடலினைப் போற்றா உத்தமர் இருமின்!
கடல்மடுப் பினும்மனம் கலங்கலர் உதவுமின்!
வம்மினோ துணைவீர்? மருட்சிகொள் ளாதீர்””
நம்மினோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும்
புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்?
மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின்
இன்னருள் நமக்கோர் இருந்துணை யாகும்”
என்ற பாரதியின் வரிகளோடு உணர்ச்சியோடு போராடி நாட்டுக்காய் நல்லுயிர் ஈந்த அந்த வீரமகனின் நினைவு எக்காலமும் இங்கு நிலைபெற்ற ஒன்று, அவன் கொடுத்த எழுச்சித்தான் இன்று தேசத்தின் வடக்கு எல்லையில் அரணாய் நிற்கின்றது
இந்துஸ்தானின் காவல் வீரர்களில் வீரதிருமகன்களில் ராஜபுத்திரர்கள் முக்கியமானவர்கள், ஆயிரம் காலம் அன்னியர்களை ஆப்கானியர்களை அவர்கள்தான் தீவிரமாக எதிர்த்தார்கள்
அக்பர் ஜலாலுதீனின் வஞ்சகத்தில் வீழ்ந்தாலும் அவுரங்கசீப் காலத்தில் துணிச்சலாக அவனை எதிர்த்து அடித்து 27 ஆண்டுகள் போராடி அவனை வீழ்த்தியதில் அவர்களுக்கு பங்கு உண்டு
பிரித்த்விராஜ் சவுஹான் முதல் ராணா சங்கா, ராணா பிரதாப்சிங், மாவீரன் துர்க்காதாஸ் என பெரும் பெரும் பிம்பங்கள், வீர சிங்கங்கள் அங்கு உண்டு.
அந்த வரிசை என்றோ முடிந்தது அல்ல, மன்னர்காலத்தோடு மரித்தது அல்ல, அந்த உணர்வும் வீரமும் எக்காலமும் உண்டு
அது ஒவ்வொரு தலைமுறையிலும் தெரியும் , எக்காலமும் அப்படியான மாவீரர்கள் உண்டு, இந்த தேசத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம் அவர்கள் வெளிவந்து இந்துஸ்தான வீரபாரம்பரியத்தை வெளிகாட்டி தேசம் காப்பார்கள்
அது காலம் காலமாக நடக்கும், இந்துஸ்தானின் பெரும் வீரம் அப்படி
இந்துஸ்தானின் அடையாளம் அசோகர் அல்ல, பவுத்தமும் சமாதானும் அஹிம்சையும் அல்ல, அது குழப்பமும் கோழைத்தனமுமான கொள்கை, இந்துஸ்தானத்தின் அடையாளம் வீரம், மாபெரும் வீரம்
அந்த வீரதலைமுறையில் வந்து 1962ல் தன்னை வெளிகாட்டி தனி ஒருவனாக நின்று எல்லை காத்தவன் அந்த ஜஸ்வந்த்சிங் ராவத்.
இன்றும் சீனர்கள் அஞ்சி நடுங்கும் பெயர் அவனுடையது, அருணாசலபிரதேசத்தில் இன்றும் காவல் தெய்வமாய் நிற்கும் சிலை அவனுடையது
அவன் 1941ல் உத்திரகாண்டில் பிறந்தவன், 1960லே இந்திய ராணுவத்தில் இணைந்தவன்
அவனுக்கு 15 வயதானபோதே பாகிஸ்தான் யுத்தத்தில் சேரத் துடித்தான். ஆனால் குறிப்பிட்ட வயதில்லை என்பதால் 20 வயதில் சேர்க்கப்பட்டான்.
அதிகப்படிப்பில்லை, பலமொழி தெரியாது, ராணுவ பாடம் கற்றவனில்லை, படைகள் நடத்தும் அறிவோ அனுபவமோ இல்லை
ஆனால் நாட்டுபற்றும் பெரும் வீரமும் நிறைய இருந்தது
அந்த 1962 யுத்தம் அக்டோபர் 20ல் வெடித்தது, அது வெடிக்கவும் இந்தியா குழம்பவும் ஒரே காரணம் நேரு
அந்த யுத்தம் தேசாபிமான தலைவனிடம் சாஸ்திரியிடம் கொடுக்கப் பட்டிருக்க வேண்டும், அவர்தான் சரியானவர்.
ஆனால் நேரு கிருஷ்ணமேனன் எனும் தனக்கு உகந்த ஒரு அகம்பாவியிடம் கொடுத்தார் அவருக்கு நேருவுக்கு கூஜா தூக்குவதை தவிர எதுவும் தெரியாது
தளபதியாக கரியப்பா அனுப்பபட்டிருக்கவேன்டும் ஆனால் தன் மாளிகை விசுவாசி என்பதால் தாப்பர் என்பவரை நேரு அமர்த்தினார்
இந்த முதல்கோணல் முற்றிலும் கோணலாயிற்று, இந்திய ராணுவம் பற்றி அதன் அமைப்புபற்றி நேருவுக்கு கவலை ஆர்வம் இருந்ததே இல்லை தன்னை அகில உலக தலைவனாகவும் தான் அழைத்தால் உலகமே வரும் எனவும் கர்வத்தில் இருந்தார்
ஆனால் சீனா அடிக்கதொடங்கியதும் அவருக்கு விபரீதம் புரிந்தது, யாரும் இவரை எட்டிபார்க்கவில்லை
இவரின் அணிசேரா கொள்கை காரணமாக உலகநாடுகள் இந்தியா அடிவாங்கட்டும் என விட்டுவிட்டார்கள், வலுத்த சீன ராணுவம் பெரும் நவீன கருவிகளோடு வந்தது
அப்போது இந்தியாவிடன் நவீன ஆயுதமில்லை ஆனால் கம்யூனிச ரஷ்யா சீனாவுக்கு நுனுக்கமான ஆயுதங்களை வசதிகளை கொடுத்தது
தந்திரமான சைனா பனிகொட்டும் அக்டோபரில் படையெடுத்தது காரணம் இந்திய விரர்களுக்கு குளிர் ஆடை கூட கிடையாது என்பதை சீனா அறிந்திருந்தது
1962 அக்டோபர் 20ம் தேதி தொடங்கிய யுத்தம் நவம்பர் 18 வாக்கில் மோசமாகியிருந்தது, இனி அருணாசலபிரதேசத்தை சீனா பிடித்துகொள்ளும் எனும் நிலை உருவாகியிருந்தது
அக்சாய் சின் பக்கம் கைபற்றிய சீனா தவாங் நோக்கி விரைந்து கொண்டிருந்தது
அந்நேரம் அமெரிக்க கென்னடி இந்தியாவுக்கு ராணுவ கருவியும் உதவியும் அளித்திருந்தார், ஆனால் வந்துசேர சில நாட்களாகும்
இந்த சில நாட்களுக்குள் தவாங்கை முழுக்க பிடித்துவிட முனைந்தது சீனா
முடிந்தவரை போராடிய இந்திய கார்வால் ரெஜிமென்ட் எனும் படைபிரிவு வழங்கல் எனும் உணவில்லை, வெடிபொருள் இல்லை, குளிருக்கு தாக்குபிடிக்கும் ஆடை இல்லை என பின்வாங்கிற்று
அவர்கள் பின்வாங்கினால் அருணாணசல பிரதேசம் வீழும்
ஆனால் நேருவின் குழப்பமான நட்வடிக்கையால் குழப்பமான தலைவன் தளபதியால் இந்திய ராணுவம் பாதிக்கபட்டிருந்த நிலையில் வேறுவழியுமில்லை
அணிதலைவன் உத்தரவிட்டான், பின்வாங்கி செல்லும்படி சொல்லிவிட்டான் படைகள் திரும்ப தொடங்கின
ஆனால் அந்த ஜஸ்வந்த்சிங் தவித்தான், இன்னும் சில தினங்களில் அமெரிக்க ஆயுதமும் உதவியும் கிடைத்துவிடும் அல்லவா? உயிரை கொடுத்து இருநாட்கள் தாக்குபிடிப்போம் என்றான்
அவன் சொன்னதை யாரும் ஏற்கவில்லை உயிர்காகக் திரும்பி சென்றார்கள்
அவன் செல்லவில்லை துணிந்தான், கடைசி சப்பாத்தியினை மட்டும் கொடுத்துவிட்டு செல்லுங்கள் நான் காவல் இருக்கின்றேன் என அவ்ன் உரக்க கத்தினான்
அவன் உறுதிகண்டு திரிலோக் சிங் நெகி, கோபால் சிங் குசேன் எனும் இருவரும் அவனோடு வந்தார்கள்
இந்திய ராணுவத்தில் இருந்து தங்களை துண்டித்தார்கள் , தனியே வியூகம் வகுத்தார்கள்
முதலில் இவர்களிடம் நவீன ஆயுதமில்லை வெடிமருந்து இல்லை என்பதால் சீனர்களிடம் இருந்து அதனை கைபற்றி இந்திய எல்லைபக்கம் கொண்டுவர முடிவு செய்தார்கள்
அப்படி மூவரும் இரவில் சீன முகாமுக்குள் புகுந்து அவர்களின் நவீன துப்பாக்கிகளும் வெடிமருந்தும் குளிர் ஆடையும் அள்ளினார்கள்
அது சாகசம், இன்றுவரை நம்பமுடியா அதிசயம்
காரணம் அதுவரை சோவியத் ஆயுதம் இந்தியருக்கு தெரியாது, நவீன துப்பாக்கி தெரியாது, ஏகே 47 போன்ற ரகம் புரியாது, இயக்க தெரியாது
ஆனால் முடிந்தவரை வேகமாக இயக்க கற்றார்கள், நொடியில் கற்றார்கள் சீனர்களை அவர்கள் ஆயுதத்தாலே சுட்டுதள்ளிவிட்டு பொருட்களோடு தப்பினார்கள்
ஆனால் சீன ராணுவம் சுதாரித்தது
அந்த பனிமலையில் ஜஸ்வந்த்சிங்கு கோப்பால் சிங்கும் தரையில் ஊர்ந்தபடி தப்பிக்க சீன வீரர்களுக்கு போக்கு காட்ட தனியே ஓடினான் திரிலோக் சிங்
அவன் அப்படி ஓடி சீனர் கவனத்தை திசைதிருப்பியதில் இவர்கள் ஊர்ந்தே தப்பினார்கள், ஆனால் திரிலோக் சிங்கை சீனர்கள் சுற்றிவளைத்து சுட்டுகிகொன்றார்கள்
தப்பி வந்தவர்கள் முடிந்த அளவு அள்ளிவந்த ஆயுதங்களை வெடிபொருட்களை கொண்டு பதுங்குகுழிகளில் பொருத்தினார்கள் இடை வெளிவிட்டு நின்று கொண்டார்கள்
1962 நவம்பர் 15ம் தேதி ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து பதுங்கி இருந்து தாக்கினார்கள், ஆனால் ஒரே இடத்தில் இருந்து தாக்காமல் ஓடி ஓடி மறைவாய் ஓடி தாக்கியதில் ஏகபட்ட வீரர்கள் இருபப்து போல் ஒரு பிரம்மை சீனருக்கு ஏற்பட்டது
இந்தியா பெரும்படையோடு இருப்பதாக நினைத்து பம்மினார்கள், ஆனாலும் தாக்குதல் தொடர்ந்தார்கள்
அவர்கள் தாக்குதலில் திரிலொக் பலியானான், ஜஸ்வந்த் மட்டும் தப்பினான்
அவன் தனியே போராட துணிந்தான், இரவில் சீன தாக்குதல் குறைக்கபட்டு அவர்கள் முன்னேற தயங்கி குழம்பி நின்றபோது அருகிருக்கும் கிராமங்களுக்கு ஓடி நிலமையினை விளக்கி தேசம் காக்க கெஞ்சினான்
கிராமத்து பெண்கள் இருவர் முன்வந்தார்கள், இன்னும் சிலர் உணவும் உதவியும் செய்தார்கள்
அந்த இரவிலே அப்பெண்கள் உதவியோடு அவர்களுக்கு சில பயிற்சியும் கொடுத்து போரை தொடங்கினான் ஜஸ்வந்த்
கடும் குளிர் யாருமற்ற நிலை எதிரே நிற்பதோ மாபெரும் சீனராணுவம் ஆனால் வீரமும் நாட்டுபற்றும் அவனை போராடவைத்தன
நவம்பர் 15ல் அவனின் கடைசிபோர் வீரமாகத் தொடங்கியது
பதுங்குகுழி மறைவிடத்தில் இருந்து பெண்கள் சுட்டு இலக்கில்லாமல் சுட தெரியாமல் சுட்டு குறைந்தபட்டசம் துப்பாக்கியினை வெள்காட்டி மிரட்ட தனி ஆளாக போராடினான் ஜஸ்வத் சிங்’
இருநாட்கள் அவன் உண்ணவில்லை உறங்கவில்லை
மாறக சரியான இடத்தில் நிலையெடுத்து சீனர்களை சுட்டு தள்ளிகொண்டே இருந்தான், அவனின் போர் மூன்றாம் நாளை தொட்டது
உணவில்லை உறக்கமில்லை எனினும் தளராமல் போராடினான், சீனர்களோ பெரும் இந்திய ராணுவம் வந்திருப்பதாக கருதி உளவாளிகளை இறக்கிவிட்டனர்
இரு நாட்களில் அமெரிக்க உதவி கிடைத்தது ஆனால் இந்திய ராணுவம் யுத்தம் நின்றதாக கருதிய நிலையில் யார் எல்லையில் யுத்தம் செய்கின்றார்கள் என ஆச்சரியமாக கண்டது
ஆம், தன் துருப்புக்கள் செத்திருக்கலாம் அலல்து சீனரிடம் கைதாகியிருக்கலாம் என கருதி இந்திய ராணுவம் நினைத்த நிலையில் இன்னும் நார்துங் பக்கம் யுத்தம் நடக்கின்றது சீனாவால் உள்ளே வரமுடியவில்லை எனும் செய்தி இந்திய ராணுவத்தை அதிசயிக்க் செய்தது
இருநாட்களுக்குள் சீன உளவாளிகளும் இந்திய படை அங்கு இல்லை நாம் ஏமாந்துகொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்தது
ஆனால் இந்த மூன்று நாட்களுக்குள் சுமார் ஐநூறு சீன வீரர்களை கொன்று பெரும் அச்சம் கொடுத்தான் ஜஸ்வந்த்சிங்
யாரோ ஒரு குழு எல்லையில் சீனர்களை தடுக்கின்றது என வீறுகொண்ட இந்திய ராணுவம் மறுபடி புதுஆயுதங்களோடு களத்திற்கு விரைந்தது
சீனாவோ கொஞ்சம் தெளிந்து பெரும் இந்தியபடை இல்லை எங்கோ தவறு என உணர்ந்து நிதானித்து பல முனைகளில் இருந்து தாக்கி இவனை சுற்றியது
அப்போதுதான் ஒருவன் ஒரே ஒருவன் சில பெண்களோடு தங்கள் பக்கம் ஐநூறுபேரை கொன்று மூன்றுநாட்களாக அலையவிட்டிருக்கின்றான் என அதிர்ந்து அவனை மூர்க்கமாகச் சுட்டார்கள்
இனி தப்பமுடியாது என்பதை உணர்ந்த ஜஸ்வந்த் முடிந்தம்ட்டும் போராடி தன் கடைசி தோட்டாவால் தன்னை சுட்டுசெத்தான்
அவனை பிடிக்கமுடியா சீன ராணுவம் அவன் உடலை அள்ளி சென்று தலையினை வெட்டிவைத்து பழிதீர்த்தது, அந்த பெண்களை வாளால் வெட்டிப் போட்டது
இனி அவன் இல்லை என அவர்கள் முன்னேறும் நேரம் இந்தியராணுவம் வந்தது, அமெரிக்க எச்சரிக்கை வந்தது, அத்தோடு யுத்தம் நின்றது.
அருணாசலபிரதேசத்தில் சீனா புகமுடியாமலே போனது, நவம்பர் 20ல் யுத்தம் நின்றது
தனி ஒருவனாக மூன்று நாட்கள் பெரும் போர் நடத்தி எல்லை காத்தான் என அறிந்த இந்திய ராணுவம் அங்கே அவனை வணங்கிற்று
அவன் வீரம் அறிந்து பெரும் சீன தளபதிகளே தலைவணங்கினர், மாவோ அவன் உடலை தலையோடு ஒப்படைக்க உத்தரவிட்டான்
அந்த மாவீரனின் தலை பேழையில் வைக்கபட்டு உடல் பொதியபட்டு இந்திய வீரர்களிடம் கொடுக்கபட்டு போர் முடிந்தது
அவன் தலை வாங்கபட இடத்திலே அவனுக்கோர் நினைவாலயம்கட்டி அவன் அங்கே புதைக்கபட்டான்.
அவனுக்கு மஹாவீர் சக்ரா விருது வழங்கி இந்திய ராணுவம் கவுரவித்தது
1962 போர் நேருவின் குழப்பத்தால் தோல்விதான், ஆனால் சீனர்கள் நினைத்தபடி அருணாசல பிரதேசத்தை கைபற்றமுடியாமல் போக இந்த ஜஸ்வந்த்சிங்கின் தியாகமே வீரமே பெரும் காரணம்
அவன் புதைக்கபட்ட மறுநாள் இரவில் சில பூட்ஸ் தடங்கள் கிடந்தன, அது சீன எல்லைக்கு வந்து சென்ற அடையாளம் இருந்தன
சீனர்கள் அஞ்சி வணங்கி அவனை “ராவத் பாபா” என்றார்கள், அவன் காவல் தெய்வமானான்
இன்றும் அந்த பனிபாறையில் பூட்ஸ் சத்தம் கேட்கின்றது, ஒரு ஆரூப ஆவி வந்து செல்கின்றது, அங்கே ஒரு அனுமாஷ்ய காவல் நிலவுகின்றது எனப்து சீனர்களின் நம்பிக்கை
அவனை இன்று சீனர்களும் வணங்குகின்றார்கள், அருணாசல பிரதேச எல்லையின் அவன் கோவிலை தாண்டிவர அஞ்சுகின்றார்கள், அவன் சிலையாய் நிற்குமிடம்தான் தங்கள் எலலை என அஞ்சி நிற்கின்றார்கள்
இன்று (17/11) அவன் பலியான நாள்.
72 மணிநேரம் உண்ணாமல் உறங்காமல் கடும் குளிரில் அவன் போராடி 21 வயதிலே செத்தநாள், சுமார் ஐநூறு எதிரிகளை சரித்துவிட்டு மரணம் பயம்காட்டிவிட்டு தெய்வமாக நிலைபெற்ற நாள்
இன்று அவன் புதைக்கபட்ட இடத்தில் குருபூஜை நடக்கின்றது
அவன் ஆவியாய் வந்து அங்கு அதை ஏற்றுகொள்கின்றான், சீனர்களும் வந்து வணங்கி செல்கின்றார்கள்
இன்றும் எல்லையில் நிற்கும் இந்திய வீரர்களுக்கு அவன் பெரும் உதவிகளை அனுமாஷ்யமாக செய்து கொண்டிருக்கின்றான், சீன ராணுவம் “பாபா” கோவில்தாண்டி வர அஞ்சுகின்றது.
நார்துங் பக்கம் அவன் அன்றும் இன்றும் என்றும் காவலாய் காவல் தெய்வமாய் நிற்கின்றான்.
தேசத்தின் ராணுவமும் மக்களும் அவனுக்கு இன்று பெரும் அஞ்சலியும் பூஜையும் செய்கின்றார்கள்
எல்லையில் சிலையாய் நின்று காக்கும் அவன் பெருமை தமிழர் பலருக்கு தெரியாது, தெரிந்தால் கோவில் முன் அவன் சிலைக்கு பதிலாக அட்டைகத்தி வீரர்கள் சிலை வந்திருக்காது.
தேசத்தின் எல்லையினை காத்து உயிர்விட்டு இன்றும் அரூபியாய் நிற்கும் அவனை ஒவ்வொரு இந்தியனும் பெருமையுடனும் நன்றியுடனும் நினைந்து சிலசொட்டு கண்ணீர்விட வேண்டிய நேரமிது
“கண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேஸ்வரா.., செந்நீரைவிட்டல்லவா காத்தோம்”