ரத்தன் டாடா

இன்று (28/12) டாடா குழுமங்களின் தலைவரும் இந்தியாவின் மகா முக்கிய பொருளாதர தூணும், பெரும் வரி கட்டுபவரும் ஏகபட்ட சமூக சேவைகளை துளி சர்ச்சைகள் வராமல் செய்பவருமான ரத்தன் டாடாவின் பிறந்தநாள்.

ரத்தன் டாடாவின் பிறந்த நாள் என்பது தனிபட்ட வகையில் அவருக்கு வாழ்த்தும் பிரார்த்தனையும் தெரிவிக்கும் நாள் என்றாலும் பல உண்மைகளை சொல்லும் நாளும் அதுவேதான்.

இந்தியாவில் பிரிட்டிசார் காலத்திலே தொழில்சவால் விட்ட ஜேஆர்டி டாட்டாவின் கனவினை இன்று ரத்தன் டாடா 100 மடங்கு வேகத்தில் முன்னெடுப்பது வாழ்த்துகுரியது

காலத்துக்கேற்ற மாற்றம், ஐடி முதலான விஞ்ஞான் தொழிலில் ஆதிக்கம், இந்திய ராணுவ கருவிகள் தயாரிப்பு, அரபு சுல்தான்கள் மட்டும் வாங்கிய பிரமாண்ட விமானங்களை இந்தியனாக வாங்கி ஏர் இந்தியாவினை உலகின் மிக பெரிய விமான போக்குவரத்து மையமாக மாற்றிகொண்டிருப்பது வரை அவரின் சாதனை பெரிது

ஒரு வியாபார குழுமத்தை காலத்துக்கேற்ற அடுத்த பரிணாமத்திற்கு நகர்த்துவது என்பது எல்லொராலும் முடியாது, ரத்தன் டாடா அதனை அற்புதமாக செய்கின்றார்

டாடா குழுமம் எக்காலமும் நிற்கும்படி பெரும் இடத்துக்கு கொண்டு சென்றுவிட்டார், இதனால் தேசம் பெற்றுகொண்டிருக்கும் வேலைவாய்ப்பும், வரியும், வாழ்வும், பொருளாதார வாய்ப்பும் ஏராளம்

இன்று உலகின் சக்திவாய்ந்த மனிதர் அந்த டாடா, அவரால் தேசமும் நிமிர்ந்து நிற்கின்றது

இந்த நாளில் அவரை மட்டும் அல்ல, அந்த பார்சி இனமே தேசத்துக்கு செய்திருக்கும் பெரும் சேவைகள் பற்றி நினைத்தல் நன்றியுடையது

அந்த மிகச்சிறிய இனம், இந்துஸ்தானமே தங்களுக்கு பாதுகாப்பானது என்ற நன்றியுடனும், இந்த இந்துதேசமே உலகில் அதிசிறந்த தேசம் எனும் பெருமையுடனும் இங்கு செய்யும் சேவைகள் கொஞ்சமல்ல‌.

தேசபற்றும், தேசாபிமானமும் அவர்கள் மூலமாக படித்தால் இன்னும் புரியும்

பார்சிக்கள் தனித்துவமான மதமும் கலாச்சாரமும் கொண்டவர்கள், அவர்களின் பூர்வீகம் பெர்ஷியா எனும் ஈரான் அந்த பூமி அராபிய எழுச்சியில் முழுவதும் மாறியபொழுது பார்சிகள் தங்களை காத்து கொள்ள இந்துக்களிடம் அடைக்கலாகி இந்துஸ்தானத்தில் வசிக்க ஆரம்பித்தார்கள்

அவர்கள் அன்று கிறிஸ்தவ நாடுகளுக்கோ இதர நாடுகளுக்கோ செல்லமுடியாது சென்றால் மதம் மாற வேண்டும், அடையாளத்தை இழக்க வேண்டும் அதனால் இந்துக்கள் வாழும் இந்தியா அவர்களுக்கு ஒரே தேர்வாக இருந்தது.

யாரையும் கட்டாய மதமாற்றம் செய்யாததும், உன் மதம் பாவ மதம் என் மதம் சிறந்தது என வாதிடாமல் அவர்களை சகோதரர்களாக அணைக்கும் இந்துமதம் பார்சிக்களை இங்கு வாழவைத்தது.

அந்த நன்றி ஒவ்வொரு பார்சிக்களிடமும் உண்டு, பார்சிக்கள் மிகச்சிறிய இனமாயினும் யூதர்களைப் போல அறிவும் செல்வமும் கொண்டவர்கள். ஒருவகையில் நெருப்பை வணங்கும் அவர்கள் அடிப்படை இந்து சாயலை கொண்டவர்கள்

அந்த இனம் இந்த நாட்டையும் இந்துக்களையும் நன்றியோடு வணங்கிற்று, அந்த பார்சிகளின் நன்றி ஒவ்வொரு இந்திய பார்சியிடமும் கலந்துவெளிபட்டது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவினை எப்படியெல்லாம் சுரண்டுகின்றது, ஏன் சுதந்திரம் அவசியம் என சொன்ன தாதாபாய் நவ்ரோஜி ஒரு பார்சி.

முதல் இந்திய சுதந்திரகொடியினை கொடுத்த மேடம் காமா ஒரு பார்சி இனப் பெண்.

ஜாம்ஷெட்ஜி டாட்டா அப்படித்தான் விசுவாசமிக்க இந்திய தொழிலதிபராக இருந்தார்.

மானெக்சா அப்படித்தான் 1971 போரில் மாபெரும் வெற்றியினை பெற்று கொடுத்தார்; அவர் ஒரு பார்சி.

இந்திய அணுசக்தி தந்தை ஹோமி பாபா; அவர் ஒரு பார்சி.

என்றும் பார்சிக்கள் இந்தியாவுக்கு காட்டும் விசுவாசம் அப்படி, அந்த விசுவாசமும் நன்றியும் ஒரு காலத்தில் இந்துமதம் அவர்களுக்கு கொடுத்த அடைக்கலத்தினாலும் ஆறுதலினாலும் வந்தது.

இந்துக்களின் பெரும் ஞானப்பெருந்தன்மையே பார்சிக்கள் இப்படி நாட்டுப்பற்றுடன் இருக்கக் காரணம்.

இந்தியவாழ் யூதர்களிடமும் அப்படிபட்ட நன்றி உண்டு, ஐரோப்பா அரேபியா என வாழமுடியா அவ்வினம் இந்தியாவிலும் அடைக்கலாகி இருந்தது.

அவர்கள் நிம்மதியாக இருந்த நாடு இந்தியா என்பது அவர்கள் வரலாற்றிலே காணப்படும் குறிப்பு, வெறுப்பும் கசப்பும் இல்லாமல், மதமாற்ற இம்சை இல்லாமல், என் மதமே பெரியது உயர்ந்தது எனும் மேட்டிமை இல்லாமல் அவர்களையும் இங்கு வாழவைத்தது.

அமெரிக்கா கண்டறியும் வரை இந்தியாவும் இந்து அரசர்களும் இந்துக்களுமே பார்சிக்கள் யூதர்கள் போன்றோருக்கு ஆறுதலும் அடைக்கலமுமாக இருந்தார்கள்

இந்தியாவில் வாழும் பார்சிக்களை போல யூதர்களும் இந்நாட்டுக்கு விசுவாசமாக இருந்தார்கள், வங்கபோரில் கடைசி நேர மாபெரும் சாகசம் காட்டி பாகிஸ்தானை பணியவைத்த கேப்டன் ஜேக்கப் அப்படி ஒரு இந்திய யூதரே.

எங்கிருந்தோ வந்த பார்சிகளுக்கும், யூதர்களுக்கும் இந்தியாவின் அருமையும் இந்துமதத்தின் பெருமையும் , அதன் அவசியமும் முழுக்க புரிந்திருக்கின்றது அந்த நன்றியில் இன்றுவரை இந்தியாவுக்கு சேவை செய்கின்றார்கள், இந்தியாவினை காக்கின்றார்கள்.

ஆனால் அந்த நன்றியில் கொஞ்சம் கூட காலம் காலமாக இங்கு இந்தியர்களாக வாழும் தமிழகத்தின் பலருக்கு இல்லை. அப்படி ஒரு அறியாமையிலும் வரலாற்று புரட்டிலும் ஏமாந்துவிட்டார்கள் என்பதுதான் சோகம்.

யூதர்கள் சட்டப்படி அவர்கள் கடவுளை தவிர யாருக்கும் தலை வணங்க மாட்டார்கள். ஆனால் அந்த யூத இந்தியன் ஜேக்கப் ஒரு இந்திய ராணுவ வீரனாக தேசியகொடிக்கு தன் 92ம் வயதிலும் சல்யூட் அடித்தார்.

ஆனால் தமிழக குபீர் கிறிஸ்தவ ஆசிரியை என்ன பிதற்றினார் என்றால் அதுதான் அறியாமை, அதுதான் பரிதாபம்.

ஆம் பார்சிகளுக்கும் யூதர்களுக்கும் தெரிந்த அளவு இந்துமத பெருமை இந்தியாவின் அருமை தமிழகத்தில் பலருக்கு தெரிவதில்லை அது அவர்களின் அறியாமை, அந்த அறியாமை நீங்க வேண்டும் என்பதுதான் தேசாபிமானிகள் மற்றும் இந்து அபிமானிகளின் பிரார்த்தனை.

பார்சிக்களையும் யூதர்களையும் அணைத்து காத்து உயர்த்திய இந்துமதம் தன் சொந்த மக்களை மட்டும் சாதி மனுதர்மம் என வாழவிடாமல் செய்தது என்பதெல்லாம் எப்படிபட்ட மிகப்பெரிய பொய் என்பதை பலர் உணர்ந்து கொள்ளவில்லை. உணர்ந்தாலும் அரசியலுக்காக மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைத்தான் பார்சிக்கள் இந்தியவாழ் யூதர்களின் விசுவாசமும் அர்ப்பணிப்பும் தேசப்பற்றும் காட்டுகின்றது.

எங்கிருந்தோ வந்த பார்சிகளையும் யூதர்களையும் ஏன் இப்பொழுது வந்த திபெத் உள்ளிட்ட பல அண்டை நாட்டு மக்களையும் அணைத்துக் காக்கும் இந்தியாவும் இந்துமதமும், இரண்டாயிரம் ஆண்டுகளாக எங்களை அடக்கி வாழவிடாமல் வைத்திருந்தது எனச் சிலர் புலம்புவது எவ்வளவு பெரும் அறியாமை என்பதை மக்கள் புரிந்துகொண்டால் நல்லது.

இந்தியவாழ் பார்சியும் யூதனும் அவன் மதத்தில் இருந்து கொண்டே இந்தியாவில் இந்தியாவுக்காக வாழ்ந்து கொண்டு இந்து துவேஷம் பேசாமல் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு உழைத்து கொண்டிருக்கும் பொழுது, இங்கு மதம்மாறிய இந்துக்களும் அவர்களின் வாரிசுகளும் என்னவெல்லாமோ தேசவிரோதமும் இந்து துவேஷமும் சொல்லிக் கதறுவதுதான் அவர்களின் அறியாமையினையும் அப்பாவித்தனமான குருட்டு நம்பிக்கையினையும் நினைத்துப் பரிதாபப்பட வைக்கின்றது.

அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள், அறியாமையிலும் பொய்யான போதனைகளிலும் சிக்கியிருப்பவர்கள், அவர்களை பழிக்காமல் வெறுக்காமல் உண்மையினை உணர வைப்பதுதான் தேசாபிமானிகள் மற்றும் இந்து அபிமானிகளின் பெரும் கடமை.

அந்த கர்மாவினைத்தான் நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

ரத்தன் டாடா பிறந்த நாளில் ஒரு மிகச்சிறிய சமூகம், மிக மிகச் சிறுபான்மையான ஒரு சமூகம் இந்நாட்டிற்காய் எவ்வளவு பெரும் காரியங்களை நாட்டுப்பற்றோடு ஆற்றிக் கொண்டிருக்கின்றது, காலம் காலமாக செய்து கொண்டிருக்கின்றது என்பதுதான் கவனிக்கதக்கது.

நாம் அதை ரத்தன் டாடா உருவில் இப்போது கண்டு கொண்டிருக்கின்றோம். அவரும் அவரின் பார்சி இன மக்களும் இத்தேசத்துக்கு தொடர்ந்து உழைக்கட்டும், தேசம் உய்யட்டும், தேசம் நிலைக்கட்டும்..