ராஜராஜ சோழன்
25 / 10 / 2023
சிவன் தன் அடியாரை தேர்ந்தெடுத்துக் கொண்டால் அவனை விடமாட்டார். அவன் எங்கிருந்தாலும் என்ன நிலையில் இருந்தாலும் அப்படித்தான் தேடி வந்து ஆட்கொள்வார்.
சுந்தமூர்த்தி நாயனாரை அப்படித்தான் மணமேடையில் ஆட்கொண்டார், சமணராக அப்பர் சுவாமிகளை ஆட்கொண்டார், இன்னும் யார் யாரையெல்லாமோ எதிர்பாரா நேரம் ஆட்கொள்வார்.
தான் ஒருவனை குறித்துவிட்டால் எத்தனை பிறவிகள் என்றாலும் அவனை விடாமல் பிடித்து கொள்வார், தன் அன்புகுரியவன் என்னென்ன இந்த உலகத்துக்கு தன்மூலம் செய்யவேண்டுமோ அதை சரியாக செய்ய வைப்பார்.
நாயன்மார்கள், அவதாரங்கள் மட்டுமல்ல பல அரசர்களையும் அப்படி தேர்ந்தெடுத்தார் சிவன், அப்படி அவரின் அன்புகுரிய பக்தனாக அடியாராக நின்ற மாமன்னன் ராஜராஜசோழன்.
அவன் வாழ்வு ஆச்சரியமும் அதிசயங்களும் நிரம்பியது, அந்த சோழ வம்சத்து ஆட்சி அவனுடையது அல்ல. அவன் பெரியப்பாவுடையது.
அதை தாண்டி இவன் அண்ணன் ஆதித்த கரிகாலனுக்கே முன்னுரிமை இருந்தது.
வரலாற்றில் யாருக்கும் தெரியாமல் மறைந்திருக்க வேண்டிய அந்த அருண்மொழி தேவன் சோழ வம்சத்தின் அரசனனானதும், பின் அன்றைய உலகின் மாபெரும் சக்கரவர்த்தியாக உலகையே மிரட்டியதும் அவன் முற்பிறப்பின் பலன்.
அந்தப் பலனை மொத்தமாக சிவனுக்கோர் அழியா காணிக்கையாக கொடுத்துவிட்டு சென்றவன் அந்த இந்து மன்னன்.
அவன் தனக்கென மாளிகை கட்டவில்லை, தனக்கென கல்லறை கட்டவில்லை, தனக்கென அழியா அடையாளம் தேடவில்லை.
மாறாக தன்னை வாழ்வாங்கு வாழவைக்கும் சிவனுக்கு, பெரிய இடம் கொடுத்த சிவனுக்கு பெரும் இடம் கொடுத்தான்.
அவன் கட்டிய ஆலயம் திருவாரூர் போலவோ, மதுரை ஆலயம் போலவோ பெரும் கூட்டமோ அதிசயங்களோ நிறைந்தது அல்ல, அங்கு நேர்ச்சையோ பெரும் தனிபட்ட கொண்ட்டாட்டங்களோ இல்லை.
மாறாக ஒரு உன்னதமான சிவனடியார் தன் சிவனுக்கு கொடுத்த அற்புதமான காணிக்கையாக, அவனின் மாபெரும் சிவபக்திக்கு அடையாளமாக அது காலம் காலமாக சாட்சியாய் நிற்கின்றது.
தமிழகம் இந்து பக்தியினையும் ஆன்மீகத்தையும் உயிராக கொண்ட மண், அந்த பக்திதான் இந்த தமிழகத்தை வாழவைத்தது, உயர்த்தியது மாபெரும் அடையாளங்களை கொடுத்தது.
தமிழனின் இந்துத்வ அபிமானத்தையும் அவன் வாழ்ந்த வாழ்வினையும் இலக்கியங்களுக்கு அடுத்து சொல்லி கொண்டிருப்பவை ஆலயங்கள்.
அந்த இலக்கியங்களின் அழகும் ஆழமும் உருக்கமும் ஒரு பக்கமும், இன்று நினைத்தே பார்க்கமுடியாத பிரமாண்டமும் கலைநயமும் ஏகப்பட்ட சொத்துக்களும், பெரும் செலவு கொண்டாட்டமுமாக இன்னொரு பக்கம் நிற்பவை ஆலயங்கள்.
இந்த இரண்டும் தமிழன் எப்படி உன்னத இந்துவாக வாழ்ந்தான், மாபெரும் ஞானமும் அறிவும் அதனால் வீரமும் செல்வமும் அவனுக்கு வந்தது என்பதை சொல்லிக் கொண்டிருக்கின்றன.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, ஆப்ரிக்கா என எங்கெல்லாமோ சென்று அம்மக்களை பிடித்து உங்களுக்கு நாகரிகமில்லை, அறிவில்லை என சொல்லிச் சொல்லி தங்கள் வழிக்கு மாற்றிய பிரிட்டிஷாரின் தந்திரம் இங்கு எடுபடாமல் போனது இந்த இலக்கியங்களினாலும் ஆலயங்களாலுமே.
அவை மிகப்பெரிய அரணாக சான்றாக மலைபோல் நின்றுகொண்டிருக்கின்றன. எந்த பொய்யும் புரட்டும் அவைகளை தொடமுடியவில்லை. அவற்றால் இந்துமதம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
ஆப்கானியர் அரேபியா போல் இந்நாட்டையும் ஆக்கமுடியாமல் தோற்றதற்கு இந்த சுவடிகளின் போதனையும் ஆலயங்களின் உறுதியுமே காரணம்.
ஆம், ஒவ்வொரு இந்துவும் அந்த ஏற்பாடுகளை செய்த முன்னோர்களை நன்றியோடு வணங்க வேண்டும்.
வாழ்வாங்கு வாழ்ந்த அந்த முன்னோர்கள் வெறும் வார்த்தைகள் காற்றோடு போகும், காட்சிகள் கண்ணோடு போகும் என்பதால் சுவடியும் ஆலயமுமாக அதை காலத்துக்கும் நிறுத்திவிட்டு சென்றார்கள்.
அதில்தான் காலம் காலமாக இது இந்து மண், இந்துமதம் தமிழன் கலாச்சாரம் என ஓங்கி பேச முடிகின்றது. இந்துமதம் எனும் வேர் அந்த ஆலயங்களில்தான் இருக்கின்றது.
அந்த ஆலயங்களில் முக்கியமானது தஞ்சாவூர் ஆலயம்.
எல்லா ஆலயங்களும் சிறிய அளவில் தொடங்கப்படும், பின்னர் வரும் மன்னர்கள் மெல்ல மெல்ல விஸ்தரிப்பார்கள்.
திருவாரூர் கோவில் முதல் நெல்லை கோவில் வரை இப்படித்தான் விஸ்தீரனமாயின. கால காலமாக அவை பெருகின, ஒவ்வொரு மன்னனும் தன் கடமையினையும் செய்யவேண்டும் என விஸ்தரித்து கொண்டே சென்றார்கள்.
( ஆப்கானியர் படையெடுப்பும், கிறிஸ்தவ பிரிட்டிசாரின் கொள்ளையும், பின்னர் காங்கிரசும், இன்று திமுகவும் இல்லையென்றால் இந்த ஆலயங்கள் இன்னும் பிரம்மாண்டமாக பெருகி கொண்டே சென்றிருக்கும்.)
பல மன்னர்கள் பல தலைமுறையாய் கட்டியதை ஒரு மன்னன் ஒரே மனிதனாய் கட்டினான். இன்றுவரை தமிழகத்தில் தனிமனிதனாய் பிரம்மாண்ட ஆலயம் அமைத்தவன் அவனே.
ஆம், அவன் அவனுக்கு பெரும் அரண்மனை கட்டவில்லை, தன் காதலிக்கு மாளிகையோ இல்லை சமாதியோ கட்டவில்லை,
தனக்கு மயிலாசனம், சிம்மாசனம், புலி ஆசனமெல்லாம் செய்யவில்லை.
இமயம் வரை படைநடத்தும் வலு இருந்தும் ஏன் அதைத்தாண்டி செல்லும் துணிவிருந்தும், தன் பலமான கப்பற்படையால் ஆப்ரிக்கா அரேபியா என பிடிக்கும் வழி இருந்தும், அதைச் செய்யவில்லை.
அவன் மனம் எவ்வளவு சிவபக்தி கொண்டிருந்தால் தனக்கும் தன் சந்ததிக்கும் வாழாமல் சிவனுக்கு இவ்வளவு பெரும் ஆலயத்தை அமைத்திருக்கும்?
ராஜராஜ சோழன் தமிழரின் தனிபெரும் இந்து அரசன், இந்த இந்து மண்ணின் அழியா அடையாளம், எப்படி உருவானான் இந்த பெரும் இந்து மன்னன்?
எங்கோ பாய்ந்துகொண்டிருந்தது காவேரி, அதனை தஞ்சைக்கு திருப்பினான் கரிகாலன்.
கரிகாலன் செய்து கொடுத்த அந்த பெரும் காரியத்தில் சோழநாடு செழித்தது, நிரந்தரமான செழிப்பு அது. சோழநாடு அதனால் தன்னிறைவு பெற்றது.
அந்த செழுமை கல்வி, கலை, வீரம் என எல்லாவற்றிலும் தஞ்சையினை முன்னுறுத்தியது.
அதனால் எழுந்த செழிப்பான சோழ நாட்டில் பிறந்தவன் தான் ராஜராஜ சோழன், அவன் பிற்கால சோழ வம்சம் என்கின்றது வரலாறு.
ஒரு நாட்டின் செழுமை எப்படி நல்ல விஷயமோ, அதன் ஆபத்தும் அதுவேதான். எப்பொழுதும் எதிரிகள் தனியாகவோ, கூட்டமாகவோ பாயக் கூடும்.
அந்த ராஜ ராஜன் இதில்தான் உருவானான். அக்காலம் பாண்டியர், சிங்களர் இன்னும் சாளுக்கிய மன்னர்கள் என பல அச்சுறுத்தல் இருந்த நேரம் ராஜராஜன் முடிசூடினான்.
அவ்வளவுக்கும் அவன் உடனே அரசனானவன் அல்ல, 16 வருடம் நாடோடியாய் அலைந்தான். அந்த அரசு அவனுக்குரியது அல்ல, அவன் பங்காளி ஆதித்த கரிகாலனின் கொலையே அவனை அரசனாக்கிற்று.
அவன் அரசில் இருந்தது 15க்கும் குறைவான ஆண்டுகளே அதற்க்குள்தான் அந்த மாபெரும் அதிசயத்தையெல்லாம் செய்து முடித்தான்.
சோழநாட்டை காக்கவும், சைவ சமயத்தை பரப்பவும் பெரும் போர்களை அவன் தொடுத்தான். பாண்டிய நாடு முதல் சேரநாடு வரை அவன் கட்டுபாட்டில் இருந்தது.
சேரநாட்டில் காந்தளூர்சாலை என்றொரு இடம் இருந்திருக்கின்றது, அங்கு பகைவரின் கப்பல்கள் எல்லாம் வந்திருக்கின்றன, அங்கு சென்று அந்த கடற்கலன்களை எல்லாம் அழித்திருக்கின்றான், இது அவனது மெய்கீர்த்தியில் இருக்கின்றது.
பாண்டியரும் சிங்களரும் சேர்ந்து தொடுக்கும் போர் அபாயத்தில் இருந்து தப்பிக்க பெரும் கடற்படையுடன் சிங்கள நாட்டைதாக்கி இருக்கின்றான், அநுராதாபுரம் எனும் சிங்கள நகரம் அவனால் நொறுக்கபட்டிருக்கின்றது
வடக்கே கலிங்கம் வரை அவன் கைபற்றியிருக்கின்றான்.
ராஜராஜன் காலம் புத்த மதத்தை வீழ்த்தி சைவ மதம் செழித்த காலம், தான் கைபற்றிய நாடுகளில் எல்லாம் சைவ மதம் வளர்த்திருக்கின்றான்
இன்றைய இந்தோனேஷியா , மலேசியா , கம்போடியா நாடுகள் அடங்கிய அன்றைய ஸ்ரீ விஜயா நாட்டின் மீதும் தன் மகன் தலமையில் பெரும் போர் புரிந்து வென்று வெற்றிகொடி நாட்டி, சைவ மதம் வளர்த்திருக்கின்றான்
அவனது கடற்கலன்களும், அவனின் போர்முறையும் அவனுக்கு அப்படி பெரும் வெற்றிகளை கொடுத்திருக்கின்றன
உலகில் தோல்விபெறாத அரசர்கள் வரிசையில் ராஜராஜனின் பெயரும் உண்டு, ஆனால் மேல்நாட்டு வரலாற்று ஆய்வாளர்கள் அலெக்ஸாண்டர், சீசர் என வேறு வரிசை வைத்திருப்பார்கள் வைக்கட்டும்.
சிவன் மேல் தீராதபற்றுகொண்ட ராஜராஜன், தன் வெற்றிக்கெல்லாம் சிவனே காரணமென்றும், சிவனுக்கு காலத்தால் அழியாத ஆலயம் கட்டவும்ட் திட்டமிட்டான்.
ஆலய பணிகளில் சிவனடியாரான கரூர் சித்தரைத்தான் முன்னிறுத்தினான், அதுதான் அவன் அடியார்களை அற்புதமாக மதித்த விதம்.
பல நாடுகளில் திரட்டபட்ட செல்வமும், பல மன்னர்கள் கொடுத்த வரியும், அவன் அடிமைகளாக பிடித்த எதிரி நாட்டு வீரர்களும் அதற்கு பயன்பட்டன
காலத்தை வென்று நிற்கும் கற்காவியமான பெரிய கோவில் அவனால்தான் கட்டபட்டது, முழுக்க முழுக்க கல்லால் ஆன கோவில் அது.
இத்தனை பெரிய கற்களை எப்படி செதுக்கினார்கள், எப்படி கொண்டு வந்தார்கள், எந்த ஆயுதத்தால் செதுக்கினார்கள், எத்தனை பேர் வேலை செய்தார்கள் என்பதை கண்டவரும், எழுதி வைத்தவரும் எவருமில்லை, எல்லாம் யூகமே
ஆனால் அப்படி அற்புதமாக, பெரும் அதிசயமாக கட்டியிருக்கின்றான் என்பது நம் கண்முன்னே நிற்கின்றது
கற்தூண்கள் உச்சியில் பாரம் இல்லையென்றால் விலகிவிடும் என்பதற்காக பெரும் கல்லை உச்சியில் நிறுத்தி , ஆலயத்தை நிலைபெற்றிருக்க செய்வதில் நிற்கினது அவனின் கட்டட கலை அறிவு. உலகில் எங்குமே காணப்படா உத்தி அது.
அஸ்திவாரத்தை உச்சியில் கொண்ட ஒரு கட்டடம் உலகில் உண்டென்றால் அது தஞ்சை கோவில்தான்
ஆலய பாதுகாப்பும் அதுதான், எவனாவது அழிக்க முயன்றால் ஒரு தூணை தொட்டாலும் முடிந்தது விஷயம்.
ஆலயத்தின் பாதுகாப்பு அஸ்திவாரத்தில் மட்டுமல்ல, உச்சிலும் உண்டு என சொல்லும் மகா வித்தியாசமான அமைப்பு அது
அந்த கோவிலில்தான் அவன் ஒரு மூலையில் தங்கி அவை நடத்தியிருக்கின்றான், அக்கோவிலை சுற்றி இருக்கும் அகழி முதலானவை அதனைத்தான் சொல்கின்றன, அவனுக்கு எல்லாமுமாக இருந்தது அந்த ஆலயம், அவ்வளவு நேசித்திருக்கின்றான்
அந்த ஆலய கோபுரத்தை அவன் பொன் தகடுகளால் வேய்ந்து சூரிய ஒளியில் கயிலாயம் போல் ஜொலிக்க செய்திருந்தான் என்கின்றது தஞ்சாவூர் கல்வெட்டுக்கள்
ஆம், கயிலாயம் போல் அதை மின்ன வைத்து வணங்கியிருக்கின்றான்
தன்வாழ்வின் மிகபெரும் வெற்றியாக அவன் அந்த அலயத்தைத்தான் கருதியிருக்கின்றான், அக்காலங்கள் வித்தியாசமானவை
அதாவது அந்நியநாட்டு படைகள் முதலில் தாக்குவது அந்த ஆலயத்தைத்தான், காரணம் இந்திய முறைபடி அளவுக்கு அதிகமான செல்வம் அங்குதான் சேர்ந்திருக்கும்
அதனை எண்ணித்தான் பலத்த ஏற்பாடுகளை அவன் செய்தான், அந்த தங்கம் வேய்ந்த கோபுரங்கள் எதிரிகளால் எளிதில் இலக்கு வைக்கபடும் என உணர்ந்து கோட்டை போல் அகழிவெட்டினான்
கோட்டைக்கு அகழி உண்டு, கோவிலுக்கு ஏன் அகழி என தஞ்சை கோவிலை நோக்குபவர்களுக்கான பதில் அங்கு அவன் தீர்க்கதரிசமாக செய்த சில ஏற்பாடுகளே
அப்பொழுது அது அவசியமில்லை என்றாலும் பின்னாளில் திருச்சி திருவரங்க ஆலயமும் மதுரை ஆலயமும் மாலிக்காபூராலும், துக்ளக்காலும் சூறையாடபடும் பொழுது ராஜராஜசோழனின் முன் எச்சரிக்கை எல்லோருக்கும் புரிந்தது
தஞ்சை கோவிலையும் மாலிக்காபூர் சூறையாடினான் ஆனால் வழக்கம் போல் லிங்கத்தை உடைத்து தோண்டி அதனடியில் இருக்கும் ரத்தினங்களை எடுக்கும் கொள்ளையினை அவனால் அங்கு செய்யமுடியவில்லை
அந்த லிங்கம் மலைபோல் நின்றது கோபுரம் அதைவிட பாதுகாப்பாக நின்றது இதனால் தங்க தகடுகளோடு திரும்பினான் மாலிக்காபூர்
ராஜராஜனின் மாபெரும் ஞானத்தால் அமைக்கபட்டது அந்த கோவில், இன்றுவரை அது நிலைத்திருப்பது அவனின் பூரண ஞானத்தை சொல்கின்றது
இன்னும் அவன் பல ரகசிய பாதுகாப்புக்களை தன் குருநாதர் கருவூர் சித்தருடன் சேர்ந்து செய்தான், அது கண்ணுக்கு தெரியாத சூட்சும பாதுகாப்பு
எவனாவது அதனை அபகரிக்கும் எண்ணத்தில் வந்தால் அவன் அழிந்து போகவேண்டும் என்று சில வரங்களை அவன் ஆலயத்தில் நிறுத்தியதாக சொல்லபடுகின்றது
நம்பாதவர்கள் விட்டுவிடலாம், ஆனால் நடந்ததும் நடந்து கொண்டிருப்பதும் அந்த சூட்சும வரங்களை சொல்கின்றன
நானே அதிபதி என சொல்லி அங்கு சென்ற அரச பிரதிநிதிகள், ஏன் மக்களாட்சி பிரதிநிதிகள் , நாத்திகர்கள் எல்லாம் கடும் அனுபவத்தில் அதன் பின் உணர்ந்திருக்கின்றார்கள்
ஆம் அந்த ஆலயத்தில் நுழையும் பொழுது அரச பதவி இன்றி, அதிகார தோரணையின்றி, உடலெல்லாம் விபூதி பூசி ஒரு வித சிவனடியார் கோலத்தில்தான் யாராயினும் நுழைய வேண்டும் என்பது அந்த ஆலயத்து விதியாம்
அதை மீறி நானே அரசன், நானே முதல்வர், நானே பிரதமர் என அதிகார தோரணையில் செல்லும் எக்கொம்பனும் ஆட்சி இழந்து சிக்கலில் சிக்குவது உறுதி
மாலிக்காபூரின் முடிவும் துக்ளக்கின் முடிவும் அப்படித்தான் இருந்திருகின்றன
ஆம், அது மக்களாட்சியில் அல்ல மன்னர் ஆட்சியிலே இருந்திருக்கின்றது, நாயக்க மன்னர்கள் அந்த ஆலயத்தை கொஞ்சம் கவனமாகவே கையாண்டிருக்கின்றார்கள்
அங்கே உள்ளே வருவதாக இருந்தால் ஆலய வாசலில் நான் அரசன் அல்ல, முடி சூட்டியவனும் அல்ல இங்கு ஈசனை சந்திக்க வந்த ஆண்டிகளில் ஒருவன் என சொல்லிவிட்டு உள்ளே வா என்பது அந்த ஆலய சூட்சுமம்
அதை புரிந்துகொள்ளாத மன்னர்கள் அல்லது புரிந்தாலும் முடியிழக்க விரும்பா மன்னர்கள் அந்த ஆலயத்தை ஒதுக்கினர்
அது பிற்காலமும் தொடர்ந்திருக்கின்றது, நாயக்க மன்னர்கள் ஆட்சியிலும், மாராட்டியர் ஆட்சியிலும் ஆட்சியாளர்கள் அதனை கண்டு கொஞ்சம் மிரண்டிருகின்றார்கள்
எல்லா கோவிலிலும் உருண்டு புரண்ட நாயக்கர்கள் தஞ்சை ஆலயத்தில் ஒரு வகையான விலகலை கடைபிடித்திருக்கின்றார்கள்
பிரிட்டிசார் ஆட்சியில் இந்நாட்டிற்கு வந்த ஜெர்மானியன் ஒருவனே உள்ளே புகுந்து தேடினான், அந்த வவ்வால் உருவாக்க்கிய சுவரை எல்லாம் இடித்து உள்சென்றான், பல கல்வெட்டுக்களை படித்தான்
அதில்தான் இக்கோவிலை கட்டியது ராஜராஜன் என்றிருந்தது, அதில் இருந்துதான் தமிழகம் அக்கோவிலை கட்டியது அவன் என நம்புகின்றது, அவன் ஆலய கல்வெட்டுகளே அவன் வரலாற்றினை சொன்னது.
அதுவும் இல்லையென்றால் அது ஏலியன்கள் கட்டிய ஆலயமாக மாறியிருக்கும்
( இங்கே ஒரு விஷயத்தை அவதானிக்க வேண்டும்
அந்நியர் படையெடுப்பில் இருந்து தமிழகத்தை மீட்ட நாயக்கர்களும், தஞ்சையினை ஆண்டிய மராட்டியர்களும் ஆலயத்தை நன்கு வழிபாடெல்லாம் செய்து காத்தார்கள் ஆனால் வரலாற்றை வெளிசொல்லவில்லை, அதுபற்றி அவர்களுக்கு பெருவிருப்பமில்லை
பிரிட்டிசார் கிறிஸ்தவர்கள் இன்னொரு விஷயம் இந்த பழைய வரலாறெல்லாம் மக்களுக்கு தெரிந்தால் தங்களை விரட்டலாம் இந்துஎழுச்சி ஏற்படலாம் என்பதால் அவர்களும் மவுனம் காத்தார்கள்
தீராபோர்கள் நடந்த 600 ஆண்டுகளில் இதையெல்லாம் பற்றி சிந்திக்க யாருமில்லை என்பதால் ஜெர்மானியனே அதனை மீள கொடுத்தான்)
அந்த மன்னன் மன்னர்களுக்கு எல்லாம் மன்னராக இருந்ததால் அவன் ராஜ ராஜன் என அழைக்கபட்டான், மற்றபடி அவன் இயற்பெயர் என்பது அருண்மொழி தேவன்.
ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம், தமிழர்களின் தனிபெரும் அரசன் ராஜராஜன், தமிழர்களின் தனிபெரும் அடையாளம் அந்த கோவில்
தமிழக அரசின் சின்னமாக நிச்சயம் அதுதான் அறிவிக்கபட்டிருக்க வேண்டும், ஆனால் பிற்காலங்களில் மாறிற்று. அதற்கு ஆயிரம் காரணங்கள்
தான் பெற்ற முடிகளை விட, தான் பெற்ற செல்வங்களை விட, தான் பெற்ற அரசுகளை விட தன்னால் கட்டபட்ட ஆலயமே சிறந்தது என உலகிற்கு தன் சிவபக்தியினை விட்டு சென்ற ராஜராஜன் அந்த சிலை வடிவில் அந்த ஆலயத்தை அனுதினமும் வணங்கிகொண்டே இருக்கின்றான்
ஐப்பசி மாதம், சதய நட்சத்திரத்தில் அவன் அவதரித்தான் என்கின்றது குறிப்பு
எத்தனைபேர் வந்தாலும் ஐரோப்பாவில் சீசருக்கு இருக்கும் மவுசு என்றளவும் உண்டு, அந்த ராஜராஜ சோழன் தமிழ்நாட்டு ஜூலியஸ் சீசர்
அக்கால காவேரியும், செழித்த சோழநாடும், தென்கிழக்காசியா எங்கும் பறந்த சோழ புலிகொடியும் இன்னும் பிற காட்சிகளும் நினைவுக்கு வருகின்றன
அந்த மாபெரும் தமிழ் சாம்ராஜ்யத்தின் அடையாளமாக எஞ்சியிருப்பது இப்போது தஞ்சாவூர் ஆலயம் மட்டுமே
.
வரலாற்றில் பெரும் அடையாளம் மிக்கவனும் , உலகின் மிக வலுவான கப்பல் படையினை இந்தியாவில் நிறுவியவனும், தென்கிழக்கு ஆசியாவினை ஆண்ட கடல்ராசனும் ஆன அந்த வீர தமிழனுக்கு பிறந்தநாள் மரியாதைகளை செலுத்துவதில் ஒவ்வொரு தமிழனும் பெருமையடைகின்றான்
கிரேக்கருக்கு ஒரு அலெக்ஸாண்டர், பிரான்சுக்கு நெப்போலியன், ரோமுக்கு ஜூலியஸ் சீசர், மங்கோலியாவுக்கு செங்கிஸ்கான், மராட்டியருக்கு வீரசிவாஜி
தமிழகத்துக்கு ராஜராஜசோழனும் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனும்
அவன் வீரத்தையும் ஆட்சியும் விட மகா முக்கியமானது அவன் பக்தி
வரலாற்றில் யார் செய்யும் காரியம் நிற்கும் என்றால் ஆன்மீக உணர்வில் தன்னை கலந்து, தெய்வத்தை முன்னிறுத்தி எவன் கடமையாற்றுவானோ அவனே நிற்பான், அவன் படைப்பும் காலம் கடந்து நிற்கும்
மாறாக தன் மிக சிறிய மூளையின் மிக சிறிய அறிவில் கடவுளுக்கு சவால்விட்டவன் படைப்பெல்லாம் காலவெள்ளத்தில் அடிபட்டு ஓடும்
ராஜராஜனும் அவன் ஆலயமும் காலகாலத்துக்கு நிற்க காரணம் அவன் மனம் சிவனில் கலந்திருந்தது, சைவமதத்துக்கு மன்னனாய் அல்ல ஒரு அடியவனாய் அவன் நின்றான்
அதனால் இன்றும் என்றும் வரலாற்றில் நிற்பான்
அவனை நினைத்து நினைத்து பார்க்கின்றோம், எவ்வளவு பக்தி அவனுக்கு இருந்திருந்தால் அந்த ஆலயத்தை அவ்வளவு நுணுக்கமாக கட்டி, அதன் கற்பகிரகத்தில் கைவைப்பவன் அழிந்து போகும் அளவு உச்சியில் கல்லை நிறுத்தி, அது போக வருபவெல்லாம் அடியானாக மட்டும் வர சிறப்பு வரங்களையும் நிறுத்தியிருப்பான்
அந்த வரம் வாங்கி ஆலயத்தில் நிறுத்தியவன் எவ்வளவு எளிய சிவனடியானாய் வாழ்ந்திருப்பான்?
தமிழ்நாட்டின் மகுடம் அவன், தமிழரின் பெருமை அவன், சைவத்தின் சின்னம் அவன், எந்நாளும் தமிழர்குல மன்னன் அவன்.
தமிழர் இந்துவாய் இருந்தனர், அந்த இந்துக்களுக்கு சிவனடியார் ஒரு மன்னனாய் இருந்தான் என்பதுதான் ராஜராஜசோழன் வாழ்வும் ஆலயமும் சொல்லும் தத்துவம்.
நல்லவேளையாக அவன் சிவனுக்கோர் ஆலயம் கட்டினான் அதில் கல்வெட்டும் வைத்தான், இல்லையெனில் இந்நேரம் சோழன் மதமற்றவன் என்றும் அவனுக்கு மதம் மொழி என எதுவுமே கிடையாது அவன் ஒரு அனாமதெய மன்னன் என்றொரு கோஷ்டி கிளம்பியிருக்கும்
ராஜ ராஜ சோழன் ஆயிரம் ஆண்டுக்கு முன்பே மறைந்தானா இல்லை, அவனுக்கு அழிவு இல்லை
சிவனில் கலந்த எல்லோரும் காலத்தை வென்றவர்கள் எனும் வகையில் அவனுக்கு ஒரு காலமும் அழிவில்லை
ஆயிரம் வருடமாக சைவ மத எதிரிகளுக்கு சவால் விட்டு அசால்ட்டாக நின்று கொண்டிருக்கின்றான் ராஜராஜ சோழன், அட்டகாசமாக திருட்டு துரோக கோஷ்டிகளை அடையாளம் காட்டுகின்றது அவன் ஆலயம்
யாரெல்லாம் உள்ளொன்று புறமொன்று வைத்து கொண்டு அதிகார தோரணையில் அங்கு நுழைந்தார்களோ அவர்களுக்கு அழிவை தவிர ஏதுமில்லை, யாரெல்லாம் அதை தொட்டால் சைவத்தை சரிக்கலாம் என எழும்பினார்களோ அவர்களெல்லாம் காணமாலே போனார்கள்
அந்த ராஜராஜ சோழனும் ஒரு நாயன்மார், சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் அவரும் ஒரு நாயனார்.
எல்லா நாயன்மாரும் தங்களிடம் இருந்ததோ எது இருக்கின்றதோ அதை சிவனுக்கு கொடுத்தார்கள்.
கைபொருள், பாடல், உடல், ஆவி, குடும்பம் என எல்லாம் கொடுத்தார்கள்.
சோழன் தன் சாம்ராஜ்யத்தில் எதெல்லாம் இருந்ததோ அதை எல்லாம் திரட்டி மொத்தமாக சிவனுக்கு கொடுத்தான்
ஆயிரம் ஆண்டுகளாக அவன் பெயரும் அவன் ஆலயமும் நிலைத்து நிற்பது அந்த பக்தியில்தான் அவனின் சிவனடி தொண்டில்தான்
சைவத்தை எதிர்த்தோரையெல்லாம் பணிய வைத்து, யாரெல்லாம் சைவம் காக்க கிளம்புவார்களோ அவர்களுக்கெல்லாம் எந்நாளும் காவல் அவன் புலிகொடியும் அவன் ஆலயமும்
மிக சிறந்த உதாரணம் இலங்கை புலிகள், ஆம் புலிகொடி ஏந்தி சிங்களனிடம் இருந்து சைவத்தை காப்போம் என கிளம்பிய பொழுது அவர்கள் வெற்றிமேல் வெற்றி பெற்றார்கள். அந்த மிக சிறிய குழு தன் அளப்பரிய வீரத்தாலும் விவேகத்தாலும் சிங்களனை அலற வைத்தது
ஆனால் என்று மேற்குலக கிறிஸ்தவ வலையில் புலி தலமை விழுந்ததோ அத்தோடு அவர்கள் அழிவு ஆரம்பமாயிற்று
இன்றும் ஒவ்வொரு சைவ விரோதியாக அடையாளம் காட்டி கொண்டே இருக்கின்றது அந்த சிவனடியார் எனும் சோழன் கட்டிய ஆலயம்.
பசுவதையினை தடுக்கா இந்திரா காந்தி அங்கு வந்து சிக்கினார், ஆம் வடக்கத்திய சந்நியாசிகளின் குரலை அசட்டை செய்த இந்திரா, சோழன் ஆலயத்தில் கால் வைத்ததும் அதற்கான தண்டனையினை பெற்றார்.
மறைமுகமாக தான் ஒரு இந்து என ஒப்புகொண்ட ராம்சந்தர் பகிரங்கமாக ஒப்புகொள்ள தயங்கினார், தஞ்சை கோவிலுக்கு சென்றாலும் திறுநீறு இட மறுத்தார் அல்லது மறைத்தார் .
அதன் பின் தீரா சிக்கலில் வீழ்ந்தார்
ஜெகஜால கில்லாடியும் கர்ம பலன் நிரம்ப வாய்த்த கருணாநிதி முதல்முறை சென்று திறுநீறு இடாமல் சும்மா சுற்றிவந்து பெரும் சிக்கலை சந்தித்தார்
பின் சதயவிழா என சென்று திருநீறு பூசாமல் அந்த் ஆலயத்துக்கான மரியாதையினை செய்யாமல் மீளா சிக்கலில் சிக்கி அத்தோடு அஸ்தமனமானார்.
ஆம், சும்மா அதிகார தோரணையில் சென்று திறுநீறு பூசி லிங்கத்தை வணங்காமல், பொழுது போக்குக்கு சுற்றிவந்தால் அந்த ஆலயம் அந்த அகங்காரர்களை விடுவதில்லை,
அவர்களின் சுயரூபத்தை தோலுரித்து காட்டி பெரும் சிக்கலில் தள்ளிவிடும்.
தாள்பணிந்து வாசலிலே வணங்கி, நேரே சென்று நெடுஞ்சாண் கிடையாய் வணங்கி திறு நீறிட்டு நின்றால் அந்த தெய்வம் புன்னகைக்கும் வாழ்த்தி அனுப்பும்.
மாறாக வணங்க மாட்டேன் , திறுநீறு பூசமாட்டேன் , இந்த ஆலயத்தின் சட்டம் என்னை என்னை என்ன செய்யும் என மதத்து நின்றால் , எதிர்த்து நின்றால், புறம் தள்ளினால், அவர்களுக்கு பெரும் சிக்கலும் எழும்ப முடியா அடியும் நிச்சயம்
வரலாறு ஆயிரம் வருடமாக சொல்லும் உண்மை இது, சத்தியமான உண்மை இது
எக்காலமும் யாரெல்லாம் தமிழகத்தில் சைவத்தை தொலைத்துவிடலாம் என உலாவினாலும் அவர்களாக தஞ்சை கோவிலை தொட்டு அல்லது பேசி உளறி சிக்கி கொள்வதெல்லாம் சிவனின் விளையாட்டு,
அரூபியாக சைவம் காக்கும் சோழனின் விளையாட்டு
ஆயிரம் காலமல்ல இன்னும் காலமுள்ள காலமவளவும் சைவ எதிர்ப்பு திருட்டு கம்முனாட்டி கோஷ்டிகளுக்கு சவால் விட்டு, அவர்கள் முகதிரையினை கிழித்து “அடேய் ஒரு …ம் உங்களால் பிடுங்க முடியாது” என சவல் விட்டு நிற்கின்றான் சோழன்
எந்த பேரரசும் , எந்த மாமன்னனும் அழிக்க முடியாமல் மகா உயரத்தில் இருந்து தமிழகத்தின் சைவத்தை காக்கும் அந்த ஆலயம் எக்காலமும் இங்கு காவல் இருக்கும்.
ராஜராஜ சோழன் எனும் மகத்தான சிவனடியாரின் அற்புதமான காவல் அரண் அது
சைவம் இங்கு வாழ, கால காலத்துக்கும் அது வாழ, அதன் பெருமை நிலைக்க, அதன் எதிர் சக்திகளை எல்லாம் அடையாளம் காட்டி களையெடுக்க வைக்க ராஜராஜன் எனும் சிவனடியாரின் ஆலயம் இங்கு பெரும் பணி புரிகின்றது
வாழ்ந்த நாட்களில் மட்டுமல்ல, இறந்து ஆயிரம் ஆண்டுகளாக சைவ தொண்டில் நின்று அதை காக்கும் ராஜராஜன் என்னும் சிவனடியார், நாயன்மார்களில் தலை சிறந்தவர்
அவனுக்கு பாடல் வராது, ஆனால் மிக சிறந்த பெரும் ஆலயத்தை எழுப்பும் வல்லமை இருந்தது, இதோ எழுப்பினான், அது காலமெல்லாம் நிலைத்திருக்கின்றது
நாயன்மார்கள் 63 பேர் அல்ல, ராஜராஜனையும் சேர்த்து 64
ஆயிரம் வருடமாக ஒரு சிவனடியார் இந்து விரோதிகளை வயிறு எரிய வைக்கின்றான், சவால் விட்டு காத்து நிற்கின்றான், இந்து விரோதிகள் மனதால் நினைக்கும் கொடும் சிந்தனையினை எப்படி வாயால் புலம்ப வைக்கின்றான் என்பதில் தெரிகின்றது அவன் சிவன் மேல் கொண்டிருந்த பக்தி.
சிவன் அவனுக்கு கொடுத்த வரமும் அதில் தெரிகின்றது
ஆயிரமாயிரம் ஆண்டுகள் கோவில் வடிவில் ரூபமாயும், கண்காணா அரூபியாயும் சைவத்துக்கு காவல் நிற்கும் ராஜராஜன் மாபெரும் மகத்தானவன்.
தஞ்சை ஆலயத்தின் ஒவ்வொரு கல்லிலும் அவன் வாழ்கின்றான், அவனின் சிவ பக்தி வாழ்கின்றது, அது எக்காலமும் இங்கு சைவத்தை காக்கின்றது, காலமெல்லாம் காக்கவும் போகின்றது
வடக்கே ஒரு திருகயிலை போல தெற்கே கயிலையாக அமைந்து பெரும் அரண் புரிகின்றது அந்த சிவனருள் உடையார் ஆலயம்.
ஆலயம் கட்டபட்ட மர்மத்தை விட சுவாரஸ்யமானது, பிரமாண்டமானது இன்றுவரை அந்த ஆலயம் காத்து வரும் சத்தியம்..
பாண்டியரையும் சிங்களவரையும் அடக்கவே தஞ்சை பக்கம் வந்தான் ராஜராஜன், வந்தவுடன் பிரமாண்ட கோவில்தான் கட்டினான்
அந்த கோவிலை அவன் கட்டிய பிரமாண்டத்தை கண்டே பின்வாங்கினர் பாண்டியர், ஆம் அவனின் கோவிலே இப்படி என்றால்.. என அஞ்சி ஓடினர்
கோவில் கட்டியே எதிர்களை விரட்டிய அசாத்திய வித்தைக்காரன் அவன்
பூசலார் நாயனார் போல தன் மனதில் இருந்த கோவிலை அவன் கண்முன் நிறுத்தினான், அக்கோவில் செல்லும் முன் அவனை நினைத்துவிடாமல் உள்ளே செல்ல முடியாது
பாலகுமாரன் சொன்னபடி இன்றும் வாசலில் நின்று அவனும் பஞ்சமன் மாதேவியும் பக்தர்களை வரவேற்று கொண்டே இருக்கின்றார்கள்
அவன் மனம் எவ்வளவு பெரிதாய் சிவனை கருதியிருக்க வேண்டும் என்பதற்கு அந்த லிங்கமே சாட்சி, அவன் கொண்ட சிவபக்திக்கு அந்த கோபுரமே சாட்சி.
பெரிதினும் பெரிது அவன் செய்து வைத்தது அப்படியே
ஒரே கோவிலில் தமிழரின் அறிவு, ஆற்றல், கலை, பண்பாடு, பக்தி, வரலாறு, கலாச்சாரம் எல்லாம் சேர்ந்து செய்துவிட்ட வித்தகன் அவன்
கடந்தமுறை அந்த ஆலயம் சென்றபொழுது, ஆலயத்தின் வாசலில் நுழையும் பொழுதே ஒரு சிலிர்ப்பு வந்தது, தமிழரின் பொற்காலத்தில் நுழைவது போல ஒரு பெருமை வந்தது
உள்ளே இருந்த கற்திண்ணைகளை தொட்டு பார்த்தபொழுது அவையெல்லாம் ராஜராஜ சோழன் அமர்ந்த இடம் எனும் பொழுதே கண்ணீர் பெருகிற்று..
இப்படியும் ஒரு அரசனா, அர்ச வாழ்விலும் சிவனடியார் கோலமும் இப்படி ஒரு ஆலயமும் அவனால் சாத்தியமா எனும் பொழுதே அவன் காலில் விழ தோன்றிற்று
அந்த கற்களில் ஒன்றை தொட்டு கண்களில் ஒற்றிகொள்வதை தவிர வேறு என்ன ஆறுதல் உண்டு?
அவன் தென்னகத்து சீசர், அதே நேரம் 64ம் நாயனார், இன்றும் என்றும் சைவ அடையாளத்தை இங்கு காத்து நிற்க வழிசெய்து காவல் இருக்கும் பெரும் சிவனடியார்
யாருக்காக அந்த கலைகோவிலை கட்டிவைத்து சென்றான் அவன்? நமக்காக, நம் சந்ததிக்காக. நம் கையில் அழகுற கிடைத்ததை அப்படியே காத்து சந்ததிக்கும் விட்டு செல்வதே நம் கடமை
ஒரு காலத்தில் தமிழக அரசின் சின்னமாக தஞ்சை கோவில் மாறும், மாறியே தீரும் இது சத்தியம்
ராஜராஜன் புகழை மட்டுமல்ல, அவன் கட்டிய ஆலயத்தையும் காத்து வரவேண்டியது ஒவ்வொரு தமிழரின் , ஒவ்வொரு சைவரின் கடமையாகும்
நிச்சயம் தஞ்சை கோவில் பக்தர்கள் கொண்டாடும் கோவில் அல்ல, பெரும் அதிசயங்களோ திருவிளையாடலோ இல்லை பல பல பெரும் தரிசங்களோ நடந்த கோவில் அல்ல
அங்கு நேர்ச்சை கடனோ இல்லை பெரும் வழிபாடுகளோ இல்லை பழனி திருசெந்தூர் போன்ற அனுதின திருவிழா கூட்டமோ இல்லை
ஏன்?
மற்றவை எல்லாம் தெய்வம் தெரிந்து கொண்ட இடங்கள், ஆனால் தஞ்சை கோவில் ஒரு பக்தன் கடவுளுக்கு அளித்த அதி உன்னத காணிக்கை
அந்த காணிக்கை என்பது ராஜராஜனின் சிவபக்தியினை காட்டும் விஷயம், அவன் மனம் எவ்வளவு பிரமாண்டமாக சிவனை கொண்டாடியிருக்கின்றது என்பதை காட்டும் பொருள்
அந்த காணிக்கையினை காணும் பொழுதே மனம் உருகி பக்தி வரவேண்டும், இப்படியெல்லாம் பக்தன் இருந்தானா எனும் எண்ணத்திலே நம் மனதிலும் பக்தி ஊற்றெடுக்க வேண்டும் என்பதற்காக
அக்கோவிலில் சிவன் அரூபியாய் உண்டு, தன் அடியார் ராஜராஜனின் மனதை படித்தோருக்கு மட்டும் அவள் புரியும அரூபியாய் எக்காலமும் உண்டு
அங்கு சண்டிகேஸ்வரர் வடிவில் இருப்பது அவனே, அந்த 64ம் நாயனரே
அங்கிருக்கும் சண்டிகேஸ்வரரை அவனாக நினைத்து வணங்குங்கள், சிவன் உடனே உங்களுக்கு அருள் புரிவார்
ராஜராஜ சோழனுக்கு பின் அக்கோவிலுக்கு தேரோட்டம் இல்லை, நேர்ச்சை இல்லை கொண்டாட்டமில்லை இன்றும் மற்ற ஆலயங்களை போல மாதாந்திர விழாவோ காது குத்தோ மொட்டை அடிப்போ எதுவும் அங்கு இல்லை
காரணம் அது கொண்டாட்டத்துகுரிய இடம் அல்ல, அது ஒரு மாபெரும் சிவபக்தனின் மனதை சொல்லும் ஒரு கல் காவியம்
அங்கே அமர்ந்திருந்து ஆழமான தியானத்தில் மட்டும் அதை படிக்கமுடியும், அதை பார்வையினால் படிக்க படிக்க உங்களை அறியாமல் அவன் மேல் ஒரு அனுதாபமும் பாசமும் கண்ணீரும் வரும்
அவன் சிவனுக்கு செய்தது போல் நாமும் செய்யவேண்டும் எனும் ஒரு பெரும் அலை மனதில் வந்து வந்து மோதி ஆர்பரிக்கும்
இப்படியெல்லாம் வாழ்ந்த இனமா தமிழினம்? அதன் சைவ பெருமை என்ன? உயரம் என்ன? அதை அரும்பாடுபட்டு காக்க வேண்டாமா எனும் பெரும் கனவும் தீர்மானமும் எழும்
ஆம், ஆயிரம் ஆண்டுகளாக ஒவ்வொரு தமிழக இந்து என்பவன் யார்? அவன் எப்படியெல்லாம் வாழ்ந்தான் என்பதை அக்கோவில் மூலமாக சொல்லிகொண்டிருகின்றான் ராஜராஜசோழன், வானமும் பூமியும் உள்ள அளவும் அவன் அந்த கல்காவியத்தின் மூலம் அமைதியாக ஒவ்வொரு இந்துதமிழனிடமும் ஒரு உணர்ச்சியும் பக்தியும் கொடுத்து கொண்டே இருப்பான்
இன்று ஐப்பசி சதயம், அந்த மாமன்னனுக்கு, தமிழகத்தின் மூத்த சிவஞானிக்கு சிவவணக்கம் சொல்வதில் ஒவ்வொரு தமிழக இந்துவும் ஞான கர்வத்தோடு ஆனந்த கண்ணீர் சிந்தி கொண்டிருக்கின்றான்
அவன் பெரும் ஞானியாய் இருந்தான், யூதர்கள கொண்டாடும் சாலமோன் போல தமிழரின் தனிபெரும் ஞான அரசனாய் இருந்தான்
அந்த கோவிலைகட்டும்போதே ஒருகாலத்தில் ஆபத்துவரும் என கணித்து அகழிகள் சூழ அமைத்திருந்தான்
இந்தியாவில் அகழிகள் கொண்ட ஒரே கோவில் அதுதான், அவ்வளவுக்கு காவல் கொடுத்து நடுவில் ஆலயம் அமைத்து அந்த பிரமாண்ட கோபுரத்தை தங்கத்தால் மூடியிருந்தான்
சுற்றிலும் அகழி அதை சுற்றி பசும் வயல்கள் என அந்த அழகான பின்னணியில் அதிகாலை சூரியனால் அந்த கோபுரம் கையிலாயம் போல் ஜொலிப்பதை கண்ணாற கண்டான்
அவனுக்கு அது கயிலாயமாக இருந்தது, அமர்ந்து தவம் செய்யும் இடமாகவும் இருந்தது
அவன் அவையினையே அந்த ஆலய மூலையில்தான் நடத்தினான், அவ்வளவுக்கு அவன் சிவபக்தி இருந்தது
அவன் தமிழன் தமிழ் மன்னன் என பிரித்து பார்க்க கூடாத இந்து மன்னன், இந்நாட்டின் விக்ரமாதித்தன், சமுத்திர குப்தன் போல அவன் பாரத பெரும் அடையாளம்
அந்த அடையாளம் நீண்டகாலமாக கொடுக்கபடாமல் இருந்தது, மோடி அதை கொடுத்தார் இப்போது அவன் புகழ் மெல்ல மெல்ல இந்தியா எங்கும் பரவுகின்றது
ஒருவகையில் அவன் வாளேந்தியது ஆட்சிக்காக அல்ல, பாண்டியருக்கும் சேரருக்கும் எதிராகவும் அல்ல, அவனின் அச்சம் பவுத்தம் மேல் இருந்தது
அவன் பவுத்ததைத்தான் எதிர்த்தான், பவுத்தம் இந்துமதத்தை மீள விழுங்கிவிட கூடாது என காவல் இருந்தான்
அவன் காலத்தில் இலங்கையில் கிழக்காசியா முழுக்க பவுத்தம் ஆதிக்கம் செலுத்தியது, அது தமிழக அரசகுடும்ப குழப்பங்களில் தலையிட்டு மறுபடியும் இங்கே பவுத்தத்தை அரங்கேற்ற முயன்றது
ஆதித்த கரிகாலன் கொலையில் இந்த சதியும் உண்டு, வலுவான சோழ வம்சத்தை வீழ்த்தி உள்ளே புகுந்துவிடலாம் எனும் கணக்கும் இருந்தது
சோழபூமி மீண்டும் பவுத்தம் வசம் செல்லாமல் அது சிவபூமியாக இருக்க காவல் இருந்தவன் அவன், அவ்வகையில் ஆதிசங்கரர் சாயல்
கடாரம் வரை அவன் செல்ல முழு காரணம் அரசு அல்ல, வியாபாரம் அல்ல, தன் பராக்கிரமம் காட்டும் படைநடப்பு அல்ல
அவன் செய்ததெல்லாம் இந்துமதம் வாழ செய்த பெரும் சேவை, இந்துமதத்தை காக்கவும் வளர்க்கவுமே அவன் தன் வாழ்நாள் முழுக்கபாடுபட்டான்
அந்த சைவ காவலனுக்கு, சிவனின் பெரும் அடியார்க்கு, சிவனின் குலமகனாக நின்று இங்கு சைவம் காத்து அழியா காவியத்தை கல்லில் தந்துவிட்டு சென்று , எக்காலமும் இங்குள்ள இந்துக்கள் இந்துக்களாக நிலைக்க மானமும் அறிவும் பொறுப்பும் தந்து சென்ற ராமன் வம்சாவழி வந்த வீரனுக்கு தேசம் பெரும் அஞ்சலிகளை செலுத்துகின்றது.