ராமகிருஷ்ண பரம ஹம்சர்
அவர் பெயர் கதாதர், வங்கத்துக்காரர் சிலை செய்வதும், ஓவியமும் அவருக்கு பிடித்தமான விஷயங்கள் ஆனால் குடும்ப வறுமை அவரை வேறுவழியில் இழுத்து சென்றது. கலைமனம் கொண்டவன் வாழ்வில் வறுமை விளையாடுவது ஒன்றும் ஆச்சரியமல்ல
அந்த ககாதரின் அண்ணன் ஒரு புரோகிதர், அதனால் அவரும் வழிபாடுகளிலும் பூஜை யாகங்களிலும் ஈடுபட்டார், மெல்ல மெல்ல ஆன்மீகத்தில் மூழ்கிய அவருக்கு பல சிந்தனைகள் எழுந்தன
கடவுள் என்பது சிலையா, இல்லை வானலோகத்தில் இருப்பவரா? எல்லாம் அறிந்த தெய்வம் கல்லில் இருக்குமா? இதற்கு ஏன் பூஜைகள் என்றேல்லாம் சிந்தனை சென்றது
தெய்வம் எப்படி இருக்கும்? அது ஏன் வானத்தில் இருக்கின்றது? கோவிலுக்கு மட்டும் வருகின்றது? அது ஏன் மானிடர் வாழ்வில் குறுக்கிடவேண்டும், ஆனால் பக்தி செலுத்தும் எல்லோருக்கும் அது ஏன் தென்படுவதில்லை என ஏராளமான கேள்விகள் அவரில் எழுந்தன
கல்கத்தாவின் பெரும் தெய்வம் அன்னை காளி, அவளிடமே முறையிட்டு சந்தேகம் தீர்க்க சொன்னார். தெய்வம் வரவில்லை
அழைத்தவுடன் எந்த தெய்வம் வரும்? வராது. முழுக்க சோதித்து அவன் விரக்தியின் எல்லைக்கு செல்லும்பொழுது வருவதே தெய்வத்தின் விளையாட்டு
அப்படி கடும் தவத்தில் மூழ்கினாலும் அவருக்கு கடவுள் தெரியவில்லை, அவருக்கு தவமும் கைகூடவில்லை
இனி அன்னை முன்னாலே சாகபோகின்றேன் என வாளை எடுத்துகொண்டு காளி சிலை முன்னால் தன்னையே வெட்ட முயன்றபொழுதுதான் ஒரு ஒளி அவரை ஆட்கொண்டது
அதுமுதல் அவருக்கு ஞானம் விளங்கிற்று, அவருக்கு பெரும் பிரபஞ்ச ஞானம் வசபட்டது, கடவுள் என்பவரை மனதால் உணர தொடங்கினார். தெய்வம் என்பது அடையகூடியது அல்ல உணர கூடியது , மனதால் தெய்வத்தை உணரலாம் எனும் ஞானம் அவருக்குள் குடிகொண்டது
அந்த கதாதர் அந்நொடி ராமகிருஷ்ண பரம்ம ஹம்சரும் ஆனார்.
ஹம்சம் என்றால் ஒரு பறவையினை குறிப்பது அது மேல்நோக்கி பறக்கும் இயல்பை கொண்டது, அதன் தன்மை உன்னதமானது, மேலான சிந்தனை கொண்டவர்களை அந்த பறவைக்கு ஒப்பிடுவார்கள், பரமனின் சிந்தனையில் இருக்கும் அவரும் பரமஹம்சர் என்றானார்
தான் பக்தியில் மூழ்கி ஞானத்தின் உச்சியில் எல்லா தெய்வங்களின் இயல்பினையும் உணர்ந்ததாக போதனை செய்ய தொடங்கினார்
அவருக்கு கூட்டம் கூடிற்று, பெரும் புகழ் உண்டாயிற்று. தாயின் வேண்டுகோளுக்கினங்க தான் முன்னறிவித்த பெண்ணான சாரதா தேவியினையே மணந்தார்.
எல்லா பெண்களும் தனக்கு காளியின் அடையாளம் என போதித்த அவர் , ஒருநாள் தன் மனைவியினை காளிவடிவமாக கருதி வணங்கவும் செய்தார்
மிகபெரிய தத்ததுவங்களை எளிதான கதையில் விளக்குவது அவரின் சுபாவமாய் ஞானமாய் இருந்தது, அது அவருக்கு பெரும் புகழை கொடுத்தது
எண்ணற்ற சீடர்களையும் கொடுத்தது
இந்த பெரும் ஞானகடலில்தான் ஒரு முத்து விளைந்து உலகிற்கெல்லாம் இந்திய ஒளியினை கொடுத்தது, அவர்தான் விவேகானந்தர்
பெரும் அறிவாளியும், பெரும் ஆற்றல் வாய்ந்த திறனும் கொண்டிருந்த விவேகானந்தருக்கு இந்திய பெரும் ஞான மரபினை போதித்தவர் பரமஹம்சர்
அந்த பெரும் ஞான வெள்ளத்தில் வளர்ந்ததாலே விவேகானந்தர் பெரும் அசாத்திய ஞானியாக வளர்ந்து நின்றார்
இந்துமதத்தில் மிக சிறந்த ஞானிகள் வரிசையில் இடம்பிடிக்கும் ஞான பெருமகன் அந்த பரம்ம ஹம்சர்
அவர் மடத்தில் ஆரம்பரமில்லை, பெரும் ஆரவாரமில்லை , நள்ளிரவு கூத்துக்கள் இல்லை, எந்த சர்ச்சையுமில்லை
ஆனால் அவரிடமும் எல்லா தெய்வங்களும் பேசின, சிவன் முதல் காளி வரை, இயேசுவரை அவர் கண்டதாக அவரே சொல்லி இருக்கின்றார்
எல்லா பெண்களும் தனக்கு காளியின் அடையாளம் என போதித்த அவர் , ஒருநாள் தன் மனைவியினை காளிவடிவமாக கருதி வணங்கவும் செய்தார்
ஒரு நல்ல இந்து துறவி எப்படி இருக்க வேண்டும் என உலகிற்கு சொன்ன அந்த மகானுக்கு இன்று நினைவுநாள்
தர்ம வழியில் நிம்மதியாய் நீ வாழுங் காலத்தில் லோக ஜனங்களுடைய புகழையும், இகழையும் பொருட்படுத்தாதே”
“பக்தியையும், பிரேமையையும் பற்றிய ரகசியங்களைத் தினமும், உன் ஆயுள் உள்ளளவும் கற்றுக் கொள். அது உனக்கு எப்போதும் பலனைத் தரும். ஆசையை அகற்றிப் பற்றுதலற்றுக் கர்மம் புரிவதே உனக்கான சிறந்த வழியாகும்.”
“அநித்யத்தின் மூலமாய் நித்யத்தையும், மாயையின் உதவியால் உண்மையையும், உருவத்தின் உதவியால் அருவத்தையும் அடைய வேண்டும். உன்னிடம் தீவிர நம்பிக்கை இருக்குமானால் நீ மனமுருகித் தேடும் பொருள் உமக்குக் கிடைக்கும்”
“விறகில் தீ இருப்பதை உணர்ந்தவன் ஞானி. அதில் தீ மூட்டி உணவு சமைத்து சாப்பிட்டவன் விஞ்ஞானி”
“ஒரு கெட்ட பழக்கத்தைவிட வேண்டும் என்றால், ஒரு நல்ல பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு தீவிரமான முயற்சி தேவை”
“கீழே கொட்டிய கடுகை பொருக்கி எடுப்பது போல, பல திசைகளிலும் ஓடும் மனதை ஒரு நிலைப்படுத்துவது எளிதன்று. ஆனால் வைராக்கியத்தால் அதைச் சாதிக்க முடியும்.”
‘முற்பிறவியில் நடந்து கொண்டதற்கு ஏற்பவே பெரும்பாலும் எல்லாம் நடக்கிறது. ஏதோ திடீரென
நடப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்”
“உன்னிடம் தீவிர நம்பிக்கை இருக்குமானால்நீ மனமுருகித் தேடும் பொருள் உனக்கு கிடைத்தே தீரும்”
“வேலை செய்வது நல்லது அது மனதை பண்படுத்துகிறது. ஆனால் பலன் கருதாமல் செய்ய வேண்டும்”
“ஈரமுள்ள குச்சி தீப்பற்றாது. அதுபோல் உலக ஆசை கொண்டவனுக்கு கடவுள் அருள் கிடைக்காது”
“ஆழ்ந்த நம்பிக்கை இமயமலை போன்றது அதை எவராலும் அசைக்க முடியாது”
“வண்டு தேன் மலரைத் தவிர வேறு எதன் மீதும் உட்காராது. அதுபோல உண்மையான துறவி இறை
ஆனந்தத்தைத் தவிர வேறு ஆனந்தங்களை ஏற்றுக் கொள்ளமாட்டான்”
“அறிவு பலவீனமானது, நம்பிக்கை பலமானது”
இந்தியாவின் மற்ற ஞானகுருக்களை விட ராமகிருஷ்ணர் தனித்து தெரிந்தார், அவரின் ஆன்மீகத்தில் வாழ்வியலும் சமூகத்துக்கான போதனைகளும் மிகுந்திருந்தன
இந்த தனிதன்மைதான் விவேகானந்தர் எனும் மகா ஞானியினை உருவாக்கிற்று, உலக வாழ்வோடு இந்துமதத்தை இணைத்துபார்க்கும் அந்த பெருஞானம் ராமகிருஷ்ணரிடம் இருந்தே விவேகானந்தருக்கு வந்தது
எந்த அவதாரமும் உலகில் வரும்பொழுது சில துணை அவதாரங்கள் வரும் அவ்வகையில் விவேகானந்தர் எனும் ஞானபெருமகனை உருவாக்க வந்தவர் ராமகிருஷ்ணர்
மதமாற்றமும் அறியாமையில் ஐரோப்பிய மோகமும் பெருகி இனி இந்தியா மேல்நாட்டுமயமாகும் இந்துமதம் பின்னடையும் என கருதபட்ட 18ம் நூற்றாண்டில் அவரித்த அந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் பெரும் ஞானம் அடைந்து அதன் தன் சீடன் விவேகானந்தரிடம் விட்டுசென்றார்
விவேகானந்தரின் வீரமும் தைரியமும் ஞானமும் நிரம்பிய போதனைதான் ஆர்.எஸ்.எஸ் பாஜகவின் அடிப்படை கொள்கையாகி இன்று இந்தியாவினை மாற்றிகொண்டிருக்கின்றது
அந்த மூல விதையினை இட்டவர் ராமஹம்சர், ஒரு அவதாரத்தை கைகாட்ட வந்த மகான அவர்
50 வயதிலே முடிந்துவிட்ட அவரின் வாழ்வானது ஒரு ஞான பொறி பெரும் ஞானபிழம்பினை ஏற்றிவைக்க வந்தது என்பதோடு முடிந்தாலும் இன்றும் என்றும் எரியும் அந்த பெரும் ஞான நெருப்பில் அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார்
ஞானிகள் எக்காலமும் அழிவதில்லை, அந்த பரமஹம்சர் விவேகானந்தரின் குருவாக எக்காலமும் இத்தேசத்தை ஆசீர்வதித்து கொண்டே இருப்பார்
February 2024
“ஒரு மனிதனுக்கு கிடைக்க வேண்டிய பெரிய பாக்கியம் நல்ல குரு, எனக்கு அப்படி ஒரு மகத்துவமான குரு கிடைத்தார், உலகின் மிகசிறந்த ஆத்மா என அவரை என்னால் சொல்லமுடியும்
நான் பேசுவதெல்லாம் என் சிந்தனையெல்லாம் என்னுடையவை அல்ல, அவர் போதித்த மாபெரும் சிந்தனையின் ஒரு துளியினைத்தான் உங்களிடம் பகிர்ந்துகொள்கின்றேன் என்றால் அவரின் மகத்துவம் எப்படியானது என்பதை புரிந்துகொள்ளலாம்
வேதாந்த தத்துவங்களைப பிரபஞ்ச ரகசியங்களை அவர்போல் புரிந்த ஒரு மகானை, அவரை போல் எளிதாக விளக்கியவரை நான் அறிந்தவரை யாருமில்லை
நான் நிழல் அவரே நிஜம்
அந்த ஞானமலரின் தேன் குவியலில் இருந்துதான் சில துளி தேனை உங்களுக்கெல்லாம் தருகின்றேன், அம்மாதிரி மாபெரும் ஞானிகள் பல்லாயிரம் ஆண்டுக்கு ஒருமுறைதான் தோன்றுவார்கள்”
தன் குரு ஞாதர் பற்றி சுவாமி விவேகானந்தர் சொன்னது
ஆம், இந்திய ஞானிகளில் தனி இடம் வகிப்பவர் அந்த காளி பக்தர் ராமகிருஷ்ண பரமஹம்சர்
அவர் பெயர் கதாதர், வங்கத்துக்காரர் சிலை செய்வதும், ஓவியமும் அவருக்கு பிடித்தமான விஷயங்கள் ஆனால் குடும்ப வறுமை அவரை வேறுவழியில் இழுத்து சென்றது. கலைமனம் கொண்டவன் வாழ்வில் வறுமை விளையாடுவது ஒன்றும் ஆச்சரியமல்ல
அந்த ககாதரின் அண்ணன் ஒரு புரோகிதர், அதனால் அவரும் வழிபாடுகளிலும் பூஜை யாகங்களிலும் ஈடுபட்டார், மெல்ல மெல்ல ஆன்மீகத்தில் மூழ்கிய அவருக்கு பல சிந்தனைகள் எழுந்தன
கடவுள் என்பது சிலையா, இல்லை வானலோகத்தில் இருப்பவரா? எல்லாம் அறிந்த தெய்வம் கல்லில் இருக்குமா? இதற்கு ஏன் பூஜைகள் என்றேல்லாம் சிந்தனை சென்றது
தெய்வம் எப்படி இருக்கும்? அது ஏன் வானத்தில் இருக்கின்றது? கோவிலுக்கு மட்டும் வருகின்றது? அது ஏன் மானிடர் வாழ்வில் குறுக்கிடவேண்டும், ஆனால் பக்தி செலுத்தும் எல்லோருக்கும் அது ஏன் தென்படுவதில்லை என ஏராளமான கேள்விகள் அவரில் எழுந்தன
கல்கத்தாவின் பெரும் தெய்வம் அன்னை காளி, அவளிடமே முறையிட்டு சந்தேகம் தீர்க்க சொன்னார். தெய்வம் வரவில்லை
அழைத்தவுடன் எந்த தெய்வம் வரும்? வராது. முழுக்க சோதித்து அவன் விரக்தியின் எல்லைக்கு செல்லும்பொழுது வருவதே தெய்வத்தின் விளையாட்டு
அப்படி கடும் தவத்தில் மூழ்கினாலும் அவருக்கு கடவுள் தெரியவில்லை, அவருக்கு தவமும் கைகூடவில்லை
இனி அன்னை முன்னாலே சாகபோகின்றேன் என வாளை எடுத்துகொண்டு காளி சிலை முன்னால் தன்னையே வெட்ட முயன்றபொழுதுதான் ஒரு ஒளி அவரை ஆட்கொண்டது
அதுமுதல் அவருக்கு ஞானம் விளங்கிற்று, அவருக்கு பெரும் பிரபஞ்ச ஞானம் வசபட்டது, கடவுள் என்பவரை மனதால் உணர தொடங்கினார். தெய்வம் என்பது அடையகூடியது அல்ல உணர கூடியது , மனதால் தெய்வத்தை உணரலாம் எனும் ஞானம் அவருக்குள் குடிகொண்டது
அந்த கதாதர் அந்நொடி ராமகிருஷ்ண பரம்ம ஹம்சரும் ஆனார்.
ஹம்சம் என்றால் ஒரு பறவையினை குறிப்பது அது மேல்நோக்கி பறக்கும் இயல்பை கொண்டது, அதன் தன்மை உன்னதமானது, மேலான சிந்தனை கொண்டவர்களை அந்த பறவைக்கு ஒப்பிடுவார்கள், பரமனின் சிந்தனையில் இருக்கும் அவரும் பரமஹம்சர் என்றானார்
தான் பக்தியில் மூழ்கி ஞானத்தின் உச்சியில் எல்லா தெய்வங்களின் இயல்பினையும் உணர்ந்ததாக போதனை செய்ய தொடங்கினார்
அவருக்கு கூட்டம் கூடிற்று, பெரும் புகழ் உண்டாயிற்று. தாயின் வேண்டுகோளுக்கினங்க தான் முன்னறிவித்த பெண்ணான சாரதா தேவியினையே மணந்தார்.
எல்லா பெண்களும் தனக்கு காளியின் அடையாளம் என போதித்த அவர் , ஒருநாள் தன் மனைவியினை காளிவடிவமாக கருதி வணங்கவும் செய்தார்
மிகபெரிய தத்ததுவங்களை எளிதான கதையில் விளக்குவது அவரின் சுபாவமாய் ஞானமாய் இருந்தது, அது அவருக்கு பெரும் புகழை கொடுத்தது
எண்ணற்ற சீடர்களையும் கொடுத்தது
இந்த பெரும் ஞானகடலில்தான் ஒரு முத்து விளைந்து உலகிற்கெல்லாம் இந்திய ஒளியினை கொடுத்தது, அவர்தான் விவேகானந்தர்
பெரும் அறிவாளியும், பெரும் ஆற்றல் வாய்ந்த திறனும் கொண்டிருந்த விவேகானந்தருக்கு இந்திய பெரும் ஞான மரபினை போதித்தவர் பரமஹம்சர்
அந்த பெரும் ஞான வெள்ளத்தில் வளர்ந்ததாலே விவேகானந்தர் பெரும் அசாத்திய ஞானியாக வளர்ந்து நின்றார்
இந்துமதத்தில் மிக சிறந்த ஞானிகள் வரிசையில் இடம்பிடிக்கும் ஞான பெருமகன் அந்த பரம்ம ஹம்சர்
அவர் மடத்தில் ஆரம்பரமில்லை, பெரும் ஆரவாரமில்லை , ஆட்டம்பாட்டமில்லை, எந்த சர்ச்சையுமில்லை
ஆனால் அவரிடமும் எல்லா தெய்வங்களும் பேசின, சிவன் முதல் காளி வரை, இயேசுவரை அவர் கண்டதாக அவரே சொல்லி இருக்கின்றார்
எல்லா பெண்களும் தனக்கு காளியின் அடையாளம் என போதித்த அவர் , ஒருநாள் தன் மனைவியினை காளிவடிவமாக கருதி வணங்கவும் செய்தார்
ஒரு நல்ல இந்து துறவி எப்படி இருக்க வேண்டும் என உலகிற்கு சொன்ன அந்த மகானுக்கு இன்று அவதார நாள்
தர்ம வழியில் நிம்மதியாய் நீ வாழுங் காலத்தில் லோக ஜனங்களுடைய புகழையும், இகழையும் பொருட்படுத்தாதே”
“பக்தியையும், பிரேமையையும் பற்றிய ரகசியங்களைத் தினமும், உன் ஆயுள் உள்ளளவும் கற்றுக் கொள். அது உனக்கு எப்போதும் பலனைத் தரும். ஆசையை அகற்றிப் பற்றுதலற்றுக் கர்மம் புரிவதே உனக்கான சிறந்த வழியாகும்.”
“அநித்யத்தின் மூலமாய் நித்யத்தையும், மாயையின் உதவியால் உண்மையையும், உருவத்தின் உதவியால் அருவத்தையும் அடைய வேண்டும். உன்னிடம் தீவிர நம்பிக்கை இருக்குமானால் நீ மனமுருகித் தேடும் பொருள் உமக்குக் கிடைக்கும்”
“விறகில் தீ இருப்பதை உணர்ந்தவன் ஞானி. அதில் தீ மூட்டி உணவு சமைத்து சாப்பிட்டவன் விஞ்ஞானி”
“ஒரு கெட்ட பழக்கத்தைவிட வேண்டும் என்றால், ஒரு நல்ல பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு தீவிரமான முயற்சி தேவை”
“கீழே கொட்டிய கடுகை பொருக்கி எடுப்பது போல, பல திசைகளிலும் ஓடும் மனதை ஒரு நிலைப்படுத்துவது எளிதன்று. ஆனால் வைராக்கியத்தால் அதைச் சாதிக்க முடியும்.”
‘முற்பிறவியில் நடந்து கொண்டதற்கு ஏற்பவே பெரும்பாலும் எல்லாம் நடக்கிறது. ஏதோ திடீரென
நடப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்”
“உன்னிடம் தீவிர நம்பிக்கை இருக்குமானால்நீ மனமுருகித் தேடும் பொருள் உனக்கு கிடைத்தே தீரும்”
“வேலை செய்வது நல்லது அது மனதை பண்படுத்துகிறது. ஆனால் பலன் கருதாமல் செய்ய வேண்டும்”
“ஈரமுள்ள குச்சி தீப்பற்றாது. அதுபோல் உலக ஆசை கொண்டவனுக்கு கடவுள் அருள் கிடைக்காது”
“ஆழ்ந்த நம்பிக்கை இமயமலை போன்றது அதை எவராலும் அசைக்க முடியாது”
“வண்டு தேன் மலரைத் தவிர வேறு எதன் மீதும் உட்காராது. அதுபோல உண்மையான துறவி இறை
ஆனந்தத்தைத் தவிர வேறு ஆனந்தங்களை ஏற்றுக் கொள்ளமாட்டான்”
“அறிவு பலவீனமானது, நம்பிக்கை பலமானது”
இந்தியாவின் மற்ற ஞானகுருக்களை விட ராமகிருஷ்ணர் தனித்து தெரிந்தார், அவரின் ஆன்மீகத்தில் வாழ்வியலும் சமூகத்துக்கான போதனைகளும் மிகுந்திருந்தன
இந்த தனிதன்மைதான் விவேகானந்தர் எனும் மகா ஞானியினை உருவாக்கிற்று, உலக வாழ்வோடு இந்துமதத்தை இணைத்துபார்க்கும் அந்த பெருஞானம் ராமகிருஷ்ணரிடம் இருந்தே விவேகானந்தருக்கு வந்தது
எந்த அவதாரமும் உலகில் வரும்பொழுது சில துணை அவதாரங்கள் வரும் அவ்வகையில் விவேகானந்தர் எனும் ஞானபெருமகனை உருவாக்க வந்தவர் ராமகிருஷ்ணர்
மதமாற்றமும் அறியாமையில் ஐரோப்பிய மோகமும் பெருகி இனி இந்தியா மேல்நாட்டுமயமாகும் இந்துமதம் பின்னடையும் என கருதபட்ட 18ம் நூற்றாண்டில் அவரித்த அந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் பெரும் ஞானம் அடைந்து அதன் தன் சீடன் விவேகானந்தரிடம் விட்டுசென்றார்
விவேகானந்தரின் வீரமும் தைரியமும் ஞானமும் நிரம்பிய போதனைதான் ஆர்.எஸ்.எஸ் பாஜகவின் அடிப்படை கொள்கையாகி இன்று இந்தியாவினை மாற்றிகொண்டிருக்கின்றது
அந்த மூல விதையினை இட்டவர் ராமஹம்சர், ஒரு அவதாரத்தை கைகாட்ட வந்த மகான அவர்
50 வயதிலே முடிந்துவிட்ட அவரின் வாழ்வானது ஒரு ஞான பொறி பெரும் ஞானபிழம்பினை ஏற்றிவைக்க வந்தது என்பதோடு முடிந்தாலும் இன்றும் என்றும் எரியும் அந்த பெரும் ஞான நெருப்பில் அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார்
ஞானிகள் எக்காலமும் அழிவதில்லை, அந்த பரமஹம்சர் விவேகானந்தரின் குருவாக எக்காலமும் இத்தேசத்தை ஆசீர்வதித்து கொண்டே இருப்பார்
இன்றும் அவரின் ராமகிருஷ்ண மடம் நடத்தும் பள்ளி கல்லூரிகளில் படித்து வருபவர்கள், அவரின் மடத்தில் தொடர்பில் இருப்பவர்கள் எல்லோரிடமும் தேசபற்றும் மத அபிமானமும் எல்லோரையும் விட கொஞ்சம் அதிகமாக இருப்பதை காணமுடியும்
அந்த மகான் எல்லா நாளும் எல்லாருக்கும் போதித்து கொண்டேதான் இருக்கின்றார், வெகு சிலருகுத்தான் அதை புரிந்துகொள்ளும் பாக்கியம் கிடைக்கின்றது
அப்படி புரிந்துகொண்டோர் கொடுத்து வைத்தவர்கள் , பிரபஞ்சத்தின் ஆசிபெற்றவர்கள்
கருணாநிதியின் தாய் தந்தைக்கெல்லாம் பேருந்து நிலையம் , சிலை வைக்கும் நாட்டில் விவேகானந்தர் எனும் மாபெரும் ஞானியினை தன் ஞானமகனாக தந்த நாட்டில் பெரும் அடையாளமில்லை என்பது முரணான விஷயம்
விவேகானந்தர் எனும் மாபெரும் ஞானமகனின் குருவும் ஞானதந்தையும் அவர்தான், அந்த ஞானபீடத்தின் அஸ்திபாரமும், அந்த ஞானமறத்தின் ஆணிவேரும், அந்த் ஞானசமுத்திரத்தின் ஆழமும் அவர்தான்
அந்த மஹானை நினைவுகூர்ந்து தான் பெற்ற ஞானத்தை தன் ஞானசீடன் மூலம் உலகுக்கு கொடுத்து பலமான வளமான ஞானமான இந்தியா உருவாக வழிசெய்த அந்த மகானை நினைந்து தேசமும் உலகவாழ் இந்துசமூகமும் மலர் தூவி வணங்கி கொண்டிருகின்றது.