பஞ்சாபிய சிங்கம் லாலா லாஜ்பதி ராய்

அந்த பஞ்சாபிய சிங்கம் மேல் பாரதிக்கு தனி அன்பும் அபிமானமும் இருந்தது, அவன் எழுதிய வரிகளோடே அந்த உத்தமான இந்தியனுக்கு அஞ்சலி செலுத்தலாம்

“விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும்
அதன்கதிர்கள் விரைந்து வந்து
கண்ணகத்தே ஒளிதருதல் காண்கிலமோ?
நினையவர் கனன்றிந் நாட்டு
மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும்
யாங்களெலாம் மறக்கொ ணாதெம்
எண்ணகத்தே லாஜபதி இடையின்றி
நீவளர்தற் கென்செய் வாரே
ஒருமனிதன் தனைப்பற்றிப் பலநாடு
கடத்தியவர்க்கு ஊறு செய்தல்
அருமையில்லை எளிதினவர் புரிந்திட்டா
ரென்றிடினும் அந்த மேலோன்
பெருமையைநன் கறிந்தவனைத் தெய்வமென
நெஞ்சினுளே பெட்பிற் பேணி
வருமனிதர் எண்ணற்றார் இவரையெலாம்
ஓட்டியெவர் வாழ்வ திங்கே?
பேரன்பு செய்தாரில் யாவரே
பெருந்துயரர்ம் பிழைத்து நின்றார்?
ஆரன்பு நாரணன்பால் இரணியன்சேய்
செய்ததனால் அவனுக் குற்ற
கோரங்கள் சொலத் தகுமோ? பாரதநாட்
டிற்பக்தி குலவி வாழும்
வீரங்கொள் மனமுடையார் கொடுந்துயரம்
பலவடைதல் வியத்தற் கொன்றோ?”

ஆம், அந்த லாலா லஜ்பதி ராய் இந்திய சுதந்திரத்தின் விடிவெள்ளி, காந்தி பிழைப்பு தேடி தென்னாப்ரிக்கா சென்ற காலத்திலே இங்கு சுதந்திரத்துக்கு போராடிய மாமனிதர்,

இந்திய வரலாற்றில் மறைக்கபட்ட பெரும் தலைவர்.

அவரும் திலகரும் விபின் சந்திரபால் என்பவர்களே 1857க்கு பின்னரான இந்திய சுதந்திர போரை முன்னெடுத்தனர், அந்த வேகத்தில் அதாவது 1907லே இந்தியா சுதந்திரம் பெறும் வாய்பும் இருந்தது

லால் பால் பால் கூட்டணி ( (Lal – Bal- Pal) என அந்த முப்பெரும் தலைவர்கள் நாட்டில் எழுச்சியினை கொடுத்தனர், லாலா அன்றே வழக்கறிஞர் மற்றும் வியாபார குடும்பம். அது இஸ்லாமை தழுவிவிட்டு பின் தாய்மதம் மாறியது எனும் வகையில் உருது உட்பட எல்லா மொழியும் லஜ்பதிக்கு தெரிந்திருந்தது.

1906ம் ஆண்டு ஆசிய நாடான ஜப்பான் ரஷ்யாவினை தூக்கி போட்டு மிதித்திருந்தது, இது போரில் ஐரோப்பிய நாடுகளை வெல்லும் நம்பிக்கையினை ஆசியாவுக்கு கொடுத்தது

இதனால் அஞ்சிய பிரிட்டிசார் பல அதிரடிகளில் இறங்கினர், மத ரீதியாக முஸ்லீம் லீக் எழும்பியது வங்க பிரிவினை, டெல்லி தலைநகரானது என அவர்கள் அதிரடி காட்டினர்

மத ரீதியாக வெள்ளையன் ஆட திலகர் அதே வழியாக இந்துக்களை மத ரீதியாக இணைத்தால் இந்திய விடுதலை சாத்தியம் என முழங்கினார், இந்து மகா சபை எல்லாம் வந்தது

இந்த பின்னடைவான நேரத்தில் நாட்டுக்கு பெரும் வலு சேர்த்தனர் இந்த மூவரும், மூவரின் பெயரை கேட்டாலே பிரிட்டிஷ் அரசு அலறியது

திலகர் “சுதந்திரம் எம் பிறப்புரிமை” என முழங்கினார், லாலா பஜபதிராயின் சொல்லுக்கு தேசம் முழுக்க கட்டுபட்டது

சிதம்பரனாரும் பாரதியாரும் தமிழகத்தில் இருந்து முழு ஆதரவையும் வழங்கினர், லாலா லஜபதிராயின் அதிரடிகளில் அரண்டு போயிருந்தது அரசு

பிரிட்டனின் ரகசிய உளவு அறிக்கை இப்படி சொன்னது

” பஞ்சாப் எல்லைப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் இந்தியப் படைவீரர்கள் புரட்சிக்குத் தயாராக உள்ளனர். அவர்களது தலைவர் லாலா லஜ்பத் ராய்.

அவரிடமிருந்து ஒரேஒரு வார்த்தை. அவர்கள் கலகம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். கிராமப்புறங்களில் மக்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வரி கொடுக்காமல் இருக்க ஆரம்பித்துவிட்டார்கள். பிரிட்டிஷ் அரசுக்கும் ராணுவத்துக்கும் தேவையான பொருட்களை விற்பனை செய்யவில்லை. காவல்துறையினரையும் ராணுவத்தினரையும் தேசத்துரோகிகள் என மக்கள் சீண்டுகின்றனர்; அவர்களை ஒதுக்குகின்றனர்.

அவர்களைப் பதவி விலகச் சொல்கிறார்கள்.

இதற்கெல்லாம் பின்னால் இருப்பது ஆரிய சமாஜத்தின் ஒரு ரகசியக் குழு. அதன் பின்னால் இருப்பவர் லாலா லஜ்பத் ராய் என்கிற கத்ரி வழக்கறிஞர்தான். இவர் பஞ்சாபின் காங்கிரஸ் பிரதிநிதியாக இங்கிலாந்துக்கு வந்தவர்.

அவர் ஓர் அரசியல் ஆர்வலர், புரட்சியாளர்;

அவருக்கு உந்துசக்தியாக இருப்பது, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது அவருக்கு இருக்கும் உக்கிரமான வெறுப்பு, எல்லாவற்றுக்கும் மேல் மக்களின் பேராதரவு”

பிரிட்டன் அரசு அவரை குறித்து அச்சம் கொண்டது, அவரை தொடர்ந்து கண்காணித்தது

ஐரோப்பா என பல இடங்களில் சுற்றி தேசபக்தர்களை ஒன்றிணைத்த லாலாவிடம் சென்பராமன் போன்றோர் ஜெர்மன் ஆதரவுடன் இந்திய விடுதலை பற்றி பேசினார்கள், ஜெர்மனுக்கும் பிரிட்டனுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை நம் சுதந்திரத்தை நாமே அடைவோம் என்றார் லாலா

யாரும் செய்யா ஒரு காரியத்தை லாலா அன்றே செய்தார் அது அமெரிக்காவில் இருந்து இந்திய விடுதலைக்கு திட்டம் வகுத்தது, அதில் அவர் ஈடுபடும் பொழுதுதான் ஒரு பேராபத்தை கண்டார்

ஆம், அங்குதான் அவருக்கு பல திட்டங்கள் புரிந்தன‌

இந்தியாவுக்கு வெளியே சாவர்க்கர், லாலா, என பலர் இந்திய விடுதலைக்கு பாடுபட, சில இஸ்லாமியர்கள் வேறுமாதிரி திட்டமிட்டனர்

அவர்கள் துருக்கிய ஆட்டோமன் சாம்ராஜ்யத்துடன் சேர்ந்து ஆப்கன் வழியாக புகுந்து இந்தியாவில் கலிபாக்கள் ஆட்சியினை நடத்த முயன்றனர்

ஆம் இந்தியாவுக்கு அப்படியும் ஒரு சவால் இருந்தது, இன்னும் சோவியத் யூனியனின் எழுச்சி குழப்பங்களை கொடுத்தது

இந்நிலையில்தான் முதல் உலகபோர் வெடித்தது, பிரிட்டன் குறிவைத்து ஆட்டோமன் துருக்கியரை வீழ்த்தியது, இதனால் காலிபாக்களின் ஆட்சி இங்கு வர வாய்ப்பில்லாமல் போனது

இனி அவர்கள் குழப்பம் செய்ய வழியில்லை என்பதால் இந்தியாவில் லாலா , திலகர் போன்றவர்களை பலகீனமாக்கி அவர்களை மங்க செய்து பின் அழிக்கும் திட்டத்துக்கு வந்தான் பிரிட்டிஷ்காரன்

வ.உ.சி முதல் திலகர் லாலா என எல்லோரும் மங்க வைக்கபட்டனர்

விளைவு காட்சிகள் மாறின,

லாலா கல்விசாலையும் தொடங்கினார், அதில் படித்தவனே பகத்சிங், ஆம் அவன் அவரின் சீடனாயிருந்தான்

இது போல பஞ்சாப் நேஷனல் வங்கி , லஷ்மி இன்சூரன்ஸ் என எதிர்கால இந்தியாவுக்கு தேவையான எல்லாமும் உருவாக்கி கொண்டிருந்தார் லாலா

லாலாவினை நேரடியாக கொன்றால் தேசம் கொதிக்கும் என உணர்ந்த பிரிட்ட்ஷ்காரன் , காந்திக்கு வெளிச்சம் கொடுத்து லாலாவின மங்க செய்தான்

ஆனாலும் காந்திக்கு நிகரான தலைவராக நின்றார் லாலா, தேசம் லாலா பக்கமே சரிந்திருந்தது

இந்நிலையில்தான் 1928ல் சைமன் கமிஷன் என்றொரு கமிஷன் வந்தது, அது இந்தியருக்கான நலம் சொல்லும் கமிஷனாம் ஆனால் இந்தியர் யாரும் இல்லை

இந்தியர் இடம்பெறா கமிஷனில் இந்திய நலம் எப்படி காக்கபடும்?

இதை கண்டித்து தேசம் பொங்கிற்று, லாலா இதை கடுமையாக சாடி லாகூரில் ஊர்வலம் நடத்தினார், அப்பொழுதுதான் தான் நினைத்த கொடுமையினை அரங்கேற்றினான் பிரிட்ட்ஷ்காரன்

ஆம் சாண்டர்ஸ் எனும் காவலனுக்கு ரகசிய உத்தரவு கொடுக்கபட்டது, அவனின் கைகூலி படை காவலர் உடை அணிந்து லாலாவினை மண்டையில் அடித்தது மண்டை உடைந்து லாகூர் மண்ணில் வீழ்ந்த லாலா உயிருக்கு போராடி இதே நவம்பர் 17ல் இறந்தார்

இதன் பின்பே பகத்சிங் சாண்டர்ஸை கொன்று பழிதீர்த்தான், லாலா லஜபதிராயின் வாரிசாக எழும்பிய பகத்சிங்கையும் கொன்றான் பிரிட்ட்ஷ்காரன்

இதனாலே நேதாஜி இந்தியாவிலே இருக்காமல் தப்பி சென்றார், அவரையும் இங்கேயே கொல்ல முயற்சிகள் நடந்தன‌

ஆம் இந்திய சுதந்திர வரலாற்றின் விசித்திரம் அது

ஆங்கிலேயனுக்கு எதிராக கப்பல் விட்ட சிதம்பரம் பிள்ளைக்கு செக்கிழுப்பு கொடுமை கூடவே சொத்துபறிப்பு

சுப்பிரமணியம் சிவாவுக்கு தொழுநோய் சாவு, பாரதிக்கு நாடு நாடாய் விரட்டி அடி. சாவர்கக்ருக்கு அந்தமானில் கடும் சிறை , நேதாஜிக்கு கொலை மிரட்டல் சிறை. லாலா லஜபதி ராய்க்கு மண்டையில் சாகும் அளவு அடி. இப்படித்தான் இருந்திருக்கின்றது இந்திய சுதந்திர போராட்டம்,

சிலரை மட்டுமே சுதந்திர போராட்டத்திற்கு தியாகம் செய்தவர்கள் அதுவும் எப்படி மாட மாளிகையில் இருந்து கொண்டு. இவர்கள் செக்கு இழுத்ததாகவோ ,கல் உடைத்ததாகவோ, அடிப்படை வசதி கூட இல்லாத காலாப்பாணி போன்ற சிறையில் எல்லாம் துன்புறுத்த படவே இல்லை . மற்றவரெல்லாம் சும்மா செத்தவர்கள்.

நிச்சயம் இந்திய தேசபிதா என சொல்லும் எல்லா தகுதியும் லாலாவுக்கு உண்டு, திலகருக்கு உண்டு, நேதாஜிக்கும் உண்டு

இன்று லாலாவின் (17 / 11) நினைவு நாள்.

அன்று லாலா அடிபட்டவுடன் தென்னகம் பொங்கிற்று, திருப்பூரில் லாலா போலவே அடிபட்டு செத்தான் கொடிகாத்த குமரன்

தமிழக தேசபற்று அப்படி இருந்தது

லாலாவும் குமரனும் இன்னும் பகத்சிங்கும் சாகும் பொழுது, தேசத்துக்காய் உயிரை விட்டார்கள்

தேசபற்றில் அப்படி இருந்த தமிழகம்தான் திராவிட கும்பலின் அட்டகாசத்தில் தன்னிலை மறந்தது

ஆம் இந்தியாவினை துண்டு துண்டாய் உடைக்கும் ஒரு விபரீத திட்டத்துக்கு ராம்சாமி கோஷ்டியும் பெரும் துணை செய்தது. இந்தியும் இந்துமதமும் தமிழனை இந்தியாவில் இணைத்து வைத்திருப்பது பொறுக்காமல் அச்சங்கிலியினை உடைக்க நினைத்தன..

லாலா லஜபதி ராய் மிக சரியான நேரத்தில் உதித்து உரிய காலம் வரை இங்கு போராட்டத்தை இழுத்து சென்றவர், அவர் வந்த காலமும் ஏற்றிவைத்த பெரும் சோதியும் சாதாரணம் அல்ல‌

முதல் உலகப்போருக்கு முன்பே அவர் தீவிரமாக உழைத்திராவிட்டால் இந்தியர்கள் காலிபாக்களின் வலையில் விழுந்திருப்பர், மொகலாய அரசு போல் காலிபா அரசு தொடர்ந்திருக்கும்

அதை தடுத்தது லாலா போன்றோரின் உழைப்பு,

நாம் இந்துக்கள் என்றும் இந்து உணர்ச்சி கொண்டவர்கள் என்றும் நமக்கு தேவை எஜமானன் அல்ல தேசம், சுதந்திர தேசம் என சொன்னவர்கள் அவர்கள்

அன்றே எச்சரித்து, ஒரு காலமும் இங்கு நன்மை விளையாது என சொல்லி பகத்சிங், நேதாஜி போன்றோர் வர காரணமும் அவரே

அவரிடம் போரிடும் திட்டமும் இருந்தது, வரிகொடுக்காமல் பிரிட்டிஷ்காரனை ஓட அடிக்கும் சுதேசி திட்டம் இருந்தது

இந்த வரிகொடா திட்டத்தைத்தான் காந்தி பிடித்தாரே தவிர அது அவரின் சொந்த சரக்கு அல்ல, விதைத்தது லாலா லஜபதி ராய்

காங்கிரஸை எதிர்த்து சுதந்திர காங்கிரஸ் எனும் நாட்டுபற்று மிகக் கட்சியினை நடத்தினார், பின்னாளில் ராஜாஜி அதைத்தான் செய்தார்

எல்லா நல்ல விஷயங்களையும் முதலில் சொன்ன பெருமகன் லாலா

இன்று அந்த பெருமகனின் நினைவு நாள், ரத்தம் வழிய வழிய லாகூரில் பிரிட்டிசாரிடம் அடிவாங்கும் பொழுது “என்னை அடியுங்கள், நான் சாகும் வரை அடியுங்கள் ஆனால் என் மேல் விழும் ஒவ்வொரு அடியும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் மீதான அடி” என அடிவாங்கி செத்த அந்த உத்தம அஹிம்சாவாதியின் நினைவு நாள்

பஞ்சாபிய சிங்கம் சொன்னபடி அடுத்த 20 ஆண்டுகளில் பிரிட்டிஷ் ராஜ்யம் கவிழ்ந்தது

இந்தியா லாலா கனவு கண்டபடியே சிறிய சேதார பிரிவுடன் பரந்த இந்தியாவாக சுதந்திர இந்தியாவாக மலர்ந்தது

இன்று வலுவான இந்து இந்தியாவாக நிலைத்து நிற்கின்றது, இதெல்லாம் அந்த பஞ்சாப் சிங்கத்தின் கனவு

இந்தியாவில் லாலாவுக்கு பெரும் அடையாளமில்லை, டெல்லியில் லஜபதி நகர் என்றொரு நகர் மட்டும் உண்டு தமிழ்நாட்டில் அதுவுமில்லை

லாலா போன்றோருக்கு இங்கும் சில நினைவிடங்கள் அவசியம், அது பல வீர தியாக வரலாறுகளை வருங்காலத்துக்கு சொல்லி கொண்டே இருக்கும்

தமிழகத்தில் லாலா பெயரில் ஒரு செங்கல் கூட இல்லை.எதிர்காலத்தில் அது நிறுவபட வேண்டும் அந்த பஞ்சாபிய சிங்கத்துக்கு வீரவணக்கம்.

அந்த பஞ்சாபிய சிங்கத்துக்கு, பாரத பெருமகனுக்கு தேசம் அஞ்சலி செலுத்துகின்றது.

பாரதம் ஒரு போதும் வீழாது, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்.