வாழ்க நீ! எம்மான்!!! – மோடி
நரேந்திர மோடி என்பது தனிப்பெயர் மட்டும் அல்ல, நரேந்த்ர மோடி என்பது பாரத பிரதமரின் பெயர் மட்டுமல்ல, உலகை வசீகரிக்கும் மந்திர சொல் மட்டுமல்ல;
நரேந்திர மோடி என்பது ஒரு உணர்வு, ஒரு எழுச்சிமிக்க மூச்சு, நம்பிக்கையும் உற்சாகமும் சிலிர்ப்பும் கொடுக்கும் நாமம், நரேந்திர மோடி என்பது ஆச்சரியம் கலந்த புன்னகை கொடுக்கும் பெரும் நிம்மதி உணர்வு.
எதெல்லாம் இந்தியருக்கு குருடன் கண்ட கனவு போல வார்த்தையாக இருந்ததோ, எதெல்லாம் எம்மாலும் இதெல்லாம் சாத்தியமா என இருந்ததோ அதையெல்லாம் நடத்திக் காட்டியவர் மோடி.
எதெல்லாம் இழக்கப்பட்டது என தேசம் கருதியதோ, எதையெல்லாம் இனி பெறவே முடியாது என தேசம் நம்பிக்கை இழந்ததோ, அதையெல்லாம் தந்த பெருமகன் மோடி.
இன்று உலகின் ஐந்தாம் பொருளாதார சக்திமிக்க நாடாக, மாபெரும் விண்வெளி பலம், ராணுவ பலம் கொண்ட நாடாக, மருத்துவத்துறையில் அதி உன்னத நாடாக, எதிர்கால தொழில்நுட்ப உலகம் இந்தியாவுக்கு என சொல்ல வைக்கும் நாடாக, உலகினை இயக்கும் சக்திவாய்ந்த நாடாக தேசத்தை நிறுத்தியிருக்கும் அந்த அற்புத தலைவனுக்கு தனி ஜாதகம் உண்டு, சரித்திரம் உண்டு.
யாருக்கும் இல்லா அற்புத வெற்றியும், கீர்த்தியும் உண்டு. காலம் கொடுத்த ஞானப் பெருமகன் அவர்.
“காலம் வந்துகை கூடுமப் போதிலோர்
கணத்தி லேடதி தாக விளங்குவான்
ஆல கால விடத்தினைப் போலவே,
அகில முற்றும் அசைந்திடச் சீறுவான்
வேரும் வேரடி மண்ணு மிலாமலே
வெந்து போகப் பகைமை பொசுக்குவான்;
பாரும் வானமும் ஆயிர மாண்டுகள்
பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான்”
இந்த வரிகள் அந்த மோடி எனும் பாரதத் தலைவனுக்கும் அழகாய்ப் பொருந்தும்.
இந்தியப் பெருநாட்டுக்குத் தனிப்பெரும் தலைவன் வந்துவிடவேக் கூடாது என்பது சில அந்நிய சக்திகளின் பெருங்கனவு. அப்படி வந்துவிட்டால் அவன் தலைமையில் தேசம் சீறி எழும்பொழுது தங்களின் மேலாண்மைக்கு ஆபத்து எனக் கணக்கிட்டார்கள். ஒரு தலைவன் மட்டும் இந்துக்களுக்கும் இந்துஸ்தானத்துக்கும் கிடைத்தால் அந்நாடு பெரும் உச்சம் அடையும் எனக் கணக்கிட்டு, அப்படி ஒரு தலைவன் வரவே கூடாது என கங்கனம் கட்டி அடித்தனர் பகைவர்.
இது பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஆப்கானியரால் இடப்பட்ட கணக்கு. அது மிக நுணுக்கமாக 17ம் நூற்றாண்டில் இருந்து 2014 வரை நீடித்த சதி.
ஆப்கானிய காலத்து பிரித்வி ராஜன் முதல் வெள்ளையன் காலத்து புலித்தேவன், நேதாஜி வரை மிகக் கவனமாக அந்த சதி அரங்கேறிற்று.
சுதந்திர இந்தியாவில் நேரு பலவீனமான தலைவர்தான், ஆனால் 1962 வரை அவருக்கு ஒரு மக்கள் அபிமானம் இருந்தது, சீனப்போரில் அது கலைய, நேரு வீழ்ந்தார்.
இந்தியாவின் வலுவான தலைவராக எழும்பியவர் லால் பகதூர் சாஸ்திரி, ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே அவரும் வீழ்த்தப்பட்டார்.
இந்தியாவின் வலுவான தலைவரான இந்திராவும், கூட்டு சதியில் கொல்லப்பட்டார், அவரின் வாரிசுகளும் தனிபெரும் தலைவர்களாகக் கூடாதென பிடுங்கி எறியப்பட்டனர்.
1984க்கு பின்னரான காலங்கள் இந்தியாவின் குழப்பமானக் காலங்கள், தனிப்பெரும் தலைவர் இல்லாமல் தேசம் அலங்கோலப்பட்ட காலங்கள்.
அதுவும் இந்திய பிரிவினைவாத திமுகவெல்லாம் டெல்லியில் அமைச்சராகி, போலி தேசியம் பேசிய மிக அவமானமான காலங்கள், அப்படியும் துரதிருஷ்ட காலம் இருந்தது.
காஷ்மீரிய பிரிவினைவாத கோஷ்டி அமைச்சராகி அந்த மலைச்சாரலில் என்னென்ன கொடுமையெல்லாமோ அரங்கேறிய கொடும் காலமும் உண்டு.
பத்து எம்.பி வைத்திருக்கும் துக்காடா கட்சிக்கெல்லாம் இத்தேசத்தை ஆளலாம் எனும் கனவு வந்தது அப்பொழுதுதான்.
தேசம் சீரழிந்தது, வெளிநாட்டு கொள்கை முதல் உள்நாட்டு கொள்கை வரை தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் சுயநல கூட்டணி இம்சைகள் நாட்டை இஷ்டத்துக்கு வளைத்தன.
நாடெல்லாம் ஊழல்கள், ஊரெல்லாம் குண்டுவெடிப்புகள் என இந்தியா நிலைகுலைந்து கலங்கியிருந்தது. அந்நிய சக்திகள் ஏகபோகமாக தலையினை விரித்துப் போட்டு இங்கு ஆடிக்கொண்டிருந்தன.
இனி இந்தியாவில் மாநிலக் கட்சிகளின் கூட்டணி ஆட்சிதான் நடக்கும், அது வளர்ந்து தேசம் உடையும் என கணித்துக் கொண்டிருந்தன உலக நாடுகள்.
அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. தேசம் குஜராத்தின் முதலமைச்சராக பலமுறை இருந்த மோடியிடம் ஆட்சியினைக் கொடுத்தது.
ஆம், தேசம் தன் கடைசி நம்பிக்கையாய் அந்த மனிதனை நம்பி ஆட்சியினைக் கொடுத்தது. அதுவரை குஜராதின் வெற்றிபெற்ற முதல்வராகவும், ஆனால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் கொலைகாரன் எனவும் உலகமெல்லாம் மதவெறியன் போல ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டவராகவும் அவர் இருந்தார்.
ஆனால் தேசமக்கள் காங்கிரஸின் பொய் பிம்பத்தை நம்பவில்லை, தேசம் மோடியினை நம்பியது.
அதற்குக் காரணமும் இருந்தது.
மோடி ஒன்றும் சும்மா ஊர் சுற்றிவிட்டு சட்டென பிரதமர் நாற்காலிக்கு வரவில்லை, அவர் 10 வயதில் இருந்தே நாட்டுக்காக உழைக்க வந்தார், அந்த அர்ப்பணிப்புத்தான் அவரை குஜராத் முதல்வராகிற்று, அந்த ஆர்வம்தான் அவரை நிரந்தர முதல்வராகவும் வைத்திருந்தது.
பின் பிரதமராக அவர் அமர்ந்தபொழுது அவருக்கு முன் ஏகப்பட்ட சவால்கள் இருந்தன, அவர் ஆட்சிக்கு மிகப்பெரும் அவப்பெயர் உண்டாக்கி, அந்த பெரும்பான்மையினையே செல்லாக் காசாக்க பெரும் திட்டமெல்லாம் இருந்தது.
உலகமும் முதலில் அவரை அச்சத்துடனேயே நோக்கியது; தாலிபன்களின் ஆட்சிபோல் இந்தியாவிலும் வந்தாயிற்று, மோடி கொலைகாரர், மோடி பயங்கரவாதி என்றெல்லாம் அச்சமூட்டுதல் நிகழ்ந்தன.
குஜராத் கலவரங்களை காரணம் காட்டி அப்படி பெரும் கட்டுக்கதைகள் பரவின. நிச்சயம் குஜராத் கலவரங்களை அவர் தொடங்கவில்லை, ஆனால் ரயிலை யார் எரித்தார்கள் என்பதெல்லாம் இந்தியாவில் விடையற்ற கேள்விகள்.
மோடி கலவரத்தை அடக்கினார். அவரின் நடவடிக்கையில் இந்துமக்களும் கொல்லப்பட்டனர், ஏராளம் பேர் கொல்லப்பட்டனர் எனினும் மோடிக்கு எதிரான சக்திகள் பிம்பத்தை மாற்றி வைத்திருந்தன.
எதிர்கட்சிகளின் பிரச்சாரப் பொய்யில் கடுமையான பிம்பத்துடனேதான் இந்திய பிரதமரானார் மோடி. உலகம் அவரை அச்சத்தோடு பார்த்தன, வளைகுடா நாடுகள் ஒருமாதிரி கண்களை உருட்டின, பாகிஸ்தான் தொடை தட்டியது.
இவர்களோடு காங்கிரசும் சேர்ந்து நீலிக்கண்ணீர் வடித்தது.
மோடியின் 2014ல் தொடங்கிய முதல் இன்னிங்க்ஸ், ஒவ்வொரு நாடாகச் சென்று தன் இந்தியக் கனவினை விளக்கிச் சொல்வதிலேயே பெரும்பாலும் இருந்தது.
“நாங்கள் யாருக்கும் எதிரி அல்ல, மத வெறியர்களும் அல்ல. எமக்கு தேவை வலுவான இந்தியா, எந்த மதத்தையும் நாட்டையும் கலாச்சாரத்தையும் காக்க போராடினோமோ அதை பாதுகாப்பதே எம் கடமை அன்றி வேறல்ல.
இந்தியாவில் இந்து ஆட்சி என அச்சப்பட ஏதுமில்லை. நாம் இந்து நாடுதான். ஆனால் உலகின் ஒரே ஒரு இந்து நாடாக இது இருப்பதில் உலகுக்கு என்ன ஆட்சேபனை? எம்மால் இந்த உலகில் எந்த நாட்டுக்காவது ஆபத்து என ஒரு வரி காட்ட முடியுமா?
உலகெல்லாம் இந்துக்கள் உண்டு, உலகெல்லாம் அம்மதம் உண்டு. ஆனால் சாத்வீக வழியன்றி, மகா அமைதியான வாழ்வன்றி, ஒரு சிக்கலை காட்ட முடியுமா?
இவ்வுலகில் எல்லா மதமும் வாழட்டும், அதில் இந்துமதமும் வாழட்டும். எமக்குத் தேவை இந்தியரின் நல்வாழ்வு, அமைதியான பெருவாழ்வு, உலகோடு ஓட்டி அதைக் கொடுக்க நாம் தயார்.
உங்களால் எம் தேசம் வாழட்டும், எம்மால் உலக அமைதிக்கும் உங்கள் நலனுக்கும் எக்காலமும் நாமும் செய்வோம். உலகம் வாழட்டும் அதில் இந்தியாவும் வாழட்டும்”
ஆம், மோடியின் அணுகுமுறை அப்படி இருந்தது. ஆர்.எஸ்.எஸ் என்பது ஆபத்தான இயக்கமென்றும், பாஜக என்பது மதவெறி கட்சி என்றிருந்த காலத்தில் அவர் அதை களையப்பட்ட சிரமம் கொஞ்சமல்ல.
அந்த மகன் ஒவ்வொரு நாட்டின் படியாக ஏறி இறங்கினார், நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல; அதே நேரம் இந்திய நலன்களை விட்டுக்கொடுப்பவரும் அல்ல என ஒவ்வொரு நாடாக நேரில் போய் சொன்னார்.
அது நாட்டுக்குப் பலனளித்தது, கூர்ந்து கவனித்த நாடுகள் மோடி ஆட்சியில் கலவரமோ குண்டுவெடிப்போ இல்லை. இதர மத துவேஷங்களோ இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு அவருக்கு நட்புக்கரம் நீட்டின.
மெல்ல மெல்ல ஒவ்வொரு காரியமாக செய்யத் தொடங்கினார். முதல் காரியமாக அவர் மூன்று அடித்தளங்களை இட்டார், வெளிநாட்டில் இருந்து வரும் அச்சுறுத்தல், உள்நாட்டில் இருக்கும் குழப்ப வாதிகள், பொருளாதாரத்தை அரிக்கும் முதலைகள்.
இந்த மூன்று முக்கிய கொள்கைகளில் கவனம் செலுத்தினார், முதல் சில வருடங்கள் இதை அமைதியாகச் செய்தார், பின் என்ன செய்யவேண்டும் யாரை வைத்து செய்யவேண்டும் என திட்டமிட்டார்.
மோடியின் மிகப்பெரும் வெற்றி என்பது மிகச் சரியான ஆட்களை கண்டறிந்து அவர்களுக்கு பொறுப்பினை கொடுப்பது, அதைச் செய்தார்.
ஜெய்சங்கர், அஜித்தோவால், நிர்மலா சீத்தாராமன், சுஷ்மா ஸ்வராஜ், மனோஜ் பரிகார் என அவரின் அமைச்சரவையில் அனைவருமே தேசமாணிக்கங்கள்.
ஒவ்வொரு திட்டமும் செயல்பட ஆரம்பித்தன, அவரின் அதிரடிகள் மெல்லத் தொடங்கின. ஓசையின்றி அந்த சீர்திருத்தம் மெல்லத் தொடங்கிற்று, பின் விஸ்வரூபமெடுத்தது.
முதலில் உலக அரங்கில் இந்தியாவுக்கு நற்பெயர் ஏற்பட்டது, அந்நாடுகள் இந்தியாவின் நலனுக்கு துணை நின்றன. பல உதவிகள் கிடைக்கத் தொடங்கின.
இரண்டாவது, இந்திய உள்நாட்டு குழப்பவாதிகள் அடக்கப்பட்டனர். தொண்டு நிறுவனம் எனும் பெயரில் வந்த பணம் நிறுத்தபட்டது, நீண்ட காலமாக விசாவோடு இல்லை விசா இல்லாமல் சத்திரத்தில் தங்கியது போல் தங்கியிருந்த அந்நியர் விரட்டப்பட்டனர், இதனால் தேவையில்லா போராட்டங்கள் குறைந்தன.
கருப்புப் பண ஒழிப்பு என அவர் செய்த நடவடிக்கையே இங்கு வங்கிகளை தொழிலதிபர்கள் செல்லரித்தது போல் அரித்துக் கொண்டிருந்ததைக் காட்டின, அதை சரிசெய்யும் பொழுதுதான் மாய தொழிலதிபர்களின் போலி பிம்பங்கள் உடைந்தன, யாரெல்லாமோ அலறி அடித்து ஓடினார்கள்.
ஆம், எந்த ஆட்சி என்றாலும் எங்களை அசைக்க முடியாது எனச் சொல்லி கொண்டிருந்தோரெல்லாம் அலறி அடித்து ஓடினர், வங்கிகளுக்கு வரவேண்டிய பணம் வந்தது.
பழைய ஆட்சியில் பல மோசடிகளை செய்தவர்களெல்லாம் எங்கோ ஓடி ஓளிந்தனர். அவர்கள் சொத்து வங்கிக்கு வந்தது.
மோடி அம்பானி ஆதரவாளரெல்லாம் அல்ல, அனில் அம்பானி கூட திவால் நிலைக்கு வந்திருந்தார், பாரபட்சம் என்பதெல்லாம் மோடியிடம் இல்லை.
மோடியின் அதிரடி அவரின் முதல் ஆட்சியின் கடைசி காலத்தில் தொடங்கியது. பாகிஸ்தானுக்குள் யுத்த காலம் அல்லாமல் புகுந்து அடித்த முதல் பிரதமர் அவர்தான். அதில் அலறிய பாகிஸ்தான் அதன் பின் தன் வீரியத்தை குறைத்தது.
மோடியின் மிகப்பெரிய சாதனை நடக்கவே நடக்காது என உலகம் நம்பியிருந்த, எந்த பிரதமராலும் தீர்க்க முடியா காஷ்மீர் சிக்கலை தீர்த்தது. அது வரலாற்று அதிசயம், இந்திய சுதந்திரம் போல அது மிகப்பெரும் வரலாற்று நிகழ்வு.
காஷ்மீரில் கைவைத்தால் விஷயம் பாகிஸ்தானோடு அல்ல, சீனாவோடு மோத வேண்டி வரும் என்பதாலேயே எல்லா பிரதமரும் தயங்கினார்கள். மோடி அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டுத்தான் காரியத்தைச் செய்தார்.
காஷ்மீரை சேர்த்து, கலவரங்களை அடக்கி, பின் லடாக்கில் கவனம் செலுத்தி, அதிலும் பல பகுதிகளை இன்று மீட்டு சீனாவினை, முதல் ஆசிய நாடாக அடக்கி வைத்திருக்கின்றது இந்தியா.
1962க்கு பின் சீனா ஒரு நாட்டிடம் மோதிவிட்டு பின் வாங்கியது இந்தியாவிடமே. நேரு பெற்ற தோல்வியினை மிகச் சரியாக திருப்பிக் கொடுத்தார் மோடி. 2020 வருடம் ஜூலை மாதம் நடந்தது சீனாவுடனான சிறிய போர். அதில் சீனா திருப்பி அனுப்பட்டதுதான் நிஜம்.
சீன எல்லைக்கே சென்று இது எங்கள் மண் என சீறி நின்ற மோடி உலகின் மிக தைரியமிக்க தலைவர்களில் ஒருவராக நின்றதை உலகம் குறித்துக் கொண்டது.
மகாபலிபுரத்தில் சமாதானத்துக்கும் தயார், அதே நேரம் லடாக்கில் யுத்தத்துக்கும் தயார் என சீனாவினை அணுகிய மோடி வரலாற்று ராஜதந்திரி.
மோடியின் ஆகபட்ச சாதனை என ராமர் கோவிலை தயக்கமின்றி சொல்லலாம், கிட்டதட்ட 500 ஆண்டுகால சிக்கல் அது. எத்தனையோ மன்னர்களும் சர்வாதிகாரிகளும் சுதந்திர இந்திய பிரதமர்களும் செய்ய முடியா சாதனையினை அவர் செய்தார்.
காலம் அவருக்கான வாய்ப்பினைக் கொடுத்தது.
அந்த வாய்ப்பையும் பலாத்காரமாகவோ, கலவரத்திலோ அவர் செய்யவில்லை. முழு அமைதியுடன், மிக மிகப் பாதுகாப்பான தேசச் சூழலில் அதை செய்தார், அது மிகப்பெரும் அதிசயம்.
ராமர் கோவிலுக்கான அடிக்கல் அமைக்கும் பொழுது, அந்த மோடி சாட்சாத் விஸ்வாமித்திர முனி போல் நின்ற அந்த தோற்றம் மறக்க முடியாத தருணம்.
அவர் அந்த மண்ணில் விழுந்து வணங்கிய அத்தருணம் விவேகானந்தரின் நினைவும் வந்தது.
ராமர் கோவிலை தொட்டால் அரேபியா பொங்கும், ஐரோப்பா அலறும் எனும் பூச்சாண்டிகளை பொய்யாக்கி இன்று அரபு நாடுகளிலே இந்து ஆலயம் எழ வழி செய்ததுதான் மோடியின் மிகச் சிறந்த சாதனை.
அப்படியே காசியினை சீரமைத்து இந்து மக்களுக்கு கொடுத்தது, பல நூறு ஆண்டுகளுக்குப் பின் இந்துக்கள் கண்ட பெரும் நிம்மதி.
காசி எனும் இந்துக்களின் தலைநகர் ஆயிரமாயிரம் ஆண்டுக்குப் பின் அவரால் சீரானது, இன்னும் சீராகிக் கொண்டிருக்கின்றது.
குடியுரிமைச் சட்டம் முதல், கொடுத்த பணம் மக்களுக்கு ஒழுங்காகச் செல்கின்றதா என்பது வரை அவரின் ஒவ்வொரு கண்காணிப்பும் மிக மிக அருமையான அணுகுமுறை, தேசத்திற்கான நன்முயற்சிகள்.
புதிய பொருளாதாரக் கொள்கை, வேலை வாய்ப்புக் கொள்கை, புதிய கல்விக் கொள்கை என வருங்கால பாரதத்துக்கு, மாணவ சமுதாய மேன்மைக்கு மிகப்பெரும் அடித்தளமிடுகின்றார் மோடி.
விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு தோதான சட்டம் மிக அவசியமான ஒன்று.
ஒவ்வொரு நாடும் தன் குடிகளைக் காத்து பராமரிக்க, கள்ளக் குடியேறிகளை அடையாளம் காண்பது அவசியம், களை பறிக்கா பயிர் செழிக்காது. அதுவும் தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள இந்தியாவில் அது மகா அவசியம்.
அதில் தான் அந்த குடியுரிமை சட்டத்தைத் திருத்தினார்
மோடி. இஸ்லாமியருக்கு எதிரானவர் என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாதது, அவரின் 8 ஆண்டு ஆட்சியில் எந்த இஸ்லாமியனும் பாதிக்கப் படவில்லை, அவர்களின் வழிபாட்டுக்கோ மதத்துக்கோ அச்சுறுத்தல் இல்லை.
ஏன் இஸ்லாமியப் பெண்கள் கூட பாதுகாப்பினை முத்தலாக் சீர்த்திருத்த சட்டம் மூலம் பெற்றிருக்கின்றார்கள்.
மோடியின் ஆகச்சிறந்த சாதனை பொருளாதாரம், ராணுவம், காஷ்மீர், பாதுகாப்பு, லடாக், ராமர் கோவில், தமிழில் பேசிய முதல் பிரதமர், பாரதியினை, வள்ளுவனைக் கொண்டாடிய, சோழர்களைக் கொண்டாடிய முதல் பிரதமர் என ஏகப்பட்டது இருந்தாலும், அவரின் வரலாற்றில் அல்ல இந்திய வரலாற்றிலேயே மகா முக்கியமான சாதனை அவர் கொரோனா காலத்தை கையாண்டது.
வரும்முன் தன் மக்களை காக்க தயாராக இருந்தவர் மோடி, கொரோனா எனும் அந்த கோவிட் கிருமி 2019 நவம்பரிலே சீனாவில் லேசாக அறியப்பட்டபொழுது உலக நாடுகள் அதிர்ந்தன. அதன் வீரியம் அப்படி.
இதனால் ரகசியமாகத் தங்கள் எல்லைகளில் கண்காணிப்பினை அதிகப்படுத்துதல், ஒரு பக்கம் மருந்து ஆய்வு என மக்களை அச்சுறுத்தாமல் பரபரப்பாக ரகசியமாக இயங்கின.
மோடி இதில் மின்னல் வேகத்தில் செயல்பட்டார், பொருளாதாரம் பாதுகாப்பு, கொரோனா மருந்து ஆய்வு என மூன்று விஷயங்களில் செயல்பட்டார்.
கொரோனா முடக்கத்துக்கு எந்த நாடும் தப்பவில்லை, தப்பவும் முடியாது, அதில் இந்தியாவும் முடங்கினாலும், மோடி அரசு இந்திய பொருளாதாரம் முடங்காமல் காத்தது.
இன்றுவரை அது அசையாமல் நிற்பது ஆச்சரியம்.
மோடியின் ஆகச்சிறந்த சாதனை கொடும் கொரோனாவுக்கு மருத்துவ விஞ்ஞானத்தில் பின் தங்கிய தேசம் என கருதப்பட்ட இந்தியா மருந்து கண்டறிந்து அசத்தியது தான்.
உண்மையில் அதில் பெரும் ஆபத்து இருந்தது, கொரோனாவுக்கு மருந்தென இம்மாபெரும் தேசம் வெளிநாட்டில் கையேந்தினால் பெரும் பணம் செல்லும்.
அத்தோடு பொதுமுடக்க காலத்தில் இந்தியப் பொருளாதாரமே நாசமாகி, ஏன் தேசமே மாபெரும் சுழலில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கும்.
ஆம், தேசம் கண்ட ஆபத்துக்களில் கண்ணுக்குத் தெரியா மிகப் பெரிய ஆபத்து கொரோனா காலமே.
ஆனால் மோடி அசத்தினார். சொந்த மருந்தை கண்டறிந்த இந்தியா அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்து தன்னை நிறுத்தி கொண்டது.
இந்தியா வல்லரசானதை உலக நாடுகள் அமைதியாக ஒப்புக்கொண்டன.
உலகின் எத்தனையோ நாடுகள் இந்தியாவால் மருந்தும், உதவியும் பெற்றன, இந்தியாவின் ஆதிக்கம் பெருகிற்று.
2021ல் இரண்டாம் அலை தாக்கியபொழுது இரு மாதங்களில் இந்திய ஜனத்தொகையில் 3ல் ஒரு பங்கு அழியுமென மிரட்டல்கள் வந்த பொழுது மோடியின் செல்வாக்கில் உலகெல்லாம் இருந்து உதவிகள் குவிய, சில நாட்களிலேயே நிலமையினை கட்டுக்குள் கொண்டு வந்தார் மோடி.
காலங்கள் மாறும், எதிர்காலத்தில் இன்னும் எத்தனையோ அரசுகள் வரும். ஆனால் வரலாற்றில் நின்றுவிட்ட பெருமகன் மோடி என்பதைக் காலம் சொல்லும்.
வருங்கால இந்தியா நிச்சயம் அவரைக் கண்ணீரோடு வாழ்த்தும்.
கொரோனா கொடுங்காலம் தாண்டி எழுந்து இன்று இந்திய பொருளாதாரத்தை பிரிட்டனை விட உயர்த்திகாட்டி உலகை அதிர வைத்திருக்கின்றார் மோடி.
வரலாற்றில் இது புதிது, பிரிட்டன் எனும் பழைய பணக்கார தேசத்தை அதன் அடிமையாக இருந்த இந்தியா வீழ்த்திற்று என்பது மாபெரும் ஆச்சரியம்.
இன்று இந்தியா பாதுகாப்பான தேசமாகவும், மோடி மிக பலமான தலைவராகவும் அறியப்படுகின்றார், இந்தியா அதன் பொற்கால வாசலில் நுழைந்திருக்கின்றது.
இந்திய பாதுகாப்பில் செயற்கைக்கோளை அடிக்கும் ஏவுகனைகள் என்பது மிகப்பெரிய மைல்கல். அதை மோடி அரசுதான் செய்தது.
சந்திராயன் வெற்றியும், இதர வெற்றிகளும் தேசத்தை உச்சத்துக்குக் கொண்டு சென்றிருக்கின்றன.
ரஷ்யாவுடன் மோடி செய்திருக்கும் அந்த எண்ணெய்க்கான கடல்வழி பல வகையில் தேசத்திற்கு நற்பயன் கொடுக்கும்.
மோடி என்பது சாதாரணப் பெயர் அல்ல, இத்தேசத்தின் பெருமையினை மீட்டெடுத்து நிலைக்க வைக்கும் வரலாறு.
ஊழலுக்கு அப்பாற்பட்டும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கும் அப்பாற்பட்டும் தேசத்தை காக்கும் இரண்டாம் சாஸ்திரி மோடி.
தன் குடும்பம், தன் வீடு என்றில்லாமல் நாட்டை நிரம்ப நேசிக்கும் இரண்டாம் காமராஜர் அந்த மோடி.
முழுக்க மிகச் சரியான நிபுணர்களையும், பெரும் ஆற்றலாளர்களையும் தன்னுடன் வைத்து அவர்களுக்கு மிகப்பெரும் சுதந்திரமும் கொடுத்து கண்காணிப்பவர் மோடி.
இது இந்துமக்கள் அதிகம் வாழும் நாடு, ஆனால் இந்திய பிரதமர் யாரும் இந்து கோவிலுக்குச் செல்லவும் மாட்டார்கள், அதிகம் அதை காட்டிக்கொள்ளவும் மாட்டார்கள்.
தேசத்தில் இந்து பிரதமராக தயக்கமின்றி எல்லா கோவில்களுக்கும் சென்று இப்பண்பாட்டை மீட்டெடுத்த முதல் பிரதமர் மோடி.
இந்து சமூகம் அதிகம் கொண்ட நாட்டின் பிரதமர் இதைத்தான் செய்ய வேண்டும், ஆனால் அப்படி ஒரு பிரதமருக்க்கு தேசம் கிட்டதட்ட 64 ஆண்டுகள் காத்திருந்தது. அது மோடியால் நிறைவேறிற்று.
இந்து பெரும்பான்மை ஆட்சியில் எல்லா மத இன மக்களும் பாதுகாப்பாய் அமைதியாய் வாழமுடியும் எனக் காட்டியவர் மோடி.
தமிழைப் பேசிய முதல் பிரதமர் மோடி; தன் பேச்சுக்களிலெல்லாம் பாரதியார், திருகுறள் இன்னும் ராஜராஜ சோழனை எல்லாம் கொண்டாடிய முதல் பிரதமர் மோடி.
வேட்டி சட்டை அணிந்து நின்ற முதல் பிரதமர் மோடி, டெல்லிக்கும் தமிழருக்குமான இடைவெளியினை குறைத்து நின்றவர் மோடி.
அவர் காலத்தில்தான் இலங்கை படையினரின் துப்பாக்கிச் சூடு நின்றது, காவேரி சிக்கல் தீர்ந்தது. தமிழக ஆலய சிலைகளெல்லாம் வெளிநாட்டில் இருந்து சிக்கலின்றி வந்து சேர்ந்தது.
வரலாற்றிலே முதன் முறையாக தன் திட்டத்தில் நடந்த முறைகேட்டு பணத்தை ஒரு பிரதமர் வசூலிக்கின்றார் என்றால் அது மோடிதான்.
தமிழ்நாட்டின் மிகச் சிறந்த அதிகாரிகளை தன் அலுவலகத்தில் வைத்து கொண்டு, தமிழ்நாட்டை தனி கவனத்தில் அவர் எடுத்திருப்பது ஒன்றும் புரிய ரகசியமானது அல்ல, சமீபத்திய கவர்னர் கூட அப்படித்தான்.
இதை நேரு, இந்திரா, மன்மோகன் என யாரும் செய்யவில்லை, மோடி அதை மிகச் சரியாக செய்கின்றார்.
மோடி இந்நாட்டின் அரண்; காலம் கொடுத்த கொடை; முன்னொரு காலத்தில் இங்கு பொற்கால ஆட்சி நடத்திய குப்தர்கள், சோழர்களின் மறுபிறப்பு.
ஏதோ ஒரு ரிஷியின் தொடர்ச்சியினையும் அவரில் காணமுடியும்.
மோடி என்றொரு அரண் மட்டும் இவ்வளவு வலுவாக எழும்பியிராவிட்டால் தேசம் மிகப்பெரும் சிக்கலையும் குழப்பத்தையும் சந்தித்து மீளா சிக்கலில் வீழ்ந்திருக்கும், அதை தடுத்து தேசம் காக்க வந்தவர் மோடி.
இன்று உச்ச அதிகாரம் அவர் கையில் இருக்கின்றது, மிகப்பெரும் மக்கள் செல்வாக்கும் இருக்கின்றது. ஆனால் ஜனநாயகத்தையும் அதன் மாண்பையும் காத்து நிற்கின்றார்.
தேவையற்ற பேச்சு என்றோ, வீண் ஆரவாரமோ விளம்பரமோ அவரிடம் நீங்கள் காணமுடியாது. பேச்சினைக் குறைத்து செயல்களில் மட்டும் கவனம் செலுத்துபவர் அவர்.
மோடி பத்திரிகையாளரை சந்திப்பதில்லை எனும் ஒரு குற்றசாட்டு உண்டு, வரலாற்றில் நேருவும், இந்திராவும் இன்னும் பலரும் பத்திரிகையாளரை அதிகம் சந்தித்ததில்லை.
பத்திரிகை என்பது விளம்பரம் தேடி சம்பாதிக்கும் தொழில், அவர்கள் பிழைப்புக்கு நம் கருத்துக்கள் ஏன் தவறாக திரிக்கப்பட வேண்டும் எனும் ஒரு ராஜதந்திரம் எல்லா பிரதமர்களிடமும் உண்டு
மோடியிடமும் அது நிரம்ப உண்டு. ஆனால் தேச மக்களுடனும் இன்னும் பல தரப்பினருடனும் அவர் அனுதினமும் உரையாடிக் கொண்டேதான் இருக்கின்றார்.
வெற்றிபெறும் மாணவர்கள் எந்த மாநிலத்தில் இருந்தாலும், அவர் அழைத்துப் பேசத் தயங்குவதில்லை. இதில் தமிழ்நாட்டு மாணவர்களும் உண்டு.
மோடி காலம் கொடுத்த கொடை, சுதந்திர இந்தியாவுக்கு புது வடிவம் கொடுத்தவர்.
பொருளாதார கொள்கை முதல் அணி சேரா கொள்கை வரை மாற்றி அமைத்தவர் அவரே. ரஷ்யா எனும் ஒற்றை நாட்டிடம் ஆயுத அடிமையாக இருந்த இந்தியாவினை அமெரிக்கா பக்கம் நெருங்கச் செய்து இருவருக்கும் இடையில் ராஜதந்திரமாக நாட்டுக்கு நலம் தேடித் தரும் சாகசக்காரர்.
அவரின் மேக் இன் இந்தியா திட்டமும், இந்தியா ஆயுத, அணுசக்தி ஏற்றுமதி நாடாக மாறும் எனும் கொள்கையும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றன.
மோடியால் நாடு பலம் பெற்றது, எல்லைகள் காவல் பெற்றன, உலகெல்லாம் தனி மரியாதை இந்தியாவினைத் தேடி வந்திருக்கின்றது
நிச்சயம் இந்திய வரலாற்றில் மாபெரும் முத்திரையினை பதித்து, புதிய இந்தியாவினை வடிவமைத்தவரில் மகா முக்கியமானவர் எனப் பெயர் பெற்றுவிட்டார் மோடி.
அவர் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் நாட்டுக்காகக் துடிக்கின்றது, நாட்டையே அவர் சுவாசிக்கின்றார், நாடு ஒன்றுக்காகவே அவர் வாழ்கின்றார்.
அவரின் ஆட்சியிலும் நடவடிக்கையிலும் பெரும் அதிசயம் ஒன்றை காணலாம், அவர் யாரையும் பகையாய் நினைப்பதுமில்லை, வெட்டி விளம்பரம் தேடுவதுமில்லை, அரசியல் பகை என அவருக்கு எதுவுமில்லை.
அவர் தன் கடமையினைச் செய்கின்றார், அந்தக் கடமையில் ஒரு ஞானிக்குரிய நிலையில் விறுப்பு வெறுப்புக்களை கடந்து நாட்டு நலம் ஒன்றையே தலையில் ஏற்றுக் கண்ணும் கருத்துமாய் செய்யும் கர்ம வீரர்.
அவரின் ஒவ்வொரு அசைவும் நாட்டு நலனையே சொல்கின்றன, காற்று வீசும் திசையினை நாற்று சொல்வது போல், மோடி செல்லும் திசையெல்லாம் நாட்டுக்கு இந்நலன் என எளிதாகச் சொல்லலாம்.
அவர் ஆட்சியில் ஒரு ஊழலைக் கூட அவரின் எதிரிகள் கூட சொல்லமுடியாது என்பதுதான் அவரின் மிகப்பெரிய வெற்றி.
60 ஆண்டுகளாகப் பல அரசுகள் செய்யத் தயங்கியதை எட்டு ஆண்டுகளிலேயே செய்து தேசத்தை பலமாக்கிய பெரும் தலைவர் மோடி.
சுதந்திர இந்தியா 1947லே எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதை இப்பொழுது நம் கண்முன் காட்டிக் கொண்டிருக்கும் உண்மையான இந்தியத் தலைவன் மோடி.
சுருக்கமாகச் சொன்னால் இந்திய சுதந்திரமே 2014ல்தான் கிடைத்திருக்கின்றது, 75ம் சுதந்திரத்தில் உலகின் சக்திவாய்ந்த முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் வந்திருக்கின்றது என்றால், அதனில் மோடியின் பங்கு மிக அதிகம்.
சொந்த விமானம்தாங்கி கப்பல் முதல் ஆயுத ஏற்றுமதிவரை நாட்டை உச்சத்துக்கு கொண்டு சென்றிருகின்றார் மோடி.
ஓளவையார் அதியமானை வாழ்த்தும் பொழுது இப்படி வாழ்த்துவார்.
“ஊர்க் குறுமாக்கள் வெண் கோடு கழாஅலின்,
நீர்த் துறை படியும் பெருங் களிறு போல
இனியை, பெரும! எமக்கே; மற்று அதன்
துன் அருங் கடாஅம் போல
இன்னாய், பெரும! நின் ஒன்னாதோர்க்கே.”
அதாவது “பெருமகனே நீர்த்துறையில் படிந்திருக்கும் யானை அதன்மீது ஊர்ந்துவந்து அதன் கொம்புகளைக் கழுவும் மக்களுக்கு அடங்கிக் கிடப்பது போல எம்போன்ற நாட்டுமக்களுக்கு இனிமையானவன் நீ, அவர்களை சுமப்பவன் நீ. ஆனால் நாட்டுக்கும் மக்களுக்கும் பகையாளர்களை மதம் பிடித்த யானை போல் நசுக்கி தள்ளுபவனும் நீயே”
இது மோடிக்கும் மிக்கப் பொருந்தும், இத்தேசத்தின் சில குதர்க்கவாதிகள் அவரை பல்வேறு வகையில் சீண்டும் பொழுதும், தன்மேல் ஆடும் தன் நாட்டு மக்களையும் யானை பொறுப்பதுபோல் பொறுப்பார், இந்நாட்டு எதிரிகளை பெரும் கோபத்துடன் துவம்சம் செய்வார்.
பல ஆயிரம் ஆண்டுகளாக தேசம் எதிர்பார்த்த அந்த உத்தமத் தலைவனுக்கு, தலைமை காவலனுக்கு, இரண்டாம் குப்தனுக்கு, வாழும் ராஜரிஷிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
கங்கையினை சுத்தப்படுத்தி, காசியினை சுத்தப்படுத்தி அப்படியே நாட்டின் எல்லாத் துறைகளையும் சுத்தப்படுத்தி, எல்லைகளை பலப்படுத்தி தேசத்தை மிக பலமாக வைத்திருக்கும் அந்த விஸ்வாமித்திரன், எல்லா நலன்களையும் பெற்று வாழட்டும்.
அந்த பெருமகன் வாழ வாழ நாடு வாழும்.
அயோத்தி ராமனும், கேதார்நாத் நாயகனும், தேசம் வாழ் தெய்வங்களும், சக்திமிகு அன்னையும், தென்னக முருகனும், தேசத்துகாய் வாழ்ந்த நல் ஆத்மாக்களும், இந்நாட்டின் ரிஷிகளும், தர்ம தெய்வமும், அறக்கடவுளும் எல்லோரும் அவரை ஆசீர்வதிக்கட்டும்.
“எல்லா சாலையும் இந்தியா நோக்கி” என மாபெரும் சாலை திட்டத்தை உருவாக்கி, பாரத்தத்தை உலகின் தனிப்பெரும் தேசமாக உலகின் மையமாக மாற்றி கொண்டிருக்கும் அந்தத் தலைவன் மூன்றாம் முறை பிரதமராக அமரட்டும்.
ஒவ்வொரு முறையும் அற்புதங்களை செய்யும் அவர், மூன்றாம் முறையாக வரும்போது பாரதம் உலகின் மையமாக மாறட்டும்.
புதிய பாராளுமன்றம் கட்டி அதனில் இந்து மன்னர்களின் செங்கோலைத் தேவாரம் பாட அவர் வைத்தது தேசம் முழுக்க பெரும் பெருமை. என்றாலும், ராஜேந்திர சோழன் காலத்தில் பாரதத்தை ஆண்ட தஞ்சாவூர் செங்கோல், தமிழக செங்கோல் அங்கே ஸ்தாபிக்கபட்டது ஒவ்வொரு தமிழரின் பெருமை.
அப்படியே ஜி20 மாநாட்டில் தமிழக நடராஜர் சிலையினை அரங்கத்தின் வாசலில் நிறுவி, நிரந்தரமாக்கிய அந்த சாதனைக்கே அவருக்கு அடிமை சாசனத்தை இந்துக்கள் எழுதிக் கொடுக்கலாம்.
இன்று கோவில்களிலும் வீடுகளிலும் இன்னும் ஒவ்வொரு ஆலயம் இருக்குமிடத்திலும் வழிபாடு செய்து அவருக்காய் அந்த தேச தலைவனுக்காய் பிரார்த்திக்க வேண்டியது இந்துக்களின் கடமை.
அதையே பிறமத அன்பர்களும், பிறமதத்தை பின்பற்றும் உண்மையான தேசாபிமானிகளும் அவரவர் வழிபடி அவருக்காக பிரார்த்திப்பார்கள்.
தேசாபிமானி பாரதி இருந்தால் இப்பொழுது இப்படித்தான் வாழ்த்துவான்.
“வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த மோடி மகான் நீ வாழ்க, வாழ்க“
ஆம் நாமும் வாழ்த்தி வணங்குவோம்.
“பாரத திருநாட்டை தாங்கிநிற்பார் மோடி
பார் எங்கும் அவர் ஓடி ஓடி
நாட்டு நலம் ஒன்றையே நாடி
நல்லவன் கொண்டுவந்தான் நலம்பல கோடி..
தேசமே உயிரென்பான் தெய்வமே கண்ணென்பான்
பாசமே கொண்டவன் துஞ்சாது உழைத்திடுவான்
மோசமே செய்யவந்த பகையெல்லாம் ஒழித்துநின்று
வாசத்துடன் காத்திடுவான் பாரத பெருநாட்டை
ஒன்றா இரண்டா அவனின் பெருமைகள்
கன்றை தாய்போல் காக்கும் கடமைகள்
என்றும் அவன் இந்நாட்டின் தலைகவசம்
இன்றுபோல் அவனை எந்நாளும் காக்கட்டும் தெய்வம்
பகையினை ஒழித்த பெருமகன் வாழ்க
பாரதம் காத்த தனிமகன் வாழ்க
பாரினில் உயர்ந்த தலைமகன் வாழ்க
காசியின் புனிதமென காலமெல்லாம் வாழ்க“
நல்லோர் எல்லாம் ஆலயம் தொழுக
நல்மகன் நலம்பெற கையேந்தி நிற்க
நாடும் சேயும் நலம்பெற வாழ
நான்குதிசையும் பிரார்த்தனை பெருக..
ஓடி தேசத்தை காக்கும் மோடி
நாடி நாட்டை தாங்கும் மோடி
சூடி வெற்றியினை சாற்றும் மோடி
நீடு வாழ பிரார்த்தனை கோடி…