விநாயகர் அனுபூதி : 01 to 05
விநாயகர் அனுபூதி : 01
முருகம்பெருமானுக்குக் கந்த சஷ்டி கவரம், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் எனப் பல வகை பாடல்களைப் பின்னாளில் அடியார்கள் பாடிவைத்தனர்.
இதன் முன்னோடி விநாயகப் பெருமானுக்கான வழிபாடு விநாயக வழிபாடு எனும் மூத்த வழிபாட்டை சப்த ரிஷிகள் செய்தார்கள், ஒளவையார் செய்தார் இன்னும் ஏகப்பட்டோர் விநாயகப் பெருமானின் பெருமைகளை வகை வகையாக பாடிவைத்தார்கள்.
நாயன்மார்கள் வரலாற்றை முதலில் பாடிய நம்பியாண்டார் நம்பி பெரும் விநாயக அடியார்.
இப்படிப்பட்ட வரிசையில் முக்கியமானவர் காசிப முனிவர், சப்த ரிஷிகளில் முக்கியமானவர் இவர்தான். விநாயகர் கவசம் , விநாயகர் அனுபூதி எனப் பல விஷயங்களைப் பாடினார்.
அவை தமிழில் தரப்பட்டன, அவரே அதைத் தொகுத்துத் தந்தார்.
அப்படியான வெகுசிறப்புடையது விநாயகர் அனுபூதி. விநாயக வழிபாடென்று அல்ல காலத்தால் மூத்த வழிபாட்டு பாடலும் அதுதான். வேறு எல்லாம் காலத்தால் பிந்தையது.
அந்த “விநாயகர் அனுபூதி” பாடல்களை இனி காணலாம், இது எல்லா நலன்களையும் பலன்களையும் ஞானத்தையும் முக்தியினையும் தரவல்லது.
மூத்த தெய்வமான விநாயகப் பெருமானை வணங்கி எல்லா நலமும் அருளும் பெற இந்தப் பாடல்களைக் காணலாம்.
இது எளிதான பாடல், சந்த லயங்களுக்குள் தானாக வரும் பாடல். ஆனால் ஏன் யாரும் பாடலாக இசைவெளியீடாக முயற்சிக்கவில்லை என்பது தெரியவில்லை.
இது பாராயணம் செய்யவும் எளிது, பொருள் புரிதலும் எளிது.
நாம் ஒவ்வொரு பாடலாக அதன் பொருளைக் காணலாம், வழிபாட்டில் அது முக்கியமானது விநாயகர் அனுபூதி.
அனுபூதி எனும் சொல்லுக்கு அனுபவ ஞானம் அல்லது ஞானமான பூரண நிலையினைத் தருவது எனப் பொருள்
அவ்வகையில் இந்தப் பாடல் காசிபரின் அனுபவத்தாலும் அந்த ஞானத்தை எல்லா மக்களும் விநாயகப் பெருமான் அருளால் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதாலும் பாடப்பட்டது.
இதோ முதல் பாடல்.
‘பூவார் புனிதா புவனத் தலைமைத்
தேவா கரியின் சிரமே உளவா
மூவாத் தமிழால் முறையே உனைஎன்
நாவால் புகழும் நலமே அருள்வாய்’
“பூக்களைச் சூடியபடி நிற்கும் புனிதமானவனே, இந்த ஈரேழு உலகுக்கும் தலைவனானவனே, யானையின் தலையினை உடையவனே, மூவாத தமிழால் நான் உன்னை என் நாவினால் பாடும் நலத்தை அருள்வாய்” என்பது பாடலின் பொருள்.
நேரடியாக அப்பாடல் அப்பொருளைத் தருகின்றது, ஆனால் இந்தப் பாடலின் பொருள் இன்னும் ஆழமானது.
“பூவார் புனிதா”, பூவார் என்றால் பிறப்பற்றவர்கள் எனும் பொருளும் உண்டு, அவ்வகையில் தேவர்கள் எனப் பொருள், அந்தத் தேவர்களிலும் மூர்த்திகளிலும் புனிதமானவனே எனச் சொல்கின்றார் காசிபர்.
தேவர்கள் மூர்த்திகள் என்றாலும் ஒவ்வொருவர் மேலும் சில சில குற்ற்சாட்டுக்கள், கறைகள் உண்டு. பிரம்மனுக்கு அகந்தை வந்த கதை, இந்திரன் கதை என நிரம்ப உண்டு.
ஆனால், விநாயகப் பெருமான் எந்தச் சிக்கலிலும் சிக்கியவர் அல்ல, எங்கும் அவர்மேல் ஒரு குற்றம் வந்ததாக அவர் பரிகாரம் செய்ததாக பார்த்திருக்க முடியாது.
அப்படியான குற்றமற்றவர், தேவர்களின் புனிதர் எனப் பாடலைத் தொடர்கின்றார்.
அடுத்துப் “புவனத் தலைமை தேவா” என்கின்றார், புவனம் என்றால் உலகம் இங்கே காசிபர் சொல்வது பதினான்கு உலகம்.
பூவுலகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹர்லோகம், ஜனலோகம், தபலோகம், சத்திய லோகம், அதலம்,
விதலம், சுதலம், தலாதலம், ரஸாதலம், மஹாதலம், பாதாளம் எனும் பதினான்கு உலகங்கள்.
இந்தப் பதினான்கு உலகிலும் மூத்த தெய்வம் யாரென்றால் அது விநாயகப் பெருமானே, அதனால் பூமியில் மட்டுமல்ல பதினான்கு உலகிலும் தலைவனாய் வீற்றிருக்கும் எம்பெருமானே எனப் பொருள்.
இதன் இன்னொரு பொருள் யட்சர்கள் வாழும் செல்வலோகம், இந்திரன் வாழும் சொர்க்கலோகம், புதையல் மிக்க நாகலோகம், ஞானமிக்க ரிஷிகள் வாழும் லோகம் என எல்லா உலகுக்கும் விநாயகப்பெருமானே முதல்வர் என்றாகின்றது.
அதாவது, அவரை வணங்கினால் அறிவு, ஞானம், செல்வம், பொக்கிஷம் என எல்லாமும் கைகூடும், கொட்டிக்கிடக்கும் என்பது காசிபர் வாக்கு.
அடுத்துக் “கரியின் சிரமே உளவா’ என்கின்றார், கரி என்றால் யானை அந்த யானையின் தலை கொண்டவனே என்கின்றார்.
விநாயகப்பெருமான் யானை முகம் கொண்டவர் என்பது தத்வார்த்தம், உலகின் உயிர்களில் பலமானது யானை, அது பலமிக்கது ஆயினும் தன்னை அண்டிவருபவர்க்கு மிக மிக அழகாய்ப் பணியும், பெரும் பலம் கொண்டதாயினும் அவர்களுக்குப் பெரும் பலத்தோடு உழைப்பைக் கொடுத்து அவர்களைச் சுமந்து செல்லும்.
யானை என்பது செல்வங்களில் பெரும் செல்வம், பலத்தில் பெரும் பலம், புத்தி கூர்மை மிக்கது.
அந்த யானை தலையினையும் தேவ உடலையும் கொடுத்து விநாயகப்பெருமான் மாபெரும் பலமிக்கவர் என்பதைச் சொன்னார்கள்.
விநாயகப் பெருமான் பலமிக்கவர் என்பதைச் சொல்ல யானைத் தலையினை உருவகப்படுத்தினார்கள்.
அது ‘கரி முகம்” “கஜ முகம் “வேழமுகம்” என எல்லாப் பக்தர்களாலும் பாடப்பட்டது.
இதன் இன்னொரு தத்துவம் மனம் என்பது யானை போன்றது, அதை அங்குசத்தால் அடக்கினால் பெரும் பலம்
பெறலாம், விநாயகப் பெருமானின் அருளால் அது சாத்தியம், அவர் மனதை அடக்கிப் பலமிக்கதாக தருவார் எனும் தத்துவத்திலும் சொல்லப்பட்டது.
அதைத்தான் போதிக்கின்றார் காசிப முனிவர்.
அடுத்து “மூவாத் தமிழால் முறையே உனைஎன் நாவால் புகழும் நலமே அருள்வாய்” என்கின்றார்.
மூவா என்றால் முதிர்த்துவிடாத அதாவது வயதாகி விடைபெற்றுவிடாதபடி என்றும் இளமையான எனம் பொருள், என்றும் இளமையான கன்னி தமிழில் நான் உன்னை வாழ்த்திப் பாடவேண்டும் என்கின்றார்.
இதன் பொருள் கொஞ்சம் ஆழமானது.
அதாவது, நான் இன்றுபாடிவிட்டு செல்வதல்ல விநாயகப் பெருமானே, எக்காலமும் இது நிலைத்திருக்கும்படி, எல்லாக் கால தமிழ்மொழி வடிவிலும் இது நிலைத்து, காலமெல்லாம் கால காலமெல்லாம் இது மக்களுக்கு வழிகாட்டிவர நான் உன்னை என் நாவால் பாடவேண்டும் என்கின்றார்.
தமிழைச் சொல்லி நாவால் பாடுதல் எனச் சொல்வது வெறும் சம்பிரதாயம் அல்ல.
தமிழ் என்பது மந்திர மொழி, அதனைச் சரியாக உச்சரிக்க உச்சரிக்க உடலில் நல்ல அதிர்வுகள் தோன்றும். அந்த நல்ல அதிர்வுகள் உடல் சக்கரங்களை இயக்கி பெரும் ஞானநிலை கொடுக்கும்.
இதைத்தான் பாடுகின்றார் காசிப முனி.
“தேவர்களில் மூர்த்திகளிலும் புனிதமானவனே, எல்லா உலகுக்கும் தலைவனான எம்பெருமானே எல்லா வகை செல்வமும் அறிவும் கொடுப்பவனே, யானை பலமும் குணமும் கொண்ட தலைவனே, எம்மனதை அடக்கி யானை பலத்தோடு நடக்க அருள்புரிவனே.
நான் உன்னை நோக்கிப் பாடும்பாடல் என்றும் நிலைக்கும்படி எமக்கு அருள்புரிவாய், கால காலத்துக்கும் அது நிலைத்து நல்ல தமிழில் உச்சரிப்புடன் உன்னை நோக்கி இப்பாடலை பாடுவார் உடலின் சக்கரம் துலங்கி ஞானநிலை அடைவார்.
முக்கியமாக இந்தப் பாடலைப் பாட பாட விசுத்தி சக்கரம் துலங்கும், அந்தச் சக்கரம் துலங்குவோர் நாவன்மை மிக்கவர், சொல்வன்மை மிக்கவராக விளங்குவர், உன் அருளில் எல்லாம் கைகூடும்” எனப் பாடித் தொடங்குகின்றார் காசிப முனி.
ஆம், விநாயகர் அனுபூதி முறையாக பாட பாட விசுத்தி சக்கரம் துலங்கும், அதைத் துலங்கப் பெற்றவர்கள் நாவன்மை சொல்வன்மை கொண்டவராக ஞானமிக்கவராக திகழ்வர் என வணங்கி பாடலைத் தொடங்குகின்றார் முனிவர்.
இதைத்தான் ஒளவை பாடுவாள்.
“வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிகிடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு”
விநாயகர் அனுபூதி : 02
“வில்லாண் மையரும் விரிமா தமிழில்
வல்லாண் மையரும் வளமாய்ப் புகழும்
நல்லாண் மையது நனியே மிளிரும்
சொல்லாண் மைகொடு எந்துரியப் பொருளே”
இப்பாடல் இப்படிப் பிரிந்து வரும்.
“வில்லாண்மையரும் விரி மா தமிழில்
வல்லாண்மையரும் வளமாய்ப் புகழும்
நல்லாண்மை அது நனியே மிளிரும்
சொல்லாண்மை கொடு எம் துரியப் பொருளே”
ஆண்மை என்றால் இங்கு ஆண்பால் அல்ல மாறாக ஆற்றலைக் குறிக்கும், பலத்தை சக்தியினை ஆளுமையினைக் குறிப்பது.
பாடலின் பொருள் இதோ.
அதாவது, “வில் ஏந்திய பெரும் வீரர்கள் உன்னைப் புகழ்வார்கள், விரிந்து பரந்த பொருள் கொண்ட சொற்களுடன் பெரும் காவியம் படைக்கும் புலவர்களும் உன்னைப் புகழ்வார்கள், முழுமுதல் பொருளான எம்பெருமானே நானும் உன்னைப் புகழ எனக்குச் சொல் வன்மையினைக் கொடுப்பாயாக” என்பது பொருள்.
விநாயகப் பெருமான் என்பவர் மிக மிக பெரிய வீரர்கள், வில்லேந்தி நிற்கும் பெரும் பராக்கிரமசாலிகளால் வணங்கப்படுபவர், எந்தப் பெரிய கொம்பன் என்றாலும் அவரிடம் தோற்று அவரைப் போற்றிப் பணிவான்.
ஆனானப்பட்ட ராவணன் அவரிடம் தோற்றே ஆத்மலிங்கத்தை விட்டுச் சென்றான், அவன் அகம்பாவம் அவரிடம் தோற்றது. இன்னும் கார்த்தவீரியன் முதல் பலர் அவரிடம் தோற்றார்கள்.
ஜகாசுரன் முதல் பலர் தோற்றார்கள், எந்தப் பெரிய வீரன் என்றாலும் சூரன் என்றாலும் விநாயகப் பெருமான் என்றால் பணிந்தே தீரல் வேண்டும். அவர் சக்தி அப்படி.
பெரும் தெய்வங்கள் தேவர்கள் என எல்லோரும் அவரைப் பணிந்தார்கள், அவரின் அனுக்கிரகம் வேண்டி மன்றாடி நின்றார்கள்.
அதைத்தான் வில்லாண்மையாரும் என்கின்றார் காசிப முனி, வில் என்பது எங்கோ இருந்து தாக்கும் ஆயுதம், அப்படி இருந்த இடத்தில் இருந்து எல்லா இடத்தையும் ஆட்டிவைக்கும் பெரும் பெரும் ஆற்றல் கொண்ட அவதாரங்கள், சக்திவாய்ந்தவர்களெல்லாம் ஏன் சனிபகவான் கூட விநாயகரிடம் தோற்றுப் பணிந்து பாடினார் என அவரின் பெருமைகளை ஒரே வரியில் சொல்கின்றார் முனிவர்.
அடுத்து “விரி மா தமிழில் வல்லாண்மையரும்” என்றால் பரந்த அறிவினைக் கொண்ட புலவர்கள் தமிழிலில் விநாயகர் பெருமையினைப் பாடினார்கள் என்கின்றார்.
விநாயகப்பெருமானைப் பற்றி எல்லாக் கவிஞர்களும் பாடினார்கள், பிள்ளையார் சுழியிட்டுத்தான் எழுத தொடங்குதல் இங்கு மரபு.
அப்படிப் பெரிய காவியமோ இல்லை எளிய பாடலோ விநாயகரைத் தொழாமல் தொடங்கமாட்டார்கள். பாடல் என்பதோ காவியம் என்பதோ வெறும் தமிழ் வார்த்தைகளில் முடிவதல்ல.
அதற்குப் பெரிய அறிவு வேண்டும், பல விஷயங்களை ஆழநோக்கி அதைச் சுவைபட சொல்லும் திறன் வேண்டும். பெரும் ஞானமும் அறிவும் வேண்டும், அப்போதுதான் காவியம் நிலைக்கும்.
அதனாலேதான் வியாச பெருமான் முதல் ஒளவையார் வரை அவரை வணங்கி தொழுது தொடங்கினார்கள், திருமூலர் போன்ற சித்தர்களும் பலரும் அவரைத் தொழுதார்கள்.
ஒளவையார், நக்கீரர், கபில முனி, நம்பியாண்டார் நம்பி என விநாயகப்பெருமானைத் தொழாத பெரும் புலவர்கள் யாருமில்லை, அவரைத் தொட்டு வணங்கிய காவியமே நிலைத்தது.
இதைச் சொல்லி வேண்டுகின்றார் காசிப முனி.
அதாவது விநாயகரைப் பெரும் தோள்வலிமை மிக்கவர் தொழுது வரமும் காவலும் பெறுகின்றார்கள், மும்மூர்த்திகளே அவரிடம் வந்து வரம் வாங்குகின்றார்கள்.
அவர்களுக்கும் விநாயகப் பெருமான் அருள்கின்றார், அவர்கள் கேட்ட பலம் தருகின்றார்.
புலவர்கள் அவரிடம் அறிவும் ஞானமும் பாடும் திறனும் தமிழும் கேட்கின்றார்கள், அதையும் விநாயகப் பெருமான் தருகின்றார்
அப்படியான விநாயகப் பெருமான் தனக்கும் நல்ல சொல்வன்மையினை அருள வேண்டும் என்கின்றார், அது எப்படியான சொல்வன்மை என்றால் ” நல்லாண்மை அது நனியே மிளிரும் சொல்லாண்மை ” என்கின்றார்.
நல்ல விஷயங்களை, மக்களுக்குப் பலன் தரும் விஷயங்களைச் சொல்ல வேண்டிய இடத்தில் இருந்து சொல்லும்படி நல்ல அந்தஸ்தும் அந்தப் பெரும் இடத்தில் இருந்து பேசவேண்டிய தேர்ந்த ஞானமான வார்த்தைகளும் தந்து என்னை நடத்து என்கின்றார்.
“துரிய பொருளே” என்பதும் கவனிக்கத்தக்கது.
துரியம் என்றால் உச்சம் அல்லது முதல் நிலை எனப் பொருள், உச்ச கடவுள் அதற்கு மேல் யாருமில்லாத் தெய்வம் எனப் பொருள்
விநாயகர் எனும் பெயரே அதைச் சொல்லும்.
“வி ” என்றால் “இதற்கு மேல் இல்லை” எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். அதாவது விநாயகர் என்றால் இவருக்கு மேல் யாருமில்லாதவர் என்பது பொருள்.
விநாயகருக்கு அர்ச்சிக்கும் போது , “ஓம் அநீஸ்வராய நம” என்பர். “அநீஸ்வராய” என்றால் தனக்கு மேல் ஒரு ஈஸ்வரனே இல்லை என அர்த்தம்.
இதைச் சுருக்கமாக துரிய பொருளே என்கின்றார் காசிப முனி.
பெரும் தேவர்களும் வீராதி வீரர்களும் பணிந்து நின்று பாடும் போது போற்றி வணங்கும் போது அவர்களுக்கு வரம் கொடுக்கும் விநாயகப் பெருமானே, பெரும் புலவர்களுக்கு அறிவும் மொழிவளமும் ஞானமும் தரும் எம்பெருமானே.
நானும் இந்த அனுபூதியினைப் பாடி மக்களுக்கு உன் பெருமைகளைச் சொல்ல நல்ல வார்த்தைகளை நல்ல சொற்களை அதைச் சொல்லும் தகுதியினை, அந்த வார்த்தைகள் மதிக்கப்படும் நல்ல இடத்தை எனக்கு அருள்வாய் எனப் பாடி கேட்கின்றார் காசிப முனிவர்.
கணேச அஷ்டோத்திரம் கணபதியின் பெருமையினைச் சொல்கின்றது.
“கஜானனாய நம” அதாவது யானைமுகம் கொண்டவனுக்கு வணக்கம்.
“ஓம் கணாத்யக்ஷாய நம” அதாவது விண்ணுலகில் இருக்கும் கணங்கள் என்னும் வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்.
“ஓம் ஸுராரிக்னாய நம” அதாவது தேவர்களின் எதிரியான அசுரர்களை அழிப்பவருக்கு வணக்கம்.
“ஓம் குமார குரவே நம” அதாவது தேவர்களுக்கும் பக்தர்களுக்கும் குருவானவருக்கு வணக்கம் .
“ஓம் பிரக்ஞாய நம” அதாவது அதீத ஞானம் கொண்டவருக்கு வணக்கம்.
“ஓம் பிரம்மரூபிணே நம” அதாவது பிரம்ம ஞானத்தின் ரூபமாக இருப்பவருக்கு வணக்கம்.
“ஓம் ப்ரஹ்மவித்யாதி தானபுவே நம” அதாவது மிகவும் அரிதான பிரம்ம ஞானத்தை பக்தர்களுக்கு அருளுபவருக்கு வணக்கம்.
“ஓம் சர்வோபஸ்யாய நம” அதாவது அனைவராலும் வணங்கப்படுபவருக்கு வணக்கம்.
இதைத்தான் யாழ்பாண வரத பண்டிதர் பாடுவார்.
“திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரு மானை முகத்தோனைக்
காதலாற் கூப்புவர்தங் கை.”
அதையே பாரதி பாடினான்.
“காலைப் பிடித்தேன் கணபதி நின்பதங் கண்ணிலொற்றி
நூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழு(தும்)
வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்துன்
கோலை மனமெனும் நாட்டின் நிறுத்தல் குறியெனக்கே.”

விநாயகர் அனுபூதி : 04
“அந்தே வர்களும் அயன் மால் அரனும்
சுத்தாத் துவிதத் துறைநின் றவரும்
கத்தா கரிமா முகத்தான் எனவே
வித்தா ரமொடு விளம்பும் இறையே”
இப்பாடல் இப்படிப் பிரிந்து பொருள் தரும்.
“அந்தேவர்களும் அயன் மால் அரனும்
சுத்தாத் துவிதத் துறை நின்றவரும்
கத்தா கரிமா முகத்தான் எனவே
வித்தார மொடு விளம்பும் இறையே”
தேவர்கள், திருமால், பிரம்மன், சிவபெருமான், மகா ரிஷிகள் போன்றவர்களால் “வழிபடுவதற்கு உரிய முழுமுதற் கடவுள் விநாயகனே ஆவான்” என்று புகழப்படும் விநாயகனே எனப் பொருள்.
விநாயகப் பெருமானின் பெருமைகளை சொன்னால் சொல்லிமுடியாது எனும் அளவு முழுமுதல் கடவுள் அவர், அவரே எல்லாவற்றுக்கும் மூலம்.
அவரை மும்மூர்த்திகள் பணிந்தனர்; தேவியர் பணிந்தனர்; அப்படியே தேவர்கள் பணிந்தனர்; கிரகங்கள் பணிந்தன; ரிஷிகளும் பணிந்தார்கள்.
அப்படிப்பட்ட விநாயகரை எல்லா தெய்வங்களும் மும்மூர்த்திகளும் முதல்வன் எனப் போற்றுகின்றன.
அவரே பிரணவம். பிரணவம்தான் எல்லாவற்றுக்கும் தொடக்கம். அந்த பிரணவத்திலிருந்துதான் சகல பிரபஞ்சமும் ஜீவராசிகளும் தோன்றின. அந்தப் பிரணவத்தின் ஸ்வரூபமே விநாயகர். அவரது ஆனைமுகம், வளைந்த தும்பிக்கை இவற்றைச் சேர்த்துப் பார்த்தால் பிரணவத்தின் வடிவமாகவே தோன்றும்.
ஆம். அவர்தான் தொடக்கம் அதனாலே அவர் முழு முதல் தெய்வம் என்றானார்.
இப்படிபட்ட விநாயகரை தொழுதுவிட்டுத்தான் எல்லா வேலையினையும் தொடங்குதல் வேண்டும், அதனாலே “பிள்ளையார் சுழி” இட்டு தொடங்குதல் இந்துக்கள் மரபாயிற்று.
இது மானிடர்க்கும் முனிவர்கக்கும் மட்டுமல்ல பிரம்மனுக்கும் பொதுவானது, விநாயகரை தொழாமல் ஒருமுறை தன் கர்வத்தில் பிரம்மன் உலகை படைக்கத் தொடங்கி பின் பெரும் குழப்பம் வந்தது. அதன் காரணம் விநாயகரை தொழாமல் தொடங்கியதே என பிரம்மா அறிந்து அவரை பணிந்து மன்னிப்பு கேட்டு பின் அவரை துதித்து தன் தொழிலை தொடங்கிய காட்சி புராணத்தில் உண்டு.
சிவபெருமான் கஜாசுரனிடம் அவன் வயிற்றில் சிக்கியபோது விநாயகரே அவரை காத்தார் என்பது புராணம்.
இன்னும் திரிபுரத்தை எரிக்க சிவன் கிளம்பியபோது விநாயகரை தொழாமல் தேர் ஏறி, பின் அந்த தேரின் அச்சு முறிந்து, அந்தக் காரணத்தை சிவன் உணர்ந்து விநாயகரிடம் மன்னிப்பு கேட்டு அவரை அச்சாக அமர வைத்து பணிந்த கதை சிவன் வாழ்வில் உண்டு.
திருமாலும் எத்தனையோ முறை விநாயகப் பெருமானைப் வணங்கிய காட்சி உண்டு. அது புராணத்தில் உண்டு. இன்னும் அவதாரமாக பகவான் வந்தபோதெல்லாம் விநாயகரிடம் அவர் பல பலன்கள் பெற்ற காட்சி உண்டு.
இராமனாக அவர் வந்தபோது விநாயகரை அவர் கடற்கரையில் தொழுதுவிட்டுத்தான் கடல் கடந்து யுத்தம் தொடங்கினார்.
கண்ணனாக அவர் வந்தபோது பாஞ்சஜன்யம் எனும் சங்கு விநாயகரை தொழுதுதான் அவருக்கு கிடைத்தது.
பல இடங்களில் அவரும் விநாயகரை வணங்கியதை காணமுடிகின்றது.
இப்படி மும்மூர்த்திகளும் பணியும்படி வல்லமை கொண்ட விநாயகப்பெருமான் முருகப்பெருமானுக்கு பல வகைகளில் உதவினார். வள்ளி திருமணம் அவரால்தான் நடந்தது.
இத்தோடுமட்டுமல்ல தேவியர்க்கும் விநாயகப்பெருமனே அடைக்கலமானார்.
அம்பிகையானவள் ஸ்ரீலலிதையாக அவதாரம் எடுத்தாள். பண்டாசுரனை ஒழிக்க வந்தபோது, அவளே சேனைக்குத் தலைமை தாங்கி சப்தமாதர்களும் உடன் செல்கின்றனர்.
அப்போது நடக்கும் போரில் பண்டாசுரன் விக்னயந்திரத்தைப் பிரயோகம் செய்ய, அம்பிகையின் சேனைகள் நல்ல தூக்கத்தில் ஆழ்ந்துவிடுகின்றன. இது என்ன இவ்வாறு நேர்ந்து விட்டதே என யோசித்த அம்பிகை, தான் போருக்குக் கிளம்பும் முன்னர் விக்னேஸ்வரனைப் பிரார்த்திக்காததின் காரணமே எனப் புரிந்து கொள்கின்றாள்.
பின் தவறை உணர்ந்து விநாயகரை அழைத்து அவருக்கான வழிபாடுகளை செய்தபின்பே விக்ன யந்திர பாதிப்பு விலகி அவள் பண்டாசுரனை நிர்மூலம் செய்தாள்.
பின் முறையாக விக்னேஸ்வரருக்கு வழிபாடுகள் செய்து அவரைப் பிரார்த்தித்து விக்ன யந்திரத்தின் பிரயோகத்தைப் பொடிப் பொடியாக்கி பண்டாசுரனை நிர்மூலம் செய்கின்றாள்.
முனிவர்களின் தலைவரான அகத்திய மகரிஷி விநாயகப் பெருமையினை பாடுகின்றார்.
“ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்ற
அருமையுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
ஓமப்பா ஆதிகண பதிதானொன்று
உறுதியுள்ள மகாகண பதிதானொன்று
தாமப்பா நடனகண பதிதானொன்று
சங்கையுள்ள சக்திகண பதிதானொன்று
நாமப்பா சொல்லுகிறோம் ஒன்றாய்க்கேளு
நன்மையுள்ள வாலகண பதிதானொன்றே.
ஒன்றான உச்சிட்ட கணபதிதானொன்று
உத்தமமே உக்கிரகண பதிதானொன்று
நன்றான மூலகண பதிதானொன்று
நாட்டமுட அஷ்டகண பதிக்குமொன்றாய்க்
குன்றாத மூலமந்திர சூக்ஷந்தன்னைக்
குறிப்புடனே சொல்லுகிறேன்
குணமாய்க்கேளு
நின்றாடு மூலமடா ஆதிமூலம்
நிலையறிந்து ஓம்கிலி அங்உங்கெண்ணே”
சித்தர்களில் மிகச் சிறந்தவரான ஒளவையார் விநாயகப் பெருமானின் பக்தை என்பது உலகறிந்தது.
அப்படியே கபிலர், காசிபர், நக்கீரர் எனப் பெரும் ஞானியர் விநாயகரை பணிந்து நின்றனர்.
விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.
ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடித்து உயர்ந்த நிலை அடைந்தனர் என்கின்றது புராணம்.
விநாயகர் பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.
தேவேந்திரனுடைய விமானம் விநாயகராலே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.
கிருதவீர்யன் விநாயகரை வழிபட்டே உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.
சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் வழிபாட்டை தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங்களையும் பெற்றான்.
விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டவர் வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.
வெள்ளை எருக்கம் வேரால் விநாயகரை பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் செய்து அவருடைய மூல மந்திரத்தால் வழிபட்டு வந்தால் சகல பலனும் கிடைக்கும் என்று ஸ்ரீ பவிஷ்ய புராணம் கூறுகிறது.
அடியார்களின் தரித்திரத்தை நீக்கி ஆயுளையும், செல்வத்தையும், உடற்சுகத்தையும் அருள்பவர் ரண மோட்சக்கணபதி ஆவார்.
விநாயகரின் அருளை பெற்றவர் ஏராளம் அதனில் முக்கியமானவர் மாணிக்கவாசகர்.
மாணிக்கவாசகரின் கனவில் தோன்றிய இத்தல விநாயகர், ‘பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் நானே’ என காட்டியருளினார். சிவனடியாரான மாணிக்கவாசகர், தான் கனவில் கண்ட காட்சியை மனத்தில் நிறுத்திய காரணத்தால், அந்த மூன்று விநாயகரையும், ஒரே சன்னிதியில் பிரதிஷ்டை செய்தார். அதனை இன்றும் ஆவுடையார் கோவிலில் காணலாம்.
நம்பியாண்டாஎ நம்பி மூலம் சைவ திருமுறைகள் வெளிவர காரணமானவரும் விநாயகரே.
கடவுள் உருவமற்றவர் என்ற வள்ளலாரே விநாயகரை தொழுதுதான் காரியங்களை தொடங்கினார், அவரும் முழுமுதல் தெய்வம் விநாயகர் என்பதில் சரியாக இருந்தார்.
“அஞ்சுமுகத் தான்மகன்மால் அஞ்சுமுகத் தான்அருள்வான்
அஞ்சுமுகத் தான்அஞ் சணிகரத்தான் – அஞ்சுமுக
வஞ்சரையான் காணா வகைவதைத்தான் ஓர்அரையோ
டஞ்சரையான் கண்கள் அவை.”
என்பது அவரின் பாடல்.
ஆக புராண காலத்துக்கு முன்னால் இருந்து உலகின் தொடக்கமாக இருந்து என்றென்றும் நிலைத்துநிற்கும் மூல தெய்வம் விநாயகப்பெருமான், அவர் யுகங்களை கடந்தவர் எல்லா தெய்வங்களுக்கும் மேலானவர். அவரைவிட யாரும் மேல் இல்லை எனும் நிலையில் இருப்பவர்.
“ஓம் கணானா”ம் த்வா கணப’திகம் ஹவாமஹே கவிம் க’வீனாம் உபமஶ்ர’வஸ்தவம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்ம’ணாம் ப்ரஹ்மணஸ்பத ஆ னஃ’ ஶ்றுண்வன்னூதிபி’ஸ்ஸீத ஸாத’னம் “
ரிக் வேதத்தில் மிக முக்கியமான, தேவர்களின் குருவான பிருஹஸ்பதிக்கு சொல்லப்பட்ட ஸ்லோகம்.
எப்பேர்ப்பட்ட ஒரு வைதீக நிகழ்விலும், சுபகாரியங்களிலும், ஹோமங்களிலும், யாகங்களிலும் இந்த ஸ்லோகத்தை சொல்லி கணபதியை முதலில் அழைத்து ஆசனத்தில் அமரச் செய்த பின்புதான் மற்ற காரியங்களைத் தொடருவார்கள்.
” ஓம் கணானா”ம் த்வா கணப’திகம்
ஹவாமஹே கவிம் க’வீனாம் உபமஶ்ர’வஸ்தவம் |
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்ம’ணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆ னஃ’ ஶ்றுண்வன்னூதிபி’ஸ்ஸீத ஸாத’னம் || “
ரிக் வேதத்தில் மிக முக்கியமான, தேவர்களின் குருவான பிருஹஸ்பதிக்கு சொல்லப்பட்ட ஸ்லோகம்.
எப்பேர்ப்பட்ட ஒரு வைதீக நிகழ்விலும், சுபகாரியங்களிலும், ஹோமங்களிலும், யாகங்களிலும் இந்த ஸ்லோகத்தை சொல்லி கணபதியை முதலில் அழைத்து ஆசனத்தில் அமரச் செய்த பின்புதான் மற்ற காரியங்களைத் தொடருவார்கள்.
‘கணானா”ம் த்வா கணப’திகம்’ என்ரால் கணங்களின் அதிபதியானவர்
‘கவிம் க’வீனாம்’ என்றால்கவிஞர்களிலெல்லாம் உயர்ந்த கவிஞர்
(இங்கு கவி என்பது வேதங்களைக் குறிக்கும். வேதத்தின் மூலமாக நமக்கு ஞானத்தை அருளுபவர் என்று பொருள் விரியும்)
உபமஶ்ர’வஸ்தவம் என்றால் மிகவும் உயர்ந்தவர்.
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்ம’ணாம் என்றால் மந்திரங்களில் உயர்ந்தவர் முதன்மையானவர்.
ப்ரஹ்மணஸ்பத ஆனஸ்ருண்வன் ஊதிபி’ என்றால்மந்திரங்களை கேட்டு பாதுகாப்பவர்
ஸ்ஸீத ஸாத’னம் என்றால் இருக்கையில் வந்து அமருங்கள்
“கணங்களின் அதிபதியானவர், கவிஞர்களிலெல்லாம் உயர்ந்த கவிஞர், இங்கு கவி என்பது வேதங்களைக் குறிக்கும். வேதத்தின் மூலமாக நமக்கு ஞானத்தை அருளுபவர் என்று பொருள். மிகவும் உயர்ந்தவரான, மந்திரங்களில் உயர்ந்தவரான, முதன்மையானவரான, மந்திரங்களை கேட்டு பாதுகாப்பவரான விநாயகப் பெருமானே இருக்கையில் வந்து அமருங்கள்” என்பது ஸ்லோகத்தின் பொருள்.
கணபதியே பிரணவம் அவர் ரிஷிகள், தேவர்கள், தேவியர், மும்மூர்த்திகள் தாண்டிய நிலையில் இருப்பவர், எல்லாமே அவரிடம் தோன்றி அவரிடம் முடிகின்றன, எல்லாமே அவருக்கு கட்டுபட்டதே அன்றி அவர் யாருக்கும் கட்டுபட்டவர் அல்ல.
அந்த விநாயகரை மும்மூர்த்திகள், தேவர்கள், சித்தர்கள், ரிஷிகள் என எல்லோரும் வணங்குகின்றார்கள். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை வணங்காமல் காரிய சித்தி இல்லை, அவரை வணங்கி பணிதலே வெற்றிக்கும் சித்திக்கும் அடிப்படை, அவராலேதான் எல்லாம் ஜெயமாகும் என போதிகின்றார் காசிப முனிவர்.
விநாயகர் அனுபூதி : 05
“காவா எனைஐங் கரனே! மதுரப்
பாவா ணர்புகழ் பரமென் குருவே
நீவா விரைவாய் நிமலன் புதல்வா
தாவா கருணைத் தளிர்சே வடியே”
இப்பாடல் இப்படிப் பிரியும்.
“காவா எனை ஐங்கரனே மதுரப்
பாவணார் புகழ் பரமென் குருவே
நீலா விரைவாய் நிமலன் புதல்வா
தாவா கருணைத் தளிர் சேவடியே”
அதாவது ஐந்து கைகளை உடையவனே என்னைக் காப்பாய். இனிமையாகப் புலவர்களால் பாடப்படும் குருவே! தூய்மையான வடிவுடைய சிவபெருமானின் நீல நிற மைந்தனே நீ வருவாயாக. குற்றமில்லாத கருணையைப் பொழியும் தளிர் போன்ற செம்மையான அடிகளை உடையவனே என்பது பொருள்.
விநாயகப் பெருமானுக்கு ஐந்து கரங்கள் உண்டு, நான்கு கரங்களும் ஒரு துதித்கையுமாக ஐந்து கரங்கள்.
இந்த ஐந்து கரங்களிலும் எழுத்தாணி, மோதகம், அங்குசம், பாசம், துதிக்கையில் அமுத கலயம் என ஐம்பொருள் இருக்கும்.
சில உருவங்களில் அங்குசத்துடன் கோடரியும் பாசகயிறுடன் தாமரையும் இருக்கும்.
இது காத்தல், அழித்தல், படைத்தல் , உண்மை உணர்வித்தல், மோட்சம் அருள்தல் எனும் ஐந்து தொழில்களைச் செய்வதாக விளக்கம் உண்டு.
அதாவது எழுத்தாணி என்பது படைத்தலையும், கோடரி அல்லது அங்குசம் என்பது அழித்தலையும்,மோதகம் என்பது ஞானம் மறைந்திருக்கும் நிலையினையும், பாசக்கயிறு அல்லது தாமரை என்பது மயக்கம் அறுத்த ஞானநிலையினையும், அமுதம் என்பது அழியாப் பேரின்ப நிலையினையும் குறிப்பது.
விநாயகப் பெருமான் ஐந்து தொழிலையும் செய்பவர். விநாயகர் என்பதை ஐங்கரமும் குறிப்பதாக புலவர் பாடுகின்றார்.
அடுத்து நீல மேனி என்கின்றார்.
நீல மேனி என்பது விநாயகரின் நிறமான நீல நிறத்தைக் குறிப்பது, அண்டவெளி எங்கும் அவர் மேனியே என்பது இதன் பொருள்.
(கணபதி வடிவங்களில் பிரசித்தியானவர் உச்சிஷ்ட கணபதி, அவர் தன் மடியில் நீல சரஸ்வதி எனும் தாராவினை மடியில் வைத்தபடி அமர்ந்திருப்பார்.
சரஸ்வதியின் இன்னொரு வடிவம் தாரா, தாரீ எனும் சொல்லுக்குப் படகு அதாவது கடந்து செல்ல உதவுபவள் எனப் பொருள், அப்படி இவளும் பிறவிக் கடலை கடந்து செல்லும் ஞானத்தைத் தருவாள்.
இந்த தேவியின் பெருமை ரிக் வேதத்தில் 99 ஆம் பகுதியில் கூறப்பட்டுள்ளது, அறிவு ஞானம் இவற்றின் இருப்பிடமும் ஊற்றும் அவளே.
நீல சரஸ்வதி என இவளை வேதம் வணங்குகின்றது, உலகைப் படைக்குமுன் பிரம்மன் இவளை வணங்கித்தான் காரியங்களைத் தொடங்குவான்.
உக்ரதாரா, ஏக்ஜடா என்றெல்லாம் வணங்கபடும் இவள்தான் வாக்குத்திறமை, கவித்திறமை எல்லாம் அள்ளி அள்ளி தருவாள், ஞானமும் யோகசித்தியும் தருவாள்.
காளிகாண்டம் எனும் நூலின் 12 ஆம் அத்தியாயம் தாராவின் பெருமை அனைத்தையும் சொல்கின்றது.
இந்த நீல சரஸ்வதியினினை வணங்குதல் இந்துக்கள், சாரதா என்பதும் இவள் சாயலே, நவராத்திரி கொண்டாட்டத்தில் இவளுக்கும் முக்கிய இடம் உண்டு.
இந்த வழிபாடு நீல சரஸ்வதி வழிபாடு பாரத கண்டத்தின் எல்லா இடங்களிலும் அன்று இருந்தது,
இந்துக்களின் சாஸ்திர தலைமை பீடமாக இருந்த காஷ்மீரின் சாரதா பீடத்திலும் இருந்தது.
இந்த நீல சரஸ்வதிக்கு பெரும் ஆலயம் இருந்த ஆற்றின் பெயர் தான் “நீலம்”, இன்றும் அந்த நீலம் நதி என ஓடிக்கொண்டிருக்கின்றது.
காஷ்மீரில் அன்று பிறந்த குழந்தைகளுக்கெல்லாம் முதல் மூன்றுநாள் தாராவின் மந்திரம் சொல்லி தேன் தொட்டுவைக்கும் சம்பிரதாயம் இருந்தது.
இதே சம்பிரதாயம் இந்துக்கள் மரபில் உண்டு, பிறந்த குழந்தைக்கு தாரா மந்திரம் சொல்லித்தான் தேன் தொட்டு வைப்பார்கள், பின்னாளில் அது காரணம் மறந்த சம்பிரதாயமாயிற்று.
இந்த நீலசரஸ்வதிக்கும் கணபதிக்கும் சம்பத்து உண்டு, கணபதியினை வழிபட்டால் அதுவும் இந்த உச்சிஷ்ட கணபதியினை வழிபட்டால் நீல சரஸ்வதி அருள் கிடைக்கும் )
அந்த நீல சரஸ்வதியின் சக்தி விநாயகர் என்பதால் அவர் நீல நிறத்தவறாக அறியப்படுகின்றார்.
இப்படிப் பாடும் காசிபர் அடுத்து அவர் பாதம் தளிர்போன்ற குளிர்ந்த பாதம் என்கின்றார்.
இதைத்தான் தன் அகவலில் “சீதகளப செந்தாமரைபூ பாதம்” என்பார் ஒளவை.
பாதம் என்றால் கீழ்பகுதி அல்லவா? அப்படித்தான் உடலின் ஆறு சக்கரங்களில் கீழானதாக அமைந்திருக்கின்றது மூலாதாரம், இது மொட்டுபோல் சாமான்யருக்குக் குவிந்திருக்கும்.
இந்த மூலாதாரம் விரிந்தால் அதை யோக நிலையில் சக்தியூட்டி விரிக்கவைத்தால் அதனின்று பெரும் சக்தி எழும், அது விநாயகர் போல் யானை பலம் கொண்டிருக்கும்.
ஆம், மூலாதாரத்தில் பெரும் சக்தி உள்ளது என்பதை, அந்தச் சக்தி மூலாதாரத்தில் மறைந்து அதாவது குளிர்ந்த உறைந்த நிலையில் இருக்கின்றது என்பதை இப்படிச் சொல்கின்ரா காசிப முனிவர்.
ஆக இப்பாடலில் ஐந்து தொழிலை செய்யும் விநாயகப்பெருமானே, ஞானமும் கல்வியும் அருளும் ஞானக் கடவுளே, மூலாதாரத்தில் உறைந்திருக்கும் குண்டலினி சக்தியினை எழுப்பி யோகம் தரும் யோகவிநாயகனே என விநாயகரின் பெருமையினைப் பாடுகின்றார் காசிபர்.
மானிடன் வாழ மட்டுமல்ல அவன் பரம்பொருளை நினைந்து முக்தி அடைய அறிவும் ஞானமும் யோகமும் வேண்டும், எல்லாம் கடந்து இறைவனை அடைய ஞானம் வேண்டும்.
அந்த ஞானத்தை விநாயகர் அருள்வார், அவரால் யோகம் கைகூடும். அந்த யோகம் ஐந்து தொழில் செய்யும் இறைவனை அறியவைக்கும். உணரவைத்து முக்தி தரும் எனப் போதிக்கின்றார் காசிபமுனிவர்.
ஸ்ரீ கிருஷ்ணேந்திரர் என்ற மகானால் அருளப்பட்ட ஸ்ரீ மகா கணபதி மங்கள மாலிகா ஸ்தோத்திரம் இவ்வாறு ஆரம்பிக்கிறது.
“ஸ்ரீ கண்ட பிரேம புத்திராய கௌரி வாமாங்க வாஸினே “
நீலகண்டனான சிவனின் அன்பிற்கு உகந்த புத்திரனே! அன்னை பார்வதியின் மடியில் அமர்ந்திருப்பவனே!
“ஆதி பூஜ்யாய தேவாய தந்தமோதக தாரிணே”
முதன்மையாக பூஜிக்கத் தகுந்தவரும், தேவரும், தந்தம், கொழுக்கட்டை ஆகியவற்றை கையில் வைத்துக் கொண்டிருப்பவருமான கணபதியே!
“பஞ்ச ஹஸ்தாய வந்தியாய பாசாங்குச தராய”
ஐந்து கைகளை உடையவரும், எல்லோராலும் பூஜித்து நமஸ்கரிக்கத் தக்கவரும், கரங்களில் பாசம் அங்குசம் ஆகியவற்றைத் தரித்தவருமான கணபதியே!!
ஸ்ரீ கணேசாய மங்களம்
“உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்”
அப்படியன கணபதியினைப் பாடி தொழுகின்றார் காசிப முனிவர்.