ஸ்வாமி சின்மயானந்தா
19ம் நூற்றாண்டு இந்துமதத்திற்கு சோதனைகள் அதிகம் உதித்த காலம், ஒரு பக்கம் கம்யூனிச நாத்திக கொள்கைகள் ஒருபக்கம் ஐரோப்பிய மதமாற்ற கொடுமைகள் அவர்களின் மேலாதிக்க மனப்பான்மை என இந்துமதம் மிகபெரிய சவாலை எதிர்கொண்டது
ஐரோப்பியரின் மிகபெரிய ஆயுதம் கல்வி கூடங்களானது, ஆட்சி அவர்களிடம் சிக்கியது அதிகாரம் அவர்களிடம் சிக்கியது எனும் வகையில் அவர்கள் நினைத்த கல்வியினை அவர்களால் கொடுக்கமுடியும், அக்கல்வியில் இந்திய தேசபற்றோ இந்திய கலாச்சாரமோ இந்துமத பெருமைகளோ இருக்கும் என எதிர்பார்க்க முடியாது
கல்வியில் மாற்றம் என்பது எதிர்காலத்தில் சில தலைமுறைகளை மாற்றி மொத்த தேசத்தையே சீர்குலைக்கும் ஆபத்து, தேசத்தின் முகத்தையே மாற்றும் பெரும் ஆபத்து அத்தோடு நாடு மாறும் மதம் அழியும் இந்தியாவின் தனிதன்மையே சீர்குலையும், எதிர்காலம் கேள்விகுறியாகும்.
இந்த பெரும் ஆபத்தில் இந்துஸ்தானம் தானே விழித்து கொண்டது, மிகபெரும் சக்தியால் அது நடந்தது, தர்மமான்கள் எழுந்தார்கள், ஞானிகள் எழுந்தார்கள், கல்வி புதுப்பிக்கபட்டது, அந்நிய கல்விக்கு கடும் சவாலாக இந்து கல்வி அமைந்தது
இந்த சவாலை இலங்கையின் இந்துக்கள் எடுத்தார்கள், தமிழக ஆதீனங்கள் மடங்கள் செய்தன, பெரும் தனவான்கள் செய்தார்கள், இந்திய அளவில் பெரும் ஞானியரும் ஆன்மீகவாதிகளும் செய்தார்கள்
பின் உலக அளவில் அதை கொண்டு சென்றார்கள், இந்து ஆன்மீகமும் இந்து தர்மமும் அதனால் உலகில் தனி இடம் பெற்றன அழியா இடம் பெற்றன
அந்நிய மத கல்வி, அந்நிய கலாச்சார கல்வி கொடுத்த பெரும் சவாலை அவை முறியடித்தன, அந்த பெரும் சேவையினை பல தர்ம போராளிகள் செய்தார்கள்
அவர்களில் முக்கியமானவர் அந்த சின்மயானந்தா
நவீன கல்வி எழுச்சியினை தென்னகமே செய்தது , சுவாமி சிவானந்தா உள்ளிட்ட பலர் தமிழகத்திலிருந்து எழுந்தார்கள், அப்படியே கேரளத்தில் இருந்தும் பலர் வந்தார்கள்
தபோவனம் மகராஜ் போன்றோர் அதில் முக்கியமானவர்கள்
சிவானந்தர் எனும் தமிழரும் தபோவனம் மகராஜ் எனும் கேரள சுவாமிகளும் வடக்கே ஆசிரமம் அமைத்து இந்துக்களுக்கு செய்த சேவை மிகபெரிது, எத்தனையோ அழியா அடையாளங்களை உருவாக்கினார்கள்,எவ்வளவோ ஆலமரங்களை உருவாக்கினார்கள்
அப்படி அவர்களால் உருவான ஞானதிருமகன் அந்த சின்மயானந்தா
அவரின் இயற்பெயர் பாலகிருஷ்ண மேனன், 1916ல் கேரளா எர்ணாகுளத்தில் பிறந்தவர், பின் ஆங்காங்கே படித்து நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையில் வேலை செய்தவர், சாதாரண பத்திரிகையாளராகத்தான் இருந்தார்
அவருக்கு இந்திய போராட்டத்தில் பங்குபெற்ற வரலாறும் இருந்தது, பல போராட்டங்களில் பங்குபெற்றார் “வெள்ளையனே வெளியேறு” எனும் போராட்டத்தில் பங்கு பெற்றிருந்தார் இன்னும் பல் போராட்டம் உண்டு
ஒரு காங்கிரஸ் மனப்பான்மைதான் அவரிடம் அப்போது இருந்தது
1947ல் அவரின் வாழ்வு ரிஷிகேஷில் மாறிற்று, சிவானந்தரையும் தபோவனம் மகராஜையும் சந்தித்த அவர் தனக்குரிய வாழ்வு இது அல்ல, தன்னகுரிய கர்மா இது அல்ல என்பதை உணர்ந்தார்
தபோவனம் மகராஜை குருவாக கொண்டு 1949ல் தீட்சை பெற்ற அவர், 1951 முதல் தன் தர்மபணிகளை ஆரம்பித்தார், இமாசல பிரதேசத்தில்தான் தொடங்கினார்
ஆசிரமம், கல்வி சாலை , அறகாரியங்கள் என அவரின் பணி தொடர்ந்தது இந்தியா மட்டுமல்ல உலகெல்லாம் மிக பெரிய கல்வி நிலையங்களை,இந்து ஆன்மீக நிலையங்களை தொடங்கினார்
அடுத்த 10 ஆண்டுகளில் அது 30 நாடுகளில் பரவியது, தொடர்ந்து எண்ணற்ற நாடுகளில் அவரின் சேவை உதயமானது
43 ஆண்டுகள் இந்துமதத்துக்காய் அயராது உழைத்த அவர் அமெரிக்காவிலே காலமானார், அவரின் சமாதி அங்கே நிலைபெற்றுவிட்டது
உலகம் முழுக்க இந்து பெருமைகளை இந்து கல்வி முறையினை சுமந்து சென்று நிறுவிய அவரின் தொண்டு சாமான்யம் அல்ல, அவருக்கு பின அவரின் சீடர்கள் அந்த நிலையங்களை நடத்துகின்றார்கள்
“சின்மயா மிஷன்” என்பது சாமான்யம் அல்ல, 1964ல் போப் இந்துமக்களை கிறிஸ்தவராக்குவோம் என பம்பாய் வந்து பகிரங்கமாக அறிவிக்க, மதம் மாறியோரை தாய்மதம் திருப்புவோம் என பதிலடி கொடுத்தார் சின்மயா சுவாமிகள்
அன்று அவரின் அந்த அறிக்கை பெரும் கவனம் பெற்றது, இந்துக்களின் சரியான குரலாக அது ஒலித்தது
இந்துக்களின் அடையாளமாக எல்லா இடங்களிலும் திகழ்ந்தார், தான் ஒரு இந்து என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினை ஆதரித்தார்
விவேகானந்தர் நினைவிடம் கன்னியாகுமரியில் அமைக்கபட்ட போது பெரும் நிதி கொடுத்து மகிழ்ந்தார், இன்னும் எவ்வளவோ முத்திரைகள் உண்டு
இந்துக்களின் ஒரு அடையாளாமக உலகளாவில் பார்ப்பட்டார் சின்மயானந்தா, சுவாமி விவேகான்ந்தரின் கனவு , சுவாமி பரமஹம்ச யோகானந்தாவின் கனவெல்லாம் அவரால் நிறைவேறின
இன்று உலகளவில் மிகபெரிய இந்து சேவை நிலையமாக , இந்து கல்வி இந்து ஆன்மீகம் என ஒளிவிடும் ஜோதியாக அது விளங்குகின்றது, இந்து மத பேரோளி அதனால் உலகெல்லாம் வியாபித்து நிற்கின்றது
“சின்மயா மிஷன்” என் அந்த அறஆலயத்தை நிறுவிய அந்தமாமனிதனின் மகானின் பிறந்த நாள் இன்று (08/05)
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் காங்கிரஸ் தொண்டனாக சராசரி மனிதனாக முடிந்திருக்க வேண்டிய அவர் வாழ்வினை சுவாமி தபோவனம் மகராஜ் மாற்றினார், அவர் கர்மா எது என அவருக்கு புரிய வைத்தார்
அவரும் தன் கர்மாவினை உணர்ந்து இந்த ஆன்மீக சேவைக்கு வந்தார், அதனாலே இந்த மாபெரும் எழுச்சியும் ஒளியும் சாதகமாயிற்று
இந்து உலகில் மறக்கமுடியாதவரும் இன்றும் தன் ஆசிரமம், சீடர்கள் மூலம் பெரும் சேவை செய்துவருபருமான அந்த சின்மயானந்தாவுக்கு ஒவ்வொரு இந்துவும் இந்தியனும் பெரும் நன்றியினை அவர் பிறந்தநாளில் தெரிவிக்கின்றார்கள்
கேரளம் என்பது குருமார்கள் பூமி, ஆதிசங்கரரில் இருந்து ஏராளனாமோர் அங்கிருந்துதான் வந்தார்கள், வேதங்களை காக்க வந்த பரசுராமனின் அந்த மண் காலம்தோறும் சரியான குருக்களை இந்துமதத்துக்கு கொடுத்து வழிகாட்டியது
அப்படி நம் தலைமுறையில் நாம் கண்ட இந்துமத ஞான குரு , ராஜகுரு அந்த சின்மயனந்தா
ஒரு கேள்வி எழலாம் இவரை போன்றவர்கள் ஏன் வெளிநாடுகளுக்கு சென்றார்கள் ஆசிரமம் அமைத்தார்கள் என எழலாம்
முதலாவது ஐரோப்பியர்களால் இழித்தும் பழித்தும் பேசபட்ட இந்துமதத்தின் பெருமைகளை அவர்களுக்கு புரியவைப்பது, அப்படி ஏகபட்ட ஐரோப்பியர் இந்துக்களாயினர்
இன்னொன்று சூட்சுமமானது, இன்று இந்தியாவில் எழும் காவி கொடிக்கு உலகெல்லாம் அன்றே அங்கீகாரம் தேடும் முன்னேற்பாடு, இன்று மோடியின் கரம் அகில உலகில் ஓங்கிநிற்கின்றது தேசம் அதனால் நன்மைகளை அடைகின்றது என்றால் இம்மாதிரி ஞானியர் வெளிநாட்டில் செய்த அஸ்திபாரங்கள் மிக மிக அதிகம், அதனால்தான் இன்று தேசம் சர்வதேச அரங்கில் நிமிர்ந்து நிற்கின்றது பல நாடுகளால் நம்மை எளிதில் புரிந்துகொள்முடிகின்றது
அவ்வகையில் சின்மயானந்தா தேசத்துக்கும் இந்துமதத்துக்கும் செய்த சேவை மிக அதிகம் , அதி உன்னதமான சேவை அது.