கேசவராம் பலிராம் ஹெட்கேவர்
எக்காலமும் அந்நியருக்கு எதிர்ப்பை கொடுத்துகொண்டே இருக்கும் இந்துஸ்தானம் மொகலயாயரை தொடர்ந்து அதே எதிர்ப்பை வெள்ளையனுக்கும் இந்தியா காட்டி கொண்டே இருந்தது, ஆனால் தன் சாதுர்யமான தந்திரத்தாலும் பிரித்தாளும் சூழ்ச்சியாலும் அவன் அதை அடக்கி கொண்டே இருந்தான்
அவனை எதிர்ப்போரை மக்களிடம் இருந்து தனிமைபடுத்தி வீழ்த்துவது அவன் தந்திரொபாயங்களில் ஒன்று, ஆச்சரியமாக இந்திய மக்களும் பெரும் எதிர்ப்பினை திரண்டு காட்டவில்லை, கட்டபொம்மன் முதல் பலர் தூக்கிலிடபடும் பொழுதெல்லாம் தேசமெங்கும் ஒரு ஒற்றுமையான எதிர்ப்பு இல்லை
1857 முதல் விடுதலைபோர் சரியான தலமையும்திட்டமிட்ட ஒருங்கிணைப்புமின்றி தோற்க அதன் பின் போராட வருவோரை தொடக்கத்திலே அடக்கிவிட தீர்மானித்தான் வெள்ளையன் அது போக தன் பிரத்யோக தந்திரமான பிரித்தாளும் சூழ்ச்சியினை அரங்கேற்றினான்
அதுவரை இங்கு அரசுகளுக்கு இடையே இந்து இஸ்லாமிய மோதல் இருந்தது அதுவும் இந்தியர் ஆப்கானியர் மோதலாக இருந்ததே தவிர மத கலவரம் இல்லை
எத்தனையோ சாதிகள் உண்டே தவிர சாதிகலவரம் மொழி கலவரம் எல்லாம் இல்லை
வெள்ளையன் அந்த கோடுகளை இரும்பு முனை கொண்ட வேலியாக்கி இங்கு ரத்த களறியினை விதைத்தான், புதுபுது பிரிவினைகள் எழ ஆரம்பித்தன, தேசம் இந்திய உணர்வில் இருந்து விலக ஆரம்பித்தது அதை தனக்கு சரியாக பயன்படுத்தினான் வெள்ளையன்
ஆம், வெள்ளையன் அன்றைய 30 கோடி இந்தியரை வெறும் சில ஆயிரம் வெள்ளையர்களை கொண்டு ஆண்டது இந்த பிரிவினையில்தான். இதனால்தான் எந்த தேசாபிமானியின் முயற்சியும் வெற்றிபெறாமலே இருந்தது அவர்களை ஒழிக்க பிரிட்டிசாருக்கு வசதியுமாயிற்று
அப்படியே அந்த குழப்பத்தினிடையே மதமாற்றமும் இன்னும் பல வகையான பொய்களும் இந்திய தேசியத்தினையும் அதன் எதிர்காலத்தையும் கேள்விகுறியாக்கின
இந்த குழப்பங்களிடையே ஆங்கிலேயன் விக்டர் காங்கிரஸ் இயக்கத்தை தொடங்கினான், அன்னிபெசன்ட் போன்ற அன்னியர் ஹோம்ரூல் இயக்கம் தொடங்கினர், சில நவாபுக்கள் முஸ்லீம் லீக் இயக்கம் தொடங்கினர், அதன் எதிராக இந்துமகா சபையும் உருவாயிற்று
ஆனால் இந்திய தேசியம் பேசிய இயக்கம் ஏதுமில்லை
அந்த சூழலில்தான் அந்த மனிதர் அதுவும் அந்நாளைய மருத்துவர் போராட்ட களத்துக்கு வந்தார், அவர் கேசவ பலிராம் ஹெட்கேவர், 1889ல் நாக்பூரில் பிறந்தவர் அவரின் முன்னோர்கள் இன்றைய தெலுங்கானாவினை சேர்ந்தவர்கள், மதரீதியான அச்சுறுத்தல் இருந்த காலத்தில் நாக்பூர் பக்கம் சென்றவர்கள்
அந்த ஹேட்கேவர் இயல்பில் ஒரு மருத்துவர் ஆனால் தன் பணி மக்களின் நோயை மட்டும் போக்குவது அல்ல தேசத்தை பீடித்திருக்கும் வெள்ளை கிருமிகளையும் ஒழிப்பது என போராட வந்தார், அவருக்கு விவேகானந்தர் திலகர் மேல் பெரும் அபிமானம் அப்பொழுதே உண்டு எனினும் அவர் போராட வந்த காலம்காந்தி காலமாய் இருந்தது
சுமார் 29 வயதுடைய கோவல்கர் காந்தி 1920களில் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று ஓராண்டு கடும் சிறைவாசம் கண்டார் பின் விடுதலையானார்
அந்த சிறைவாசம் அவருக்கு பலத்த சிந்தனையினை கொடுத்தது, இந்திய தேசம் அடிமைபட்டு கிடக்க ஒரே காரணம் வெள்ளையனின் ஆயுதமல்ல அவனின் தந்திரம் மட்டுமல்ல இந்தியருக்கு இந்தியர் எனும் உணர்வும் பக்தியும் இல்லாததே என்பதை உணர்ந்தார்
ஆம் சிறு கூட்டம் போராடவரும்பொழுதுதான் வெள்ளையனுக்கு அது எளிதாகின்றது, தேசமே பொங்கும் அளவு ஒற்றுமை இல்லை அதற்கு மொழி இனம் மதம் சாதி என எத்தனையோ சுவர்களை வெள்ளையன் கட்டி வைத்திருக்கின்றான் அதை உடைத்து இந்தியராய் மக்கள் எழாமல் இங்கு விடுதலை சாத்தியமில்லை அப்படி பெற்றாலும் இந்தியா எனும் பெருநாடு நிலைப்பது சாத்தியமில்லை என்பதை முன்பே உணர்ந்தார்
அது நீலகண்ட பிரம்மச்சாரி முதல் வாஞ்சிநாதனெல்லாம் தோற்றிருந்த காலம் வ.உ.சி மிக கடுமையாக செக்கிழுத்த காலம், இந்திய தேசியம் ஒவ்வொருவருக்கும் பொங்கியிருக்குமானால் இக்கொடுமையெல்லாம் நடந்திருக்காது என மனம் வருந்தினார்
காந்தியின் போக்கு விசித்திரமாய் இருந்தது, இந்திய உணர்வினை ஊட்டும் முயற்சி எதுவும் அவர் செய்யவில்லை ஆங்காங்கே உரிமை பெற்றுதரும் போராட்டம் மட்டும் அதுவும் வெள்ளையனுக்கு வலிக்காமல் நடத்தினார்
ஒரு இனம் எழுச்சி பெற அவர்கள் வந்த வழி அவசியம் முன்பு வாழ்ந்த பெரும்சிறப்பினை சுட்டிகாட்டுதல் அவசியம், நம்மிடம் என்ன இல்லை ஏன் மதம் மாறினோம் என சுட்டிகாட்டுதல் அவசியம், அந்நிய ஆட்சியாலும் அவர்கள் கலாச்சாரத்தாலும் இங்கு ஏற்பட்டிருக்கும் பெரும் ஆபத்தை சுட்டிகாட்டுதல் அவசியம்
இந்திய பெரும் சிறப்பை எடுத்து சொல்லி அந்த வளமான பழைய இந்தியாவினை உருவாக்கவே அந்நிய ஆட்சியினை விரட்டுகின்றோம் நம் மதமும் கலாச்சாரமும் பாரம்பரியமும் காக்கவே நாம் அந்நியரை எதிர்க்கின்றோம், நம்மையும் நம் கலாச்சாரத்தையும் மட்டமாக பேசும் அளவு நம்மை உருவாக்கி வைத்த அந்நியனால் என்ன நன்மை நமக்கு விளையும் என்பதை மக்களுக்கு எடுத்து சொல்லுதல் அவசியம்
ஆனால் காந்தி இதில் இருந்து விலகினார், அவரின் போதனையும் தத்துவமும் மக்களுக்கு மென்மேலும் குழப்பம் கொடுத்ததே தவிர தெளிவு இல்லை அது வெள்ளையனுக்கு சாதகமாயிற்று
இங்குதான் ஹேட்கேவர் சிந்தித்தார், காந்தி குழப்பவாதி இந்த குழப்பவாதியால் பல வகை குழப்பவாதிகளே உருவாகிவருவார்கள் அதே நேரம் உண்மையான தேசாபிமானியினை பகத்சிங் போல, பாரதி போல வ உ சி போல வெள்ளையன் உடனே முடக்கியும் விடுவான்
நம் பணி வெள்ளையனை தனியாக எதிர்த்து முட்டாள்தனமாக சாவது அல்ல, நம் வேலை இந்தியர்களை இந்தியராக உணர செய்வது, சுதந்திரத்துக்கான காரணங்களை புரிந்து கொள்ள வைப்பது, இத்தேசமும் அதன் கலாச்சாரமும் எவ்வளவு உயர்ந்தது என்பதை தெரியவைப்பது
யானைக்கு அதன் பலம் தெரியாது வெறும் வெல்லத்துக்கு கட்டுபட்டு அது அடங்கி கிடக்கும் என்பது போல இந்தியரை ஏதேதோ சொல்லி வெள்ளையன் பிரித்து வைத்து கட்டுகின்றான் , இந்தியருக்கு அறிவில்லை, இந்தியா பாம்பாட்டி நாடு சாமியார்கள் நாடு என்கின்றான் ஆனால் அந்த அறிவில்லா மக்கள் கொண்ட இந்தியாவின் செல்வம் தேடி ஏன் வந்தான்? ஏன் இந்நாட்டை விட்டு செல்ல மறுக்கின்றான்
அப்படினால் இந்த தேசத்து மகிமை என்ன? இந்த கலாச்சார சிறப்பென்ன? இந்த உயர்ந்த கலாச்சாரத்தைத்தான் வியாரத்துக்கு வந்த வியாபாரி திரித்து கூறி நம்மை எல்லாம் ஏமாற்றி அடக்கி ஆள்கின்றான் என உணர வைப்பது
இதற்கு இனம், மொழி, சாதி என எதுவும் தடை இல்லை இந்தியன் என ஒரே ஒரு உணர்வும் தகுதியும் போதும்
அவர் இந்த சிந்தனையில் இருந்தபொழுதுதான் உலகெல்லாம் ஒரு தேசிய எழுச்சி உருவானது, ஜெர்மன் இலங்கை, ரஷ்யா, துருக்கி சீனா என பல நாடுகளில் தேசாபிமானிகள் பெரும் தேச எழுச்சியினை கலாச்சாரம் மற்றும் தேசிய சித்தாந்தம் அடிப்படையில் எழுப்பி கொண்டிருந்தார்கள்
அந்த எழுச்சியினை இங்கே உருவாக்க நினைத்தார் கேசவ பலிராம் ஹெட்கேவர், தன் சிந்தாந்தத்தை ஐந்து பேர் கொண்ட குழுவோடு ஒரு விஜயதசமி நாளில் 1925ல் செப்டம்பர் 27ல் தொடங்கினார்
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் அதாவது தேசிய தொண்டர் அணி என அதற்கு பெயர், இது புரட்சிகரமான இயக்கம் அல்ல மாறாக பாரம்பரிய தேசத்தையும் அதன் கலாச்சாரத்தையும் மீட்க பாடுபடும் இயக்கம் என அறிவித்தார்
பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே, கணேஷ் தாமோதர் சாவர்க்கர், விநாயக் தாமோதர் சாவர்க்கர் மற்றும் இலட்சுமன் வாமன் பரஞ்பே என்பவர்களோடு சேர்ந்துதான் அந்த இயக்கத்தை தொடங்கினார்
இது வெள்ளையனை அடித்து கொல்லாது காரணம் ஏற்கனவே மோதி வாழ்வை தொலைத்தவர்களிடம் இருந்து பாடம் கற்ற இயக்கம் அது அதே நேரம் காந்தி பின்னாலும் அவர் கொள்கை ஏந்தி செல்லாது
இந்த இயக்கம் மிக எளிமையானது, அது முழுநேர இயக்கம் அல்ல மாறாக மக்களை ஒவ்வொரு நாளும் காலையோ மாலையோ 1 மணிநேரம் பொதுவெளியில் திரட்டும், மக்களுக்கு உடல்பயிற்சிகளை செய்ய கற்றுதரும் யோகாசனம் செய்ய சொல்லிதரும்
அப்படியே பாரத பெருமைகள் நம் அடையாளம், இந்திய கலாச்சார சிறப்புகள் அதை காக்க வேண்டிய பொறுப்பு, அதை இழந்தால் ஏற்படும் பெரும் அபாயம் என நாட்டின் நலனை மட்டும் சொல்லிதரும்
இங்கு சாதியோ மதமோ மொழியோ முக்கியமல்ல மாறாக இந்தியன் என யாரும் இணையலாம், உழைக்கலாம்
இந்தியா காட்டுமிராண்டி நாடு என வெள்ளையன் சொல்லி இந்திய மக்களுக்கு அறிவில்லை மானமில்லை என இந்தியரை மட்டம் தட்டி வைத்தபொழுது இந்திய சிறப்புக்களையும் அதன் தாத்பரியங்களையும் இந்த சங்கம் மீள மக்களுக்கு கொடுத்தது
கல்வி கூடங்கள் அதிகம் இல்லா நிலையில் இந்துமதமும் வீழ்ந்து அதுபற்றிய படுபயங்கர மோசமான பிம்பம் உருவான நிலையில் இந்த இயக்கம் அதை மறுத்து இந்துக்களின் சிறப்பை பழம் பெருமையினை மீட்க முனைந்தது
(ஒரு சீருடை அவர்களுக்கு சமத்துவத்தை வலியுறுத்தி வழங்கபடும், அக்கால அரசகாவலர்கள் அணியும் உடைவடிவில் அமைந்த அந்த சீருடை அவர்கள் இத்தேசத்தின் காவலர்கள் என்பதை வலியுறுத்திற்று
ஷாகா என்றால் கிளை, அவர்களின் ஒவ்வொரு கிளையினையும் அந்த பெயரிலே அழைத்தார்கள் )
இந்த இயக்கம் அரசியல் இயக்கம் அல்ல மாறாக உணர்வும் அறிவும் கொடுக்கும் இயக்கமானது, அதே நேரம் இயக்க உறுப்பினர்கள் அரசியலில் பங்குபெறவும் அது தடுக்கவில்லை, ஹெட்கேவரே 1930ல் சத்தியாகிரகத்தில் பங்குபெற்றார்
இந்தியர்களுக்கு எதெல்லாம் தங்களை பற்றியும் தங்கள் கலாச்சாரம் பற்றியும் எதிர்கால ஆபத்து பற்றியும் விடுதலையின் அவசியம் பற்றியும் தெரியவேண்டுமோ அதையெல்லாம் இந்த இயக்கம் அழகாக பொறுமையாக செய்தது
அந்த இயக்கம் செய்தது விடுதலை போராட்டம் அல்ல ஆனால் அதற்கான விதையினை விதைத்தார்கள் மெல்ல மெல்ல இந்த இந்திய உணர்வினை வளர்த்தால்தான் தேச விடுதலை சாத்தியம் அதன்பின் நிலைப்பும் சாத்தியம் என்பதை உணர்ந்து பொறுமையாய் செயலாற்றினார்கள்
உண்மையில் அடிதட்டு மக்களிடம் இந்திய உணர்வை ஆர்.எஸ்.எஸ் இயக்கம்தான் கொண்டு சென்றது எங்கெல்லாம் பெருவாரி இந்துக்கள் பாதிக்கபட்டார்களோ அவர்களுக்கு இந்திய இயக்கமாக அது குரலை கொடுத்தது
ஆர்.எஸ்.எஸ் கொடுத்த உணர்ச்சிதான் காந்தி பின்னாலும் நேதாஜி பின்னாலும் மக்கள் கிளர்ந்தெழ காரணமாயிற்று , ஆம் அதுவரை வராத மக்கள் எழுச்சியெல்லாம் அவர்கள் வந்தபின்புதான் சாத்தியமாயிற்று
ஹெட்கேவர் அந்த பெரும் சாதனையினை செய்தார், 1925 முதல் 1940 வரை அந்த இயக்கம் வேகமாக வளர்ந்தது
அங்கு பதவி ஆசை இல்லை, சம்பாதிக்கும் வழி இல்லை, புகழோ செல்வமோ குவிக்கும் வாய்ப்பில்லை நாடு மட்டுமே பிராதானம் என நம்பியவர்களால் வளர்க்கபட்ட இயக்கம்
அந்த இயக்க எழுச்சி தேசத்தில் பலத்த மாற்றத்தை கொடுத்தது அதுவரை இந்துக்களுக்கும் இந்த தேசத்துக்கும் செய்யபட்ட அனைத்து துரோகங்களும் பொய்களும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் வெளிவந்தன
அதில் காந்தி, ஜின்னா, நேரு என பலரின் முகங்களும் இருந்தன
வெள்ளையன் எத்தனையோ நாடகங்களை செய்தும் பதிலுக்கு பல இயக்கங்களை உருவாக்கியும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை அவனால் தொடமுடியவில்லை காரணம் சரியான காரணம் ஏதுமில்லை
அவர்கள் செய்தது ஆன்மீக அரசியல் புரட்சி, அதில் ஆயுதமில்லை வெடிகுண்டு இல்லை ஏன் சத்தியாகிரகமோ இதர அஹிம்சை ரோடு மறியலோ எதுவுமில்லை
அவர்கள் செய்ததெல்லாம் இந்தியர்களின் மனதை தெளிவைக்கும் ஆன்மீக அரசியல் போராட்டம், அதுதான் பிரதானமானது
அதை பல வகையாக செய்தார்கள், கல்வி மருத்துவம் சேவை விளையாட்டு சட்டம் என ஒவ்வொரு பிரிவிலும் சங்கம் அமைத்து செய்தார்கள், இந்தியர் இருக்குமிடமெல்லாம் சங்கம் வளர்ந்தது
அந்த எழுச்சித்தான் பின் தேசவிடுதலையாக முடிந்தது, அதுவரை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை ஒன்றுமே செய்யமுடியா வெள்ளையன் தந்திரமாக ஒரு காரியம் செய்தான்
முதலில் 1932ல் அரசு ஊழியர் அரசு சலுகை பெறுவோர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருக்க கூடாது என சட்டமியற்றியது, நாட்டில் கலாச்சாரமும் மதமும் பேசும் இயக்கத்தில் நாங்கள் இருக்க உங்கள் அனுமதி ஏன் என மக்கள் பொங்கினார்கள், வெள்ளையன் பின் சட்டத்தை திரும்ப பெற்றான் ஆனால் வன்மத்தை மனதில் வைத்தான்
பின் 1939ல் காந்தியே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை நேரில் சென்று வாழ்த்தி இந்த சேவை நாட்டுக்கு அவசியம் என உற்சாகபடுத்தினார், ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எந்தளவு எழுச்சியினை கொடுத்திருந்தது என்பதை அவரால் உணரமுடிந்திருந்தது
இதையெல்லாம் மனதில் வைத்தான் வெள்ளையன் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எவ்வளவு பெரும் எழுச்சியினை கொடுத்தது என்பதை மவுனமாக கவனித்த அவன் சுதந்திரம் நெருங்கும் பொழுது தன் கோரமுகம் காட்டினான்
எந்த இந்தியாவுக்காக மவுனமாக ஆர்.எஸ்.எஸ் பாடுபட்டதோ அதே இந்தியாவினை உடைத்து கொடுத்து ரத்தகளரியில் கோடுபோட்டு பழிவாங்கினான், அப்படியே காந்தியும் மக்கள் எதிர்ப்பில் கொல்லபட பழி ஆர்.எஸ்.எஸ் மேல் விழுந்தது
அந்த இயக்கத்துக்கும் காந்தி கொலைக்கும் தொடர்பு இல்லை எனினும் பழைய பகையில் அது தடைசெய்யபட்டு பின் மீண்டது, பட்டேல் அதனை மீட்டு கொடுத்தார்
அந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கம் சுதந்திர இந்தியாவில் தன் அடுத்தகட்ட போராட்டத்தை தொடங்கிற்று காங்கிரஸ் என்பது வெள்ளையனால் தொடங்கபட்ட இயக்கம் அதன் அசைவும் ஆட்சியும் செயலும் முழுக்க இந்தியருக்கானது அல்ல
அப்படி இருதிருந்தால் இந்தியா உடைந்திருக்காது, நேதாஜியினை தேசம் விட்டு கொடுத்திருக்காது
அப்பக்கம் பாகிஸ்தான் எனும் இஸ்லாமிய தேசம் இருக்க இந்தியா வெள்ளையன் கால சமயசார்பற்ற குழப்ப நாடாக நீடித்தது, காங்கிரஸின் ஆட்சியில் பூரண சுதந்திரத்தின் பலன் இல்லை பெருவாரி இந்துக்களுக்கும் இந்து மதத்துக்கும் எதுவுமில்லை மதமாற்றமும் இந்துக்களுக்கு எதிரான அவமானங்களும் தொடரத்தான் செய்தன, சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை ஆட்டிவைக்கும் அவலம் தொடர்ந்தது
ஆர்.எஸ்.எஸ் தன் தேசிய சிந்தனையில் இருந்து மாறவில்லை அது பல அமைப்புக்களாக தொடர்ந்து உழைத்தது
எவ்வளவோ காரியங்களை அது இந்தியா முழுக்க சாதித்தது, நாகலாந்து மதமாற்றம் கேரள சர்ச்சைகள் தமிழகத்தில் சில விவகாரம் என தேசமுழுக்க அது தன் கொள்கையினை விட்டு கொடுக்காமல் வளர்ந்தது
1962ல் சீன போரில் அந்த இயக்கம் செய்த உதவி கண்டு, 1948ல் அதை தடைசெய்த நேருவே அந்த இயக்கத்தை கவுரவபடுத்தினார்
நாடு, நாட்டு நலம், நாட்டின் ஒற்றுமை, கலாச்சாரம், நாட்டு மக்கள் இந்தியர்களாக முன்னேறுதல் என்பதை தவிர எதையும் சிந்தியா சங்கம் அது.
ஏகபட்ட சங்கபிரிவுகளை அது வளர்த்து ஆலமரமாக நிலைத்தது, இந்தியாவின் பெரும் அடையாளமாயிற்று
அதன் தொழில் மற்றும் பணி தொடர்பான அமைப்புகள் பாரதிய கிசான் சங்கம், (இந்திய விவசாயிகள் சங்கம்) பாரதிய மஸ்தூர் சங்கம், (இந்தியத் தொழிலாளர்கள் சங்கம்) பாரதிய இரயில்வே சங்கம்
சம்ஸ்கார் பாரதி (கலைஞர்கள் சங்கம்) அதிவக்த பரிஷத் (வழக்கறிஞர்கள் சங்கம்)
அகில பாரத வித்தியார்த்தி பரிஷ்த் அகில பாரத ஆசிரியர்கள் பரிஷ்த் அகில பாரத முன்னாள் படையினர் சங்கம் என விரிந்து நிற்கின்றது
அதன் பொருளாதார அணி சுதேசி விழிப்புணர்வு இயக்கம், குருமூர்த்தி நிதி ஆலோசகர்கள் சங்கம்
சிறு தொழில் முனைவோர் சங்கம், கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு என பல பிரிவுகளாக வளர்ந்து நிற்கின்றது
அதன் தொண்டு நிறுவனங்கள் நானாஜி தேஷ்முக்#தீனதயாள் உபாத்தியாயா ஆய்வு நிறுவனம்
பாரதிய விகாஸ் பரிஷத் (இந்தியாவின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மனித முயற்சிகளை ஊக்குவிக்கும் அமைப்பு) , விவேகானந்த மருத்துவ இயக்கம் , சேவா பாரதி (சேவை தேவையாளர்களுக்கு தொண்டு செய்யும் அமைப்பு) , கண் பார்வையற்றவர்கள் அமைப்பு (Sakshaம) , ஆதரவற்ற சிறார்கள் இல்லம்
லோக் பாரதி (தேசிய அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு) எல்லைப்புற மாவட்ட மக்களின் பாதுகாப்பு சங்கம் என பரவி நிற்கின்றது
அதன் மகளிர் அணி ராஷ்டிரிய சேவிகா சமிதி (தேசிய பெண்கள் தொண்டரணி) சிட்சா பராதி (பெண்களுகான கல்வி & தொழில் பயிற்சி வழங்கும் அமைப்பு) என வியாபித்து நிற்கின்றது
அதன் சிறுவர் அணி பாலகோகுலம் என இளம் சிறார்களை தேசிய வழியில் நடத்துகின்றது
அதன் மத பணி இந்து மகாசபை,விசுவ இந்து பரிசத்,பஜ்ரங் தளம், ( அனுமார் படை),ராம ஜென்மபூமி அறக்கட்டளை
இந்து ஜனஜாக்குருதி சமதி, (இந்து விழிப்புணர்வு சங்கம்). வீடு திரும்புதல் தர்ம ஜாக்ரண் சமிதி (இந்துக்களிலிருந்து மதம் மாறியோரை மீண்டும் இந்துக்களாக மதம் மாற்றும் அமைப்பு) என உண்டு
ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இஸ்லாமியருக்கு எதிரியே அல்ல அது தேசிய இயக்கம் அதன் கொள்கைகளில் தேசியத்தை நேசிக்கும் எல்லா இஸ்லாமியருக்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் இடம் உண்டு
அதை முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் (முஸ்லிம்களின் வளர்ச்சிக்கான அமைப்பு) என்ற அமைப்பு செய்து வருகின்றது
அப்படியே சீக்கியர்களுக்கு ராஷ்டிரிய சீக்கியர் இயக்கம் என ஒரு இயக்கம் உண்டு
பிரிவினைவாதமும் திராவிட நாத்திக இந்துவிரோத கும்பல் கொண்ட தமிழகத்தில் இந்து முன்னணி, தமிழ்நாடு இந்து இளைஞர் சேனை., விராட் இந்துஸ்தான் சங்கம் என அதன் பிரிவுகள் உண்டு
கல்வியில் ஏகவலன் வித்தியாலயம் (கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்கள் நலன் மேம்படுத்தல் மற்றும் கல்வி அளித்தல்),சரஸ்வதி சிசு மந்திர் (மழழையர் பள்ளிகள் & காப்பகங்கள் பராமரிக்கும் அமைப்பு)
வித்தியா பாரதி (கல்வி நிறுவனங்கள் தொடங்குதல்) ,விஞ்ஞான பாரதி (அறிவியல் சேவை மையம்)
சமுக-இனக் குழு மேம்பாட்டு நிறுவனங்கள் வனவாசி கல்யாண் ஆசிரமம் (மலைவாழ் மக்களின் நலனை மேம்படுத்தல்)தலித் மேம்பாட்டு சங்கம், இந்திய-திபேத் கூட்டுறவு அமைப்பு
அவர்களுக்கு இன்னும் பல அமைப்புக்கள் உண்டு விஸ்வ சம்வத் கேந்திரம் (samvada.org)
இந்துஸ்தான் சமச்சார் (பன்மொழி செய்தி முகமை), இந்துத்துவா சிந்தனையாளர்கள் & ஆலோசகர்களின் அமைப்பு, பாரதிய விச்ர கேந்திரம், ( General Think .) இந்து விவேக் கேந்திரம், (இந்துத்துவா கொள்கைகள் வடிவமைக்கும் மையம்) விவேகானந்த கேந்திரம் (சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளை பரப்பும் நிறுவனம்). இந்தியாவுக்கான கொள்கைகள் வடிக்கும் நிறுவனம் (India Policy Foundation).
பாரதிய சிக்ஷா பரிசத் (கல்வி சீர்திருத்த சிந்தனையாளர்கள் அமைப்பு) இந்தியா நிறுவனம் (India Foundatiஒன்), அகில பாரதிய வரலாற்று மறுமலர்ச்சித் திட்டம் (Akhil Bharatiya Itihas Sankalan Yojana) (ABISY), (All-India history reform projஎச்ட்) வெளி நாட்டில் சங்கப் பரிவார் இந்து சுயம்சேவக் சங்கம் (வெளிநாட்டு இந்து தொண்டரணி பிரிவு) இந்து மாணவர்கள் சபை (வெளிநாட்டு மாணவர்கள் பிரிவு)
என பல உண்டு
இந்தியாவின் இணைப்பு மொழியான சமஸ்கிருதம் இந்திய அடையாளம் என்பதால் (சமஸ்கிருத பாரதி (சமஸ்கிருத மொழி வளர்ச்சி அமைப்பு) அமைப்பு உண்டு
ராணுவத்திற்கு மக்களை ஊக்குவிக்க மத்திய இந்து படையணிக் கல்விக் கழகம் (இந்துக்களை இராணுவத்தில் சேர ஊக்குவித்தல்), விளையாட்டுதுறைக்கு கிரிடா பாரதி (இந்துக்களை விளையாட்டுகளில் ஊக்குவிப்பு அமைப்பு) என பெரிய அமைப்பு உண்டு
இன்னும் சொல்லாமல் விட்ட அமைப்புக்களும் உண்டு
இத்தனை பெரும் அமைப்புக்களை கொண்ட இயக்கத்தின் அரசியல் இயக்கம் பாரதீய ஜனசங்கம் என்றானது, அது பின்னாளில் பாரதீய ஜனதா என்று மாறி இன்று அசுரபலத்துடன் இந்தியாவினை ஆண்டுகொண்டிருக்கின்றது
இந்த மாபெரும் சாதனைக்கு விதை அந்த ஹெட்கேவர், அந்த தனிமனிதனின் கனவு 90 ஆண்டுகளில் இப்படிபலமிக்க இந்தியாவினை உருவாக்கியிருக்கின்றது என்றால் அவரின் கனவும் சிந்தனையும் எவ்வளவு தூயதாக இருந்திருக்க வேண்டும்
1940லே ஹேட்கேவர் இறந்துவிட்டாலும் பின் அந்த இயக்கம் இவ்வளவு வலுவாக வளர்ந்து இந்தியாவினையே ஆளும் இயக்கமாக உருவாகி நிற்கின்றதென்றால் அவரின் உழைப்பும் அஸ்திபாரமும் எப்படி இருந்திருக்க வேண்டும்
உண்மையில் இந்தியாவின் பிதாமகன் அவர்தான்
இத்தாலியின் கரிபால்டி, ஜெர்மனியின் பிஸ்மார்க், சீனத்து சன்யாட்சன், துருக்கியின் கமால்பாட்சா போல உலக பிரசித்திபெற்ற உருவம் அவர், இந்தியா எப்படி இருக்க வேண்டும் என சிந்தித்து அதற்கேற்ற தியாகங்களை செய்தவர் அவர்
தேசாபிமானிகளை எப்படி உருவாக்க வேண்டும், எப்படி புடம்போட்ட தங்கங்களை தேசத்துக்கு தயார் செய்ய வேண்டும், குடும்பம் பந்தம் செல்வம் புகழ் வாக்கு அரசியல் பதவி வெறி தாண்டி தேசத்திற்காக உழைப்பவர்களை உருவாக்க வேண்டும் என சொல்லிகொடுத்தது அவர்தான்
அதனால்தான் இன்றும் ஊழலுக்கு அப்பாற்பட்ட உத்தமர்களை, ஊழலில்லா ஆட்சியினை, தேசத்துக்காக மிகபெரும் சவாலை எடுக்கும் உறுதியான தலைவர்களை கொண்டு பாஜக மூலம் தேசம் வலுவான இடத்தை பெற்றிருக்கின்றது
அந்நியனால் உருவாக்கபட்ட காங்கிரஸ் அடிதளமில்லாததால் சரிந்தது, அதன் அடிதளமே ரகசிய அன்னிய ஆதரவு ரகசிய சிறுபான்மை ஆதரவு என இருந்ததால் அது வேகமாக சரிந்து இன்று வீழ்ந்து கிடக்கின்றது
உண்மையான தேசபற்று, கலாச்சாரம், பாரம்பரியம் பேணும் கட்சியான விவேகானந்தர் கொள்கையில் வளர்ந்த கட்சியான பாஜக இன்று தேசத்தை தனி அடையாளத்துடன் காத்து கொண்டிருக்கின்றது
அந்த ஹெட்கேவர் மறக்க கூடியவர் அல்ல, இஸ்ரேலுக்கு தியோடர் ஹெர்ஸ் என்பவன் யூதர்கள் நாடில்லாமல் அடிபட்ட காலத்திலே ஒரு இஸ்ரேலிய நாடு எப்படி அமைய வேண்டும் அது எப்படி வலுவாக இருக்க வேண்டும் என பெரும் காரியங்களை செய்தது போல இந்தியருக்கு செய்துவைத்த பெரும் சிந்தனையாளர்
இந்திய திருநாட்டில் தேசமும் தெய்வீகமும் வாழும் காலம் வரை அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார்
இன்று நாம் காணும் வலுவான பாரதம் 100 ஆண்டுக்கு முன்னால் தனி மனிதனாக அம்மனிதன் கண்ட கனவு, எதிர்கால ஆபத்தை முறியடிக்கவும் காலம் காலமாக நடந்த இந்து எழுச்சி தீபத்தை காக்கவும் அவர் கண்ட கனவு
அந்த கனவுதான் இன்று வலுவான பாரதமாக அதன் தலைவர் மோடியாக இனி இந்தியாவுக்கு ஆபத்தே இல்லை எனும் வகையில் பலமான தலைவர்கள் கொண்ட பாரதமாக வலுத்து நிற்கின்றது
“குளிராலோ பசியாலோ இந்த நாட்டிலேயே(அமெரிக்காவில்) நான் அழிந்து போக நேரலாம். ஆனால் இளைஞர்களே! ஏழைகள், அறியாமை மிக்கவர்கள், நசுக்கப்பட்டவர்கள் ஆகியோருடைய நலனுக்காகப் போராடும் என்னுடைய இரக்கம், முயற்சி ஆகியவற்றை உங்களிடம் நான் ஓப்படைக்கின்றேன். நாள்தோறும் கிழ்நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இந்த முப்பதுகோடி மக்களின் நல்வாழ்வை மீட்டுத் தருவதற்காக உங்கள் வாழ்நாள் முழுவதையும் அற்ப்பணிப்பதாகச் சபதம் மேற்கொள்ளுங்கள்.” என தன் பணியினை தேசாபிமான இந்திய இந்துக்களிடம் ஒப்படைத்தார் விவேகானந்தர்
அதைத்தான் தன் சுதர்மாக ஏற்று தவமாக வாழ்ந்து காட்டினார் ஹெட்கேவர்
அந்த மாமனிதனின், இந்தியாவின் ஆன்மீக அரசியலின் அடிகல்லாக தன்னை புதைத்த நாயகனின் நினைவு நாளில் தேசம் மிக பெருமையாக அவரை நினைவு கூர்கின்றது
அந்த தேசியவிதையினை விதைத்து சென்ற தேசியவாதிக்கு, தனிமனிதனாய் ஒவ்வொரு இந்தியனின் மனதை தொட்டு இந்தியனின் பலத்தை அவனுக்கு உணர்த்தாமல் மாற்றமில்லை என சிந்தித்து அதனை செயல்படுத்தி மாபெரும் சேனையினை பாரதத்துக்கு தந்து சென்ற அந்த பெருமகனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
வலுவான இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் அந்த மாமனிதனுக்கு அஞ்சலி செலுத்துதல் கடமை, தேசம் அதைத்தான் நன்றியோடு செய்து கொண்டிருக்கின்றது.