அண்ணாமலையின் இரண்டாம் இலங்கை விஜயம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இரண்டாம் இலங்கை விஜயத்தை எப்படி பார்க்கின்றீர்கள் என எம்மிடம் கேட்டால் விஷயம் மிக மிக ஆழமானது
துரதிருஷ்ட வசமாக இதுபற்றி தமிழக ஊடகம் சொல்லவில்லை, முன்பு சோ.ராமசாமி காலத்தில் மிக சரியாக ஈழவிவகாரங்களை சொன்ன துக்ளக் பத்திரிகையும் சொல்லவில்லை ஏன் தமிழக பாஜக செய்திகளே சொல்லவில்லை
இதையெல்லாம் சொல்லவேண்டிய தமிழக பாஜகவின் ஐடி பிரிவும் வார் ரூம் வானரங்களும் உள்கட்சியில் சண்டையிடுவதெல்லாம் பாஜகவின் சாபம் அல்லது நோய்
விஷயம் அவ்வளவு முக்கியமானது, இதன் ஆழமும் வரலாறும் மிக நீண்டது என்பதால் வெகு சுருக்கமாக பார்க்கலாம்
காலம் காலமாக இந்தியாவுடன் தொடர்பில் இருந்த இலங்கை பிரிட்டிசார் காலத்தில் பிரித்தாளும் சூழ்ச்சியில் சிக்கியது, தைவானியர்களுக்கும் சீனாவுக்கும் உள்ள ஒரு இடைவெளி போல இந்தியருக்கும் இலங்கைக்கும் ஒரு பிரிவு உருவானது
அதை உருவாக்கியது பிரிட்டிசார் என்றாலும் இலங்கையின் சிங்கள தமிழ் தரப்பு என இரண்டுமே அதற்கு துணை போனதும் வரலாற்று சோகம்
பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்லவர்களான பிரிட்டிசார் இந்து பவுத்த சிக்கலை காட்டி சிங்களவர்களை இந்தியாவிடம் இருந்து பிரித்தது போல இந்துக்களான தமிழர்களையும் சில மதமாற்றம் முதல் அந்தஸ்து கவுரவம் கல்வி என காட்டி பிரித்தனர்
இந்தியா வீரசிவாஜி தொடங்கிய வீரர்போரில் சிக்கி அது கட்டபொம்மன் புலித்தேவன் என நீண்டு மருது ஊமைதுரை என ஓயா போர்களில் சிக்கிய காலம் இலங்கைக்கு அந்த நெருக்கடி இல்லை
இதனால் 17ம் நூற்றாண்டிலே அமைதியான சிறிய இலங்கையினை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்து ஆங்கில கல்வி கொடுப்பது பிரிட்டிசாருக்கு எளிதாயிற்று, இலங்கை தமிழரும் ஆங்கிலம் பேசுவதால் தங்களை கொஞ்சம் மேம்பட்டவர்களாக கருதினர்
சந்தடி சாக்கில் போரினால் சீரழிந்த தமிழகத்தில் இருந்து தேயிலை தோட்ட தொழிலாளர் என தமிழர்களை குவித்த பிரிட்டிசார் மேலாண்மைக்கு யாழ்பாண தமிழர்களை நியமிக்க ஒரு அந்தஸ்து இடைவெளி விழுந்தது
மெல்ல மெல்ல இலங்கை இந்திய உறவுகள் கெட்டன
இந்தியா மதரீதியாக பிரிந்தபொழுது அப்பக்கம் பாகிஸ்தான் இப்பக்கம் இந்து இந்தியா என காட்சிகள் மாறியபொழுது இலங்கை இன்னும் அஞ்சியது, ஒருவேளை இந்து இந்தியாவாக அது உருவானால் இலங்கை இந்துக்களுக்காக இங்கு கால்வைக்கும் என அஞ்சியது
ஆனால் காந்தியும் நேருவும் இலங்கையின் கண்ணீரை துடைத்தார்கள், இன்று சுமார் 85 கோடி இந்துக்களுக்கு நாடு இல்லாமலும் ஆனால் சுமார் 1.5 கோடி சிங்களவருக்கு பவுத்த நாடு இருப்பதும் இப்படித்தான்
ஒருவகையில் விசித்திரமான நிலை இது அதே நேரம் இந்துக்களின் பெரும் சோகமும் இதுவே
வடபகுதி தமிழர்களின் மேட்டிமைதனம், சிங்களர்களின் பவுத்தம் இரண்டுமே இந்தியாவில் இருந்து இலங்கையினை பிரித்தன, ஒரு கட்டத்தில் தமிழர் வாக்குவங்கி பெருகாமல் இருக்க சுமார் 5 லட்சம் தமிழரை இலங்கை 1960களில் திரூப்பி அனுப்பியது
அப்பொழுதும் நேரு இலங்கையில் பிறந்தவர்கள் இலங்கை குடிமக்கள் என பேச அஞ்சினார், இலங்கையினை கூட எதிர்க்க அவர் தயாராக இல்லை, இக்கொடுமைக்கு காமராஜரும் சாஸ்திரியும் துணை சென்றார்கள் அல்லது நேருவினை எதிர்க்க அவர்கள் தயாரில்லை
அப்படி இந்திய நிலை மிக பலவீனமாகத்தான் இருந்தது
இலங்கையில் தலையிட இந்தியா விரும்பவில்லை, இலங்கையும் தன்னை விலக்கியே வைத்திருந்தது
சிக்கல் 1970களில் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் வரிந்து கட்டிய காலங்களில் வந்தது, வியட்நாமில் பெரும் தோல்வி பெற்ற அமெரிக்கா தனக்கான சரியான கடல் துறைமுகத்தை தேடியபொழுது இலங்கையின் திரிகோணமலை அதன் கண்ணில் பட்டது
இங்கு அமெரிக்கா கால் வைக்க முயல அதை சோவியத் தன் அடிமையான அக்கால இந்தியாவின் காங்கிரஸ் மூலம் முயன்றது
அப்பொழுது இந்தியாவின் பிரதமர் இந்திராகாந்தி
அவர் வலுவானவர் என்பது வரலாறானாலும் அந்த வரலாற்றில் சோவியத்தின் பங்கு இல்லாமல் இல்லை, சோவியத் சொன்னபடியெல்லாம் ஆடி அந்த காவலில் தன்னை அவர் நிறுத்தினாரே தவிர அவரின் தனிபட்ட முடிவு என எதுவுமில்லை
அதனாலே காஷ்மீரும் சீன சிக்கலும் இன்றுவரை நீடிக்கின்றன
கிழக்கு பாகிஸ்தானில் அமெரிக்கா காலூன்ற கூடாது என்பதுதான் வங்கதேசம் உருவான முதல் புள்ளி, அதை நிறைவேற்றி கொடுத்தவர் இந்திரா
அப்படி திரிகோணமலையில் அமெரிக்கா வரகூடாது என விரும்பிய இந்திரா வாய்ப்புக்காக காத்திருந்தார்
பொதுவாக வல்லரசு நாடுகள் வாய்ப்புக்காக காத்திருப்பதில்லை , வாய்ப்பை உருவாக்கும் அப்படி உருவான வாய்ப்புத்தான் புலிகள் எழுச்சியும் கொழும்பு கலவரமும்
அந்த கலவரத்தில்தான் புதிதாக இந்திய காங்கிரசுக்கு இலங்கை தமிழர்பால் அக்கறை பொங்கியது, சரியாக அதன் 25 வருடத்துக்கு முன்பு இந்திய தமிழக வாரிசுகள் 5 லட்சம் பேர் கதற கதற இலங்கையில் இருந்து பிடுங்கி எறியபட்டபொழுது வராத அக்கறை, ஈழ தமிழர் மேல் பொத்து கொண்டு வந்தது
அது முழுக்க இந்திய சுயநல அரசியல் என்பதன்றி வேறல்ல
இந்திரா செய்த பெரிய முட்டாள்தனம் இலங்கை போராளிகளுக்கு பயிற்சி என பல போராளிகளை அவரின் நண்பர் யாசர் அராபத்திடம் அனுப்பியது, பத்மநாபா உமா மகேஸ்வரன் என பலர் சென்றார்கள்
இங்கு பத்மநாபா கம்யூனிஸ்ட் என்பது இன்னொரு சிக்கல்
யாசர் அராபத்துடன் இலங்கை போராளிகள் பயிற்சி பெறுவது இஸ்ரேலுக்கு ஆபத்து என்பது ஒன்றும் ரகசியமல்ல இலங்கையின் அதுலத் முதலி இவ்விவகாரத்தில் இஸ்ரேலின் மொசாத்தை காட்சிக்குள் இழுத்தார்
திரிகோணமலை துறைமுகத்துக்காக சி.ஐ.ஏ வந்தது அப்படியே ஆண்டன் பாலசிங்கமும் லண்டனில் இருந்து வந்தார்
நிலமையின் வீரியத்தை அறிந்த இந்திரா மவுனமானார், காரணம் அப்பொழுது சோவியத் யூனியன் பலமிழந்திருந்தது, ஆப்கானிலே கூட 10 ஆண்டு போராடி அது வெற்றிபெறமுடியா நிலை இருந்தது
முன்பு வங்கபோரில் சோவியத் களமிறங்கும் என மிரட்டிய மிரட்டல் இம்முறை முடியாது, காரணம் ஆப்கானிஸ்தானிலே மிகபெரிய தோல்வியினை சந்தித்து அதன் வல்லரசு பட்டம் நொறுங்கி கொண்டிருந்தது
இதனால் இன்னொரு போரை இலங்கையில் அது தொடங்காது, இது அறிந்த இந்திரா நாட்களை கடத்தினார், அப்பொழுது அவர் செய்த இன்னொரு மோசமான காரியம் இந்திய தமிழகத்தில் ஈழ அரசியலை புகுத்தியது
அதுவரை ஈழமக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இந்துமதமாயினும் பொருந்தா இடைவெளி இருந்தது, கசப்புகள் ஏராளம்
ஆனால் திராவிட கும்பல் தமிழ், தமிழர் என உறவு பாராட்ட ஈழ ஆதரவு வளர்ந்தது, இந்திரா இலங்கையிடம் அரசியல் பேச இது பெரும் உதவியாக அமைந்தது
முதலில் இதனை ரசித்த இந்திரா பின் நிலமை எல்லை மீறி இந்திய பிரிவினை திராவிட கும்பல்கள் அன்னிய நாட்டு பிரிவினையினை ஆதரிக்க, பதிலுக்கு பஞ்சாப் காஷ்மீர் பிரிவினையினை பல நாடுகள் ஆதரிக்க தொடங்க பின்வாங்கினார்
அதே நேரம் ராணுவத்தை அனுப்பவும் அவருக்கு விருப்பமில்லை, நிச்சயம் இனி சோவியத் வராது வந்தாலும் பிரயோசனமில்லை என உணர்ந்து குழம்பினார், அப்படியே இறந்தும் போனார்
அவர் அமைதி மிரட்டலில் ஒரு குழப்பத்தில் இலங்கையினை வைத்திருந்தார் இருபக்கமும் அமைதி நிலவியது அப்பொழுது நடந்தது
ஒரு கட்டத்தில் திரிகோணமலை துறைமுகத்தை இந்திய எண்ணெய் கழகமாக ஒப்பந்தம் செய்துகொண்டு ஈழதமிழர் விவகாரத்தை தன் அடிபொடி போராளிகள் மூலம் கையாண்டு ஏதோ செய்து கொண்டிருந்தார் இந்திரா
அதாவது இந்தியாவின் ஆபத்தை களைந்தார் ஆனால் ஈழமக்களுக்கான தீர்வை அவர் கொடுக்கவில்லை குழப்பம் நீடித்தது
அடுத்து வந்த சீனியர் ராகுல்காந்தியான ராஜிவ்தான் நிலமையின் பெரும் சிக்கலுக்கு காரணம்
அவர் அவசரபட்டு இலங்கைக்கு படை அனுப்பியதும் , ஈழ தமிழர் சார்பில் யாருமின்றி ஈழ் தமிழர் ஒப்பந்தம் தயாரித்ததும், பெயரளவில் `13ம் சட்டதிருத்தம் சொல்லிவிட்டு அதை செய்யாமல் போனதும் குழப்பமாயின
இந்த குழப்பம் பிரபாகரனுக்கு சாதகமாயிற்று
அடுத்து சோவியத்துக்கு ஆப்கன் போல, அமெரிக்காவுக்கு வியட்நாம் போல இந்தியாவுக்கு வ்ட இலங்கை ஆயிற்று வல்லரசு உளவுதுறைகள் ஆட்டத்தில் இந்தியா திணறி வெளியேறியது
அந்நேரம் அவரும் இறந்துவிட அடுத்து பிரபாகரன் காலம் வந்தது
அவனுக்கும் பெரிதாக ஒன்றும் செய்யமுடியவில்லை சோவியத் அமெரிக்கா என இடைபட்ட காலத்தில் உருவான அவனுக்கு ஒருதுருவ அரசியல் பிடிபடவில்லை
அதே நேரம் அவனிடம் ஒரு நல்ல குணமும் இருந்தது அது தனி ஈழம் அமைந்தால் திரிகோணமலை அமெரிக்காவுக்கு என அவன் அறிவிக்கவில்லை, ஒருவகையில் அவன் இந்திய அனுதாபியாகவே இருந்தான்
ஆனால் ராஜிவின் முழு குழப்பமும் அறியாமைய்ம் அனுபவமின்மையும் ஜெயவர்த்தனேவுக்கு சாதகமாகி ராஜிவ் இல்லாமல் போனார்
இலங்கையில் இருந்து இந்தியாவினை புலிகளை கொண்டே அப்புறபடுத்திவிட்ட ஜெயவர்த்தனே நிம்மதியானார்
இந்தியா வெளியேறிய பின்புதான் பிரபாகரனுக்கு ஆபத்து புரிந்தது
ஆனால் விதி அவன் தமிழக வைகோ கருணாநிதி போன்றோரை நம்பினான், இவர்களை நம்பி தமிழக தமிழர்களே வாழமுடியாது எனும்பொழுது ஈழமக்கள் எங்கிருந்து வாழ்வது?
அடுத்த 10 ஆண்டுகளில் மெல்ல மெல்ல இந்தியாவினை உள்ளிளுக்க விரும்பினான் பிரபாகரன் ஆனால் ராஜிவ் கொலையினை தாண்ட அவனால் முடியவில்லை
10ம் ஆண்டு முடிவில் அதாவது இந்தியாவெளியேறி அடுத்த 1999ல் அவன் ராணுவரீதியாக மாபெரும் வெற்றி பெற்றிருந்தான், யாழ்பாணம் அவனால் கைபற்றபட்டு ஈழம் அறிவிக்கபடும் நிலை வந்தது
அப்பொழுது இலங்கைக்கு அமெரிக்க ராணுவம் அல்லது பன்னாட்டு ராணுவம் வரும் ஆபத்து இருந்தது, பிரபாகரன் அஞ்சினான்
அவன் அப்பொழுது வாஜ்பாய் அரசில் இருந்த வைகோ கருணாநிதி போன்றோர் தனிஈழம் வாங்கிதந்து இந்தியாவினை இழுத்துவருவார்கள் என நம்பினான்
ஆனால் இவர்கள் கைவிட்டார்கள், வாஜ்பாய் சுத்தமான இந்தியராக நின்றார், இலங்கையில் மென்மேலும் குழப்பம் வரவும் போர் வரவும் இந்தியா தலையிடவும் அவர் விரும்பவில்லை
ராஜிவ் கொலை அப்படியான தடையினை இட்டது, ராஜிவினை கொன்ற பிரபாகரனுக்கு நாடு கொடுத்து முடிசூட்ட இந்தியா தயாரில்லை
காட்சி நார்வே தூதுகுழுவிடம் சென்றது, அப்பொழுது பின்லேடனின் ஆட்டத்தால் உலக முகம் மாற உலகெங்கும் தீவிரவாதம் தடைசெய்யபட்டது
நேபாளத்து மாவோயிஸ்டுகள் கூட மாறினார்கள் ஆனால் பிரபாகரன் மாறவில்லை, அவன் இந்தியா வரும் என எதிர்பார்த்தான்
என்று திரிகோணமலை இந்திய ஆயில் டாங்க் குடோனாக மாறியதோ என்று இந்திய கட்டுபாட்டில் திர்கோணமலை வந்ததோ அத்தோடு இந்தியா இலங்கை தமிழர் விவகாரத்தில் இருந்து மெல்ல ஒதுங்கியது, பிரபாகரனின் பிடிவாதமும் இந்தியாவின் குழப்பமும் நிலமையினை சிக்கலாக்கின
2006ல் ராஜபக்சே வந்தார், அப்பொழுது சீனாவும் நுழைந்தது
எல்லோரையும் பகைத்த பிரபாகரன் ஒரு கூட்டாளியின்றி மொத்தமாய் முடிந்து போக 2009ல் ஆயுத போராட்டமும் முடிந்தது
இனி இலங்கையில் ஏதுமில்லை எல்லாம் சிங்கள சாதகம் அப்படியே இலங்கையில் இனி சீனா வரும், 1980களில் இந்திய முகமூடியுடன் சோவியத் வரமுயன்றது தோற்றிருக்கலாம் இனி சீனா தோற்காது அது கச்சதீவு வரை வரும் என அச்சம் வந்த நிலையில்தான் மோடி 2014ல் பிரதமரானார்
மோடி செய்த முதல் விஷயம் அனுபவம் வாய்ந்த பார்த்தசாரதியினை இலங்கைக்கு நியமித்து அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தது
அதன் பின் நிதானமாக காட்சிகளை நடத்தினார் மோடி, இந்திரா செய்த அத்தனை தவறுகளையும் அவர் ஒவ்வொன்றாக களைந்தார்
முதலில் யாரும் தேடாமல் இருந்த மலையக மக்கள் அதாவது இலங்கையில் எஞ்சியிருக்கும் புறக்கணிக்கபட்ட மக்களை சந்தித்தார், மலையக மக்களை நேரில் சந்தித்த முதல் இந்திய பிரதமர் அவர்தான்
பிரபாகரனின் தமிழ் ஈழத்தில் கூட புறக்கணிக்கபட்ட மக்களை, அதாவது கருணாநிதியும் வைகோவும் கூட இவர்கள் தமிழர்கள் உங்களோடு சேர்த்து கொள்ளுங்கள் என சொல்லாத மக்களை மோடி நேரில் சந்தித்து மருத்துமனை கட்டி கொடுத்தார்
மோடியின் தலையீடு வந்தபின் சீனா இன்னும் வேகமாக மோதிற்று அது ஹம்பாந்தோட்டா துறைமுகத்தை வளைத்தது, ராஜபக்சேவினை வளைத்தது இன்னும் என்னென்னவோ செய்தது
மோடி அசரவில்லை, அடிகளை கவனமாக வைத்தார், முதலில் பவுத்த சங்கங்களோடு நல்லுறவு கொண்டார் , இந்திரா யோசிக்க கூட செய்யா அவ்விவகாரத்தை மோடி அழகாக செய்தார்
அயோத்தி ராமர்கோவிலுக்கு இலங்கையின் சீதாதேவி ஆலயத்தில் இருந்த கல்லை மோடி பெற்றார், அதுவும் பவுத்த துறவிகள் மூலமே கொண்டுவர செய்தார்
கயாவுக்கும் கொழும்புவுக்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்தினார் பவுத்த மக்கள் மோடியினை மதிக்க தொடங்கினர் அது கூடிற்று
சீனா இன்னும் மிரண்டது அவசரமாக தன் பிரமாண்ட கம்பெனிகளை அழைத்து சென்று வட இலங்கை கொழும்பு துறைமுகம் என வளைத்து ஏகபட்ட திட்டங்களை அறிவித்தது, அந்த அறிவ்ப்பில் கச்சதீவு வரை சீன பிடி வந்தது
இந்த மிகபெரிய தொழில்திட்டத்தை இந்தியாவால் நிறைவேற்றமுடியாது வேறுவழியில்லை என இலங்கை திணறியபொழுதுதான் இந்தியாவில் அதானி உண்டு மாபெரும் கம்பெனி அவருக்கு உண்டு என சொல்லி வட இலங்கை கொழும்பு துறைமுகம் முழுக்க கட்டுபாட்டில் கொண்டுவந்தார் மோடி
யாழ்பாண தூதரக திறப்பு, பலாலி விமான போக்குவரத்து என இலங்கை முழுக்க இந்தியா கட்டுபாட்டில் வந்தது
சீனா அசரவில்லை அது தன் கொழும்பு தூதரை அடிக்கடி வட இலங்கைக்கு அனுப்பி அரசியல் செய்தது , வேட்டி சட்டையுடன் திருநீற்றுடன் வட இலங்கையில் சுற்றி திரிதார் இலங்கை தூதர்
இது ஒருவகையில் பழைய தீவிரவாதங்களை அதாவது புலிகள் காலத்தை சீனா திருப்புமோ, இந்தியாவுக்கு எதிராக ஒரு இயக்கம் உருவாக்குமோ எனும் அச்சத்தை கொடுத்தது
இந்திய தரப்பில் ஒருவரை களமிறக்கும் அவசியம் வந்தது
இந்திய தமிழகத்தில் ஈழ விவகாரம் ஒரு அரசியல் என்பதால் அனுப்படவேண்டியவர் ஒரு தமிழர் என்றும் அதே நேரம் அவர் சுத்தமான தேசாபிமானியாக இருக்கவும் வேண்டும் என பல கணக்கு இடபட்டதில் அண்ணாலமை சரியாக தேறினார்
அவரின் முதல் இலங்கை பயணம் இப்படி நடந்தது
இங்கு ஒரு அழகான வியூகத்தை இந்தியா கையில் எடுத்தது, அது நேருவும் இந்திராவும் கையில் எடுக்காமல் தோற்ற ரகசியம், 1940களில் இலங்கை அஞ்சி ஒடுங்கிய அந்த ரகசியம்
ஆம், இலங்கை இந்துக்களையும் இந்திய இந்துக்களையும் ஒன்று சேர்க்கும் முயற்சி
ஈழ தமிழர் சில லட்சம் மிஞ்சி போனால் 20 லடம்பேரை சேர்த்து தமிழக தமிழர் 8 கோடியுடன் சேர்த்து 20 லட்சம் தமிழர்களுக்காக 8 கோடி தமிழர்கள் என்பதை மாற்றி, 20 லட்சம் இந்துக்களுக்காக சுமார் 90 கோடி இந்துக்கள் என வியூகம் வகுத்தார் மோடி
இலங்கையின் அச்சம் கூடிற்று
அதுவரை காங்கிரஸின் பிரதிந்திகள் திமுக பிரதிநிதிகள் தொடாத வியூகம் அது
முதன் முதலில் இந்திய அரச இந்துவாக யாழ்பாணம் கந்தசாமி கோவிலுக்கு சென்றவர் அண்ணாமலை அங்கிருக்கும் மடங்கள் ஆதினங்களெல்லாம் சந்தித்தவர் அண்ணாமலை
இது புதிய நம்பிக்கையினை இலங்கை இந்துக்களுக்கு கொடுத்தது, 1940களில் நேருவும் 1970களில் இந்திராவும் செய்ய தவறியத மோடி அண்ணாமலை மூலம் செய்தார்
இதனால் மோடி தெரிவித்தது என்னவென்றால் இலங்கை தமிழர் பின்னால் இந்துக்களாகிய அவர்கள் பின்னால் இந்தியா நிற்கின்றது
இதன்பின் சீன பிடி தகர ஆரம்பித்தது, இலங்கை அரசும் இந்தியா பக்கம் சரிய உலக நிலவரமும் மாற சீனா ஆத்திரமுற கடைசியில் பெரும் குழப்பத்தில் இலங்கை சிக்க அந்நாடு ஓரளவு மீண்டெழ கைகொடுத்த நாடு இந்தியா
இப்பொழுது தமிழருக்கு 13ம் சட்டதிருத்தத்தை செய்ய இந்தியா அழுத்தம் கொடுத்தது
ஆனால் இலங்கை கொந்தளிக்க தொடங்கியது, அதன் இயல்பான கொந்தளிப்பு மறுபடி உருவானது
புன்னகைத்தார் மோடி பிப்ரவரி 4ம் தேதி இலங்கை சுதந்திர தினமாக எழுந்த இந்த கொந்தளிப்பை தொடர்ந்து சில தினங்களில் அண்ணாமலையும் எல் முருகனும் இலங்கையில் கால் வைத்திருக்கின்றார்கள்
இது இலங்கை தமிழருக்கு உரிய உரிமை கிடைக்க இந்தியா களமிறங்கும் எனும் அறிவிப்பு அன்றி வேறல்ல
அண்ணாமலையும் இலங்கை இந்து ஆலயம் மடம் என சுற்றிகொண்டிருக்கின்றார் அவருக்கு ஆதரவு பெருகுகின்றது
திராவிட திமுக தமிழ் அமைப்பெல்லாம் தங்கள் துயரத்தை சாவை வைத்து அரசியல் மட்டுமே செய்யும் ஆனால் தீர்வு வழங்கும் வலிமை மோடிக்குத்தான் உண்டு என ஈழமக்கள் இந்துமக்கள் அண்ணாமலையினை வரவேற்கின்றனர்
சுருக்கமாக இந்தியா அறிவித்துள்ளது இதுதான்
இனி உலக அரங்கில் தமிழர்களுக்கான ஒரு பிரநிதியாக அண்ணாமலை உருவாகின்றார், அப்படியே இனி இந்திய தமிழகத்தில் ஈழ வியாபாரம் செய்துவந்த அனைவருக்கும் அண்ணாமலை உருவில் முடிவு வருகின்றது என்பது
இங்கு வைகோ சீமான் என ஏகபட்ட ஈழவியாபாரிகள் உண்டு, ஆனால் யாராவது கடல் கடந்து சென்று ஈழத்தில் பேசமுடியுமா தீர்வு கொடுக்கமுடியுமா என்றால் இல்லை
யாரால் முடியும் என்பதை மோடி காட்டி கொண்டிருக்கின்றார்
அண்ணாமலையின் இலங்கை பயணம் சீன எதிர்ப்பு தேச நலம், இலங்கை தமிழர் நலம், இலங்கை இந்திய இந்துக்கள் உறவு, இலங்கை தமிழர் அரசியலில் திராவிட கும்பலை விரட்டுதல் , ராமநாதபுரம் பக்கம் நடக்கும் கடத்தல் ஒழிப்பிஉ என பன்முகம் கொண்டது
கூடவே இலங்கையின் கிழக்குபக்கம் உருவாகும் இஸ்லாமிய பயங்கரவாதம் தமிழகத்தில் ஊடுருவாமல் அகற்றபடும் இன்னொரு விஷயம்
இப்படி பல பரிமாணங்களை காட்டி இலங்கைக்கு இரணாம் முறையாக சென்றிருக்கின்றார் அண்ணாமலை
ஒரு காலத்தில் சோவியத்தின் அடிமையாக இந்திரா இலங்கையில் அமெரிக்காவுடன் தோற்றிருக்கலாம், ராஜிவ் ஒரு குழப்பமான அனாதை அரசியல்வாதியாக தோற்றிருக்கலாம்
ஆனால் சுதந்திரமான இந்திய தலமையும் முழு இந்துவுமாக நிற்கும் மோடி சீனாவுடனான முறுகலில் அந்நாட்டை விரட்டி அதே நேரம் ஒரு குழப்பமும் போரும் வன்முறையும் தீவிரவாதமும் இல்லாமல் அப்படியே இந்திய தமிழகத்தில் வெட்டி அரசியல் குழப்பமும் வராமல் மிக அழகாக ராஜதந்திரமாக இலங்கையில் செய்ய வேண்டியதை செய்கின்றார்
ஒரு அந்நிய அடிமையாக அல்லாமல் , ஒரு வல்லரசின் அடிமையாக இல்லாமல் ஒரு சுதந்திர இந்திய தலைவனாக மோடி நிற்கும் பொழுது, மிக சரியாக இலங்கை சிங்களவர், இலங்கை தமிழர் தமிழக இந்திய தமிழர் என எல்லா தரப்பும் மிக அமைதியாக இருக்க, போர்சூழலோ வன்முறையோ வெற்று அரசியலோ இன்றி தீர்வினை ராஜதந்திரமாக கொடுத்து கொண்டிருக்கின்றார்
இப்படி 1980களிலே ஒரு வலுவான இந்திய இந்து தலமை இருந்திருக்குமானால் இலங்கையில் இவ்வளவு அழிவுகள் இருந்திருக்காது
பொறுப்பற்ற காங்கிரசும் அவர்களோடு சுயநல திராவிட தமிழக கோஷ்டிகளும் சேர்ந்து செய்ததுதான் எல்லா அழிவுக்கும் காரணம்
மோடி அவ்வகையில் மிக மிக மாறுபட்டு ராஜதந்திரமாக கடமையாற்றுகின்றார், அந்த கடமையில் அண்ணாமலை எனும் அகில உலக தலைவன் உருவாகி வருகின்றான்
காமராஜரும் சாஸ்திரியும் இலங்கையில் செய்யமுடியாததை, பின்னாளில் எம்ஜிஆர் செய்யமுடியாததை இப்பொழுது ஜெய்சங்கர் அண்ணாமலை என இரு தமிழர்கள் வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கின்றார்கள்
காசி துலங்க துலங்க பாரதம் மட்டுமல்ல, இந்துக்களின் எல்லா தலங்களும் துலங்கும்
அவ்வகையில் எந்த திரிகோணமலையில் இருந்து ஈழ அழிவு தொடங்கிற்றோ அங்கிருந்தே அமைதியும் வர அந்த திரிகோணமலை சிவன் அருள் புரிந்து கொண்டிருக்கின்றார்
அவர் அருளில் அண்ணாமலை அங்கு உலாவி கொண்டிருகின்றார், இலங்கை தமிழர் வாழ்வில் ஒரு விடிவெள்ளி இப்பொழுது முளைத்திருக்கின்றது