மானிட சாதியின் தனி மனிதன்… அடால்ஃப் ஹிட்லர்

பல்லாயிரம் பேர் அனுதினமும் வந்து பிறக்கும், இறக்கும் உலகில் ஒரு சிலரின் கர்மா வரலாற்றை மாற்றிவிடுகின்றது, கோடியில் ஒருவருக்கு அந்த வரம் கிடைக்கின்றது

மானிட இனத்தின் பல பலவீனங்களாலும் அதன் லவுகீக மயக்கங்களாலும் போர்களே உலக வரலாற்றை மாற்றும், போரும் அதுகொடுக்கும் விளைவும் பயமும் அந்த ஆபத்தை களைவிக்க செய்யும் முயற்சிகளும் தயாரிப்பும் விஷத்துக்கு விஷமே முறிவு என்பது போல் பல திருப்பங்களை கொடுக்கும்

அது மானிட இனத்தால் புரிந்துகொள்ளமுடியா சூட்சுமாம்

புராணகாலத்தில் அசுரர்களை ஆடவிட்டு அந்த அசுரர்களை அழித்து தன் சக்தியினை தெய்வம் காட்டும், ஒவ்வொரு அசுரனின் வீழ்ச்சியிலும் இந்த உலகம் புது மாற்றம் பெற்றிருக்கும்

அது பின்னாளிலும் நடந்தது, ஒவ்வொரு அரசனும் போரால் எழும்பி ஓயும் பொழுது எல்லைகள் மாறின, மானிட சிந்தனைமாறிற்று, எவ்வளவோ மாற்றம் வந்தது

அப்படி ஒரு பெரும் மாற்றத்தை கடந்த நூற்றாண்டில் கொடுத்தவன் ஹிட்லர், ரமண மகரிஷி சொன்னது போல “அவன் கர்மா கழிகின்றது, எதற்கு வந்தானோ அதை செய்கின்றான்” என்பது சரியாயிற்று

ஆம், கோடான கோடிபேர் வந்து செல்லும் உலகில், அனுதினமும் ஆயிரகணக்கானோர் பிறந்தும் செத்தும் செத்து கொண்டிருக்கும் உலகில் மிக சிலரே உலகினை மிகவும் பாதித்தார்கள்

அவர்கள் பிறப்பும் எழுச்சியும் அவர்கள் கர்மாவின் பொருட்டு அவர்கள் செய்த காரியங்களும் உலகையே மாற்றி போட்டன, அது நல்லதா கெட்டதா என்பது விஷயம் அல்ல ஆனால் அவர்கள் பாதிப்பு ஒவ்வொரு மனிதனின் தலைவிதியினை மாற்றி எதிர்காலத்தையே நம்ப முடியா அளவுக்கு மாற்றியது நிஜம்

அவ்வகையில் கடந்த நூற்றாண்டில் உதித்து இன்றிருக்கும் மகா நவீன வாழ்க்கைக்கும் அறிவியல் வேகத்துக்கும் இன்னும் பல காரியங்களுக்கும் அவனே அடிதளமிட்டான்

அடால்ப் ஹிட்லர், வரலாறு கொடுங்கோலனாக மட்டும் வைத்திருக்கும் பெயர் என்றாலும் அவனை போல் இன்னொரு ஆற்றல் உள்ளவனை அடுத்த பலநூறு ஆண்டுக்கு பார்க்க முடியாது

கடந்த நூற்றாண்டின் மிகபெரிய ஹீரோவும் அவனே வில்லனும் அவனே, நல்ல ஆட்சியாளனும் அவனே மகா பெரும் விஞ்ஞான நுணுக்கம் தெரிந்தவனும் அவனே, போர்வித்தையில் கரை கண்டவனும் அவனே

பொதுவாக போர்கள் என்றால் அழிவுகள் மகா நிச்சயம்

நெபுகாத் நேச்சரும், அலெக்சாண்டரும், செங்கிஸ்கானும், தைமூரும், கோரியும், கஜினியும், பாபரும், நாதிர்ஷாவும் போர்ச்சுகீசியரும், ஸ்பானியரும், பிரிட்டிசாரும் செய்யாத எதையும் ஹிட்லர் செய்யவில்லை

ஆனால் அவர்கள் காலத்தில் விஞ்ஞானமில்லை, படம் இல்லை, வீடியோ இல்லை, ஆவணபடுத்த வழியில்லை

ஹிட்லர்காலத்தில் அதெல்லாம் வாய்த்தது அதனால் வில்லனானான்

60 லட்சம் யூதரை அவன் கொன்றான் என்றால் செவ்விந்தியர் தொடங்கி இரண்டாம் உலகப்போரில் ஒரே நாளில் ஜப்பானியர் 4 லட்சம் பேரை கொன்றவகையெல்லாம் என்ன என நாம் கேட்க கூடாது

வல்லவன் எழுதியதே வரலாறு

ஹிட்லர் ஒரு அசாத்திய வித்தைக்காரன், ஆச்சரியமான அறிவுக்கும் கனவுக்கும் அதை செயல்படுத்திய முறைக்கும் சொந்தக்காரன்

இந்த நூற்றாண்டு விஞ்ஞானத்தில் பாய்ச்சல் எடுக்கவும், உலகமே சடுதியில் மாறவும் அவனே காரணம்

அடைமழைக்கு பின் பல பயிர்கள் வளர்வது போல, அவனின் அட்டகாசத்திற்கு பின்பே உலகம் மாறிற்று.
இந்த உலகம் கடந்த 50 ஆண்டுகளில் இவ்வளவு வளர்ச்சிபெற்றிருக்கின்றது என்றால் அதன் மூலகாரணம் அவனே

சாதரண சிப்பாய், நல்ல ஓவியனும் கூட முதல் உலகப்போர் ஏன் ஏற்பட்டது என கண் கூடாக கண்டவன், அனுபவபூர்வமாக கண்டு கண்ணீர்விட்டவன்

அதாவது கிட்டதட்ட எல்லா ஐரோப்பிய நாடுகளுக்கும் அன்று காலணிகள் இருந்தன ஆனால் ஜெர்மனிக்கு மட்டும் இல்லை

வல்லரசு என்றால் வியாபாரம் தான் அடிப்படை, ஜெர்மன் அம்மாதிரியான வியாபாரத்திற்கு பெர்லின் பாக்தாத் இணைப்பு பாதையினை ஆஸ்திரியா வழியாக செய்ய இருந்தது, அப்படி செய்தால் ஜெர்மன் வியாபாரம் செழித்திருக்கும்

இன்று சிரியா வழியாக அரேபிய எண்ணெய் பாய கூடாது என ரஷ்யா நிற்பது போல அன்று பிரிட்டன் இருந்தது , விளைவு ஆஸ்திரிய இளவரசனை யாரோ கொல்ல அது போராயிற்று

ஜெர்மன் பாக்தாத் இணைப்பு நடந்துவிட கூடாது என தொடங்கபட்ட போரே முதல் உலகப்போர்.

போரில் ஜெர்மன் தோற்றது, அது கூட பிரச்சினை இல்லை அதன் பெரும் பலமான ஆஸ்திரியா ஹங்கேரி வல்லரசும், ஒட்டோமான் சாம்ராஜ்யமும் சிதறின, அதாவது ஜெர்மனின் முதுகெலும்பு உடைந்தது, போதா குறைக்கு வட்டி, நஷ்ட ஈடு என ஜெர்மன் திணறியது

இந்த காலத்தில்தான் ஹிட்லர் பேச தொடங்கினான், முதலில் சும்மாதான் பேசினான், ஆனால் கூட்டம் கூடிற்று வளர்ந்தான், சிறையும் அவனை தடுக்கமுடியவில்லை

நாடே சிக்கலில் இருக்க யூதர்கள் மட்டும் நாட்டுபற்றிலாதது போல இருந்தது அவனை உறுத்தியது, எல்லா நாட்டுடனும் உறவில் இருந்த யூதர்கள் ஜெர்மனை அவர்களுக்கு அடிமையாக்கியதாக கருவினான், யூதரை விட ஆரியர் உயர்ந்தவர் என சொல்லதொடங்கினான்

தன் நாட்டில் வாழும் யூதர்கள் தங்கள் நாடான ஜெர்மனுக்கு விசுவாசமாயில்லாமல் பிரிட்டன் உதவியுடன் எப்பொழுதும் ஜெருசலேம் கனவில் வாழ்வதாக கருந்தினான், உண்மையும் அதுதான்

ஜெர்மனை நேசிக்காத எல்லோரும் தன் எதிரிகள் என்ற அவனின் நாட்டுபற்றே யூதவெறுப்புக்கு வழிகோலிற்று
அது அவன் தவறல்ல, யூத வெறுப்பை அவன் தொடங்கி வைத்தவனுமல்ல

ஐரோப்பாவில் யூதர் அடிபடா நாடு கிடையாது, ஜெர்மனியில் அதனை தொடங்கி வைத்தவன் மார்ட்டின் லுத்தர்
பிரிவினை கோஷ்டிகளான பிதமானன லுத்தர், இன்றும் லுத்தரன் சபை என ஊரெல்லாம் இருக்கின்றதே அந்த லுத்தர்

அவனே யூதவெறுப்பினை ஜெர்மனியில் தொடக்கினான், யூதர் சொத்துக்களை கொளுத்துவது, பணத்தை பறித்துவிட்டு தெருவில் விடுவது, கொல்வது என அவனே தொடங்கி வைத்தான். ஆனால் கிறிஸ்தவரான யூதரை அவன் விட்டுவிட்டான்

அப்படிபட்ட லுத்தரின் கொள்கைகளைத்தான் ஹிட்லர் பேசினான தவிர, யூதவெறுப்பு அவன் சுயசிந்தனை அல்ல.

ஆனால் இங்கு லுத்தர் தெய்வம் புரட்சியாளன், ஹிட்லர் சாத்தான்

ஹிட்லர் பேச பேச மக்கள் அதனை ஆமோதிக்க அவன் தலைவனுமானான், தேர்தலில் வென்றான். பேச்சு கலையில் அவன் வல்லவன்

அந்த பாணிதான் பின்பு கிறிஸ்தவ போதகர்களுக்கு வந்து அப்படியே தமிழகத்தின் அங்கிள் சைமனுக்கும் வந்தது. அன்று அதை தொடங்கி வைத்தவன் ஹிட்லர். அதில் வெற்றியும் பெற்றான்

வெறும் மக்களாட்சி பட்டிமன்றமும், எல்லோருக்கும் கருத்து சுதந்திரமும் நாட்டை கெடுத்துவிடும் என அஞ்சினான், போர்முனைக்கு வர அஞ்சி ஊருக்குள் வெட்டி நியாயம் பேசும் கும்பலால் நாட்டிற்ற்கு சல்லி பிரயோசனம் இல்லை என்பதால் கட்சி, அரசியல் எல்லாம் தடை செய்தான்

அவனின் ஜெர்மன் வளர முதல் காரணம் கம்யூனிஸ்டுகளை தடை செய்து ஒழித்து கட்டியது.

ஆட்சிக்கு வந்தபின் இனி தேர்தலே இல்லை என்றான். ஆனந்தம் பட மம்முட்டி போல “எல்லோருக்கும் இருக்க வீடு, சாப்பாடு, காசு பணம் அதுக்கப்புறம்தான் எல்லாம்” என சொல்லிவிட்டான்

அந்நொடியில் அவனுக்குள் ஒரு சாமி இறங்கியது, நிச்சயம் இனியொருவன் அப்படி ஆளமுடியாது, இந்த உலகம் கண்ட மிக சிறந்த நல்லாட்சியினை வழங்கினான்

அவனின் மிக பெரும் ஆற்றல், நல்ல திறமையானவர்களை அடையாளம் கண்டு அமர்த்திகொண்டது, அவனின் நிதி அமைச்சர் அவனின் பெரும் பலம் அபார திட்டங்களை அவர்தான் தீட்டினார்

ஹிட்லரின் முதல் பலம் அவனின் வேகம், அந்த வேகத்தை ஜெர்மனிக்கு கொடுத்தான், அகண்ட சாலையில் கூடுதல் வேகம், நல்ல தரமான கார்கள், எந்திரங்கள், நொடியும் சுணங்காத அலுவலகம், கல்வி, மக்கள் நலம் 60 வயதானால் ஓய்வு மற்றும் பென்சன் என அவனது நிர்வாகம் அட்டாகசபடுத்தியது

உற்பத்தி பெருகியது, வெறும் 5 ஆண்டுகளில் அந்நாடு வல்லரசானது ஆம் அது பெரும் ஆச்சரியம், இனி சாத்தியமில்லா ஆச்சரியம், அலாவுதீன் பூதம் செய்தது போல ஆச்சரியம், இதோடு ஹிட்லர்
காக்காவலிப்பிலோ அல்லது விபத்திலோ, மாரடைப்பிலோ செத்திருந்தால் வரலாற்றில் பெரும் இடம் அவனுக்குத்தான்.

அப்படி ஒரு தலைவன் இனி எந்த நாட்டுக்கும் வரபோவதில்லை, அவனின் நிர்வாகமும் ஆற்றலும் அப்படி இருந்திருக்கின்றது

அவன் நடத்திகாட்டிய ஒலிம்பிக் போல இன்னொரு தேசம் இன்றுவரை நடத்தவில்லை

ஜெர்மன் பெரும் பொருளாதார‌ வல்லரசானவுடன் ஹிட்லருக்குள் இருந்த பூதம் விழித்தது, வட்டி கட்ட முடியாது என பிரிட்டனை எதிர்த்தான், ஆனதை பார் என சர்வதேச சங்கத்தை மிதித்தான், உலகிற்கே சவால் விட்டான்
பழிதீர்க்க கிளம்பினான்.

ஐரோப்பாவில் அது அடிக்கடி நடப்பது, உலகை பிரிட்டன் ஆளலாம் பிரான்ஸ் ஆளலாம் ஏன் ஜெர்மன் ஆள கூடாது என்றுதான் கிளம்பினான்

மிரட்டலில் போலந்தை பிடித்தான், மிரட்டாமலே செக்கோஸ்லோவிய பணிந்தது. பிரான்ஸ் துப்பாக்கியால் சுட்டதும் பணிந்தது வெற்றிமேல் வெற்றிபெற்றான் ஹிட்லர்

ஐரோப்பாவில் அவனுக்கு பாக்கி இருந்தது ஸ்பெயின், பிரிட்டன் போன்ற சில நாடுகளே

அவனுக்கு யூதர்மேல் வெறுப்பு இருந்தது, முதலில் கொல்லும் திட்டம் எல்லாம் இல்லை மாறாக அவன் பிடித்த நாட்டிலிருந்து அடித்து விரட்டினான் அவர்கள் அடுத்த நாட்டிற்கு சென்றார்கள், அதையும் பிடித்தான் அடுத்த நாட்டுகு சென்றார்கள்

இனி ஹிட்லர் உலகாளுவார், யூதருக்கு செல்ல இடமிருக்காது என்றுதான் அவன் படைகள் யூதரை கொல்ல ஆரம்பித்தன , அவனும் தடுக்கவில்லை

இம்மாதிரி செய்திகள்தான் எதிரிகளை மனதால் நடுங்கவைக்கும் என பல மிகைபடுத்தபட்ட செய்திகளையும் அனுமதித்தான், அதுதான் அவனுக்கு மிகையானது

அவன் விஷயாவு முகாம்களை யூதருக்கு மட்டும் தொடங்கவில்லை, ஹிட்லருக்கு இந்த மார்டன் ஆர்ட் வரைபவர்கள், பாலியல் கோளாறு பிடித்தவர்கள், கம்யூனிஸ்டுகள், பின் நவீனத்துவ எரிச்சல் கவிஞர்கள் எல்ல்லாம் பிடிக்காது

அவர்களையும் சேர்த்துதான் உள்ளே தள்ளி கொன்றுகொண்டிருந்தான், யூதருக்கு அடுத்து அவன் குறி கம்யூனிஸ்ட்கள் மேல் இருந்தது, விஷவாயு முகாம் அவர்களுக்கும் நாள் குறித்திருந்தது

சர்வ சக்தியும் பெரும் ஆற்றலும் பெற்ற ஹிட்லர் மூன்று தவறினை செய்தான்

அவன் செய்த தவறில் முதலாவது பிரிட்டனை பிடிக்காமல் இருந்தது, இரண்டாவது சோவியத்தில் நுழைந்தது, மூன்றாவது அமெரிக்காவினை பற்றிய குறைந்த மதிப்பீடு

சோவியத்தில் அவன் நுழைய எண்ணெய் தான் காரணம், அன்றே அரேபியாவில் எண்ணெய் இவ்வளவு இருக்குமென தெரிந்தால் இன்றைய மொத்த அரேபியாவும் ஜெர்மனிக்கே இருந்திருக்கும்.

பாலஸ்தீனமுமில்லை, ஈராக், ஈரான், சிரியா, இஸ்ரேல் என எதுவுமே இருந்திருக்காது

ரஷ்ய குளிரும், ஸ்டாலினின் ராணுவமும் ஹிட்லரை தோற்கடித்தன, சர்ச்சில் வேறு தந்திரமாக அமெரிக்காவினை களம்மிறக்கினார்

அமெரிக்காவுடன் மோதும் எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லை, அமெரிக்காவுக்கும் ஹிட்லருக்கு ஆயுதம் விற்று சம்பாதிக்கும் திட்டமே இருந்தது, ஆனால் சர்ச்சில் எனும் ராஜதந்திரி அமெரிக்காவினை இழுத்துவிட்டார், ஜப்பானிய நடவடிக்கைகளும் அதற்கு துணை போயின‌

உண்மையில் ஹிட்லரை வீழ்த்தியது ரஷ்யாவின் ஸ்டாலின், நிச்சயமாக அவர்தான் இல்லையென்றால் ஸ்டாலினை ஒழித்து கட்டியிருப்பான் ஹிட்லர்.

ஹிட்லர் வீழ்ந்த பின்புதான் அவன் நிர்வாகத்தை, ராணுவத்தை, அவனின் ஆராய்ச்சிகளை ஆராய்ந்தார்கள், ஆராய்ச்சியாளர்கள் பாதி ரஷ்யாவிற்கும், பாதி சோவியத்திற்கும் கடத்தபட்டார்கள்

அவனின் ஆராய்ச்சியும், அவன் கண்ட விஞ்ஞான கனவும் அப்படி இருந்தன

அதாவது எல்லாவற்றிலும் 80% நெருங்கியிருந்தான், கொஞ்சம் காலம் தள்ளியிருந்தால் ஜெர்மன் எங்கோ சென்றிருக்கும்

ஏ,கே 47 ரக துப்பாக்கி உண்மையில் அவன் கண்டுபிடிப்பு, கலோனிக்கோவ் கொஞ்சம் மாற்றினார். விமானம் தாங்கி கப்பல் முதல் நீர்மூழ்கி வரை ஹிட்லர் படுவேக முன்னேற்றம் காட்டியிருந்தான்.

நவீன போர்கப்பலுக்கும், நீர்மூழ்கி கப்பலுக்கும் அவனே முன்னோடி

தாக்குதல் எப்படி இருக்கவேண்டும், வியூகம் எப்படி இருக்கவேண்டும் என்பதில் அவனின் கில்லாடிதனம் வெளிபட்டது, இன்று பின்லேடனை கொன்ற தாக்குதல் வரை அவன் தான் முன்னோடி..

ராணுவ வீரர்களுக்கான தகவல் தொடர்பில் ஹிட்லர் உச்சம் பெற்றிருந்தான் அதுதான் இன்று நாம் காணும் இணைய உலகின் அடிப்படை

விமானிகளுக்கான பிரத்யோக உடைகள் அவனிடமிருந்தன, அதுதான் இன்று விண்வெளி வீரர்கள் அணிவது, நீர்மூழ்கி கப்பலின் வித்தையும் அவனிடம் இருந்தது

அணுகுண்டுகளின் மிக‌ ஆபத்தான நியூட்ரான் குண்டுகள் தயாரிப்பில் ஓரளவு வெற்றிபெற்றிருந்தான்

மகா முக்கியமாக ராக்கெட் தயாரிப்பு, அதுதான் பின் ஏவுகனைகளாகவும் விண்வெளி ராக்கெட்டுகளாகவும் மாறின, வட்ட வடிவமான விமானங்களை அவன் வைத்திருந்தான் என செய்தி உண்டு

இன்றும் அமெரிக்க விமானபடையின் அதிநவீன விமானம் அவன் உருவாக்கிய வடிவ சாயலே

அமெரிக்காவும், சோவியத் யூனியனும் வல்லரசானதும் விண்வெளி வெற்றிகளை குவித்ததும் இப்படித்தான்.
விதவிதமான மருந்துகளை கண்டுபிடித்து யூதர்மேல் சோதனை செய்தான், மருத்துவ உலகம் அதில்தான் முன்னேறிற்று

அவன் பெரும் போர் நடத்தியவன் தான், ஆனால் அவனின் எச்சத்தில் இந்த உலகம் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது

அரசு, ராணுவம், விஞ்ஞானம், விளையாட்டு, நகரம், நிர்வாகம் , அறிவியல் என எல்லாவற்றிலும் தலைகீழ் திருப்பம் கொடுத்தவன் அவன்.

பத்துதலை ராவணின் மூளை அவன் ஒருவனிடமே இருந்தது. மறுக்க முடியாது

இந்த நூற்றாண்டின் மிக சிறந்த , நம்பர் 1 திறமையாளன் அவன் என்பதில் சந்தேகமே இல்லை, ஆனால் யூதர்கள் விஷயத்தில் அவன் காட்டிய கொடூரத்திற்கு வரலாற்றில் மன்னிப்பே இல்லை

இன்னொன்று யூதர்களை அவன் கொன்ற விதம் குறித்து மிகைபடுத்தலும் இருந்தன

இன்று அவனின் பிறந்தநாள்

பெரும் அழிவுக்கு காரணாமானவன் என்றாலும் இந்த உலகத்தை அவன் மாற்றிபோட்டவன் என்பதில் மாற்றுகருத்து இருக்கமுடியாது

பிரிட்டனையும், பிரான்சையும் அவன் அலற அடித்த அடியில்தான் அவை இந்தியா போன்ற நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்து ஓடின,

அந்த அடியில் அவை எழும்ப முடியாமல் கிடக்கும்பொழுது உலகெல்லாம் எப்படி ஆளமுடியும்?

அந்த பிரிட்டன் எனும் வல்லரசின் சக்தியினை அவந்தான் முறியடித்தான். அவன் எழும்பியிராவிட்டால் இந்திய விடுதலை காந்தியின் கொள்ளுபேரன் காலத்தில் கூட நடந்திருக்காது

இந்திய விடுதலைக்கு ஹிட்லரும் ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது..

அவனின் நாசி இயக்கத்தின் எழுச்சியே உலகெல்லாம் பல நாடுகளில் எழுச்சியினை உதிக்க வைத்தது. நாமும் உணர்வோடு வாழமுடியும் என்ற சிந்தனையினை உதிக்கவைத்தது

பெரும் அறிவாளி அவன், “முழு வளர்ச்சி பெறாத நாட்டில், பொறுப்பான மக்கள் இல்லா மக்களாட்சியில் நாடாளுமன்றங்களும், சட்ட சபைகளும் பட்டிமன்றமாக மாறும்,

வெறும் குப்பைமனிதர்கள் பேசிகொண்டிருப்பார்கள், திருடர்களும் ஊழல்வாதிகளும் ஆளவருவார்கள்
அவர்களாலும் அந்த சபையாலும் மக்களுக்கு கொஞ்சமும் பிரயோசனம் இருக்காத நிலை வரும்” என என்றோ சொன்னான்

அது எங்கு நிறைவேறியதோ இல்லையோ இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நிறைவேறிகொண்டிருக்கின்றது
அதுவும் தன் சகாவான சென்பராமன் பிள்ளையிடமும், பின் நேதாஜியிடம் நேராகவே சொன்னான்

“இந்திய மக்களின் மனநிலைக்கு மக்களாட்சி சரிவராது, வரவே வராது நாட்டு பற்று இருந்தால் நீயே ஆண்டுகொள், சர்வாதிகாரம் என்ற ஒற்றை ஆட்சியில் முதுக்குக்கு மேல் பிரம்பு வைத்து ஆள வேண்டிய மக்கள் இந்திய மக்கள்

அம்மக்களை கவனித்துபார், அவர்களுக்கு ஜனநாயகம் தெரியாது, அப்பதையில் அவர்களே நாட்டை சீர்ழித்துவிடுவார்கள்”

எவ்வளவு அழகாக அவன் இந்தியாவினை கணித்திருக்கின்றான், அந்த‌ வார்த்தைகளுக்காக அவனை நினைத்து கொள்ளலாம்

அவனிடமும் சில நியாங்கள் இருந்தன, அவனின் பெரும் சாதனைகளும் இன்ன பிற ஆற்றல்கள் எல்லாம் யூதவெறுப்பு எனும் ஒற்றை புள்ளியில் மறைக்கபட்டது.

இன்னொன்று ஹிட்லரால் பெரும் இடம் பெற்ற ஜெர்மனி அவனாலே வீழ்ந்தது. பெரும் இன்னல்களை போருக்கு பின் சந்தித்தது

ஜெர்மனை சோவியதும் அமெரிக்காவும் ஆக்கிரமித்தபின் 3 ஆண்டுகள் அந்த ஜெர்மன் பெண்கள் கருகலைப்பு மட்டுமே செய்துகொண்டிருந்த அளவு கொடுமை இருந்தது

தங்களை காக்க இனியாருமில்லை என்ற நிலையில் அவர்கள் கண்முன்னே ஜெர்மனியும் பிரிந்தது
இதனால் ஹிட்லரை அவர்கள் மறக்க நினைத்தார்கள், அமெரிக்காவும் சோவியத்தும் அடுத்த தலைமுறைக்கு ஹிட்லர் பெரும் எதிரியாக தெரிவதில் கவனமாக இருந்தார்கள்

இன்று ஜெர்மன் எழும்பி ஐரோப்பாவின் பொருளாதர வல்லரசாயிற்று, சில இடங்களில் பிரிட்டனை தைரியமாக அடிக்கின்றது

யூரோ நாணயம், ஐரோப்ப யூனியனில் முக்கிய இடம் என மிரட்டும் ஜெர்மனி உலகின் வலுவான நாடாக நிற்கின்றது

ஜெர்மனியின் இன்றைய வெற்றியில் ரகசியமாக சிரிக்கின்றான் ஹிட்லர்.

ஜெர்மானியர் மனதிற்குள் போர் வெறியும், யூத வெறுப்பும் இல்லாத ஹிட்லரைத்தான் தேடுகின்றனர். அவனை மனதிற்குள் ரசிக்கின்றனர். போருக்கு முன்னர் அவனின் சாதனை அப்படி

அவர்கள் என்ன? உலகநாடுகளே அப்படி ஒரு தலைவனைத்தான் தேடி கொண்டிருக்கின்றன‌.

அவன் பிற்கால‌ செயல்பாட்டில் கோளாறு இருந்ததே தவிர சுயநலம் என்பதோ, அவன் வாழ எல்லோரையும் கொன்றான் என்றோ துளியும் சொல்லமுடியாது

அவன் நாட்டுக்காகவே அவன் வாழ்ந்தான். அவனின் ஒவ்வொரு விஷயமும் ஜெர்மனின் நல்வாழ்விற்ககாவே இருந்தது

பெரும் புத்தகமாக பல வெர்ஷன்களாக எழுதபடவேண்டியது ஹிட்லரின் வாழ்வு, இதுவரை வந்திருப்பதும் நிச்சயம் முழுமையாக அவனை பற்றி சொல்லிவிடவில்லை

சுருக்கமாக இவ்வளவுதான் சொல்லமுடியும்.

இன்று அவனின் பிறந்தநாள், உலகத்தை புரட்டி போட்ட அவனை வல்லரசுகள் மறக்கடிக்க பார்க்கலாம் ஆனால் வரலாற்றில் அவன் இடம் தவிர்க்கமுடியாதது

கடந்த நூற்றாண்டில் மாபெரும் தாக்கம் கொடுத்தவன் அவனே.

வரலாற்றில் நின்றுவிட்டவன் அவன், அவனுக்கு கல்லறை இல்லாமல் இருக்கலாம், ஆனால் வரலாற்றில் பெரும் இடம் உண்டு , மிகபெரிய உயரத்தில் இருந்து கொண்டு உலகை நோக்கி சிரிக்கின்றான் அவன்

இன்றைய சிறு கார்கள், சாலைகள், விஞ்ஞான இணையம் , செயற்கைகோள் என எல்லாவற்றிலும் அவன் கனவே முதல் கனவு, நாம் அதை கண்ணால் காண்கின்றோம், அவனே முன்னோடி

இப்பொழுது மானுட குலம் வானியல் தொழில்நுட்பத்தில் ஒரு எல்லைக்கு மேல் செல்லமுடியாமல் தத்தளிக்கின்றது, இப்போது இருக்கும் தொழில்நுட்பபடி நிலாவில் கூட 100% பத்திரமாய் இறங்கமுடியவில்லை இதர கோள் ஆராய்ச்சியெல்லாம் திணறித்தான் நடக்கின்றது

புதிய புதிய தொழில்நுட்பம் வராமல் அடுத்த கட்ட விஞ்ஞான பாய்ச்சல் வராது, அதற்கெல்லாம் ஹிட்லர் வந்து பல தேவைகளை உருவாக்க வேண்டும், ஆம் அவன் திரும்ப வராமல் இந்த உலகம் அடுத்த கட்டத்துக்கு செல்லாது

அவன் காலத்தின் விஷேஷமான கைப்பாவை, அவன் கர்மாவில்தான் உலக மாற்றமே இருந்தது, அதனை மிக சரியாக செய்துவிடைபெற்றான் , உலகை மாற்ற வந்த கர்மா அவனுடையது என்பதே அவன் வாழ்வின் சுருக்கம்

எது எப்படியாயினும் பிரிட்டன் எனும் வல்லரசை நிலைகுலைய செய்து இந்திய விடுதலையினை சாத்தியமாக்கியவன் அவனே, அவ்வகையில் ஒவ்வொரு இந்தியனும் அவனுக்கு மனதார நன்றி செலுத்துதல் வேண்டும்