நெல்சன் மண்டேலா
அந்த தென் ஆப்ரிக்கா, பெரும் கண்டமான ஆப்ரிக்காவின் தெற்கு பகுதிநாடு, ஆனால் மிக மிக வளமான நாடு, வைரத்திற்கும் தங்கத்திற்கும் இன்னும் பல வகையான பொருளுக்கும் பெயர்பெற்ற நாடு, வளம் இருந்தால் அங்கு யார் இருப்பார்? அதுவும் மக்கள் அறியாமையில் இருந்தால் யார் இருப்பார்?
எல்லாம் வேட்டையாட ஒரு வல்லரசு இருக்கும், அப்படி 19ம் நூற்றாண்டில் அதை ஆக்கிரமித்த நாடு பிரிட்டன்
19ம் நூற்றாண்டிலே பிரிட்டன் அன்றே பிடித்து வைத்திருந்தது, உலகெல்லாம் இருந்து தமிழர் உட்பட தொழிலாளர்களை குவித்து வைரம், தங்கம் என அள்ளி விற்றது, தென்னாப்ரிக்க சுரங்கங்கள் பிரிட்டனை வாழவைத்தது
அந்த குடியேறிகள் பலுகிபெருக அவர்களுக்கு நீதிமன்றங்களும் இருந்தன, சிங்கப்பூர் போலவே தென்னாப்ரிக்காவும் வழக்குரைஞர்களின் சொர்க்கமானது, ஏராளமான வழக்கறிஞர்கள் அங்கு சென்றனர், அவர்களில் ஒருவர்தான் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி
19ம் நூற்றாண்டில் உலகெல்லாம் ஏற்பட்ட தொழிலாளர் எழுச்சி தென்னாபிரிக்காவினையும் தாக்கியது, கடும் எதிர்ப்புகள் வந்தன, கூடவே இனவெறி சர்ச்சையும் தலைவிரித்தாடியது
கவனியுங்கள் அவர்கள் கிறிஸ்தவர்கள் அவர்களை அடக்கிய ஐரோப்பியரும் கிறிஸ்தவர்கள்
ஆம், கிறிஸ்துவினை நம்பினால் வாழலாம், நலமடையலாம் சமத்துவமடையலாம் எனும் பரலோக ராஜிய சன்பு கொள்கை அங்கு உண்மை முகம் காட்டியது
கிறிஸ்தவம் ஒரு அரசியல் அந்த அரசியல் வெள்ளையர் நலம் மட்டும் பேசும் கருப்பர் நலத்தை நாடாது என்பதை தெளிவாக காட்டிற்று
அடிமை கொடுமையினை தென்னாப்ரிக்கா அணு அனுவாக கண்டது, அடிமை முறை உலகில் ஒழிந்தாலும், அது ஆப்ரிக்காவின் உள்நாட்டில் இருந்தது
கிறிஸ்துவனாக இருந்தாலும் கருப்பன் வெள்ளையருக்கு அடிமை என்பது அங்கு எழுதப்டா நீதியானது
அங்கு பல உரிமை போராட்டங்கள் எழுந்தன, தில்லையாடி வள்ளியம்மை எனும் தமிழ்சிறுமி உயிரிழந்ததுமம் நடந்தது
1961ல் தென்னாப்ரிக்கா சுதந்திரம் பெற்றாலும் ஆட்சி வெள்ளையினமிடமே இருந்தது, கருப்பருக்கு ஒரு உரிமையும் இல்லை, அந்த அடிமை முறை நீடித்தது
பிரிட்டன் வெள்ளையருக்கு பதில் தென்னாபிரிக்காவில் புகுந்த வெள்ளையர் ஆளாதொடங்கினார்கள், எல்லாம் அவர்கள் ஆட்சி அவர்கள் அராஜகம்
கிறிஸ்துவரயைனும் பூர்வகுடிகளான கருப்பர்களுக்கு வெள்ளை அரசாங்கம் ஒரு உரிமையும் கொடுக்கவில்லை, அந்த அநீதியினை உலகம் கண்டுகொள்ளவுமில்லை
இதனை எல்லாம் கவனித்தான் அந்த சிறுவன், ஆயினும் இங்கு தேவை உரிமை அல்ல,கருப்பின மக்களின் ஆட்சி என்ற சிந்தனைக்கு வந்தான்
சிறுபான்மை வெள்ளை குடியேறிகளை பெரும்பான்மை கருப்பர்களை திரட்டி வீழ்த்தலாம் என கனவு கண்டான்
மண்டேலா எனும் பெயரோடு தன்னை உருவாக்கிய தன் ஆசிரியர் “நெல்சன்” பெயரையும் சேர்த்து நெல்சன் மண்டேலா என்றானார்
அவன் வழக்கறிஞர் ஆயினும் அங்கு சட்டம் வெள்ளையருக்கே சாமரம் வீசிற்று, அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதும் அவனின் போராளி முடிவுக்கு காரணம்
அவன் அப்பொழுது கொரில்லா போராளி, ஆம் உலகபோர் காலங்களில் பிரிட்டனை விரட்டலாம் என கனவு கண்ட நேதாஜி போன்றே அவனின் சிந்தனையும் இருந்தது, போராடினான்
1962ல் ஆயுத கிளர்ச்சிக்காக கைதுசெய்யபட்ட அவர் சிலமாதங்களில் விடுதலையானார், பின் மக்களை திரட்டி ஜனநாயக போராட்டங்களை செய்தபோது 1963ல் ஆயுள் தண்டனை கைதியாக அடைபட்டார்
ஆம் 27 வருடங்கள் சிறையில் இருந்தே போராடினார், சிறையில் இருந்தபடி மக்களை ஒருங்கிணைத்து போராடுவது சுலபமல்ல
அதுவும் ஆப்ரிக்கா போன்ற நாட்டில் அந்த மக்கள் மனப்பான்மையில் அது சாதாரணம் அல்ல
ஆனால் அவர் சாதித்தார், மக்கள் படிப்பறிவும் சிந்தனையும் நாட்டுபற்றும் பெருக பெருக அவரின் விடுதலைக்கான கோரிக்கை பெருகிற்று
மெல்ல மெல்ல உலகம் அவருக்காக களமிறங்கியது
தென்னாப்ரிக்கா உலக அரங்கில் ஒதுக்கபட்டது, கிரிக்கெட்டில் கால்பந்தில் கூட அது சேர்க்கபடவில்லை
தான் அடிபட்டு தன்னை வருத்தி சிறையில் தவமிருந்து உலகை தன்னை பேசவைத்து , தென்னாபிரிக்க அரசின் இனவெறி கோரமுகத்தை உலகிற்கு காட்டிய மகத்தான சாதனையினை செய்தார் மண்டேலா, ஒப்பற்ற தியாகம் அது
மெழுகு போல தன்னை வருத்தி ஒளிகொடுத்தார்
உலகில் மிக கொடுமையான முறையில் போராட்டங்களை அடக்கிய நாடுகளில் தென்னாப்ரிக்க அரசுக்கும் இடம் உண்டு, ஏராளமான கொலைகள் , துப்பாக்கி சூடுகள்
ஆனால் மண்டேலா அமைதியாக போராடினார், மக்கள் அவரை கொண்டாடினர். உலகம் மெதுவாக அவரை ஏற்றுகொண்டது
நீண்ட போராட்டத்தின் பின் வெளிவந்து ஆட்சியும் பிடித்தார் மண்டேலா, அதனை விட பெரிது ஒரு கட்டத்தில் அடுத்தவர் ஆட்சிக்கு வழிவிட்டார்
கருப்பின தலைவர்களில் மார்ட்டின் லுத்தர் கிங் வரிசையில் மண்டேலாவிற்கு பெரும் பங்கு உண்டு
ஆப்ரிக்க காங்கிரஸ் உட்பட பல அமைப்புகளை ஏற்படுத்தி கருப்பின மக்களின் ஒற்றுமைக்கும் எழுச்சிக்கும் எல்லைகளை தாண்டி பாடுபட்டார்
அவர் புகழ் அடைந்தது அதிகம், ஆனால் இழந்தது ஏராளம்
நல்ல வாழ்க்கையினை இழந்தார், குடும்ப வாழ்க்கையினை இழந்தார், இறுதிகாலத்தில் அன்புக்காக ஏங்கி திருமணம் எல்லாம் செய்தார்
ஆனால் ஒன்றும் சரி இல்லை, அம்மனிதன் ஒருநிமிடமும் நிம்மதியாக வாழவில்லை, போராட்டமே வாழ்க்கையாக தன் 95ம் வயதில் 2013ல் இறந்தார்
கருப்பர் உரிமைக்காய் உழைத்த, கருப்பர்களின் நம்பிக்கையாக என்றுமே உணரபடும் தலைவர் மண்டேலா
அந்த மாமனிதனுக்கு இன்று பிறந்த நாள்
ஐரோப்பியரின் இனவெறி என்றால் என்ன? கிறிஸ்தவம் எவ்வளவு மோசடிகள் நிறைந்த அரசியல், ஒரு அடிமை கூட்டத்தை உருவாக்கும் அரசியல் என்பதை தெளிவாக உலகுக்கு சொன்ன அந்த மாமனிதன் பிறந்தநாள் இன்று கொண்டாடபடுகின்றது
இயேசுவின் போதனைக்கும் கிறிஸ்துவத்துக்கும் தொடர்பில்லை, கிறிஸ்தவம் என்பது ஒரு நாட்டை அடிமைபடுத்தவும் அம்மக்கள் தங்களை தலைவனாக ஆட்சியாளனாக ஏற்கவும் செய்யபட்ட ஏற்பாடு
கிறிஸ்தவத்தில் உண்மையான சமத்துவமில்லை சகோதரத்துவமில்லை, ஐரோப்பியரின் மனதில் பழைய ரோமானிய சர்வாதிகார ஆட்சிமுறை அந்த மேலாதிக்க மனோபாவம் உண்டே தவிர ஒரு காலமும் அன்பு சகோதரத்துவம் சமத்துவமெல்ல்லாம் வராது, அவர்கள் கலாச்சாரம் மனம் வேறு மதம் வேறு, மதம் ஒரு அலங்கார பொருள் என காட்டிய மாமனிதன் அவர்
இனவெறி என்றால் என்ன? அதுவும் கிறிஸ்தவ முகமூடி போட்டுகொண்டே ஒரு இனம் இன்னொரு அப்பாவி இனத்தை எப்படி சுரண்டி அழிக்கும் கொள்ளையிடும், ஏன் கிறிஸ்தவ மதமாற்றமும் அது கொடுக்கும் தொல்லைகளும் ஒரு நாட்டுக்கு ஆபத்தானவை
ஏன் ஒரு நாட்டுக்கு சொந்த அடையாளமும் கலாச்சாரமும் மதபாரம்பரியமும் வாழ்க்கை தர்மமும் வேண்டும் அது இல்லாவிட்டால் என்னாகும் என்பதை காட்டி சென்ற மாமனிதர் அவர்
Par excellence article !