நிலாவில் மனிதனின் காலடி

அதுவரை மானிட குலம் விண்வெளிக்கு பறந்ததில்லை, மனிதன் பறக்க ஆரம்பித்து 60 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் வளிமண்டலத்தை கூட அவனால் எட்டமுடியவில்லை

ஹிட்லரின் உத்தரவுபடி ஏவுகனைகளுக்கான‌ இன்சினை வார்ன் பிரவுண் தயாரித்து அதனை சோதித்து கொண்டிருக்குந்த பொழுதே ஹிட்லரின் காலம் முடிந்தது

ஹிட்லரின் விஞ்ஞானிகளை பங்குபோட்டு கொண்டனர் அமெரிக்காவும் ரஷ்யாவும், அதாவது பொது எதிரியினை ஒழித்தபின் அமெரிக்காவும் ரஷ்யாவும் எதிரியாயிருந்தன‌

இந்த விஞ்ஞானிகள் எல்லாம் போர்குற்றவாளிகள், சதாமின் கெமிக்கல் அலி தூக்கில் தொங்கியதை போல தொங்கியிருக்கவேண்டியவர்கள், ஆனால் வல்லரசுகள் விடுமா?

ஹிட்லர் செய்த ஆராய்ச்சியினை கேட்டு மலைத்துபோய் நின்றன, கொஞ்சம் பிந்தியிருந்தாலும் ஹிட்லர் பெரும் ஆற்றலை பெற்றிருப்பார், முந்திகொண்டோம். இனி அவர் பெற விரும்பிய ஆற்றலை நாம் பெற்று வல்லரசாவோம்

அப்படித்தான் ஏவுகனை ஆராய்ச்சிகள் தொடங்கின, ஹிட்லர் தொடங்கியிருந்த இன்னொரு ஆராய்ச்சி வட்டவடிவ விமானம்

அவன் அப்படி ஒரு விமானத்தை தயாரித்திருந்தான், அதனால் நெடுந்தூரம் மின்னல் வேகத்தில் பறக்க முடிந்தது என அன்றொரு நம்பிக்கை இருந்தது, அவனே அதில் தப்பித்தான் என்றெல்லாம் கதைகள் உண்டு

அந்த உண்மைகளோ என்னமோ தெரியாது , ஆனால் ஹிட்லர் காலத்திற்கு பின்புதான் பறக்கும் தட்டுக்கள் பற்றிய கதை வந்ததும் மறுக்க‌ முடியாது.

அலெக்ஸாண்டர் காலத்தில் குதிரைபடை பலம் வாய்ந்தது , நெப்போலியன் காலத்தில் பீரங்கிபடையும் , துப்பாக்கி பிரிவும் பலம் வாய்ந்தது, பிரிட்டன் காலத்தில் கப்பல்படை வெற்றியினை சொன்னது

ஹிட்லர்தான் விண்வெளியுத்தம் பற்றி முதலில் சொன்னான், அடுத்த தலைமுறையில் விண்வெளி பலமே வெற்றியினை நிர்ணயிக்கும்

அப்படி அவன் தொடங்கியிருந்த ஆராய்ச்சிதான் அமெரிக்காவிலும்,ரஷ்யாவிலும் தொடர்ந்தன‌

முதல் வெற்றி என்னமோ ரஷ்யாவிற்குத்தான். ஸ்புட்னிக் என்றும் லூனார் என்றும் விண்வெளியில் கலங்களை செலுத்தி அசத்தியது, அமெரிக்காவிற்கு அதிர்ச்சி

அந்த அதிர்ச்சி தீருமுன் லைக்கா எனும் நாயினை அனுப்பியது, பின் தவறுகளை சரி செய்து யூரி ககாரின் எனும் முதல் விண்வெளி மனிதனை அனுப்பியது

அமெரிக்கா அதிர்ச்சியில் இருந்தபொழுதே தெரஸ்கோவா எனும் பெண்ணை அனுப்பியது.

விண்வெளியின் ஆதாம், ஏவாள் இவர்கள்தான்.

விண்வெளி அறிவில் ரஷ்யா முன்னேறுவது அமெரிக்காவிற்கு பெரும் அச்சத்தை கொடுத்தது, இந்த அனுபவம் ரஷ்ய ராணுவம் பக்கம் திரும்புமானால் அமெரிக்கா அவ்வளவுதான்

அப்பொழுது அங்கு கென்னடி அதிபராக இருந்தார், துணிச்சல் மிக்கவர் அல்லவா? சவால் விட்டார் இன்னும் கொஞ்சநாளில் ஒரு அமெரிக்கர் நிலாவில் கால்பதிப்பார்

யாரும் நம்பவில்லை, அமெரிக்கர்கள் கடுமையாக உழைத்த்தார்கள், நிறைய தோல்விகள் கொஞ்சம் உயிரிழப்பும் உண்டு

ஆனாலும் அஞ்சாமல் போராடி நிலாவில் இதே ஜூலை 20ல் கால் வைத்தார்கள், ஆனால் பார்க்க கென்னடி இல்லை அவர் அதற்கு முன்பே கொல்லபட்டிருந்தார்

மானிட வரலாற்றில் அது பெரும் நிகழ்வு, 1945 வரை அப்படி யாரும் சிந்தித்தது கூட இல்லை , ஆனால் அடுத்த 22 ஆண்டுகளில் அது சாத்தியம்

முதல் காரணம் ஹிட்லர், இரண்டாம் காரணம் அமெரிக்க ரஷ்ய பனிப்போர்

அமெரிக்கா கொண்டாட, ரஷ்யாவோ இது சாத்தியமில்லை என்றது காரணம் அன்றைய தொழில்நுட்பத்துபடி 10% கூட அப்பயணம் சாத்தியமில்லை, எங்கோ செட் போட்டு படம் எடுத்துவிட்டு அமெரிக்கா ஏமாற்றுகின்றது என்றது. அது ரஷ்யர்களின் இயலாமையில் உருவாக்கபட்ட கட்டுகதை என சொன்னது அமெரிக்கா

அந்த சர்ச்சை இக்காலம் வரை உண்டு

ஆனாலும் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்தார் என்றே வரலாற்று குறிப்புகள் உண்டு, அமெரிக்காவின் பிற்கால சாதனைகளும் அதனை வலுப்படுத்துகின்றன‌

தங்களில் யார் பெரியவன் என காட்ட அப்பயணத்தை அமெரிக்கா செய்தாலும் அதன் மூலம் விண்வெளி கனவு சாத்தியபட்டது, ஏகபட்ட மாறுதல்கள் உலகில் வந்தன‌

இன்றோடு 50 வருடம் ஆகின்றது, ஆம்ஸ்டாராங்கும் இன்று இல்லை

ஆனால் அவர் சொன்ன வார்த்தை உண்மையானது

“நிலவில் நான் வைத்தது சிறிய அடிதான், ஆனால் மானிட குலத்தின் பாய்ச்சல் மிக நீளமானது”

நிலாவில் ஆம்ஸ்டாராங் காலடி வைத்தாரா இல்லையா எனும் சர்ச்சை ஒருபக்கம் உண்டு அதே நேரம் உலகில் முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற ரஷ்யாவின் யூரி ககாரின் ஒரு விமான விபத்தில் கொல்லபட்டார், அவர் ஏன் கொல்லபட்டார் என்பது இன்றுவரை மர்மம்

அன்று மனிதனை நிலவுக்கு அனுப்பியதாக சொன்ன அமெரிக்கா அதன்பின்பு யாரையும் அனுப்பவில்லை அது ஏன் என்பதும் தெரியவில்லை

விண்வெளி மர்மமனாது அதைவிட மர்மமானது அதை கொண்டு செய்யபடும் விஞ்ஞான அரசியல்